Friday, November 11, 2016


First they came for the Socialists, and I did not speak out—
Because I was not a Socialist.
Then they came for the Trade Unionists, and I did not speak out— 
Because I was not a Trade Unionist.
Then they came for the Jews, and I did not speak out— 
Because I was not a Jew.
Then they came for me—and there was no one left to speak for me.

முதலில் அவர்கள் குஜராத் முஸ்லீம்களிடம் வந்தார்கள்,
நான் எதுவும் பேசவில்லை,
ஏனெனில் நான் குஜராத் முஸ்லீம் இல்லை.
அடுத்து, அவர்கள் உ.பி. முசாபர் நகர் முஸ்லீமிடம் வந்தார்கள்,
நான் எதுவும் பேசவில்லை,
ஏனெனில் நான் உ.பி. முசாபர் நகர் முஸ்லீம் இல்லை,
அடுத்து, அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களிடம் வந்தார்கள்,
நான் எதுவும் பேசவில்லை,
ஏனெனில் நான் மாட்டுக்கறி சாப்பிடுபவன் அல்ல,
அடுத்து அவர்கள் உயர்கல்வி பயிலும் தலித் மாணவர்களிடம் வந்தார்கள்,
நான் எதுவும் பேசவில்லை, ஏனெனில் நான் தலித் மாணவர் இல்லை.
அடுத்து அவர்கள் ஜேஎன்யு மாணவர்களிடம் வந்தார்கள்,
நான் எதுவும் பேசவில்லை, ஏனெனில் நான் ஜேஎன்யு மாணவன் இல்லை.
அடுத்து அவர்கள் சட்டீஸ்கார் பழங்குடியினருக்காகப் போராடும் பேராசிரியர்களிடம் வந்தார்கள், நான் எதுவும் பேசவில்லை
ஏனெனில் நான் பழங்குடியினருக்காகப் போராடுபவன் இல்லை.
இப்போது
கறுப்புப் பணத்தைக் கைப்பற்றப்போகிறேன் என்று சொல்லி
என் அடிமடியில் கை வைத்திருக்கிறார்கள்.
இப்போது எனக்காகப் பேசுவதற்கு யாருமே இல்லை.

(பாஸ்டர் நிமரல் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பாரோ?)

No comments: