Thursday, April 30, 2020



















மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘வாரிசு அரசியல்வாதிகளை’ பலர் விமர்சிக்கும் இன்றைய சூழ்நிலையில், இந்த அவையில், என் தாத்தா தமிழவேள்/திரு. பி.டி. ராஜன் அவர்கள் 99 வருடங்களுக்கு முன் கன்னி உரையாற்றிய அவையில், என் அப்பா பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்கள்// 52 வருடங்களுக்கு முன் உரையாற்றிய அவையில், இன்றைக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை/// அறிக்கையின்மீதான பொது விவாதத்தில் உரையாற்றுவதற்கு நான் பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பினை எனக்கு வழங்கிய எங்கள் கழகத் தலைவர்,(1) எதிர்க்கட்சித் தலைவர், தளபதியார் அவர்களுக்கும், கட்சிக் கொறடா அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும், என் உரையைக்/ கேட்பதற்காக இங்கே இருக்கும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இரண்டு முறை நிதிநிலை அறிக்கையின்மீது நடைபெற்ற// விவாதத்தில் பங்கேற்றிருக்கின்றேன். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் முழுமையாக ஆங்கிலத்தில் புள்ளிவிவரங்களுடன் பேசினேன். பின்னர் இரண்டாவது/// தடவை பேசும்போது பாதி தமிழில் பேசினேன். ஆனால், புள்ளிவிவரங்கள், வரைபடங்கள், பட்டியல்கள் அடிப்படையில் பேசினேன். இன்றைக்கு கொஞ்சம் மாறி,(2) எந்தப் புள்ளிவிவரமும், எந்தக் கணக்கும் இல்லாமல் முடிந்த அளவுக்குத் தமிழிலேயே வரலாறு, தத்துவம், பொருளாதாரம் என்ற அடிப்படையில்/ நான் உரையாற்ற விரும்புகின்றேன்.
அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எங்கள் கழகத் தலைவர் அவர்கள் எனக்கு// அளித்த ஒரு அறிவுரை. “இத்தனை பேர் இருக்கின்ற மாமன்றத்தில் நீங்கள் பேசும்பொழுது திறமையாக சொல்வது முக்கியம் இல்லை; எல்லோருடைய நேரத்தையும்/// நன்றாக பயன்படுத்துகின்ற அளவில் நீங்கள் பேச வேண்டும், அப்போதுதான் அது சிறப்பாக இருக்கும்” என்று கொடுத்த அறிவுரை ஒரு காரணம். இரண்டாவது(3) காரணம், சென்ற ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நான் பேசும்போது அன்றைய நிதியமைச்சர், இன்றைய மீன் வளத் துறை அமைச்சர் திரு. ஜெயக்குமார்/ அவர்கள் நான் அவையில் கூறியதற்கு கொஞ்சம் பதிலும், நான் அவைக்கு வெளியே கூறியதற்கு பல பதிலும் அளித்தார்கள். இந்த முறை நான் வெளியில் இரண்டு// அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றேன். என் அறிக்கையில் இன்னும் சிலவற்றை சேர்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் எங்கள் கட்சியில் இப்போது/// தகவல் தொழில்நுட்ப அணி என்ற ஒன்றை வைத்திருக்கின்றோம். அதற்குமேல், நான் அரசியலுக்கு வரும்முன் எந்த அளவுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களோடு (4) தொடர்பு இருந்ததோ, அதோடு அதிகமாக இன்றைக்கு இருக்கின்ற நிதியமைச்சர் மாண்புமிகு திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் உள்ளதால், மாண்புமிகு/ அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் காட்டிய மரியாதையை மாண்புமிகு நிதியமைச்சர் திரு பன்னீர்செல்வம் அவர்களும் காட்டுவார்கள்// என்கின்ற நம்பிக்கையில் நான் வெளியில் அளித்த அறிக்கைகளை உங்களுக்குக் கொடுத்து, அது வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் பதில் அளிப்பதாக/// இருந்தால், என் வாயிலாக அதனை எடுத்துக்கொள்ளுங்கள்; வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். ஆகையினால், இங்கே அதனைப் பற்றிப் பேச எனக்கு விருப்பமில்லை.(5)
நான் இன்றைக்கு பேசவிருப்பது திராவிட இயக்கத்தின் வரலாறு. அதன் அடிப்படையில் கொள்கைகள். அந்தக் கொள்கையினால் நாம் மேற்கொண்ட அரசியல்./ அந்த அரசியல் தத்துவம் அடிப்படையில் இன்றைக்கு நிதி மேலாண்மையை எப்படிப் பார்க்க வேண்டும், கடமை என்ன, அதனை சிறப்பாக செய்துகொண்டிருக்கின்றோமா,// இல்லையா என்பதைப் பற்றி நான் கூற விரும்புகின்றேன். நான் என்னுடைய உரையைத் துவங்குவதற்கு முன்பே ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். பொது/// வாழ்க்கையில் இருக்கின்ற நாமெல்லாம் ஒரு சமுதாயம் என்று கருதினால், இந்தச் சமுதாயத்திற்கு கடைசியாக தனி நபராக வந்தவன் நான். அந்த (6) அடிப்படையில் இங்கிருக்கின்றவர்களுக்கெல்லாம் நான் ஒரு தம்பி மாதிரிதான். நான் பேசுவதை, ஒரு தம்பி புதியதாகத் தெரிந்த, அறிந்த மற்றும் /அனுபவங்களால் கற்றுக்கொண்ட கருத்துகளை உங்கள்முன் விவாதத்திற்கு வைக்கின்றமாதிரி நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.// நான் ஏதோ ஒரு சிறந்த பார்வையுடன் பேசுகின்றேன் என்று கூறவில்லை. நம்முடைய இயக்கத்தின் வரலாற்றைப் பார்ப்போமென்றால், கிட்டத்தட்ட 102/// வருடங்களாக இருக்கின்ற இயக்கம். இதன் முதல் இலக்கு சமூக நீதி. இந்த இலக்கை யாரோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும், பல மாநிலங்களோடு(7) ஒப்பிட்டுப் பார்த்தாலும், இந்திய சராசரி அளவில் பார்த்தாலும், உலக அளவில் பார்த்தாலும் இயக்கமாக ஓரளவுக்கு நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம். ஆனால், இன்றைக்கு நாம் யோசிக்க வேண்டியது, அநீதி என்பது வெறும் சமூக அநீதி மட்டுமல்ல, பொருளாதார அநீதியையும் நாம் பார்க்க வேண்டும். அந்த ஓர் அநீதியை அகற்றுவதில் எந்த அளவிற்கு நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம், இன்னும் எப்படி சிறப்பாகச் செய்தால் அந்த இலக்கை அடையலாம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
இந்த நிதிநிலை அறிக்கைக்கு திரும்பும்முன் நான் ஒரு வரலாற்றைப் பேச விரும்புகின்றேன். 50 வருடங்களாக இந்த அவையில் பலமாக இருக்கின்ற சக்தி திராவிட இயக்கம் என்பதனால் பலர் இந்த வரலாற்றை அறியாமல், யோசிக்காமல் இருக்கலாம். ஆனால் சுமார் முப்பது ஆண்டுகள், 1937-ல் கடைசியாக நீதிக் கட்சி ஆட்சிக்கு பிறகு, 1967-ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைக்கின்றவரை 30 ஆண்டுகள் இங்கே திராவிடக் குரலே அவ்வளவாக ஒலிக்கவில்லை. ற்பகல் 11-45 1952-ல் என் தாத்தா பி.டி. ராஜன் அவர்கள், நீதிக் கட்சித் தலைவராக, ஒரே ஓர் உறுப்பினராக இந்த அவைக்கு, சுதந்திரத்திற்குப் பிறகான முதல் அவைக்கு உறுப்பினராக வந்தார். அந்தச் சூழ்நிலையில், அன்றைய முதலமைச்சர், திரு. இராஜாஜி அவர்கள் ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாநிலம், ஆந்திராவைப் பிரிக்காமல் இருந்த மாநிலத்தில் எங்கள் தாத்தா மாதிரி ஏற்கெனவே அனுபவம் பெற்றவர். உறுப்பினர், கொறடா, அமைச்சர், முதலமைச்சர் என்ற பதவிகளையெல்லாம் ஏற்கெனவே மெட்ராஸ் மாகாணத்தில் வகித்திருந்தவர் என்ற அடிப்படையில் அவரை அழைத்து, ‘நீங்கள் சுயேட்சையாகத்தான் பதிவு செய்திருக்கிறீர்கள். ஏனென்றால் கட்சிக்கு ஒரே ஆள். அதனால் நீங்கள் அமைச்சரவையில் சேர்ந்து எங்களுக்கெல்லாம் சிறிது ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்கும்’ என்று கேட்டார்கள். ‘அது சரியாக வராது. ஏனென்றால் நான் திராவிட இயக்கத்தில் வந்தவன், எங்களுடைய கொள்கையில் வேறுபாடு உள்ளது. அதனால் நான் அமைச்சரவையில் சேர முடியாது’ என்று சொன்ன பிறகு, ‘நீங்கள் தற்காலிக சபாநாயகராக றிக்ஷீஷீ-tமீனீ ஷிஜீமீணீளீமீக்ஷீ ஆக இருந்து எல்லோரும் பதவி ஏற்பதற்காக உறுதிமொழி செய்து கொடுங்கள்’ என்று கேட்டதன் அடிப்படையில், அதனை என் தாத்தா ஏற்றுக்கொண்டார். அதை முடித்த பிறகு, இங்கே இதே அவையில் 1952-ல் கன்னிப் பேச்சு பேசுகிறார். ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர், சாதாரண சுயேட்சை எம்.எல்.ஏ.-வாக கன்னிப் பேச்சு பேசுகிறார். அந்தக் கன்னிப் பேச்சில், நெருங்கிய நண்பர் திரு. இராஜாஜியிடம் அவர் கூறுவது, ‘இங்கே நடப்பது சரியில்லை. நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் முதலமைச்சர் கிடையாது. மெட்ராஸ் மாநிலத்திற்கு முதலமைச்சர். நாம் ஓர் இளைய நாடு, இளைய மாநிலம். சுதந்திரத்திற்குப் பிறகு இதுதான் முதன்முறை நம்முடைய சட்டமன்றத்தை உருவாக்கிச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அதில் உங்களுடைய பொறுப்பு இன்றைய சண்டையோ, இன்றைய திட்டமோ கிடையாது. உங்களுடைய பொறுப்பு, கண்ணியமான ஒரு வழியை இந்த அவைக்கு உருவாக்கி, இந்த விவாதமெல்லாம் சூடு இல்லாமல், நாகரிகமாகவும், பண்போடும் நடக்கும் வகையில் உருவாக்கிக் கொடுப்பது உங்களுடைய கடமை. ஏனென்றால், நம் மாநிலத்தில் இருக்கின்ற பல கோடி குடிமகன்களில் யாராவது இந்த அவையின் நிணீறீறீமீக்ஷீஹ்-ல் உட்கார்ந்து, இந்த அவையின் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, நம் வேலையை, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கௌரவத்துடனும், கண்ணியத்துடனும், திறமையுடனும் செயல்படுத்தி வருகிறார்கள் என்ற எண்ணத்தோடு அவர்கள் திரும்பிப் போகும்போது நினைத்துச் சென்றால்தான் நமக்கெல்லாம் மரியாதை. அதுதான் உங்களுக்கு மரியாதை’ என்று சொன்னார்கள். அந்த வரலாற்றை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அந்தக் கருத்திலிருந்து ஒரு சதவிகிதம்கூட மாறுபாடு இல்லாதவர். என்றைக்கு எதிர்க்கட்சியாக வந்தோமோ, அவர் முதலில் சொன்னார். ‘நாங்கள் எதிர்க்கட்சிதான், எதிரிக் கட்சி அல்ல என்றார்.’ இரண்டாவது, எங்களிடமெல்லாம் சொன்னார், ‘நீங்கள் எழுந்து பேசும்போது மக்கள் பிரச்சினையை மட்டும் பேசுங்கள். நீங்கள் யாருக்கும் புகழ் ஓவியம் பாட வேண்டாம். வேறு எந்த அரசியலும் செய்ய வேண்டாம். தொகுதி மக்கள் பிரச்சினையை மட்டும் பேசுங்கள்.’ என்று எங்களிடம் சொன்னார். அந்த வகையில், இந்த மாதிரி ஒரு சிறந்த தலைவரின் தலைமையின்கீழ் செயல்படுவதை பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன். அதேசமயம், பேரறிஞர் அண்ணா சொன்னபடி, “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற வகையில், நான் உண்மையைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள், பல ஆளும்கட்சி உறுப்பினர்கள், நிருவாகிகள், அமைச்சர்கள், எல்லோரும் ஓரளவுக்கு நாகரிகமாகவும் பண்போடும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் நான் ஒப்புக்கொள்ள வேண்டும். என்றைக்குமே எங்கள் தலைவரைப் போலவே யாரும் இருப்பார்கள் என்று ஏற்றுக்கொள்ளமாட்டேனே தவிர, ஆனால் இங்கே முக்கியமாக இரண்டு அனுபவங்கள் என் மனதில் நிற்கின்றன. நேற்றோடு 50 வருடம் முதல்வராகப் பொறுப்பேற்று வரலாறு கண்ட ஓய்வில்லா உழைப்பாளி என்ற தகுதியை தினமும் நம் மனதில் நம் நெஞ்சில் உருவாக்கிக்கொண்டிருக்கும் மறைந்தும் மறையாமல் இருக்கும் எங்கள் தலைவர் கலைஞர் அவர்களுடைய இரங்கல் தீர்மானத்தையும், அன்றைக்கு நடந்த சபையையும் பார்த்து, உண்மையிலேயே நான் இந்த அவையில் ஓர் உறுப்பினராக இருப்பதற்கு பெருமைகொண்டேன். முற்பகல் 11-50 அதே வகையில் நான் சொல்லவேண்டியது, இந்த அவைக்கு வெளியே நான் யாருடன் தொடர்பு கொண்டாலும், அது மாண்புமிகு அமைச்சர்களாக இருக்கட்டும், மாண்புமிகு பேரவைத் தலைவராக இருக்கட்டும், துணைத் தலைவராக இருக்கட்டும், எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருக்கட்டும், குழு உறுப்பினர்களாக இருக்கட்டும் யாருமே வேறுபாடு இல்லாமல் நட்போடு, பாசத்தோடு நாகரிகத்தோடுதான் பழகுகிறார்கள். இது ஒரு பெருமை. நான் இதை எனக்கு மட்டும் நடப்பதாக நினைக்கவில்லை. இது அனைவருக்கும் நடப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால், நமக்குள் அவ்வளவு வித்தியாசம் கிடையாது. அந்தப் பக்கம் அமர்ந்திருக்கின்ற பலர் ஒரு நாள் இந்தக் கட்சியில் இருந்தீர்கள். இந்தப் பக்கம் அமர்ந்திருக்கின்ற சிலர் ஒரு நாள் அந்தக் கட்சியில் அமர்ந்திருந்தார்கள். ஆனால், ஒரே இடத்தில், ஒரே கொள்கையில், ஒரே இயக்கத்தில் வந்தவர்கள், இந்த அவையில் பேசும்போது, நாம் அந்த அளவிற்கு நாகரிகம், பண்பை வைத்துக்கொண்டு, வெளியே பேசும்போது என்ன வேண்டுமானாலும் பேசலாம். தினமும் புள்ளிவிவரங்களோடு நான் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால், அறிக்கை விடுவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அது நிரந்தரமாக நிற்கும். உங்களுக்கு அடிப்படையில் உண்மை இல்லை, கொள்கையில் ஏதாவது வேறுபாடு இருந்தால், அறிக்கையை விடுவதற்கு பயப்பட வேண்டும். ஆனால். அறிக்கையை மக்கள் மன்றத்தின் வெளியே விட்டால், அது வரலாற்றில் நிற்கும். அந்த அளவிற்கு தைரியம் இருந்தால், அறிக்கை விடவேண்டும். இல்லையென்றால் விடக்கூடாது. அதேபோன்று, யாருக்காவது சூடான ஒரு விவாதம் தேவையென்றால், இங்கே செய்யத் தேவையே இல்லை. 10 தொலைக்காட்சி சேனல்களில் தினமும் 10 விவாத மேடைகள் வைத்திருக்கிறார்கள். அங்கே சென்று யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சத்தம் போடலாம். அதற்கு அதுதான் சரியான இடம் என்று நமக்கெல்லாம் தெரியும். நான் உங்கள் தம்பி என்று சொல்லிவிட்டு, ஏதோ நேற்று வந்தவர், உங்களுக்கெல்லாம் இதுபோன்று ஒரு வேண்டுகோள் வைக்கிறாரே என்று தயவுசெய்து யோசிக்காதீர்கள். நான் திராவிட இயக்கத்தின் 4-வது தலைமுறையில் வந்தவன் என்ற அடிப்படையிலும், இந்த அவைக்கு ஓரளவுக்கு பெயரும், புகழும் சேர்த்த முன்னாள் பேரவைத் தலைவரின் மகன் என்ற அடிப்படையிலும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். தற்போது, நிதிநிலை குறித்துப் பேச வருகிறேன். பொருளாதாரம் என்பது வாழ்க்கையின் தத்துவம். இதுதான் அடிப்படைக் கருத்து. அதேபோன்று, உலகமெல்லாம் பார்த்தால், அரசியல் ñ£‡¹I° «ðó¬õˆ ¶¬íˆ î¬ôõ˜ Üõ˜è«÷, ñ£‡¹I° ܬñ„ê˜ Üõ˜èO¡ ðF½‚° ï¡P.  ªð£¶õ£ù å¼ è¼ˆ¬î„ ªê£™L â¡ à¬ó¬ò º®‚芫ð£A«ø¡.  Þ¬î ã¡ îQò£è„ ªê£™A«ø¡ â¡Á ªê£¡ù£™, ªð£¶õ£è ò£˜ «õ‡´ñ£ù£½‹ «ðêô£‹. Ýù£™, ªð£¶õ£ù å¼ è¼ˆ¶‚°, solution-Üî£õ¶ å¼ b˜¾ 致H®‚A¡ø õ¬èJ™, ã«î‹ å¼ ï™ô àî£ó투î â´ˆ¶‚裆®ù£™î£¡ Ü‰îŠ ªð£¼À‚°, ܉î à¬ó‚° å¼ CøŠ¹ â¡ðîù£™î£¡  Þ¬î„ ªê£¡«ù¡.  ÞF™
â¡ù Hó„C¬ù â¡Á ªê£¡ù£™, âƒèœ î¬ôõ˜ Üõ˜èœ ªê£¡ù¶«ð£™ ðô ÞìƒèO™ Þ¶«ð£¡Á ïì‚A¡ø¶. Gô‹ ªè£´‚èŠð†ìîŸè£ù è£óíº‹, ªêò™ð£†®Ÿè£ù è£óíº‹ ñ£Áð´Aø¶.  Þ¬î ÜóCò™ gFò£è„ ªê£™ôM™¬ô.  è¬ìCò£è â¡ù ªê£™ô õ¼A«ø¡ â¡Á ªê£¡ù£™,  Þó‡´ õ¼ìƒèÀ‚° º¡«ð ªê£¡ù¬î Þ¡¬ø‚°‹ F¼‹ð„ ªê£™A«ø¡. Þ‰î GFG¬ô ÜP‚¬èJ¬ùŠ 𣘈, õ¼ìˆFŸ° àŸðˆFJ™ 15 êîMAî‹--ñ£Gô Üó²‹, ñˆFò Üó²‹ «ê˜‰¶ 15 êîMAî‹--õ¼ñ£ù‹ õ‰¶ªè£‡®¼‰î Å›G¬ôJ™, 𣶠ðˆ¶, ðˆî¬ó êîMAîñ£è‚ °¬ø‰¶M†ì¶. Þ¬î  Þó‡´ õ¼ìƒèÀ‚° º¡«ð ªê£¡«ù¡. 𣶠ñ£‡¹I° ¶¬í ºîô¬ñ„ê˜ Üõ˜è÷£™ ÜO‚èŠð†ì GFG¬ô ÜP‚¬èJ™ àŸðˆFJ¡ ñFŠ¹ A†ìˆî†ì ðF¬ù‰î¬ó Þô†ê‹ «è£®. ÜŠð®ªò¡ø£™ «ò£Cˆ¶Š 𣼃èœ. 䉶 êîMAî‹ multiplied by ðF¬ù‰î¬ó Þô†ê‹ «è£®. A†ìˆî†ì 80,000 «è£® Ïð£Œ. Üîù£™î£¡  ªê£™ô õ¼A«ø¡. Þ¶«ð£™ ÝJó‹ àî£óíƒèœ Þ¼‚èô£‹. à‡¬ñ àî£óí‹ å¡¬ø„ ªê£¡ù£™î£¡, Þ¶«ð£™ Þ¼‚A¡ø¶ â¡ð¬î GÏH‚è º®»‹ â¡ðîŸè£èˆî£¡ Þ‰î àî£óíˆF¬ù„ ªê£¡«ù«ù îMó, 80,000 «è£® Ï𣌠õ¼ñ£ùˆF¬ù êK𣘂è£îîù£™, ïñ¶ èì¬ñJ™  «î£™M ܬìA«ø£‹. ãªù¡ø£™, êKò£ù GF¬òˆ Fó†® êKò£ù õ¬èJ™ ªêô¾ ªêŒõ¶î£¡ ¬ìò èì¬ñ. ð£‚A àœ÷ ܬùˆ¶ ê‚FèÀ‹ ÜcF¬ò àò˜ˆ¶‹ õ¬èJ™î£¡ ªêò™ð´A¡øù. üùï£òèˆF™ Üóê£ƒè‹ å¡Á ñ†´«ñ cF¬ò G¬ôì, Üî£õ¶ ªð£¼÷£î£ó cF¬ò, ªð£¼÷£î£ó êñˆ¶õˆ¬î G¬ôì Þ¼‚è‚îò å«ó å¼ ê‚F. Þ‰î ê‚F Ï.70,000 «è£®, Ï.80,000 «è£® õ¼ñ£ùˆF¬ù Þö‰î£™ ñ‚èÀ¬ìò õ£›‚¬è ðòƒèóñ£è ð£F‚èŠð´‹ â¡øõ¬èJ™,  Þ‰î‚ è¼ˆ¶è¬÷‚ ÃÁõ‹, ♫ô£¼‹ ܬñFò£è Þî¬ù‚ èõQˆ¶ 制¬öŠ¹ˆ î‰î¬ñ‚°‹, Ü«ñ™  º®Šð º¡«ð cƒè«÷ ⡬ù º®‚è„ ªê£™ô£ñ™ Þ¼‰î‹ ï¡P ÃP Üñ˜A«ø¡. ï¡P, õí‚è‹. 


Wednesday, April 29, 2020




கொரானா வைரஸ் தொற்றை ஒழிக்கும் நடவடிக்கைகளில்
மத்திய அரசு பெரிய அண்ணன் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது
மாநிலங்களுக்கு போதிய நிதி உதவி அளித்திடவில்லை,
சமூக முடக்கத்தை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து
முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அளித்திடவில்லை
சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
 (சமூக முடக்கத்திற்குப் பின் பொருளாதாரத்தை மீட்டமைத்திட, பெரிய அளவுக்கு அரசாங்க ஒதுக்கிடுகள் தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கோரியுள்ளார். தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின்போது, அவரிடம் கேட்கக்பபட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.)

கேள்வி: சமூக முடக்கமும், மற்றும் அதனை மேலும் விரிவுபடுத்தியதும் பொருளாதாரத்தின் மீதான கடும் தாக்கத்திற்குக் காரணம் என்பதை நியாயப்படுத்துகிறதா?
சீத்தாராம் யெச்சூரி : சமூக முடக்கம் சில சமயங்களில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கலாம்., ஆனால், இங்கே பிரச்சனை என்னவென்றால், அது முறையான தயாரிப்புக்குப் பின்னர் திணிக்கப்பட்டிருக்க வேண்டும். சமூக முடக்கக் காலத்தை வலுவான முறையிலும், அறிவியல்பூர்வமான முறையிலும் பயன்படுத்திட வேண்டும். அடுத்து, எங்கே நோய்த் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளைத் தனிமைப்படுத்திடவும், இதர இடங்களை மீளவும் திறந்திடவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இதைத்தான் பல நாடுகள் செய்திருக்கின்றன, செய்து கொண்டுமிருக்கின்றன. ஆனால் இங்கே வெறும் நான்கு மணி நேர கால இடைவெளியுடன் பிரதமர் சமூக முடக்கத்தை அறிவிக்கிறார்.  மாநில அரசாங்கங்களுக்கோ அல்லது மக்களுக்கோ தயாரிப்புக்கான கால அவகாசமே கொடுக்கவில்லை. இது தேவையற்ற விதத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இரண்டாவதாக, சமூக முடக்கக் காலத்தில், மிகவும் விரிவான அளவில் சோதனைகள் செய்யப்பட்டு, எங்கே நோய்த்தொற்று அதிகமாக உள்ளதோ அந்தப் பகுதியைத் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். பின்னர், இயல்பான கட்டுப்பாடுகளுடன் இதரப் பகுதிகளை மெல்ல மெல்ல இயல்புநிலைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். சமூக இடைவெளியல்ல, மாறாக சமூக ஒருமைப்பாட்டுடன் மக்கள் இடையே இடைவெளியை (physical distance with social solidarity) உருவாக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எப்போதும் சொல்லிவந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் போதுமான சோதனை வசதிகளுடனோ அல்லது சுய பாதுகாப்பு உபகரணங்களுடனோ தயாராயில்லை. கொரானா வைரஸ் தொற்றை வலுவான முறையில் சமாளிக்கக்கூடிய விதத்திலும், மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்திலும் நாம் தயாராயில்லாத நிலையில் இருக்கிறோம்.
கேள்வி: சமீபத்தில் பிரதமருக்கும், முதல்வர்களுக்கும் இடையே காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கலந்தாலோசனைகளை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி:   திங்கள் கிழமை அன்று நடந்த கூட்டத்திற்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒன்பது முதல் அமைச்சர்களுக்கு மட்டும் பேசுவதற்குக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஏன், மற்றவர்கள் அழைக்கப்படவில்லை? யார் பேச வேண்டும் என்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? இவ்வாறு பேசிய ஒன்பது பேர்களில், ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர், மற்றொருவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். மற்ற அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் அல்லது பாஜக ஆதரவாளர்கள். இத்தகையக் கலந்தாலோசனையை எதில் சேர்ப்பது? ஒவ்வொரு கூட்டத்திலும், பிரதமர் அலுவலகம், எந்த முதல்வர் பேச வேண்டும் என்று தீர்மானிக்கிறது. முதல்வர்கள் காணொளிக் காட்சி நடைபெறப் போகிறது என்றால் அனைத்து முதல்வர்களையும் அவர்களின் கருத்துக்களைக் கூறுவதற்கு அனுமதித்திட வேண்டும். இவ்வாறு ஒருசிலரைப் பொறுக்கி எடுத்து, பின்னர் இவ்வாறு பேசிய ஒன்பது பேரில் நான்கு பேர் சமூக முடக்கக் காலத்தை விரிவாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் என்று ஒருவிதமான தவறான தகவலை வெளியிடுகிறார்கள். இது இத்தகைய கூட்டத்தின் நம்பகத்தன்மையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.    
கேள்வி: கேரள அரசாங்கம் சமூக முடக்கக்காலக் கட்டுப்பாடுகளைச் சற்றே தளர்த்தியிருப்பது குறித்து, உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம், கேரள அரசாங்கத்தின்மீது பாய்ந்திருக்கிறது. மேலும் மத்திய அரசு, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் தங்கள் குழுக்களை அனுப்பி இருக்கின்றன. இந்நிகழ்வுகளை எப்படிக் பார்க்கிறீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: நீங்கள் உண்மையிலேயே கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கிற மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்பினால், அம்மாநில அரசாங்கங்களுக்குத் தேவையான உதவிகளை முறையாகச் செய்திட வேண்டும். அதற்கு, அவற்றுக்கு நிதி உதவிகள் செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால் அதைச் செய்யவில்லை. அவர்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளைக் கூட அவர்களுக்கு அளிக்கவில்லை.
‘பிஎம்கேர்ஸ்’ (PMCARES) என்ற பெயரில் புதிய நிதியம் ஒன்றின்கீழ்  பல கோடி ரூபாய்கள் நீங்கள் வசூலித்திருக்கிறீர்கள். இந்தப் பணம் உங்களுக்கு எதற்காக? இந்தப் பணத்தை மாநில அரசாங்கங்களுக்கு மாற்றல் செய்யுங்கள். மத்திய அரசு, இதை எப்படிச் செய்வது என்பது குறித்து ஒருவிதமான பெரிய அண்ணன் மனப்பான்மையுடன் நடந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யவில்லை. மாநிலத்தில் தாங்கள் மேற்கொண்ட மதிப்பீடுகளின்படி செயல்படவும் அனுமதிக்க மறுக்கிறது. இவ்வாறு நிதிக் கூட்டாட்சி மற்றும் அரசியல் கூட்டாட்சி இரண்டுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மத்தியக் குழுக்கள் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு மட்டும் அனுப்பப்படுகின்றன, ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத்தும், மத்தியப் பிரதேசமும் கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட்டு, ‘பாசிடிவ்’ வழக்குகள் மிகவும் உயர்ந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கேரளாவில் ஜனவரி 30 அன்று முதல் வழக்கு குறித்து செய்தி வெளிவந்ததிலிருந்து, இதுவரையிலும் மத்திய அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் நாங்கள் எங்களுக்குள்ளேயே இதை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.   மாறாக, அவர்கள் ‘நமஸ்தே டிரம்ப்’ கூட்டத்திற்கு மக்களைத் திரட்டினார்கள், இப்போது இதன் காரணமாக குஜராத்தில் கொரானா வைரஸ் தொற்றின் நிலைமை மிகவும் உச்சத்தில் இருக்கிறது.
அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் மும்முரமாக இருந்தீர்கள். பின்னர் பிரம்மாண்டமான கூட்டத்துடன் உங்கள் ஆட்சிக்கான பதவிப் பிரமாண நிகழ்ச்சியை நடத்தினீர்கள்.
அடுத்து, தப்லிகி ஜமாத் கூட்டத்தை நடத்தினீர்கள். இதனை நடத்தியவர்கள் மிகவும் பொறுப்பற்ற முறையில் அந்த சமயத்தில் கூட்டத்தைக் கூட்டினார்கள். ஆனால், இதனை அனுமதித்தது யார்? இதே போன்றதொரு கூட்டத்திற்கு மகாராஷ்ட்ர அரசாங்கம் அனுமதி மறுத்தது எப்படி? ஆனால், தில்லியில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இதற்கு அனுமதி அளிக்கிறது. இது எப்படி?
கேள்வி:   இந்தத் தொற்றிலிருந்து எவ்வாறு தப்பிப்பது?
த்தாராம் யெச்சூரி:   கொரானா வைரஸ் தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டறிந்து, அவற்றைத் தனிமைப்படுத்தி, ஓர் அறிவியல்பூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து, நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே இது சாத்தியம், ஒருவிதமான இயல்புநிலைக்குத் திரும்பமுடியும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இயல்பு வாழ்க்கைக்கான நடவடிக்கைகளை மெல்ல மெல்லத் தொடங்கிட வேண்டும். அப்படித்தான் ஜனநாயகம் கூட ஜீவித்திருக்கும். மாறாக நீங்கள் சர்வாதிகாரமான முறையில் கடுமையாக நடவடிக்கை எடுத்தீர்களானால், பின் ஜனநாயகம் பாதிப்புக்கு உள்ளாகும். இதுபோன்று தொத்துநோய்கள் சமூகத்தில் பீடிக்கப்படும் காலங்களில் எல்லாம், அல்லது சுகாதார அவசரநிலை உருவாகும்போதெல்லாம், ஆட்சியாளர்களால் அரக்கத்தனமான சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 1890களில் பிளேக் நோய்த்தொற்று உருவான சமயத்தில், பிரிட்டிஷார் பாதிப்புக்கு உள்ளானவர்கைளை ஆட்டு மந்தையை அடைப்பதைப்போல் ஒரேயிடத்தில் அடைத்துவைத்து அவர்கள் கொத்து கொத்தாக இறப்பதற்கு வழிவகுத்தார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய இயக்கம் கிளர்ந்தெழுந்தது.  இதன் விளைவாகத்தான் பிளேக் கமிஷனர் வால்ட்ர் சார்லஸ் ரேண்ட் என்பவர் சபேகார் சகோதரர்களால் சுட்டுக்கொன்ற புகழ்பெற்ற வழக்கு நடைபெற்றது. பின்னர், 1897இல் கடுமையான நடவடிக்கைகளுடன் தொற்று நோய்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதே சட்டம் சில அலங்காரப் பூச்சுகளுடன் 2005இல் கொண்டுவரப்பட்டிருப்பதை இப்போது நாம் பெற்றிருக்கிறோம். பின்னர், ராஜத்துரோகச் சட்டம் (Sedition Act) வந்தது. தொற்று நோயை பிரிட்டிஷ் அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் கையாள்வதாக அதனைக் கண்டித்து தலையங்கள் எழுதினார் என்பதற்காக பால கங்காதரத் திலகர் கைது செய்யப்பட்டார். இவ்வாறாக ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே தொற்று நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு, பெரிய அளவில் எதேச்சாதிகார நடைமுறைகளைத்தான் பயன்படுத்துகின்றன.  ஆனால்,  அது நாம் இந்தத் தொற்றை முறையாக எதிர்த்துப் போராடவில்லை என்று கூறுவதற்கான காரணமாக இருக்க முடியாது. இது எதிர்த்து முறியடிக்கப்பட்டாக வேண்டும். மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
கேள்வி: இந்தத் தொற்று எப்படி இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்? இதனைச் சரிசெய்திட உங்கள் ஆலோசனைகள் என்ன?
சீத்தாராம் யெச்சூரி: இதனை மூன்று கட்டங்களாக சமாளித்ரிதட வேண்டும். என்னுடைய கருத்தின்படி, இதற்கு குறுகிற, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தேவை. இவை அனைத்தும் இப்போதே தொடங்கிட வேண்டும். குறுகிற கால நடவடிக்கையின்படி, ஒவ்வொருவருக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு, மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்க மாற்றல் செய்திட வேண்டும். பசி-பஞ்சம்-பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மை காரணமாக கொரானா வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கும் ஏழை மக்கள் அனைவருக்கும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் உள்ள உணவு தானியங்களை  விநியோகம் செய்திட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மக்களுக்கு நிவாரணம் அளிப்பது என்பது, உண்மையில் நீங்கள் உங்கள் உழைப்புச்சக்தியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருளாகும்.
நடுத்தர கால நடவடிக்கைகள் என்பவை, அரசாங்கம் இப்போது அளித்திருக்கும் நிவாரணத் தொகுப்புத் திட்டத்தைவிட மேலும் பெரிய அளவிலான நிவாரணத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்திட வேண்டும். அரசாங்கம் இப்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே 1.7 லட்சம் கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. பல நாடுகள், தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தயில் 20 சதவீத அளவிற்கு நிதித் தொகுப்புகளை அளித்திருக்கின்றன. நாம் மட்டும் ஏன் இப்படி மிக அற்பத்தனமாக நடந்துகொள்கிறோம்? நமக்குத்  தெரியவில்லை. பெரும் பணம் படைத்தவர்களுக்கு உங்களால் 7.78 லட்சம் கோடி ரூபாயை கடந்த ஐந்தாண்டுகளில் தள்ளுபடி செய்யக்கூடிய வல்லமை இருக்கும் என்றால், நிச்சயமாக உங்களிடம் போதுமான அளவிற்கு நிதி ஆதாரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. பெரும் பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 4 சதவீத செல்வ வரியை மீண்டும் கொண்டு வாருங்கள். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவிற்கு நிதித் தொகுப்பு செய்யக்கூடிய அளவிற்குப் போதுமான நிதியை நமக்கு அளித்திடும்.
நீண்டகால நடவடிக்கைகள் என்பனவற்றையும் இப்போதே தொடங்கிட வேண்டும். இதில் பிரதானமான அழுத்தம் என்பது, சுகாதாரம், கல்வி மற்றும் நாட்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்குப் பொது முதலீடுகள் அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். இது, கோடானு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்திடும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் பட்ஜெட் ஒதுக்கீடு கணிசமான அளவிற்கு உயர்த்தப்பட வேண்டும். இப்போதுள்ள 100 நாள் வேலை திட்டம் என்பதை, 200 நாட்கள் வேலைத் திட்டமாக உயர்த்திட வேண்டும்.
நன்றி:  தி இந்து நாளிதழ், 29.4.2020
(தமிழில்: ச. வீரமணி)
    












நூல் அறிமுகம் : தூக்குமேடைக் குறிப்பு
வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்…
ஜூலியஸ் பூசிக் – 1903-1943
மே தினம் – சிறையில் கொண்டாடப்பட்ட விதத்தையும் தெரிந்து கொள்வோம்
1943இல் அன்றைய செக்கோஸ்லேவேகியா, இதர ஐரோப்பிய நாடுகளைப்போலவே மாபெரும் இடுகாடாக மாறியிருந்தது. சர்வாதிகாரி ஹிட்லரின் படைகள் மக்களைக் கொன்றுகுவித்த வண்ணம் இருந்தன, ஐரோப்பாவில் இருந்த பல அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்கள் ஹிட்லரின் அடிவருடிகளாக மாறி அவனுக்கு சேவகம் செய்தபோதிலும், பலர் அவனை எதிர்த்து வீரமரணம் எய்தினர், இவர்களில் ஒருவர்தான் தோழர் ஜூலியஸ் பூசிக்.
தோழர் ஜூலியஸ் பூசிக் ஒரு நாடக விமர்சகர், இதழியலாளர் மற்றும் தலைசிறந்த ஒரு கம்யூனிஸ்ட்டும் ஆவார். 1942 ஏப்ரல் 24இல் கைதுசெய்யப்பட்ட அவர். தோழர்களைக் காட்டிக்கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு மிகவும் கொடூரமானமுறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆயினும் அவரிடமிருந்து ஒருவார்த்தைகூட வெளிவரவில்லை. இறுதியில் அவர் 1943 செப்டம்பர் 8 அன்று கெஸ்டபோ சிறையில் 40ஆவது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
1945 மே மாதத்தில் ஜெர்மனியில் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டபின்னர், சிறையிலிருந்த அனைத்துக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். அப்போது, ஜூலியஸ் பூசிக்கின் வாழ்க்கைத்துணைவியாரும் தோழருமான அகஸ்டினா, பூசிக்கின் சக சிறைவாசி ஒருவரிடமிருந்து, பூசிக் சிறையில் இருந்தபோது தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை. ஒரு செக் காவலர்  தொடர்ந்து கொடுத்துவந்த தாள் மற்றும் பென்சில் உதவிகொண்டு எழுதி வந்ததாகவும். அவை கோலின்ஸ்கி என்பவரிடம் பத்திரமாக இருப்பதாகவும் அறிந்தார். அகஸ்டினா அவரைத் தேடிக்கண்டுபிடித்து. ஜூலியஸ் பூசிக் எழுதிய தாள்களைத் தொகுத்து, தூக்குமேடைக் குறிப்புகள் என்ற பெயரில் வெளியிட்டார். இந்த  சிறைக்குறிப்புகளில் நூலில் ஜூலியஸ் பூசிக், சிறையில் தான் இருந்த 411 நாட்களில் நடைபெற்ற கொடுமைகளையும் விவரித்திருப்பார். செக்கோஸ்லேவேகியாவில்  சாமானியமான ஆண்களும் பெண்களும் செக்கோஸ்லேவேகியாவின் விடுதலைக்காக எப்படி ரத்தம் சிந்தியுள்ளனர் என்பதை இது விளக்கும். பின்னர் செக்கோஸ்லேவேகியா 1945இல் விடுதலை அடைந்தது.
1903 பிப்ரவரி 23இல் பிரேக் நகரில் ஒரு தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த தோழர் ஜூலியஸ் பூசிக். பிரேக் பல்கலைக் கழகத்தில் கலை.இலக்கியம். இசை ஆகியவற்றைப் படித்துத் தேறியவர். பின்னர் தொழிலாளியாக மாறிய அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பில் முன்னணித் தலைவராக மிளிர்ந்தார். செக்கோஸ்லேவேகியா கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ரூட் பிராவோ இதழில் ஆசிரியராகவும் உயர்ந்தார். அப்போதுதான் ஹிட்லரின் நாசிப் படையினரால் கைதுசெய்யப்பட்டார்.
தோழர்களே, ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக் குறிப்புகள் நூலை தோழர் இஸ்மத் பாஷா மிக அற்புதமாகத் தமிழாக்கம் செய்திருப்பார். அவசியம் அனைவரும் அதனைப் படித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதில் மே தினத்தை எப்படித் தோழர்கள் சிறையில் கொண்டாடினார்கள் என்பதை தோழர் ஜூலியஸ் பூசிக் எழுதியிருப்பதைப் படித்துப் பாருங்கள்.
மே முதல் நாள். வானம் வெளுப்பதற்கு முன் சிறைக் கூண்டின் மூன்று மணி அடிக்கிறது. முதல் தடவையாக அதன் ஓசை என் காதில் கணீர் கணீர் என்று விழுகிறது. பிரக்ஞை முழுவதும் மீண்டுவிட்டது. ஜன்னல் வழியாகப் புதுக்காற்று வீசுகிறது. அது என் விலாப்புறமாகச் செல்கிறது! படுக்கையின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கம் வைக்கோல் நுனிகளை அசைக்கிசறது. இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. வைக்கோல் நுனிகள் என் முதுகை உறுத்துகின்றன என்று. மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாகத் தோன்றுகிறது. உடலின் ஒவ்வொரு அணுவும் வலிக்கிறது. ஜன்னலைத் திறந்தவுடன் சட்டென்று பார்ப்பதுபோல் இதுதான் என் முடிவு என்று சட்டென்று புரிந்துகொள்கிறேன். நான் செத்துக் கொண்டிருக்கிறேன்.
சாவே! என்னிடம் வர உனக்கு வெகுநேரம் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் உன்னைச் சந்திப்பதற்குள் பல ஆண்டுகள் கழிந்துவிடும் என்றுதான் நினைத்தேன்! சுதந்திர மனிதனாய் வாழலாம்; பற்பல வேலைகளைச் செய்யலாம்; மனம் பூரிக்க நேசிக்கலாம்; இன்பம் பொங்கப் பாடலாம்; நானிலமெங்கும் சுற்றித் திரியலாம்; குதூகலிக்கம்... இப்படியாக எண்ணினேன். அப்போதுதான் நான் பலப் பருவம் மாறிப் பக்கவமடைந்திருக்கிறேன். என் உடம்பில் நிரம்பத் தெம்பு இருந்தது. ஆனால் இப்போது அது இல்லை; குன்றிக் குறைந்த வருகிறது.
நான் வாழ்வை நேசித்தேன், அதன் எழிலுக்காகப் போராடப் புறப்பட்டேன். ஜனங்களே! உங்களை மனப்பூர்வமாக நேசித்தேன். நீங்களும் என்னை நேசித்தபோது என் மனம் குளிர்ந்தது. என்னை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டபோது, என் இதயம் வேதனையில் வெந்தது. உங்களில் யாருக்காவது நான் ஏதாவபது தீங்கு இழைத்திருந்தால் அருள்கூர்ந்து மன்னித்துவிடுங்கள், என்னால் உற்சாகம் அடைந்தவர்கள் யாரேனும் இருந்தால், என்னை மறந்துவிடும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். என் இறுதி விருப்பம்; நான் விட்டுச் செல்லும் உயில்! அப்பா! அம்மா! சகோதரிகளே! உங்களக்கு - என் ஆருயிர் மனைவியே! உனக்கு-இன்னுயிர் தோழர்காள்! உங்களுக்கு - நான் நேசித்த ஒவ்வொருவருக்கும்-இதுதான் என் உயில்.  துயரத்தின் தூசியைக் கண்ணீர் கரைத்துவிடும் என்று நினைத்தால், சிறிது நேரம் அழுங்கள். ஆனால் வருத்தப்படாதீர்கள், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன், மகிழ்ச்சிக்காகச் சாகிறேன், என் சமாதியில் துக்க வேதனையை நிறுத்துவது கொடுமையாகும்.
மே முதல் நாள்!
இந்த நன்னாளில் பொழுது புலர்வதற்குள் நாங்கள் எழுவோம். கொடிகளைத் தயார் செய்வோம். இந்த நேரத்தில் மாஸ்கோவில், மே தின அணிவகுப்பில் செல்லும் பொருட்டு முதல் வரிசையினர் ஆயத்தமாகி, தத்தம் இடத்தில் தயாராகப் போய் நிற்பர், இன்றைக்கு இந்நேரத்தில் மனித சுதந்திரத்தைக் காப்பதற்காக நடைபெறும் மகத்தான இறுதிப் போரில் லட்சோபலட்சம் மக்கள் சமர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களில் ஒருவன். அவர்களில் ஒருவனாகவே என்றுமிருப்பேன். சுதந்திரத்திற்கான இறுதிப் போரில் ஒரு வீரனாயிருப்பது எவ்வளவு மகத்தான பாக்கியம்?
ஆனால் சாவது சௌந்தர்யமானதல்ல. எனக்கு மூச்சுத் திணறுகிறது.இருமல் பக்கத்திலுள்ளவர்களை எழுப்பிவிடும் போலிருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் குடித்தாள் ஒரு வேளை...ஆனால் தகரக் குவளையில் இருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்துவிட்டது. அதோ அந்த மூலையில், கேவலம் ஆறு அடி தூரத்தில்...முகம் கழுவும் இடத்தில் தண்ணீர் ஏராளமாக இருக்கிறது. ஆனால் அங்கு போய்ச் சேர என் உடம்பில் வலுவிருக்கிறதா?
ஓசைப்படாமல் குப்புறப்படுத்தவாறே நகர்கிறேன். மிக மெதுவாக...சாவின் பெருமை மற்றவர்களை எழுப்பாமல் இருப்பதில்தான் இருக்கிறது என்ற எண்ணமோ என்னவோ? கடைசியாக அங்கு போய்ச் சேர்கிறேன். தொட்டியிலிருந்து ஆர்வத்துடன் தண்ணீரைக் குடிக்கிறேன்.
போகவும், குடிக்கவும், திரும்பி ஊர்ந்துவரவும் எவ்வளவு நாழியாயிற்று என்பது எனக்குத் தெரியாது. மீண்டும் நினைவு தப்புகிறது. கை நாடியைத் தடவிப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை. இருதயம் திடீரென்று தொண்டை பக்கம் பாய்கிறது. உடனேயே பழைய ஸ்தானத்தில் குதிக்கிறது. அதன் கூடவே நானும் கீழே விழுகிறேன். இடையே காரெக் கூறியது மட்டும் காதில் கேட்கிறது.
"அப்பா! அப்பா! கேட்கிறதா? பாவம்? இறுதி மூச்சு விடுகிறான்."
காலையில் டாக்டர் வந்தார்.
ஆனால் இவைகளையெல்லாம், பிற்காலத்தில் மிகவும் பிற்காலத்திலேயே அறிந்தேன்.
அவர் வந்தார், என்னைப் பரிசோதித்தார், தலையை அசைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனார். வயித்திய ரிப்போர்ட்டை எடுத்து, என் பெயருக்குமுன் நேற்று மாலையில் எழுதப்பட்டிருந்த மரணம் என்ற வார்ததையை அடித்துத் திருத்திவிட்டு, ஒரு நிபுணரின் சுய திருப்தியோடு கூறினார்:
"அவனுக்கு ஒரு குதிரையின் வலுவிருக்கிறது."
                                    ***         ***
இடைவேளை மே தினம், 1943
இன்று 1943-ஆம் வருட மே தினம். இதை ஒரு இடைவேளையாகக் கருதுகிறோம். இதில் எழுதுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. என்னே என் பாக்கியம். ஒரு வினாடி நேரம் திரும்பவும் கம்யூனிஸ்ட் பத்திரிகை ஆசிரியனாக வேலை செய்யச் சந்தர்ப்பம்! புதிய உலகப் போராட்டச் சக்தியின் மே தின அணிவகுப்பைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பு, எத்தகைய அதிர்ஷ்டம் இது!
மே தினத்தைப் பற்றி எழுதப் போகிறேன் என்றவுடன் பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகளைப்பற்றி எழுதுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். அதைப்பற்றி எழுதப் போவதில்லை. உணர்ச்சிகரமான சம்பவங்களைப்பற்றி வர்ணிப்பேன் என்று நினைக்க வேண்டாம். அப்படிப்பட்ட வர்ணனைகளை மக்கள் நிரம்ப விரும்புகின்றனர் என்பது உண்மையே. ஆனால், நான் அப்படிப்பட்ட சம்பவங்களைவிட மிகமிகச் சாதாரணமான நிகழ்ச்சிகளையே இப்போது எழுதுகிறேன். ஏனெனில், இப்போது இவ்விடத்தில், முந்திய வருடங்களில் பிரேக் நகர வீதிகளில் மே தினத்தன்று வானமதிரக் கோஷமிட்டு ஆயிரக்கணக்கான கொடிகளைப் பறக்கவிட்டு பவனி வந்த லட்சோப லட்ச ஜனங்கள் பிரசன்னமாகி இருக்கவில்லை. மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில், ஆழி அலைகளைப் போல் சாரைசாரையாக அணிவகுத்துப் போகும் லட்சக்கணக்கான மக்களும் இங்கு இல்லை. லட்சக்கணக்கான பேர் அல்ல, நூற்றுக்கணக்கானவர்கசள் கூட இங்கு இல்லை, விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில தோழர்கள்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் முக்கியத்துவத்தில் அந்த மகத்தான அணிவகுப்புகளுக்கு இது எவ்விதத்திலும் குறைந்ததல்ல. ஏனெனில், இங்கு நாங்கள் பார்க்கும் காட்சி அலாதியானது. இங்கு புதிய உலக சக்திகள் வீதி அணி வகுப்பில் விமர்சிக்கப்படவில்லை. கொஸ்ர நெருப்பு ஆற்றிலே பரீட்சிக்கப்படுகின்றன. நெருப்பு ஆற்றில் எதிர்நீச்சு நீந்தும்போது, அவை பொசுங்கி சாம்பலாகிவிட வில்லை, வலுவுள்ள எஃகாக உருவாகின்றன. வீதியில் அல்ல, போர்முனை அகழிகளில் நடைபெறும் விமர்சனம் இது. அகழிகளில் சாம்பல் நிறமான போர்க்கள உடையை அணிந்து நிற்கிறோம் நாங்கள். மிக மிகச் சிறிய காரியங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பரீட்சை இங்கு நடத்தப்படுகிறது. போராட்ட உலைக்களத்தில் பகுந்து வராத உங்களுக்கு இதைப் புரிந்துகொள்ள முடியுமோ, முடியாதோ சந்தேகம்தான். ஒருவேளை புரிந்துகொண்டாலும் கொள்ளலாம். நான் சொல்கிறேன், நம்புங்கள், சக்கு இங்குதான் பிறந்து கொண்டிருக்கிறது.
காலை, அடுத்த அறையிலுள்ள தோழர் சுவரில் தட்டுகிறார். அது பீத்தோவன் பாட்டின் தாளம். அது காலை வாழ்த்துக்கள். மற்ற நாட்களைவிடப் பலமாக இன்று அவர் தாளம் போட்டு வாழ்த்துகிறார். மற்ற நாட்களைவிட, இன்று அது பரவசமாக ஒலிக்கிறது. ஸ்தாயியை உயர்த்திப் பேசுகிறது சுவர்.
இருக்கிற ஆடைகளில் சிறந்ததை எடுத்து உடுத்திக்கொள்கிறோம். எல்லா அறைகளிலும் இப்படியே.
காலைச் சாப்பாடு குதூகலத்துடன் நடக்கிறது. ஏவல் கைதிகள் திறந்த அறைக்கு முன் வரிசையாகக் கறுப்புக் காப்பி, ரொட்டி, தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். தோழர் ஸ்கொரியா, வழக்கத்துக்கு மாறாக இரண்டுக்கு பதில் மூன்று பன் ரொட்டிகளை என்னிடம் தருகிறார். அது அவருடைய மே தின வாழ்த்து. உஷாராக இருக்கும் அவர், தன் உணர்ச்சிகளை வெளியிட ஏதாவது சாதாரணமான காரியத்தை இவ்விதம் யோசித்துச் செய்கிறார். பன் ரொட்டிக்கு அடியில், என்னுடைய விரல்களை அவருடைய விரல்கள் இலேசாகப் பிடித்து அழுத்துகின்றன. அதில் உணர்ச்சிகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. யாரும் பேசத் துணிவதில்லை. கண் ஜாடை காட்டுகிறார்களோ என்று பார்க்க, காவல்காரர்கள் எங்களுடைய கண்களையும் விடாமல் கவனிக்கிறார்கள். ஆனால் ஊமைகளுக்கு தங்களுடைய விரல்களாலேயே மிகவும்   தெளிவாகப் பேசிக்கொள்ள முடியும். 
எங்கள் ஜன்னலுக்குக் கீழே பெண் கைதிகள் உடற் பயிற்சிக்காக ஓடுகிறார்கள். மேஜை மேல் ஏறி நின்று, கம்பிகளில் முகத்தை வைத்து நான் அவர்களைப் பார்க்கிறேன். அவர்கள் ஒருவேளை அண்ணாந்து பார்க்கலாமல்லவா? அவர்கள் என்னை அண்ணாந்து பார்க்கிறார்கள் முஷ்டியை மடக்கி லால் சலாம் செய்கிறார்கள். திரும்பவும் சலாம் செய்கிறார்கள். கீழே இன்றைக்கு மற்ற நாட்களைவிடக் குதூகலமாக இருக்கிறது. வாஸ்தவத்திலேயே குதூகலமாக இருக்கிறது. இதை எல்லாம் காவல்காரர்கள் பார்க்கவில்லை. ஒரு வேளை பார்க்க விரும்பவில்லையோ என்னவோ, அதுகூட மே தின அணிவகுப்பில் ஒரு பகுதிதான்.
எங்கள் உடற்பயிற்சிக்கு நேரம் வருகிறது. பயிற்சியை முன்னின்று நடத்தும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது. இன்றைக்கு மே தினம். ஆகவே, நாம் ஏதாவது புதிய பயிற்சியை - காவல்காரர்கள் பார்த்தாலும் பொருட்படுத்தாமல் - செய்ய வேண்டும். முதல் பயிற்சி கத்தியை ஓங்கி ஓங்கி அடிப்பது போன்ற பாவனை. ஒன்று, இரண்டு, ஒன்று இரண்டு! அது முடிந்தவுடன் இரண்டாவது பயிற்சி. அறுவடை செய்வது போன்ற பாவனை. சுத்தியும் அரிவாளும் - தோழர்கள் புரிந்துகொள்கிறார்கள். வரிசை முழுவதிலும் ஒரு புன்னகை பரவுகிறது. எல்லோரும் உற்சாகத்துடன் பயிற்சியைச் செய்கிறார்கள். இதுதான் நம் மே தின அணிவகுப்பு தோழர்களே. இந்த அபிநயம்தான் நம் மேதினப் பிரதிக்ஞை. நாம் உறுதியாக இருப்போம். சாவை எதிர்நோக்கி நடப்பவர்களும் உறுதியாக இருப்போம்--இதுதான் அபிநயத்துக்கு அர்த்தம்.
அறைக்குத் திரும்புகிறோம். மணி ஒன்பது. கிரம்ளின் மணிக் கூண்டில் பத்து மணி அடிக்கிறது. செஞ்சதுக்கத்தில் அணிவகுப்பு ஆரம்பமாகிறது. கவனியுங்கள். அவர்கள் சர்வதேசிய கீதம் பாடுகிறார்கள். உலகம் முழுவதிலும் ஒலிக்கிறது அந்தக் கீதம். நம் அறையிலும் அது அது கம்பீரமாக ஒலிக்கட்டும். நாங்களும் அதைப் பாடுகிறோம். பிறகு ஒன்றன்பின் ஒன்றாய்ப் பல புரட்சிப் பாட்டுக்கள் தொடருகின்றன. நாங்கள் தனிமையில் இருக்க விரும்பவில்லை - இருக்கவுமில்லை. நாம் உலகத்தில் சுதந்திரத்துடன் பாடத் துணிவு கொள்கிறவர்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யுத்த களத்தில் சமர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நம்மைப் போலவே ...
            குளிர்ந் துறைந்த சுவர்கள் கொண்ட
                கொட்டிச் சிறைக்குள்ளே
            இருந்து வாடுகின்ற என்றன்
                இனிமையான தோழர்காள்
            இன்று எங்கள் அணிவகுப்பில்
                இல்லை நீங்கள்; ஆயினும்
            என்றும் எங்களோடு நீங்கள்
                இருக்கிறீர் இருக்கிறீர்!
ஆம், நாங்கள் உங்கள் அணியில்தான் இருக்கிறோம்.
1943ஆம் வருட மே தினத்தைச் சிறப்பான முறையில் முடிக்க, 267ஆம் நம்பர் அறையில் ஒரு காரியத்தை மேற்கொண்டோம். ஆனால் அதுவே முடிவு அல்ல. பெண்கள் வார்டில் ஏவல் வேலை செய்கின்ற பெண் கைதி, செஞ்சேனையின் வழிநடை பாட்டை சீட்டி அடித்துக்கொண்டே முற்றத்தில் நடக்கிறாள். பாண்டி ஜங்கா என்ற பாட்8டயும், மற்ற சோவியத் பாட்டுகளையும், பிறகு சீட்டியடிக்கிறாள். இவ்விதம் ஆண் கைதிகளுக்கு அதிக தைரியத்தை உண்டு பண்ணுகிறாள். அந்தந்த சமயம்; செக் போலீஸ் உடுப்பு உடுத்தியுள்ள மனிதர் என் அறைக்கு வெளியே காவல் புரிகிறார். அவர்தான் எனக்கு காகிதமும், பென்சிலும் கொண்டுவந்து இரகசியமாகக் கொடுத்தவர். நான் எழுதும்போது யாரும் திடீரென்று வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளவே அவர் காவல் நிற்கிறார். அவரும் சீட்டி அடிக்கிறார். மேலும்,  என்னை இந்த எழுத்து வேலையில் ஈடுபடுத்திய செக் காவல்காரரும் சீட்டியடிக்கிறார். இவர்தான் நான் எழுதும் உதிரிக் காகிதங்களை ஒவ்வொன்றாக வெளியே திருட்டுத்தனமாகக் கொண்டுபோய், பிரசுரத்துக்கு உகந்த காலம்வரும் வரையில் மறைத்து வைப்பவர். இந்தத் துண்டுக்காகிதத்துக்காக அவருடைய தலையே போய்விடும். இருந்தாலும், சிறைப்பட்டிருக்கும் இன்றைக்கும், சுதந்திரமாக இருக்கும் நாளைக்கும் இடையே ஒரு காகிதப் பாலத்தைக் கட்டுவதில் இவர் தன் உயிருக்கும் துணிந்துவிட்டார். அவர்கள் எல்லோரும் வெவ்வேறு உடுப்பிலும், வேலையிலும் இருந்தபோதிலும், எல்லோருடைய போராட்டமும் ஒன்றேயாகும். அந்தப் போராட்டத்தில் எந்த இடத்தில் நிறுத்தப்பட்ட போதிலும், எத்தகைய ஆயுதம் கையில் கிட்டியபோதிலும், அவர்கள் அதற்கு ஏற்றபடி விட்டுக்கொடுக்காமல் வீரதீரமாகப் போராடுகிறார்கள். ஜீவ - மரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அவர்களைப் பார்க்கும்போது, வாஸ்தவத்திலேயே அப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், அவர்களிடம் எவ்வித படாடோபங்களையும் உணர்ச்சி மனோபாவங்களையும், உங்களால் பார்க்க முடியாது.
புரட்சியின் போர்வீரர்கள் மே தினத்தன்று அணிவகுத்துப் போவதை எத்தனையோ தடவை நீ பார்த்திருக்கிறாய். அது கன ஜோர். ஆனால் இந்தச் சேனையின் சக்தியைப் போராட்டத்தில் மட்டுமே பார்க்க முடியும். அது வெல்லற்கரியது என்று உணர முடியும். சாவு நீ நினைத்தபடி கனமானது அல்ல. வீரம் எந்த ஜோதியினாலும் சூழப்பட்டிருக்கவில்லை. ஆனால் போராட்டம் கொடூரமானது. நீ நினைத்ததைவிடக் கொடூரமானது. அதில் இறுதிவரை தாக்குப் பிடித்து நிற்பதற்கும், இறுதியில் வெற்றியடைவதற்கும், கணக்கிட முடியாத அளவுக்குப் பலம் வேண்டியிருக்கிறது. இந்தச் சேனை நடைபோட்டுப் போவதை நீ பார்க்கிறார். ஆனால் இதன் பலம் எத்தகையதென்பதை எப்போதுமே சரியாக உணர்கிறாய் என்று சொல்வதற்கில்லை. இது கொடுக்கும் அடிகள் ரொம்ப சாதாரணமானவை, முறையானவை.
இன்றைக்கு இதை நீ சரியாக உணர்கிறாய்.
1943ஆம் வருட மே தின அணிவகுப்பில் தெரிந்து கொள்கிறாய்.