Wednesday, April 30, 2008

மே தின சபதம் ஏற்போம்

இன்று மே தினம். உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தால் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படக்கூடிய தினம், மே தினமாகும். இந்த மேதினம் கொண்டாடப்படுவது எவ்வாறு தொடங்கியது, அது இந்தியாவில் முதன்முதலில் எப்போது கொண்டாடப்பட்டது என்பதைச் சற்றே ஆராய்வோம்..18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தொழிலாளிகள் வர்க்கமாய் திரளாத சூழலில் முதலாளித்துவம் தனது கொடுங்கரங்களால் தொழிலாளிகளை மொத்தமாக சுரண்டி கொழுத்தது. அப்போது தொழிலாளிகளின் சராசரி ஆயுட் காலம் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமேயாகும். தொழிற்புரட்சி கண்ட இங்கிலாந்தில் தொழிலாளிகளின் நிலை படு பாதாளத்தில் இருந்தது. வயது வித்தியாசம், பால் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் 16 மணி நேரம், 18 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. மூன்று வயது குழந்தைகள் கூட 12 மணி நேரம் உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். சோர்ந்து தூங்கிவிடும் குழந்தைகளுக்கு சாட்டையடியே கூலியாகக் கிடைத்தது. தொழிலாளிகளின் இத்தகைய நிலையை எதிர்த்து 1836இல் “சாசன இயக்கம்” உருவானது.
இந்த இயக்கமே உலகின் பெருந்திரள் தொழிலாளிகளை கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக உருவெடுத்தது.10 மணி நேர வேலை, அனைவருக்கும் வாக்குரிமை, பாராளுமன்றத்தில் ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் பங்கேற்பு முதலிய கோரிக்கைகளை முன்வைத்து 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இதைத் தள்ளுபடி செய்து விட்டது. சாசன இயக்கத்தினர் இரண்டாவது முறையாக 30 லட்சம் கையெழுத்துக்களை பெற்று மீண்டும் சமர்ப்பித்தனர். தொழிலாளிகளின் ஒன்றுபட்ட போராட்டம் வளர்ந்து வருவதை கண்ட பிரிட்டன் முதலாளித்துவ வர்க்கம் பெயரளவுக்கு 1847இல் 10 மணிநேர சட்டத்தை கொண்டு வந்தது. இது தொழிலாளிகளின் தொடர்ச்சியான இயக்கத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.1850களில் மார்க்சும், ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது, சாசன இயக்கத்தினருடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டி வந்தனர். மார்க்° - ஏங்கெல்° முயற்சியால், “கம்யூனி°ட் புரட்சிக்காரர்களின் சர்வதேசக் கழகம்” உருவாக்கப்பட்டது. 1856இல் ஆ°திரேலியாவில் உள்ள மெல்போன் - விக்டோரியாவில், கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்தான் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக் கங்களை இணைத்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு “ 1886 மே 1, அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது”. இவ்வியக்கமே ‘மே தினம்’ பிறப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.இந்த சமயத்தில், மார்க்சும் - ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது பிரான்°, ஜெர்மன் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். 1847ஆம் ஆண்டு “நீதியாளர் கழகம்” என்ற பெயரில் செயல் பட்டு வந்த அமைப்பு, மார்க்° - ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு, அவர்களை தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படை யில் மார்க்சும் - ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, இவ்வமைப்பின் பெயரை “கம்யூனி°ட் லீக்” என்று மாற்றினர். அத்துடன் நீதியாளர் கழகத்தின் உறுப்பினர் அட்டைகளில் “அனைத்து மனிதர்களும் சகோதரர்களே” என்ற கோஷம் இடம் பெற்றிருந்ததை அகற்றி விட்டு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற புரட்சிகரமான முழக்கத்தை முன்வைத்தனர்.கம்யூனி°ட் லீக்கின் அறைகூவலுக்கு ஏற்ப உருவாக்கப் பட்டதே மார்க்° - ஏங்கெல்சின் “கம்யூனி°ட் கட்சி அறிக்கை.” மார்க்சும், ஏங்கெல்சும் இத்துடன் நிற்காமல், 1864இல் முதல் அகிலம் என்று அழைக்கப்பட்ட, சர்வதேச தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்தினர். இவ்வமைப்பு உலகின் பல நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்க பிரதிநிதிகளை உள்ளடக்கி இருந்தது. 1865இல் ஜெனிவாவில் நடைபெற்ற முதலாம் அகிலத்தின் மாநாட்டு பிரதிநிதிகளிடையே உரையாற்றிய மார்க்°,“...வேலை நிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புகளின் போது முதலாளிகள் வெளி நாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதி செய்யக்கூடாது; எட்டு மணிநேர வேலைதான் வேண்டும்; குழந்தைகளுக்கும் குறைந்த வயதினருக்கும் வேலை நேரத்தைக் குறைத்திட வேண்டும்....” என்று தொழிலாளி வர்க்கத்தின் அக்கால நிலைமைக்கு ஏற்ப கோரிக்கைகளை முன்வைத்தார். இக்கோரிக்கைகளை வென்றெடுக்க உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாடுபட முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அத்துடன் “...சட்டப்பூர்வமான வேலை நேரம் என்பது அடிப்படையானது; இதில் முன்னேற்றம் இல்லாமல், வேறு சமூக முன்னேற்றம் காண்பது அரிது...” என்று கூறி 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை உலகளவில், தொழிலாளர் இயக்கங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முழங்கினார்.8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம். இவையே தொழிலாளிகளின் முதல் தேவையாக இருந்தது. ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு,’ தொழிலாளர்களிடையே ஓங்கி வளர்ந்த போராட்ட உணர்வை நெறிப்படுத்தி, ஒருங்கிணைத்தது. அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளான 8 மணிநேர வேலை கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய முறையில் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் 1886 மே 1 அன்று பேரெழுச்சியோடு துவங்கின.தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. சிக்காகோவில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.8 மணி நேர வேலைக்கான இயக்கம் அமெரிக்காவில் வீறு கொண்டு எழுந்தது. 1886 மே 3- அன்று “மெக்கார்மிக் ஹார்வ°டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் ஆக°ட் °பை° எழுச்சி மிகு உரையாற்றினார். கூட்டம் அமைதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், பெரும் போலீ° படை கூட்டத்தை முற்றுகையிட்டதோடு, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டது. 4 தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.இச்செய்தி நகரெங்கும் பரவியதையொட்டி, சிகாகோ மக்கள் பெரும் கோபாவேசத்திற்கு ஆளாயினர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று கண்டனக் கூட்டம் நடத்தி மிகத் துரிதமாக தொழிலாளர்கள் திட்டமிட்டனர். 1886 மே 4 ஹே மார்க்கெட் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் மெக்கார்மிக்கில் நடைபெற்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆக°ட் °பை° , ஆல்பர்ட் பார்சன்°, சாமுவேல் பீல்டன் பேசத் துவங்கும் போது, போலீசார், கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, அனைவரையும் கலைந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இந்த சமயத்தில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது; இதில் ஒரு போலீ°காரர் பலியானார். உடனே போலீ° படை கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்றைக்கும் வெளி வராத மர்மமாகவே இருக்கிறது. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஹே மார்க்கெட் சதுக்கமே சிவந்தது. போலீசார் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் எந்தக் கட்டத்திலும் போலீஸார் மீது வெடிகுண்டை வீசியது யார் என்று நிரூபிக்கப்பட வில்லை.இவ்வழக்கின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ”நம்முடைய நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு, இது போன்றவர்களை தூக்கி லேற்றுவதுதான் முன்னுதாரணமாக இருக்கும்” என்று கூறி 7 பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்புக் கூறினார்.அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலி°ட் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஏங்கெல்ஸ் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காரல் மார்க்° வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிகாகோ சதியை கண்டித்து, 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்தே மே முதல் நாள் மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னையில் சிங்காரவேலர் இந்தியாவிலேயே முதன் முதலில் 1923இல் மேதினத்தை கொண்டாட திட்டமிட்டார். அந்த அடிப்படையில் 1923 மே 1 அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமிசர்மா தலைமையிலும் மே தினக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய சிங்காரவேலர், 8 மணி நேர வேலையை சட்டமாக்கவேண்டும் என்று அறைகூவினார். அதன் பின் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும் மே தினம் தொழிலாளர் வர்க்கத்தால் மிக எழுச்சியோடு நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மே தினமும், உலகத் தொழிலாளிகளை எழுச்சிக் கொள்ளச் செய்யும் - அடிமை விலங்குகளில் இருந்து விடுவிக்கும். நாமும் மேதினி சிறக்க இம் மேதினத்தில் சபதமேற்போம்...
ச.வீரமணி

Saturday, April 26, 2008

ஏகாதிபத்திய அரக்கத்தனம்
மெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, ஏப்ரல் 29 அன்று புதுடில்லிக்கு வருகை தரும் ஈரான் அதிபர் மஹமூத் அஹமதி னெஜாத் அவர்களிடம், இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தக்கூடிய அளவிற்கு முரட்டுத்துணிச்சல் ஏற்பட்டிருப்ப தானது, அமெரிக்கா, இந்தியாவைத் தன் ‘‘இளைய பங்காளி’’யாகக் கருதுவதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறது. அமெரிக்க அரசின் சார்பில் இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ள கருத்துக்கள், நட்புரீதியான முறையிலான அறிவுரையாக எடுத்துக்கொள் ளப்படுவதற்கில்லை, மாறாக உலகத்தின் போலீஸ்காரன் என்று தன்னைத் தானே நியமித்துக்கொண்டுள்ள ஏகாதிபத்திய அரக்கத்தனத்தின் தொனிதான் அதில் பிரதிபலிக்கிறது. அமெரிக்கா ஆசைப்படும் வகையில் நடந்து கொள்ள ஈரானிய அதிபருக்கு அறிவுறுத்துமாறு இந்தியாவை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா மற்ற நாடுகளுடன் எப்படித் தன் உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவதானது அமெரிக்கா, மற்றொரு நாட்டின் உள்விவகாரத்தில் முழுமையாகத் தலையிடுவதற்கு ஒப்பானதாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தியாவின் உள்விவகாரங்களிலும் மற்றும் நம் நாட்டின் அயல்துறைக் கொள்கை நிலைபாட்டின்மீதும் இத்தகைய மிகத்தெளிவான தலையீடுகளை, நம் நாட்டின் இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட அவமானமாகக் கருதி, தீர்மானகரமான முறையில் நிராகரித்திட வேண்டும். ‘‘இந்தியாவும் ஈரானும் புராதனக் காலந்தொட்டே பல நூறாண்டு கால மாக நல்லுறவுடன் இருந்து வந்திருக்கின்றன’’ என்று கூறி, அமெரிக்காவின் கருத்துக்களை இந்தியா மிகவும் சரியாகவே மறுதலித்திருக்கிறது. எனவே, எதிர்காலத்திலும் எவரின் வழிகாட்டுதலுமின்றி இரு நாடுகளும் அனைத்து அம்சங்களிலும் தங்கள் உறவுகளை முழுமையாக பேணி வளர்த்துக்கொள்ள முடியும்.

அமெரிக்காவின் ஹைடு சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலமாக, இந்தியாவை அமெரிக்காவின் போர்த்தந்திர உத்திகளுக்குச் சரியாகப் பொருந்தக்கூடிய வகையில் மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது என்று இடதுசாரிக் கட்சிகள் எழுப்பிய அச்ச உணர்வை, இந்தியா மீது செல் வாக்கு செலுத்த அல்லது இந்தியாவை நிர்ப்பந்தித்திட அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள மேற்படி முயற்சிகள் மீண்டும் ஒருமுறை சரியானது தான் என்று மிகத்தெளிவாக மெய்ப்பித்திருக்கிறது.

அமெரிக்காவின் நிலைபாட்டுடன் “முழுமையாக ஒத்துப்போகக்கூடிய” வகையில்தான் இந்தியாவின் அயல் துறைக் கொள்கை அமைந்திட வேண்டும் என்று ஹைடு சட்டத்தில் வெளிப்படையாகவே கூறப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் குறிப்பாக தெற்காசியாவிலும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவம் மற்றும் உளவு நடவடிக்கைகளுடன் இந்தியாவையும் பெரிய அளவில் சிக்கவைப்பதற்கு அமெரிக்கா இவ்வாறு முயற்சித்து வருகிறது. இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் தலையீட்டை நிராகரித்ததோடு மட்டும் இந்தியா இருந்துவிடக் கூடாது. ஈரான் அதிபரின் பயணத்தை, இந்திய - ஈரான் எரிவாயு குழாய் திட்டத்தினை மேலும் கொண்டுசெல்வதற்கு, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இத்திட்ட மானது மிக மலிவான எரிசக்தி ஆதாரம் மட்டுமல்ல, இந்தியாவுக்கு அவசியத்தேவையாக உள்ள எரிசக்தித் தேவைக்கு மிகப்பெரிய அளவில் உதவிடும் திட்டமுமாகும். உண்மை யில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது, இந்தியா மீது எவ்வித நிபந் தனைகளும் விதிக்காத ஒரு திட்டமுமாகும். இந்தியாவின் விரிவடைந்து வரும் எரிசக்தித் தேவைகளுக்கு இத்திட்டம் மிகப்பெரிய அளவில் உதவிடும். எனவே எவ்விதக் காலதாமதமும் செய்யாது ஐ.மு.கூட்டணி அரசு குழாய் வழித்திட்டத்தை உடனடியாகத் தொடர்ந்திட வேண்டும். ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்து ஈரான் அதிபரிடம் இந்தியா கேட்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியிருப்பதைப் பொறுத்தவரை, ஈரான் ஏற்கனவே அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண் டும். எனவே, ஈரான் அந்த ஒப்பந்தத் தினால் ஏற்பட்டுள்ள அனைத்து உரிமைகள் மற்றும் கடமைகளுக்கும் கட்டுப்பட்டதாகும். எனவே அது பாதுகாப்புத்துறை சார்ந்த அணுசக்தி ஆயுதத் திட்டங்களை மேற்கொள் வதை விட்டொழித்திடும் அதே சமயத்தில் ராணுவம் சாரா அணுசக்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு உரிமையைப் பெற்றிருக்கிறது. ஈரான், பாதுகாப்புத்துறை சார்ந்த அணு சக்தித் திட்டங்களைத்தான் பின்பற்று கிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு அதற்காக அமைக்கப்பட்டி ருக்கும் சர்வதேச அமைப்புக்குத்தான் உண்டு. ஈரான் அணுஆயுதங்களை வைத்திருக்கவும் இல்லை, அதற்கான வல்லமையும் அதற்கில்லை என்று சர்வதேச அணுசக்திக் கழகம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. சர்வதேச அணுசக்திக் கழகம், இராக் சம்பந்தமாகவும் இதுபோன்ற கருத்துக்களை இதற்கு முன்பு சொல்லியிருக்கிறது. ஆயினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுக்கு எதிராக யுத்தத்தை ஏவுவதையோ அல்லது தன்னுடைய பொய் புனைசுருட்டுக் கதைகளின் அடிப்படையில் ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்ளப்போவ தைத் தடுத்திடவோ அல்லது பின்னுக்கு தள்ளவோ முடியாது. இராக் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன் அமெரிக்கா அளந்துவிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் வடிகட்டிய பொய் என்பது இப்போது உலகத்தின் முன்பு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இப்போது அதேபோன்ற கட்டுக்கதைகளை ஈரான் தொடர்பாகவும் அமெரிக்கா அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது, இராக்கைத் துவம்சம் செய்ததுபோலவே ஈரானையும் ஏறிமிதித்திட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா, அமெரிக்காவின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் ஒரு நாடாக ஒருபோதும் மாறி விடக் கூடாது. அமெரிக்காவின் கருத்துக்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுதலித்திருக்கும் அதே வேகத்தில், இந்தி யாவுக்கான அமெரிக்கத் தூதருக்கு அழைப்பாணை அனுப்பி, அதனைப் பதிவு செய்வதுடன், இந்தியாவின் உள்விவகாரங்களிலும் அயல்துறைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும் இவ்வாறு அத்துமீறி தலையிடுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது என்று திட்டவட்டமான வார்த்தைகளில் அறிவித்திடவும் வேண்டும்.

தமிழில்: ச. வீரமணி

Friday, April 18, 2008

விலைவாசி உயர்வுக்கு எதிராகப்போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்
விஷம்போல் ஏறிவரும் விலைவாசிக்கு எதிராக, இடதுசாரிக் கட்சிகள் - ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நாடு முழுதும் கூட்டு இயக்கங்கள் தொடங்கி விட்டன. வேகமாக வீங்கிக் கொண்டிருக்கும் பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தக் கோரியும், குறிப்பாக அதனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கடுமையாக உயர்ந்துள்ள அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்திடக் கோரியும், 2008 ஏப்ரல் 16 முதல் 23 வரை, நாடு முழுதும் வெகுஜன இயக்கங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
எதிர்ப்பியக்கத்தின் முக்கியமான கோரிக்கைகள் வருமாறு:
வறுமைக்கோட்டுக்கு மேல் என்றும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்றும் எவ்விதப் பாகுபாடும் காட்டாது அனைவருக்கும் பொது விநியோகமுறையை அமல்படுத்து; பொது விநியோக முறையின் கீழ் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உணவுப் பொருள்களில் ஏற்படுத்தியுள்ள வெட்டைச் சரிசெய்து, மீள முன்பு அளித்து வந்த அளவிற்கு உணவுப் பொருள்களை அளித்திடு. பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை உட்பட பதினைந்து அத்தியாவசியப் பொருள்களையும் பொது விநியோக முறையில் வழங்கிடு.
உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்துள்ளபடி 25 வேளாண் பொருள்களுக்கும் ஊக வர்த்தக முறையை (Future trading)த் தடை செய்.
எண்ணெய் இறக்குமதிக்கான சுங்கம் மற்றும் கலால்வரிகளை வெட்டு; பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைத்திடு.எ அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்திடு. அதற்கேற்ற வகையில் இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தை வலுப்படுத்தி, பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுத்திட மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கிடு.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மக்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட முடியாது, நாட்டின் பொருளாதார அடிப்படைகளையும் வலுப்படுத்திட முடியாது. விலைவாசி உயர்வுக்கு குறிப்பாக உணவு தான்யங்களின் உயர்வுக்கு உலக அளவில் அவற்றின் விலைகள் உயர்ந்திருப்பதுதான் காரணம் என்று அரசுத்தரப்பில் சமாதானம் சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் பணவீக்கத்தின் நிர்ப்பந்தம் காரணமாக இவ்வாறு விலைவாசி உயர்வு ஏற்பட்டிருப்பது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனாலும், எண்ணெய் விலைகளில் செங்குத்து உயர்வால், அது விவசாய நடவடிக்கைகளில் முக்கிய இடுபொருளாக இருப்பதால், அது விவசாய உற்பத்திச் செலவினங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும், உயிர் எரிபொருள்(bio-fuels) களுக்கு உலகம் முழுதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், உணவு தான்யங்களை மக்கள் நுகர்வுக்குப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப்படுகிறது. உதாரணமாக, இந்த ஆண்டு அமெரிக்காவில் உற்பத்தியான சோளம் விளைச்சலில் 20 சதவீதம் உயிர் எரிபொருளாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு காருக்கு நிரப்பப்பட வேண்டிய உயிர் எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படும் சோளத்தின் அளவானது, ஓர் ஆரோக்கியமான நபருக்கு ஓராண்டு நுகர்வுக்குப் போதுமானதாகும்.
இதுபோன்று உணவுப் பொருள்கள் உயிர் எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படுவதும் பல நாடுகளில் விவசாய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்துதான் உலக அளவில் உணவு தான்யங்கள் விலை உயர்வுக்குக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. இவை அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாகவே உலகம் முழுதும் நடைபெற்று வந்தாலும், விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது, உலக அளவில் உணவு தான்யங்களை ஊக வர்த்தக அடிப்படையில் விற்கும் நடைமுறை அமல்படுத்தப்படுவதாகும். 2008 பிப்ரவரி வாக்கில், கோதுமையின் விலையானது உலக அளவில் 92 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சோயாபீன்ஸ் 62 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் நிலையும் கிட்டத்தட்ட இதுவேதான்.ஏன் இவ்வாறு ஏற்படுகிறது? அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலைமைகள் இதற்கு முக்கிய காரணமாகும். அங்குள்ள பல நிதி நிறுவனங்கள் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. தங்கள் நஷ்டத்தை ஓரளவுக்குச் சரிக்கட்டுவதற்காக, உலக நிதிநிறுவன ஜாம்பவான்கள், உணவு தான்யங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் மீது ஊக வர்த்தக முறையை அமல்படுத்தி வருகின்றன. இதுவே அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் திடீரென்று உயர்வதற்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு உலக அளவிலான நிர்ப்பந்தங்கள் நம்மைத் தாக்காதவாறு நம்மை நாம் எப்படிப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே நம்முன் உள்ள முக்கிய பிரச்சனையாகும். கடந்த காலங்களில் நம் நாட்டில் உணவுப் பொருள்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தைப் பொறுத்தவரை, உலக ஊக வர்த்தகத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு, இருந்து வந்தது. ஆயினும், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, இந்த நடைமுறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிட்டு, அநேகமாக கைவிடப்பட்டுவிட்டது. நம் நாட்டின் விளையும் உணவு தான்யங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வாங்குவதற்கும், சேமித்து வைத்துக் கொள்வதற்கும் அனுமதித்திருப்பதன் மூலமாக, அரசு உணவு தான்யங்களை கொள்முதல் செய்வதென்பதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. 2005-06க்கும் 2006-07க்கும் இடையில் கோதுமை விளைச்சல் என்பது 69 மில்லியன் டன்களிலிருந்து 75 மில்லியன் டன்களாக உயர்ந்திருந்தாலும், அரசு அவற்றைக் கொள்முதல் செய்வது என்பது 2003-04இல் 16.8 மில்லியன் டன்களாக இருந்தது 2004-05இல் 14.8 மில்லியன் டன்களாகக் குறைந்து, 2005-06இல் அது வெறும் 11.1 மில்லியன் டன்களாக மேலும் குறைந்துவிட்டது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், அரசு கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், உலக அளவில் நடைபெறும் ஊக வர்த்தகத்தின் விளைவாக ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கத் தவறியது மட்டுமல்லாமல், நம் நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மையை மிகவும் ஆபத்தான நிலைக்குக் கொண்டு தள்ளியுள்ளது.உணவு தான்ய விற்பனையில் ஊக வர்த்தகத்தில் ஈடுபடும் பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளும் இழிநடவடிக்கைகளாகக் கீழ்க்கண்டவற்றைக் கூறலாம். அரசாங்கங்கள் தங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்காகவும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காகவும் உணவு தான்யங்களை போதுமான அளவிற்கு இருப்பு வைத்துக்கொள்ளாமல் செய்துவிடும். அடுத்து, விலைவாசி விண்ணைமுட்டும் சமயத்தில் பொருள்களை வெளிக்கொணரக் கூடிய வகையில் தனியார் வர்த்தகர்கள் போதுமான அளவிற்கு உணவுதான்யங்களை இருப்பு வைத்துக் கொள்வர். மூன்றாவதாக, ஏறும் விலைவாசியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கங்கள் பொது விநியோக முறையை அமல்படுத்தக்கூடாது. ஏனெனில் அப்போதுதான் மக்களின் வயிற்றிலடித்து கொள்ளை லாபம் ஈட்ட முடியும். எனவேதான், நம் மக்களை சர்வதேச ஊக வர்த்தக நடைமுறையால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்ற ஒரே வழி, அரசாங்கம் உடனடியாக அத்தியாவசியப் பொருள்கள் மீது ஊகவர்த்தக நடைமுறையை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், தன்னுடைய ஆட்சியின் இறுதி ஆண்டில் அடிஎடுத்து வைத்திருக்கிறது. இப்போதாவது அரசு, சாமானிய மக்கள் ஒரு நாகரிகமான வாழ்க்கை வாழக்கூடிய வகையில் தன்னுடைய பொறுப்புக்களை நிறைவேற்ற முன்வர வேண்டும். மேலே கூறப்பட்ட கோரிக்கைகளை அரசை நிறைவேற்ற வைக்கக்கூடிய அளவிற்கு வெகுஜன போராட்டங்களை வலுப்படுத்திடுவோம்.(தமிழில்: ச. வீரமணி)

Monday, April 14, 2008

ஜாக்கிரதை, அதிகார வர்க்கமே! ஜாக்கிரதை

(சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை விளக்கி கையால் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள், 1928 டிசம்பர் 18 அன்று லாகூரில் பதுங்குமிடம் ஒன்றில் இருந்து எழுதப்பட்டு, 18 மற்றும் 19 தேதிகளுக்கு இடையில் இரவில் லாகூரின் சுவர்களில் ஒட்டப்பட்டன. பகத்சிங் கையால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி ஒன்று, லாகூர் சதி வழக்கின்போது நீதிமன்றத்தில் சான்றாவணமாகத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கண்டுள்ள வாசகங்கள் வருமாறு:) ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு இராணுவம்அறிவிப்புஜே.பி. சாண்டர்ஸ் இறந்தான், லாலா லஜபதிராய் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழி தீர்த்துக்கொள்ளப்பட்டது.மிகவும் கீழ்த்தரமான, கொடூரமான ஜே.பி சாண்டர்ஸ் எனும் ஒரு சாதாரண போலீஸ்காரனால், 30 கோடி இந்திய மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவரும் பெருமதிப்பிற்குரியவருமான வயதில் முதிர்ந்த லாலா லஜபதிராயை தாக்கி அவருக்கு மரணத்தையும் ஏற்படுத்த முடிகிறதென்றால், அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்திய தேசிய உணர்வின் தலையில் விழுந்த இந்த அடியின் மூலம் இந்தியாவின் இளமைக்கும் ஆண்மைக்கும் சவால் விடப்பட்டுள்ளது. இந்தியா இன்னமும் உயிர்ப்புடனிருக்கிறது என்பதை உலகம் அறியட்டும். இந்திய இளைஞர்களின் ரத்தம் முழுவதும் உறைந்து போய்விடவில்லை. அவர்களது தேசத்தின் தன்மானத்திற்கு ஓர் இழுக்கென்றால் உயிரைப் பணயம் வைக்கவும் அவர்கள் துணிவார்கள் என்பதை இந்த உலகம் உணரட்டும். இன்று அது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. தங்களின் கொள்கை மாறுபாடு காரணமாக தமது சொந்த நாட்டினராலேயே இடர்ப்பாடுகளுக்கு ஆளாகி வெறுத்து ஒதுக்கப்பட்டு பழிச் சொல்லுக்கு ஆளாகி மக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டவர்களால் செய்யப்பட்ட இச் செயலின் மூலம் அது மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.எச்சரிக்கை, அடக்குமுறையாளர்களே எச்சரிக்கைஅடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான நாடுகளின் உணர்வுகளைப் புண்படுத்தாதீர்கள். அத்தகைய மிகக் கொடூரமான செயலைச் செய்யத் துணியுமுன் ஒரு முறைக்கு இருமுறை யோசியுங்கள். ஆயுதச்சட்டத்திற்கும் ஆயுதக் கடத்தலுக்கும் எதிராக கடுமையான கெடுபிடிகள் இருந்தாலும், துப்பாக்கிகள் எப்பொழுதும் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக உள்ளே வந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை நினைவிற் கொள்ளுங்கள். தற்சமயம் அது ஓர் ஆயுத எழுச்சிக்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் தேசிய அவமரியாதைகளுக்கு பழிதீர்த்துக் கொள்ள அவை போதுமானவைகளாகும். தங்களது சொந்த மக்களின் கண்டனங்கள் - பழி தூற்றல்களையும், அந்நிய அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற அடக்குமுறை- ஒடுக்குமுறைகளையும் தாண்டி, இளைஞர்களின் கட்சியானது இறுமாப்புற்றிருக்கும் ஆட்சியாளர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு என்றென்றும் நீடித்திருக்கும். அவர்கள், எதிர்ப்பும் அடக்குமுறையுமாய் சுழன்றடிக்கும் சூறாவளிக்கு நடுவிலும் கூட, ஏன் தூக்குமேடையின் மீதும் கூட “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக!)’’ என முழக்கமிடும் நெஞ்சுரம் கொண்டவர்கள்.ஒரு மனிதனின் இறப்பிற்காக வருந்துகின்றோம். ஆனால் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த இவன், மிகக் கொடூரமானவன், கீழ்த்தரமானவன், கேவலமானவன், ஒழிக்கப்பட வேண்டியவனாவான். உலகில் உள்ள அரசாங்கங்களிலேயே மிகக் கொடுங்கோன்மை அரசாக விளங்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜண்ட்டாக செயல்பட்ட இவன் இறந்துவிட்டான்.ஒரு மனித உயிரின் ரத்தம் சிந்தப்பட்டதற்கு வருந்துகின்றோம். ஆனால், அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரக் கூடியதும், மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாக்கக் கூடியதுமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்ப்பலிகள் தவிர்க்க இயலாதவையே.இன்குலாப் ஜிந்தாபாத்புரட்சி நீடூழி வாழ்க !
(ஒ.எம்) பலராஜ் தலைமைப் படைத் தளபதிநாள்: 18 டிசம்பர் 1928*** *** ***

Saturday, April 12, 2008

மாற்றுக் கொள்கைக்கான திசைவழி நோக்கி போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்மீபத்தில் முடிவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாடு, நாட்டின் எதிர்காலக் கொள்கை திசைவழி எப்படி இருக்க வேண் டும் என்பது குறித்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நான்கு முக்கிய அம்சங் களை மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக் கிறது. நாட்டின் எதிர்காலம் மற்றும் நாட்டு மக் களின் நலம் என்பது நாட்டின் ஒற்றுமை - ஒருமைப்பாடு மற்றும் அதன் சமூகக் கட் டமைப்பை வலுப்படுத்துவதன் அடிப்படையி லேயே அமைந்திருக்கிறது. இந்திய சமூகத் தில் உள்ள பொதுமைப் பண்புகளும் வேற்று மைப் பண்புகளும் உலகில் வேறெந்த நாட்டி லும் இல்லாத அளவிற்கு விரிந்த அளவின தாகும். நாட்டில் நிலவும் வளமான வேற்று மைப் பண்புகளுக்கிடையே உள்ள பொது மையான பிணைப்பை வலுப்படுத்துவதன் மூலமாகவே நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஒருங்கிணைக்க முடியும் என்று இப்பகுதியில் நாம் பலதட வை சொல்லி வந்திருக்கிறோம். இதற்கு மாறாக - மதரீதியாகவோ, மொழிவாரியா கவோ, இனவாரியாகவோ அல்லது கலாச் சார ரீதியாகவோ - ஒரு சீரான தன்மை யைக் கொண்டுவர வேண்டும் என்று முயற் சித்தோமானால், அது பிரிவினை சக்தி களையே வலுப்படுத்தி, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையே அழித்து விடும். வகுப்புவாதமானது, இத்தகைய சீரான தன்மையைத்தான் கொண்டுவர வேண்டுமென்று நிர்ப்பந்தித்து வருகிறது. இத்தகைய மதவெறி சக்திகள், இப்போதி ருக்கிற நவீன இந்தியக் குடியரசின் மதச் சார்பற்ற ஜனநாயக மாண்பினை, ஆர்எஸ் எஸ்-இன் ‘‘இந்து ராஷ்ட்ரம்’’ என்னும் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிசக் கொள்கையாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் பாதுகாத்து வலுப்படுத்துவதே முதலாவதும் முக்கியமானதுமான பணியா கும். இதனைச் செய்திடாமல், இந்தியா வின் எதிர்காலம் மற்றும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்கள் வெற்றி பெற முடியாது என்பது தெளிவு. நாட் டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மதவெறி சக்திகள் இயங்கி வருகின்றன. வகுப்புவாதம் முழு மையாக முறியடிக்கப்பட்டாக வேண்டும். இதனை சமரசங்கள் மூலமாக இளகச் செய்திடவும் முடியாது, தோற்கடித்திடவும் முடியாது. ‘‘இளகிய இந்துத்வா’’ அல்லது ‘‘வெளுத்துப்போன காவி’’ போன்ற கொள் கைகள் மதவெறி சக்திகளுக்கே பயனுள்ள தாய் அமையும். இத்தகைய மதவெறி அச் சுறுத்தலை முற்றிலுமாக முறியடித்திட ஆட் சியாளர்களின் கொள்கையில் தீர்மானகர மான மாறுதல் அவசியம். அதன் மூலம் தான் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் வலுப்படுத்த முடியும்.

இந்தச் சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கங்கள் இயங்கிடும் மேற்கு வங் கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநி லங்களில் மதவெறிக் கட்சியான பாஜக-விற்கு சட்டமன்றத்திலும் சரி அல்லது நாடாளுமன்றத்திலும் சரி ஓரிடம் கூட கிடையாது என்பது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு என்று சொல்வதற்கில்லை.

இரண்டாவதாக, இந்திய ஆளும் வர்க் கத்தால் கடந்த இருபதாண்டு காலமாகக் கடைப்பிடித்து வரப்பெற்ற நவீன தாராள மயப் பொருளாதார சீர்திருத்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி, கோடிக் கணக்கான மக்களை மிகக்கொடிய வறு மை நிலைக்குத் தள்ளி இருக்கின்றன. ‘‘ஒளிர்கின்ற’’ இந்தியாவுக்கும் ‘‘அல்ல லுறுகின்ற’’ இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளி வளர்ந்து கொண்டே இருக் கிறது. எனவே, மக்களின் நலன்களை மேம் படுத்தக்கூடிய வகையில், தற்சமயம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங் கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ள ஆட்சியாளர்களின் ‘‘சீர் திருத்த’’க் கொள்கைகளை மக்கள் நலஞ் சார்ந்ததாக மாற்றியமைப்பதற்கான போராட்டங்களையும் வலுப்படுத்த வேண்டி யது இன்றையத் தேவையாகும். இன்று, நாட்டின் மக்கள் தொகையில் 54 சதவீதத் தினர் 25 வயதுக்கும் குறைவான இளை ஞர்களாவர். இந்த இளைஞர்களுக்கு தர மான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டால், அவர்கள் நாட்டை உலகமே வியக்கக்கூடிய அளவிற்கு உன் னத நிலைக்கு எடுத்துச் செல்வார்கள். எனவே, நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகளினால் விளைந்துள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்களை முழுமை யாக ஈடுபடுத்துவதன் மூலமாகத்தான் நாட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றத் தைக் கொண்டுவர முடியும் என்பதும் தெளிவு. மூன்றாவதாக, நவீன தாராளமயக் கொள்கையின் மற்றுமோர் மோசமான பாதிப்பு என்பது, நாட்டில் பல்வேறு மாநிலங் களுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ் வுகளும் அதிகரித்திருப்பதாகும். இன்றைய சூழ்நிலையில், மாநிலங்களின் பிற்பட்ட தன்மைக்கு எதிராக நடைபெறும் போராட் டங்கள் பல மக்கள் மத்தியில் பிரிவினைக் கோரிக்கைகள், இருக்கின்ற மாநிலங் களை மேலும் பிரித்தெடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளோடு எழுவதைப் பார்க்க முடிகிறது. இத்தகைய முழக்கங்கள் மக்கள் மத்தியில் ஒருவித சமூகப் பதட்டத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல சமயங்களில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகச் சரியான முறையில் போராடி வந்த மக்களை யும் கூட திசைதிருப்பி அவர்களது சக் தியை வீணடிப்பதிலும் வெற்றி பெற்று விடு கின்றன. எனவேதான், நம் மாநிலங்களுக்கு போதிய அளவு நிதி மற்றும் அரசியல் சுயாட்சி அளிப்பதன் மூலமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவம் வலுப்பெறக்கூடிய வகையில் ஒரு மாற்றுக் கொள்கை திசைவழி தவிர்க்க முடியாததாகிறது. அவ்வாறு ‘‘மாநிலங் களில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’’ என்னும் தத்துவம் வெற்றிபெறும்போதுதான் நாட்டு மக்களுக்கு மிக உயர்ந்த அளவில் சுபிட்சத்தைக் கொண்டுவர முடியும், நாட் டை மேலும் சிறந்த முறையில் கட்ட முடியும். நான்காவதாக, உலக நாடுகளுக்கிடையே நம் நாட்டின் மரியாதை தொடர்ந்து நிலைத்து நிற்கவேண்டுமானால், அது தன்னுடைய பொருளாதாரம் மற்றும் அரசியல் இறை யாண்மையை வலுப்படுத்துவதன் மூலமே சாத்தியம். இதற்கு, அது இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த சுயேட்சையான அயல் துறைக் கொள்கையை எக்காரணம் கொண்டும் தளர்த்திடாது கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஆனால் இன்றைய ஏகாதிபத்திய உலக மயக் கொள்கைகளின் விளைவாக இந் தியா போன்ற வளர்முக நாடுகள் தங்களு டைய பொருளாதார இறையாண்மையை, ஏகாதிபத்தியத்தின் காலடியில் வைக்க வேண்டிய கட்டாயச் சூழல் இயல்பாகவே ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளால், இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் கொள்கையாக மாற்றுவதற்காக நடை பெறும் எத்தகைய முயற்சியும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் கேட்டையே உண்டாக்கும்.

இந்தியாவை, அமெரிக்கா வின் ‘இளைய பங்காளியாக’ மாற்றிட இந் திய ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும் தற்போதைய முயற்சிகள், நிச்சயமாக நம் நாட்டின் நலனுக்கானவை அல்ல. எனவே, நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோ ருக்கு உயர்தரமான வாழ்வாதாரத்துடன் சிறந்ததோர் இந்தியாவைக் கட்டுவதற் கான போராட்டம் என்பது, இந்திய ஆளும் வர்க்கங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்திய மக்கள் அடையும் வெற்றிகளையே முழுமையாக சார்ந்திருக்கிறது. இவ்வாறாக, அனைத்து முக்கிய மட்டத் திலும், நாட்டில் மாற்றுக் கொள்கைக்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டியது இன்றைய உடனடித் தேவை யாகும். இதனை எய்துவதற்காகத்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது அகில இந்திய மாநாடு, இத்தகு போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு நம்முடன் இணையத் தயாராகவுள்ள அரசி யல் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஓர் அரசியல் மாற்றைக் கட்டுவதற்கு அறை கூவல் விடுத்திருக்கிறது. காங்கிரஸ் அல்லாத பாஜக-விற்கு எதிரான, மாற்றுக் கொள்கைத் திசைவழியுடன் கூடிய ஒரு மூன்றாவது அரசியல் மாற்று இன்றைய காலத்தின் கட்டாயமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டு மக் களில் பெரும்பான்மையோருக்கு சுபிட்சத் தைக் கொண்டுவரக்கூடிய வகையில், சிறந்ததோர் இந்தியாவைக் கட்டுவதற்கு, நடைபெறும் போராட்டங்களில் நாட்டு மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று நாட்டு மக்களை அறைகூவி அழைக்கிறது.

தமிழில்: ச. வீரமணி