Monday, May 31, 2010

தீண்டாமை வடிவங்கள் அனைத்தையும் அடியோடு அகற்றுவோம்!

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் சபதம்
புதுக்கோட்டை, மே 31-

புதுக்கோட்டையில் எழுச்சி யோடு நடந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடவும், தீண்டாமைக் கொடுமைகளை வேரடி மண்ணோடு வீழ்த்தவும் உறுதியேற் றுள்ளது.

இந்தியச் சமூகத்தின் பொருளியல் ஒடுக்குமுறையோடு சமூக ஒடுக்கு முறையும் பின்னிப் பிணைந்திருக் கிறது. ஆளும் வர்க்கங்கள் தங்களின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கவசமாக சாதியக் கட்டமைப்பை காலகாலமாய் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். இதன் பன்முக விளைவு கள் உழைப்பாளி மக்களின் வாழ் வுரிமை மீதும், ஒற்றுமை மீதும் எதிர் மறைத் தாக்கங்களை உருவாக்கியிருக் கின்றன. பொருள் ஒடுக்குமுறையி னின்று மனித குலத்தை விடுவிக்கிற போராட்டம் சமூக தளத்தில் ஒரு சேர நடைபெற வேண்டியுள்ள தேவையை இம்மாநாடு அழுத்தமாக வலியுறுத்து கிறது. இப் போராட்டக்களத்தில் கரம் கோர்க்குமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், உழைப்பாளி மக்களுக் கும் தலித் இயக்கங்களுக்கும் இம் மாநாடு வேண்டுகோள் விடுத்தது.

இந்திய மண்ணில் சாதியக் கட்ட மைப்பின் உச்சபட்ச கொடூரமாக தீண்டாமை விளங்குகிறது. பிறப்பி லிருந்து இறப்புவரை வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் தீண்டாமை நீக்கமற நிறைந்திருக்கிறது. தேநீர்க் கடைகள், சிகை திருத்தகம், சலவைய கம், கோவில், குளம், ஆறு, மயானம் என எல்லா அம்சங்களிலும் தீண்டா மைக் கொடுமைகள் பல்வேறு வடி வங்களில் இன்றும் நீடிக்கின்றன. இத் தகைய ஒடுக்குமுறைகள் உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களுக் குப் பெரும் சவாலாய் விளங்குகின்றன. எனவே, இது தலித் மக்களை இலக்கு களாக்குகிற அநீதிகள் எனும் போதும் இது குறிப்பிட்ட பகுதி மக்களின் பிரச் சனை மட்டுமல்ல. இத்தகு அநீதி களை எதிர்கொள்ளாமல் ஜனநாயகத் திற்கான போராட்டத்தில் இம்மியள வும் நகர முடியாது. எனவே தேசத்தின் இழிவாக விளங்குகிற தீண்டாமைக் கொடுமைகளை அடியோடு ஒழிப்ப தற்கு இம்மாநாடு உறுதியேற்றது.

தமிழகத்தில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி துவங்கியதி லிருந்து நடத்தி வருகிற களப்போராட் டங்கள் சமூக நீதிக்கான பயணத்தில் பெரும் நம்பிக்கையளிப்பதாக அமைந் துள்ளன. தலித் மக்களை புறக்கணிக் கிற சுவர்கள் வீழ்ந்துள்ளன. பல ஆல யங்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்ட மயானப்பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆதிக்கச் சக்தி யினரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டுள்ளன. இப்போராட்டங்களில் தலித் மக்கள் மட்டுமின்றி பெருந் திரளாக உழைப்பாளி மக்களும் பங்கேற்றிருப்பது எதிர்காலப் பயணத் திற்கு நம்பிக்கையூட்டுகிற நிகழ்வுகளா கும் என மாநாடு பாராட்டியுள்ளது.

அருந்ததியர் உள்ஒதுக்கீடும் இக் காலத்தில் ஈட்டப்பட்ட மகத்தான வெற்றியாகும். பட்டியலினத்தவர் சிறப்பு உட்கூறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் முதன்முறையாக இவ்வாண்டு மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் இயக்கங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு கிட்டியுள்ள வெற்றிகளாகும் என்று மாநாடு பெரு மிதத்தோடு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் நமது இலக்குகளை நோக்கி நாம் வெகு தூரம் முன்னேற வேண்டியுள்ளது. ஆதிக்கச் சக்தி களின் சாதிவெறி ஆயிரக்கணக்கான கிராமங்களில் இன்றைக்கும் மனித உரிமைகளுக்கும், மாண்புகளுக்கும் சவால் விடுப்பவையாக உள்ளன. அரசு இயந்திரமும், காவல் துறையும் வன் கொடுமைகளுக்கு எதிராக மவுனம் சாதிப்பதும், துணை போவதும், ஆதிக்கச் சக்திகளுடன் கைகோர்ப் பதுமான அணுகுமுறையும் தொடர் கிறது. இவற்றுக்கு எதிரான பரந்த திரட் டல், விழிப்புணர்வு தேவைப்படுகிறது என மாநாடு சுட்டிக்காட்டியுள்ளது.

வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், தலித்துகளுக்கு நிலம், பட்டா உறுதி செய்திடவும், மனித மாண்புகளுக்கு எதிரான சாதிய ரீதியிலான பணிகளைக் கட்டாயப் படுத்துகிற இழிசெயலுக்கு முடிவு கட்டவும், அருந்ததியரின் வாழ்வுரி மைக்கான போராட்டங்களை இடை யறாது தொடர்ந்திடவும், தலித் கிறித் தவர்களை பட்டியலினத்தவர்களாக அறிவிக்க வேண்டிய இயக்கங்களை நடத்திடவும், பஞ்சமி நிலங்களை மீட் டிடவும், தனியார்துறை இடஒதுக்கீட் டைப் போராடிப் பெற்றிடவும், தலித் நிலுவைக் காலியிடங்களை நிரப்புவ தன் மூலம் இடஒதுக்கீட்டின் உயிர்ப் பைப் பாதுகாத்திடவும், பழங்குடி மக் களின் வாழ்வுரிமைக்காக போராட வும், தலித் மக்களின் கலை, இலக்கிய, பண்பாட்டுப் சிறப்புகளை வளர்த் தெடுக்கவும் இம்மாநாடு கோடானு கோடி உழைப்பாளி மக்களைத் திரட் டிப் போராட உறுதியேற்கிறது. மனித குலத்தின் அவமானச் சின்னங் களாகத் திகழ்கின்ற தீண்டாமை வடி வங்களை அடியோடு இம்மண்ணிலிருந்து அகற் றவும் மாநாடு சபதமேற்றுள்ளது.

ஒடுக்குமுறைகள் எவ்வடிவில் அமைந்தாலும் அவை மனித குல விடியலுக்கான தடைக்கற்களே என்ற உயர்வோடும், அதற்கான புரிதலோ டும் முன்னேறுவோம்! இலக்குகளை எட்டுவோம்! என தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு பிரகடனம் செய்கிறது.

Sunday, May 30, 2010

ஐ.மு.கூ. அரசு ஓராண்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் கொள்கைகள்
தலையங்கம்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங் கத்தின் ஓராண்டு நிறைவை யொட்டி பிரதமர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியானது, அரசாங்கம் திசையேதுமின்றி பயணித்துக்கொண்டிருப்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை நாடா ளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அரசாங்கமானது நிதிச் சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்காக, பல்வேறு கட்சிகளி டம் பல்வேறுவிதமான பேரங்களைச் செய்தும், பேரங்களில் மசியாது போனால் மிரட்டியும் ஆதரவு திரட்டி, நிறைவேற்றியதிலிருந்து நன்கு பார்க்க முடிந்தது. உண்மையில், மக் களவையில் 200 உறுப்பினர்களுக்கும் மேலுள்ள ஒரு கூட்டணி அரசாங்கம் முத லாம் ஆண்டிலேயே இவ்வாறு தாங்கள் கொண்டுவந்த சட்டமுன்வடிவினை நிறை வேற்றுவதற்காக, உறுப்பினர்களின் தலை களை எண்ண வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது கடந்த இருபதாண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.

பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்காக அர சாங்கம், மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன் வடிவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட் டிருந்த போதிலும், மக்களவையில் கொண்டு வராமல் கிடப்பில் போட்டுவிட்டது. இப்போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப் படுத்துவதற்காக, மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள ராணுவம்சாரா (சிவில்) அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்காகவும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது சாதி அடிப்படை யிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக் கப்பட வேண்டும் என்று பல கட்சிகள் கோரி யதற்கு ஆரம்பத்தில் அடாவடித்தனமாக மறுத்த அரசாங்கம், பின்னர் கீழிறங்கி வந்து இப்பிரச்சனை குறித்து ஆராய அமைச்சர்கள் குழு ஒன்றை நியமித்திருக்கிறது.

பருவநிலை மாற்றம்

அரசின் விளைவல்ல

ஐமுகூ-1 அரசாங்கம் போலல்லாமல், ஐமுகூ-2 அரசாங்கமானது குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஒன்றையும் கொண் டிருக்கவில்லை. எனவே, இந்த அரசுக்கு செல்ல வேண்டிய திசை எதுவும் கிடையாது. அதேபோன்று செயல்பாட்டில் எதற்கு முக் கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற துடிப் பும் எதுவும் கிடையாது. குடியரசுத் தலைவர், நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில், அரசாங்கத்தின் முதல் நூறு நாட்களுக்கான நிகழ்ச்சிநிரலைப் பட்டியலிட்டார். இவற்றில் பெரும்பான்மையானவை குறித்து நாடாளுமன் றத்தில் எதுவுமே இதுவரை கூறப்படவில்லை.

இவ்வாறு எதைப்பற்றியுமே கவலைப் படாத போக்கு, பிரதமர் பத்திரிகையாளர் களுக்கு அளித்த பேட்டியிலும் நன்கு பிரதி பலித்தது. குறிப்பாக, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து, அதிலும் குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விஷம்போல் ஏறியிருப்பது குறித்து, பிரதமர் செய்ததெல்லாம், ‘‘ஆழ்ந்த கவலை’’யை வெளிப்படுத்தியது தான். இத்துடன் டிசம்பருக்குள் விலைகள் கட்டுக்குள் வந்துவிடும் என்று அறிவித்தி ருக்கிறார். வரும் ஆண்டில் பருவநிலை நன்கு இருக்கும் என்றும், அதனை அடுத்து நல்ல அறுவடை ஏற்பட்டு, விலைகள் கட் டுக்குள் வந்துவிடும் என்றும் அவர் நம்புகிறார். இது நடைபெற்றால் மக்களுக்குச் சற்றே நிவா ரணம் கிடைக்கும். அதே சமயத்தில், நல்ல பருவநிலை ஏற்படுவது என்பது நல்ல அர சாங்கத்தின் விளைவால் அல்ல என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் அளித்திட மத்திய அரசு என்ன செய்ய இருக்கிறது என்ற முக்கிய கேள்விக்குப் பிரதமர் பதிலளிக்காது மழுப்பி விட்டார். அத்தியாவசியப் பண்டங்கள் மீதான முன்பேர வர்த்தகம் என்னும் ஊக வணிகத் தைத் தடை செய்வது தொடர்பாக பிரதமர் எது வுமே கூறவில்லை. மேலும் இந்த ஆண்டு உணவு தானிய இருப்பு, அரசின் கிடங்கு களில் இரட்டிப்பாகியுள்ள போதிலும், விலை வாசியைக் கட்டுப்படுத்திட, அவற்றை மக்க ளுக்குப் பொது விநியோக முறையில் விநி யோகிப்பதற்காக மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்திட, அரசு எதுவும் நடவடிக்கை எடுக்க இருக்கிறதா என்பது குறித்தும் பிரதமர் எதுவும் கூறவில்லை. அதேபோன்று, பொது விநியோக முறையை வலுப்படுத்துவது குறித்தோ அல் லது பெட்ரோல், டீசல், உரங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி இருப்பதை மறுபரிசீலனை செய்வது தொடர்பாகவோ அவர் எதுவும் கூறவில்லை.

அரசியல் சந்தர்ப்பவாதம்

வர்த்தகர்கள் கொழுக்க வகை செய்யும் முதலாளித்துவத்தை (உசடிலே உயயீவையடளைஅ) ஊக் கப்படுத்தும் வகையில் அரசு எதுவும் செய் யாது என்று பிரதமர் நாடாளுமன்றத்தின் உள் ளேயும் கூறினார், வெளியேயும் கூறினார். ஆயி னும், டெலிகாம் ஊழல் தொடர்பாக ஒரு கேள் விக்கு அவர் பதிலளிக்கையில், ‘‘2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் பெறப்பட்ட தொகையையும் 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் பெறப்பட்ட தொகை யையும் ஒப்பிட்டுப்பார்த்தோமானால் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது’’ என்று ஒப் புக் கொள்ளும் அதே சமயத்தில், இது தொடர் பாக மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரணை செய்து வருவதாகக் கூறி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்.

ஒரு குறிப்பிட்ட அமைச்சகத்திற்கு எதி ராக விசாரணை எதுவும் இருந்தால், சம்பந் தப்பட்ட துறையின் அமைச்சர், விசாரணை முடியும் வரை அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதே, இயற்கை நீதியின் விதிகளாகும். ஆயினும், கூட்டணி அரசியலின் நிர்ப்பந்தங் களும், ஆட்சியில் தொடர வேண்டும் என்கிற ஆசையும் பிரதமரை தேவையற்ற சமரசங் களைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளி யிருக்கிறது. இதனை அரசியல் சந்தர்ப்ப வாதம் என்று சொல்லாமல் வேறென்ன வென்று சொல்வது? இதேபோன்றுதான், ஐபிஎல் போட்டியில் நடைபெற்ற சம்பவங் களும். இப்பிரச்சனைகள் தொடர்பாக நிதி அமைச்சகம் புலனாய்வு மேற்கொண்டிருக் கிறது என்று பொத்தாம் பொதுவில் கூறிய தைத் தவிர, உறுதியான பதில் எதையும் கூறா மல் பிரதமர் நழுவி விட்டார். வர்த்தகர்கள் கொழுக்க வகை செய்யும் முதலாளித்துவம் தொடர்பாகவும் இதே நிலைமைதான்.

நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு, மாவோயிஸ்ட்டுகள் வன்முறை பெரும் அச் சுறுத்தலாக இருக்கிறது என்று பிரதமர் பல முறை கூறியிருக்கிறார். அவர் மேலும், ‘‘இப் பிரச்சனையின் பரிமாணத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம் என்று கூறு வது சரியல்ல’’ என்றும் தெரிவித்திருக்கிறார். ஆயினும், இப்பிரச்சனையைச் சமாளித்திட, பல்வேறு அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதை ஏற்க மறுத்திருப்ப திலிருந்து, அரசு மீது நம்பிக்கையை ஏற்படுத்த அவர் தவறிவிட்டார். சட்டம்-ஒழுங்கு நட வடிக்கைகள் மேற்கொள்வதுடன் நின்று விடாது, அதற்கும் மேலாக, மாவோயிஸ்ட் சவாலை எதிர்கொள்வதற்கான அரசியல் அணுகுமுறையைத் தத்துவார்த்தரீதியாகவும் மேற்கொள்ள வேண்டும், பழங்குடியினர் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வளர்ச்சித் தேவைகளை உளப்பூர்வமாக மேற்கொண்டிட வேண்டும்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடவ டிக்கை எடுப்பதில் தனக்கு ஒரு குறிப்பிட்ட வரையறைதான் உண்டு என்று மத்திய உள் துறை அமைச்சர் அளித்துள்ள அறிக்கையை பிரதமர் ஒதுக்கித்தள்ளிவிட்டு, ‘‘வாய்ப்பு ஏற்படும்போது, இப்பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரவையின் கூட்டத் தில் விவாதிக்கப்படும்’’ என்றார். ‘‘இப்பிரச் சனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம்’’ என்பதை ஒப்புக் கொண்ட போதிலும், இது தொடர்பாகத் துல்லி யமான விதத்தில் எதுவும் கூறவில்லை. மேலும் இது தொடர்பாக திரிணாமுல் காங் கிரசின் எதிர்மறையான நிலைப்பாடு குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகள் எதற்கும் அவர் பதிலளிக்காமல் நழுவிவிட்டார். திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் டுகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை மற்றும் அராஜக நடவடிக்கைகளின் மூலம் தேர்தல் ஆதாயம் பெறலாம் என்று அது நம் பிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு மாவோ யிஸ்ட்டுகள் குறித்து மிகவும் முரண்பட்ட நிலை எடுத்துள்ள ஒரு கட்சியுடன் எப்படிக் கூட்டணியை வைத்துக்கொண்டிருக்கிறீர் கள் என்ற கேள்விக்கு பிரதமர் வாயே திறக் கவில்லை. மாவோயிஸ்ட் வன்முறைகள் தொடர்பாக எழுந்துள்ள ஆபத்தான ஊசலாட் டங்களை அனுமதிக்கக்கூடிய அளவிற்கு அரசியல் சந்தர்ப்பவாதம் மீண்டும் ஒருமுறை முன்னுக்கு வந்திருக்கிறது.

இளைய பங்காளியாக

மாற்ற முயற்சி

அயல்துறைக் கொள்கையைப் பொறுத்த வரை, அரசாங்கம் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடருதல், இந்தியா - பிரேசில் - தென் ஆப்பிரிக்கா (ஐக்ஷளுஹ - ஐனேயை-க்ஷசயணடை-ளுடிரவா ஹகசiஉய) ஒத்துழைப்பை வலுப்படுத்து தல், பிரேசில் - ரஷ்யா - சீனா ஆகிய நாடுகளுடனான ஒத்துழைப்பிற்கு உத்வேகம் கொடுத்திருத் தல், பூமி வெப்பமாதல் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பிரேசில், தென் ஆப்பி ரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கி டையே (க்ஷஹளுஐஊ - க்ஷசயணடை, ளுடிரவா ஹகசiஉய, ஐனேயை, ஊாiயே) ஒற்றுமை ஏற்பட்டிருத்தல் போன்ற ஆக்கபூர் வமான முன்முயற்சிகள் இருந்தபோதிலும், அணுசக்தி ஒப்பந்தத்தை உறுதிப்படுத்து வதற்கான நடவடிக்கைகளும் தொடரும் என்று பிரதமர் கூறி, தன்னுடைய அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஆதரவு நிலை யையும் ஐயந்திரிபற வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிரதமர், தனக்கு மிகவும் பிடித்தமான சொற்றொடரான ‘‘உள்ளீடான வளர்ச்சி’’ என்பதை மீண்டும் ஒப்புவித் திருந்தபோதிலும், அவரது அரசாங்கம் பின் பற்றும் கொள்கைகள், உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடை வெளியை மேலும் மேலும் அகலப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக் கின்றன. உல கப் பொருளாதார மந்தம் ஏற்பட்ட அதே 2009 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த பில்லி யனர்கள் (ஒரு பில்லியனர் என்றால் நூறு கோடி. ஒரு அமெரிக்க டாலர் இந்தியாவின் ரூபாய் மதிப்புக்கு 50 ரூபாய் என்றால், 100 கோடி டாலர் என்பது 5000 கோடி ரூபாய். எனவே ஒரு பில்லியனர் என்றால் 5000 கோடி ரூபாய்க்கு அதிபதி என்று பொருள்) எண் ணிக்கை 52ஆக இரட்டிப்பாகி இருப்பது குறித்து மவுனம் சாதிக்கிறார். அவர்களின் சொத்துக் களின் கூட்டு மதிப்பு மிகப் பிரம் மாண்டமான தாகும். அதாவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்காகும்.

ஒட்டுமொத்தத்தில், இந்த அரசு, நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதையும், இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ‘இளைய பங்காளி’யாக மாற்ற முயற்சிப்பதையும் எவ்வித லஜ்ஜையு மின்றித் தொடர்கிறது. இக்கொள்கைகளை எதிர்த்து முறியடித்திட வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனவே, மக்க ளுக்கு நிவாரணம் அளித்திடவும் சிறந்ததோர் இந்தியாவை நிர்மாணித்திடவும் அந்தத் திசை வழியில் நாம் நம்முடைய மக்கள் இயக் கங்களை வலுப்படுத்திடுவோம்.

தமிழில்: ச.வீரமணி

Saturday, May 29, 2010

சாதிய முறையை தகர்த்து சமூகப் புரட்சி காண - அனைவரையும் அணி திரட்டுவோம் -புதுக்கோட்டை மாநாட்டில் பிரகாஷ்காரத் அறைகூவல்
புதுக்கோட்டை, மே 29-

தீண்டாமைக் கொடு மையின் அனைத்து வடிவங் களையும் அகற்ற வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநில மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ் வில் கலந்து கொண்டு பிர காஷ்காரத் பேசியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் நாட்டில் நிலவுகின்ற அனைத்து வகையான தீண் டாமைக் கொடுமைகள் மற்றும் சாதிய வேறுபாடு களை எதிர்த்து மகத்தான இயக்கங்கள் நடத்தியுள் ளது. இன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் பிறபகுதி யின் கவனத்தை ஈர்த்துள் ளது. சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக வும் இயக்கங்களை நடத்த அவர்களுக்கு உத்வேகத்தை தந்துள்ளது.

உத்தப்புரம் போராட்டத்திற்கு கிடைத்த பாராட்டு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமை சுவரை உடைத்தெறியும் போராட் டத்தை தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியது. அப்போராட் டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த போராட்டத்தில் பங்கெ டுத்துவிட்டு நான் தில்லி சென்ற போது அன்றைய சமூக நலத்துறை மற்றும் சமூகநீதிக்கான மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற அவைத் தலைவருமான மீரா குமார் எனக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்தார். உத்தப்புரம் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உளமார வாழ்த்துத் தெரி விப்பதாக அக்கடிதத்தில் அவர் எழுதியிருந்தார்.

சாதிய அமைப்பு முறை யில் தீண்டாமை என்பது ஒரு கொடுமையான வடிவ மாகும். சாதிய முறையை ஒழிப்பதற்கான முதல் கட் டமாக இப்போது நீங்கள், தீண்டாமையின் அனைத்து வடிவங்களையும் ஒழிப் பதற்கான பணியை மேற் கொண்டுள்ளீர்கள். சாதிய அமைப்பை ஒழிப்பது தான் தீண்டாமை கொடுமைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என சட்டமேதை அம்பேத்கர் கூறினார். ஒடுக்கப்படுகிற மக்களை மட்டும் சாதிய முறை கொச் சைப்படுத்தவில்லை. ஒடுக்கு முறை செய்பவர்களையும் கூட அது மனிதத் தன்மை யற்றவர்களாக மாற்றிவிடு கிறது. இதனால் தான் நம்பூ திரி குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதலில் மனிதத் தன்மை யுள்ளவர்களாக்கும் போராட் டத்தை தான் துவக்கியதாக அறிவித்தார். அப்படி ஆக்கு வதன் மூலம் தான் தீண் டாமைக்கொடுமைகளை கைவிட செய்யமுடியும் என்றார்.

எனவே தான் தீண் டாமை முடிவுக்கு வரவிரும் பும் அனைவரையும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தன்னகத்தே அரவணைக்க வேண்டும். அனைத்து சாதிய வேறு பாடுகளையும் ஒழிக்க வேண் டும் என்று விரும்புபவர் களையும், சாதிய ஒடுக்கு முறை தான் அனைத்து வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என கருது பவர்களையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியில் இணைத்து தீண் டாமைக்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிந்து விட் டது. அரசியல் சட்டம் அனைவரும் சமம் என்று பிரகடனப்படுத்து கிறது. ஆனாலும், சாதிய வேறு பாடுகள் இன்னும் தொலைந்தபாடில்லை. நிலப்பிரபுத்துவ சமுதாயத் தில்தான் சாதியம் வேர் பிடித்து வளரும் என்றும், முதலாளித்துவ வளர்ச்சி யில் அது தொலைந்து போகும் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இன்று நாட்டில் சாதியானது எல்லா வர்க் கங்களையும் கடந்து சமு தாயத்தில் நிலவிக்கொண்டி ருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிகப்பெரிய தொழிலதிபர்,2 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் போடப்பட்ட எஃகு தொழிற்சாலையின் அதிபர்.கட்டப்பஞ்சாயத்தை ஆதரிக்கும் எம்.பிகாப் பஞ்சாயத்து எனச் சொல்லப்படும் சாதிய கட் டப்பஞ்சாயத்து முடிவு களை அவர் ஆதரிக்கிறார். ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும், பெண்ணும் திரு மணம் செய்து கொள்ளக் கூடாது என்ற சாதிய கட் டப்பஞ்சாயத்தை மீறுபவர் கள் மீறி, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கொலை செய்யப்படும் அள விற்கு நடைபெறும் கொடூ ரத்தை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரிக்கிறார் எனவே, வர்க்க பொருளா தார போராட்டத்துடன் சமூக ஒடுக்குமுறைக்கு எதி ரான போராட்டத்தையும் இணைந்தே நடத்த வேண் டியுள்ளது. அவ்வாறு செய் யாவிட்டால் புரட்சிக்கு சாத்தியமில்லை.

கம்யூனிஸ்ட்டுகள் பொரு ளாதார ஒடுக்கு முறை களுக்கு எதிராகத்தான் போராடுவார்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதி ராக போராடமாட்டார்கள் என்ற கருத்து நிலவி வருகி றது. காரல் மார்க்ஸ் புரட்சி என்று சொல்லும் போது, அதை பொருளாதார புரட்சி என்றோ, அரசியல் புரட்சி என்றோ சொல்ல வில்லை. அவர் எப்போதும் சமூகப் புரட்சி என்று தான் கூறுவார். இந்தியாவில் சாதிய முறையை ஒழித்துக் கட்டாமல் புரட்சி நடை பெறாது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பி னர்களாகிய நாம், சமூகப் புரட்சியில் நம்பிக்கை கொண்டிருப்போம் என் பது உண்மையானால், அனைத்து சமூக மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறோம் என்பதை நடைமுறையில் எடுத்துக்காட்ட வேண்டும்.

சமூக மாற்றத்திற்கான கருவி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தீர்மானகர மான கருவியாக, உண்மை யில் தகுதிவாய்ந்த கருவியாக திகழும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இந்த மாநாடு ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாகும். மகத்தான நிகழ்வுகளை தமிழகத்தில் தோற்றுவிக்கப்போகிற மாநாடு என பிரகாஷ்காரத் கூறினார். அவரது ஆங்கில உரையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநி லப்பொதுச்செயலாளர் உ. வாசுகி தமிழாக்கம் செய்தார். மாநாட்டின் நிறைவாக பிர கடனம் வெளியிடப்பட்டது

சிஐடியு அமைப்பு தினம் 40 ஆண்டுகளும் எதிர்நோக்கியுள்ள கடமைகளும் - ஏ.கே.பத்மநாபன்

வரும் மே 30 அன்று, இந்தியத் தொழிற் சங்க மையம் உருவாகி 40 ஆண்டுகள் நிறை வடைகிறது. கடந்த 40 ஆண்டுகளும் சிஐ டியு-வின் வரலாறு என்பது தொழிலாளர் வர்க் கத்தின் ஒற்றுமைக்கான போராட்டங்கள் நடைபெற்று, எண்ணற்ற சாதனைகளைப் படைத்த காலமாகும். இக்கால கட்டத்தில் சிஐடியு-வின் வேலைகளில் தன்னை இணைத்துக் கொண்ட எவர் ஒருவரும், நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை களைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, நாட் டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் பாதுகாத்திடவும் சிஐடியு-வில் தானும் ஓர் உறுப்பினராக, முன்னணி ஊழியராக, தலை வராக இருந்து செயல்பட்டதை நினைத்து உள்ளபடியே பெருமை அடைவார்கள், பெரு மிதம் கொள்வார்கள். சிஐடியு உருவான சமயத் தில் அதன் ஸ்தாபன மாநாட்டின் மேடையிலி ருந்தே தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேசி யப் பதாகையை உயர்த்திப் பிடித்ததிலும் அது முன்னணியில் இருந்திருக்கிறது.

பின்னணி
அகில இந்திய தொழிற் சங்க மாநாடு 1970 மே 28 முதல் 31 வரை கொல்கத்தாவில் நடை பெற்றது. அதில் கலந்து கொண்ட எவருக்கும் அதன் நிகழ்வுகள், தீர்மானங்கள் மற்றும் பல் வேறு விதமான நடவடிக்கைகள் என்றென் றைக்கும் நினைவில் நிற்கும். இந்த மாநாட் டில்தான் மே 30 அன்று, புதிய மத்தியத் தொழிற் சங்கம் ஒன்றை உருவாக்குவது என்ற வரலாற்றுச்சிறப்புமிக்க முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. இந்த அகில இந்திய மாநாட்டை நடத்துவதற்கான முடிவு ஒருசில நபர்களால் திடீரென்று எடுக்கப்பட்டதல்ல. நாட்டில் 1960களின் ஆரம்பத்திலிருந்தே, தொழிலாளர் வர்க்கம் எதிர்கொண்ட எண் ணற்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து, ஏஐடியுசி-க்குள்ளேயே மிகவும் ஆழமான முறையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தன என்பது வரலாற்றின் பக்கங்களில் இன்றைக்கும் காணப்படுகிறது.

1967இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்க ளில் காங்கிரஸ் கட்சி எட்டு மாநிலங்களில் தோல்வி அடையும் அளவிற்கு நிகழ்ச்சிப் போக்குகள் ஏற்பட்டன. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இரு இடதுசாரிகள் தலைமையி லான அரசாங்கங்கள் அமைந்ததும், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அர சாங்கங்கள் அமைந்ததும் (இவற்றில் ஜனசங் கம், சுதந்திரா போன்ற வலதுசாரிக் கட்சிக ளும், தமிழ்நாட்டில் திமுக போன்ற பிராந்திய கட்சிகளும் அடங்கும்) தொழிலாளர் வர்க்கம் உட்பட எண்ணற்ற மக்கள் பிரிவினரின் மத்தி யிலும் எதிர்பார்ப்புகள் அதிகமாயின. பல் வேறு மாநில அரசுகளின் அணுகுமுறையும் வேறுபட்டன. இந்நிலையில் 1968இல் மத் திய அரசு ஊழியர்களின் போராட்டம் வெடித் தது. மத்திய அரசாங்கம், தன் சொந்த ஊழியர் களுக்கு எதிராகவே போர்ப் பிரகடனம் செய் தது. நாட்டின் தலைநகரிலும் மற்றும் பல் வேறு மாநிலங்களிலும் போராடும் ஊழியர் களின் ரத்தம் ஆறாக ஓடிய சமயத்தில், இடது சாரிகளின் தலைமையிலிருந்த மாநில அர சாங்கங்கள் போராடிய மத்திய அரசு ஊழியர் களுக்கு எதிராக, மத்திய அரசு அளித்திட்ட நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிய மறுத்து, மிக வும் வலுவானமுறையில் ஊழியர் ஆதரவு நிலை எடுத்தன.

மேற்கு வங்கம் மற்றும் கேரள அரசாங்கங் கள் மக்கள் ஆதரவு கொள்கைகளை வெளிப் படையாகப் பிரகடனம் செய்ததை அடுத்து, இம்மாநிலங்களில் தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புற விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி அலை அலையாய் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காலங்களில் போராட்டங்களை ஒடுக்கிட காவல்துறை யினர் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்று வெளிப்படையாக மேற்கு வங்க, கேரள இடதுசாரி அரசுகள் பிரகடனம் செய்தன. இம் மாநிலங்களில் முந்தைய நடைமுறைகளைப் போலவே, தொழிலாளர்களுக்கு அரசாங்கங் கள் பேருதவியாக இருந்தன. இதனால் முத லாளிகளும் தொழிலாளர் விரோத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோரும் இம்மாநில அரசு களைக் குற்றஞ்சாட்டினர். மற்ற மாநிலங் களில் போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலா ளர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ்நாடு அரசும் இதற்கு விதி விலக்கல்ல. ‘ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காண்போம்’ என்று சொல்லி, உழைக் கும் மக்களின் வாக்குகளைப் பெற்று, ஆட்சிக்கு வந்த திமுக-வினர் போராட்டங்களில் ஈடு பட்ட தொழிலாளர்களை ‘இரும்புக் கரம்’ கொண்டு ஒடுக்கிட நடவடிக்கைகள் மேற் கொண்டனர்.

இந்தக் காலகட்டத்தில், நாடு முழுதும் போராட்ட அலைகள் வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் ஏஐடியுசி தலைமையானது போராட்டங்களுக்குத் தலைமையேற்கத் தயாராயில்லாமலிருந்தது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏஐடியுசி தலைமை, வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு, பகை வனோடு வர்க்க ஒத்துழைப்பு (class collaboration) என்னும் நிலையினை உயர்த்திப் பிடித்தது.

இந்தச் சூழ்நிலையில்தான், 1970 ஏப்ரல் 8, 9 தேதிகளில் ஏஐடியுசி-இன் காரியக் கமிட்டி, மத்திய கவுன்சில், மாநில செயற்குழு மற்றும் கவுன்சில்கள் என்று பல்வேறு மட் டங்களிலும் செயல்பட்ட 150 பேர் கலந்து கொண்ட கூட்டம் கோவாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வீரஞ் செறிந்த போராட்டங்கள் பலவற்றை நடத்தி, இயக்கத்தை வலுவாகக் கட்டியவர்களா வார்கள். இவர்கள் இனியும் ‘ஏஐடியுசி’-இல் இணைந்து செயல்படுவது சாத்தியமல்ல என்ற முடிவுக்கு வந்தனர். எனவே அகில இந்திய தொழிற்சங்க மாநாட்டைக் கூட்டுவது என்றும், அதில் தேசிய அளவில் புதியதோர் தொழிற் சங்க மையத்தை அமைப்பது என்றும் பரிந்துரைத்தார்கள்.

லெனின் நகர் மாநாடு

அகில இந்திய மாநாடு, தோழர் லெனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் சமயத்தில் நடைபெற்றதால், மேற்கு வங்கத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு லெனின் நகர் என்று பெயரிடப்பட்டது. மாநாட்டுக் கொடியினை மேற்கு வங்க, தொழி லாளர் வர்க்க இயக்கத்தின் முதுபெரும் தோழர் கிருஷ்ணபாத கோஷ் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து மாநாடு துவங்கியது.

மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர், தோழர் ஜோதிபாசுவும், பொதுச் செயலாளர் தோழர் மனோரஞ்சன் ராயும் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்துத் தங்கள் வரவேற் புரைகளில் விளக்கினார்கள். தோழர் ஜோதி பாசு கூறுகையில், “இந்தியாவில் தொழிற் சங்க இயக்கங்கள் ஏற்கனவே அதிகம் உள் ளன. இப்போது மேலும் ஒரு தொழிற்சங்கம் உருவாவது தொழிலாளர் வர்க்கத்தை மேலும் பிரிப்பது போன்றதோர் தோற்றத்தை அளித் திடும். ஆனால், உண்மையில் அதற்கு நேர்மா றாக, இத்தகையதோர் தொழிற்சங்க மையம் அமைவது, இதன் பின்னே இந்தியாவில் உள்ள புரட்சிகர தொழிலாளர் வர்க்கத்தை அணி வகுக்கச் செய்வதற்கு அவசியத் தேவையாக மாறியிருக்கிறது என்றார். மேலும் அவர், “ஓர் உண்மையான ஜனநாயக மற்றும் புரட்சிகரத் தொழிற்சங்க மையம் என்பது தொழிலாளர் வர்க்கத்திற்குத் தலைமை தாங்கி, புரட்சிகர பொருளாதாரப் போராட்டங்களை நடத்திடும் அதே சமயத் தில் அவர்களை அரசியல்படுத்திடவும் வேண்டும், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்று வதற்கான போராட்டத்திற்கும் அவர்களைத் தயார்ப்படுத்திட வேண்டும் மற்றும் உலகம் முழுதும் நடைபெற்று வரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் அவர்களை அணிவகுத்திட வேண்டும்’’ என்றும் வலியுறுத்தினார்.

ஒற்றுமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்

இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தவர்கள் ஏஐடியுசி முறையாகச் செயல்படுவதை உத் தரவாதப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சி கள் அனைத்தையும் விவரமாக விளக்கி தோழர் பி.ராமமூர்த்தி அறிக்கை சமர்ப்பித்தார்.

அறிக்கையில் நாட்டின் பல பாகங்களி லும் நடைபெற்ற வீரஞ்செறிந்த வெற்றிகரமான போராட்டங்கள் குறித்தும், மேற்கு வங்கத்தில் உள்ள சங்கங்கள் மற்றும் கேரளம், தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் உள்ள சங்கங்கள் அவற்றில் முன்னணிப் பாத்திரங்கள் வகித்த தையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தோழர் பி.ஆர். மத்திய அரசால் கவிழ்க்கப்பட்ட இடது முன்னணி அரசாங் கங்கள் மேற்கொண்ட தொழிலாளர் ஆதரவு, மக்கள் ஆதரவு நடவடிக்கைகளையும் விளக் கினார். இவ்விரு மாநிலங்களிலும் அடக்கு முறை கடுமையாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட சூழ்நிலையில் மாநாடு நடைபெற்றுக் கொண் டிருந்தது.

தொழிற்சங்கங்களுக்குத் தத்துவார்த்தத் தெளிவு இருக்க வேண்டியதன் அவசியத்தை யும் தோழர் பி.ஆர். கோடிட்டுக் காட்டினார். “தொழிற்சங்க இயக்கத்தின் பிரதான குறிக் கோள் சோசலிசமே என்று பிரகடனம் செய்கி றோம். நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் தலைமை தாங்குகிற இந்த சமூக அமைப் பிற்கு எதிராகவே நம்முடைய பிரதான போராட்டம் என்பதை தொழிற்சங்க இயக்கம் மறந்ததென்றால், நம்முடைய குறிக்கோளை நோக்கி நாம் முன்னேற முடியாது. ஏகாதிபத் தியத்திற்கு எதிராக, அதிலும் குறிப்பாக நம் மக் களை அடிமைப்படுத்தி, அவர்கள்மீது நவீன காலனியாதிக்கத்தை ஏவ முயற்சித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத் திற்கு எதிராகவும், நம் நாட்டின் பிரதான உற் பத்திச் சாதனங்களைத் தங்கள் கட்டுப்பாட் டில் வைத்துக்கொண்டு, அவற்றை இயக்கிக் கொண்டிருக்கும் ஏகபோக முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் அது தன்னுடைய இலக்கை எப்போதும் செலுத் திக் கொண்டிருக்க வேண்டும். நாள்தோறும் நடைபெறும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட் டங்கள் இத்தகைய பொதுப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்,’’ என்று அறிக்கையில் தெளிவுபடுத்தி இருந்தார்.

புதியதொரு தொழிற்சங்க மையம்

மாநாட்டில் மிகவும் விரிவானமுறையில் விவாதங்கள் நடந்தபின், புதியதோர் அமைப் பை உருவாக்குவதற்கான தீர்மானம் மாநாட் டின் முன் வைக்கப்பட்டது.

புதிய அமைப்புக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதில்கூட மிகவும் ஆழமான முறையில் விவாதங்கள் நடைபெற்றன, பல் வேறு பரிந்துரைகளும் வந்தன. இறுதியாக, சிஐடியு என்னும் இந்தியத் தொழிற்சங்க மையம் (ஊஐகூரு - ஊநவேசந டிக ஐனேயைn கூசயனந ருniடிளே) என்னும் புதியதோர் அமைப்பு உதயமானது. அமைப்பின் பெயர் அறிவிக்கப்பட்ட கணமே, “சிஐடியு ஜிந்தாபாத், தொழிலாளர் ஒற்றுமை ஜிந்தாபாத், உலகத்தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக” என்று இடிமுழக்கங்கள் விண்ணை யெட்டின. இத்தீர்மானத்தினை தோழர் மனோரஞ் சன் ராய் முன்மொழிய, தோழர் இ.பாலானந்தன் வழிமொழிந்தார்.

நம்முன் உள்ள கடமைகள்

மாநாட்டில் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தோழர் பி.டி.ரணதிவே, நிறை வுரை யாற்றுகையில், சங்கத்தின் முன் உள்ள கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மேலும் பல அறிவுரைகளை வழங்கினார். மாநாட்டில் பிரதிநிதிகள் காட்டிய ஆர்வம், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைக் கிரகித்த பிடி ஆர், வர்க்கப் போராட்டங்கள் மற்றும் அதன் ஒப்புயர்வற்ற நிலை ஆகியவற்றை மிகவும் தெளிவான புரிதலுடன் உயர்த்திப்பிடித்து, அதன் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத் தின் ஒற்றுமையை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். நம் முடைய சங்கங்கள் ஜனநாயக நடைமுறை யை உத்தரவாதப் படுத்தக்கூடிய வகையில், செயல்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலி யுறுத்தினார்.

“நாம் புதியதோர் அமைப்பை, புதிய வழி யில் தொடங்கியிருக்கின்றோம். தொழிற்சங்க இயக்கத்திற்கு புதியதொரு தத்துவக்கோட் பாட்டினை அளித்திட விரும்புகிறோம். ஆனால், தொழிற்சங்க இயக்கத்தில் பணிபுரி யும் நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த உணர்வு நிலையினை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். பழைய உணர்வுநிலை மற்றும் பழைய பழக்கவழக்கங்களை முற்றிலுமாகக் கைவிட்டுவிட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம்மால் சீர்திருத் தப் பாதையில் செல்பவர்களுக்கு எதிராக ஒரு சரியான போராட்டத்தைத் துல்லியமான முறையில் எடுத்துச் செல்ல முடியும்,’’ என்று பிடிஆர் பிரகடனம் செய்தார்.

“தொழிலாளர் வர்க்கம் ஒற்றுமையைக் கோருவதற்கான தருணம் இதுவே. இவ்வாறு ஒற்றுமையைக் கட்டவில்லை என்றால், எதி ரிமீதான தாக்குதலை நம்மால் தொடுத்திட முடியாது” என்று கூறிய தோழர் பிடிஆர் ஒற் றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவ சியத்தையும் விளக்கினார். அவர் மேலும், ‘‘நம் அமைப்பு, போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒற்று மைக்கான, ஒன்றுபட்ட போராட்டத்திற்கான, கூட்டு நடவடிக்கைக்கான பதாகை இதோ என்று ஒவ்வொருவரிடமும் சொல்லுங்கள்’’ என்றார்.

கடந்த நாற்பது ஆண்டுகள்
வர்க்க ஒற்றுமை, வர்க்கப் போராட்டம் மற்றும் ஒன்றுபட்ட இயக்கத்திற்கான பதாகை ஆகிய செய்திகளுடன் சிஐடியு கடந்த நாற்பது ஆண்டுகளாக முன்னேறி வந்திருக் கிறது. சிஐடியு-வின் உறுப்பினர் எண்ணிக் கை 8 லட்சத்து 04 ஆயிரத்து 657இலிருந்து இப்போது 51 லட்சத்து 45 ஆயிரத்து 387ஆக வளர்ந்திருக்கிறது.

இது போதுமானதல்ல என்பதும் இன்னும் போகவேண்டிய தூரம் மிகவும் அதிகம் என்ப தும் நம் எல்லோருக்கும் தெரியும். ஆயினும், ஸ்தாபன மாநாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிரச்சனைகள் மீது, ஸ்தாபனத்தால் மிகவும் ஆழமாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. பல ஸ்தாபன பலவீனங்கள் இருந்த போதிலும், (அவற்றை சிஐடியு அடையாளம் கண்டு, திருத்தும் பணியில் இறங்கியிருக் கிறது) சிஐடியு தன் உறுப்பினர் எண்ணிக்கை யில் மட்டுமல்ல, பல்வேறு முனைகளிலும் முன்னேறியிருக்கிறது என்பதில் ஐயமில் லை. முறைசாராத் தொழிலாளர்கள் பிரச்ச னைகள், பெண் தொழிலாளர்கள் பிரச்சனை கள், பொதுத்துறை, ஒன்றுபட்ட இயக்கங்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடை பெறும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு அளித்தல் போன்ற எண்ணற்ற கடமைகளை சிஐடியு நிறைவேற்றி இருக்கிறது.

கடந்த நாற்பதாண்டுகளும் தியாகம், முன்னேற்றம் மற்றும் சாதனைகளின் ஆண் டுகளாகும். கடந்த சில மாதங்களில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் மத்தியத் தொழிற் சங்கங்களின் ஒற்றுமையை நாம் கட்டியிருக்கிறோம். அதனை ஒருமுகப் படுத்தி, அடிமட்டக் கிளைகள் வரை கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை மேலும் விரிவானமுறையில் எடுத்துச்செல்ல முடியும்.

சண்டிகரில் நடைபெற்ற சிஐடியு-வின் 13ஆவது மாநாடு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை வகுத்துத் தந்திருக்கிறது. வர விருக்கும் நாட்களில் அவற்றை நிறைவேற்ற நம்மாலான அனைத்தையும் செய்திடுவோம், நம் ஸ்தாபன மாநாடு வகுத்துத்தந்த கட்டளை களின் அடிப்படையில் நம் லட்சியங்களை எய்திடுவோம்.

தமிழில்: ச.வீரமணி

Friday, May 21, 2010

ஐமுகூ-2 அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமாகும்-கே.வரதராசன் பேட்டிபுதுதில்லி, மே 22-
ஐமுகூ-2 அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, போராட்டங்கள் தீவிரமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் கூறினார்.

ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஓராண்டு காலம் ஆகிறது. இது தொடர்பாக தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கே. வரதராசனிடம் கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் கடந்த ஓராண்டு காலத்தில் மக்களுக்கு எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியதாகச் சொல்வதற்கில்லை. உண்மையைச் சொல்வது என்றால், ஐ.மு.கூ.1 காலத்தில் அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு இருந்ததால், மக்கள் மீதான சில தாக்குதல்களைத் தடுக்க முடிந்தது. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் போன்று சில காரியங்களைச் செய்ய முடிந்தது. ஆனால் இப்போதைய ஐமுகூ-2 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிற காங்கிரசின் கொள்கைகளும், திமுக-வின் கொள்கைகளும் ஒன்றாக இருக்கிற காரணத்தால், இந்த அரசு நேரடியாகவே வசதிபடைத்தவர்களின் அரசாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் வசதி படைத்தோருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் சலுகைகள் அளித்திருக்கிறது. இதை வேண்டுமால் அரசு செய்துள்ள ‘‘நன்மை’’ என்று சொல்லலாம். 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சாமானிய மக்களைத் தாக்கி இருக்கிறது.
உண்மையாகச் சொல்லப்போனல் தாராளமய, தனியார்மய, உலகமய, மக்கள் விரோதக் கொள்கைகளை கடந்த கால அரசாங்கங்களும் செயல்படுத்தின. ஆனால் இந்த அரசு பகிரங்கமாகவே அதுதான் எங்கள் கொள்கை என்று அறிவித்து, ப.சிதம்பரம், மன்மோகன்சிங் போன்றவர்கள், நேரடியாகவே அவற்றை அமலாக்குகிற காரணத்தால் இன்றையதினம் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். பட்டினிச் சாவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏற்கனவே போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். அகில இந்திய வேலை நிறுத்தம், நாடு முழுதும் சிறையேகும் போராட்டம் ஆகியவற்றை வெற்றியுடன் நடத்தியிருக்கிறோம்.

வரவிருக்கும் ஜூலை முதல் வாரத்தில் புதுதில்லியில்ல பாஜக கூட்டணியில்ல இல்லாத, ஐமுகூ-2 கூட்டணியில் இல்லாத மதச்சார்பற்ற கட்சிகள்மற்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் புதுதில்லியில் சிறப்பு மாநாடு ஜூலையில் நடைபெறவிருக்கிறது. அதில் எதிர்கால போராட்ட வடிவங்கள் தீர்மானிக்கப்படும். குறிப்பாக இந்த அரசின் கொள்கைகள் மாற்றப்படும்வரை தீவிரமான போராட்டங்கள் நடைபெறும். செப்டம்பரிலிருந்து இந்தப் போராட்டங்கள் தீவிரமாகும்.’’

இவ்வாறு கே. வரதராசன் கூறினார்.

(ச.வீரமணி)

Thursday, May 20, 2010

ஐமுகூ-2 அரசாங்கத்தின் ஓராண்டு-பிரகாஷ் காரத்ஐமுகூ-2 அரசாங்கம் வரும் மே 22உடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு இருந்ததுபோல், ஐமுகூ-2 அரசாங்கத்திற்கு குறைந்தபட்ச பொது செயல் திட்டம் என்று எதுவும் கிடையாது. மாறாக, காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசாங்கமானது தன்னுடைய நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலை உறுதியுடன் பின்பற்றப் போவதாகக் கூறியது. தன்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில் உந்தித்தள்ளமுடியாத நடவடிக்கைகளை எல்லாம் இப்போது எடுத்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்தது. மேலும் சாமானிய மக்களுக்காக சில சேமநல நடவடிக்கைகளைக் கொண்டுவர இருப்பதாகவும் உறுதி அளித்தது. அயல்துறைக் கொள்கையையைப் பொறுத்தவரை, ஐமுகூ-1 அரசாங்கம் மேற்கொண்ட, அமெரிக்காவுடன் போர்த்தந்திரக் கூட்டனணி ஏற்படுத்திக் கொண்டிருக்கிற அதே அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றப் போவதாகவும் தெரிவித்தது.
ஐமுகூ அரசாங்கத்தின் ஓராண்டு கால ஆட்சியில் ஏற்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் வருமாறு:
முதலாவதாக, இந்த அரசானது நாள்தோறும் கடுமையாக உயர்ந்து வரும், அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வை, அதிலும் குறிப்பாக உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திட, பரிதாபகரமான முறையில் தோல்வி கண்டு விட்டது. கடந்த ஓராண்டில் மக்களின் அவலத்திற்கு மிகப் பெரிய காரணியாக இது அமைந்துவிட்டது. குறிப்பாக ஏழைகளைப் பொறுத்தவரை இதன் பொருள், குறைந்த உணவு - அதிகம் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு என்பதேயாகும்.

சரியாகச் சொல்வதென்றால் இதனைத் ‘‘தோல்வி’’ என்று கூட சொல்லமுடியாது. நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றிட அரசு உறுதியாக இருப்பதன் வெளிப்பாடுதான் இது. உணவுப் பொருள்களும் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களும் மிகப் பெரிய அளவில் ஊக வணிகச் சந்தையில் செலுத்தப் பட்டு வர்த்தகமயமாகிப் போனதுதான் இதற்குக் காரணமாகும். முன்பேர வர்த்தக முறை என்பது மிகப்பெரிய வர்த்தக சூதாடிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்திடும் மாபெரும் கூடாரமாகும். கொள்ளை லாபமடித்திடும் இவர்களின் நலன்களைப் பாதுகாத்திடுவதில்தான் அரசு அக்கறை காட்டுகிறதேயொழிய, சாமானிய மக்களின் வாழ்க்கை குறித்து அதற்குக் கிஞ்சிற்றும் கவலை கிடையாது.

இரண்டாவதாக, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமானது, உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக நம் நாட்டின் பெரும் வர்த்தக நிறுவனங்கள் தள்ளாடுவதைக் கண்டு மிகவும் கவலை யடைந்து, அவர்கள் மேல் விதித்திருந்த வரிகளை வெட்டியது. பெரிய அளவில் வரிச் சலுகைகளை அளித்தது. அந்நிய நிதி ஊகவணிகர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் அளித்தது. பணக்காரர்களைப் பொறுத்தவரை உலகில் மிகவும் குறைவான அளவில் பணக்காரர்களிடம் வரி வசூலிக்கும் நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான நேரடி வரிகள் சட்டம் (Direct Taxes Code) என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் தீர்மானித் திருக்கிறது. கடந்த நிதியாண்டில், மத்திய அரசு கார்பரேட்டுகளுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது. இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திட அரசு முன்வந்திருப்பதானது, இந்தியப் பெரும் வர்த்தகநிறுவனங்களுக்கும், அமெரிக்க கார்பரேட்டுகளுக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய சங்கதிகளாகும்.

அரசு மேற்கொண்டுள்ள ஒவ்வொரு கொள்கையின் பின்னணியிலும், அது எரிவாயு (pricing of gas)விலை உயர்வாக இருந்தாலும் சரி, டெலிகாம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் தொடர்பானவைகளாக இருந்தாலும் சரி, நிதித்துறை, சில்லரை வர்த்தகம் அல்லது நாட்டிற்குள் அந்நிய கல்வி நிறுவனங்களை அனுமதித்தல் என எதுவாக இருந்தாலும் சரி - அரசாங்கம் பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவர்களின் அந்நிய நிதிக் கூட்டாளிகளுக்கு இழிவான முறையில் துணை போகும் விதத்திலேயே அமைந்திருப்பதைக் காண முடியும்.

மூன்றாவதாக, நவீன தாராளமயக் கொள்கையானது மிகவும் இழிவான மூலதன வளர்ச்சியையும் (spawned crony capitalism) ஊக்குவிக்கிறது. பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான பிணைப்பு காங்கிரஸ் ஆட்சியின் முத்திரைச்சின்னமாகவே மாறியிருக்கிறது. மிகவும் இரண்டகமான வகையில் கள்ளத்தனமாக மொரிசீயஸ் தீவு வழியாகவும் மற்றும் பல்வேறு வழிகளிலும் அந்நிய மூலதனம் நம் நாட்டிற்குள் நுழைதல், ஆட்சியிலுள்ளவர்களின் அரவணைப்புடன் மிகப்பெரிய அளவில் சட்ட விரோதமான சுரங்க வர்த்தகம் பெருகியிருத்தல், சட்ட விரோதமாக நடந்திடும் பெரும் பணக்காரர்களையும் வரி ஏய்ப்புச் செய்வோரையும் தண்டித்து ஒழுங்குபடுத்திட மறுத்தல் - இவை அனைத்தும் மிகவும் ஆரோக்கியமற்ற மற்றும் வக்கிரமான முதலாளித்துவத்தை வளர்த்துள்ளது. இதுவே இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக் கதையாக இருக்கிறது.
இவை அனைத்தும் நாட்டில் மிகப் பெரிய அளவில் லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை உருவாக்கி இருக்கிறது. இது சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. ஆட்சியாளர்களின் முதலாமாண்டில் சத்யம் ஊழல், ஐபிஎல் விவகாரம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல், ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் என்று எண்ணற்ற ஊழல்களால் நிரம்பி வழிகின்றன. இவை அனைத்தும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் ஆளும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான இழிவான பிணைப்பிற்கு வழிவகுத்திருக்கின்றன.

நான்காவதாக, ஐமுகூ அரசாங்கம் சாமானிய மக்களின் மீது கவலைப்படுவதாகக் கூறிவந்ததெல்லாம் எவ்வளவு பசப்புத் தனமானது என்பதும் இந்தக்காலத்தில் மெய்ப் பிக்கப்பட்டுவிட்டது. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங்கிரசும் ஐமுகூ அரசாங்கமும் ஏதாவது செய்திருக்க வேண்டும். ஆனால் எதுவுமே செய்திடவில்லை. ஐமுகூ-1 அரசாங்கத்தின் காலத்தில், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், விவசாயிகள் கடன் ரத்து மற்றும் வன உரிமைகள் சட்டம் என்று சில நடவடிக்கைகள் எடுக்கப்படடன. இவை அனைத்தும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் பகுதிகளாகும். இடதுசாரிக் கட்சிகள் அளித்து வந்த நிர்ப்பந்தம் மற்றும் போராட்டங்களின் விளைவாகவே இவை பிரதானமாக நடைமுறைக்கு வந்தன என்று உறுதியாகக் கூற முடியும்.

ஆயினும், ஐமுகூ-2 அரசாங்கம் தன் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் உருப்படியாக ஒரு நடவடிக்கையைக்கூட இதுவரை எடுத்திட வில்லை. இப்போது முன்மொழியப்பட்டிருக்கிற உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு எவ்விதத்திலும் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை அளிக்கப் போவதில்லை. ஆட்சிக்கு வந்து ஓராண்டாகிவிட்டது. இன்னமும் அரசாங்கம் இதனை எப்படிக் கொண்டுவருவது என்று விவாதித்துக் கொண்டிருக்கிறது. பொது விநியோக முறை மேலும் வெட்டப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய பட்ஜெட்டில் மூவாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உர மான்யத்தை வெட்டியிருப்பதிலிருந்து, விவசாயிகளின் அவலம் குறித்து அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

ஐமுகூ-1 அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டமானது, கல்விக்கான பொது செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு அளவிற்கு உயர்த்திடவும், அதேபோல் பொதுசுகாதாரத்திற்கான பொது செலவினத்தையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 விழுக்காடு அளவிற்கு உயர்த்திடவும் உறுதி அளித்திருந்தது. கல்வியைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசுகளின் பொது செலவினம் 4 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கிறது. பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீடு, 2009-10 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.06 விழுக்காடு மட்டுமே. இது குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் அளித்திருந்த உறுதிமொழியான 2-3 விழுக்காடு குறியீட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் கீழானதாகும்.

ஐந்தாவதாக, ஐமுகூ அரசாங்கம், நாடாளுமன்றத்தில் அதற்குள்ள சாதகமான அரசியல் சூழ்நிலையையும் மதச்சார்பற்ற சக்திகளின் பலத்தையும் பயன்படுத்திக் கொண்டு, வகுப்புவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்லத் தவறிவிட்டது. இதனை, அது சிறுபான்மையினருக்கு அவர்களது சமூக-பொருளாதாரப் பின்தங்கியை நிலைமையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்த ரங்கனாத் மிஷ்ரா ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்தத் தயங்குவதிலிருந்தே தெளிவாகக் காண முடியும். காஷ்மீரில் மக்கள் மத்தியில் குமுறிக் கொண்டிருக்கும் பிரச்சனையை சமாளித்திட, போதிய அளவு அரசியல் உறுதியின்மை இருப்பதை நன்கு காண முடியும்.

மாவோயிஸ்ட் வன்முறையைச் சமாளிப்பதைப் பொறுத்தவரை, அது முழுக்க முழுக்க சட்டம் - ஒழுங்கு பிரச்சனை என்றே ஐமுகூ அரசாங்கம் கருதுகிறது. வனப்பகுதிகளில் வகைதொகையற்ற விதத்தில் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள உரிமம் அளித்திருப்பது போன்ற ஐமுகூ அரசாங்கத்தின் சில கொள்கைகளும் அதற்குக் காரணம் என்று அது உணர மறுக்கிறது. இதன்மூலம் பழங்குடியின மக்களை தனிமைப்படுத்தி விட்டதை அது உணரவில்லை. மேலும் ஐமுகூ அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய திரிணாமுல் காங்கிரசே அதற்கு இடைஞ்சல் செய்துகொண்டிருக்கிறது. மமதா பானர்ஜி மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளே கிடையாது என்றும், எனவே அவர்களுக்கு எதிராக மத்திய - மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கைகள் தேவையில்லை என்றும் பிரகடனம் செய்திருக்கிறார்.
ஆறாவதாக, மன்மோகன் அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கை என்பது அமெரிக்காவின் அடிவருடியாக இருப்பதில் உறுதியாக இருப்பதைக் காட்டுகிறது. அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈடாக, இந்தியா அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டாலர்களுக்கு ஆயுதங்களும் உபகரணங்களும் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் நிலப்பகுதிகளில் அமெரிக்கா ஆய்வுகள் மேற்கொள்ள அனுமதிப்பதற்கான ஒப்பந்தம் (The End Use Monitoring Agreement)கையெழுத்தாகி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ராணுவம்சாரா சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவு (Civil Nuclear Liabilit Bill) இந்திய மக்களுக்கு எதிராக, அமெரிக்காவின் நலன்களை உயர்த்திப் பிடிப்பதற்கான ஒன்றாகும். அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் பல்வேறு ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டிருப்பதானது, இந்தியாவின் சுயேட்சையான கொள்கையைக் கடுமையாகப் பாதிக்கும்.

அணுசக்தி பிரச்சனைகளில் ஈரானைக் குறி வைத்து அமெரிக்கா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா துணைபோனது. மேலும் ஒருதடவை, மற்ற அணிசேரா நாடுகளைப்போலல்லாமல், சர்வதேச அணுசக்தி முகமையில்(IAEA-International Atomic Energy Agency), ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இந்தியா, அணிசேரா நாடுகளின் தலைவனாக இருந்து தன்னுடைய பங்கினை ஆற்றவில்லை. மாறாக, பிரேசில் நாட்டின் அதிபர் லூலா டி சில்வா அமெரிக்காவிற்கு எதிராக நின்று, ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டுவருவதை ஒப்புக்கொள்ள மறுத்திருக்கிறார். அதிபர் லூலா தற்போதுள்ள முட்டுக்கட்டையை நீக்குவதற்காக, துருக்கியின் உதவியுடன் ஏதேனும் ஓர் ஒப்பந்தத்திற்கு வருவதற்கு, ஈரானிய தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெஹ்ரான் சென்றிருக்கிறார்.

அயல்துறைக் கொள்கையில் இந்த அரசு மேற்கொண்ட ஒருசில சாதகமான அம்சங்கள் ஒன்று, பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோதல் போக்கை மேற்கொள்ள மறுத்ததாகும். அவரது அரசாங்கத்திலும் கட்சியிலும் ஒரு சில பிரிவுகள் அதற்கு எதிராக இருந்தபோதிலும், பிரதமர் அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்க்காது இதனைச் செய்திருக்கிறார்.
இந்தியாவின் முன்முயற்சியின் விளைவாக பிரிக் (BRIC-Brazil, Russia, India, China), இப்சா(IBSA- India, Brazil, South Africa) போன்று அமைப்புகள் உருவாகி, அமெரிக்காவின் ஒருதுருவ கோட்பாட்டிற்குப் பதிலாக, பல்துருவக் கோட்பாட்டை வலுப்படுத்தக்கூடிய வகையில் ஒரு வலுவான சுயேட்சையான அயல்துறைக் கொள்கையை உருவாக்குவதற்கு வாய்ப்பிருந்தும், ரஷ்யா, சீனா மற்றும் இந்திய அயல்துறை அமைச்சர்களின் கூட்டங்களை அதற்குப் பயன்படுத்தத் தயங்கி மிகவும் அடக்கி வாசிக்கிறது.
ஐமுகூ அரசாங்கத்தின் ஓராண்டு முடிவில் உள்ள நிலைமை என்பது, அரசியல்ரீதியாக அது மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே காட்டுகிறது. 2009 மே மாதத்தில் ஐமுகூ தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதிலும், அதற்குப் பெரும்பான்மை கிட்டவில்லை. இந்த எதார்த்த உண்மையை காங்கிரஸ் கட்சித் தலைமை உதாசீனப்படுத்திவிட்டு, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தாமாகவே ஆதரிக்க முன்வந்ததை அடுத்து, மிகவும் திருப்திமனப்பான்மையுடன் செயல்படத்துவங்கியது. ஆனால் ஓராண்டு முடிவில் அத்தகைய திருப்திமனப்பான்மை நொறுங்கி சுக்குநூறாகிவிட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இக்கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு பேரங்களில் ஈடுபட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி மூன்று மாதங்கள், அரசாங்கம் தன் பெரும்பான்மையை மெய்ப்பிப்பதற்காகவும், வெட்டுத் தீர்மானங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், நிலுவையிலிருந்த சில சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றுவதற்காகவும் பலவிதமான தில்லுமுல்லுகளில் இறங்கியதைக் கண்டோம். சிபிஐ என்னும் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தை ஆள்வோர் தங்களின் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தியதானது அதன் மீதான நம்பகத்தன்மையையே கேலிக்குரிய தாக்கிவிட்டது. மகளிர் ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவினை மக்களவையில் கொண்டுவராமல் ஒத்திவைத்துள்ளது, ராணுவம் சாரா சிவில் அணுசக்தி பொறுப்புச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தி இருப்பது - ஆகிய அனைத்தும் அதன் எதிர்காலம் மிகுந்த சிக்கலுடன் இருக்கும் என்பதன் முன்னறிகுறிகளாகும்.

இவ்வாறு அரசாங்கம் எவ்வித திசைவழியிலும் செல்லாது குழம்பிப் போயிருக்கிறதென்றால் அதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணங்களாகும். ஐமுகூ அரசாங்கம் தன்னுடைய சொந்தக் கொள்கைகளின் அடிப்படையில் முன்னேற முடியும் என்று நினைத்துக் கொண்டுதான் செயல்படத் துவங்கியது. எனினும் அதன் கூட்டாளிகள் இப்போது வேறுவிதமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். நாடாளுமன்றத்திற் குள்ளேயே அதற்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருக்கிறது. மக்களைப் பொறுத்தவரை, நாளும் ஏறும் விலைவாசி உயர்வால் கடுமையாக அவதியுறும் தங்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத தடித்தனமானதோர் அரசாங்கமே இது என்பதையும் அதே சமயத்தில் உலகப் பொருளாதார மந்தத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் மேல் மிகப்பெரிய அளவில் கரிசனம் கொண்டிருப்பதையும் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். அரசாங்கத்தின் முதல் ஆறு மாதங்களுக்குப்பின், நாடு முழுதும் மக்கள் போராட்டங்களும் இயக்கங்களும் அலை அலையாய் எழுந்து வந்தன. இதன் உச்சகட்டமாக ஏப்ரல் 27 அன்று 13 எதிர்க்கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்த அகில இந்திய வேலை நிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. நாட்டில் பல்வேறுபட்ட மக்கள் திரளினரும் இப்போராட்டத்தில் பெருவாரியாகக் கலந்து கொண்டார்கள். அரசாங்கத்தின் கேடுகெட்ட கொள்கைகளுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்காகவுமே இப்போராட்டம் நடைபெற்றது. நம்முன் உள்ள கேள்வி என்னவெனில், ஓராண்டு காலம் ஆட்சியிலிருந்த ஐமுகூ அரசாங்கம் இவற்றிலிருந்து ஏதேனும் பாடங்கள் கற்றுக் கொண்டதா என்பதேயாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Monday, May 17, 2010

ஹோ சி மின் காட்டிய வழியில் முன்னேறுவோம் - சீத்தாராம் யெச்சூரி

மூன்றாம் உலக நாடுகளில், ஏகாதி பத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தோழர் ஹோ சி மின் காட்டிய வழியில் முன்னேறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் தோழர் ஹோ சி மின் 120ஆம் பிறந்தநாள் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை யொட்டி நடைபெற்ற சர்வதேசக் கருத்த ரங்கம் ஒன்றில் “ஹோ சி மின்: தேசிய சுதந்திரமும் சோசலிசமும்” என்னும் தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“தோழர் ஹோ சி மின் மற்றும் வியட் நாம் கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்டு, முதலில் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு எதிராகவும் இறுதியாக அமெரிக்காவிற்கு எதிராகவும் நடைபெற்ற காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றி சென்ற நூற்றாண்டில் உலக வரலாற்றில் நடைபெற்ற உத்வேகம் அளித்திடும் இயக்கமாகும். சுரண்டலுக்கு எதிராகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒன்று பட்ட மக்கள் முன்னே, துணிந்தவிட்ட மக்கள் முன்னே, எவ்விதமான அடக்கு முறைகளும் தூள் தூள் தூளாகும் என் பதை மெய்ப்பித்த இயக்கமாகும்.

1960களிலும் 70களிலும் வியட்நாம் யுத்தத்திற்குத் தலைமை தாங்கிய ஹோ சி மின் என்னைப் போன்று ஏராளமான இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலும், பின்னர் கம்யூனிசத் திற்காகவும் எங்களை அர்ப்பணித்துக் கொள்ள ஆதர்சமாக இருந்தார்.

சுமார் 150 ஆண்டுகள் காலனியாதிக் கத்தின் நுகத்தடியில் இருந்த ஒரு நாட் டிலிருந்து வந்தவன் என்ற முறையில், காலனிகளின் சுரண்டல் மற்றும் காலனி எஜமானர்களின் ஒடுக்குமுறைகள் எப் படி இருக்கும் என்பதெல்லாம் நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். சோசலிசத் திற்கான போராட்டத்துடன் காலனியா திக்கப் பிரச்சனைகளையும் சரியாக இணைத்து, காலனியாதிக்கத்திலிருந்த நாடுகளில் விடுதலைக்கான பாதை யைச் சரியாக அமைத்துத்தந்த கம்யூ னிஸ்ட் தலைவர்களின் மத்தியில் தோழர் ஹோ சி மின் முதலாவதாவார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத் தில், மார்க்சியம்-லெனினியம் குறித்து சரி யான புரிதல் இல்லாத சமயத்தில், காலனி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான தத்துவார்த்தத் திசைவழி தெரியாது தோழர் ஹோ சி மின்னும் தத்தளித்துக் கொண்டிருந்தது உண்மை. ஆனால், காலனியாதிக்கம் தொடர்பாக லெனினது ஆய்வுக் குறிப்புகளைப் படித்தபின்னர், இன்ப அதிர்ச்சிக்கு ஆளான தோழர் ஹோ சி மின், ‘‘இதுவே எமக்குத் தேவை, விடுதலைக்கான பாதை இதுவே’’ என்று உரத்துக் கூறினார்.

மார்க்சிய-லெனினியத்தை முழுமை யாகப் புரிந்துகொண்டதன் பின்னணி யில் வியட்நாமின் துல்லியமான நிலை மைகளை லெனினிய அடிப்படையில் ஆய்வு செய்து, காலனி எதிர்ப்புப் போராட் டத்திற்கான போர்த்தந்திரத்தையும் நடை முறை உத்திகளையும் தோழர் ஹோ சி மின் வடித்தெடுத்தார். தோழர் ஹோ சி மின்னின் பாரம்பரியத்தின் மிக முக்கிய அம்சங்களில், இது ஒன்று.

அடுத்த முக்கிய அம்சம், இதனை அடைவதற்காக புரட்சிகரமான கம்யூ னிஸ்ட் கட்சியைக் கட்டியதும், அதன் கீழ் மக்களை முழுமையாக அணிதிரட்டியது மாகும். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த மக்களுக்கு மார்க்சிய-லெனி னியத்தின் அடிப்படைக் கூறுகளை விளக்கியதோடு மட்டுமல்லாமல், புரட் சித் தத்துவத்தின் அடிப்படையில் ஸ்தாப னத்தையும் உருவாக்கினார். கட்சியின் ஒற்றுமைக்கு அவர் மிகுந்த முக்கியத் துவம் கொடுத்தார். மத்தியக்குழுவிலி ருந்து அடிப்படைக் கிளைகள் வரை, கண் ணின் மணி போன்று கட்சியின் ஒற்று மையைக் கட்டிக் காத்திட வேண்டும் என்றார். இம்முயற்சியில் கட்சிக்குள் வந்த வலது, இடது திரிபுகளுக்கு எதி ராகப் போராட கொஞ்சம்கூட தயங்க வில்லை. ஹோ சி மின் வறட்டுத் தத்துவ வாதத்திற்கும் எதிரானவர். அவர் நடை முறை மூலமாகத் தத்துவத்தைச் செழு மைப்படுத்தினார், தத்துவத்தின் மூலமாக நடைமுறையை உருக்குபோன்று மாற் றினார்.

தோழர் ஹோ சி மின்னின் மற்றுமொரு மகத்தான பண்பு அவர் மக்களுடன் கொண்டிருந்த மாபெரும் பிணைப்புதான். தலைவர்கள் உட்பட அனைத்து முன் னணி ஊழியர்களும் மக்களுடன் வாழ வேண்டும், மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், மக்களுக்காகச் சேவை செய்திட வேண்டும், அவர்கள் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுத்து அவர்களுக்குத் தலைமை தாங்கவேண் டும் என்று அடிக்கடி ஹோ சி மின் கூறு வார். இவ்வாறு அவர் மக்களிடம் வைத்தி ருந்த அபரிமிதமான நம்பிக்கைதான் புரட் சிகரப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் அவருக்கு வெற்றிகளை உத்தரவாதமாக்கின.

ஹோ சி மின் தன் வாழ்நாள் முழுதும் தன் உடலாலும் உள்ளத்தாலும் நாட்டிற் காகவும், புரட்சிக்காகவும், மக்களுக்காக வும் உழைத்தார். ஹோ சி மின் முன்னணி ஊழியர்களின் புரட்சிகர ஒழுக்கத்திற் கும், புரட்சிகர மாண்பிற்கும் அதிக அழுத் தம் கொடுத்தார். “நல்ல நடத்தையுடனும் நல்லொழுக்கத்துடனும் உள்ள முன் னணி ஊழியர்களிடம் மக்கள் மிகுந்த மரியாதையுடனும் நேசத்துடனும் இருப் பார்கள்,” என்று ஹோ சி மின் கூறுவார். அவர் மூன்று எதிரிகளை அடையாளம் காட்டினார். “முதலாளித்துவமும் ஏகாதி பத்தியமும் மிகவும் ஆபத்தான எதிரிகள். ... மூன்றாவது எதிரி, தனிநபர்வாதம் ஆகும். இவர், மேலே குறிப்பிட்ட இரு எதிரிகளின் கூட்டாளியாவார் என்று ஹோ சி மின் கூறினார். “இத்தகைய மூன்று எதிரிகளுக்கும் எதிராக உறுதி யுடன் போராடுவதிலேயே புரட்சிகர நல்லொழுக்கம் அடங்கியிருக்கிறது” என்று தோழர் ஹோ சி மின் கூறினார்.

சமூகத்தை புரட்சிகரமாக மாற்றிய மைக்கும் போராட்டத்தில் தோழர் ஹோ சி மின் கற்றுத்தந்துள்ள புரட்சிகரப் பாரம்பரியங்கள் நமக்கு வழிகாட்டட்டும். “ஒவ்வொருவரும் போர்முனையிலும், பொருளாதார முனையிலும், அரசியல் அல்லது கலாச்சார முனையிலும் போரா ளிகளாக மாற வேண்டும்” என்று ஹோ சி மின் அன்று விடுத்த வேண்டுகோள், ஏகாதிபத்தியத்தின் தாக்குதலின் கீழ் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதேயாகும். நம் முன் உள்ள பணி எளிதானதோ அல்லது மென் மையான மலர்ப்பாதையோ அல்ல என் பது உண்மைதான். தோழர் ஹோ சி மின் சொன்னதுபோன்று, “எதுவும் எளிதானது மல்ல, அதேபோன்று எதுவும் கடின மானதுமல்ல.” இவ்வாறு அவரது தத்து வார்த்த வெளிச்சத்தில் உறுதியான நம் பிக்கையுடன், வர்க்கமற்ற சமுதாயத்தை அமைப்பதற்கான போராட்டத்தில் நம்மை நாம் இணைத்துக்கொள்வோம்.

தமிழில்: ச.வீரமணி

Friday, May 14, 2010

பாசிசத்திற்கு எதிரான வெற்றி:சோவியத் மக்களின் வீரமும் தியாகமும் மனிதகுல வரலாற்றில் மகத்தானவை - சீத்தாராம் யெச்சூரி


முதலாளித்துவ ஆதரவு வரலாற்றாசிரியர்கள் எப்போதும் வரலாற்றைத் தங்கள் எஜமானர்களின் ஆசை அபிலாசைகளுக்கு ஏற்ப மாற்றியே எழுதி வந்திருக்கிறார்கள். அதேபோன்று இப்போதும், சோவியத் யூனியன் தகர்வுக்குப்பின், இன்றைய உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மேற்கத்திய உலகம் பாசிசத்தையும் கம்யூனிசத்துடன் சமமாகப் பாவித்து, இரண்டாம் உலகப் போரின் வரலாற்றையும் திரித்து எழுத முற்பட்டிருக்கிறது. நமது நாட்டிலும், உலக அளவிலும் கம்யூனிசத்திற்கு எதிராக அரக்கத்தனமான முறையில் விஷமப் பிரச்சாரத்திலும் முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வது அப்படி ஒன்றும் கடினமானதல்ல.

இவ்வாறு கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான மிகவும் முக்கியமான காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தான் மேற்கொள்ளும் அனைத்து அட்டூழியங்களுக்கும் நியாயம் கற்பிக்கவேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டிருக்கிறது.
உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில், லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட உலகில் பல பகுதிகளிலும் மக்கள் சோசலிசத்தின்பாலும், இடதுசாரி அரசியலாலும் ஈர்க்கப்படுவது அதிகரித்து வருவதைத் தடுத்திட வேண்டிய அவசியம் உலக முதலாளித்துவத்திற்கு அவசியமாகியுள்ளது. இதற்காக வரலாற்றை மீண்டும் ஒருமுறை திரித்து எழுத வேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டிருக்கிறது.

இன்று அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் நிலைமைகள் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை. கிரீஸ், போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து போன்ற நாடுகள் கடும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியிருக்கும் மக்கள் தொகையின் அளவு 102 கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் வாழும் மக்களில் ஆறில் ஒருவர் பட்டினிக்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த ஆண்டு பொருளாதார மந்தம் ஏற்பட்டபின்னர், 10 கோடியே 20 லட்சம் மக்கள் பட்டினிப் பட்டாளத்தில் கூடுதலாகச் சேர்ந்துகொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான், இவ்வாறான முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கான மாற்று சோசலிசமே என்ற சிந்தனைக்கு மக்கள் வந்துவிடக் கூடாது என்றும், அதற்கு, பாசிசத்தைத் தோல்வியுறச் செய்ததில் சோவியத் யூனியனின் வீரமிகு பங்களிப்பை மூடிமறைத்திடவேண்டியது அவசியம் என்றும் ஏகாதிபத்தியம் கருதுகிறது.

இவ்வாறு சோசலிசத்திற்கு எதிராகவும், சோசலிச நாடுகளுக்கு எதிராகவும் மிகவும் கேவலமான முறையில் தொடர்ந்து துஷ்பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலமாகவே, உலகின் பல இறையாண்மை மிக்க நாடுகளில் உள்ள மக்களுக்கு எதிராகத் தான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அடிக்கும் கொள்ளைகளை, தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்று ஏகாதிபத்தியம் கருதுகிறது.

உலகப் பொருளாதார மந்தத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்கள் முதலாளித்துவ நெருக்கடிக்கு மாற்று சோசலிசமே என்று போய்விடக்கூடாது என்பதற்காகவே, ‘‘முதலாளித்துவமே என்றும் சாசுவதமானது’’ என்று வரலாற்றைத் திரித்து எழுதுவோர் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இடதுசாரிகளின் முன்னேற்றத்தைத் தடுத்திட, உண்மை இவ்வாறு முதலாளித்துவத்தின் பலிபீடத்தில் காவு கொடுக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மற்றும் கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் வெற்றி பெற்றன என்று சித்தரிப்பதன் மூலம் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை தீவிரமாக்குவதே இவர்கள் வரலாற்றைத் திரிப்பதற்கான நோக்கமாகும். பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மேற்கத்திய நேச நாட்டைச் சேர்ந்த வீரர்களைப்போல் நாற்பது மடங்கு சோவியத் வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்கிற உண்மையை இவர்கள் வேண்டுமென்றே மறைக்கிறார்கள். இரண்டு கோடிக்கும் மேலான சோவியத் வீரர்களும் மக்களும் தங்கள் உயிரைப் பலிகொடுத்திருக்கிறார்கள்.

பாசிசத்துடன் கம்யூனிசத்தை சமமாகப் பாவிப்பதன் மூலம் தங்கள் திரிபை நியாயப்படுத்துவதற்காக, ‘தி எகனாமிஸ்ட்’ இதழ் ‘‘1941க்கு முன் ஸ்டாலின் இட்லருக்கு உடந்தையாக இருந்தார் என்பதை கிரெம்ளின் ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்று கூறுகிறது. ஜெர்மனியும் சோவியத் யூனியனும் 1939இல் செய்துகொண்ட ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தத்தை இது இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது. இட்லருக்கு எதிராக ஓர் அரசியலணியை அமைக்காமல் யுத்தத்தில் வெற்றிபெறுவது சாத்தியமில்லை என்பதால் அவ்வாறு ஒரு பாசிச எதிர்ப்புக் கூட்டணியை ஏற்படுத்திட முதலில் முயன்றது ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் என்னும் உண்மையைக் கூறுவதை அவர்கள் வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள். பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி என்னும் சோவியத் யூனியனின் முன்மொழிவை நிராகரித்துவிட்டு, அதேபோன்றதொரு கூட்டணியை பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனியுடன் செய்துகொண்டதை அவர்கள் தங்கள் வசதி கருதி மறைக்கிறார்கள். லண்டன் ‘எகனாமிஸ்ட்’டுக்கு, லண்டனிலிருந்து வெளிவரும் மற்றோர் இதழான ‘கார்டியன்’ இதழில் 1970 ஜனவரி 1 அன்று, ரகசிய அயல்துறை விவகாரங்களுக்கான ஆவணக்காப்பகத்திலிருந்து வெளியிடப்பட்ட 1939ஆம் ஆண்டு அமைச்சரவை ஆவணங்களை நிச்சயமாக அறிந்திருக்கவேண்டும். அவற்றில், ‘‘ரஷ்யாவின் அறிவுரையைக் கேட்டு, பிரிட்டன் - பிரான்ஸ் - சோவியத் யூனியனுக்கு இடையே ஒரு கூட்டணி ஏற்பட்டிருக்குமானால், அது இரண்டாம் உலக யுத்தம் ஏற்படாமல் தடுத்திருக்கும். ஏனெனில், இட்லர் ‘ரிஸ்க்’ எடுத்திடத் துணிந்திருக்க மாட்டான். ஆனால் சாம்பர்லெயின் அரசாங்கம் ரஷ்யாவின் அறிவுரையை ஏற்கவும் இல்லை, புரிந்துகொள்ளவும் இல்லை.’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

சோவியத் முன்மொழிவுக்கு ஏன் மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை? மிகவும் கொடூரமான முறையில் இது தொடர்பாக அப்போது அமெரிக்க செனட்டராகவும் பின்னர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியாகவும் மாறிய ஹாரி ட்ரூமேன் கூறியது கவனிக்கத்தக்கது. சோவியத் யூனியனை இட்லர் தாக்கிய அன்று அவர் கூறுகிறார்: ‘‘இப்போரில் ஜெர்மனி வெற்றி பெறும்போல் தெரியுமானால் நாம் ரஷ்யாவுக்கு உதவுவோம். ரஷ்யா வெற்றிபெறும்போல் தெரிந்தால் ஜெர்மனிக்கு உதவுவோம். எப்படியோ இருவரும் அடித்துக்கொண்டு, ஏராளமானோர் கொல்லப்பட வேண்டும்’’. (தி நியுயார்க் டைம்ஸ், ஜூன் 24, 1941) இவ்வாறு அவர் கூறியிருந்தபோதிலும், ரஷ்யாவுக்கு உதவிட சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காலம் கடத்தினார்கள். இட்லர் சோசலிசத்தை அழித்துத் தகர்த்துவிடுவான் மீண்டும் உலகின் ஆறில் ஒரு பகுதியாக உள்ள சோசலிச நாடு மீண்டும் முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.

இட்லருக்கு எதிரான யுத்தத்தில் சோவியத் யூனியன் வெற்றிக்குப் பின் வெற்றி பெற்று வந்த சமயத்தில்தான், இட்லரை எதிர்த்த போரில் வெற்றிக்கான முழுப் பெருமையும் சோவியத் யூனியனுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் கடைசி நேரத்தில் அவை சோவியத் யூனியனுக்கு ஆதரவு தெரிவித்தன.

நாஜி ஜெர்மனி, சோவியத் யூனியனைத் தன்னுடைய சொந்த ராணுவத்தின் மூலமே நசுக்கிவிட தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தது. ஆங்கிலோ-பிரான்ஸ்- அமெரிக்காவோ அதே குறிக்கோளை யாரையாவது பயன்படுத்தி செய்திட விரும்பின. சோவியத் யூனியனுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான யுத்தத்தில் இரண்டு நாடுகளுமே ஏராளமான அளவில் ரத்தத்தை சிந்திடும் என்று அவை நம்பின. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் சோவியத் யூனியன், ஜெர்மனிக்கு எதிராக பாசிஸ்ட் எதிர்ப்புக் கூட்டணியை அமைத்திட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா தொடர்ந்து இதனை நிராகரித்து வந்தன. அவற்றின் நோக்கம் தெளிவானது. எப்படியாவது சோவியத் யூனியன் தாக்கப்படட்டும் என்பதுதான்.

நாஜிக்கள் போலந்தைத் தாக்கியபின் இருநாட்கள் கழித்து, பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்தைப் பிரகடனம் செய்தன. ஆயினும் அவ்வாறு அறிவித்ததோடு சரி. அடுத்து ஒன்பது மாதங்கள் அவை எதுவுமே செய்திடவில்லை. இதனால் உத்வேகம் கொண்ட ஜெர்மன் பாசிசம், தன் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. அதன்பின்னர்தான் தாங்கள் நீடித்திருப்பதே ஆபத்திற்குள்ளாகிவிட்டது என்பதையும் மேலும் தங்கள் நாடுகளுக்குள்ளேயே பாசிஸ்ட் எதிர்ப்பு இயக்கங்கள் வலுவடைந்து வந்ததையும் அவை உணர்ந்தன.
இட்லர், பிரிட்டனையும் தாக்குவதற்கான திட்டத்தையும் ஆமோதித்துவிட்டான். உண்மையில், பிரிட்டனைத் தாக்குவதற்கானத் தயாரிப்பு வேலைகளை பிரசுரித்தபின், இட்லர் சோவியத் யூனியனுக்கு எதிராக கிழக்கு முன்னணியில் தன் படைகளை குவித்து வந்தான். பிரான்சை எளிதாக வெற்றிகொண்டதை அடுத்து, உலகைத் தாங்கள் ஆள்வதற்குத் தடையாக இருந்து வரும் சோவியத் யூனியன்தான் தங்களின் அடுத்த தாக்குதல் என்று பாசிஸ்ட்டுகள் கருதினார்கள். இட்லர், பிரிட்டன் மீதான தாக்குதலைத் தொடர்ந்த அதே சமயத்தில் சோவியத் யூனியன் மீதும் தாக்குதலைத் தொடுத்தான்.

ஐரோப்பிய நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக எளிதில் வீழ்ந்ததால் மிகவும் நம்பிக்கையுடனிருந்த இட்லர் அதேபோன்று சோவியத் யூனியனும் எளிதில் தங்கள் வசமாகிவிடும் என்று கருதினான். சோவியத் யூனியனுக்கு எதிரான யுத்தம் ‘‘ஆறு வாரங்கள் கூட நீடிக்காது’’ என்று அவன் கருதினான். எனவேதான் இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவைத் தாக்கவும் திட்டம் தீட்டி இருந்தான். பின்னர் மற்ற ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்காவையும் தாக்கிடவும் திட்டங்கள் தீட்டியிருந்தான்.
சோவியத் யூனியனுடன் செய்து கொண்டிருந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தத்தை மீறி,

1941 ஜூன் 22 அன்று சோவியத் யூனியன் மீது திடீர் தாக்குதலை இட்லர் மேற்கொண்டான். இட்லர் தன்னுடைய படையினரில் 77 விழுக்காட்டினரை சோவியத் யூனியனுக்கு எதிரான யுத்தத்தில் செலுத்தினான். ஐரோப்பிய நாடுகளை அவன் வென்றிருந்ததனால், சோவியத் யூனியனின் மேற்கத்திய முன்னணி முழுவதிலும் அவன் தன் படைகளை எளிதாக நுழைக்க முடிந்தது. நாஜிக்கள் ஜூலை 10க்குள் சுமார் 600 கிலோ மீட்டர் தூரம் சோவியத் யூனியனுக்குள் நுழைந்துவிட்டனர். விரைவில் சோவியத் யூனியன் நிர்மூலமாக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும் என்றுதான் உலகம் கருதியது. வின்ஸ்டன் சர்ச்சில் தன் நினைவுக்குறிப்பில், ‘‘அநேகமாக ரஷ்ய ராணுவம் விரைவில் தோற்கடிக்கப்பட்டுவிடும், மற்றும் பெருமளவில் அழிக்கப்பட்டுவிடும் என்றே அனைத்துவிதமான ராணுவக் கணிப்புகளும் கூறுகின்றன’’ என்று எழுதியிருக்கிறார். ஜெர்மானியர்கள் யுத்தம் தொடங்கிய முதல் சிலவாரங்களிலேயே வடக்கில் லெனின்கிராட், மத்தியில் மாஸ்கோ மற்றும் கீவ் நகரைத் தகர்த்தபின் ஸ்டாலின்கிராடை நோக்கி முன்னேறத் தொடங்கிவிட்டார்கள்.
ஆயினும் ஜெர்மனியரின் திட்டம் அவர்கள் நினைத்தபடி வெற்றி பெறவில்லை. உலகை விரைவில் தன் ஆளுகையின் கொண்டுவந்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த இட்லர் மிகவும் விரக்தி அடைந்தான். சோவியத் யூனியனில் நாஜிக்கள் எதிர்கொண்ட எதிர்ப்பு, ஒட்டுமொத்த உலகையே வியப்பில் ஆழ்த்தியது. நாஜிக்கள் பக்கமும் இழப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின.

ரஷ்யர்கள் வீரத்துடன் போரிட்டபோதிலும், ஜெர்மானியர் தொடர்ந்து முன்னேறினர். ‘‘என்ன விலைகொடுத்தேனும் ஸ்டாலின்கிராடைக் கைப்பற்றுக’’ என்பதுதான் இட்லரின் கோஷம். ஸ்டாலின்கிராடைக் கைப்பற்றுவதற்கான யுத்தம் 182 நாட்கள் நடைபெற்றன. ஸ்டாலின்கிராடைச்சேர்ந்த அனைத்து மக்களும் ஸ்டாலின்கிராடைக் காத்திடும் யுத்தத்தில் பங்குகொண்டனர். சைபீரியாவில் பயிற்றி பெற்ற வீரர்கள் ஸ்டாலின்கிராடைத் தாக்கிக்கொண்டிருந்த ஜெர்மானியர்களை பின்னணியிலிருந்து தாக்கத் தொடங்கினர். ஜெர்மானியர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். 3 லட்சம் ஜெர்மானியர்கள் இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டனர். பின்னர் 1943 பிப்ரவரி 2 அன்று அவர்கள் முழுமையாகச் சரணடைந்தனர். இது யுத்தத்தின் போக்கையே மாற்றியமைத்தது. உலகையே ஆள நினைத்திருந்த ஜெர்மானியருக்கு தீர்மானகரமான முதல் தோல்வி இங்கே ஏற்பட்டது. இத்தோல்விதான் இட்லரைத் தற்கொலை செய்து கொள்ள இட்டுச் சென்றது.
ஸ்டாலின்கிராடு தோல்விக்குப்பின், ஜெர்மானியர் பின்வாங்கத் தொடங்கினர். 1943இல் ஜெர்மானியர் உக்ரேனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். 1944 கோடை காலத்தின் துவக்கத்தில் அவர்கள் சோவியத் நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர். 1945 ஏப்ரல் 30 அன்று பெர்லினில் இட்லரின் தலைமையகத்தின் மீது செங்கொடி ஏற்றப்பட்டது.

இவ்வாறு வரலாற்றில் பாசிசத்தை முறியடித்தது, அமெரிக்காவோ, பிரிட்டனோ அல்லது பிரான்சோ அல்ல மாறாக, சோவியத்யூனியன்தான், பாசிஸ்ட்டுகளின் கொடியை இறக்கியது. 1945 மே 2 அன்று மாலை 3 மணியளவில் ஜெர்மானியர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி சரணடைந்தார்கள்.

உலகை ஆள துடித்துக்கொண்டிருந்த பாசிஸ்ட்டுகளை நிர்மூலமாக்கியது ஸ்டாலின் தலைமையிலான செங்கொடி இயக்கமே. இதற்கு செங்கொடி இயக்கம் எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறது? 2 கோடி வீரர்கள் கொல்லப்பட்டார்கள், இரண்டரை கோடி பேர் வீடிழந்தார்கள், 1700 நகரங்கள் 27 ஆயிரம் கிராமங்கள் அழிக்கப்பட்டன. 38 ஆயிரத்து 500 மைல்ல ரயில் பாதை அகற்றப்பட்டது. 1418 நாட்கள் நடைபெற்ற போரில் சோவியத் யூனியன் ஒவ்வொரு நிமிடமும் ஒன்பது பேரை பலி கொடுத்தது, ஒரு நாளைக்கு 14 ஆயிரம் பேரை பலி கொடுத்தது. ஆயினும் இவ்வளவு இழப்புக்குப்பின்னரும், சோவியத் மக்கள் எழுந்துநின்றனர். யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே தங்கள் நாட்டை மீண்டம் பிரம்மாண்டமாக எழுப்பும் பணியில் ஈடுபட்டனர். வீரர்கள் ஐரோப்பாவில் யுத்தத்தின் ஈடுபட்டிருந்த அதே சமயத்தில் மக்கள் மீண்டும் தொழிற்சாலைகளையும், பண்ணைகளையும் அமைக்கத் தொடங்கினார்கள். இவ்வாறு சோவியத் மக்கள் மிகவும் வீரஞ்செறிந்த முறையில் பாசிசத்தை முறியடித்தனர்.

இத்தகைய சோவியத் மக்களின் வீரத்தையும் தியாகத்தையும்தான் ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் இப்போது துடைத்தழித்திட முன்வந்துள்ளனர். பாசிசத்தை முற்றிலுமாக தோல்வியுறச்செய்து, மனிதகுலத்தை விடுவித்தது கம்யூனிசத்தின் செங்கொடியும், செம்படையும்தானேயொழிய, ஆங்கிலேய - அமெரிக்க - பிரான்ஸ் படைகள் அல்ல. செம்படையின் வெற்றி உலகின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்தது. உலகில் காலனியாதிக்கத்திற்குள்ளிருந்த பல நாடுகள் விடுதலை அடைந்தன. உண்மையில் புதியதோர் உலகம் உருவானது.

(தமிழில்: ச.வீரமணி)

இந்துத்வா பயங்கரவாதிகளுக்கு எதிராக -உறுதியான நடவடிக்கைகளை எடுத்திடுக2007இல் நடைபெற்ற ஆஜ்மீர் ஷரீப் தர்கா வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூவரை விசாரணை செய்ததிலிருந்து இதில் இந்துத்வா தீவிரவாதக் குழுக்கள் இத்தகைய பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் காவல்துறையினர், ஆஜ்மீரிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் தேவேந்திர குப்தா என்பவரையும், மத்தியப் பிரதேசத்திலிருந்து இருவரையும் கைது செய்திருக்கின்றனர். இவர்கள் 2008இல் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குக் காரணமான ‘அபினவ் பாரத்’ என்னும் இந்து தீவிரவாத அமைப்புடனும் தொடர்புகள் வைத்திருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மிக முக்கியமான தகவல் என்னவெனில், 2007 மே மாதத்தில் ஹைதரபாத்தில் மெக்கா மசூதியில் ஒன்பது பேர் கொல்லப்படவும் 58 பேர் காயங்கள் அடையவும் காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் புலனாய்வு மூலம் தெரிய வந்திருப்பதாகும். ஆஜ்மீரில் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் காணப்பட்ட ‘சிம்’ கார்டு, ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பை மேற்கொண்ட கூட்டத்தினரைச் சேர்ந்தது என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இம்மூன்று சம்பவங்களிலும் இந்து தீவிரவாதக் குழுக்கள், முஸ்லீம்களைக் குறி வைத்திருக்கின்றன. ஆஜ்மீரிலும், ஹைதராபாத்திலும் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்கள் முஸ்லீம் மக்கள் தொழுகை நடத்திடும் இடங்களாகும், மாலேகானில் முஸ்லீம்கள் பிரார்த்தனைக்காகக் கூடுமிடத்தில் குண்டு வெடித்தது.

இம்மூன்று சம்பவங்களுடன் அதற்கு முன் நடைபெற்ற மேலும் சில சம்பவங்களையும் இணைத்துப் பார்த்திட வேண்டும். 2006இல் நாண்டட் என்னும் பகுதியில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது இரு பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள் குண்டுகள் வெடித்துக் கொல்லப்பட்டார்கள். இந்த இரு நபர்களும் பார்பானி மாவட்டத்தில் ஒரு மசூதியை குண்டு வைத்துத் தகர்த்ததற்குப் பொறுப்பானவர்களாவார்கள். முன்னதாக, 2003இல் நாண்டட் குழுவைச் சேர்ந்தவர்கள் ஜைனா மற்றும் பூர்னா என்னுமிடங்களில் தாக்குதல்கள் மேற்கொண்டார்கள். 2002இலும் போபாலில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் பட்டிருந்தது.

இவ்வனைத்து வழக்குகளிலும் காவல்துறையினரும், புலனாய்வு அமைப்புகளும் இவ்வழக்குகள் தொடர்பாக மேலும் விசாரணையை முடுக்கிட ஆழமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவுமில்லை, இதில் ஈடுபட்டிருந்த கயவர்களையும் அவர்களுக்கு இந்துத்வா அமைப்புகளுடன் இருந்த தொடர்புகளையும் வெளிக்கொணர முனையவுமில்லை. இப்போது, ‘அபினவ் பாரத்’துடன் தொடர்புடைய சதிகாரக் கும்பல்தான் மாலேகான் குண்டுவெடிப்பு நிகழ்வை நடத்தி இருக்கிறது என்பதும், மற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் உதவி இருக்கிறது என்பதும், கோவாவில் ‘சனாதன் சன்ஸ்தா’ குண்டு தயாரிப்பு சம்பவத்திற்கும் பொறுப்பு என்பதும் தெரிய வந்திருப்பதிலிருந்து, இந்துத்வா பயங்கரவாதம் என்பதும் யதார்த்த உண்மை என்பதை இனி எவரும் மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை. ‘அபினவ் பாரத்’ மற்றும் ‘சனாதன் சன்ஸ்தா’ ஆகிய இரு அமைப்புகளுமே முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பு நஞ்சை உமிழும் பயங்கரவாத இந்துத்வா அமைப்புகள் என்பதும் இப்போது வெளி உலகுக்குத் தெரிய வந்திருக்கின்றன.

இவ்வுண்மையை நாட்டில் உள்ள உளவு மற்றம் பாதுகாப்பு அமைப்புகள் அங்கீகரிக்கத் தயங்குகின்றன. பயங்கரவாதம் என்றால் அது முஸ்லீம் தீவிரவாதம்தான், அவர்கள்தான் வெளிநாடுகளின் தொடர்புடன் இதனைச் செய்வார்கள் என்று நாட்டின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் பணியாற்றுபவர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. அதனால்தான் அவர்களால் சம்ஜ்வாதா விரைவு வண்டியில் நடைபெற்ற மிகவும் கோரமான குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த புலன்விசாரணையில் சரியான முறையில் துப்புதுலக்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் குறிக்கோள் என்னவெனில், பாகிஸ்தானுக்குச் செல்லும் அவ்விரைவு வண்டியில் முழுமையாக முஸ்லீம்கள்தான் பயணம் செய்வார்கள் என்பதேயாகும். ஆயினும், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள்தான் காரணம் என்று கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மற்றோர் முக்கிய அம்சம், மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடைபெறும் வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ளவர்களுக்காக ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் வக்காலத்து வாங்குவதாகும். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பிரக்யா தாகூர் மற்றும் அவளுடைய சக எதிரிக்காக ஆர்எஸ்எஸ்-உம் விசுவ இந்து பரிசத்தும் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கின்றன. ‘‘இந்து சந்நியாசினை’’களை எப்படித் தண்டிக்கலாம் என்று குய்யோமுறையோ என்று கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கூக்கூரல் எழுப்புபவர்களில் அன்றைய பாஜக தலைவரான ராஜ்நாத் சிங்கும் சேர்ந்து கொண்டார். விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்த சாதுக்களின் கூட்டம் ஒன்றில்தான் அவர் இவ்வாறு கூக்குரல் எழுப்பினார். எல்.கே. அத்வானியும், பிரக்யா தாகூரை காவல்துறையினர் துன்புறுத்தி வருவதாகக் கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதினார்.

அபினவ் பாரத் வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதாகியுள்ள ஸ்வாமி அசிமானந்த் என்ற நபர் குஜராத்தில் டாங்ஸ் மாவட்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். இவரது கிறித்துவ எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக சங் பரிவாரம் இவரைத் தூக்கிவைத்துக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தது. இவரை மகாராஷ்ட்ரா காவல்துறையோ அல்லது ராஜஸ்தான் காவல்துறையோ இதுவரை கைது செய்ய இயலவில்லையாம்!

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கின்றன. இந்துத்வா அமைப்புகளில் பிற மதத்தினருக்கு எதிராக விஷத்தை உமிழும் சக்திகள் பயங்கரவாத வன்முறைப் பாதையில் சென்று கொண்டிருக் கின்றன.

‘‘பயங்கரவாதம்’’ என்றால் அது ‘‘முஸ்லீம் பயங்கரவாதம்’’தான் என்று பாதுகாப்பு அமைப்புகள் தாங்களாகவே ஒரு முடிவினை செய்து வைத்திருப்பதால், அவற்றால் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை. இதற்கு மெக்கா மசூதி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அது மேற்கொண்ட புலனாய்வு நல்லதோர் சான்றாகும். இச்சம்பவம் தொடர்பாக, எண்ணற்ற முஸ்லீம் இளைஞர்கள் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு, சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டனர். மேலும் இரு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றபின், ஆட்சிக்கு எதிராக யுத்தம் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, 26 முஸ்லீம் இளைஞர்கள் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஏழு மாதங்களுக்குப்பின் அவர்கள் மீது எள்ளளவும் சான்றில்லை என்று கூறி அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக் கின்றனர். ஆஜ்மீர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் கூட, காவல்துறையினர் ஒரு முஸ்லீம் நபரை சந்தேகத்தின்பேரில் கைது செய்திருப்பதாக அறிவித்தனர். இப்போது வெளிவந்துள்ள உண்மைகளிலிருந்தாவது காவல்துறையினரும் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் அணுகுமுறையைச் சரிப்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

மாலேகான், ஹைதராபாத் மற்றும் ஆஜ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்துத்வா தீவிரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் என்று பார்க்கப்பட வேண்டும். முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு நிகரானவர்கள்தான் இவர்களும். நாட்டில் நடைபெற்றுள்ள அனைத்து தாக்குதல்களுக்கு எதிராகவும் ஓர் ஒருங்கிணைந்த புலலனாய்வு அவசியமாகும். புதிதாகத் துவங்கப்பட்டுள்ள தேசியப் புலனாய்வு ஏஜன்சியிடம் (National Investigation Agency) இந்துத்வா பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ள தாக்குதல்கள் ஒப்படைக்கப்படாதது ஏன் என்பதற்கான காரணம் என்னவென்றே தெரியவில்லை. கோவா குண்டுவெடிப்பு வழக்கு தவிர, தேசியப் புலனாய்வு ஏஜன்சி வேறெந்த வழக்கையும் கையாளவில்லை. மதானி கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் கேரள மாநிலம் அலுவா என்னுமிடத்தில் 1995இல் ஒரு பேருந்தை எரித்த வழக்கினை தங்களுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகமும் தேசியப் புலனாய்வு ஏஜன்சியும் மிகவும் ஆர்வம் காட்டின. கேரள காவல்துறை இவ்வழக்கை விசாரணை செய்து இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. ஆயினும், தேசியப் புலனாய்வு ஏஜன்சி (என்ஐஏ) இதனைத் தன்வசம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ராஜஸ்தானிலும் ஆந்திராவிலும் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக என்ஐஏ, கண்டுகொள்ளவே இல்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்துத்வா பயங்கரவாதம் தொடர்பாக தெளிவான பார்வையோ உறுதியான நடவடிக்கையோ இதுவரை எடுக்க மறுத்து வந்திருக்கிறது. இப்போது ஆஜ்மீர் மற்றும் ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள உண்மைகளின் வெளிச்சத்திலிருந்தாவது இத்தகைய பயந்த மனவலிமையற்ற அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திட ஐமுகூ அரசு முன்வர வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, May 1, 2010

ஐமுகூ அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக்கொள்கைகளை முறியடித்திட-மே தினத்தில் சபதமேற்போம்: புதுதில்லியில் பிரகாஷ்காரத் பேச்சு

புதுதில்லி, மே 1-

ஐமுகூ அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைளை முறியடித்திட மே நாளில் சபதமேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

மே தினமான சனிக்கிழமையன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், மத்தியக் குழு அலுவலகத்தின் முன் கட்சி ஊழியர்கள், தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் முழக்கங்களுக்கிடையே செங்கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

‘‘மே தினம் என்பது தொழிலாளர் வர்க்கம் தன்னுடைய உரிமைகளுக்காகவும், தன் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் நடத்திய இயக்கங்கள் குறித்து ஆய்வு செய்திடவும், எதிர்கால இயக்கங்களுக்காக உறுதி ஏற்கவும் பயன்படுத்திக் கொள்ளும் நாளாகும்.

இன்றையதினம் இந்தியாவில் தொழிலாளர்களின், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராட, அனைத்துப் பெரிய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்திருப்பது நல்லதோர் அம்சமாகும். சர்வதேச பொருளாதார நெருக்கடி உலகில் பெருமளவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்துள்ளது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக இந்திய ஆட்சியாளர்கள் துரதிர்ஷ்டவசமாகத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகவுள்ள, மக்களின் வாழ்வாதாரங்களுக்குக் கேடுபயக்கக்கூடிய, தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கக்கூடிய அதே நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமைகளை பறிக்கக்கூடிய விதத்திலும், முதலாளிகள் தொழிலாளர்களை தேவைப்படும்போது எடுத்துக்கொண்டு, தேவை முடிந்ததும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், hசைந யனே கசைந யீடிடiஉல-ஐப் பயன்படுத்தக் கூடிய வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, ஆட்சியாளர்களின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், தாங்கள்இதுகாறும் கடினமாகப் போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டுப் போராட அணி திரண்டு வருகிறது. மே தினமான இன்று, ஐமுகூ அரசாங்கத்தின் தவறான கொள்கைகளுக்கு எதிராகப் போராடி அவற்றை முறியடித்திட தொழிலாளர் வர்க்கம் இன்று உறுதி எடுத்துக் கொள்கிறது.

இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

எம்.கே. பாந்தே

இந்தியத் தொழிற் சங்க மையத்தின் துணைத் தலைவர் எம்.கே. பாந்தே பேசியதாவது:
முதலாளித்துவத்தின் கடும் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் மேலும் மேலும் ஒன்றுபட்டு வருகிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொழிலாளர் வர்க்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அனைத்துவித சூழ்ச்சிகளையும் முறியடித்து முன்னேறி வருகிறது. ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள தொழிலாளர் வர்க்கமும், தங்கள் போராட்டங்களை அதிகரித்துள்ளன. நடைபெறும் போராட்டங்களில் மிகப் பெரிய அளவில் தொழிலாளர்கள் பங்கேற்பு என்பதும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஆட்சி செய்யும் ஐமுகூ அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட துடித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளதார மந்தத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள அது தயாராக இல்லை.
ஆட்சியாளர்களின் தொழிலாளர் வர்க்கக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டு வருவது அதிகரித்துள்ளது. நாட்டின் உள்ள ஐந்து பெரிய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன. வரவிருக்கும் காலங்களில் இவ்வொற்றுமையை மேலும் வலுப்படுத்தி, தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான ஆட்சியாளர்களின் உலகமய, தாராளமயத் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளை முறியடித்திட இம்மேநாளில் சபதமேற்போம்.
இவ்வாறு எம்.கே. பாந்தே கூறினார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே. வரதராசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன், இந்திய மாணவர் சங்க இணைச் செயலாளர் செல்வா முதலானோர் உடன் இருந்தார்கள்.

(ச.வீரமணி)

Prakash karat on May Day