Monday, June 29, 2009

மாவோயிஸ்டுகள்-மம்தாக்கள்-ஊடகங்கள் -- கி. வரதராசன்

மேற்கு வங்கத்தில் லால்கார் வன் முறையையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராக, விஷமப் பிரச் சாரம் பல வகைகளிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. மத்தியில் அமைச்ச ராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி, நடைபெறும் நிகழ்ச்சிகள் மார்க்சிஸ்ட்டு களும், மாவோயிஸ்ட்டுகளும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று கூறி, இந்த நூற்றாண்டின் பெரிய நகைச்சுவையை கூறியுள்ளார். ஒரு வன்முறை இயக்கம் ஆயுதங் களின் மூலமும், மிரட்டல்கள் மூலமும் சில பகுதிகளை கையில் வைத்துக் கொண்டு, இது ‘விடுதலை அடைந்த பகுதி’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் அமைச்சராக இருப்பவர், மக்களின் வாழ்வைப் பற்றி, ஒன்றுபட்ட இந்திய நாட்டைப் பற்றி, எந்தக் கவலையும் கொள்ளாமல் ‘இது வெறும் நாடகம்’ என்று தெரிவிப்பது, எந்த அளவிற்கு மோசமான, கீழ்த்தரமான அரசியல் நிலைக்கும் இவர்கள் தயார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

“மாவோயிஸ்ட்டுகள், இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு, மார்க்சிஸ்ட்டுகள் ஆட்சி யில் கடந்த முப்பதாண்டுகளில் செய்யப் பட்ட தவறுகளே காரணம், அவர்களின் ஆட்சியில் மக்கள் நலன்கள் பாதுகாக்கப் படவில்லை, நிர்வாகம் ஆட்சி செய்வ தற்குப் பதிலாக, மார்க்சிஸ்ட்டுகளே நேரடியாக ஆண்டார்கள், அந்தக் கட்சிக் காரர்கள் பெரும் பணக்காரர்களாகி விட் டார்கள், இதனால் மக்களிடமிருந்து தனி மைப்பட்டு, பிடிமானத்தை இழந்தார்கள், இதனைப் பயன்படுத்தி அந்தப் பகுதி யின் அதிகாரத்தை மாவோயிஸ்ட்டுகள் எடுத்துக் கொண்டார்கள்” இவ்வாறு ‘தினமணி’ நாளேடு இரு நாட்களாக எழு தும் தலையங்கத்தில் தீர்ப்பளித்திருக் கிறது.

முதலாவதாக, அந்தப் பகுதி மக்க ளுக்கு கடந்த முப்பதாண்டுகளில் எதுவும் செய்யப்படவில்லையா என்பதைப் பார்ப்போம். 1977இல் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி ஆட் சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடனேயே, கிராமப்புறங்களில் அதுகாறும் ஜோட்கார் எனப்படும் நிலப்பிரபுக்களின் முழுமை யான கட்டுப்பாட்டிலிருந்த கிராம மக்க ளை, அவர்களின் பிடியிலிருந்து மார்க் சிஸ்ட்டுகள் விடுவித்தார்கள். மேற்கு வங்க மாநில அர சின் நிலம் மற்றும் நிலச்சீர்திருத்தத்துறை சார்பாக வெளி யிடப்பட்டுள்ள அறிக்கை களின்படி, 2002-03 ஆம் ஆண்டுவரை ஜார்க்ரம், பின்புல் மற்றும் சல்போனி ஆகிய ஒன் றியங்களில் (இப் பகுதிகள்தான் மாவோ யிஸ்ட்டுகளின் செல்வாக்கில் தற்போது இருந்தன) சுமார் 40 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் பழங்குடி யினருக்கு மறுவிநியோ கம் செய்யப்பட்டி ருப்பதாகத் தெரிவித் துள்ளது. இந்தப் பகுதியில் 75 சதவீத மக் கள் நில விநியோகத்தால் பலன் பெற்ற வர்கள். பழங்குடியினரைப் பொறுத்த வரையில் 70 சத வீதத்திற்கும் மேல் நிலம் பெற்றவர்கள். 90 சதவீதத்திற்கும் மேல் குடியிருக்க வீட்டு மனை பெற்றவர்கள்.

இவ்வாறு கூறுவதன்மூலம், உழுவ தற்கு நிலமும், குடியிருக்க மனையும் பெற்று விட்டால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்பதல்ல நமது வாதம். ஆனால், தமிழகம் உட்பட இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி இல்லாத எந்தப் பகுதியிலும் பழங்குடியினர் உழுவதற்கு நிலமும், குடியிருக்க மனையும் பெற்றதாக வரலாறில்லை என்பதைத் ‘தினமணி’ வகையறாக்கள் மறந்துவிடக் கூடாது.

அதேபோல் அரசு நிர்வாகத்தின் அதி காரத்தை மார்க்சிஸ்ட்டுகள் எடுத்துக் கொண்டார்கள் என்பதும் உண்மையல்ல. மாறாக, நில விநியோகத்தின் தொடர்ச்சி யாக, பஞ்சாயத்துக்களுக்குக் கூடுதல் அதிகாரம் கொடுத்து, பஞ்சாயத்துக்களை நிலப் பிரபுக்களின் கைகளிலிருந்து ஏழை மக் களின் கைகளுக்கு மாற்றியது, மேற்கு வங்க மாநில அரசு. இந்தியாவில் இடது சாரிகள் சார்பில் ஆட்சி இல்லாத எந்த மாநிலத்திலும், பஞ்சாயத்துக்கள் என்பது வசதிபடைத்தவர்கள் கையிலே தான் இருக்கிறது என்பதும், ‘ஆட்சிகள் மாற லாம், காட்சிகள் மாறாது’ என்ற அடிப் படையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பஞ்சாயத்துக்களைப் பொறுத்தவரையில், அது வசதி படைத்த வர்கள் கையிலேதான் இருக்கிறது என்பதும், நாடறிந்த உண்மை. இந்தப் பின்னணியில்தான், ‘ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன’ என் கிற கிராமத்துச் சொலவடை உருவாகி, இன்றளவும் இந்தியாவில் பெரும்பகுதி யில் அது இன்னமும் உயிரோடு உலவி வருவதை அறிய முடியும்.

மார்க்சிஸ்ட்டுகள் தனிமைப்பட்டு விட்டார்கள் என்பதும் உண்மையல்ல. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ், மம்தா பானர் ஜியோடு சந்தர்ப்பவாதக் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு, நந்திகிராமத்தைப் பயன்படுத்தி மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தியம் மற்றும் பெருமுதலாளிகள் உள்ளிட்டு அனை வரும் ஒன்றுபட்டு எடுத்த முயற்சிகளின் விளைவாகத்தான் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளிடமிருந்து பல தொகுதி களை அவர்கள் கைப்பற்றினார்கள். 1970 இலிருந்து இதுவரை எந்தத் தேர்தலிலும் சந்திக்காத பின்னடைவை இடது முன் னணி இத்தேர்தலில் அடைந்தபோதி லும்கூட, பழங்குடியினருக்கு ஒதுக்கப் பட்ட அனைத்து மக்களவைத் தொகுதி களிலும் மார்க்சிஸ்ட் கட்சி பெரும்பான்மை வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக் கிறது. லால்கார் பகுதி இடம்பெறும் ஜார்க்ரம் மக் களவைத் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் 2 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1977 இலிருந்து இதுவரை இங்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் வெற்றிபெற்று வருகிறது. 2006இல் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலிலும் இப்பகுதியில் மொத் தம் உள்ள ஏழு தொகுதிகளில் 6 தொகுதி களில் மார்க்சிஸ்ட்டுகள் வென்றுள்ளனர். ஆகவே மக்களிடமிருந்து மார்க்சிஸ்ட்டு கள் தனிமைப்பட்டுவிட்டதாகக் கூறுவ தில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

மாநிலத்தில் மற்ற இடங்களில் இடது முன்னணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்த போதிலும், பழங்குடியினர் அதிகமாக உள்ள இடங்களில் இடது முன்னணியே தொடர்ந்து வலுவாக இருப்பதும், அங் குள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இடது முன்னணி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதும் திரிணாமுல் காங் கிரஸ் - மாவோயிஸ்ட் கூட்டணிக்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது. மார்க் சிஸ்ட்டுகள் வெற்றி பெற்ற இடங்களில் கலவரத்தை துவக்குவது, அதன் மூலம் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மார்க்சிஸ்ட்டுகளுக்கு ஆதரவை அளித்துவரும் பழங்குடியினர் வாழும் பகுதிகளைக் கலவரப் பூமியாக மாற்று வது என்ற இழிநோக்கத்தோடுதான் மாவோயிஸ்ட்டுகள், இதனைத் துவக்கி யிருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரசும் இதற்கு உடந்தையாக இருந்து வருகிறது. மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள போலீஸ் சித்ரவ தைகளுக்கு எதிரான மக்கள் குழு (பிஎஸ் பிஜேசி)வின் தலைவராக மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்தவர்தான் இருந்துவரு கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஜார் கண்ட் கட்சி ஆதரவோடு மாவோயிஸ்ட் டுகள் நடத்தி வந்த பிஎஸ்பிஜேசி இயக் கத்திற்கு எதிராக, பத்தாயிரம் பழங்குடி யினரைத் திரட்டி, இந்தப் பகுதியில் மாபெ ரும் கண்டனப் பேரணியை பாரத் ஜகத் மாஜி மார்வா என்னும் பழங்குடியினர் அமைப்பு சென்ற ஆண்டு டிசம்பர் 9 அன்று நடத்தியது. இவ்வாறு பேரணி நடைபெற்ற அடுத்த இரு நாட்களுக்குள் இதன் தலைவரான சுதிர் மண்டல் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப் பட்டார்.தேர்தல் பிரச்சாரத்தின்போதும், தேர்தலுக்குப் பிறகும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் 57 பேர் மாவோயிஸ்ட்டு களால் கொலை செய்யப் பட்டிருக்கிறார் கள். இவர்களில் பெரும் பகுதியினர் பழங் குடியினர் மற்றும் வெகுஜன அமைப்பு களின் முக்கிய தலைவர் களாவார்கள்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட் டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒவ் வொருவரும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாவோயிஸ்ட்டுகளுக்குக் கப்பம் கட்ட வேண்டுமாம். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இதைப்போல் இரு மடங்கு கப்பம் கட்ட வேண்டுமாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பகுதிகளில் பணிபுரிந்து வந்த டாக்டர், நர்ஸ், ஆசிரியர் மற்றும் பல அரசு ஊழியர்கள் மாவோ யிஸ்ட்டுகளால் கொலை செய்யப்பட்டுள் ளதால் இப்பகுதிகளில் அரசு நிர்வாக எந் திரமே முடக்கப்பட்டது. அதன் விளைவாக பல்வேறு நலத்திட்டங்கள் அமலாவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஒருசில கிராமங்களில் மம்தா பானர்ஜி வகையறாக்களின் ஆதரவுடன் நடைபெற்று வந்த இந்த அக்கிரமங்கள், சாதாரண மக்களைப் பெரும் அச்சத்திற்கு உள் ளாக்கியுள்ளது என்றாலும், ஒட்டுமொத் தத்தில் இந்தப் பகுதியில் இவர்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியவில் லை என்பதுதான் நடந்து முடிந்த நாடாளு மன்ற மக்களவைத் தேர்தலில் இடது முன்னணி இங்கே மாபெரும் வெற்றி பெற்றிருப்பதும், தற்போது மத்திய-மாநில அரசுகளின் பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கையையொட்டி, மாவோ யிஸ்ட்டுகள் ஓடி ஒளிந்துள்ள நிகழ்வு களும் காட்டும் உண்மைகளாகும்.

இவ்வாறு மாவோயிஸ்ட்டுகளின் பிடி யிலிருந்து மீட்கப்பட்டுள்ள அப்பாவி மக்கள் இப்போது மிகுந்த மகிழ்ச் சியுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும் பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டு மல்ல, இவர்களின் வாழ்க்கையை புனர மைக்கக் கூடிய வகையில் சிறப்பு சலு கைகளையும் மாநில அரசு அறிவித்து அமல்படுத்தத் துவங்கியுள்ளது.

சமீபத்திய தேர்தல் முடிவுகளைப் பரி சீலித்த மேற்குவங்க இடது முன்னணி, நிலச் சீர்திருத்தம், பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் போன்றவற்றில் பெரும் முன் னேற்றத்தை செய்திருந்தாலும், ஏழை மக்களில் கணிசமான பகுதியினருக்கு இன்னமும் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட வேண்டியிருக்கிறது என்பதையும், ஒரு சில நல்ல திட்டங்கள் முறையாகப் போய்ச் சேரவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டு இவற்றைச் சரிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் வேண்டும் என்று தீர்மானித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, இன்னொரு தேவையற்ற பிரச்சனையையும் லால்கார் சம்பவங் களையொட்டி கிளப்புகிறார்கள். மாவோ யிஸ்ட்டுகளை ஒடுக்குவதற்கு மார்க் சிஸ்ட்டுகளுக்கு அக்கறையில்லை. ஆகவே, அவர்களுக்குத் தடை விதிப் பதை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு பிரச்சாரத்தை ‘தினமணி’, ‘முர சொலி’ போன்ற நாளேடுகள் கூறிவரு கின்றன. இவர்களுக்கு சில உண்மைகள் தெரியாது என்று நம்பலாம். மாவோயிஸ்ட் அமைப்பு, இதுவரை மேற்கு வங்கத்தில் மட் டும்தான் தடைசெய்யப்பட வில்லை. ஏற் கனவே ஒரிசா, சத்தீஸ்கார், ஜார் கண்ட், ஆந்திரா, தமிழ்நாடு போன்று பல மாநிலங் களில் தடை விதிக்கப்பட்டு பல ஆண்டு களாகி விட்டன.

நக்சலைட் இயக்கம் முதன்முத லாகத் தோன்றியதே மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராகத்தான் என்பது மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஏராள மானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மையையும் மறந்து, ‘தின மணி’ நாளேடு, இடதுசாரிகள் ஆரம்பத் தில் நக்சலைட் இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர் என்று தன் தலையங்கத்தில் எழுதியிருக்கிறது. பொய் சொல்வதற்கு அளவே கிடையாதா?

மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் தடை இருந்தும், அங்கெல்லாம் மாவோ யிஸ்ட்டுகள் ஒடுக்கப்படவில்லை என் பது மட்டுமல்ல, ஜார்கண்ட் மாநிலத்தைப் பின்னணியாகக் கொண்டுதான் லால் கார் பகுதியில் இவர்கள் தாக்குதல்களை நடத்தி வந்தார்கள், கலவரங்களைச் செய்தார்கள் என்பதும், மம்தா பானர்ஜி வகையறாக்கள் கொடுத்த ஆதரவால் தான் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையி லான அரசாங்கத்திற்கு எதிராக வன் முறைகளைத் தூண்டி வருகிறார்கள் என் பதும்தான் உண்மை.

இதனால்தான் சில நூறு ஊழியர் களை மார்க்சிஸ்ட்டுகள் இழக்க வேண்டி வந்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட்டு கள் போராடி வருகிறார்கள். மாவோயிஸ்ட் டுகளுக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிதான் அதிகமான அள வில் ஊழியர்களை இழந்திருக்கிறது. ஆகவே மாவோயிஸ்ட் டுகளை எதிர்க் கின்ற நடவடிக்கையில் எவ்விதத் தயக்கத்திற்கும் இடமில்லை. மாறாக வெறும் தடை மட்டும் பிரச் சனையைத் தீர்த்துவிடாது, சாதாரண மக்களை வென்றெடுக்கக்கூடிய நட வடிக்கைகள், இவர்களுடைய தவறான நோக்கத்தை அம்பலப்படுத்தும் அர சியல் நடவடிக்கைகள் இணைக்கப் பட்டு இத்தகைய வன்முறையாளர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையா கும். இந்த நிலை சரியானது என்பதையே இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலுள்ள அனுபவங்களும் காட்டுகின்றன.

1968ல் உருவான நக்சலைட் இயக்கத் திடமிருந்து மார்க்சிஸ்ட் கட்சி இன்று வரை பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து, அவற்றை முறியடித்து, மேற்கு வங்க மாநி லத்தில் மாபெரும் மக்கள் இயக்கங் களைக் கட்டி, வளர்ந்திருக்கிறது. மக்கள் இயக்கங்களினால் புடம்போட்டு வளர்ந் துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போது மம்தா உள்ளிட்ட சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மாவோயிஸ்ட்டுகளு டன் இணைந்துள்ள நயவஞ்சகத்தையும் சந்தித்து, இப்போது நடைபெற்று வரும் போராட்டத்திலும் வெல்லும் என்பது திண்ணம்.

லால்காரில் நடப்பது பழங்குடி மக்களின் எழுச்சியா?-லால்காரிலிருந்து நேரடி ரிப்போர்ட் -பிரவீண் சுவாமி

லால்கார்: இம்மாத துவக்கத்தில் லால்கார் பகுதியைச் சுற்றியுள்ள காடுக ளில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள துவங்கியபோது, சல்போனி யில் இருக்கும் பழங்குடி மக்களிடம் சென்ற மாவோயிஸ்ட்டுகள், தடுப்பு அரண்களை கட்டுமாறு நிர்ப்பந்தித்தனர்.

துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களோடு கூடிய அந்த பயங்கரவாதிகளின் உத்தரவுக்கு கீழ் படிந்து கிராம மக்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர்; சாலைகளில் பெரும் பள்ளங் களை வெட்டி துண்டித்தனர். எவரும், அவர்களது உத்தரவுகளை எதிர்த்துக் கேட்கவில்லை என்பது ஆச்சரியமானது அல்ல.

ஆனாலும், கடந்த திங்களன்று, இப்படி கடும் நிர்ப்பந்தத்தின் பேரில் தடுப்பு அரண்களை அமைக்க கட்டாயப்படு த்தப்பட்ட ஏராளமான உள்ளூர் மக்களின் சார்பாக துணிச்சலுடன் போங்காராம் லோகர் என்ற கிராமவாசி பேசினார். இந்த “ஒழுங்கீனத்திற்காக” போங்காராம் லோகர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார்; அந்த கிராமத்தை விட்டே வெளியேற் றப்பட்டார்.

லால்கார் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வன்முறை, பழங்குடி மக்களின் கோப உணர்வின் வெளிப்பாடு என்று பெரும் பாலான மீடியாக்கள் எழுதுகின்றன. தங் கள் பகுதிக்கு வளர்ச்சியும், நீதியும் மறுக் கப்பட்டதை எதிர்த்தே அவர்கள் இவ் வளவு கோபத்துடன் திருப்பி அடிக்கி றார்கள் என்று எழுதுகிறார்கள். இன்னும் ஒருவர் ஒருபடி மேலேயே சென்று, கடந்த 30 ஆண்டுகளாகவே லால்கார் பகுதியில் எந்த வளர்ச்சியும் எட்டிப்பார்க்கவில்லை என்று எழுதியிருக்கிறார்.

ஆனால், போங்காராம் லோகரின் கதை - இந்தப் பகுதியில் இருக்கும் வெகு மக்களின் வாழ்க்கை - மேற்கண்ட கருத் துக்கள் வெறும் கதைகளே என்பதை உணர்த்துகின்றன.

வளர்ச்சி இல்லையா?

1977-ம் ஆண்டுக்கு செல்வோம்.

மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசு முதன்முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத் தின் லால்கார் பகுதியில் நிலப்பிரபுக் களின் பிடியில் சிக்கியிருந்த ஒட்டு மொத்த கிராமங்களையும் அவர்களிட மிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் விடுவித்தனர்.

இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைக்கு இலக்காகியுள்ள ஜார்க்ரம், பின்பூர் மற்றும் சல்போனி ஆகிய ஒன்றி யங்களில் உள்ள விவசாயிகளுக்கு 2002-03-ம் ஆண்டு வரை 16 ஆயிரத்து 280 ஹெக்டேர் நிலம் விநியோகம் செய்யப்பட் டுள்ளது. இதை மேற்கு வங்க அரசின் நிலம் மற்றும் நிலச்சீர்திருத்தத்துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் நிலச்சீர்திருத்தம் தொடர்பாக கொல்கத்தாவில் இருக்கும் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன் றான இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத் தின் மூத்த ஆராய்ச்சியாளர் அபராஜிதா பக்ஷி, ஆய்வு செய்துள்ளார். ஜார்க்ரம் ஒன்றியப் பகுதியில் நடத்திய ஆய்வில், “மொத்தமுள்ள குடும்பங்களில் 75 சதவீத குடும்பங்கள் நிலச்சீர்திருத்தத்தால் பயன டைந்தவர்கள். குறிப்பாக, பழங்குடி மக்க ளின் குடும்பங்களில், சுமார் 70 சதவீதம் குடும்பங்கள் விவசாய நிலத்தை பெற்றி ருக்கிறார்கள்; 90 சதவீதத்திற்கும் அதிக மானோர் வீட்டுமனை நிலங்களை பெற் றுள்ளனர். இது முற்றிலும் நிலச்சீர் திருத்தத்தின் விளைவாக கிடைத்த பலனே” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள நிலச்சீர்திருத்தம், நாட்டின் இதர பகு திகளில் வாழும் பழங்குடி மக்களை விட இப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் சுதந்திரத்தையும், வாழ்வுரிமையையும், சுய பாதுகாப்பையும் அதிகரித்துள்ளது என் பதே உண்மை.

லால்கார் பகுதி, மாவோ யிஸ்ட்டுக ளால் “விடுதலை” செய்யப்பட் டிருப்ப தாக, நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் எழுதி வியாபாரம் செய்து கொண்டிருக் கின்றன. ஆனால் அங்கு, பழங்குடி மக்க ளின் வாழ்நிலை தற்போது கடும் சிக்க லுக்கு உள்ளாகியுள்ளது. அன்றாடம் வனப் பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மூலம் இப்பகுதி முழுவதும் இருக்கும் பழங்குடி மக்களுக்கு வருமா னம் கிடைத்து வந்தது. அந்த வருமானம் தற்போது முற்றிலும் நின்று போயுள்ளது. இந்த மக்களின் வாழ்க்கையை சீராக வைத்திருந்த அரசின் திட்டங்கள், தற் போது செயல்படுத்த முடியாததால், அவர் களின் வாழ்நிலை மோசமான முறையில் சீர்குலைந்துள்ளது.

பூமிதன்சோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த மானேக் சிங், “கடந்த நவம்பர் மாதத்திலிருந்து, காட்டுப் பகுதிக்குள் நுழைந்து நாங்கள் வழக்கமாக செய்யும் வேலைகளை செய்யவிடாமல், மாவோ யிஸ்ட்டுகள் தடுத்து விட்டார்கள். தினந்தோறும் காடுகளில் இலைகளை சேகரித்து சிறிய சிறிய இலை தட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நாங் கள் உற்பத்தி செய்வது வழக்கம். ஒவ் வொரு நாளும் இதற்காக வனத்துறை ஒரு தொழிலாளிக்கு ரூ.70 கூலியாக கொடுத்து வந்தது. தற்போது இது அனைத்தும் கெட் டுப் போய்விட்டது” என்று வேதனை யுடன் தெரிவிக்கிறார்.

கொள்ளையும் தாக்குதலும்

மாவோயிஸ்ட்டுகள் வழிப்பறியிலும், கொள்ளையிலும் ஈடுபட்டதால் அதை தாங்க முடியாமல் லால்கார் பகுதியிலி ருந்து அரசு ஊழியர்களும் வெளியேறியுள் ளனர். இப்பகுதியில் உள்ள கிராமப்புற சத்துணவு மையங்களில் வேலை செய்யும் அப்பாவி அங்கன்வாடி ஊழியர்களிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கொடுக்க வேண்டு மென்று மாவோயிஸ்ட்டுகள் மிரட்டியுள் ளனர்; பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்க ளும் இதே போல இரண்டு மடங்கு பணம் கொடுக்க வேண்டுமென்று உள்ளூர் மாவோயிஸ்ட்டுகள் மிரட்டியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் அரசு மருத் துவர் ஹோனிரன் முர்மு மற்றும் அவரது மருத்துவமனையில் பணியாற்றும் செவி லிப் பெண் பாரதி மஜ்கி ஆகியோர் மிகக் கொடூரமான முறையில் காரில் குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னர், இப்பகுதியில் சுகாதாரப் பணி களும் முற்றிலும் சீர்குலைந்துள்ளன.

மக்கள் ஆதரவு யாருக்கு?

இது மட்டுமின்றி, லால்கார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக மக்கள் பெருமளவில் திரண்டு மாபெ ரும் கிளர்ச்சியில் ஈடுபடுவதாக ஊதப் படும் செய்திகளை, அப்பகுதியின் தேர்தல் புள்ளி விபரங்கள் முற்றிலும் நிராகரிக் கின்றன.

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், லால்கார் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய ஜார்க்ரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் 6 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்ரம் மக்கள வைத் தொகுதியில் கிழக்கு கார்பேடா, மேற்கு கார்பேடா (எஸ்.சி.), சல்போனி, நயாக்ரம் (எஸ்.டி.), கோபிபல்லவபூர் மற்றும் ஜார்க்ரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது மட்டுமின்றி ஜார்க்ரம் மக்களவைத் தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே வெற்றி பெற்றுள் ளது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் 1977-ம் ஆண்டு முதல் ஜார்க்ரம் மக்களவைத் தொகுதி இன்றைக்கு வரைக் கும் 32 ஆண்டுகளாக தொடர்ந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசமே உள்ளது.

காவல்துறை சோதனைகள்

கடந்த ஆண்டு நவம்பர் 2-ம்தேதி சல்போனியில் நடைபெற்ற இரும்பு எஃகு தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார் யாவை படுகொலை செய்ய குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, லால்கார் பகுதி முழுவதும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனைகளின் போது, காவல்துறையினருக்கும் மாவோ யிஸ்ட் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது; இதில் பலர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, நவம்பர் 2-ம்தேதி நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் முதன்மை குற்றவாளி என்று அடையாளம் காணப்பட்டவரின் உடன் பிறந்த சகோதரரும், மாவோயிஸ்ட்டுகளின் தீவிர ஆதரவாளருமான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாத்ரதார் மகதோ, “காவல்துறை அராஜகங்களுக்கு எதிரான மக்கள் குழு” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அப்பகுதி முழுவதும் சாலைகளை மறித்தனர். காவல்துறையினரை தாக்கினர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை குறிவைத்து தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர்.

கடந்த மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு சற்று முன்பு, தேர்தல் பணிகளுக்கு கூட காவல்துறையை நுழையவிடக்கூடாது என்று போரோ பெலியா, சோட்டோபெலியா, தலீல்பூர் சவுக் மற்றும் காஸ் ஜங்கிள் ஆகிய கிரா மங்களில் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கி முனையில் “போராட்டம்” நடத்தினர்.

மாவோயிஸ்ட்டுகள் மற்றும் அவர்களது ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட “காவல்துறை அராஜகங்களுக்கு எதிரான மக்கள் குழு” ஆகியவற்றுக்கு ஆதரவாக அப்பகுதி பழங்குடி மக்கள் அனைவரும் அணி திரண்டு விட்டார்கள் என்று கூறப்படுவது உண்மையானால், அதற்கு அடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த மாநிலத் திலேயே பெரும் வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றிருக்க முடியாது.

(பழங்குடி மக்கள் தொகுதியான) ஜார்க்ரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிரான அலை ஏதும் இல்லை. தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட புலின் பிகாரி பாஸ்கி, 5 லட்சத்து 45 ஆயிரத்து 231 வாக்குகள் பெற்றார். இது, அவரை எதிர்த்து போட்டியிட்ட அம்ரித் ஹன்ஸ்தா பெற்ற 2 லட்சத்து 52 ஆயிரத்து 886 வாக்குகளை விட மிகப்பெரும் வித்தியாசம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த வெற்றியின் போது, சிபிஎம் வேட்பாளர் பாஸ்கி, லால்கார் கிராமம் உள்ளடங்கிய பின்பூர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

அச்சத்தின் பிடியில்...

அப்படியானால், மாவோயிஸ்ட்டுகள் எப்படி இவ்வளவு “செல்வாக்கை” பெற் றார்கள்?

இந்த கேள்விக்கு மக்களவைத் தேர்த லின் போதே இத்தொகுதியில் போட்டி யிட்ட ஜார்க்கண்ட் கட்சி வேட்பாளர் சுனிபால ஹன்ஸ்தா ஒரு பேட்டியில் எளிமையான பதில் ஒன்றை அளித்தார். அது: “மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.”

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.

கடந்த ஆண்டு மேற்கு வங்க அரசுக்கு எதிராக மேற்படி “காவல்துறை அராஜகங் களுக்கு எதிரான மக்கள் குழு” மக்களை திரட்ட முயன்றபோது, மாவோயிஸ்ட்டு களின் ஆதரவோடு இவ்வமைப்பினர் மேற்கொண்டு வரும் வன்முறையை எதிர்த்து பாரத் ஜகத் மஜ்ஹி மார்வா என்ற பாரம்பரிய பழங்குடி அமைப்பு கடந்த டிசம்பர் 9-ம்தேதி பேல்பகாரியில் ஒரு பேரணி நடத்தியது. இந்தப் பேரணியை நடத்திய அமைப்பின் தலைவர்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான வர்கள்தான்.

எனினும், தங்களை எதிர்த்து பேரணி நடத்தினார்கள் என்ற ஒரே காரணத் திற்காக, அதற்கு தலைமை தாங்கிய பழங் குடி தலைவர் சுதிர் மந்தல், அடுத்த 48 மணி நேரத்தில் மாவோயிஸ்ட்டுகளின் மிகக் கொடூரமாக துப்பாக்கிக் குண்டுக ளுக்கு இரையானார்.

(ஜூன் 26, இந்து நாளேட்டிலிருந்து)

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

Sunday, June 21, 2009

தோழர் இஎம்எஸ்: ஓர் அபூர்வமான கம்யூனிஸ்ட் - பிரகாஷ் காரத்
2009 ஜூன் 13, தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் பிறந்த நாள் நூற்றாண்டாகும். அவரது வாழ்வும் பணியும் நாட்டின் கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் அழிக்கமுடியாத தடத்தை விட்டுச் சென்றுள்ளது. 1909இல் பிறந்த தோழர் இ.எம்.எஸ்-இன் குறிப்பிடத் தக்க வாழ்க்கை- நாட்டில் இருபதாம் நூற் றாண்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் இயக்கங்களுடன் பின்னிப்பிணைந்ததாகும்.

மிகவும் சனாதனமான நம்பூதிரிக் குடும் பத்தில் பிறந்த தோழர் இ.எம்.எஸ். தான் இளம் மாணவனாக இருந்த காலத்திலேயே, சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லும் ஒளிவிளக்காக மாறியிருந்தார். மாணவனாக இருந்த காலத்திலேயே, மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, சிறை சென்றார். 1934-ல் அகில இந்திய அள வில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியைக் கட்டிய நிறுவனத் தலைவர்களில் இஎம்எஸ்-ஸூம் ஒருவர். கேரளாவின் மலபார் பகுதியில் நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத் தியத் திற்கு எதிராக விவசாய இயக்கத்தைக் கட்டு வதில் பிரதான பங்கினை வகித்தார். 1936 வாக்கில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் தார். கேரளாவின் முதல் குழுவில் இருந்த ஐவரில் அவரும் ஒருவராவார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவராக மாறியிருந்த இ.எம்.எஸ்.-ஸின் வியத்தகு பயணம் இவ்வாறு தொடங்கியது. தோழர் இ.எம்.எஸ். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அளித்திட்ட மாபெரும் பங்களிப்பினையும், மார்க்ஸிய சிந்தனையாள ராக அவர் அளித்திட்ட படைப்புகளையும் ஒரு சிறு கட்டுரையில் முழுமையாகக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. ஆயினும் அவரது புரட்சிகர வாழ்க்கையில், குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய விதத்தில் ஐந்து தனிச் சிறப்புக்குரிய அம்சங்கள் இருந்தன.

முதலாவதாக, மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் மிகவும் செயலூக்க முறையில் இணைத்திட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் மத்தியில் தோழர் இ.எம்.எஸ். ஒப்புயர்வற்ற நிலையில் இருந்தார். அவரது அபூர்வமான அறிவுத்திறன், மார்க்சியத்தின் சாரத்தைக் கிரகித்துக் கொள்வதிலும், அதனை ஆக்கப்பூர்வமான முறையில் இந்திய நிலை மைகளுக்கேற்ப பிரயோகிப்பதிலும் அவருக்கு அசாத்திய திறமையை அளித்திருந்தது. இத் தகைய அசாதாரணமான அவரது திறமை தான், தோழர் இ.எம்.எஸ்.-ஐ, கேரளாவில் இருந்த சமூக- பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வு செய்து, அங்கிருந்து வந்த நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பதற்கான சித்தாந்த அடித்தளத்தை வகுத்தளித்திட அவருக்கு உதவியது. தத்துவத்தை நடை முறைப்படுத்தும் ஈடிணையற்ற வல்லமை யையும் அவர் பெற்றிருந்தார். மலபார் பகுதியிலிருந்த பிராமணர்-நாயர்-நிலப்பிரபுத்துவ முறை குறித்து அவர் அளித்திட்ட ஆய்வுக் கட்டுரையானது, அப்பகுதியில் விவசாய இயக்கத்தைக் கட்டுவதற்கான செய்முறை வழிகாட்டியாக அமைந்தது. விவசாய உறவு கள் குறித்தும், விவசாயப் புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கம் குறித்தும் அவர் அளித்திட்ட விளக்கங்கள் நிலச்சீர்திருத்தத்திற்கான அடிப்படைகளாக அமைந்தன. பின்னர் 1957இல் அமைந்திட்ட முதலாவது கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் அவர் முதல்வராக இருந்தபோது, அவற்றை நடைமுறைப்படுத்தினார்.

சமூகம் மற்றும் வரலாறு குறித்த மார்க்சிய ஆய்வினை எப்படி மேற்கொள்வது என்பது குறித்தும், இ.எம்.எஸ். மலையாளிகள் மற்றும் கேரள சமூகத்தின் மொழிவாரி தேசிய வடிவம் குறித்த தன்னுடைய ஆய்வில் தெளிவுபடுத்தி இருக்கிறார். ‘ஐக்கிய கேரளா’ மற்றும் “கேரளாவில் தேசிய இனப்பிரச்சனை” குறித்த ஆய்வு என்னும் நூல்கள், நாடு சுதந்திரம் அடைந்தபின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான அடிப்படை நூல்களாக மாறின. இந்திய அரசியல் மற்றும் சமூகத்தின் அனைத்து முக்கிய பிரச்சனைகளிலும் இ.எம்.எஸ். தன்னுடைய கேந்திரமான பங்க ளிப்பு மூலம் தீர்வு காண வழிவகுத்திருக் கிறார். இதற்கு மார்க்சியத் தத்துவத்தின் மீது அவருக்கிருந்த உறுதியான அடித்தளமே முக்கிய காரணமாகும். அவர் வரலாறு, சமூகம், அரசியல், கலாச்சாரம் அனைத்தையும் மார்க் சிய கண்ணோட்டத்தில் மிகவும் துல்லிய மான முறையில் ஆய்வு செய்திருக்கிறார். இவ்வாறு இவர் மேற்கொண்ட ஆய்வுகளா னது இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியில் மட் டுமல்லாது, சமூக அறிவியலாளர்கள் அனை வரின் மத்தியிலுமே செல்வாக்கு செலுத்தி யது. முந்தைய காலனியாதிக்க நாடுகளில் அல்லது வளர்முக நாடுகளில் மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதில் இ.எம்.எஸ். அளவிற்குப் பங் களிப்பினைச் செய்திட்ட கம்யூனிஸ்ட் தலை வர் வேறெவரும் இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல.

தோழர் இ.எம்.எஸ். ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் என்ற முறையில், உலகத்தில் சோசலிசம் மற்றும் சர்வதேசியத்திற்கான போராட்டத்தில் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டார். ஆயினும், சர்வ தேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிரச் சனைகள், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலைத்தான் கடைப் பிடிக்க வேண்டும் என்று வந்த நிர்ப்பந்தத்தை தோழர் இ.எம்.எஸ்-ஸூம், அவர் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இ.எம்.எஸ்-ஸூம் மற்ற தோழர்களும் மார்க்சிச-லெனினிசத் தின் அடிப்படையில் இந்தியப் புரட்சிக்கான போர்த்தந்திரத்தையும் அதற்கான உத்திகளையும் (strategy and tactics) தங்கள் சொந்த அனுபவத்தின் மூலமாகவே வகுத்திட்டார்கள். இதில் இ.எம்.எஸ். முக்கிய பங்களிப்பினைச் செய்திட்டார்.

தோழர் இ.எம்.எஸ். செய்திட்ட பங்களிப்பில் இரண்டாவது முக்கிய அம்சம், நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றங்களில் கம்யூனிஸ்ட் கட்சி பங்குபெறுவது தொடர்பாக மேற் கொள்ளவேண்டிய சரியான கருத்து மற்றும் அணுகுமுறையைத் தோற்றுவித்ததாகும். அவரே, 1957இல் கேரளாவில் அமைந்திட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை யில் முதல்வராகப் பங்கேற்று, அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்பதன் மூலம் மக்களுக்கு என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை வெறும் 28 மாதங்களே ஆட்சியிலிருந்த போதிலும், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், ஜனநாயக முறை யில் அதிகாரங்களைப் பரவலாக்குதல், மக்கள் நலன்சார்ந்த கொள்கைகளை நிறைவேற்று தல் முதலானவற்றில் புதிய பாதையை வகுத் தது. இ.எம்.எஸ். ஜனநாயக முறையில் அதி கார பரவலாக்கும் கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். இ.எம்.எஸ். ஒரு கட்சித் தலைவர் என்ற முறையிலும், ஒரு நிர்வாகி என்ற முறையிலும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், மத்தியிலிருந்து மாநி லங்களுக்கு அதிகாரங்களைப் பெறுவதிலும், மாநில அரசின் அதிகாரங்களை, உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொண்டு செல்வதிலும் கொள்கைகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்துவதிலும் உறுதியாக இருந்தார். மத்திய-மாநில அரசுகளின் கொள்கைகளை உருவாக்குவதிலும், அவற்றை நிறைவேற்றுவ திலும் இடதுசாரிக் கண்ணோட்டத்தை ஏற்ப டுத்தியதில் முதன்மை ஸ்தானத்தில் இருந்தவர் தோழர் இ.எம்.எஸ். அதே போன்று அர சாங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்கும் சமயத்தில் நாடாளுமன்ற வாதம் மற்றும் திருத் தல்வாதத்திற்கும் இடம் கொடுக்காது, சரியான நிலைபாட்டை வகுத்துத் தந்ததிலும் இ.எம். எஸ்.ஸூக்கு முக்கிய பங்கு உண்டு. வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இ.எம். எஸ்., இதனைப் பார்த்தார். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பது தொழிலாளர் வர்க்க இயக்கத்தை வலுப் படுத்துவதற்கு உதவக்கூடிய வகையில் கூடுதல் நாடாளுமன்ற பணிகளுடன் இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் தெளி வாக முன்வைத்தார்.

சாதி மற்றும் வர்க்க உறவுகள் தொடர்பாக மார்க்சியப் புரிந்துணர்வு தொடர்பாக, இ.எம். எஸ். அளித்திட்ட பங்களிப்பு மூன்றாவது முக் கிய அம்சமாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் கேரள சமூகத்தில் நில விய சாதியக் கட்டமைப்பைப் பகுத்தாய்வு செய்தபின், இ.எம்.எஸ். சாதியப் பிரிவினைக் குள்ளிருந்த வர்க்க உள்ளடக்கத்தை வரை யறுத்து, அதனை கம்யூனிச கண்ணோட்டத்திற்கு வளர்த்தெடுத்ததோடு, தாழ்த்தப் பட்ட சாதியினராகக் கருதப்பட்டவர்களின் ஜனநாயக அபிலாசைகளைக் கூர்மைப் படுத்தி, சாதிய எதிர்ப்பு போராட்டங்களை உரு வாக்கி, அவற்றை தொழிலாளர் வர்க்க லட்சி யத்தை நோக்கி விரிவாக்கியதில், இ.எம். எஸ்.சின் பங்கு மகத்தானதாகும்.

முந்தையத் தலைமுறையிலிருந்த பல கம்யூனிஸ்ட்டுகளைப் போல், இ.எம்.எஸ். சாதிய அமைப்புமுறையின் கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவில்லை. மாறாக அவற்றைத் தொழிலாளர் வர்க்க ஒற் றுமையை மேலும் விரிவாகக் கட்டுவதற்கும், சமூக மாற்றத்திற்கான உந்துசக்தியாக அத னை மாற்றுவதற்கும் பயன்படுத்திக் கொண் டார். சமூகத்தில் நிலவிய அனைத்து ஒடுக்கு முறைகளையும் துல்லியமாக ஆய்வு செய்து, சமூக மாற்றத்திற்கான கொள்கைகளை வகுத்துத் தந்தார். அதே அளவிற்கு சமூகத்தில் இருந்து வரும் கலாச்சாரத்தின்மீதும் சரியான ஆய்வினை மேற்கொண்டு, ஆளும் வர்க்கத் தின் கலாச்சாரத்திற்கு எதிராக, ஒரு மாற்றுக் கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவவும் வழி கண்டார்.

சமூக சீர்திருத்தத்திற்கான போராட்டங்களைத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே, இ.எம்.எஸ். பெண் விடுதலையிலும் ஆழமான முறையில் உறுதி கொண்டிருந்தார். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சமயத்தில், ஆண்-பெண் சமத்துவம் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக, இ.எம்.எஸ். முக்கிய பங்களிப்பினைச் செய்திருக்கிறார்.

இ.எம்.எஸ்.இன் தனித்துவம் வாய்ந்த நான்காவது அம்சம், கட்சியின் சிந்தனைகளையும் அரசியலையும் மக்கள் மத்தியில் விதைப்பதில் அவரது ஈடிணையற்ற பங் களிப்பாகும். எண்ணற்ற கட்டுரைகள், ஆய்வு கள், விமர்சனங்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் மக்கள் மத்தியில் சென்றவர் மாமேதை இ.எம். எஸ். அவர் அளவிற்கு வேறெந்தத் தலைவ ரும் பங்களிப்பினைச் செய்ததாகக் கூற முடி யாது. கேரளாவில், நாள்தோறும் செய்தித்தா ளின் மூலமாக தனக்கும் மக்களுக்கும் இடை யே மகத்தானதொரு பிடிப்பினை இ.எம்.எஸ். ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

கட்சியின் எண்ணற்ற வெளியீடுகளுக்கு, இ.எம்.எஸ். ஆசிரியராக இருந்தார். 1935இல் கேரள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான ‘பிரபாதம்’ ஏட்டில் தொடங்கி, அவர் வாழ்நாளின் இறுதியாண்டுகளில் ‘தேசாபிமானி’யின் முதன்மை ஆசிரியராக மீண்டும் மாறுவது வரை அது தொடர்ந்தது. இடைப்பட்ட காலத்தில், ஒன்றுபட்ட கட்சி யின் ஏடுகள் பலவற்றிற்கும், பின்னர் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ மற்றும் ‘தி மார்க்சிஸ்ட்’ ஏடுக ளுக்கும் அவர் ஆசிரியராக இருந்தார். மலை யாளத்தில் வெளியாகியுள்ள இ.எம்.எஸ்.-இன் தொகுப்பு நூல்கள் நூற்றுக்கும் மேலான தொகுதிகள் வெளிவந் திருக்கின்றன. இவரது எழுத்துக்கள் நாட்டி லும் நாட்டு மக்கள் மத்தியிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இ.எம்.எஸ்.-இன் ஒப்புயர்வான ஐந்தா வது அம்சம், அவர் தனித்துவம் வாய்ந்த ஒரு கம்யூனிஸ்ட் ஆவார். அவர் மாபெரும் அறிவு ஜீவியாக இருந்தபோதிலும்கூட, மிகவும் தன்னடக்கத்துடன் இருந்தார். எவ்விதத் திலும் தன்னகங்காரமோ தற்பெருமையோ அவரிடம் தலைதூக்கியது கிடையாது. மக்கள் மீது அவர் வைத்திருந்த அளப்பரிய அன்பும் பாசமும் எப்போதுமே குறைந்ததில்லை. அவ ருக்கு பாரம்பரியமாகக் கிடைத்திட்ட சொத் துக்களை முழுமையாகக் கட்சிக்குக் கொடுத் துவிட்டு, மிக மிக எளிய முறையில் வாழ்நாள் முழுவதும் ஞானிபோல் வாழ்ந்தார். தலைவர் என்ற முறையில் ஜனநாயக முறையில் எப் படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு முன் னுதாரணமாகத் திகழ்ந்தார். மக்களின் எதிர் பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல் கட்சி ஊழியர் கள் வாழ்ந்திடவும் முன்னுதாரணமாக விளங்கினார்.

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக் கும் இடதுசாரி இயக்கத்தினருக்கும் தோழர் இ.எம்.எஸ்.இன் தத்துவார்த்த மற்றும் நடை முறைப் பணிகள் நமக்கு அவர் விட்டுச் சென் றுள்ள மகத்தான சொத்துக்களாகும். அதாவது அவர் விட்டுச்சென்றுள்ள சொத்துக்களின் சாரம் என்னவெனில், மார்க்சியத் தத்துவத் தை ஆழமாகக் கற்போம், அதனை இந்திய சமூகத்தின் நிலைமைகளுக்கு ஏற்ற வகை யில், சரியான முறையில் பிரயோகிப்போம், சோசலிச லட்சியத்திற்காக இறுதிவரை உறுதியுடன் போராடுவோம்.

தமிழில்: ச.வீரமணி

Sunday, June 7, 2009

இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ இந்திய அரசு முக்கிய பங்காற்ற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 7-

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவும், தமிழ் மக்கள் சம உரிமையுடன் அமைதியாக வாழவும், அவர்களுக்கு புதுவாழ்வு ஏற்படவும் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் பங்காற்றிட வேண்டும். குறிப்பாக இந்திய அரசு முக்கிய பங்காற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் சென்னையில் ஜூன் 5-6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், மாநிலச் செயலாளர் என். வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஆர். உமாநாத், டி.கே. ரங்கராஜன் எம்.பி., ஏ.கே. பத்மநாபன், ஜி. ராமகிருஷ்ணன், உ.வாசுகி, பாப்பா உமாநாத் மற்றும் மாநில செயற்குழு - மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

"இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நீடித்து தொடர்ந்து நடந்த ஆயுத மோதலில், எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் மற்றும் அவ்வியக்கத்தை சார்ந்தவர்கள், அப்பாவித் தமிழ்மக்கள் உள்ளிட்டு பல்லாயிரக்கணக்கானோர் துயரமான முடிவுக்கும் கடுமையான பாதிப்புகளுக்கும் உள்ளாக நேரிட்டுள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக சொல்லொணா துயர வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளை ஒடுக்குவது என்ற பெயரால் இலங்கை அரசு தொடுத்த தாக்குதலில் அப்பாவி தமிழ் மக்கள் பல்லாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடைசி கட்டத் தாக்குதலில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இத்தகைய மனித உரிமைகளை மீறியத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, விசாரணைக்கும் உட்படுத்திட வேண்டும்.

ராணுவ நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட் டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும், துயர் துடைப்பு மற்றும் மறுவாழ்வுக் கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது, இலங்கை அரசின் அவசர - அவசியக் கட மையாகும். மேலும், மோதலுக்கு காரணமான இனப்பிரச்னைக்கு அதிகார பகிர்வு, சுயாட்சி உரிமை அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை உடனடியாக துவக்குவதும் இலங்கை அரசின் கடமையா கும். இதனை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ள இலங்கை அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு வலி யுறுத்துகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, இலங்கையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை இலங்கை அரசு உடனடியாக கூட்ட வேண்டும். இலங்கையில் தமிழ்மக்கள் அமைதியாக வாழவும், அவர்களுக்கு புது வாழ்வு ஏற்படவும் உத்தரவாதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இலங்கைத் தமிழ்மக்களின் கோரிக் கைகளை இலங்கை அரசு செவிமடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்பதை கணக்கில் கொண்டு, சிங்கள மக்களுக்கு இணையாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக் கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கச் செய்வது உறுதிப் படுத்தப்பட வேண்டும்.

நிவாரண முகாம்களில் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு குடிநீர், உணவு, உடை, சுகாதாரம், மருத் துவம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைக்காத நிலையும், காயமடைந்தோர், நோயுற்றோருக்கு உரிய சிகிச்சை கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு போதிய உணவும், தேவைப்படும் அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சையையும் முன்னுரிமை அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்தப்பணிகளை ஐ.நா. அமைப்பின் நேரடி கண்காணிப்புடன் செய்வதை உறுதிப்படுத்தப்படவேண்டும்.

தற்போது வீடுகளை, உடைமைகளை இழந்து முகாம்களில் உள்ள தமிழ்மக்களுக்கு மறு வாழ்வுக்கான நிவாரணம் அளிப்பதோடு, அவர்களின் சொந்த வாழ்விடங்களிலேயே வீடுகள் கட்டித்தருவதோடு உடனடி வருமானத்திற்கான வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழர் பகுதிகளில் உள்ள கெடுபிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். விசாரணை யின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சிறப்பு பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்களமும், தமிழும் சம உரிமையுடன் உணர்வுப் பூர்வமாகவும், உண்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும். இலங்கை அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள அரசுப் பணிகளில் தமிழ்மக்களுக்கு சம உரிமையும், உரிய பிரதிநிதித் துவமும் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நேர்மையான முறையில் அதிகாரப்பரவல் குறித்த செயல்திட்டத்தை அனைத்து தமிழர்கள் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமலாக்கிட வேண்டும்.

மேற்கண்ட வகையில் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண இலங்கை அரசும், இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங் களும், தமிழ் மக்களின் தலைவர் களும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கையில் சிங்கள - தமிழ் மக்களிடையே இணக்கமான இயல்பு வாழ்க்கைத் திரும்பிடும் வகையில் இலங்கைப் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவும், தமிழ் மக்கள் சம உரிமையுடன் அமைதியாக வாழவும் - அவர்களுக்கு புதுவாழ்வு ஏற்படவும் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் பங்காற்றிட வேண்டும். குறிப்பாக, இந்திய அரசு முக்கிய பங்காற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வலியுறுத்துகிறது."

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் உரை:தின்பண்டத்தின் ருசி சாப்பிடும்போது தெரிந்துவிடும்
திர்பார்த்ததைப் போலவே, பதினைந்தாவது மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து, நடைபெற்றுள்ள நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர், ஐமுகூ அரசாங்கம் வரவிருக்கும் காலங்களில் செய்ய இருப்பதாகக் கூறியிருக்கும் படாடோபமான உறுதிமொழிகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இப்போது கூறப்பட்டிருக்கும் திட்டங்களில் பல, முந்தைய அரசாங்கத்தால் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டவைகள்தான். இப்போது ஆட்சிபீடத்தில் ஏறி இருக்கும் அரசாங்கம் சென்ற ஐந்தாண்டு காலத்தில் தாங்கள் கூறியிருந்த உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றைச் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்வது போலவே குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது. சென்ற அரசு டமாரம் அடித்துக்கொள்ளும் தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம், பாரத் நிர்மான் போன்ற திட்டங்கள் தங்கள் இலக்கினை எய்திடவில்லை என்பதிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கப்பட வேண்டும். ஆனால் 48 நாட்கள்தான் வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் வேலைக்காகப் பதிவு செய்துள்ள 10 கோடி பேரில் சுமார் 50 சதவீதத்தினருக்குத்தான் வேலை அளித்திருக்கிறார்கள். அதேபோன்று, கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதற்கான இலக்கிலும் 27 சதவீத அளவிற்குத்தான் வேலைகள் நடந்திருக்கின்றன. விவசாயத் துறையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது தொடர்பாக குடியரசுத் தலைவர் பெரிய அளவிற்குப் பேசியிருக்கிறார். ஆயினும் பாசன விரிவாக்கத் திட்ட இலக்கில் 56 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உலகப் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகள் நம் நாட்டைப் பாதிக்கவில்லை என்று தொடர்ந்து அரசு கூறிவருகிறது. குடியரசுத் தலைவர் தன் உரையில், ‘‘உலகப் பொருளாதார மந்தத்தால் உலகில் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் திருப்திகரமாக உள்ளது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு, நாம் இப்பகுதியில் பலமுறை சொல்லிவந்துள்ளபடி, முந்தைய அரசாங்கம் கட்டுப்பாடற்ற முறையில் நிதித் தாராளமய நடவடிக்கைகளில் ஈடுபட்டதை, இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தியதுதான் காரணமாகும். குறிப்பாக அரசு மேற்கொள்ளவிருந்த வங்கிச் சீர்திருத்தம், ‘‘ஓய்வூதியத் துறையைத் தனியாரிடம் தாரைவார்த்தல்’’ முதலானவற்றை இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தி வைத்திருந்தன. அவ்வாறு தடுக்காமல் விட்டிருந்தால் இன்றைய தினம் கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் எதிர்கால வாழ்விற்காக சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் காணாமல் போய் அவர்கள் வாழ்வே சூறையாடப்பட்டிருந்திருக்கும்.

குடியரசுத் தலைவர் தன் உரையில் அரசாங்கம் ‘‘சமூகத்தின் உள்ளீடான வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் உள்ளீடான வளர்ச்சி (“inclusive growth in society and inclusive growth in economy)’’ ஆகியவற்றில் உறுதிபூண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த இலக்கை அரசாங்கம் 2004இலேயே நிர்ணயித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் இதுதொடர்பாக அரசு கண்ட முன்னேற்றம் என்ன? உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவுகள் எத்தகைய பாதிப்புகளை நம்மீது சுமத்தியிருந்தாலும், அரசு கடைப்பிடித்த தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளானது இரு விதமான இந்தியர்களை உருவாக்கி இருக்கிறது என்பது உண்மை. ஒருசில ‘ஒளிர்கின்ற’ இந்தியர்களையும், (‘SHINING’ Indians) மீதம் கோடானுகோடி ‘உழல்கின்ற’ இந்தியர்களையும் (‘Suffering’ Indians) இது உருவாக்கி இருக்கிறது. அரசாங்கத்தின் சொந்த மதிப்பீட்டின்படியே, நாட்டு மக்களில் 78 சதவீதத்தினர் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான வருவாயிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அதே சமயத்தில். நாட்டில் 36 ‘டாலர் பில்லியனர்கள்’ உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் சொத்து மதிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)யில் 25 சதவீதமாகும். ஒவ்வொரு நாளும் மருந்து இருந்தால் தடுக்கப்படக்கூடிய நீரினால் உண்டாகும் நோய்களுக்கு மருந்து உட்கொள்ளாமல் ஆயிரம் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன. நம் நாட்டின் 56 சதவீதம் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு ஊசிகள் போடப்படுவதில்லை. 40 சதவீதக் குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. 70 சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக ரத்தச்சோகையுடன் காணப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசின் தேசிய குடும்ப சுகாதார சர்வேயிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். நம் நாட்டில் வாழும் மக்களில் 70 சதவீதத்தினருக்கு சுகாதாரமான கழிப்பிடங்கள் கிடையாது. மூன்றில் இரு பகுதியினருக்குக் சுத்தமான குடிதண்ணீர் கிடையாது. நம் நாட்டின் கர்ப்பிணிப் பெண்களில் மூன்றில் இரு பங்கினர் ரத்தச் சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவே நம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நிலை. வாய்ச்சொல் உறுதிமொழிகள் எதுவும் இத்தகைய மிக பரிதாபகரமான உண்மையான நாட்டின் நிலைமையை மாற்றிவிட முடியாது. மாறாக, இதற்கு பொது முதலீட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்துவது தேவை. ஆனால் இதனைச் செய்ய அரசு தயாராக இல்லை என்பதையே கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன.

ஆயினும், நிலைமையைச் சமாளிப்பதற்கு, வள ஆதாரங்களைப் பெருக்குவதற்கு என்ன செய்ய இருப்பதாக, குடியரசுத் தலைவர் அறிவித்திருக்கிறார்? பொதுத்துறை நிறுவனங்களை மிகப் பெரிய அளவிற்குத் தனியாரிடம் தாரைவார்க்கப் போகிறோம் என்று கூறியிருக்கிறார். ஆயினும் அரசாங்கத்தின் பங்குகள் 51 சதவீதத்திற்குக் குறையாமல் பார்த்துக் கொள்வார்களாம். கடந்த ஐந்தாண்டு காலமாக இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் அரசாங்கத்தால் செய்ய முடியாது தடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள் இப்போது முன்னுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. திவாலாகிப்போன ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் தேசியமயமாக்கி இருக்கும் தருணத்தில் இந்திய அரசு இவ்வாறு அறிவித்துள்ளது. வள ஆதாரங்களை உயர்த்த வேண்டியது அவசியம்தான். ஆனால் அதனை யாரால் அளித்திட முடியுமோ, அவர்களின் லாபத்திலிருந்து ஒரு பகுதியை நாட்டின் கட்டுமானப் பணிகளுக்காக வசூலித்திட வேண்டும். அதற்கு மாறாக, பொதுத்துறையைக் கொன்றழிப்பதன் மூலம் அதனைச் செய்திடக் கூடாது. ஐமுகூ அரசாங்கத்தின் முதல் நான்கு ஆண்டு காலத்தில், இந்தியாவில் உள்ள பத்து உயர் கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களின் மதிப்பை இரு மடங்குக்கும் மேலாக உயர்த்தியுள்ளன. இவை அரசாங்கத்திற்கு 33 சதவீதம் கார்பரேட் வரி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் இவற்றில் ஒரு நிறுவனம் கூட அரசாங்கத்திற்கு இவ்வரியை செலுத்திட வில்லை. இவர்களில் இரண்டே இரண்டு நிறுவனங்கள் மட்டும்தான் 30 சதவீதம் அளவைத் தாண்டியிருக்கிறது. மீதமுள்ளவைகளில் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 20 சதவீத அளவைத் தாண்டியிருக்கிறது. மற்றவை எல்லாம் மிக மிகக் குறைவாகவே செலுத்தி இருக்கின்றன. இவ்வாறு வரி செலுத்தாமல் அனுமதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடமிருந்து வசூல் செய்து நாட்டின் வள ஆதாரங்களைப் பெருக்கிட வேண்டுமேயொழிய, நாட்டின் பொதுச் சொத்துக்களை அழித்திடக் கூடாது.

பொதுத்துறை-தனியார்துறை-கூட்டு (PPP-Public Private Partnership), நாட்டின் உள்கட்டமைப்பு வசதியை வளர்ப்பதற்கான ‘‘முக்கிய கூறு’’ என்று அறிவித்திருப்பன் மூலம் தனியார் தங்கள் சொத்துக்களையும் லாபத்தையும் அதிகரித்துக்கொள்ள வகை செய்திருப்பது, குடியரசுத் தலைவரின் உரையில் உள்ள மிக மோசமான பகுதியாகும். பொதுத்துறை-தனியார்துறை-கூட்டுத் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கக்கூடிய அதே சமயத்தில், அவை மக்கள் மத்தியில் பெரும் சுமையினை ஏற்றிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தனியார் விமானத் தளங்களில் வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் அவை அடிக்கும் கொள்ளையைக் குறிப்பிடலாம். இவ்வாறு, எதிர்காலம் மக்களுக்குத் தாங்க முடியாத அளவிற்கு சுமையை ஏற்றக்கூடிய அளவிற்கு வரும் என்றே தோன்றுகிறது.
(அமெரிக்க அதிபர் ஒபாமா சொல்லியிருப்பதுபோலவே,) குடியரசுத் தலைவர், அரசாங்கம் முதல் நூறு நாட்களில் அமல்படுத்த இருக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இதில் முதலாவது, நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் மகளிர்க்கான இடஒதுக்கீட்டுச் சட்டுமுன்வடிவினை அமல்படுத்துவதற்கான உறுதிமொழியாகும். குறைந்தபட்சம் இப்போதாவது, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, கிடப்பில் போடப்பட்டு வந்த இச்சட்டமுன்வடிவிற்கு விடிவுகாலம் ஏற்படும் என்று நம்புவோம்.

இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குறித்து குடியரசுத்தலைவர் உரையாற்றுகையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக நம் அண்டை நாடுகளுடன், நட்புறவுகள் பேணப்படும் என்று கூறியிருக்கிறார். இப்பிரிவில் குறிப்பிடத்தக்க முறையில் விடுபட்டுள்ள ஒரு வாசகம் என்னவெனில் அது ‘‘அணிசேரா இயக்கம்’’ (Non-aligned movement) என்பதாகும். உண்மையில், அவரது ஒருமணி நேர பேச்சில் அணிசேராமை என்ற சொல் ஓரிடத்தில் கூட வரவில்லை. இந்த அரசானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான தன் போர்த்தந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே விழைகிறது என்பது குடியரசுத் தலைவரின் உரை மூலமாக மேலும் தெளிவாகிறது.
படாடோபமான முறையில் திட்டங்களை அறிவிப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் என்றைக்குமே சளைத்ததில்லை. அவற்றை எந்த அளவிற்கு அவை அமல்படுத்துகின்றன என்பதில்தான் அவற்றின் உண்மையான வர்க்க குணம் வெளிப்படும். ‘வறுமையே வெளியேறு’ என்று இந்திரா காந்தி முன்வைத்த முழக்கத்தை நினைவு கூறுங்கள். பிற்காலத்தில் நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மோசமாகியதை அடுத்து மக்கள், ‘‘வறுமையே வருக வருக’’ என்று கிண்டலடித்தைக் கண்டோம்.
வரவிருக்கும் காலம் நாட்டு மக்கள் தங்களையும் தங்கள் வேலையையும் கடுமையான போராட்டங்கள் மூலமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உண்மையில், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் இப்போராட்டங்களுக்கு நம்மையும், நாட்டு மக்களையும் தயார் செய்திடுவதே இப்போது நம்முன் உள்ள வேலையாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, June 6, 2009

குடியரசுத் தலைவர் உரை மீது சீத்தாராம் யெச்சூரி
புதுடில்லி, ஜூன் 6

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அப்போது அவர் கூறியதாவது:
‘‘குடியரசுத் தலைவர் தன் உரையில் மேற்கு வங்கத்தில் ‘அயிலா’ புயலால் அங்குள்ள மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான பாதிப்புகள்
குறித்து குறிப்பிட்டிருக்கிறார். ‘மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்திடும்’ என்று கூறியிருக்கிறார்.
ஜூன் 4ஆம் தேதிய விவரங்களின்படி அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 67.5 லட்சம். இறந்தோர் எண்ணிக்கை 137 ஆக உ யர்ந்துள்ளது. முழுவதும் மற்றும் பகுதி சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பயிரின் அளவு 2.8 லட்சம் ஏக்கர்களைத் தாண்டும். பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாகும். உண்மையில் இது ஒரு தேசியப் பேரிடராகும். தற்சமயம் 4.38 லட்சம் மக்கள் 782 நிவாரண முகாம்களில் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர். 409 கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளன. சேதத்தின் அளவு மற்றும் திடீரென்று இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு இதனை ஒரு தேசியப் பேரிடராக அறிவித்திட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு மாநில அரசுகளிடமிருந்து சர்சார்ஜ் வசூலிக்கும் பழக்கம் உண்டு. இப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க பயன்படுத்தப்பட்டுள்ள ராணுவ உதவிகளுக்கு அவ்வாறு சர்சார்ஜ் வசூலிப்பதையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக இப்பிரச்சனையை அரசியலாக்கும் போக்கு இருக்கிறது. மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள ஒருவரை சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து இத்தாக்குதல் வந்துள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை அரசியலாக்குவதற்கு இது தருணம் அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்ததாக, குடியரசுத் தலைவர் அவர்கள் தேர்தல்கள் என்பது ஜனநாயகத் திருவிழா என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் தங்களை யார் ஆள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திடும் விழா. ஆயினும் நாடு சுதந்திரம் அடைந்தபின் அமைந்த எந்த ஒரு அரசும், வாக்களித்த மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து ஆதரவினைப் பெற்றதாகக் கூற முடியாது. ஆம், ராஜிவ்காந்தி ஒருவர் மட்டுமே 48 சதவீத மக்களின் ஆதரவினைப் பெற்று பிரதமராக வந்தார். வேறெவரும் அந்த அளவிற்குக்கூட பெறவில்லை.
ஜனநாயகம் குறித்து நாம் பேசும்போது, பெரும்பான்மையோரின் ஆட்சி என்று நாம் கூறும்போது, இப்பிரச்சனையையும் நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து நீங்கள் ஆழமாகப் பரிசீலிக்க முன்வந்தீர்களானால், ஒரு பகுதி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைப்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அடுத்ததாக, நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் நம் அரசியலமைப்புச் சட்டம். தற்போது நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், சட்டங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாம்,
மத்திய மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகளாகவும் செயல்படுகின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் செயல்பட்டால்தான் சம்பந்தப்பட்ட அரசுகளின் மீது கண்காணிப்பினைச் செலுத்திட முடியும். சென்ற ஆண்டு நாடாளுமன்றம் வெறும் 46 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் என்ன கண்காணிப்பை அரசு மீது செலுத்திட முடியும்?
எனவே, குறைந்தபட்சம் இத்தனை நாட்களாவது நாடாளுமன்றம் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். பல குழுக்கள், நாடாளுமன்றம் குறைந்தபட்சம் ஓராண்டில் 100 நாட்களாவது நடைபெற வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றன. ஆனால் இதனை இதுநாள்வரை அமல்படுத்தப்பட முடியவில்லை., எனவே மேலே கூறியவாறு ஓராண்டில் 100 நாட்களாவது நாடாளுமன்றம் கூடுவதைக் கட்டாயப்படுத்தக்கூடிய வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
அடுத்ததாக, நீதித்துறை சீர்திருத்தம். இது இன்றைக்கு மிகவும் அவசியம். இந்தியாவில் உள்ள 21 உயர்நீதிமன்றங்களிலும் 30 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் 263 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் 3 லட்சம் விசாரணைக்கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாம் ஒரு ஜனநாயக அமைப்பைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமே இல்லை.
எனவே நிலைமையைச் சரிசெய்திட தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக, குடியரசுத் தலைவர் அவர்கள் கல்வி குறித்தும் அதன் விரிவாக்கம் குறித்தும் அதன் தரம் குறித்தும் உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தரம், எண்ணிக்கை மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற முறையில் கூறியிருக்கிறார்கள். இதனை ஈடேற்ற வேண்டுமானால் அதற்கு வேண்டிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு தேவை. ஆனால் சென்ற முறை அரசு தான் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் உறுதிமொழி அளித்திருந்தபடி கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்திடவில்லை. அதேபோன்று இப்போதும் அரசு செய்திடக் கூடாது. குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதமும், பொது சுகாதாரத்திற்கு 3 சதவீதமும் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(ச. வீரமணி)