Tuesday, July 30, 2013

ஏழைகளை எண்ணுவதில் நேர்மையின்மையைக் கடைப்பிடிக்கும் திட்டக் கமிஷன்:உத்சா பட்நாயக்


(திட்டக் கமிஷனின் கயமைத்தனமான கணக்குமுறையின் காரணமாக நம் நாட்டின் வறுமை வீழ்ச்சியடைந்திருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது.)
திட்டக் கமிஷன்  20011-12ஆம் ஆண்டில் நாட்டில் வறுமை குறைந்துவிட்டதாகக் கூறி, மறுபடியும் நம்மை சங்கடத்திற்குள்ளாக்கி இருக்கிறது. நகர்ப்புறங்களில் 13.7 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் 25.7 விழுக்காட்டினரும் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள் என்று எதார்த்தமற்ற அளவுகோளை அது வரையறுத்திருக்கிறது. அதாவது நகர்ப்புறங்களில்  மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும் (நாளொன்றுக்கு ரூ.33.33ம்), கிராமப்புறங்களில் மாதத்திற்கு 816 ரூபாயும் (நாளொன்றுக்கு ரூ.27.20ம்) சம்பாதிப்பவர்கள் வறுமையைத் தாண்டிவிட்டவர்களாம். இந்தத் தொகையைக் கொண்டு நகர்ப்புறத்தில் ஒருவர் முடிவெட்டிக்கொள்ளக்கூட முடியாது என்ற நிலை இருக்கையில், திட்டக்கமிஷனானது  அந்தத் தொகையில் ஒருவர் வாழ்க்கைக்குத் தேவையான உணவு மற்றும் உணவு அல்லாத அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்வார் என்று தெரிவித்திருக்கிறது. இவர்களது கணக்கின்படி, 2009-10க்குப்பிறகு கடந்த இரு ஆண்டுகளில்வறுமை என்பது மிகப்பெரிய அளவில், கிராமப்புறங்களில்  எட்டு விழுக்காடு புள்ளிகளும், நகர்ப்புறங்களில் ஏழு விழுக்காடு புள்ளிகளும் வீழ்ச்சியடைந்திருக்கிறதாம். இந்த இரு ஆண்டுகளிலும் நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவியதைப்பற்றியோ, வேலைவாய்ப்பு வளர்ச்சி மிகவும் மோசமாக இருந்தது பற்றியோ, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசிகள் விஷம்போல் ஏறியதைப் பற்றியோ திட்டக்கமிஷன் கொஞ்சமாவது  பொருட்படுத்தியதாகவே தெரிய வில்லை. இப்போது பின்பற்றும் கயமைத்தனமான கணக்கீட்டு முறையையே திட்டக்கமிஷன் தொடர்ந்து பயன்படுத்துமேயானால், அடுத்த நான்காண்டுகளில் நாட்டின் வறுமைப் பட்டியலில் எவருமே இருக்க மாட்டார்கள்.
உண்மை நிலை என்ன?
இவ்வாறு வறுமை மட்டம் குறைந்திருக்கிறது என்று ஆட்சியாளர்கள் சொல்வது முழுமையாக தவறான கணக்கீட்டின் அடிப்படையிலேயேயாகும்.  உணவு அல்லாத அத்தியாவசிய செலவினங்கள் (வாடகை, போக்குவரத்து, உடல்நலம், கல்வி முதலான) அனைத்தையும் ஒருவர் பூர்த்திசெய்தபிறகு, கிராமப்புறங்களில் உள்ள ஒருவர் நாள் ஒன்றுக்குத் தனக்குத் தேவையான 220 கலோரி உணவை உட்கொள்வதற்கு இயலாத நிலையில் 75.5 விழுக்காட்டினரும், நகர்ப்புறங்களில் நாள் ஒன்றுக்குத் 2100 கலோரி உணவை உட்கொள்வதற்கு, 73 விழுக்காட்டினரால் இயலவில்லை என்பதுமே எதார்த்தமாகும்.  2004-5ஆம் ஆண்டில் இது முறையே கிராமப்புறத்திற்கு 69.5 விழுக்காடாகவும், நகர்ப்புறத்திற்கு 64.5 விழுக்காடாகவும் இருந்தது. எனவே இந்தப் பத்தாண்டுகளில் வறுமை என்பது கணிசமாக வளர்ந்திருக்கிறது.  இப்போதுள்ள பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பில் மந்த நிலைமை ஆகியவற்றின் காரணமாக நிலைமைகள் நிச்சயம் மோசமாகத்தான் இருக்க முடியும்.
தனியார் மருத்துவமனைகளுக்கு ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றார் என்றால்  அவருக்கு ஏற்படும் செலவுகள், கல்வி, மின்சாரம், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்குப் பயன்படுத்தும் செலவுகள் ஆகியவற்றுடன் உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக உயர்ந்துள்ள உணவுப்பொருள்களின் விலை ஆகியவற்றால் பொது விநியோக முறை மூலம் தான்யங்கள் வாங்கமுடியாத நாட்டின் பெரும்பான்மை மக்கள் எவரும் கற்பனைசெய்ய முடியாத அளவிற்கு மிகவும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் உட்கொள்ளும் சத்தான உணவு என்பது முன்பிருந்த நிலையைவிட மிகவும் மோசமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துவிட்டது என்பதுமே உண்மையாகும்.
இவ்வாறு எதார்த்த உண்மைகளைக் கணக்கில் கொள்ளாமல், மிகவும் குறைவான மற்றும் மக்களின் வறுமைக்கோடு வீழ்ச்சியடைந்துவிட்டதான மதிப்பீடுகளை திட்டக்கமிஷன்அளிக்க வேண்டியதற்கான அடிப்படைக் காரணம்தான் என்ன? நடைமுறையில் கமிஷனானது வறுமைக்கோடு தொடர்பாக தான்அளித்திட்ட தன் சொந்த வரையறையையே கைவிட்டுவிட்டது. 1973-74ஆம் ஆண்டில் மட்டும்தான் அது தன்னுடை சொந்த வரையறையை பிரயோகித்தது. அதன்பின்னர், கடந்த 40 ஆண்டுகளில் ஒருதடவை கூட மக்கள் உண்மையிலேயே செலவு செய்யும் அளவை வைத்து அது கணக்கிடவே இல்லை. ஆனால், தேசிய மாதிரி சர்வே ஐந்தாண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளும் புள்ளிவிவரங்களைக் கொண்டு திட்டக் கமிஷன் இதனை மிகவும் எளிதாகச் செய்திட முடியும். ஆனாலும் அவ்வாறு செய்ய அது முன்வரவில்லை.
மாறாக, திட்டக் கமிஷன்  1973-74ஆம் ஆண்டில் விலைவாசி குறியீட்டெண்ணைக் குறிப்பதற்கு, மாதாந்திர வறுமைக்கோடு நகர்ப்புறங்களில்  ரூ.56 என்றும் கிராமப்புறங்களில் ரூ.49 என்றும்  மேற்கொண்ட கணக்கீட்டை  மட்டும் பிரயோகிக்கிறது. டெண்டுல்கர் குழு இந்த அம்சத்தை மாற்றவில்லை. அது குறிப்பிட்ட விலைவாசிக் குறியீட்டெண்ணை மட்டும் மாற்றியிருக்கிறது.
விலைவாசிக் குறியீட்டெண் குறிப்பிட்ட கால அளவில் ஒருவர் மேற்கொள்ளும் உண்மையான செலவுகளைப் பிரதிபலிப்பதில்லை.  1973-74இல் உயர் மட்ட அரசு அலுவலர் ஒருவர் ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊதியம் பெற்றார் என்றால், அவரது சம்பளம் மட்டும் அட்டவணைப்படுத்தப்பட்டால் இன்று அவர் தன் மாதாந்திர ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் பெறுவார். ஆனால் வாழ்க்கைச் செலவினங்களை அட்டவணைப்படுத்தும்போது  அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அரசால் அமைக்கப்பட்ட ஊதியக் குழுக்கள் அங்கீகரித்திருப்பதன் காரணமாக அன்றையதினம் 1000 ரூபாய் ஊதியம் பெற்ற உயர் அரசு அலுவலர் இன்றையதினம் திட்டக்கமிஷன் கணக்கீட்டின்படி 18,000 ரூபாய் மாதாந்திர ஊதியமாகப் பெறவில்லை. மாறாக நான்கு பங்குக்கும் அதிகமாக 70,000 ரூபாய்க்கும் மேலாக ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கிறார். ஆயினும், வறுமை மதிப்பீட்டைச் செய்வதற்கு மட்டும் அதேபழைய முறையைக் கடைப்பிடிப்பதைத் திட்டக் கமிஷன் தொடர்கிறது. உண்மையில் இது வறுமைக்கோடு (poverty line)என்று சொல்வதைவிட. வறியநிலைக்கான கோட்டைவிட (destitute line) கீழானதாகும்.
மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கும் இல்லாமை நிலைமை
அதிகாரபூர்வமான வறுமைக்கோட்டு வரையறைகள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேலும் மேலும் கீழே தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு இவர்கள் வறுமைக்கோட்டின் தரத்தைத் தொடர்ந்து கீழிறக்கிக்கொண்டே செல்வதன் காரணமாக, மக்கள் உண்மையில் இல்லாமையை நோக்கி சென்றுகொண்டிருந்த போதிலும்கூட, அவர்கள் ஏதோ முன்னேறிக் கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை எப்போதும் இவர்களது அறிக்கைகள் காட்டிக் கொண்டிருக்கின்றன.  ஒரு பள்ளிக்கூடத்தில் ஆண்டுத் தேர்வில் சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விழுக்காட்டை, இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விழுக்காட்டோடு ஒப்பிடவேண்டுமானால் தேர்ச்சி மதிப்பெண் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது பள்ளி மாணவனுக்கு நன்கு தெரியும். ஒரு பள்ளி முதல்வர் தன் இஷ்டம்போல் மக்களுக்குத் தெரிவிக்காமல் தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்திட முடியாது. அதாவது சென்ற ஆண்டு ஒரு மாணவன் தேர்ச்சி பெற 100க்கு 50 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றிருந்ததை இந்த ஆண்டு 100க்கு 40 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று தன்னிச்சையாக அவர் குறைத்திட முடியாது. அவ்வாறு அவர் குறைத்துவிட்டு, சென்ற ஆண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களைவிட இந்த ஆண்டு அதிகமானவர்கள் தேர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று அவர் பீற்றிக்கொள்ளவும் முடியாது. பள்ளியின் தரத்தை மதிப்பிட வேண்டுமானால் இரு ஆண்டும் தேர்ச்சி மதிப்பெண் ஒரே அளவினதாக இருந்தால்தான் சாத்தியம். மாறாக இவ்வாறு தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைத்ததன் மூலம் பள்ளியின் தரம் குறைந்ததாகவே கருத முடியும். பள்ளிக்கூடும் அடுத்த ஆண்டு தேர்ச்சி மதிப்பெண் அளவை மேலும் குறைக்கிறது எனில், அதற்கு அடுத்த ஆண்டு மேலும் மேலும் குறைக்கிறது எனில், அப்பள்ளியில் தேர்ச்சி பெறாத மாணவர்களே இருக்கமாட்டார்கள். 100 விழுக்காடு அளவிற்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பள்ளி முதல்வர் பீற்றிக்கொண்டிருப்பார்.
கிட்டத்தட்ட இதே அணுகுமுறையைத்தான் அதிகாரபூர்வ வறுமைக்கோட்டு வரையறை குறித்து, திட்டக் கமிஷன் செய்திருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக வறுமைக் கோடுக்கு இருந்த தர நிர்ணயத்தை, திட்டக் கமிஷன் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்திருக்கிறது. இதே பாணியைத் திட்டக்கமிஷன் தொடர்ந்து மேற்கொண்டால், அடுத்த சில ஆண்டுகளில் திட்டக்கமிஷனின் கணக்கீட்டின்படி இந்தியாவில் வறுமையே இருக்காது.
திட்டக்கமிஷன், நகர்ப்புற தில்லி மாநிலத்திற்கு மாதாந்திர வறுமைக்கோட்டுக்கான வரையறையை 2009-10க்கான ஆண்டிற்கு ரூ.1040 என்று வரையறுத்திருந்தது. இன்றையதினம் விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியில் இதர செலவுகள் அனைத்தையும் ஒரு நுகர்வோர் செய்தபின்ஒரு நாளைக்கு 1400 கலோரி உணவை உட்கொள்ளத்தான் அவரால் செலவு செய்ய முடியும்.  ஒருவர் 2100 கலோரி உணவு உட்கொள்ள வேண்டுமானால், மிகச் சரியான வறுமைக்கோடு வரையறை என்பது ரூ. 5,000 ஆகும். நாட்டில் நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் உணவுப் பணவீக்கத்தின் காரணமாக உணவுப் பொருள்களின் அதீத விலைகளும், தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் கடுமையான செலவினங்களும், மற்றும் போக்குவரத்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் போன்றவற்றிக்கு ஆகும் செலவினங்களும் எல்லாம் சேர்ந்து மக்களைத் தங்கள் உணவுக்காகச் செய்திடும் செலவை மிகப்பெரிய அளவில் வெட்டிச் சுருக்கி இருக்கிறது என்று சொன்னால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. ஆய்வாளர்கள் மேற்கொண்டிருக்கிற கணக்கீட்டின்படி தில்லியில் ஒருவர் உட்கொள்ளும் உணவு நாளொன்றுக்கு 1756 கலோரி அளவேயாகும். நிலையான வருமானம் உடையோர் தங்கள் தேவைகளை எப்படியோ சமாளித்துக்கொள்கிறார்கள் என்றபோதிலும், நாட்கூலி பெறும் அடிமட்டத்தில் உள்ளவர்கள் தங்கள் ஜீவனத்தை நடத்திட எந்த அளவிற்கு இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பது பணக்கார வர்க்கத்தினருக்குத் தெரியாது. நகர்ப்புற மக்கள் தொகையில் 55 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 1800 கலோரி உணவுகூட உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஐந்தாண்டிற்கு முன்பு இந்த அளவிற்கு மோசமான நிலை கிடையாது.
திட்டக் கமிஷனில் வேலைபார்க்கும் பொருளாதார வாதிகள் அதிக அளவில் பயிற்சி பெற்றவர்கள்தான். எதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், சரியற்ற கணக்கீட்டு முறையை இவர்கள் தொடர்வது ஏன் என்று கேட்கப்படுகிறது. நாம் கணக்கிடுவதைப்போன்றே வறுமைக்கோட்டுக்காக நிர்ணயித்திருக்கிற 1040 ரூபாயில் ஒருவரால் 1400 கலோரி உணவைத்தான் உட்கொள்ள முடியும் என்று நிச்சயமாக அவர்களுக்கும் தெரியும்.  ஆயினும் இந்தியா உட்பட வளர்முக நாடுகள் இத்தகைய கணக்கீட்டு முறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக வங்கியின் பொருளாதாரவாதிகள் அளித்திடும் நிர்ப்பந்தம் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
ஆசியாவில் வறுமை வீழ்ச்சியடைந்திருப்பதாக உலக வங்கி அளித்திடும் அறிக்கைகளும் போலித்தனமான ஒன்றேயாகும். எதார்த்தத்தில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதும், அதீத உணவுப் பணவீக்கமும் வறுமை நிலையையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனை ஒப்புக்கொள்வது என்பதன் பொருள் தற்போது உலக அளவில் வறுமை குறித்து உலக வங்கியின் பொருளாதாரவாதிகள் அளித்துவரும் தவறான கணக்கீடுகள் அனைத்தும் ஓர் அழுகிய கரையான் தின்ற வீடுபோல நொறுங்கி வீழ்ந்துவிடும். மேலும் இவர்களால் இவ்வாறு அளிக்கப்படும் போலித்தனமான வறுமை வீழ்ச்சி அறிக்கைகள் மூலமாகத்தான் இவர்களால் உலகமயம் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகள் காரணமாக மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள் என்கிற வாதத்தை மிகவும் சவுகரியமாக முன்வைத்திட முடியும். ஆயினும்,
உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில்
உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்.
பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்
பொய்யும் புரட்டும் பலியாகும்.
(கட்டுரையாளர், தில்லி, ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழக, ஓய்வுபெற்ற பேராசிரியர்.)
(தமிழில்: ச.வீரமணி)


Sunday, July 28, 2013

வறுமைக் குறைப்பு : அரசின் கயமைத்தனம்

தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதை அடுத்து, ஐமுகூட்டணி ஆட்சிக்காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்து பெரிய அளவில் முன்னேறிவிட்டதாக, மக்களை ஏமாற்றுவதற்கான வஞ்சக நடவடிக்கைகளில் ஐமுகூட்டணி 2 அரசாங்கம் இறங்கி இருக்கிறது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான் திட்டக் கமிஷன் மூலமாக நாட்டின் வறுமை அளவு குறித்த சமீபத்திய மதிப்பீடு வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் மக்களை ஏமாற்றி, மிகப்பெரிய அளவில் தேர்தலில் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆட்சியாளர்கள் இவ்வாறு சரடு விட்டிருப்பதானது, மிகவும் புகழ்பெற்ற ஆங்கிலப் பழமொழி ஒன்றைத்தான் மீளவும் உறுதி செய்திருக்கிறது. அதாவது பொய்கள் வடிகட்டிய பொய்களின் மறுபெயர் புள்ளிவிவரம்.

2011-12இல் தேசிய வறுமைக்கோடு என்பது திட்டக்கமிஷனின் டெண்டுல்கர் கணக்கீட்டின்படி நாளொன்றுக்கு நபர் ஒருவர் நகர்ப்புறங்களில் ரூ.33.33ம், கிராமங்களில் ரூ.27.20ம் செலவு செய்பவர் என்பதாகும். எவரேனும் ஒருவர் தன்னுடைய உணவுக்காக மட்டுமல்ல மற்ற பொருள்களையும் சேவை களையும் வாங்குவதற்காகவும், இத்தொகையைவிடக் கூடுதலாகச் செலவு செய்தால் அவர் ஏழை அல்லவாம்! ஏழை அல்லாதவர் குறித்து இதைவிட அபத்தமான, மனிதாபிமானமற்ற வரையறை வேறேதாவது இருக்க முடியுமா?ஆட்சியாளர்களின் இத்தகைய நகைக்கத் தக்க வரையறைகளின்படிதான், 2004-05 ஆம் ஆண்டு, ஐமுகூட்டணி 1 ஆட்சிக் காலத் தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் 41.8 விழுக்காடாக இருந்தது, தற்போது 25.7 விழுக் காடாகவும், நகர்ப்புறங்களில் 25.7 விழுக்காடாக இருந்தது தற்போது 13.7 விழுக்காடாகவும், வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதாவது, 2004-05 இல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தோர் எண்ணிக்கை 40.71 கோடியாக இருந்தது. இப்போது 2011-12இல் அது 26,93 கோடியாக, அதாவது நம் மொத்த மக்கள் தொகையில் 21.9 விழுக்காடாகக் குறைந்திருக்கிறதாம். இவ்வாறாக வறுமைக்கான வரையறையை நகைக்கத்தக்க விதத்தில் குறைத்து, தேசிய அளவில் அட்டூழியம் செய்துள்ள ஐமு கூட்டணி அரசாங்கம், இதற்கெதிராக மக்களின் கடும் சீற்றம் எழுவதை ஆற்றுப்படுத்துவதற்காக, தற்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி.ரங்க ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அக்குழு, இத்தகைய வறுமைக் கோட்டு வரையறையை அளித்த டெண்டுல்கர் கணக்கீட்டை மறுஆய்வு செய்திடுமாம். ஆயினும், இக்குழு, தன் அறிக்கையை 2014 - அதாவது அடுத்த பொதுத்தேர்தல் முடிந்த பிறகு - அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதுவரை ஐமுகூட்டணி அரசாங்க மானது இந்த அபத்தமான புள்ளிவிவரத்தால் மக்களை முட்டாளாக்கும் திருப்பணியைத் தொடரும்.
ஒவ்வொருவருக்குமான நுகர்வு அடிப்படையில் வறுமை குறித்து அமைந்த இந்த வரையறைகள் மிகவும் தடங்காண முடியா அளவிற்குக் குறைவானது என்பதுடன் மக்களின் சுகாதாரம், குடியிருப்பு, உடைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து எதுவுமே குறிப்பிடாதது மட்டுமல்ல, இவை மக்களுக்குக் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய வில்லை. இத்தகைய வரையறைகள் ஆதரவற்றவர்களின் நிலையைக் குறித்திடும் அளவைவிட மிகவும் குறைவானவைகளாகும்.கடந்த பல ஆண்டுகளாகவே, வறுமை தொடர்பாக அரசாங்கம் ஏற்படுத்தி வைத்திருந்த வரையறைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வந்திருக்கிறது. 1979இல் தேசிய மாதிரி சர்வேயின் கணக்கீட்டின்படி, ஒவ்வொருவரும் உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகள் உட்பட நுகர்வுப்பொருள்களுக்குச் செலவு செய்வதன் அடிப்படையில் வறுமைக் கோடு வரையறுக்கப்பட்டது. இவ்வரையறையின்படி, ஒருவர் செலவு செய்திடும் தொகை, நாளொன்றுக்கு கிராமப்புறங்களில் 2400 கலோரி சக்தியும், நகர்ப்புறங்களில் 2100 கலோரி சக்தியும், உட்கொள்ளக்கூடிய அளவிற்குச் செலவு செய்கிறார் எனில், அவர் வறுமைக்கோட்டிற்கு மேலே இருக்கிறார் என்று பொருள். கிராமப்புறத்தினருக்கான வரையறை பின்னர் 2200 கலோரியாகக் குறைக்கப்பட்டது. இந்த வரையறையின்படி 1973-74ஆம் ஆண்டில், கிராமப்புற/நகர்ப்புற வறுமைக்கோடுகள் ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ரூ.49/56 என வரையறுக்கப்பட்டது.

இதன்படி, அன்றையதினம் கிராமப்புறங்களில் 56 விழுக்காட்டினரும் நகர்ப்புறங்களில் 49 விழுக்காட்டினரும் ஏழைகளாகக் கருதப்பட்டார்கள். பின்னர், நாட்டில் வறுமையின் அளவைக் குறைக்க முடியாததன் காரணமாக மிகவும் சங்கடத்திற்குள்ளான ஆட்சியாளர்கள், படிப்படியாக மேற்படி வரையறையையும் மாற்றி அமைத்தார்கள். 2200/2100 கலோரி உட்கொள்ளும் வரையறைகளை எல்லாம் வறுமை மட்டத்திற்கு எடுத்துக்கொள்வதைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். மாறாக, 1973-4ஆம் ஆண்டிலிருந்து, பணவீக்கத்திற்குப் பயன்படுத்தும் விலைவாசி அட்டவணையின் அடிப்படையில் கணக்கிடத் தொடங்கி னார்கள். விலைவாசி அட்டவணையைத் தங்கள் வசதிக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் திட்டக் கமிஷன் வறுமை மதிப்பீடுகளை கற்பனையான முறையில் கணக்கிடுவதைத் தொடர்ந்தது. 2009-10ஆம் ஆண்டில் கிராமப்புற/நகர்ப்புறங்களில் முறையே நாளொன்றுக்கு ஒருவர் ரூ.22.4/28.7 செலவு செய்தாலே அவர் வறுமைக்கோட் டைத் தாண்டியவர் என்னும் அபத்தமான வரையறையை உற்பத்திச் செய்தது. பின்னர் இரு ஆண்டுகளுக்கான விலைவாசி அட்டவணையைத் தங்கள் வசதிக்கேற்ப மாற்றி யமைத்து இந்த வரையறையை 2011-12ஆம் ஆண்டில் ரூ.26/32ஆக மாற்றியமைத்தது. டெண்டுல்கர் கணக்கீட்டைப் பயன்படுத்தி இப்போது இது திட்டக்கமிஷனால் ரூ.33.33/27.20 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இத்தகைய வறுமைக்கோடுகள் மிகவும் அபத்தமானவை மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் தங்கள் ஜீவனத்திற்காகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களின் ஜீவ மரணப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். இவர்கள் அளித்துள்ள நகர்ப்புற வறுமை வரையறையின்படி ஒருவர் வெளிச்சந்தையில் இன்றைய தினம் தரமான நல்ல ரக அரிசி ஒரு கிலோ கூட வாங்க முடியாது. ஆட்சியாளர்கள் எரி பொருள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைத் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருப்பதைத் தொடர்ந்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் நாள் தோறும் விஷம்போல் ஏறிக்கொண்டிருப் பதால் மக்களின் வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் விவசாய நெருக்கடியின் விளைவாக ஏற்கனவே நொந்து நூலாகிப்போயுள்ள விவசாயிகள் தற்போது ரசாயன உரங்களுக்கு அளித்து வந்த மான்யங்களை ஆட்சியாளர்கள் கடுமையாக வெட்டிச் சுருக்கியிருப்பதன் காரணமாக மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு மக்களின் வாழ்க்கை அதலபாதாளத்திற்குச் சென்றிருப்பதை மக்கள் நாள்தோறும் வாங்கும் உணவு தானியங்கள் அளவு 1991இல் 480 கிராம்களாக இருந்தது, தற்போது 440 கிராம்களாகக் குறைந்திருப்பதிலிருந்தே நன்கு தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய சூழ்நிலைமையில்தான் நாட் டில் பெருமளவில் அவதிப்பட்டுக்கொண் டிருக்கும் நம் மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் அர்த்தமுள்ளவிதத்தில் அளிக்க முடியும் என்றால் அது அனைவருக்குமான பொது விநியோக முறை மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதன்மூலம்தான் செய்திட முடியும். இதன் பொருள், நம் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 90 விழுக்காட்டினராவது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கிலோ கிராம் 2 ரூபாய் விலையில் மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களை அளிப்பதன் மூலம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதேயாகும். இதனைச் செய்வதற்குப் பதிலாக, ஐமுகூட்டணி-2 அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு, உணவு அளவை 25 கிலோவாகக் குறைத் திருப்பதுடன் அவற்றின் விலையையும் 3 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. அதுவும் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கிற்கும் மேல் உள்ளவர்களுக்குக் கிடையாது.
நிச்சயமாக இது போதுமானதல்ல. இது உணவுப் பாதுகாப்பை அளிப்பதற்குப் பதிலாக நம்மக்களுக்கு உணவுப் பாதுகாப்பின்மையைத்தான் பெரிய அளவில் உத்தரவாதப்படுத்திடும். நமக்குத் தேவை வறுமையைக் குறைத்துவிட்டோம் என்று ஐமுகூட்டணி-2 அரசாங்கம் தற்போது செய்து கொண்டிருக்கும் வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் அல்ல, மாறாக நம் மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை அளிக்கக்கூடிய விதத்தில் ஓர் அர்த்தமுள்ள வாழ்வாதாரமேயாகும். இதனை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் மக்களைத் திரட்டி வலுமிக்க போராட் டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

(தமிழில்: ச.வீரமணி)Monday, July 15, 2013

கலாச்சார, பண்பாட்டுக்குச் சவால்கயாவில், புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் புனித இடத்தைக் குறிவைத்து, நடைபெற்ற சமீபத்திய தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள், நாட்டில் மதவெறிஉணர்வை மக்கள் மத்தியில் கிளப்பிவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் நடைபெற்றிருக்கிறது என் கிற உண்மையை மிகவும் பயங்கரமாக நினை வூட்டியிருக்கிறது. இத்தகைய காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் இதர புல னாய்வு அமைப்புகள் தங்கள் புலனாய்வுகளை மேற்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், இதனைச் சுற்றிப் பல்வேறு ஊகங்களும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

மேற்படி புத்தகயா கோவிலின் கட்டுப்பாட்டை யார் வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக புத்த மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் இடையே நீண்டகாலமாகவே தகராறு புகைந்து கொண்டிருந்தது. சமீபத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத், புத்தர்களின் ஆதிக்கத் தில் உள்ள மியான்மர் அரசு, முஸ்லிம்கள் மீது அட்டூழியங்கள் புரிந்திட இந்தியா உதவி வருவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். மியான் மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்க மொழி பேசும் முஸ்லிம் சிறுபான்மை யினராவார்கள். மியான்மர் அரசு அவர்களை வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றுதான் பாவிக் கிறது. வங்கதேசமோ அவர்களை மியான்மரி கள் என்று கூறி நிராகரிக்கிறது. மியான்மரில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற 135 இனக் குழுக்களில் ரோஹிங்கியாக்கள் இடம்பெற வில்லை. மியான்மரில் தொடர்ந்து நடை பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் காரணமாக 2012இல் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்ட ரோஹிங்கியாக்கள் தங்கள் இருப்பிடங் களிலிருந்து புலம்பெயர்ந்து வேறிடங் களுக்குச் சென்றுள்ளார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் 40 பேர் கொல்லப்பட்டுள் ளார்கள். ஆயிரத்திற்கும் மேலானோர் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக் கிறார்கள். தேசியப் புலனாய்வு அமைப்பில் விசார ணைகளிலிருந்து, 26/11 மும்பை பயங்கர வாதி களின் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அமெரிக்க - பாகிஸ்தானிய டேவிட் ஹெட்லி, கயாவில் உள்ள மகாபோதி கோவில், பயங்கரவாதி களின் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட விருக் கும் இடங்களில் ஒன்று என்று கூறியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதேபோன்று, இந்தியா விலிருந்து செயல்படும் முஜாஹிதீன் இயக் கத்தைச் சேர்ந்தவர்களும் போதி கயா தாங்கள் தாக்குதல்கள் நடத்தப்படவிருக்கும் இடங் களில் ஒன்று என்று கூறியிருக்கிறார்கள். முன்பு ஆஜ்மீர் ஷரீப், மாலேகான் மற்றும் ஹைதராபாத் மெக்கா மசூதி ஆகிய இடங்க ளில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்கு தல்கள் தொடர்பாக நடைபெற்ற புலனாய்வுகள் மூலம் அவற்றில் சில இந்துத்துவாக் குழுக் கள் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆயினும் இது தொடர்பாக அதற்குமுன்பு பல முஸ்லிம் குழுக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, மிகப் பெரிய அளவிற்கு முஸ்லிம் இளைஞர் கள் கைது செய்யப்பட்டனர். (இத்தாக்குதல் களில் முஸ்லிம்கள் பங்கேற்கவில்லை என்று புலனாய்வுகள் முடிவுசெய்த பின்னரும்கூட, இன்னமும் பல முஸ்லிம் இளைஞர்கள் சிறை களிலேயே தொடர்ந்து அல்லலுற்று வருகின் றனர் என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான தாகும்.) 

அதேபோன்று இப்போது நடைபெற் றுள்ள தாக்குதலிலும் இந்துத்துவா குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்று சில காங் கிரஸ் தலைவர்கள் கூறியிருக்கின்றனர்.இவை அனைத்தும் தெளிவாகக் காட்டு வது என்னவெனில், இத்தாக்குதல் தொடர் பாக மிகவும் விரைவாகவும், முழுமையாகவும் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு, இதில் ஈடு பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவாக இருந்தாலும், அதன் மூலவேர் எங்கிருந்து வந்தபோதிலும், அவை அனைத்தும் தேச விரோதமானவை என்பதும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதும் தெள்ளத் தெளிவானவைகளாகும். முழுமையான விசாரணை முடிந்தபின்னர், குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தண்டிக்கப்படுவதன் மூலம் மதவெறியை விசிறிவிடுவோருக்கு இத் தகைய தண்டனைகள் அச்சத்தை விளை வித்து அவ்வாறு நடந்து கொள்ளாதிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற் படுத்தும். இதுதொடர்பாக மேலும் தெளிவாக் கப் படவேண்டிய விஷயம் என்னவெனில், நம் முடைய பாதுகாப்பு எந்திரமும் உடனடியாக வும் அவசரமாகவும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
கயாவில் உள்ள புத்தர் கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படக் கூடிய இடங்களில் ஒன்றாக இருக்கிறது என்று பீகார் மாநில அரசாங்கத்திற்கு ஏற் கனவே புலனாய்வு அமைப்புகள் மூலம் எச் சரிக்கை செய்யப் பட்டிருந்ததாக ஊடகங் களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டி இருக் கின்றன. ஆயினும், இத்தாக்குதல் தடுக்கப்பட முடியவில்லை. இத்தகைய பலவீனங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சரிசெய்யப்பட்டாக வேண்டும். நாட் டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்பிற்கு இது மிகவும் அவசிய மாகும். அனைத்து விதமான பயங்கரவாதச் செயல்களையும் முறியடித்திடுவதில் சமரசம் ஏதும் செய்து கொள்ளக்கூடாது. இந்தப் பின்னணியில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகச் செயல் படும் பாஜக, 2014 பொதுத் தேர்தல்கள் நெருங் குவதைத் தொடர்ந்து, ‘‘நாம் நம் அடிப்படைக் கொள்கைகளுக்குத் திரும்பவேண்டும்’’ என்று தற்போது அறிவித்துள்ள முடிவினை ஆய்வு செய்திட வேண்டும் என்று கூறியுள் ளது. இதன் பொருள் நாட்டில் மதவெறியைக் கூர்மைப்படுத்துவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்பதே யாகும். அனைத்துவிதமான பயங்கரவாதமும் தழைத்தோங்கிட இது வழிவகுக்கும். வெறி பிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிசஇந்து ராஷ்ட்ரம் நிறுவப்பட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொள்கை மற்றும் நோக்கம் சுதந்திரப்போராட்டக் காலத்தின் போது முறியடிக்கப்பட்டது. சுதந்திர இந்தியா ஒரு நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடி யரசாக மலர்ந்தது. இதனால் கடும் கோபம் கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் தன் பழிவாங்கலை மேற்கொண்டது.ஆர்எஸ்எஸ் இயக்கம் தன் குறிக்கோளை எய்திட மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிடுவதிலேயே குறியாக இருந்ததால் சுதந்திரத்திற்கானப் போராட்டத்தில் அது எவ்விதப் பங்கினையும் ஆற்றிடவில்லை. விடுதலைப் போராட்டத்தின் ஜாம்பவான் களில் ஒருசிலரையாவது தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆர்எஸ்எஸ் சர்தார் பட்டேல் மீது வலைவீசிப் பார்த்தது. ஆனால், மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இதே சர்தார் பட்டேல்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத் தைத் தடை செய்தார் என்பதை நினைவு கூர்வது அவசியமாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத் தைத் தடை செய்து, சர்தார் பட்டேலால் தயார் செய்யப்பட்டு 1948 பிப்ரவரி 4 அன்று வெளி யிடப்பட்ட அரசின் பத்திரிகைச் செய்தி யானது ‘‘ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஆட்சேபணைக்குரிய மற்றும் கேடுவிளை விக்கக்கூடிய நடவடிக்கைகள் எவ்விதத் தங்குதடையுமின்றி தொடர்ந்து கொண்டிருக் கின்றன. அதனால் கட்டவிழ்த்து விடப்பட் டுள்ள வன்முறை மற்றும் வெறித்தனமான நட வடிக்கைகளுக்கு பலர் பலியாகிவிட்டனர்.

கடைசியாக அதன் வன்முறைக்குப் பலியா னது, மிகவும் மதிக்கத்தக்க காந்திஜியாவார்,’’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கம், தான் இனி வருங் காலங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என்றும் கலாச்சார அமைப்பாகமட்டுமே செயல்படுவோம் என்றும் உறுதியளித்து அரசுடன் வஞ்சகமாக சமரசம் செய்துகொண்டதன் மூலம், தங்கள் இயக்கத்தின் மேலிருந்த தடையை விலக்கிக் கொள்வதில் வெற்றி பெற்றது. எனவே, அதற்கு தன் குறிக்கோளை எய்திட, தற்போதுள்ள நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, தன்னுடைய கொள்கைக்கு இணங்க நடை பெறக்கூடிய ‘‘இந்து ராஷ்ட்ரமாக’’ மாற்றி யமைத்திட, ஓர் அரசியல் அங்கம் தேவைப் பட்டது. ஆரம்பத்தில் 1952இல் அது ஜனசங்க மாக இருந்தது. பின்னர் அது கலைக்கப்பட்டு, ஜனதா கட்சியுடன் ஒன்றிணைந்தது, பின்னர் 1980இல் அதிலிருந்து வெளியேறி பாஜக என்னும் அமைப்பாக மாறியது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குறிக்கோளை எய்திட, அதாவது மதவெறித் தீயை விசிறிவிடு வது போன்று எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட, வரலாற்றைப் பெரிய அளவில் மாற்றி எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது. ஊடகங் களில் வந்த அறிக்கைகளின்படி (இந்துஸ் தான் டைம்ஸ், 2013 ஜூன் 24) பாஜகவின் முன்னாள் தலைவர் ஒருவர், வரலாற்றுப் பாடப் புத்தகங்களின் பாடத்திட்டங்களை மாற்ற இருப்பது குறித்துப் பேசி இருக்கிறார். ‘‘நாங் கள் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது, எவ்வ ளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரை வாக மாற்றி அமைத்திடுவோம்’’ என்று கூறி யிருக்கிறார். அதே நாளன்று அத்வானியும், ‘‘(ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குத் தனி அந்தஸ்து அளிக்கப்படுவது தொடர்பாக இருக்கின்ற) அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை’’ என்று பேசியிருக் கிறார். இப்போதெல்லாம், பாஜக தலைவர்கள் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்கள். இவ்வாறாக, 1998இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கக் காலத்தின்போது பாஜக தன்னுடைய கூட் டணிக் கட்சிகளைத் தாஜா செய்வதற்காகப் பின்னுக்குத் தள்ளியிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படைகளைத் தற்போது மீளவும் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ்/பாஜகவின் இத்தகைய நிகழ்ச்சிநிரலானது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும், முரணானதாகும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் மக்களின் சமூகக் கலாச்சாரப் பண்புக்கு ஊறுவிளைவிக்கக்கூடியதாகும். எனவே இதனை அனுமதிக்க முடியாது. இந்தியாவின் எதிர்கால நலனை மனதில்கொண்டு, நவீன இந்தியக் குடியரசை வேரறுக்க ஆர்எஸ்எஸ்/பாஜக-வினரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முழுமையாக முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

தமிழில்: ச.வீரமணிTuesday, July 9, 2013

மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் மாற்று அமைந்திட வேண்டும்


மாற்றுக் கொள்கைத் திசைவழிக் கான மக்கள் போராட்டங்களை தீவிரப் படுத்த வேண்டும் என்று ஜூலை 1 அன்று இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் தில்லி யில் நடைபெற்ற தேசிய அரசியல் சிறப்பு மாநாடு விடுத்துள்ள எழுச்சிமிகு அறை கூவல் இதைவிட மிகவும் பொருத்தமான நேரத்தில் வந்திருக்க முடியாது. ஈராண்டு களுக்கு முன்பு, நவீன தாராளமயப் பொரு ளாதார சீர்திருத்தங்களை மிகவும் உற் சாகத்துடன் உயர்த்திப் பிடித்தத் தலைவர் கள் அனைவரும் சீர்திருத்தங்களை இந் தியாவில் பின்பற்றத் தொடங்கி இருப தாண்டு காலம் நிறைவேறிவிட்டது என் றும் இது நாட்டின் பொருளாதாரத்தை மிக வேகமாக முன்னேற்றிக் கொண்டிருப்ப தாகவும் மிகவும் குதூகலத்துடன் கொண் டாடினார்கள். மேலும் அவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமை, நம் நாட்டை ஜி-20 நாடுகளுடன் இணைத்துப்பார்க்கக் கூடிய அளவிற்கு முன்னேறிவிட்டதாக வும், அதன் காரணமாக இந்தியப் பிரதமர் உலகின் பணக்கார நாடுகளின் தலைவர் களுடன் சமமாக உட்கார்ந்த அளவளாவக் கூடிய அளவிற்கு உயர்ந்துவிட்டார் என் றும் கூடமிகவும் உற்சாகத்துடன் கூறி னார்கள்.
ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டில் இருவித இந்தியர்களுக்கும் (ஒளிரும் இந்தியர்களுக்கும் அல்லல் பட்டு அவதியுறும் இந்தியர்களுக்கும்) இடையிலான இடைவெளியை மேலும் விரிவாக்கக்கூடிய விதத்தில் இட்டுச் செல்கிறது. நாம், இவ்வாறு நாட்டு மக்களின் மத்தியில் சமத்துவமின்மை அதிகரிப்பது என்பது நாட்டில் பெரும் பான்மை மக்களின் வாங்கும் சக்தியை தொடர்ந்து சுருங்கச்செய்துவிடும் என்றும் எச்சரித்து வந்துள்ளோம். இவ்வாறு வாங்கும் சக்தி குறைவது என்பது, மக்க ளின் உள்நாட்டுத் தேவைகளையும் சுருங் கச் செய்து, அதன் விளைவாக நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும் முடக்கிவிடும் என்றும் எச்சரித்திருந்தோம். ஆட்சியாளர் கள் நவீன தாராளமயப் பொருளாதார சீர் திருத்தங்களை அமல்படுத்தத் துவங்கி இருபதாண்டு காலமாகிவிட்டதைக் கொண்டாடத் துவங்கி ஈராண்டுகள் முடிந்துவிட்டன. துரதிர்ஷ்டவசமாக நாம் கூறிய எச்சரிக்கைகள் அனைத்தும் இவ்விரு ஆண்டுகளில் உண்மையாகி விட்டன. உலக அளவில் ஏற்பட்ட சமீபத் திய பொருளாதார மந்த நிலைமை சமீப ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளா தாரத்தையும் மிகவும் மோசமான முறை யில் பாதித்துள்ளது என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டிருக்கிறது. உற்பத்தித் துறையிலும் இதர தொழில்துறைகளிலும் உற்பத்தி சுருங்கிப்போனதன் விளைவாக, வேலைவாய்ப்புகளும் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுவிட்டது. இது, ஏற்கனவே நாளும் உயரும் விலைவாசி உயர்வாலும், மானியங்கள் வெட்டாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான நாட்டு மக்களை மேலும் துன்பத்தில் தள்ளியுள்ளன.
மக்களின் இத்தகைய பரிதாபகரமான நிலைமைகள் குறித்தோ, அவர்களைத் துன்ப துயரங்களிலிருந்து எப்படிக் காப் பாற்றுவது என்பது குறித்தோ கொஞ்சம் கூட கவலைப்படாமல், அதற்கு மாறாக ஐமுகூட்டணி-2 அரசாங்கமானது, பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்க நடவடிக்கைகளை எடுத்திருக் கிறது. ஊடகங்களில் வந்துள்ள தகவல் களின்படி, அரசின் அதிகாரிகள் அளித் துள்ள பேட்டிகளின் அடிப்படையில், இது தொடர்பாக எண்ணற்ற சலுகைகள் அளிக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஜூலை 1 அன்று நிதித்துறை அமைச்சகத் தின் முன் முயற்சியில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுள் ளது. இக்கூட்டத்தில் அந்நிய நேரடி முத லீடு சம்பந்தமாக மேலும் பல்வேறு விதி களைத் தளர்த்திட முடிவெடுத்திருக் கிறார்கள். அந்நிய நிதி நிறுவனங்கள் இந் தியாவிற்கு முதலீடு செய்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் அளித்திட அரசாங்கம் வழிசெய்து தந் திருக்கிறது. இது தொடர்பாக நிதி அமைச் சர் ப.சிதம்பரம், பல்வேறு வங்கி முதலீட் டாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர் களுடன் ரகசிய கூட்டம் நடத்தி இருக் கிறார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் இவை அனைத்தையும் செய்துவிட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் எகனாமிக் டைம்ஸ் நாளேட்டிற்குத் தெரிவித்திருக் கிறார்.இதில் இரண்டு விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. முதலாவதாக, அரசாங்கம் மிக அதிக அளவில் அந்நிய மூலதனத் தை நாட்டிற்குள் இறக்க மிகவும் ஆர்வத் துடன் இருக்கிறது. அதற்காக அவர் களுக்கு மேலும் சலுகைகளை வாரி வழங்கவும் தயாராக இருக்கிறது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பொரு ளாதார மந்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, ஆட்சியாளர்கள் மூலதனத்தை - அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளைக் - காப்பாற்றிடவே துடியாய் துடிக்கிறது. அதற்காக அவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கவும் தயாராயுள்ளது. அதன் மூலம் அவர்கள் மேலும் கொள்ளை லாபம் ஈட்ட அதிக அளவில் வாய்ப்புகள் திறந்து விடப்பட இருக்கின்றன. இரண்டாவதாக, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னாலேயே, மக்களைப் பாதிக்கும் இத்தகைய மோசமான முடிவு களை, அரசுத்தரப்பில் நிர்வாக முடிவு களாகவே எடுத்திட அவர்கள் அவசரப் படுவதும், அதன் மூலம் நாடாளுமன்றத் திற்குப் பதில்சொல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்று அவை கருதுவதும் நன்கு தெரிகிறது. நாட்டின் நலன், நாட்டு மக்களின் நலன், நம் பொருளாதாரத்தின் அடிப்படைகளைப் பாதுகாத்திட வேண்டு மானால், இவ்வாறு அரசாங்கம் நாடாளு மன்றத்திற்கு - அதாவது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களுக்குப் பதில் சொல்லாமல் தப்பித் துச் செல்ல அனுமதித்திட முடியாது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஊஹனு-உரசசநவே யஉஉடிரவே னநகiஉவை) (பிரதானமாக இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையே யுள்ள வித்தியாசம்) அச்சம் தரத் தக்க அள விற்கு அதிகரித்திருப்பதுதான் அரசாங்கம் இந்த அளவிற்கு கிலி அடைந்திருப் பதற்கு முக்கிய காரணமாகும். இதன் காரணமாக, இந்தியாவின் நடப்பு 260 பில்லியன் ரிசர்வ் இருப்பு, அடுத்த ஆறு மாத இறக்குமதிகளை சமாளிக்கப் போதுமானது. இதே தொகை 2008இல் சுமார் 15 மாத அளவிற்கு போதுமானதாக இருந்தது. நவீன தாராளமய சீர்திருத்தங் களை 1990களில் அப்போது நிதியமைச்ச ராக இருந்த மன்மோகன் சிங் அறிமுகப் படுத்திய சமயத்தில் இருந்த மோசமான நிலைமைகளையே இவை நமக்கு நினைவு படுத்துகின்றன.‘‘நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இந்த அளவிற்கு மிக அதிகமான அளவில் அதிகரித்திருப்பதானது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நமக்கு மிகவும் சவா லான ஒன்றாகவே இருக்கும்’’ என்று பிர தமர் 12ஆவது ஐந்தாண்டுத் திட்டத்திற் கான ஆவணத்தில் எழுதியுள்ள முன் னுரையில் கூறியிருக்கிறார். ‘‘நீண்ட கால அளவில் மூலதனம் பாய்வதை உத்தர வாதப் படுத்துவதன் மூலமாக, (இதற்கு அந்நிய நேரடி முதலீடு அவசியமானதாக இருக்கலாம்) இதனைச் சரி செய்திட வேண்டும்’’ என்று மேலும் அவர் கூறி யிருக்கிறார்.
‘‘இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு, போதுமான அள விற்கு வலிமையாக இருந்த போதிலும் கூட, அவற்றை ‘‘நிதிப் பற்றாக்குறை நீட்டிப்பதைச் சரிசெய்வதற்காக எடுத்துக் கொள்ள முடியாதுஎன்றும் அவர் கூறி யிருக்கிறார். இவற்றிலிருந்து நமக்குத் தெளிவாகத் தெரிவது என்ன? மக்கள் மீது மேலும் சொல்லொண்ணா அளவிற்கு சுமைகள் ஏற்றப்படவிருக்கிறது என்பதேயாகும். ‘‘கசப்பானவைகளாக இருந்தாலும் அவசியமான சில கொள்கை முடிவுகளை எடுத்துத்தான் ஆகவேண்டும்’’ என்று பிரதமர் கூறியிருப்பதன் பொருள் இதுவே யாகும். ‘‘நம்முடைய ஜனநாயக அமைப் பிற்கு இது ஒரு சவாலாகும். இத்தகைய நிலைமைகளின்போது கசப்பானவைகள் என்றாலும் அவசியமான கொள்கை முடிவுகளை எடுத்து அமல்படுத்திட வேண்டியதும், அதற்குப் போதுமான அள விற்கு கருத்தொற்றுமையைப் பெறுவது என்பதும் தீவிரமான போட்டி அரசியல் உள்ள ஒரு ஜனநாயக நாட்டில் நாம் மெய்ப் பிக்க வேண்டியிருக்கிறது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் மற்றும் அறி வார்ந்த தலைமை இதனைப் பற்றிக் கொள்ள முன்வரவேண்டும். இது ஒரு தேசிய அளவிலான சவால்.’’ என்று பிரதமர் கூறுகிறார். இதற்காகத்தான் பிரதமர் பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததோடு மட்டுமல் லாமல், ராணுவ உற்பத்தித் துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டைத் திறந்துவிட இருப்பதையும் குறிப்பாகக் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.
பொருளாதார விவ காரங்களுக்கான துறைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜூலை 3ஆம் வாரத்தில் இதுதொடர்பாக முடிவுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக நிதி அமைச்சர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பத்தாண்டு களில் எப்போதும் இல்லாத அளவிற்கு, 2012-13ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்து விழுக்காட்டிற்குக் கீழே தாழ்ந்துபோயுள்ள நிலையில் என்ன செய்வது என்பது குறித்து நிதி அமைச்சர் பொருளாதார நிபுணர்களையும், சந்தைப் பேர்வழிகளையும் சந்தித்து ஆலோசனை கள் நடத்தி இருக்கிறார். வேறு வார்த்தை களில் சொல்வதானால், ஐ.மு.கூட்டணி2 அரசாங்கமானது மூழ்கிக் கொண் டிருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தப் போகிறோம் என்ற பெயரில் மேலும் அலை அலையாக நவீன தாராள மய சீர்திருத்தங்களைக் கட்டவிழ்த்து விடத் தயாராகிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. இதன் பாதிப்பு கள் எவ்வளவு மோசமாக இருக்கும் என் பதை நாம் நன்கறிவோம். அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக மேலும் புதிய வாய்ப்பு வாசல்களை அவர்களுக்குத் திறந்துவிடும் அதே சமயத்தில், இத்த கைய சீர்திருத்தங்கள் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்படுத்தும் என்பதும், ஏற்கனவே மிகவும் மோசமான முறை யில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்கள் மேலும் மிக மோசமான முறையில் வறு மைக்குழிக்குள் தள்ளப்படுவார்கள் என் பதும் நிச்சயம். எனவேதான் இவர்களின் மோசமான கொள்கைத் திசைவழி மாற்றியமைக்கப் பட வேண்டும் என்று கூறுகிறோம். இவர் களின் கொள்கைக்கு மாற்று என்பது, நம் நாட்டிற்குத் தேவையான சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பக்கூடிய விதத்தில் பொது முதலீடுகளில் மிக உயர்ந்த அளவிற்கு நாட்டின் வள ஆதாரங்களைப் பயன் படுத்துவதிலேயே அடங்கி இருக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில் ஒவ்வோராண் டும் ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் வீதம் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கி யிருப்பதற்குப் பதிலாக, (உண்மை யில் இத்தொகை நம் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பட்ஜெட் பற்றாக் குறையை விட அதிகமானதாகும்) இத்தகைய நியாயமான வரி வருவாய்கள் வசூலிக்கப்பட்டு, பொது முதலீடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இத்தகையத் திசை வழியில் ஆட்சியாளர் கள் சென்றிருப்பார்களேயானால், நிச்சயமாக கணிசமான அளவிற்குக் கூடுதல் வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கும், அதன் மூலம், நம் நாட் டின் உள்நாட்டுத் தேவைகளும் விரிவாகி, ஓர் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச் சிக்கும் இட்டுச் சென்றிருக்கும்.இத்தகைய மாற்றுக் கொள்கைக்கான திசைவழியைத்தான் இடதுசாரிக் கட்சி களின் அரசியல் சிறப்பு மாநாடு மக்கள் மத்தியில் முன்வைத்திருக்கிறது. இடது சாரிக் கட்சிகள், மக்களுக்குத் தேவை யான இத்தகைய மாற்றுக் கொள்கை களை - நாட்டின் பொருளாதாரத்திற்கும், நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் மிகவும் தேவை யான இத்தகைய மாற்றுக் கொள்கை களைச் சுற்றி, அணிதிரளுமாறு காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஜனநாயக மற் றும் மதச்சார்பற்ற கட்சிகளைக் கேட்டுக் கொள்கிறது. அத்தகையதோர் அரசியல் மாற்று என்பது மாற்றுக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இதல்லாமல் ஆளை மாற்றுவதன் மூலமோ அல்லது அரசாங் கத்தை மாற்றுவதன் மூலமோ சாத்திய மல்ல. எனவே, இப்போதைய தேவை என்னவெனில், வரவிருக்கும் 2014 பொதுத்தேர்தலில் இத்தகைய மாற்றுக் கொள்கைகள் அடிப்படையில் ஓர் அரசி யல் மாற்றை உருவாக்குவதற்குப் போது மான நிர்ப்பந்தத்தை அளிக்கக்கூடிய விதத்தில், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திடுவோம்.

(தமிழில்: ச.வீரமணி)