Monday, January 28, 2013

சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லா பிரகடனம்காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடத்திய தன்னுடைய ஆய்வுக் கூட் டத்தில் (Chintan Shivr)  நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களை மனதில் கொண்டு பலமாக குரலெழுப்பியிருக்கிறது. அக்கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள விரிவான தீர்மானமானது கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அறிக்கை போன்றே காணப்படுகிறது. ஜெய்ப்பூர் பிரகடனம் என்று அழைக்கப்பட்ட அது, ‘‘கட்சி 2013லும் 2014லும் நடைபெறவிருக்கும் தேர்தல் களங்களைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது’’ என்று மிகத் தெளிவாகவே கூறியுள்ளது. ‘‘காங்கிரஸ் கட்சியானது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒரு மைப்பாட்டுக்கும், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றிற்கு அளித் துள்ள பங்களிப்புகளின்’’ காரணமாகவே இன் றைய இந்தியா இந்த அளவிற்கு வளர்ந் திருக்கிறது என்று அப்பிரகடனத்தின் முன் னுரையில் தம்பட்டம் அடித்துக்கொண்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியானது அப் பிரகடனத்தில், ‘‘நாட்டின் பொருளாதாரத்தை, வரலாற்றில் மிகவும் முக்கியமான கால கட்டத்தில், மிகவும் சரியான திசைவழியில் செலுத்திக்கொண்டிருப்பதாகவும்’’ கூறி யிருக்கிறது.
இந்தியாவின் மேன்மைக்குத் தாங் கள்தான் காரணம் என்று அது தம்பட்டம் அடித்துக்கொண்டபோதிலும், அக்கட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்தச் சம்பந்த மும் இல்லை என்பதற்கு இத்தீர்மானமே மிகச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். காங்கிரஸ் கட்சியின் பிரகடனத்தை கீழ்க்கண்ட முறை யில் தொகுத்துக் கூறிவிடலாம்: அதாவது, நாடும் நாட்டு மக்களும் காங்கிரஸ் கட்சி என்ன சொல்லியிருக்கிறதோ அதனைச் செய்திட வேண்டுமே யொழிய அது செயல் பட்டுக் கொண்டிருப்பதுபோல் அல்ல. உதாரணமாக, ‘‘கட்சி பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்க மீளவும் உறுதிபூண்டுள் ளது’’ என்று காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிர கடனத்தில் குறிப்பிட்டிருக்கிறது. உண்மை யில் காங்கிரஸ் கட்சி நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் பின்பற்றத் தொடங்கியபின் அதற்கு நேரெதிராகவே நடந்துகொண்டிருக்கிறது என்பதே நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற அனுபவமாகும். நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ) வளர்ச்சி விகிதம் உயர்ந்திருக்கிறது உண்மை தான். அதேசமயத்தில் இரு இந்தியர்களுக்கும் இடையிலான ஏற்றத்த0hழ்வும் அதிகரித்திரு றது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு சொத்துக்களை வைத்திருக்கிற, ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகவுள்ளவர்களின் - அமெரிக்க டாலர் பில்லியனர்களின் - எண்ணிக்கையை 52 ஆக உயர்த்தி இருக்கிற அதே சமயத்தில், நாட் டில் தங்கள் ஜீவனத்திற்காக நாள்தோறும் கடு மையாகப் போராடிக் கொண்டிருக்கிற, நாளொன்றுக்கு 20 ரூபாய்கூட செலவழிக்க முடியாத 80 கோடி மக்களின் அவல நிலை மையும் தொடர்கிறது.

‘‘இந்திய தேசிய காங்கிரஸ் அனைத்து மட்டங்களிலும் அதிலும் குறிப்பாக உயர் அதி காரபீடங்களிலும் அரசியல் மட்டத்திலும் நிலவும் ஊழலை ஒழிப்பதற்கான போராட்டத்தில் முன்னணியில் தற்போது இருந்து வருவது தொடரும்’’ என்று காங்கிரஸ் கட்சி தன் னுடைய பிரகடனத்தில் பீற்றிக்கொண்டிருக் கிறது. மக்களை ஏமாற்றுவதற்கு ஓர் அளவே இல்லையா? காங்கிரஸ் கட்சியின் தலைமை யிலான ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் இப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறை களில் அடைக்கப்பட்டிருப்பது தொடர்கிறது. இவர்களின் ஆட்சியின் கீழ் நடைபெற்ற மெகா ஊழல்கள் பலவற்றை மத்தியத் தணிக்கை மற்றும் கணக்குத்துறைத் தலைவர் (சிஏஜி) ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருப்பது தொடர்கிறது. இவர்கள் கடைப்பிடித்து வரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் முன்னெப்போதும் இல்லாதவிதத்தில் மெகா ஊழல்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்புவாசல்கள் பலவற்றைத் திறந்து விட்டிருக்கிறது. ‘‘நாட்டின் மனிதவள வளர்ச்சிக்கு குறிப் பாக சிசு மரணம், கர்ப்பிணிப் பெண்களைக் காப்பாற்றுதல், குடிதண்ணீர் வசதி, அடிப்படை சுகாதார நலம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வீட்டு வசதி ஆகிய அனைத்து அம்சங்கள் குறித்தும் கவனம் செலுத்தக்கூடிய விதத்தில் அரசியல் உறுதியைக் கொண்டிருக்கிறது’’ என்று இதேபோன்று மற்றொரு சரடையும் காங்கிரஸ் கட்சி அவிழ்த்துவிட்டிருக்கிறது. அது மேலும் ‘‘2020க்குள் நாட்டில் பசியையும் ஊட்டச்சத்தின்மையையும் அறவே அகற்றி விடுவோம்’’ என்றும் உறுதி அளித்திருக் கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் இந்தியா ஐக்கிய நாடு கள் மனிதவள வரிசைப் பட்டியலில் தொடர்ச் சியாக சரிந்துகொண்டு வந்திருக்கிறது. பிர தமரே சென்ற ஆண்டு இந்தியாவில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் வாடி வதங் கிக் கொண்டிருப்பது ‘‘தேசிய அவமானம்’’ என்று புலம்பியதைப் பார்த்தோம். \

இத்தகைய ‘‘தேசிய அவமானம்’’ எந்த அளவிற்குக் கடுமையாகி இருக்கிறது என்பதைச் சற்றே ஆராய்வோம். பசி-பஞ்சம்-பட்டினி குறித்த உலக வங்கியின் அளவீடுகள் முழுமையானது என்று சொல்வதற்கில்லை. அது ஒருசில அளவீடுகளின் மூலம் கணிக் கப்படுபவைதான். குறிப்பாக குழந்தைகள் எடை குறைவாக இருத்தல், குழந்தை இறப்பு விகிதம் மற்றும் சத்துணவு குறைவாக மக்கள் இருத்தலின் விகிதாச்சாரம் ஆகிய மூன்று கார ணிகளை அடிப்படையாகக் கொண்டுதான் அது கணக்கிடப்படுகிறது. அந்தக் கணக் கின்படி 2012இல் ஐ.நா. ஸ்தாபனம் மதிப்பிட்ட உலகப் பட்டினி அட்டவணையில், மொத்தம் மதிப்பிடப்பட்ட 79 நாடுகளில் இந்தியா 65 ஆவது இடத்தில் இருக்கிறது. நம்மைவிட பாகிஸ்தானும், நேபாளமும் மேம்பட்ட நிலை யில் இருக்கின்றன. உலக வங்கியின் ஆய் வில் மிகவும் மோசமான அம்சம் என்ன தெரி யுமா? ‘‘குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி வாடு வது தொடர்பான புள்ளி விவரங்களின்படி, 2005-10ஆம் ஆண்டுகளில், எடைகுறை வாக உள்ள குழந்தைகள் அதிகம் உள்ள 129 நாடுகளில் இந்தியா கடைசியில் இரண்டா வது இடத்தைப் பெற்றுள்ளது.
நமக்கும் கீழ் டிமோர்-லெஸ்டே (Timor Teste) (உலக வரை படத்தில் கண்டுபிடிக்க முயலுங்கள்) என்ற நாடுதான் இருக்கிறது. இந்தியாவின் 2012 உலகப் பட்டினி குறியீட்டு எண் 22.9 ஆகும். 1996 உலகப் பட்டினி குறியீட்டு எண்ணில் 22.6 ஆக இருந்ததைவிட இது அதிகம். ஆட்சி யாளர்கள் மிகவும் படாடோபமாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நவீன தாராளமயச் சீர் திருத்தக் கொள்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி இருபதாண்டு காலம் கழித்து மக் களின் நிலை இதுதான். இதேபோன்று ‘‘அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி, தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான போதனை, அரசுப் பள்ளி களின் தரம் உயர்த்தப்படும். அவை விரிவாக் கப்பட்டு மேம்படுத்தப்படும் ’’ என்றும் காங் கிரஸ் கட்சியால் உறுதிமொழிகள் அள்ளிவீசப் பட்டிருக்கின்றன. கல்வி உரிமையை அடிப் படை உரிமையாக்கி அரசியலமைப்புச் சட் டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் இது இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. அதே சமயத்தில் கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையும் வணிகமயமாக்குவதையும் சட்டப்பூர்வமானதாக மாற்றக்கூடிய வகை யில், புதிய சட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் சுமார் ஐந்தில் நான்கு பங்கு திறமைமிகு மனித ஆற்றல் தனியார் நிறுவனங்களிலிருந்து வரு கிறது. அமெரிக்காவில் இது நான்கில் ஒரு பங்கு மட்டுமே. அரசு நிறுவனங்களுக்கு இது வரை அளித்து வந்த நிதி ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைப்பதும், ஊழியர்களின் எண் ணிக்கையைச் சுருக்குவதும் தொடர்கின்ற அதே சமயத்தில், தனியார் மற்றும் வணிக ரீதியான கல்வி நிறுவனங்களை ஆட்சியாளர்கள் விரிவாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆயினும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிரகடனத்தில், ‘‘நாங்கள் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை ஒவ்வோராண்டும் உருவாக்கு வோம்’’ என்றும் ‘‘இவ்வேலைகளை எடுத்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்போம்’’ என்றும் உறுதிமொழிகளை அள்ளி வீசியிருக்கிறது. பொருளாதாhரக் கொள்கையைப் பொறுத்த வரையில், இந்திய விவசாயிகள் வளமாக இருப்பதாகவும், அவர்களுக்கு நியாயமான மற் றும் அவர்களுக்கு இலாபகரமான வகையில் குறைந்தபட்ச ஆதாரவிலை அளித்து வருவ தாகவும் கூறியிருக்கிறது. ஆனால், விவசாயி களின் உற்பத்திச் செலவினம், ஆட்சியாளர் கள் அளித்துவரும் குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித் திருக்கிறது. விவசாய உற்பத்திச் செலவினம் கட்டுப்படியாகாத நிலைக்குச் சென்றதை அடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருக்கக்கூடிய நிலையில்தான் இவ்வாறு காங்கிரஸ் கட்சி கூறியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிரகடனத் தில் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர் திருத்தக் கொள்கைகளை நியாயப்படுத்தி இருப்பது மட்டுமல்ல, உண்மையில் நாட்டு மக்களுக்கு ‘‘வளமான’’ வாழ்க்கையை அளித்திருப்பதாகத் தன்னைத்தானே பாராட் டிக் கொண்டும் இருக்கிறது. உதாரணமாக, அது சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கும் முடிவை முற்றிலும் சரியான ஒன்று என்று கூறி யிருக்கிறது. பிரகடனத்தின் உச்சக்கட்டம் என்பது வரவிருக்கும் தேர்தல்களின்போது மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக அது தேர்ந்தெடுத் திருக்கக்கூடிய மூன்று முழக்கங்கள்தான். ‘‘உங்கள் பணம் உங்கள் கையில்’’ என்று கூறும் பணப்பட்டுவாடாத் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நிலங் களைக் கையகப்படுத்தும்போது அவர்களுக்கு அளித்திடும் இழப்பீடு மற்றும் மறுவாழ்வு தொடர்பாகக் கொண்டுவந்துள்ள புதிய சட்டம் ஆகியவையே அந்த மூன்று முழக்கங்களு மாகும்.பணப்பட்டுவாடாத் திட்டம் மாபெரும் மோசடித் திட்டம் மட்டுமல்ல, அது தொடர் பாக நாடாளுமன்றத்தில் சட்டம் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அது சட்டவிரோதமான ஒன்று. நாடாளுமன்றத் தின் முன் நிலுவையில் உள்ள உணவுப் பாது காப்புச் சட்டமுன்வடிவும் உணவு தானியங் கள் நாட்டு மக்கள்அனைவருக்கும் கிடைப் பதை உத்தரவாதம் செய்யக்கூடிய விதத்தில் இல்லை. நாட்டில் உள்ள அனைத்துக் குடும் பங்களுக்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைவருக்குமான பொது விநியோக முறையின் மூலம் கிலோ 2 ரூபாய்க்கு மிகைப்படாத விதத்தில் மாதந் தோறும் 35 கிலோ உணவு தானியங்களை அளிக்காதவரை நாட்டில் அர்த்தமுள்ள உணவுப் பாதுகாப்பை அளிக்க முடியாது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு இம்மூன்று உத்திகளையும் அறிவித்துள்ளது. ஆயினும், நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத் தங்கள் மூலமாக உயர் வளர்ச்சி விகிதங்களை எட்டுவதற்கான முயற்சிகளும், அதே சமயத்தில் ‘‘ஏற்றத் தாழ்வைக் குறைப்பதற்காக வேலைகளுடன் உள்ளார்ந்த வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல் லப்படுவதும் பொருத்தமற்றவைகளாகும். ‘‘ஒளிரும் இந்தியர்’’களுக்கான நடவடிக்கை களைத் தீவிரப்படுத்துவது என்பது ‘‘அல் லலுறும் இந்தியர்’’களின் வாழ்வை நேரடி யாகப் பாதிக்கும் அம்சங்களாகும். முதலாளித் துவத்தின் குணம் அதுதான். 

ஆட்சியாளர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு மூலதனத்தின் உச்சபட்ச லாபத்திற்காக நாட்டின் பொருளா தாரத்தையும் வளங்களையும் அனுமதிக்கும் நடவடிக்கைகளானவை, மக்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தி, இரு இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவாக்கிடவே வழிவகுத்திடும்.இத்தகையத் திசைவழியில் செல்ல வேண்டும் என்பதற்காகக் காங்கிரஸ் கட்சி, தன்னுடைய ஜெய்ப்பூர் பிரகடனத்தில் அமெ ரிக்காவினால் தலைமை தாங்கப்படும் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகத் தன்னுடைய சுயேச்சையான அயல்துறைக் கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது. ‘‘இந்தியாவின் அயல்துறைக் கொள்கை பண்டித நேருவால் பறைசாற்றப்பட்ட அணிசேராக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் அதே சமயத்தில், தற்போது வேகமாக மாறிவரும் உலக நிலைமைகளுக்கேற்ப நாடுகளுக்கு இடையிலான உறவுகளையும் பின்பற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது’’ என்று காங்கிரஸ் கட்சி கூறி யிருக்கிறது. இவ்வாறு கூறி இதுவரை இருந்துவந்த அணிசேராக் கொள்கையி லிருந்து நழுவிச் செல்ல முன்வந்திருக்கிறது. 

‘‘நாம் நம்முடைய அண்டைநாடுகளில் நடை பெறும் நிகழ்ச்சிப்போக்குகள் குறித்து கவலை கொண்டபோதிலும், ‘‘தெற்காசியாவில் இந்தியாவின் தலைமைப்பாத்திரத்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டியது இன்றையத் தேவை.’’ என்று காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிரகடனத்தில் கூறியிருக்கிறது. இதற்கு என்ன பொருள் என்பது விளக்கப்பட வில்லை. இவற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் அந்நிய மூலதனத்திற்கு மேலும் அதிகமான அளவில் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதும் அதனைத் தொடர்ந்து நம் சுயேச்சையான அயல்துறைக் கொள்கை மீதும் கடும் நிர்ப்பந்தங்கள் ஏற்பட இருக்கின்றன என்பதும் தெளிவாகி இருக் கிறது. இவ்விரு முக்கியமான கொள்கை களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி யிலிருந்து பாஜகவானது பெரிய அளவில் வித்தியாசப்படவில்லை. நாட்டையும் நாட்டு மக்களையும் வளப் படுத்தக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள் கையே இன்றைய தேவையாகும். வரவிருக்கும் தேர்தல்கள் அத்தகையதொரு இடது - ஜன நாயகக் கொள்கை மாற்றை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Monday, January 21, 2013

புரட்சிகர எழுச்சிக்கான புறச்சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்வதற்கு - அகக்காரணிகளை வலுப்படுத்திடுவோம்
சீத்தாராம் யெச்சூரி
ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி 2012 டிசம்பர் 15-16 தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சர்வதேச சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.  சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் -இன்றும் நாளையும்என்ற தலைப்பில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதன் மீது தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உலகில் தெரிவு செய்யப்பட்ட சில கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. உலக நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்  உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சனைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் குறித்து விவாதிப்பதற்காக இச்சந்திப்பு நடைபெறுவதாக ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மிகவும் ஐயந்திரிபறத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு உதயமானதின் 90ஆவது ஆண்டு விழாவும் (சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு 1922 டிசம்பரில் உதயமானது.) இதனுடன் சேர்ந்து கொண்டாடப் பட்டது.
இதில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளில் முக்கியமானவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, போர்த்துக்கீஸ் கம்யூனிஸ்ட் கட்சி,கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, உக்ரேன் கம்யூனிஸ்ட் கட்சி, பொஹிமியா மற்றும் மொராவியா கம்யூனிஸ்ட் கட்சி, லெபனீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் ரஷ்யன் சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியும்  (சிபிஆர்எப்-Communist Party of Russian Federation) ஆகும்.
ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்றத் தேர்தல்களில் ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான அளவிற்கு முன்னேறியுள்ள பின்னணியில் இச்சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 20 விழுக்காடு வாக்குகளை ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்று, டூமா என்கிற ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தன்னுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் உள்ள 30 நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் ஆறு நிலைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு சிபிஆர்எப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்திப்பினைத் தொடங்கி வைத்த ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுத் தலைவரான கெனடி ஜுகானோவ், மாஸ்கோவில் நீண்ட காலத்திற்குப் பின்னர் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சந்திப்பு நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டானது , சோவியத் யூனியன் உதயமான 90ஆம் ஆண்டுடன், இரண்டாவது உலக யுத்தத்தில் திருப்பு முனையாக அமைந்த, ஹிட்லரின் பாசிஸ்ட் ராணுவம் நிர்மூலமாக்கப்பட்டு, 27 ஜெனரல்களுடன் மூன்று லட்சம் பாசிஸ்ட் படையினர் சரண் அடைந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டாலின்கிராடு வெற்றியின் 70ஆம் ஆண்டு தினமுமாகும்.  இதன்பின்னர், பாசிஸ்ட் படையினர் பின்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்த மூன்றாண்டுகளில், பெர்லினில் ஹிட்லரின் தலைமையகமான ரெய்ச்ஸ்டாக்கில் செங்கொடியை உயர்த்தியதை அடுத்து அவர்கள் முழுமையாக முறியடிக்கப்பட்ட செய்தி உலகுக்குப் பறைசாட்டப்பட்டது.
ஜுகானோவ் பேசுகையில், உலகப் பொருளாதார நெருக்கடி குறித்தும் வரவிருக்கும் காலங்களில் அது மேலும் மோசமாகும் என்றும் தெரிவித்தார். இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் பொதுவாக இரு அம்சங்களில் ஒத்துப்போகின்றன என்று அவர் தெரிவித்தார். அதாவதுஅனைத்துக் கட்சிகளும் மார்க்சிசம்-லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவை என்பதோடு, முதலாளித் துவத்தைத் தூக்கி எறிந்து, சோசலிசத்தை நிறுவி உண்மையான மனிதகுல விடுதலையை எய்துவதன் மூலம் மட்டுமே தற்போதுள்ள முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்டவைகளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  அதன் அடிப்படையில், எதிர்காலத்தில் புதியதொரு சோசலிச சமுதாயத்தைக் கட்டிடவரலாற்றிலிருந்தும் அதன் அனுபவங்களிலிருந்தும்  நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  சீத்தாராம் யெச்சூரி இச்சந்திப்பில் பங்கேற்று உரைநிகழ்த்தினார். இச்சந்திப்பில் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் இரு சுற்றுக்கள் பேசுவதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.  முதல் சுற்றில் ஒவ்வொருவருக்கும் இருபது நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் சுற்றில் அனைவரும் பேசியபின்னர் அவர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இரண்டாவது சுற்றில் அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். சர்வதேச நிலை குறித்து அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் அனைத்துக் கட்சியினரும் புரிந்துகொள்ள விவாதங்கள் உதவின. அதேபோன்று தங்கள் நாடுகளில் தாங்கள் மேற்கொண்டுவரும் உத்திகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் அனைவரும் விளக்கினார்கள். இக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜுகானோவ் கூறியதைப்போல, உண்மையில் நீண்ட காலத்திற்குப்பின் நாம் மாஸ்கோவில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  கம்யூனிஸ்ட் கட்சிகளின் இதுபோன்றதொரு கூட்டத்தில் நான் 1987இல், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் அக்டோபர் புரட்சியின் 70ஆம் ஆண்டு தினத்தில் கலந்துகொண்டேன். அதன்பின் நடைபெற்ற நிகழ்வுகள் சோவியத் யூனியன் தகர்விற்கும், எதிர்ப்புரட்சி வெற்றி பெறவும் இட்டுச் சென்றதை நாம் அனைவரும் அறிவோம்.
தாங்கள் விடுத்திருந்த அழைப்பில், அனைத்துக் கட்சியினரும் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைக் கூறலாம் என்று ஐயந்திரிபறக் குறிப்பிட்டிருந்ததால் நான் என் உரையைத் தயார் செய்து எடுத்துவரவில்லை. அதற்காக மொழிமாற்றுநர்கள் அருள்கூர்ந்து என்னை மன்னித்தருள வேண்டுகிறேன். ஜுகானோவ்  கூறிய கருத்துக்களின் மீது ஒருசிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன்.
அவர்கூறியதைப் போல, வரலாற்றின் அனுபவங்களிலிருந்து முறையாகப் படிப்பினைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசம் வீழ்ச்சிய்டைந்தது குறித்து உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் பலதங்களுக்குள் பகுப்பாய்வினைச் செய்து, சொந்த முடிவுகளுக்கு வந்துள்ளன.  1992 ஜனவரியில் நடைபெற்ற எங்கள் கட்சியின் 14ஆவது கட்சிக் காங்கிரசில் எங்கள் பகுப்பாய்வினை நாங்களும் செய்திருக்கிறோம்.  ஆயினும் இதன் ஒரு பகுதியாக இருந்த ரஷ்யக் கம்யூனிஸ்ட்டுகள் இதுகுறித்து அலசி ஆராய்ந்து ஒரு மதிப்பீட்டிற்கு வரும்வரை, நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்தும் முழுமையடைந்தது என்றோ போதுமானதென்றோ இயற்கையான முறையில் சொல்ல முடியாது.  கடந்த இருபதாண்டு காலமாக அத்தகையதொரு மதிப்பீட்டினை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக  அத்தகையதொரு ஆய்வு தங்களிடமிருந்து  இதுவரை வரவில்லை. இப்போதாவது ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி   இந்த இடைவெளியை - மிக முக்கியமான இந்த இடைவெளியை - நிரப்பிட முன்வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு அது மேற்கொள்ளும் ஆய்வு சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசத்தின் எழுபதாண்டு கால அனுபவங்களை முறையாகப் புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் உதவிடும்.
 மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக  மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு சோசலிச சமூகத்தைச் உருவாக்கிய காலம் அது, பாசிசத்தின் தோல்விக்கு அதனுடைய பங்களிப்பு, அதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலிருந்து காலனியாதிக்கங்கள் முடிவுக்கு வந்தமை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மிகவும் குறுகிய காலத்திலேயே வலுவானதொரு அரணாக மாறியது அனைத்தும் இக்காலகட்டத்தில்தான் நடைபெற்றது. இவ்வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளாகும். எதிர்கால மனிதகுல நாகரிகத்தினை வடிவமைத்திட்டவைகளாகும். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் இப் போது  கடந்த காலமாகிப்போனது.
கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் ஐந்து அம்சங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். முதலாவது, மார்க்சிசத்தின் சாராம்சம், லெனின் கூறியதைப் போன்று ‘‘துல்லியமான நிலைமைகளிலிருந்து துல்லியமான பகுப்பாய்வினை மேற்கொள்ளவேண்டும்’’ ('உடிnஉசநவந யயேடலளளை டிக உடிnஉசநவந உடினேவைiடிளே') என்பதில் அடங்கியிருக்கிறது என்கிற உண்மை இந்த அனுபவங்களிலிருந்து உறுதியாகி இருக்கிறது. இரண்டாவதாக, சோவியத் யூனியன் தகர்வு எந்தவிதத்திலும் மார்க்சிச-லெனினிசத்தின் ஆக்கபூர்வமான அறிவியலை மறுதலித்திடவில்லை. அதேபோன்று சோசலிச சமுதாயத்தை அமைத்திட வேண்டும் என்கிற மனிதகுலத்தின் தூண்டுதலையும் அது மறுதலித்திட வில்லை. மூன்றாவதாக, நாம் முன்பு தவறாகக் கருதிக் கொண்டிருந்ததைப்போன்று, முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் இடைப்பட்ட காலம் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. இது, வர்க்கப் போராட்டம் உக்கிரமாக நடைபெற்றஏற்றத் தாழ்வுகளும், முன்னோக்கிச் செல்லுதலும் அதே போன்று பின்னோக்கிச் செல்லுதலும் மாறி மாறி நடைபெற்ற காலமுமாகும். இருபதாம் நூற்றாண்டு முன்னோக்கிச் சென்ற காலமாக இருந்த அதே சமயத்தில், நூற்றாண்டு முடியும் தருவாயிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பின்னோக்கிச் செல்லும் காலமாக இருந்தது. நான்காவதாக, முதலாளித்துவம் என்பது அது என்னதான் கடும் நெருக்கடிக்கு உள்ளானபோதிலும் தானாக நிர்மூலமாகிவிடாது. இறுதியாக, வரலாற்றின் குறிப்பிட்ட எந்தக் காலத்திலும், முன்னேறிவரும் சோசலிச சக்திகளின் இடைமாற்றக் காலத்தின்போது, அடிப்படைத் தீர்மானிக்கும் சக்தி, ’வர்க்க சக்திகளின் சமநிலை வலிமையை சரியாக மதிப்பீடு செய்வதையும் மற்றும் துல்லியமான முறையில் அரசியல் கொள்கைகளை உருவாக்குவதையும் சார்ந்தே இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய வர்க்கசக்திகளின் சமநிலை வலிமை  ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே இருக்கிறது.
தற்போதைய அரசியல் நிலைமை
தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆறு அம்சங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, இன்றைய நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு, ஏகாதிபத்தியம்  உலகின் மீது தன்னுடைய ஒருதுருவக் கோட்பாட்டை அரக்கத்தனமாகத் திணித்திட விரும்புகிறது. பொருளாதாரம், அரசியல், ராணுவம், சமூகம், கலாச்சாரம் என்று அனைத்துத் துறைகளிலும் அவ்வாறு திணித்திட வேண்டும் என்று அது விரும்புகிறது.  இரண்டாவதாக இது சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் உலக மூலதனமானது பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்சபட்ச லாபம் (யீசடிகவை அயஒiஅளையவiடிn) என்கிற தன்னுடைய கருணையற்ற குறிக்கோளை அடைந்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் காலமாகும். ஆயினும், சர்வதேச நிதிமூலதனத்தின்  வெளிப்பாடு   ஏகாதிபத்தியம் தொடர்பாக லெனினது புரிதலை எந்தவிதத்திலும் மறுதலித்திடவில்லை. தொழில்துறையினருக்கும் வங்கிகள் மூலதனத்திற்கும் இடையிலான பிணைப்பு நிதி ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்லும் (நேஒரள நெவறநநn iனேரளவசயைட யனே யெமேiபே உயயீவையட டநயனiபே வடி கiயேnஉயைட டிடபையசஉhநைள) என்கிற லெனினது புரிதல் எவ்விதத்திலும் மறுதலிக்கப்படவில்லை.  உச்சபட்ச லாபம் என்கிற தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்வதற்காக உலகையே தங்களது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர அவர்கள் முயன்று கொண்டே இருப்பார்கள்.  ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் தவிர்க்கமுடியாத வகையில் யுத்தங்களுக்கு இட்டுச்செல்கின்றன.  லெனின் ஏகாதிபத்தியம் தொடர்பாகக்கூறிய கருத்துக்கள் அவ்வாறு அவர் கூறி பத்தாண்டுகள் முடிவதற்கு முன்னாலேயே முதல் உலகப் போர் எழுந்ததன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின் மூலம் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களை உள்நாட்டு யுத்தமாக - அதாவது ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் ஒரு வர்க்கப் போராக  மாற்றி அதனுடைய சங்கிலியில் எங்கு பலவீனமான கொக்கி இருக்கிறதோ அதனை உடைத்தெறிய வேண்டும் என்கிற லெனினது புரட்சிகர தந்திரோபாய புரிதலையும்  மிகச்சரி என்று மீளவும் உறுதிப்படுத்தி இருக்கிறது.  ரஷ்யப் புரட்சி லெனினது இந்தப் புரிதலை மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியது.
இன்றைய தினம், சர்வதேச நிதி மூலதனம் என்பது குறிப்பிட்ட ஒரு ஏகாதிபத்திய மையத்தில் மட்டும் சுருங்கிக் கொண்டிருக்கவில்லை.மாறாக அது உலகம் முழுதும்  உச்சபட்ச லாபம் என்கிற குறிக்கோளை எய்திட வேண்டும் என்ற வெறித்தன்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது.   இவை அனைத்தும் இன்றைய தினம் மறுதலிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை. மாறாக,  ’’அதிகரித்துக் கொண்டிருக்கும் உலக முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் காலகட்டத்தில்  நிதிமூலதனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும், தொழில்துறை, வணிகத்துறை போன்ற மற்ற அனைத்து வகையான மூலதனங்களும் அதன் வலைக்குள் சிக்கிக்கொள்ளும் மற்றும் அதன் தலைமையின் கீழ் கொண்டுவரப்படும்’’ என்கிற ஏகாதிபத்தியம் குறித்த லெனினது கணிப்பினை மிகச்சரி என்று இன்றைய நிகழ்ச்சிப் போக்குகள் மெய்ப்பித்திருக்கின்றன. இன்றையதினம் லெனின் சொல்லிவைத்தாற் போன்று இவை மிகவும் சரியாக நடந்து கொண்டிருக்கின்றன. லெனின்அவருடைய கால கட்டத்திலிருந்த துல்லியமான நிலைமைகளை மிகவும் துல்லியமாகப் பரிசீலித்து ஏகாதிபத்தியம் குறித்த  அவரது புரிதலை பிரயோகித்து, ரஷ்யப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திமுடித்தார்.  அந்தக் காலகட்டம்தான் இன்றைய தினம் மாறியிருக்கிறதே யொழிய, லெனினது பகுப்பாய்வு அல்ல.
மூன்றாவதாக, இன்றைய தினம் சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய ஆதிக்கம் சுரண்டலை மேலும் பல்வேறு துறைகளுக்கு விரிவு படைத்திருக்கிறது. சுகாதாரம், கல்வி, மின்சாரம் போன்று எண்ணற்ற துறைகள் அதன் கொள்ளை லாப வேட்டைக்கு இன்றைய தினம் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. நான்காவதாககொள்ளை லாபம் ஈட்டவேண்டும் என்பதையேக் குறியாகக்கொண்ட  அதனுடைய தங்குதடையற்ற சுரண்டல்தான் இன்றைய உலகப்பொருளாதார நெருக்கடிக்கு முதற்காரணமாகும். இந்நெருக்கடி இன்றைய தினம் அதன் ஐந்தாவது கட்டத்தில் இருக்கிறது. உலக மக்களில் பெரும்பான்மையோரின் வாங்கும் சக்தி குறைந்ததன் காரணமாகவே கூர்மையான வீழ்ச்சியுடன் இது தொடங்கியது. அதீத உற்பத்தி நெருக்கடியை எதிர்பார்த்து உலக முதலாளித்துவம் அதலிருந்து மீண்டுவிட வேண்டும் என்பதற்காக மக்களுக்கு மிக எளிதான விதத்தில் கடன்கள் அளிக்க முன்வந்தன. இவ்வாறு கடன் வாங்கிய மக்கள் அதனைச் செலவழிப்பதன் மூலம் தாங்கள் பெறும் கொள்ளை லாபம் தொடரும் என்று அது கருதியது. ஆனால் கடன் வாங்கிய மக்கள், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஏற்பட்டது. அது, 2008ஆம் ஆண்டைய உலக நிதி மந்தநிலைக்கு (படடியெட கiயேnஉயைட அநடவனடிறn) இட்டுச் சென்றது. இந்நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள முதலாளிகளுக்கும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் நிவாரணங்கள் (hரபந யெடை-டிரவ யீயஉமயபநள)  வழங்கின. இவ்வாறு கார்ப்பரேட் திவால்நிலைமைகள் அந்தந்த நாடுகளின் அரசுகளின் திவால் நிலைமைகளாக மாற்றப்பட்டதை அடுத்து நெருக்கடியின் நான்காவது கட்டம் ஏற்பட்டது. பின்னர் முதலாளித்துவ நாடுகள் தங்கள் திவால்நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தாங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு அளித்து வந்த சமூகநலத் திட்டங்கள் அனைத்தையும் வெட்டிச் சுருக்கின. இது நெருக்கடியின் ஐந்தாவது கட்டமாகும். அரசுகளின் இந்நடவடிக்கைகளினால் மக்களின் வாங்கும் சக்தி மீண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெட்டிக் குறைக்கப்பட்டது. இது நெருக்கடியின் ஆறாவது கட்டத்திற்கு இட்டுச் செல்வதற்கான காரணங்களாகும். எனவேதான் வரவிருக்கும் ஆண்டு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஜுகானோவ் கூறியதை நானும் ஒப்புக்கொள்கிறேன். உண்மையில், 2014ஆம் ஆண்டும் இந்த ஆண்டைவிட மேலும் மோசமாக இருக்கும் என்று அவர் கூறியதை விரிவுபடுத்தி நான் கூற விரும்புகிறேன். ஏனெனில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தாங்கள் வாங்கியுள்ள அபரிமிதமான கடன்களை மீண்டும் செலுத்த முடியா நிலை ஏற்பட்டு அவை மீண்டும் திவால்நிலைக்கு வரும்போது நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும். இந்நெருக்கடி தீர முதலாளித்துவ அமைப்பினால் விடை காண முடியாது. அதனுடைய அரசியல் மாற்றான, சோசலித்தால் மட்டுமே அதற்கு விடை காண முடியும்.
ஐந்தாவதாக, உலகம் முழுதும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பு அலைகள். லத்தீன் அமெரிக்க நாடுகள் ஓர் உத்வேகமூட்டும் உதாரணமாக முன்னிற்கின்றன. ஆயினும், இங்கும் கூட, சோசலிச கியூபாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்பிற்குள்ளாகவே நவீன தாராளமயத்திற்கு மாற்றினை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றினை அளிக்கக்கூடிய விதத்தில் முன்னேறும் என்று நாம் நம்புவோமாக.
பிரதான கடமை
இறுதியாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வரும் எதிர்ப்பலைகளை ஒருங்கிணைத்திட வேண்டியது அவசியமாகும். உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் நவீன தாராளமயத்திற்கும் எதிராக உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விட்டுள்ள யுத்தங்களுக்கு எதிராகவும் உலக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமி வெப்பமயமாதல் (உடiஅயவந உhயபேந) போன்றவற்றிற்கு எதிராகவும் உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும். உலகளாவிய வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக  ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.   இவ்வியக்கத்தின் அச்சாணியாக கம்யூனிஸ்ட்டுகள் நிற்க வேண்டும்.
இதனை எப்படிச் செய்யப்போகிறோம் என்பதே இன்றைய தினம் நம்முன் விவாதத்திற்கு வந்துள்ள முக்கிய அம்சம். இங்கு பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொன்றுமே  தங்கள் தங்கள் நாடுகளில் உள்ள வர்க்க சக்திகளின் சேர்மானங்களை புரட்சிகரமான முறையில் மாற்றி இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. புறச் சூழல் தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பை புரட்சிகரமாகத் தூக்கி எறியக்கூடிய அளவிற்கு  மிகவும் கனிந்துள்ளது என்றபோதிலும், லெனினிஸ்ட் அகக்காரணி, அதாவது மார்க்சிச-லெனினிசத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கக் கட்சிகளின் தலைமையின் கீழ் சுரண்டப்படும் அனைத்துப் பிரிவினரின் வர்க்கப் போராட்டங்களின் வலுபலவீனமாகவே  இருப்பது தொடர்கிறது.  தற்போதுள்ள அகக்காரணிபுறச் சூழலை ஒரு புரட்சிகரமான எழுச்சிக்குப் பயன்படுத்தக்கூடிய அளவில் சக்திபடைத்ததாக இல்லை. அவ்வாறு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு கூடியுள்ள அனைத்து நாடுகளிலும் வந்துள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முன் உள்ள பிரதானக் கடமையாகும்.
இந்தியாவில் எங்களுடைய அனுபவங்கள் என்ன என்பது குறித்து சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்ற மத்திய அரசாங்கத்தின் மூலம் தங்களுடைய நிகழ்ச்சிநிரலை அமல்படுத்திட அனுமதிக்காது என்பதைப் புரிந்து கொண்ட ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் இடதுசாரி சக்திகள் வலுவாகவுள்ள இடங்களில் அதனைப் பலவீனமாக்குவதற்காகவும் அதனைத் தாக்குவதற்காகவும் ஒன்று சேர்ந்தன. இவர்களின் அரசியல் கூட்டணி மாமேதைகளான காரல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முதல் வரிகளில் கூறியுள்ள வாசகங்களை நினைவூட்டும்விதத்தில், இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். இம்மாநிலத்தில் கடந்த முப்பதாண்டு களாக  தொடர்ந்து ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியிலிருந்தோம். 2009இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களுக்குப்பின் 600க்கும் மேற்பட்ட நம் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் நம்மீது தொடுத்துள்ள தாக்குதல்களை எதிர்த்துவரும் அதே சமயத்தில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இத்தகையப் பகுதிப் போராட்டங்களின் மூலமாகத்தான் வலுவான வர்க்கப் போராட்டங்களைக் கட்டிட முடியும். எங்களுடைய அனுபவத்தில், இவ்வாறான போராட்டங்கள் மூலமாகவே, அகக்காரணியை  வலுப்படுத்திட முடியும் என்று கருதுகிறோம்.
இதேபோன்று மற்ற தோழர்களின் கருத்துக்களையும் அவர்கள் பெற்ற படிப்பினைகளையும் தெரிந்துகொள்வதில் ஆவலாக இருக்கிறேன்.
இறுதியாக, இந்த ஆண்டு மாஸ்கோ மிகவும் குளிராக இருக்கிறது. இத்தகைய கடும் குளிர்காலத்தின்போதுதான் லெனின் தலைமையில் அக்டோபர் புரட்சி மகத்தான வெற்றி பெற்றது என்கிற உண்மையும், இதேபோன்ற நிலைமைகளின் கீழ்தான் ஸ்டாலின் தலைமையில் பாசிசம் முறியடிக்கப்பட்டது  என்கிற உண்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டக்கூடிய மூலக்கூறுகளாகும்.   தத்துவார்த்த உறுதியுடன் தீர்மானகரமான முறையில் செயல்பட்டால் அனைத்துவிதமான தடைகளையும் தகர்த்தெறிந்து புரட்சிகர இயக்கம் முன்னேற முடியும் என்பதனை இவை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. 
இதுவரை என் உரையைக் கவனமாகக் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி தோழர்களே.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(தமிழில்: ச.வீரமணி)

Sunday, January 20, 2013

நவீன தாராளமயக் கொள்கையின் திசைவழியை மாற்றி அமைத்திடுவோம்


ஆண்டு பட்ஜெட் வரவிருப்பதை அடுத்து, மக்கள் மத்தியில் அதுதொடர்பான ஆர்வமும் அதிகரித்துள்ளது. மக்கள் பொதுவா கவும், பல்வேறு பிரிவினர் குறிப்பாகவும் பட்ஜெட் சமயத்தில் வாங்கவேண்டிய பொருள்களின் பட்டியல்களைத் தயாரிப்பது இயற்கையே.நாட்டில் பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசமாகவுள்ள ஆண்டுகளில் ஒன்றாக இந்த ஆண்டு விளங்குகிறது. இந்தப் பின்ன ணியில் வரவிருக்கும் பட்ஜெட் சமர்ப்பிக்கப் படவிருக்கிறது. முடிவடைய விருக்கும் இந்த நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற் பத்தி (ழுனுஞ) வளர்ச்சி விகிதம் விரைவில் அறி விக்கப்பட உள்ளது. எப்படி மதிப்பிட்டுப் பார்த் தாலும் அது 6 விழுக்காடு அளவிற்குத்தான் இருக்கும் என்று தெரிகிறது. இதன் விளை வாக பொருளாதாரம் மிகப்பெரிய அளவிற்கு மந்த நிலைக்குத் தள்ளப்படும். அதன் தொடர்ச்சியாக வேலையில்லாத் திண்டாட் டமும் அதிகரித்திடும், வருவாய் அளவுகளும் குறைந்திடும். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்துப் பண்டங்களின் விலைகளும் குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால், மக்களின் உண்மை ஊதியம் (real wage) கணிசமான அளவிற்கு மதிப்பிழப்பது தொட ரும். இத்தகைய நிலைகளின் காரணமாக, ஏதேனும் சலுகைகள் அளிக்கப்படலாம் என்று மக்கள் பிரிவினரில் பல்வேறு பிரிவின ரும் எதிர்பார்ப்பது இயற்கையே.சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் எதிர் பார்ப்புப் பட்டியல்களில், மிகவும் செல்வாக்கு செலுத்துவது என்பது, நவீன தாராளமயத் திற்குத் தலைமை தாங்குகிற சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகள்தான்.

இது, தான் மேலும் உச்சபட்ச லாபம் ஈட்டும் விதத் தில் நம் நாட்டின் பொருளாதாரத்தின் கதவு களை மேலும் அகலத் திறந்து வைக்கக் கோருகிறது. இதன் காரணமாகத்தான் சென் செக்ஸ் ஏற்கனவே 20 ஆயிரம் புள்ளிகளைக் கிட்டத்தட்ட எட்டியிருக்கிறது. தற்போதைய ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் நிச்சயமாக சர்வதேச நிதிமூலதனம் மற்றும் இந்தியப் பெரும் வர்த்தகர்களைத் திருப்திப்படுத்தக் கூடிய விதத்தில் வளைந்து கொடுத்திடும் என்று நம்பப்படுவதே இதற்குக் காரணமா கும். ஏற்கனவே, நாட்டில் மிகவும் விரிவான வகையில் கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும் கூட, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. வங்கி கள் தேசியமயமாக்கப்பட்டதன் பயன்களை முற்றிலுமாக அழிக்கக்கூடிய விதத்தில் வங் கிச் சீர்திருத்தங்கள் சட்டமாக்கப்பட்டுவிட் டன. அதன் மூலம் அந்நிய வங்கிகள் இந்தியா வில் உள்ள தனியார் வங்கிகளைக் கபளீகரம் செய்திட வழிவகுத்துக் கொடுக்கப்பட்டுவிட் டது. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கி றது. வரி ஏய்ப்பாளர்களைக் கட்டுப்படுத்தக் கூடிய விதத்தில் கொண்டுவரப்பட்ட பொது வரி ஏய்ப்புத் தவிர்ப்பு விதிகள் (GARR) ஈராண்டு காலத் திற்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இது சென்ற பட்ஜெட்டின்போதுதான் அப்போ தைய நிதியமைச்சராகவும் தற்போது குடிய ரசுத் தலைவராகவும் இருக்கின்ற பிரணாப் முகர்ஜியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிய நாட்டு முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக மொரீசியஸ் வழியாக வருகின்றவர் களுக்கு, லாபத்தின் மீதான அனைத்து வரி களிலிருந்தும் தப்பித்துக் கொள்ள, இவ்வாறு இவ்விதிகள் ஒத்தி வைக்கப்பட்டதானது மிகப்பெரிய நிவாரணமாக வந்திருக்கிறது. மேலும், இச்சட்டவிதிகள் அமல்படுத்தப்பட விருக்கும் 2016-17இல்கூட, மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டுபவர்கள் மட் டுமே வரி கட்டக்கூடிய விதத்தில் இச்சட்ட விதிகள் பொருந்தக்கூடிய விதத்தில் இது மாற்றியமைக்கப்பட்டும் விட்டது. மேலும், இந்தியரல்லாத அந்நிய நிறுவன முதலீட்டா ளர்களுக்கும்,  இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத் தின் கீழ் வரிச் சலுகை பெறாதவர்களுக்கும் இச்சட்ட விதி பொருந்தாது என்றும் கூறப்பட்டுவிட் டது. இவ்வாறான அறிவிப்புகள் மூலமாக மிகப்பெரிய அளவில் வரிஏய்ப்பவர்கள் தப்பித் துக்கொள்ள வழிவகை செய்து தரப்பட்டுவிட் டது. நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கை கள் மேலும் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் சமிக்ஞை காண்பித்து விட்டார். எனவே நாட்டில் ஒளிரும் இந்தியர் களுக்கும் இருளில் வாடும் இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக் கும் என்பது திண்ணம். சர்வதேச நிதி மூல தனத்தை குஷிப்படுத்தக்கூடிய விதத்தில் பல்வேறு சலுகைகள் வரவிருக்கும் பட்ஜெட் டில் காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அந்நிய நிதிமூலதனம் பெரிய அளவில் வந் தால் அதன் காரணமாக முதலீட்டுக்கான நிதி அதிகரித்திடும். அதன் தொடர்ச்சி யாக பொருளதார வளர்ச்சி விகிதம் மேலும் அதி கரித்திடும் என்றும், நம் மக்களின் வாழ்வாதா ரம் மேம்படும் என்றும் ஒரு தவறான புரிந் துணர்வினை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மை நிலை என்ன? அந்நிய மூலதனம் அதிகமாக வந்தால் அதன் உச்சபட்ச லாபத் தை அதிகரித்திடும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பொருளாதார மந்தத்தின் காரண மாக உச்ச பட்ச லாபம் என்பது இல்லாது ஒழிந்துள்ள நிலையில், நம் நாட்டில் உச்ச பட்ச லாபத்தை எடுத்துச்செல்ல அது முயன் றிடும். மேலும், அவர்களின் நிதி முதலீடுகள் மூலம் நம் நாட்டில் வளர்ச்சி அதிகரித்திட வேண்டுமானால், அவர்கள் உற்பத்தி செய்தி டும் பொருள் களை மக்கள் வாங்க வேண்டும். நாம் பல முறை விவாதித் திருப்பதைப்போல, நம் நாட்டு மக்களின் கைகளில் வாங்கும் சக்தி குறைந்துள்ள இன்றைய சூழ்நிலையில், வளர்ச்சி அதிகரித்திடும் என்று நம்புவது வெறும் மாயையேயாகும். இவ்வாறு அரசின் உத்திகள் நாட்டில் ஏற்கனவே பணக்காரர் களாக உள்ளவர்கள் மேலும் லாபம் ஈட்ட உதவிடுமேயல்லாது, பெரும்பான்மையான நாட்டு மக்களின் மீது பொருளாதாரச் சுமை களை மேலும் அதிகரித்திடவே இட்டுச் செல்லும்.ஆட்சியாளர்கள், தாங்கள் கடைப்பிடிக் கும் மேற்படி உத்திகளின் ஒரு பகுதியாக, கடந்த சில ஆண்டுகளாக அளித்துவருவது போன்று பெரிய அளவிலான வரிச் சலுகை களை பணக்காரர்களுக்கு மேலும் தொடர லாம். சென்ற ஆண்டு பட்ஜெட் ஆவணங்கள், இவ்வாறு 5.28 லட்சம் கோடி ரூபாய் அள விற்கு வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டிருப்ப தாகக் காட்டுகின்றன. முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு நிதிப் பற்றாக்குறை 6.9 விழுக் காடாக (அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 5.22 லட்சம் கோடி ரூபாய்களாக) இருந்த போதிலும், 5.28 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆட்சியாளர்கள் இவ்வாறு வரிச்சலுகைகள் அளிக்காது, அத்தொகையை அவர்களிடமி ருந்து வசூலித்திருந்தால் நிதிப்பற்றாக்குறை யையும் போக்கி, 6 ஆயிரம் ரூபாய் உபரியாக வும் பெற்றிருக்க முடியும். மாறாக, அரசு என்ன செய்கிறது? நிதி நிலைமையில் கட்டுப்பாட்டைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில், அதீதமாகவுள்ள நிதிப்பற்றாக் குறையைச் சரிக்கட்ட வேண் டும் என்பதற்காக, அரசாங்கம் மக்கள் மீது இரக்கமேதுமின்றி மிகவும் கொடூரமான முறையில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. அவற்றிற்கு அளித்து வந்த மானியங்களையும் வெட்டிக் குறைத்துள்ளன. இது தொடரும் என்றும் அரசாங்கம் மக்களை மிரட்டியிருக்கிறது. மக்களைச் சொல்லொண்ணாத் துயரத்திற்கு உள்ளாக்கி, பணக்காரர்களைக் கொழுக்க வைக்க வேண்டுமா என்று கேட்பவர்களைப் பார்த்து பிரதமர் அவர்கள் ‘‘பணம் மரத்தில் காய்க்காது’’ என்று எள்ளிநகையாடி இருக் கிறார். 

இவ்வாறு ஆட்சியாளர்களின் கொள் கைத் திசைவழி காரணமாக மிகவும் அவதிக் குள்ளாகி இருப்பது கிராமப்புறங்களில் வாழும் நாட்டுப்புற ஏழை மக்களேயாவர். விவ சாய நெருக்கடி தொடர்கிறது, இதன் காரண மாக விவசாயிகளின் தற்கொலைகளும் தொடர்கின்றன. விவசாயிகளில் 40 விழுக் காட்டினர் கடும் கடன்வலையில் சிக்கியிருப் பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அரசாங்கத் தால் கடந்த இருபதாண்டுகளில் பயிர்க் காப் பீடு பத்து விழுக்காட்டுப் பயிர்களுக்கு மேல் தரமுடியவில்லை.

வேளாண் இடுபொருட்க ளின் செலவினம் அதிகரித்திருக்கக்கூடிய அளவிற்கு அவர்களது விளைபொருட்களுக் கான விலை கிடைத்திடவில்லை. ஐந்து ஏக் கர் நிலத்தில் ஒரு விவசாயி உற்பத்தி செய் திடும் பருப்பு வகைகள் மற்றும் தானியங்க ளுக்கு அவனுக்கு மாதத்திற்கு மூவாயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை. மாநிலங்களவையில் 2012 நவம்பர் 30 அன்று வேளாண் உற்பத்திச் செலவினம் சம் பந்தமான கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் அமைச்சர், வேளாண் செலவினம் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (ஊடிஅஅளைளiடிn கடிச ஹபசiஉரடவரசயட ஊடிளவள யனே ஞசiஉநள) அளித்திட்ட தகவல்களின் அடிப்படையில் 2010-11க்கும் 2011-12க்கும் இடைப்பட்ட காலத்தில் நெல் உற்பத்திச் செலவினம் குவிண்டால் ஒன்றுக்கு 146 ரூபாய் அளவிற் குச் சென்றுள்ள அதே சமயத்தில், அதற்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச ஆதார விலை என்பது வெறும் 80 ரூபாய் மட்டுமே என்று பதிலளித்திருக்கிறார். அதேபோன்று, கோதுமைக்கான உற்பத்திச் செலவினம் 2011-12க்கும் 2012-13க்கும் இடைப்பட்ட காலத்தில் குவிண்டாலுக்கு 171 ரூபாய் உயர்ந் துள்ள அதேசமயத்தில், அதற்குக் கிடைக் கும் குறைந்தபட்ச ஆதாரவிலை வெறும் 65 ரூபாய் மட்டுமே என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு, விவசாயிகளுக்கு உரிய ஆதரவு விலையை அரசாங்கம் கொடுத்துக்கொண்டி ருக்கிறது என்று அரசுத்தரப்பில் கூறப்படுவ தெல்லாம் போலி, பாசாங்கு, வஞ்சகம் என்பது நிரூபணமாகி இருக்கிறது.ஆட்சியாளர்கள் தங்களின் இத்தகைய கொள்கைத் திசைவழி காரணமாக மக்கள் மீது மேலும் கொடூரமான முறையில் தாக்கு தல்களைத் தொடுத்துள்ளனர். இன்றைய தினம் அரசாங்கத்திடம் உள்ள உணவு இருப்பு 665 லட்சம் டன்கள் ஆகும். அதாவது வழக்கமாக இந்தத் தருணத்தில் கிடைத் திடும் அளவைவிட இந்த ஆண்டு அபரிமித மான உற்பத்தியின் காரணமாக மும்மடங்கு இருப்பினைப் பெற்றுள்ளது. ஆயினும், வெளிச் சந்தையில் அரிசி மற்றும் கோதுமை யின் விலைகள் உயர்ந்து, மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றியுள்ள நிலையில், அதனை மட்டுப்படுத்திடக்கூடிய வகையில், ஆட்சி யாளர்கள் தங்கள் வசம் உள்ள உணவு இருப் பிலிருந்து மிகையாகவுள்ள அரிசியையும் கோதுமையையும் மாநிலங்களுக்கு வழங்கிட மறுக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் அரசாங் கம் தன் வசம் உள்ள கிடங்குகளில் ஒரு டன் உணவு தானியங்களைச் சேமித்து வைத்திட டன்னுக்கு 200 ரூபாய் செலவு செய்கிறது. உணவு மானியத்தில் பெரும்பகுதி இத்த கைய செலவினத்திற்குத்தான் செல்கிறதே யொழிய, மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற் குச் செல்லவில்லை. இந்த ஆண்டும் கோது மை அமோகமாக விளைந்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் உணவுப் பொருள்களை இருப்பு வைப்பதற்கான செல வினத்தை மேலும் அதிகரித்திடும். எனவே ஆட்சியாளர்கள் உணவுக்காக ஒதுக்கியுள்ள மானியங்கள் மக்களுக்குப் பயன்படப் போவ தில்லை. நாட்டில் இவ்வாறு அமோகமான முறையில் அறுவடை நடைபெற்றிருந்த போதிலும், சராசரியாக ஒவ்வொரு நபருக்கும் கிடைத்திடும் உணவு தானியங்களின் அளவு குறைந்துகொண்டே செல்கிறது. ஆட்சியாளர் கள் சீர்திருத்தக் கொள்கைகளைக் கடைப் பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னர் 1990-91 இல் ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு 490 கிராம்கள் உணவுதானியங்கள் கிடைத் தன. ஆனால் 2007-09இல் இது 440 கிராம் களாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு உணவு தானிய உற்பத்தி அதிகரித்திருந்த போதிலும் அது மக்களின் வளர்ச்சிக்கேற்ற முறையில் அவர்களுக்குச் சென்றடைந்திட வில்லை. விளைவு, மக்கள் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்துள்ளது. இந்தியாவில் கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 2200 கலோரி உணவுக்குக் கீழ் உண்பவர்கள் வறுமையில் வாடுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
இவர்கள் 1993-94இல் 58.5 விழுக்காடு அளவிற்கு இருந் தார்கள். அது 2009-10ஆம் ஆண்டில் 75 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. அதே போன்று, நகர்ப்புற இந்தியாவில் கலோரி வரை யறை 2100 கலோரிகளாகும். இது 1993-94இல் 57 விழுக்காடாக இருந்தது. இப்போது 2009-10இல் இது 73 விழுக்காடாக அதி கரித்திருக்கிறது.ஆட்சியாளர்கள், தங்கள் வசம் அதிகமான அளவில் உள்ள உணவு இருப்பின் மூலமாக, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் (வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறுமைக்கோட் டுக்கு மேல் என்று) எவ்விதப் பாகுபாடுமின்றி ஒரு கிலோ கிராம் 2 ரூபாய் விலையில் 35 கிலோ கிராம் உணவு தானியங்களை ஒவ் வொரு மாதமும் வழங்கிட முடியும். அதன் மூலம் அனைவருக்குமான உணவுப் பாது காப்பை உத்தரவாதப்படுத்திட முடியும். ஆட்சியாளர்கள் பணக்காரர்களுக்கு வழங்கிடும் வரிச்சலுகைகளுக்குப் பதிலாக, அவர்கள் அளிக்க வேண்டிய வரிகளை வசூல் செய்து அதனை பொது முதலீடுகளில் செலுத்தி, நமக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியது என்றால், அதன் மூலயமாக மிகப்பெரிய அளவில் நாட்டு மக் களின் வேலை வாய்ப்பும் பெருகும், அத னைத்தொடர்ந்து, அவர்களின் குடும்பத் தேவைகளும் அதிகரித்திடும். அது மக்கள் மத்தியில் ஒரு நிலையான வளர்ச்சிக்கும் உதவிடும். ஆனால் ஆட்சியாளர்கள் பணக்காரர்க ளுக்கு வெண்சாமரம் வீசிடும் தங்கள் கொள் கையை மாற்றிக் கொள்வார்களா? சந்தேகமே. மக்களைத் திரட்டி மகத்தான போராட்டங் களை நடத்துவதன் மூலமே அதனைச் செய் திட முடியும். வரவிருக்கும் காலங்களில் அதற்கான மக்கள் இயக்கங்களை வலுப் படுத்திடுவோம். 

தமிழில்: ச.வீரமணி


Sunday, January 13, 2013

அராஜக அரசியலை முறியடிப்போம்


மேற்கு வங்கத்தில் 2013 ஜனவரி 8 புதனன்று ஜனநாயகம் கொடூரமானமுறையில் வன்புணர்வுக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற, இடது முன்னணி அரசாங்கத்தில் நிலச் சீர்திருத்த அமைச்சராகச் செயல்பட்டு வந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் அப்துர் ரெசாக் முல்லா ஜனவரி 6 அன்று சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அரபுல் இஸ்லாம் என்கிற திரிணாமுல் காங்கிரஸ் குண்டர் தலைமையில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட் டார்.

இத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பேரணி கொல்கத்தாவில் செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற்றது. ரெசாக் முல்லா மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாய சங் கத்தின் மாவட்ட மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தார். போகும்வழியில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைப் பார்க்கச் சென்றபோதுதான் அவ்வாறு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். உடனடியாக அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். 

திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் உள்ள மாநில அரசு நிர்வாகம், மனிதாபிமானமற்று மிகவும் இழிவான முறையில், அவருக்கு முறையான சிகிச்சை எதுவும் அளிக்காமல் உடனடியாக அவரை டிஸ்சார்ஜ்செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறது. அவர் கொடூரமான முறையில் தாக்கப்படவில்லை என்று காட்டுவதே இதன்பின்னணியில் உள்ள அரசின் நோக்கமாகும். ஆயினும் அந்த மருத்துவமனையில் அவர் காயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கையானது, அவருக்கு இடுப்புக்கு அருகே முதுகெலும் பில் மிகவும் ஆழமான முறிவு இருப்பதைக் காட்டியிருக்கிறது. மிகவும் வஞ்சகமான முறையில், தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய அரபுல் இஸ்லாம், அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தான் காயம் அடைந்ததாகக் கூறிக் கொண்டிருந்திருக்கிறான். ஆயினும் அம்மருத்துவமனை மருத்துவர்கள் அவனுக்குக் காயங்கள் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளார்கள்.இந்தத் தாக்குதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை ஏற்றி வந்த இருபதுக்கும் மேற்பட்ட வாகனங் கள் தாக்கப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன.

மூவருக்குத் துப்பாக்கிக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 27 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். இதனை எழுதிக்கொண்டிருக்கக்கூடிய இத்தருணத்தில் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்தவர் கள் மீது நடவடிக்கை எதுவும் எடுப்பதற்குப் பதிலாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் கட்டளைக் கிணங்க மாநில காவல்துறையினர் இத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயம் அடைந்தவர்களையே கைது செய்துள்ளனர். பொய்க் குற்றச்சாட்டுக்களின்கீழ் காயமடைந்தோர் கைது செய்யப்பட்டுள்ள அதே சமயத்தில், இக்குற்றங்களைச் செய்திட்ட குண்டர்களோ மிகவும் சுதந்திரமாக சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.அனைத்தையும்விட மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், மாநில அரசின் மூத்த அமைச்சர்கள் இத்தாக்குதலை வெளிப்படையாகவே நியாயப்படுத்தி இருப்பதும், இது திரிணாமுல் காங்கிரசார் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடுத்த தாக்குதல் என்றும் கூற முயற்சித் திருப்பதாகும். அமைதியான முறையில் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் உரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும், நாட்டின் சட்டங்களின் கீழும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் சட்டங்களை அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் உள்ள மாநில அரசாங்கம் நடைமுறையில் அமைதியான முறையில் எதிர்ப்பினைத் தெரி விக்கக்கூடிய உரிமையை மக்களுக்கு மறுக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சி ஆதரவாளர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்திடவும் மாநில நிர்வாகத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. 

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் அதாவது 2011 மே மாதத்திற்குப் பின்னர், 2013 டிசம்பர் 31 வரையிலான காலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் 85 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பாக 848 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 129 வழக்குகள் மிகவும் கொடூரமான முறையில் அவர்கள் மீதான வன்புணர்வுக்குற் றங்களுக்கானதாகும். இவ்வழக்குகள் பலவற்றில், கயவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, முதல்வர் உட்பட திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களையே கேலி செய்து வருகின்றனர். வன்புணர்வு மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் என்பவை திரிணாமுல் காங்கிரசின் அரசியல் அதிகாரத்தைக் காட்டும் கருவியாக மாறி இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள் 42 ஆயிரத்து 724 பேர், அவர்தம் முறையான குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் மூவாயிரம் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, கொள்ளையடிக் கப்பட்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான 646 அலுவலகங்கள் தாக் கப்பட்டு சூறையாடப் பட்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மார்க்சிஸ்ட் கட்சி சார்பான 222 தொழிற் சங்கங்களையும் வெகுஜன அமைப்புகளின் கட்டடங்களையும் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி இருக்கிறார்கள். கல்வி நிலையங்கள் மீதும் பெரிய அளவில் தாக் குதலைத் தொடுத்துள்ளார்கள். மாணவர் சங்கங்களுக்கான தேர்தல்கள் நடை பெற்ற இடங்களில் எங்கெல்லாம் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர்கள் தோற்றார்களோ அங்கெல்லாம் இந்திய மாணவர்கள் சங்கத்தின் அலுவலகங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். இவ்வாறு 84 அலுவலகங்களை அவர்கள் கைப்பற்றி யிருக்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் முன்னணி ஊழியர்களும் 3336 பேர் பொய்யாகப் புனையப்பட்ட குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.மாநிலம் முழுவதும் திரிணாமுல் குண்டர்கள் பெரிய அளவில் மக்களை அச்சுறுத்திப் பணம் பறிக்கும் வேலை யிலும் இறங்கி யிருக்கின்றனர். சுமார் பத்தாயிரம் பேரிடமிருந்து திரிணாமுல் குண்டர்கள் வலுக்கட்டாயமாக வசூலித்த தொகை சுமார் 28 கோடி ரூபாய்களாகும்.ரெசாக் முல்லா நிலச்சீர்திருத்தத் துறை அமைச்சராக இருந்து வந்ததால் திரிணாமுல் காங்கிரசார் அவர் மீது குறி வைத்திருந்தனர். இடது முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் உச்ச வரம்புக்கு மேலே சட்டவிரோதமாக வைத்திருந்த நிலங்கள் அனைத்தும் நிலப்பிரபுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. ரெசாக் முல்லா நிலச்சீர்திருத்தத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் இதனை மிகவும் உறுதியாக மேற்கொண்டார். 

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு, இவ்வாறு நிலங்களைப் பெற்ற விவ சாயிகளிடமிருந்தும் விவசாயத் தொழிலாளர்களிடமிருந்தும் நிலங்களை மீண்டும் கையகப்படுத்தி நிலப்பிரபுக்களிடமே ஒப்படைத்திருக்கிறார்கள். சுமார் 3500 விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை உழுது பயிரிட அனுமதிக்கப்பட வில்லை. குத்தகைப் பதிவுச் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்டிருந்த 27 ஆயிரத்து 283 பட்டாதாரர்கள் சுமார் பத்தாயிரம் ஏக்கர் அளவுள்ள அவர்களது நிலங் களிலிருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். 2011 மே மாதத்திற்குப்பின்னால் இவர் கள் கொண்டுவந்துள்ள மாற்றம்’ (`parivartan’) என்பது இதுதான்.

திரிணாமுல் காங்கிரசை எதிர்க்கும் எவராக இருந்தாலும் - அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் - அவர் தயவுதாட்சண்யம் எதுவுமின்றி கண் மூடித்தனமாகத் தாக்கப்படுகிறார். ஜனநாயகம் பட்டப்பகலில் படுகொலை செய் யப்படுகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. சிவில் உரிமைகள் மீதான பட்டவர்த்தனமான இத்தகைய தாக்குதல்களையும், மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதப் படுத்தியுள்ள ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் சகித்துக் கொள்ள முடியாது. 1970களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரைப் பாசிச அடக்குமுறை வெறியாட் டங்களை மேற்கு வங்கம் மறந்துவிட வில்லை. இப்போதைய திரிணாமுல் காங் கிரசும் அங்கமாக இருந்த அன்றைய காங் கிரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஜன நாயகமும், ஜனநாயக உரிமைகளும் கடு மையாகத் தாக்கப்பட்ட சமயத்தில், நாட்டில் இருந்த பல அரசியல் சக்திகள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த எச் சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, இத் தகைய தாக்குதல்கள் ஒரு சிறிய வடு தான் என்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் தான் இது நடைபெறும் என்றும் கூறி நழுவிக் கொண்டார்கள். ஆனால் பின்னர் 1975இல் அவசர நிலைப் பிரகடனம் செய் யப்பட்டு நாடு முழுவதும் இத்தகைய அடக்குமுறைகள் விரிவாக்கப்பட்டு, மக் களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப் பட்ட சமயத்தில் அவர்களின் மாயைகள் தூள்தூளாயின. ஜனநாயகத்தை மீட்டெ டுத்திட நாட்டு மக்கள் நடத்திய போராட் டம்தான் 1977இல் வெற்றி பெற்றது. அத னைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் இடது முன்னணி வெற்றி பெற்றது. ஏழு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.காங்கிரஸ் மேற்கொண்ட அரைப் பாசிச அடக்குமுறையை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி உறுதியோடு எதிர்த்து நின்றது. இப்போராட்டத்தில் 12 ஆயிரத் திற்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல்லா யிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேறின. பல தலைவர்கள் தலைமறைவாக இருந்து செயல்பட்டார்கள். இறுதியில், மேற்கு வங்க மக்கள் நாட்டின் பிறபகுதி மக்க ளுடன் இணைந்து நின்று வெற்றிவாகை சூடினார்கள். இவ்வரலாற்றை மறந்து அடக்குமுறையை ஏவுவோர் நிச்சயமாக இதேபோன்ற கதியையே அடைவார்கள். மக்கள் அவர்களை அரசியல்ரீதியாக முறியடிப்பார்கள் என்பது உறுதி.
மேற்கு வங்க மக்கள் இத்தகைய தாக் குதல்களுக்கு எப்போதும் அடிபணிந்த தில்லை. வன்முறை மற்றும் அராஜக அர சியல் மூலமாக மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்து வரவிருக்கும் பஞ்சாயத் துத் தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட லாம் என்கிற அவர்களது அரக்கத் தனத்தை மக்கள் ஜனநாயக முறையில் அரசியல் ரீதியாக முறியடிப்பார்கள். நம் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்திடும் அனைவரும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையில் நம்பிக்கை வைத் திருக்கும் அனைவரும் இத்தகைய வன்முறை வெறியாட்ட அரசியலை, மனி தாபிமானமற்ற இழி நடவடிக்கைகளை அமைதியான பார்வையாளர்களாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இத்தகைய வன்முறை வெறி யாட்டங்களுக்கு ஜனநாயகத்தில் இடம் கிடையாது. இது நாட்டை விட்டே துரத்தப்பட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி