Sunday, January 19, 2014

நாடாளுமன்ற ஜனநாயகத்தை அரிக்கும் ஆராதனை

காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் தற்போதைய துணைத் தலைவர் ராகுல் காந்தி தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு, இவர்கள் 2014 பொதுத் தேர்தலுக்காக புதியதொரு அரசியல் ராகத்தை முழுமைப்படுத்திட காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் காங்கிரஸ் கட்சி அவ்வாறுதான் தீர்மானிக்க இருக்கிறதா, அல்லது வேறு மாதிரி சிந்தித்துக் கொண்டிருக்கிறதா என்பது அவர்கள் உள்கட்சி விவகாரமாகும். காங்கிரஸ் கட்சியின் முடிவு எப்படி இருந்த போதிலும், அருவருக்கத்தக்க நமோ - ராகா ஆராதனைகள் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளங்களையே ஆழமான முறையில் அரித்திடும் ஒன்றாகும்.

தற்போதைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையே குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தை வழங்கக் கூடிய வகையிலான ஜனநாயகமாக மாற்றக்கூடிய ஆபத்து இதில் அடங்கி இருக்கிறது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் மையநிலையைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய விதத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது. ``இந்திய மக்களாகிய, நாம்’’ என்பதன் பொருள் என்ன? நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் மூலமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களின் பிரதிநிதிகளை முறையாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம்நாட்டின் இறையாண்மை உத்தரவாதப் படுத்தப்படுகிறது என்பதே. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள். ஒரு கட்சி அல்லது பல கட்சி களின் கூட்டணி, எது நாடாளுமன்றம்/சட்டமன்றங்களில் பெரும்பான்மை கொண்டி ருக்கிறதோ அது தன்னுடைய தலைவரை ஆட்சி அமைப்பதற்காகத் தேர்வு செய்கிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் நாடாளுமன்றம்/சட்டமன்றங்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது.
இவ் வாறு நாட்டில் தற்போதுள்ள நடைமுறைத் திட்டத்தில், தனிநபர் ஒருவரை ``பிரதமர் வேட்பாளராக’’ முன்னிறுத்துவது செயல் படாமல்கூட போகக்கூடும். ஏனெனில் அவ்வாறு முன்னிறுத்தப்படும் நபர் தான் போட்டியிடும் தொகுதியில் தோற்கடிக்கப்படலாம். 1977ல் மிகவும் பலமாக இருந்த இந்திராகாந்தியே தேர்தலில் தோல்வியுற்றதை நினைவுகூர்க. இந்தக் காரணத்தினால்தான், இடதுசாரிக் கட்சித் தலைவர்களைத் தவிர,அநேகமாக மற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஒரு தொகுதிக்கும் மேலேபோட்டியிடும் வழக்கம் இருந்து வரு கிறது. நம்முடைய தற்போதைய பிரதமர்கடந்த பத்தாண்டுகளாக மக்களவைக் கான தேர்தலில் போட்டி யிடவே இல்லை.அதுபோன்று நரசிம்மராவும் பிரதமரான பின்னர்தான் தேர்ந் தெடுக்கப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகளும் உண்டு.இதனால்தான் நம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மிகவும் புத்தி சாலித்தனமாகவும், சரியான முறையிலும், நம் நாட்டின் பண்பாடு, மொழி, இனம், மதம் ஆகிய அனைத்திலும் பல்வேறு வேற்றுமைகள் காணப்பட்ட போதிலும் அவர்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கக் கூடிய விதத்தில், நாடாளுமன்ற ஜனநாயக வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். இவ்வாறு நாட்டிலுள்ள அனைத்துப் பிரிவினரும் சரியான விகிதத்தில் நாட்டின் அமைப்புகளில் பங்குபெறுவதன் மூலம் மட்டுமேதான் நாட்டின் சிக்கல் நிறைந்த சமூக எதார்த்த நிலையில் ஜனநாயகத்தை மிகவும் வீரியம் மிக்கதாக முன்னிறுத்த முடியும்.
மேலும், நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவே, ``பாரதம் எனப்படுகின்ற இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’’ என்று தெளிவாகக் கூறுகிறது. இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகவும் அடிப்படையாக அமைந்திருக்கின்ற இத்தகைய கூட்டாட்சித் தத்துவமானது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையின் மூலமாக மட்டுமே பாதுகாத்து, வலுப்படுத்திட முடியும். அமெரிக்காவிலோ அல்லது பிரான்சிலோ இருக்கக்கூடிய ஜனாதிபதி ஆட்சி முறையானது ஒரே இனம் மற்றும் ஒரே மொழி பேசக்கூடிய நாட்டிற்கு வேண்டுமானால் உகந்ததாக இருக்கலாம். இங்கிலாந்தில்கூட, நம் நாடாளு மன்ற ஜனநாயக அமைப்புமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஏனெனில் அங்கே பிரிட்டிஷ், வெல்ஷ், ஸ்காட்டிஷ் மற்றும் ஐரிஷ் இனத்தவர் அதன் அங்கமாக இருந்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் நீண்ட காலமாகவே தற்போதைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையை ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றன.

பாஜக தன்னுடைய 1991ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், ``தற்போதைய நாடாளுமன்ற அமைப்பு முறைக்குப் பதிலாக ஜனாதிபதி அமைப்பு முறை நம் நாட்டிற்கு உகந்ததாக இருக்குமா என்பது குறித்து ஆராய ஓர் ஆணையம்’’ அமைக்கப்படும் என்று கூறியிருந்தது.ஜனாதிபதி அமைப்பு முறை என்பது ஒரு தலைவரின் கீழ் அனைத்து அதிகாரங் களையும் குவிப்பது என்பதாகும். நாடாளுமன் றத்திற்கு நேரடியாகப் பதில் சொல்ல கட்டாயம் இல்லாத நபர்களை கட்டாயம் நாட்டை ஆள்வதற்கு ஜனாதிபதி நியமிப்பார்.இத்தகைய அமைப்பு முறையை நியாயப் படுத்துவதன் மூலம் பாஜக-வானது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம் என்ற முறையில் , இந்தியக் குடியரசின் தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையை தங்களுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரம்’-ஆக மாற்றிட வழியேற்படுத்தித்தர முன்வந்திருக்கிறது. கடந்த காலத்தில் பல்வேறு கட்சிகளின் கூட்டணியில் பாஜக இருந்ததன் காரணமாக, தன்னுடைய வெறித்தனமான மதவெறி நிகழ்ச்சிநிரலை தாங்கள் விரும்பிய அளவிற்கு அதனால் நிறைவேற்ற முடியவில்லை.

மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், நம் குடியரசின் பொன்விழா நடைபெற்ற சமயத்தில் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் உரையாற்றுகையில், ``நம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முன்னோர்கள் மிகவும் ஆழ்ந்த சிந்தனை மற்றும் விவாதத்திற்குப் பின்னர்தான் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையை, அரசாங்கத்தின் வடிவமாக, அமைத்துத் தந்திருக்கிறார்கள். அரசியல் நிர்ணயசபையில் டாக்டர் அம்பேத்கர், ``நாடாளுமன்ற அமைப்பு முறையின் மூலம் அமைந்திடும் அரசாங்கம் ஒவ்வொரு நாளும் பட்டை தீட்டப்பட்டுக்கொண்டே இருக்குமாதலால் இத்தகைய அமைப்புமுறைதான் மிகவும் பொறுப்புடன் கூடியது மற்றும் மிகவும் வலுவானது என்று கருதி வரைவுக் குழு இதனையே தேர்வு செய்கிறது’’ என்று விளக் கினார். அரசாங்கம் ஒவ்வொரு நாளும் மக்களுக்குப் பதில் சொல்வது என்பது மிகவும் கடினம். எனவேதான், அரசியல் நிர்ணயசபை மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்து, நாடாளுமன்ற அமைப்பு முறையையே சிறந்தது என்று தேர்வு செய்கிறது. இது ஒன்றும் பிரிட்டிஷ் முறையை அப்படியே நகலெடுத்த ஒன்று அல்ல. அல்லது காலனியாதிக்கக் காலத்தில் இந்தியா இம்முறைக்குப் பழக்கப் பட்டுவிட்டது என்பதனாலும் இவ்வாறான முடிவுக்கு அரசியல் நிர்ணயசபை வரவில்லை.``நாடாளுமன்ற அரசாங்கம் சம்பந்தமாக பிரிட்டனுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்று ஒப்புக்கொண்டுள்ள அதே சமயத்தில், இதன் மூலவேர்கள் நம் நாட்டில் நீண்ட காலமாகவே இருந்துவரும் கிராமப் பஞ்சாயத்துக்களின் அமைப்பு முறையில் இருந்து வருகின்றன என்று காந்திஜி கண்டுணர்ந்திருக்கிறார்.

அரசியல் நிர்ணயசபையில் அம்பேத்கர், புத்திஸ்ட்டுகளின் சங்கங்களும் நாடாளு மன்ற அமைப்புமுறையில் அமைந்துள்ள நிறு வனங்கள் என்று கூறியதுடன் அவற்றின் செயல்பாடுகளில் நவீன ஜனநாயகக் கருவி களான தீர்மானங்கள், பிரிவுகள், கொறடா அமைப்புமுறை போன்ற அனைத்தும் இருப்பதையும் விளக்கினார். இவ்வாறு பாரம்பரிய மாகவே நாம் பெற்றிருக்கக்கூடிய இத்தகைய அடிப்படைக்கூறுகள்தான் நம் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையை எளிதாக அமல்படுத்துவதை சாத்தியமாக் கியது. இதல்லாமல், டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணயசபையில் நாட்டில் எதேச்சதிகாரம் தலைதூக்காது இருக்க வேண்டு மெனில் இத்தகைய நாடாளுமன்ற அமைப்பு முறையே உகந்தது என்று வரைவுக்குழு இதனைத் தேர்வு செய்கிறது’’ என்றும் கூறி னார்.நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையில் கூட அவசரநிலைப் பிரகடனம் அமல் படுத்தப்பட்ட காலத்தில் எதேச்சதிகார ஆட்சியின் அனுபவத்தையும் நாம் எதிர் கொண்டிருந்திருக்கிறோம்.

இத்தகைய ஆபத்துகள் ஜனாதிபதி அமைப்புமுறையில் ஏராளமாகும். மிகவும் ஆழமான முறையில் விவாதித்து,நடைமுறையிலும் சரியான ஒரு அமைப்புஎன்று நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்தஅமைப்பு முறையை தேர்தல் ஆதாயம்பெற வேண்டும் என்கிற அரிப்பின் காரண மாக தூக்கி எறிந்திட அனுமதித்திடக் கூடாது. மறைந்த குடியரசுத் தலைவர் எச் சரித்திருப்பதைப்போல, “அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பின்னணியாக அமைந்துள்ள நம் அடிப்படைத் தத்துவம் மற்றும் அர சியலமைப்புச் சட்டத்தின் சமூக - பொருளாதார ஆன்மா என்றென்றும் தீயவர் களிடமிருந்து பாதுகாக்கப்படுவதை நாம் உத்தரவாதப்படுத்திட வேண்டும்.’’ தற்போதைய துன்ப துயரங்களிலிருந்து விடுபட ஆட்சியாளர்கள் தங்கள் கொள்கை களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றுமக்கள் மத்தியிலிருந்து வந்த நிர்ப்பந்தத் தின் காரணமாக கூட்டணி கட்சிகள் எல்லாம் இவர்களிடமிருந்து கழன்று சென்று விட்ட திலிருந்து படிப்பினையைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, காங்கிரசும் பாஜகவும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையையே அழித்துவீழ்த்திடவேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கின்றன.

பாஜகவுடன் இருந்த கூட்டணிக் கட்சிகளில் சிவசேனை, அகாலிதளம் (பாதல்) ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இப்போதும் பாஜகவுடன் இருக்கின்றன. அதேபோன்று 2009ல் காங் கிரஸ் கட்சி ஐமுகூ-2 அரசாங்கத்தை அமைத்திட உதவிய கட்சிகளில் தேசியவாத காங் கிரஸ் கட்சியும் (என்சிபி), ஜம்மு-காஷ்மீர் தேசியமாநாடும் மட்டுமே காங்கிரசுடன் இருக் கின்றன. தங்கள் வாழ்க்கையில் சொல்லொண்ணா அளவிற்குத் துன்ப துயரங்கள் ஏற்பட்டிருப்ப தற்கு காங்கிரசும், பாஜகவுமே காரணம் என்பதை நாட்டின் பெரும்பான்மை மக்கள்உணரத் தொடங்கிவிட்டனர். பொருளாதாரக் கொள்கைகள் அல்லது ஊழல் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது என்பதை அவர்கள்தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொண்டுள் ளார்கள். ஊழல் கறைபடிந்த முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளதும், ஊழல் புரிந்தமைக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பேர்வழி ஒருவர், இப்போதும் குஜராத் அமைச்சரவையில் தொடர்வதும், ஊழல் தொடர்பாக பாஜகவின் லட்சணத்தை நன்றாகவே தோலுரித்துக்காட்டிவிட்டது.

இவ்விரு கட்சிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதை நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல்பட்ட அனுபவமும் உறுதிப்படுத்தியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலாக இருந்தாலும் சரி அல்லது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழலாக இருந் தாலும் சரி, இவற்றின் மீது ஆழமான முறையில் விவாதம் நடைபெறாது நாடாளு மன்ற நடவடிக்கைகள் சீர்குலைக்கப்பட் டதைப் பார்த்தோம். விவாதங்கள் நடைபெற்றிருக்குமானால் வாஜ்பாயி தலைமை யில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட் டணி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்களும் வெளி வந்திருக்கும். நவீனதாராளமயக் கொள்கைகளை அமல் படுத்துவதிலும், கோடிக்கணக்கான ஊழியர்களின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய விதத்தில் ஓய்வூதிய நிதியத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனு மதிப்பதாக இருந்தாலும் சரி அல்லது வங்கிகள் தேசியமயம் என்னும் கொள்கையைக் கைவிட்டு, அவற்றைத் தனியாரிடமும் அந்நிய நிதி நிறுவனங்களிடமும் தாரை வார்த்து அதன்மூலம் சர்வதேச நிதி ஊகவர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாக்கப் படும் நடவடிக்கையாக இருந்தாலும் சரி, காங்கிரசும் பாஜகவும் ஒரே பக்கத்தில்தான் இருந்தன.

நாட்டின் நிலைமை இவ்வாறிருக்கையில், எங்கேனும் தேர்தலில் மாற்றுக்கு வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், அது மக்களின் ஆதர வினைப் பெறும் என்பதை, சமீபத்திய சட்ட மன்றத் தேர்தல்களின்போது பார்த்தோம். இத்தகைய ஆதரவு நாட்டிலுள்ள மத்திய தர வர்க்கத்திடம் வெகுவாகவே காணப்படுகிறது. ஓர் ``லட்சிய’’ ஜனநாயக மதச்சார்பற்ற மற்றும் ஊழலற்ற அரசு உருவாக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அத்தகைய விருப்பம் அவர்கள் மத்தியில் நிலவுவதை அறிந்து அதற்கேற்ற முறையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்குவோம், தற்போதைய மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்திடுவோம் என்று உறுதிமொழிகளை அள்ளித்தெளித்த ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தில்லியில் ஆட்சி யை அமைக்கக்கூடிய அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. ஆயினும், ஊழல் மற்றும் பொருளாதாரச் சுமைகள் போன்ற ``நோய்கள்’’ ஆட்சி யாளர்கள் பின்பற்றக்கூடிய கொள்கைகளின் விளைவாக விளைந்தவை என்பதால் ஊழலற்ற முறையில் ``லட்சிய’’ அரசை அமைப் பது அவ்வளவு எளிதல்ல. அது காங்கிரஸ் கூட்டணியாக இருந்தாலும் சரி அல்லது பாஜக கூட்டணியாக இருந்தாலும் சரி.
அத்தகைய ``லட்சிய’’ அரசாங்கத்தை அமைக்க வேண்டுமானால் மாற்றுக் கொள்கைகளுடன் மட்டுமே அது சாத்தியம். எவ் விதமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றப்போகிறோம், வகுப்புவாத சக்திகளுடன் எவ்விதமான உறவினை வைத்துக்கொள்ளப்போகிறோம், (ஏஏபியின் ஆதரவாளர்களில் பெரும்பான்மையினர் பாஜக பிரதமர் வேட்பாளரையே விரும்புவதாக ஒரு கருத்துக்கணிப்பு காட்டியிருக் கிறது), அயல்துறைக் கொள்கை என்ன, அண்டை நாடுகளுடன் நம் உறவுகள் எப்படி இருக்கும் என்கிற முக்கியமான அம்சங்களில் ஏஏபி மவுனம் சாதிக்கிறது. இவை குறித்தெல்லாம் எதுவுமே கூறாது மவுனம் சாதிப்பது என்பது சலுகைசார் முதலாளித்துவ ஊழலின் தற்போதைய போக்கிற்கே ஊக்க மளித்திடும். முதலாளித்துவத்தின் கொள்ளை லாப வேட்டைக்கு சாமானிய மக்களை பலிகடா ஆக்குவதற்கே வழிவகுத்திடும்.மாற்றுப் பொருளாதாரக் கொள்கை என்பது அனைவருக்கும் உரிமைகளை உத்தர வாதப்படுத்திட வேண்டும்.

அவை கருணை அடிப்படையில் எதையும் பெறுவது அல்ல. உணவுப் பாதுகாப்பு, அனைவருக்கும் இலவச சுகாதாரப் பாதுகாப்பு, அனைவருக்கும் இல வசக் கல்வி, வேலை உரிமை அல்லது வேலைகிடைக்கும்வரை போதுமான அளவிற்கு வேலையில்லா நிவாரணம், மூத்த குடிமக்கள் அனைவருக்குமான திட்டங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் ஆகியவை மாற்றுக் கொள்கையின் அடிப் படைகளாக அமைந்திட வேண்டும். இத்த கைய மாற்றுக்கொள்கைகள் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல, ஒரு வலுவான பொருளாதார முன்னேற்றத்திற்கான கொள்கையின் அடிப்படையிலும் விரும்பத் தக்கதாகும். இவ்வாறாக மக்களை மேம் படுத்துவதன் மூலம் அவர்களது வாங்கும் சக்தி கணிசமான அளவிற்கு அதிகரித்து அதன் மூலம் மிகவும் உள்நாட்டுத் தேவைகளும் அதிக அளவில் தோற்றுவிக்கப்படும். இவை நாட்டின் உற்பத்தி வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக அமைந்து வேலைவாய்ப்பும் பெருகுவதற்கு இட்டுச் செல்லும். இவ்வாறு ஒரு சங்கிலித் தொடர்போன்று நாட்டில் நிலையான மற்றும் நேர்மையான வளர்ச்சி இயக்கம் அமைந்திடும்.

இவ்வாறு நம் தேவை என்பது வெறும் தேர்தல் மாற்று அல்ல, மாறாக கொள்கை மாற்றே நமக்குத் தேவையாகும். 2014ல் இடது-ஜனநாயக-மதச்சார்பற்ற மாற்றின் அடிப்படையில் அத்தகையதொரு கொள் கையை உத்தரவாதப்படுத்திடக்கூடிய விதத்தில் மக்களின் போராட்டங்களை வலுப் படுத்துவதன் மூலமே இதனை அடைந்திட முடியும். 

- தமிழில்: ச.வீரமணி


Sunday, January 12, 2014

ஏற்கப்படாத திருத்தமும், இன்றைய கொள்ளையும்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் லோக்பால் சட்டமுன்வடிவு இறுதியாக நிறை வேற்றப்படுவதற்கு முன்பாக அதன் மீது நடைபெற்ற விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோக்பால் புல னாய்வின் வரையறைக்குள், தனியார் நிறு வனங்கள் அதிலும் குறிப்பாக பொது தனியார் - ஒத்துழைப்பு என்னும் பெயரில் மேற் கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுச் சொத்துக்களை அல்லது அரசு மற்றும் பொதுத் துறை நிதி நிறுவனங்களிடமிருந்து நிதிபெறும் ஏற்பாடுகளைக் கொண்டுவரக்கூடிய விதத்தில் துல்லியமான திருத்தங்களைக் கொண்டு வந்தோம். அந்தத் திருத்தம் தொடர்பாக வாக் கெடுப்பு நடந்தபோது இடதுசாரிக் கட்சி உறுப் பினர்கள் 11 பேர் அவையில் இருந்தபோதிலும், இதற்கு 19 வாக்குகள் கிடைத்தன. இதன் பொருள் இடதுசாரி அல்லாத வேறுசில மாநிலங் களவை உறுப்பினர்களும் இதனை வரவேற்றி ருக்கிறார்கள் என்பதாகும். ஆயினும் இந்தத் திருத்தம் பெருவாரியான வாக்கு வித்தியாசத் தில் தோற்கடிக்கப்பட்டது. ஏனெனில் தனி யார் கம்பெனிகள் மீதான சோதனைகள் எதை யும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட் டணியோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோ விரும்பவில்லை.
அவை பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவதை அல்லது நம்பிக்கை மோசடி செய்வதை அல்லது அரசு கருவூலத் திற்கு நியாயமாக வரவேண்டிய வருவாயைத் தானே எடுத்துக்கொள்வதை, சோதனைக்கு உட்படுத்தும் எதையும், இவ்விரு கூட்டணி களும் விரும்பவில்லை. இந்தச் சூழ்நிலையில், தில்லி உயர்நீதி மன்றம் சமீபத்திய தீர்ப்பு ஒன்றின்மூலம் தனி யார் டெலிகாம் கம்பெனிகளை மத்தியத் தணிக் கைத்துறைத் தலைவரின் (சிஏஜி)தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற வரையறைக் குள் கொண்டுவந்திருப்பது உண்மையில், முக்கியத்துவம் பெறுகிறது. இத்தீர்ப்பு உச்சநீதி மன்றம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீடு தொடர்பான ஊழல் வழக்கில் அளித் திட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்ப்பில் தனியார் நிறுவனங்கள் பொதுச் சொத்துக்களைப் பயன்படுத்துவதை முறைப் படுத்த வேண்டியது அவசியம் என்று கூறியி ருக்கிறது. நீதிபதிகள் நந்திராஜோக் மற்றும் வி.கே.ராவ் ஆகியோரடங்கிய தில்லி உயர்நீதி மன்றத்தின் அமர்வாயம் தங்கள் தீர்ப்புக்கு லத்தீன் மொழியில் நீதித்துறை சார்பாக வழங் கப்பட்டுள்ள மூதுரைகளின் ஒன்றான `பொதுச் சொத்துக்கள் மக்களின் சொத்துஎன்ற அடிப் படையில் இத்தீர்ப்பை அளித்திருக்கிறது. அதாவது, மக்களுக்குச் சொந்தமான, நாட்டின் இயற்கை வளங்கள் உரியமுறையில் அரசால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், இவ் வாறு பொது வளங்கள் தனியாரிடம் மாற்றப் படும்போது முறையாகப் பயன்படுத்தப்படு கிறதா என்பதை உத்தரவாதம் செய்வது அர சின் கடமை என்பதும் இதன் பொருளாகும். இவ்வாறு, அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தங்கள் வருவாயிலிருந்து ஒரு பங்கினை அளிப்பது தொடர்பாக ஐந்து தனியார் டெலிகாம் கம்பெனி களின் வருவாய் குறித்து மத்தியத் தணிக் கைத்துறைத் தலைவர் (சிஏஜி) தணிக்கை செய்திட வேண்டும் என்று தில்லி உயர்நீதி மன்றம் கட்டளையிட்டிருக்கிறது.
தனியார் டெலிகாம் கம்பெனிகள் அளித்திடும் தொகை கள் சரிதானா என்பது குறித்து சிஏஜி தணிக் கை ஆராய்ந்திடும். இது முற்றிலும் சட்டரீதியானதேயாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன் றத்தில் வாதிட்டதுபோல, பொது வளங்களைப் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களைத் தணிக்கை செய்வதற்கான சிஏஜி-இன் அதி காரம், தனியார் நிறுவனத்தின் செயல்பாட்டில் தலையிடுவதாகவோ அல்லது அரசியலமைப் புச் சட்டத்தின் 149ஆவது பிரிவை மீறுவ தாகவோ (இச்சட்டப்பிரிவு தனியார் நிறுவனங் களை சிஏஜி தணிக்கை செய்வதைத் தடை செய்கிறது) பார்க்கவேண்டியது தேவையில் லை. ஏனெனில் தனியார் டெலிகாம் நிறு வனங்கள் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டண மாக 1க்கும் 8க்கும் இடையிலான சதவீத அள விற்கு தொகையை அளித்து வருகிறது. இது தவிர ஆண்டு உரிமக் கட்டணமும் அளித்து வருகிறது. தனியார் டெலிகாம் கம்பெனிகளிட மிருந்து அவை சம்பாதித்த தொகைகளில் அர சுக்கு அளிக்க வேண்டிய தொகையை நியாய மாக வழங்கி இருக்கின்றனவா என்பது உத்தர வாதப்படுத்தப்பட வேண்டியது அவசிய மாகும். இதனை சிஏஜி தணிக்கை அரசுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்திடும். இந்தப் பின்னணியில்தான் தில்லி உயர் நீதிமன்றம் நாட்டிலுள்ள பெரிய நிறுவனங் கள்’’ எப்படியெல்லாம் ஏமாற்றி சூழ்ச்சி செய் கின்றன என்று மிகவும் வருத்தத்துடன் குறிப் பிட்டிருக்கிறது. பொதுவாக இவ்வாறு தணிக்கை செய்யப் படுவதை அனைவரும் வரவேற்றிட வேண்டும். இதில் ஆட்சேபணை செய்வதற்கு எதுவுமேஇல்லை.
எனினும், டெலிகாம் கம் பெனிகள் சிஏஜி தணிக்கை செய்வதற்கு எதி ராக ஆட்சேபணைகளைத் தாக்கல் செய்திருக் கின்றன. இவற்றை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஊடகங்களில் வந்துள்ள செய்தி களின்படி, `ஃபிக்கிஅமைப்பின் தலைவர், “தனியார் கம்பெனிகளின் வரவு-செலவுக் கணக்குகளைப் பார்வையிடுவதற்கு சிஏஜிக்கு இடமில்லை’’ என்று கூறியிருக்கிறார். நாட்டின் தலைநகரில் மின் விநியோகத் தை மேற்கொண்டிருக்கும் தனியார் கம்பெனி களும் சிஏஜி-யால் தணிக்கைக்கு உட்படுத் தப்பட வேண்டும் என்று தில்லி அரசாங்கம் சமீபத்தில் முடிவெடுத்தபோது இதேபோன் றே ஆட்சேபணைகள் தெரிவித்திருக்கின் றன. தில்லியில் உள்ள மக்கள் தொகையில் 75 சதவீதத்தினருக்கு மின்சார விநியோகத்தை செய்து கொண்டிருக்கும் பிஎஸ்இஎஸ் ராஜ தானி மற்றும் பிஎஸ்இஎஸ் ஜமுனா என்னும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட் ரக்சர் 51 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக் கிறது. மீதம் உள்ளவர்களுக்கு மின்சாரத்தை அளித்துவரும் டாட்டா பவர் தில்லி டிஸ்ட்ரிப் யூசன் லிமிடெட் நிறுவனத்தில் டாட்டா பவர் 51 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கிறது.
மீதம் உள்ள 49 சதவீதப் பங்குகளை தில்லி அரசாங்கம் வைத்துள்ளது. இந்நிறுவனங்கள் அனைத்தும் சிஏஜி-யின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண் டும் என்று கோரி 2011 பிப்ரவரியில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டபோதே துவங்கிவிட்டது. மேலும் இந்நிறுவனங்கள் செய்திடும் மோசடி கள் குறித்து மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரணை செய்திட வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போதே எழுப்பப்பட்டது. 2012 மார்ச்சில் அப்போதிருந்த தில்லி அரசாங் கம் பிஎஸ்இஎஸ் குழுமத்தின் கம்பெனிகளை சிஏஜி தணிக்கை செய்திட ஏற்பளிப்பு அளித் தது. தற்போதைய தில்லி அரசாங்கம் மூன்று நிறுவனங்களிலுமே சிஏஜி தணிக்கை செய் யப்பட வேண்டும் என்று கட்டளையிட்டிருக் கிறது. 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி 22 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் இறுதியாக வாதங்கள் நடைபெறவிருக்கிறது.இம்மூன்று கம்பெனிகளிலுமே 49 சத வீதப் பங்குகள் தில்லி அரசாங்கத்திற்குச் சொந்தம் என்பதால், அதாவது அரசாங்கத்தின் நிதி இதில் இருக்கிறது என்பதால், இவை சிஏஜியால் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பது மிகவும் பொருத்தமானதேயாகும். ஆயி னும், இதற்கு வலுவான முறையில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இன்னும் சரியாகச் சொல்லப்போனால், இந்திய கார்ப்பரேட்டு களின் சில ஊதுகுழல்கள், “இவ்வாறு தனி யார் நிறுவனங்களை சிஏஜி தணிக்கை செய் யும் பட்சத்தில் நாட்டில் பொதுவாக பொருளா தாரம் மந்த நிலையில் உள்ள இன்றைய பின் னணியில் பொருளாதாரம் மேலும் பின்னோக் கிச் செல்லும்’’ என்று மிரட்டியிருக்கின்றன. இவையெல்லாம் காட்டுவதென்ன? நாட் டில் ஏற்கனவே, நியாயமற்ற முறையில் பல் வேறு வழிகளிலும் கொள்ளை லாபம் ஈட்டு வதை அனுமதித்திடும் சலுகைசார் முத லாளித்துவம்எக்காரணம் கொண்டும் முறைப் படுத்தப்படக்கூடாது மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்பதையே இவையெல்லாம் வலியுறுத்துகின்றன. 2008ல் உலக நிதி மந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து கார்ப்பரேட் ஆட்டோ மொபைல் ஜாம்பவான்கள் அவர்களுடைய தனி விமானங்களில் அமெரிக்க ஜனாதிபதி யிடம் பறந்து சென்று தங்களுக்கு நிவாரணம் அளிக்குமாறு வேண்டினார்கள் என்று ஊட கங்களில் வந்ததை நினைவுகூர்க. அதே போன்று இன்றைய தினம், இந்தியாவில், பொதுத்துறை வங்கிகளிலிருந்து பல லட்சம் கோடி ரூபாய் தொகைகளைக் கடனாகப் பெற்ற கார்ப்பரேட்டுகள் அவற்றைத் திருப்பித் தராது இருக்கிறார்கள். இதற்கு அரசு வைத்துள்ள மதிப்பிற்குரிய சொற்றொடர் செயல்படா சொத் துக்கள்’’ என்பதாகும். ஆயினும் இவ்வாறு கட னைத் திருப்பித்தராமல் ஏமாற்றும் கார்ப்ப ரேட்டுகள் தங்கள் சொந்த விமானங்களில் உலகம் முழுதும் பறந்து கொண்டுதான் இருக் கிறார்கள். நாட்டின் பொதுச் சொத்துக்களைத் தனி யார் கொள்ளையடித்துச் செல்வதை அனு மதிக்கும் சலுகைசார் முதலாளித்துவத்தைஇன்னும் எத்தனை காலத்திற்கு நாடு ஊட்டி வளர்க்கப் போகிறது? பொதுச் சொத்துக்கள் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம் படுத்துவதற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டுமேயொழிய, தனியார் கொள்ளை யடிக்க அனுமதித்திடக் கூடாது.
அந்த அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாட்டின் நலனையும் நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அத்தகையதொரு திருத்தத்தை நாடாளுமன் றத்தில் கொண்டு வந்தது. ஆயினும் காங் கிரசும் பாஜகவும் இணைந்து நின்று அத னைத் தோற்கடித்துவிட்டது. இப்போது ஏற்பட் டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்குகள், எதிர்காலத்தில் சலுகைசார் முதலாளித்து வத்திற்குசாவுமணி அடித்திடும் என்று நம்பு வோமாக.
- தமிழில்: ச.வீரமணி


Sunday, January 5, 2014

2014 : அரசியல் மாற்று அமையட்டும்


பொதுவாக புத்தாண்டு வாழ்த்துகள் கூறும்போது 2013ஆம் ஆண்டை விட வரவிருக்கும் புத்தாண்டிலாவது சிறந்ததொரு வாழ்க்கை அமையட்டும் என்ற நம்பிக்கையுடன் அது அமைந் திடும். நாம் பல தடவை டென்னிசன் பிரபுவின் ``பழையவை ஒழியட்டும், புதியவை ஒலிக்கட்டும்’’ என்கிற கவிதை வரிகளை குறிப்பிட்டிருக்கிறோம். அத்த கைய நம்பிக்கைகள் தொடர, புதிய ஆண்டு சிறந்ததாக அமைந்திடட்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆயினும், அனுபவம் நமக்குக் கற்றுத் தந்திருப்பது என்னவெனில், வாழ்க்கை என்பது நாம்எதிர்பார்ப்பதுபோல் எப்போதும் இருந்த தில்லை என்பதேயாகும்.
உண்மையில் 2013ல் வரலாற்றில் நீண்ட காலம் இருந்து வந்த தந்தி அனுப்பும் முறை கைவிடப்பட்டுவிட்டது. திரைப்படங்கள் ரீல்களில் எடுப்பது கைவிடப்பட்டு, டிஜிட்டல் மூலம் வரத் தொடங்கிவிட்டன. சமீபத்தில் வெளியான தூம்3 இந்திப்படம் உலகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலேயே வெளியாகி இருக்கிறது. இனி டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கையோ, பவுலிங் கையோ நாம் பார்க்க முடியாது. இவ் வாறு பல நிகழ்ச்சிப்போக்குகள் நடைபெற்றுள்ளன. ஆயினும் இதுபோன்ற வற்றைப் பட்டியலிடும் பணியை வரலாற்றாய்வாளர்களிடம் நாம் விட்டுவிடு வோம்.
2013ஆம் ஆண்டு தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அரசாங்கம் அமைந்திருப்பதுடன் நிறைவடைந் திருக்கிறது. நாம் அவர்களுக்குப் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆயினும், 2014ல்தான் ஆம் ஆத்மி அரசாங்கம் செயல்படத் துவங்கி இருக்கிறது. இந்திய ஜனநாயகம் இதுபோன்ற பல நிகழ்வுகளைக் கண்டுள்ளது. என்.டி.ராமராவ் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி உருவான சமயத்திலும் இதே போன்று தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. இத்தகைய கட்சிகள் தொடர்ந்து நீடித்து நிலைத்திருப்பது என்பது அவை பின்பற்றக்கூடிய கொள்கைகள் மற் றும் திட்டங்களையே முக்கியமாக சார்ந்திருக்கின்றன. தில்லியில் அமைந்துள்ள ஏஏபி-க்கும் இது பொருந்தும். 2014ஆம் ஆண்டு சாமானிய மக்களுக்கு சொல்லொண்ணா அளவில் துன்ப துயரங்களை ஏற்படுத்திடும் நவீன தாராள மயப் பொருளாதார சீர்திருத்தங்கள் சம்பந்தமாகவும், நவீன இந்தியாவின் மதச் சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கே மிகவும் அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய வகுப்புவாதம் குறித்தும் ஏஏபி-யின் கொள்கைகளும் திட்டங்களும் தெளிவு படுத்தப்படும் என்று நம்புவோம்.
அடுத்து, நாட்டில் ஆட்சியாளர்களின் கொள்கைகளில் புரட்சிகரமான முறை யில் மாற்றம் எதுவும் வரவில்லையெனில், 2013ல் பெரும்பான்மை மக்கள் மீதுஏற்றப்பட்டுள்ள பொருளாதார சுமை கள் 2014ஆம் ஆண்டிலும் மேலும் உக்கிரமான முறையில் அமைந்திடும் என்றே அஞ்ச வேண்டிய நிலையில் இருக்கிறோம். புத்தாண்டு பிறந்தவுடனே யே மக்கள் மீது மற்றொரு சுற்று எரி பொருள்களின் விலை உயர்வுகள் ஏற்றப்பட்டுள்ளன. உலகப் பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் பாதிப்புகளை நம் மக்கள் மீதும் உடனுக்குடன் ஏற்றுவது என்பது சர்வசாதாரணமான ஒன் றாக மாறிவிட்டது. ஆயினும் உலகப் பொருளாதார நெருக்கடி தொடரும் என்றே தோன்றுகிறது. உலகப் பொரு ளாதாரத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி 2013ல் சரியாகிவிடும் என்று நம்பப்பட்டது. ஆனால் நம்பிக்கைகள் தவிடுபொடியாகி உலகப் பொருளாதாரம் தொடர்ந்து தடு மாறித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகள் தன்னைத் தாக்காதவாறு இந்தியா 2008ல் தன்னை சமாளித்துக்கொண்ட போதிலும், அதனை அடுத்து வந்த ஆண்டுகளில் அதனால் அவ்வாறு செய்ய முடிய வில்லை. தற்போது மிகவும் கடுமையான முறையில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இந்தியாவின் வளங்களையும், சந்தைகளையும் அந்நிய மற்றும் உள் நாட்டு மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்யக்கூடிய கட்டற்ற பொருளாதார சீர்திருத்தங்களை முற்றிலுமாக மாற்றியமைத்தால் மட்டுமே இத்தகைய நிலைமையையும் மாற்றி அமைத்திட முடியும். அப்போதுதான் நம் நாட்டின் வளங்களை நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும், அதன் மூலம் நம் நாட்டு மக்களின் நலன்களையும் முன்னேற்றிட முடியும்.ஆயினும், பொருளாதாரக் கொள் கைகளைப் பின்பற்றுவதில், அதிலும் குறிப்பாக லஞ்ச ஊழல்களில் ஊறித்திளைப்பதில், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே பெரிய அள வில் வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இவ்விரு கட்சிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதை நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல் பட்ட அனுபவமும் உறுதிப்படுத்தியது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வரிசை ஊழலாக இருந்தாலும் சரி அல்லது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழலாக இருந்தாலும் சரி, இவற்றின் மீது ஆழமான முறையில் விவாதம் நடைபெறாது நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைக் கப்பட்டதைப் பார்த்தோம். விவாதங்கள் நடைபெற்றிருக்குமானால் வாஜ்பாய் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்களும் வெளிவந்திருக்கும். நவீன தாராளமயக் கொள்கை களை அமல்படுத்துவதிலும், கோடிக் கணக்கான ஊழியர்களின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக்கூடிய விதத்தில் ஓய்வூதிய நிதியத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதாக இருந்தாலும் சரி அல்லது வங்கிகள் தேசிய மயம் என்னும் கொள்கையைக் கை விட்டு, அவற்றைத் தனியாரிடமும் அந் நிய நிதி நிறுவனங்களிடமும் தாரை வார்த்து அதன்மூலம் சர்வதேச நிதி ஊகவர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாக்கப்படும் நடவடிக்கையாக இருந் தாலும் சரி, காங்கிரசும் பாஜகவும் ஒரே பக்கத்தில்தான் இருந்தன.நாட்டில் ஆள்வோரின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற் கானதொரு வாய்ப்பை 2014 நமக்குஅளித்திருக்கிறது.
ஆளும்கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாற்றுக்கொள்கைகளைக் கடைப்பிடிப்போரையும் ஓரணியில் கொண்டு வருவதற்கானதொரு வாய்ப் பாக வரவிருக்கும் பொதுத் தேர்தல்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள், தங்கள் வாழ்வு சிறந்த முறையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்தும் வல்லமை மிக்கவர்களை அரசியல் மாற்றாகக் கொண்டு வருவ தற்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மாற்றுக் கொள்கைத் திசைவழி என்பது மக்களுக்கு கருணை வழங்குவது அல்ல, மாறாக உணவுப் பாதுகாப்பு, இலவசமாக சுகாதாரப் பாதுகாப்பு, அனைவருக்குமான இலவசக்கல்வி,வேலை உரிமை அல்லது வேலையில்லாக் காலத்தில் போதிய அளவு நிவார ணம், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் ஆகிய உரிமைகளை வழங்கிடக் கூடிய விதத்தில் அவை இருந்திட வேண்டும்.
இத்தகைய மாற்றுத் திசை வழி என் பது மனிதாபிமான அடிப்படையில் மட்டு மல்ல, பொருளாதார ரீதியிலும் விரும்பத்தக்கதாகும். இவ்வாறாக மக்களை மேம்படுத்துவதன் மூலம்அவர்களது வாங்கும் சக்தி கணிசமான அளவிற்கு அதிகரித்து அதன் மூலம்மிகவும் உள்நாட்டுத் தேவைகளும் அதிக அளவில் உருவாக்கப்படும். இவை நாட்டின் உற்பத்தி வளர்ச்சிக்கும் உந்து சக்தியாகஅமைந்து வேலைவாய்ப்பும் பெருகுவதற்கு இட்டுச் செல்லும். இவ்வாறு ஒரு சங்கிலித் தொடர்போன்று நாட்டில் நிலையான மற்றும் நேர்மையான வளர்ச்சி அமைந்திடும்.இத்தகைய கொள்கையைப் பின்பற்றிட போதுமான வாய்ப்பு வளங்களுக் கும் நாட்டில் பஞ்சமில்லை.
நாட்டில் அபரிமிதமான அளவிற்கு நடை பெற் றுள்ள ஊழல்கள் தடுக்கப்பட்டும், பணக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் நிறுத்தப்பட்டும் அவற்றால் அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய தொகை கள் முறையாக வந்திருந்தால் அத்தொகை களை பொது முதலீட்டில் செலுத்தி நம் நாட்டிற்கு மிகவும் தேவையாக இருக்கக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி, அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி இருக்கமுடியும். இத்தகையதொரு மாற்றுக்கொள்கைத் திசைவழியில் பயணிக்கக் கூடிய ஓர் அரசியல் மாற்றுதான் நாட் டிற்குத் தற்போது தேவைப்படுகிறது. இவ்வாறாக, நமக்கு இன்றைய தேவை வெறும் தேர்தல் மாற்று அல்ல, மாறாக ஓர் அரசியல் மாற்றேயாகும். இந்தியா 2014ல் அத்தகையதொரு இடது, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற மாற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நாம் இந்தப் புத்தாண்டை வாழ்த்துவதன் பொருள் நாம் மக்கள் போராட்டங்களை மிகவும் சக்திமிக்க விதத்தில் வலுப்படுத்துவதன் மூலம் பொதுத் தேர்தலுக்குப் பின் 2014ல் அத்த கையதொரு மாற்றை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதேயாகும்.நாட்டில் நடைபெற்றுள்ள சக்தி வாய்ந்த மக்கள் இயக்கங்களும் போராட்டங்களும் ஆட்சியாளர்களின் கொள் கைகளை மாற்றுவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன என்பது வரலாறு. அத்தகைய வரலாற்றை மீண்டும் இந்த ஆண்டில் உண்டாக்கிட மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயத்தில் நாட்டில் தலைநீட்டும் மதவெறி சக்திகளையும் முழுமையாக முறியடித்திட வேண்டும், அதன் மூலம் நம் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாத்திட வேண்டும். சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிடவும் நம் மக்களுக்குச் சிறந்ததரமான வாழ்க்கையை அளிப்பதற்கும் இது அத்தியாவசியமான தேவையாகும்.
- தமிழில்: ச. வீரமணி


Friday, January 3, 2014

‘ஆம் ஆத்மி’யின் எதிர் காலம்! :பிரகாஷ் காரத்
பிரகாஷ் காரத்
ஓராண்டுக்கு முன்பு தில்லியில் அமைக் கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தில்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 28 இடங்களை வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. நாட்டின் தலைநகரில் ஒரு புதிய கட்சி வேகமாக எழுந்திருப்பது நாட்டில் உள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற வட்டாரங்களால் பொதுவாக வரவேற்கப்பட்டிருப்பதுடன் அதிக அளவு விவாதத்திற்குரிய ஒன்றாகவும் மாறி இருக்கிறது.
ஓர் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி
இது ஓர் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் போக்கேயாகும். ஆயினும், ஓர் அரசியல் கட்சி அமைக்கப்பட்ட வுடன் மிக வேகமாக மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது இது முதல் தடவை அல்ல. ஆந்திராவில் என். டி. ராமராவ் அமைத்த தெலுங்கு தேசம் கட்சி 1982ல் சட்டமன்றத் தேர்தல்களின்போது வியக்கத்தக்க விதத்தில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதேபோன்று எண்பதுகளில் அனைத்து அசாம் மாணவர் சங்கம் எனப்படும் ஏஏஎஸ்யு (AASU)இயக்கத்தின் அடிப்படையில் அசாம் கண பரிசத் கட்சியும் அசாம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது.
இக்கட்சிகள் ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக்கொள்வதில் ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும்கூட இவை இன்னமும் மாநிலக் கட்சிகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இவ்விதத்தில் ஏஏபி கட்சியின் வளர்ச்சி கவனிக்கத்தக்க ஒன்றாகும். அதனால் மத்தியத்தர வர்க்கத்தினரிடம் ஒரு வலைப்பின்னலை உருவாக்கி, மத்தியத்தர வர்க்கத்தினரின் ஆதரவைத் திரட்ட அக்கட்சிக்கு முடிந்திருக்கிறது. பின்னர் தன் செல்வாக்கை மாநகரின் அடித்தட்டு மக்களிடமும் விரிவாக்கிக் கொண்டுள்ளது. இரண்டாவதாக, கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் செல் வாக்கில் இருந்து வந்த தில்லியில் இதனை ஏ.ஏ.பி. கட்சியால் செய்ய முடிந்திருக் கிறது.
2011ல் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்கத்திலிருந்து ஏஏபி உருவானது. அந்த சமயத்தில், ஜன லோக்பால் சட்டமுன் வடிவுக்காக அண்ணா ஹசாரே இயக்கம் நடத்திய சமயத்தில் அது மத்தியத்தர வர்க்கத்திடமிருந்து, அதிலும் குறிப்பாக தில்லி இளைஞர்களிடமிருந்து, விரிவான அளவில் ஆதரவைப் பெற்றது. ஊழல் எதிர்ப்பு ஒன்றை மட்டும் முழுமையாக முதன்மைப்படுத்திய இவ்வியக்கம், ஒருசில மாதங்களுக்குப் பின்னர் நீடித்திருக்க முடிய வில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிலரும் ஓர் அரசியல் கட்சியை அமைக்க வேண்டும் என்ற தீர்மானமும், அதீதமாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணம் மற்றும் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தியதும் இப்புதிய கட்சி மக்களிடம் செல்வாக்கை அதிகரித்திடவும், புதிய ஊழியர்களைக் கவரவும் உதவியது.
இவ்வாறு காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு எதிராக ஏஏபி வெற்றி பெற்றிருப்பதானது ஓர் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப்போக்கேயாகும். சாதாரணமாக அரசியலில் அக்கறையற்று இருக்கக்கூடிய மத்தியத்தர வர்க்கத்தினரை ஈடுபடுத்தி இயங்க வைத்திருப்பதும், இளைஞர்கள் மத்தியில் நல்லவிதமான சிந்தனைகளுடன் அரசியல் ஈடுபாட்டை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கதொரு சாதனையாகும். தில்லி அரசாங்கத்திற்கு ஒரு மாநில அரசாங்கத்திற்குரிய அளவில் முழு அளவில் அதிகாரங்கள் இல்லை என்றபோதிலும் ஏஏபி அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. அதே சமயத்தில், காங்கிரசும் பாஜகவும் தங்களுடைய வழக்கமான அரசியல் கட்டமைப்புக்கு வெளியிலிருந்து வரும் ஓர் அரசியல் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன.
ஏஏபியின் தேர்தல் அறிக்கை மக்களின் சில முக்கியமான பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டிருக்கிறது. மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்போம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாளொன்றுக்கு 700 லிட் டர் வரைக்கும் தண்ணீர் இலவசமாக விநியோகிக்கப்படும், கிராம சபைகள் மூலம் அதிகாரம் பரவலாக்கப்படும், ஒப்பந்த ஊழியர்கள் முறைப்படுத்தப்படுவார்கள் போன்று உறுதிமொழிகள் தரப்பட்டிருக்கின்றன.
கொள்கைகள் குறித்து மவுனம்
ஊழல் உட்பட மக்கள் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சனைகள் குறித்து ஏஏபி முன்மொழிவுகள் அளித்துள்ள அதே சமயத்தில், இப்பிரச்சனைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ள பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும், எவ்விதமான பொருளாதாரக் கொள்கைகளைத் தங்கள் அரசு பின்பற்றப் போகிறது என்பது குறித்தும் எதுவும் கூறாது இதுவரை மவுனம் சாதித்து வருகிறது. உதாரணமாக, தொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்து வருவதற்குக் காரணமே மாநகரில் மின் விநியோகத்தைத் தனியாரிடம் ஒப்படைத்ததுதான். அதேபோன்று நவீனதாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் வெளிப்பாடுதான் உயர்மட்ட அளவில் ஊழல் நிறுவனமயப் படுத்தப்பட்டிருப்பதற்கும் காரணமாகும். அதேபோன்றதுதான் ஒப்பந்த ஊழியர்கள் நியமனமும்.
ஆனால், ஏஏபி இதுவரை தான் பின்பற்றப்போகும் கொள்கைகள் குறித்து எதுவுமே கூறவில்லை. நவீன தாராளமயக் கொள்கைக்கு மாற்றாக எதையாவது அவர்கள் வைத் திருக்கிறார்களா? இவை தொடர்பாக வெளிப் படையாக எதுவும் கூறாமல் மறைப்பதற்கான முயற்சிகளே இருப்பதுபோல் தோன்று கிறது. இதற்கு, அக்கட்சியைச் சுற்றிஅணிசேர்ந்திருப்பவர்களின் சமூக அடித் தளத்தில் காணப்படும் முரண்பாடுகளே காரணமாக இருக்கலாம். ஓர் ஏஏபி தலைவர், ’’இடதுசாரிக் கொள்கை-வலதுசாரிக் கொள்கை என்பது போன்ற பேச்சுக்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள நிலைமைகளுக்கு எப்போதுமே பொருந்தாது’’ என்கிற பாணியில் கருத்துகூறும் அளவிற்குச் சென்றிருக்கிறார். மேலும், லத்தீன் அமெரிக்காவிலிருந்து சிறந்த மாடல் உருவாகி வருவதாகவும் அவர் பேசியிருக்கிறார். ஆனால், லத்தீன் அமெரிக்க மாடல் என்பது தெள்ளத் தெளிவாக நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்று என்பதை அவர் நினைவுகூர்ந்திட வேண்டும்.
ஏஏபி-யானது பாஜகவின் முன்னேற்றத் தை வலுவான முறையில் தடுத்து நிறுத்தியிருப்பதோடு, ஊழல் புரிவதிலும் கொள்கைகளிலும் காங்கிரசிலிருந்து இக்கட்சி வேறுபட்டதல்ல என்பதையும் நன்கு அம்பலப்படுத்தியுள்ளது.
மத்தியத்தர வர்க்கத்திடமும் இளைஞர்களிடமும் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோள், தில்லியில் ஏஏபி மேற்கொண்ட பிரச்சாரத்தின் மூலம் நன்கு மழுங்கடிக்கப்பட்டது. ஆயினும், வகுப்புவாதம் குறித்த தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்தும், வகுப்புவாத இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் மீதான தாக்குதல் குறித்தும் ஏஏபி இதுவரை மவுனம் சாதித்தே வருகிறது. வகுப்புவாதத்திற்கு எதிராக தெள்ளத் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல் எப்போதும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று ஏஏபி நம்புகிறதா? இப்போது ஏஏபி தேசிய அளவிலான ஒரு கட்சியாக மாறவும், மற்ற மாநிலங்களிலும் தேர்தல்களில் போட்டி போடவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
அப்படியானால் அதுதன்னுடைய அடிப்படையான திட்டங்களையும் கொள்கைகளையும் வெளிப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும். அப்போதுதான் அக்கட்சி எப்படிப்பட்டது என்பதையும் அது எந்த திசை வழியில் செல்லும் என்பதையும் மக்களால் தீர்மானிக்க முடியும். ஏஏபி இதுவரையிலும் இடதுசாரிக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளையும் ஒரேமாதிரி குறை சொல்லியே தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறது.
செயல்பாட்டில் கம்யூனிஸ்ட்டுகளின் பாணி
ஏஏபி தன்னுடைய நற்பண்புகளாக, கறைபடியாத, லஞ்சத்திற்கு இடமளிக்காத, எவ்விதமான சுகபோக வாழ்க்கை வசதிகளுக்கும், அதிகாரம் அளித்திடும் சலுகை களுக்கும் இடமளிக்காதவர்களாக இருப்போம் என்றும் மக்களின் நன்கொடைகளை அடிப்படையாகக் கொண்டே கட்சியைநடத்துவோம் என்றும் கூறிக் கொண்டி ருக்கிறது. இவை அனைத்துமே ஒட்டு மொத்தத்தில் கம்யூனிஸ்ட்டுகள் கடைப் பிடிக்கும் பாணியும் நடைமுறையுமாகும். உதாரணமாக கட்சிக்கு நிதி எப்படி வருகிறது என்று பார்ப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே சிறிய அளவில் வெகுஜனப் பங்களிப்புகளின் மூலமும், கட்சி உறுப்பினர்கள் அளித்திடும் லெவி தொகை கள் (அதாவது கட்சி உறுப்பினர்களின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அளிக்கப்படுவதன்) மூலமும்தான் கட்சிக்கு பிரதானமாக நிதி வருகிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் வாளி மூலம் மக்களிடம் நிதி சேர்ப்பதைப் பார்த்திருக்கும் எவரொருவரும் இதனை நன்கு தெரிந்து கொண்டிருப்பார்கள். சமீபத்தில், செப்டம்பரில் கேரளா முழுவதும் இரு நாட்கள் நடைபெற்ற இத்தகைய வாளி வசூலில் கட்சி நிதியாக 5 கோடியே 43 லட்ச ரூபாய் வசூலாகியது. அரவிந்த் கெஜ்ரிவாலும் மற்றும் அவர்தம் அமைச்சரவையில் உள்ள இதர அமைச்சர்களும் தங்களுக்கு அதிகாரப் பூர்வமாக அளிக்கப்பட்ட ஆடம்பரமான வசிப்பிடங்களை நிராகரித்திருப்பதையும், அளவான வீடுகளிலிருந்தே பணியைத் தொடருவோம் என்று அறிவித்திருப்பதையும் தில்லி மக்கள் பாராட்டி இருக்கிறார்கள். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் அமைத்துத்தந்துள்ள பாரம்பர்யம் இது. இஎம்எஸ் நம்பூதிரிபாட், ஜோதிபாசு மற்றும் நிருபன் சக்ரவர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் முதலமைச்சர்கள் முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆரம்பத்தில் அமைச்சராக இருந்தபோதும், பின்னர் முதலமைச்சராக மாறிய பின்னரும்கூட இரு படுக்கையறை கொண்ட அடுக்கு மாடி வீடு ஒன்றில்தான் வசித்தார். கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் அப்பழுக்கற்ற தலைவர் என்ற சித்திரத்தைப் பெற்றிருக்கிறார். தற்போதைய திரிபுரா முதல்வரான மாணிக் சர்க்கார் தன்னுடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் அடிப்படையில் நாட்டிலேயே ’’மிகவும் ஏழை முதலமைச்சர்என்று அறியப்பட்டிருக்கிறார்.
ஏஏபி எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க இருக்கிறது?
எளிமையைப் பின்பற்றுவதன் மூலமும் பொது வாழ்வில் புதிய நெறிமுறைகளை அறிவித்திருப்பதன் மூலமும் ஏஏபி அரசாங்கம் புதிய முன்மாதிரியை அமைத்திருப்பது நன்று. ஆயினும் இத்தகைய நற்பண்புகளையும் நெறிமுறைகளையும்தான் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களும் எப்போதும் பின்பற்றி வந்துள்ளன, வருகின்றன என்பதை அது மறந்துவிடக் கூடாது. அரசாங்கங்கள் மட்டுமல்ல, மக்கள் மிகவும் எளிதாக இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க முடியும் என்பதும், அவர்களும் மிக எளிய முறையிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.
அரசியலற்றவர்களும், இன்னும் சொல்லப்போனால் அரசியலுக்கு எதிரான கருத்து கொண்டவர்களும்தான் ஏஏபி-யின் துவக்கப் புள்ளிகள் ஆவர்; நடுத்தர வர்க்க - அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நடத்த வந்த இந்த நபர்கள், ஆளும்வர்க்க அரசியலில் இருந்து விலகிச் செல்வதையோ, உழைக்கும் மக்களுக்காக உறுதியுடன் நிற்கிற கம்யூனிஸ்ட்டுகளைப் போல செயல்பட முனைவதையோ தடுத்து நிறுத்தவே முயற்சிப்பார்கள். இடதுசாரிகளின் நிகழ்ச்சி நிரல் மிகவும் தெள்ளத் தெளிவானது. அது தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களுக்கு ஆதரவான கொள்கைகளையும், சமூக நீதி மற்றும்அதிகாரம் ஜனநாயகப்படுத்தப்பட்டு பரவ லாக்கப்பட வேண்டும் என்பதையும் அதுகொண்டிருக்கிறது.
இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள் 1957ல் கேரளத்தில் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையிலிருந்து, மேற்குவங்கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் நடை பெற்ற அனைத்து இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களும் நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தியதிலும், உழைக்கும் மக்களுக்கான உரிமைகளை உத்தரவாதப்படுத்தியதிலும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறையைக் கொண்டுவந்து அதிகாரங்களைப் பரவலாக்கியதிலும் மற்றும் ஊழலற்ற அமைச்சரவைகளை நடத்தியதிலும் முன்னுதாரணங்களாகத் திகழ்ந்துள்ளன.
நாட்டில் இன்றைய தினம், ஆளும் வர்க்கங்களின் இரு பிரதான கட்சிகளாக விளங்கும், காங்கிரசும் பாஜகவும், மக்களின் மீது சொல்லொண்ணாத் துன்ப துயரங்களை ஏற்றி வைத்துள்ளன. சர்வதேச நிதி மூலதனம் மற்றும் இந்திய பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களைக் காக்கும் விதத்தில் கொள்கைகளைப் பின்பற்றி சுரண்டலை உக்கிரப்படுத்தியுள்ளன. அவை பின்பற்றி வந்த நவீன தாராளமயக் கொள்கைகள்தான் உயர்மட்ட அளவிலான லஞ்சத்திற்கு ஊற்றுக்கண்ணாகும்.
துரதிர்ஷ்டவசமாக, இடதுசாரிகள் தவிர ஒரு சில கட்சிகள் மட்டுமே, காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு மாற்றாக வித்தியாசமான கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன. எனவே, ஏஏபியும் இப்போது தில்லி தேர்தல்களுக்குப் பின்னர் முக்கியமானதொரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. மாற்றுக் கொள்கைத் திசை வழி என்ன என்பது குறித்து இது அறிவிக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறதா? நாட்டின் உழைக்கும் மக்கள் மற்றும் சாமானிய மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கட்சியைக் கட்ட இருக்கிறதா? இவற்றின் அடிப்படையில்தான் புதிதாக உருவாகி யுள்ள ஏஏபி கட்சியின் எதிர்காலம் அமைந் திருக்கிறது.
- தமிழில்: ச.வீரமணி