Friday, November 18, 2016

மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை மோடி தீர்மானிக்கமுடியாது


மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை மோடி தீர்மானிக்கமுடியாது
திருவனந்தபுரம் தர்ணாவில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
திருவனந்தபுரம், நவ.18-
மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை மோடி தீர்மானிக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்கு எதிராக திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி கிளையின் முன்பாக கேரள இடது முன்னணி அரசாங்கத்தின் சார்பில் கிளர்ச்சி தர்ணா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
“நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் மக்களே உச்சபட்ச உரிமை உடையவர்கள். நம் அரசமைப்புச் சட்டமே “இந்திய மக்களாகிய நாம்” என்றுதான் ஆரம்பமாகிறது. மக்கள் எப்படி வாழ வேண்டும், தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் தீர்மானித்திட முடியாது. இதை ஏற்க முடியாது. இந்த நடவடிக்கைக்கு எதிராக மிகவும் விரிவான அளவில் கிளர்ச்சிகள் நடைபெறும் என்று எச்சரிக்கிறோம்.
மோடியின் அறிவிப்பால் அநேகமாக அனைத்து மாநில அரசுகளுமே தங்கள் வருவாயை மிகப்பெரிய அளவில் இழந்துள்ளன. இந்த இழப்பினை மத்திய அரசு ஈடுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக அல்லாத மாநில அரசுகள் கூட்டாக மேற்கொண்டிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான மாநில அரசுகள் முன்கை எடுத்திடும்.”
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

இடது ஜனநாயக முன்னணி சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தர்ணா போராட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட அனைத்து மாநில அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இந்தத் தர்ணா போராட்டம் இன்று முழுவதும் நடைபெற்றது.

2 comments:

Kasthuri Rengan said...

நல்ல பகிர்வு ...

தொடர்க

Unknown said...

ஆஊ என்றால் தர்ணா பண்ணுவதை தவிர வேற என்ன தெரியும் இடதுசாரிகளுக்கு.தானும் உழைக்க மாட்டார்கள் மற்றவர்களையும் உழைக்க விடமாட்டார்கள்