Monday, July 30, 2012

உணவு உரிமை - ஓர் அடிப்படை உரிமை
நான்கு இடதுசாரிக் கட்சிகளால் நடத் தப்பட்ட உணவுப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அது தொடர்பாக நாடு முழுதும் ஒரு மாத கால மாக நடத்தப்பட்ட கூட்டுப் பிரச்சார இயக்கம் 2012 ஜூலை 30 திங்கள் கிழமையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு முன் தொடங்கும் ஐந்து நாள் தர்ணா போராட்டத்துடன் நிறைவடை கிறது.

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் பொது விநியோக முறையின் கீழ் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்களும் அனைத்து ஏழை மக்கள் பிரி வினருக்கும் கிடைத்திட வேண்டும் எனவும், ரேசன் கடைகளுக்கு வரவேண்டிய உணவு தானியங்கள் கறுப்புச் சந்தை மற்றும் கள்ளச் சந்தைக்கும், கொள்ளை லாபமீட்டுபவர்களுக் கும் செல்வது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி, நாடு முழு தும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

ஒவ்வொரு மாதமும் 35 கிலோ கிராம் உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய் விலையில் வறுமைக்கோட்டுக்கு மேல்/வறு மைக்கோட்டுக்குக் கீழ் என்று எவ்விதப் பாகு பாடுமின்றி அனைத்துப் பிரிவு குடும்பங்க ளுக்கும் உத்தரவாதம் செய்யக்கூடிய வகை யில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தை வலியுறுத்துவதே இப்பிரச்சார இயக்கத்தின் பிரதானக் கோரிக்கையாக இருந்தது. நாட்டில் மக்கள் மத்தியில் நிலவும் பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைக்கு முடிவு கட்டிடவும் உணவுப் பாதுகாப்பின்மையை ஒழித்திடவும் இது ஒன்றே வழியாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக அள விலான பசி-பட்டினி அட்டவணையின்படி (ழுழஐ-ழுடடியெட ழரபேநச ஐனேநஒ), உலகில் மிகவும் மோசமானவிதத்தில் பசி-பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்கள் கொண்ட

80 நாடுகளின் பட்டியலில் இந்தியா 67ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது. உலகில் பட்டினிக்கொடுமைக்கு ஆளாகி யுள்ள மக்களில் 25 விழுக்காட்டினர் இந்தியர் களாக இருப்பதை மிகவும் வெட்கங்கெட்ட முறையில் ஒப்புக்கொண்டாக வேண்டும். இந்த அட்டவணையின்படி வட கொரியா மற் றும் உள்நாட்டுச் சண்டையால் உருக்குலைந்து போயுள்ள சூடான் போன்ற நாடுகளின் நிலை மைகளைவிட மிகவும் மோசமாக இந்தியா இருந்து வருவது தெரிகிறது.

உலகில் ஊட்டச்சத்துக் குறைவால் உழலும் ஐந்து வயதுக்குக் குறைவான குழந் தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந் தியாவில்தான் இருக்கிறார்கள். நம் குழந்தை களில் 44 விழுக்காட்டினர் குறைந்த எடை உடையவர்கள். 72 விழுக்காட்டினர் ரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும்விட மிகவும் மோச மான விஷயம், நம் நாட்டின் கர்ப்பிணிப் பெண்களில் 52 விழுக்காட்டினர் ரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டிருப்பதாகும். இவர் கள்தான் இந்தியாவின் எதிர்கால சந்ததியி னரைப் பெற்றெடுக்கப் போகிறவர்கள். முழு மையாக தடுத்து நிறுத்தக்கூடிய வியாதிக ளால் பாதிக்கப்பட்டு அவற்றிற்கு எதிராக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வழியில் லாது நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான குழந்தைகள் மடிந்து கொண் டிருக்கின்றன.

இவ்வாறு இருக்க வேண்டிய அளவிற்கு எடை உள்ளவர்கள், இல்லாதவர்கள் விஷயத் திலும் நாம் இருவேறு இந்தியர்களை உரு வாக்கி இருக்கிறோம். நம் நாட்டில் 11 விழுக் காட்டினர் அதிக அளவில் உணவுப் பொருள் களை உட்கொள்வதாலோ அல்லது தவறான வகையில் உணவுப் பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பதாலோ அதிக எடையால் அவ திப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேறு வகையில் சொல்வதென்றால் உலகில் தடியர் கள் அதிகமாக உள்ள நாடு இந்தியாதான். இவ் வாறு நாட்டில் உள்ள ’’ஒளிரும் இந்தியர் கள்’’ அதிகமான அளவில் உணவுப்பொருட் களை உட்கொள்வதால் பாதிக்கப்பட்டு அவ திப்பட்டுக்கொண்டிருப்பதும் இங்கேதான்.

உணவுப்பாதுகாப்பின்மை காரணமாக போதிய அளவிற்கு மக்களுக்கு ஊட்டச்சத் துக் கிடைக்காததுதான் இவ்வாறு ஊட்டச் சத்தின்மைக்குப் பிரதான அம்சமாகும். நாட்டில் பெரும்பான்மை மக்கள் பசி-பஞ் சம்-பட்டினியால் மடிவது தொடர்வதற்கும் இதுவே பிரதான காரணமாகும். பல்வேறு தோராயமான மதிப்பீடுகளின்படி, நாட்டில் உள்ள மக்களில் கிராமப்புறத்தில் 75 விழுக் காட்டினரும், நகர்ப்புறத்தில் 73 விழுக் காட்டினரும் தாங்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு உணவு உட்கொள் ளாமல் இருக்கிறார்கள் என்று கண்டறியப் பட்டிருக்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ) வளர்ச்சி விகிதம் மீளவும் வலுவானவகை யில் மாறிக்கொண்டிருப்பதால், இந்நிலைமை சரிப்பட்டுவிடும் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. ஆயினும் இது உண்மை யல்ல. 1980களில் - அதாவது பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 விழுக்காடாக இருந்த உணவு தானியங்கள் உற்பத்தி, தற்போது இந்நூற்றாண்டின் முதல் பத்தாண்டு காலத்தில் ஒவ்வோராண்டும் 1.3 விழுக்காடு அளவிற்குக் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. இதன் காரணமாக 1990 களில் ஒவ்வொரு நபரும் உட்கொள்ளும் உணவு தானியங்களின் அளவு நாளொன் றுக்கு 494 கிராம்களாக இருந்தது, தற்போது 2009இல் 438 கிராம்களாக வீழ்ச்சி அடைந் திருக்கிறது.

நவீன தாராளமய பொருளாதாரச் சீர் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, 1997இல் ரேசன் அட்டைகள் மூல மாக அனைவருக்குமான பொது விநியோக முறை என்பது கைவிடப்பட்டது. பொது விநி யோக முறை பல்வேறு விதமான ஊழல் களால் பீடிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட 1991இல் இம்முறை மூலமாக சுமார் 21 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள், அதாவது மொத்தமிருந்த உணவு தானியங் களில் 45 விழுக்காடு அளவிற்கு, ரேசன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டன. ஆனால், 2001ஆம் ஆண்டில் இது வெறும் 13 மில்லியன் டன்களாக சுருங்கிவிட்டது.

ஆயினும்கூட, ஐ.மு.கூட்டணி அரசாங்க மானது நாட்டில் பெரும்பகுதி மக்கள் பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமையால் மடிந்து கொண்டிருக்கும் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலை தொடர்கிறது. மத்திய அரசின் கிடங்குகளில் இருப்பில் உள்ள மிகை தானியங்களை ஏழைகளுக்குக் குறைந்த விலையில் விநியோகிக்க மறுக் கிறது. 2012 ஜூன் 1 அன்றைய தேதியில் அர சாங்கம் 82.3 மில்லியன் டன்கள் உணவுப் பொருட்களை இருப்பு வைத்திருக்கிறது. அமோக விளைச்சலின் காரணமாக கொள் முதல் செய்ய வேண்டிய 50 மில்லியன் டன் களுக்கும் மேலாகவே அரசு கொள்முதல் செய்து இவ்வாறு இருப்பு வைத்திருக்கிறது. இவ்வாறு கிடங்குகளின் கொள்ளளவுக்கும் மேலாக, பாதுகாப்பற்ற முறையில் திறந்த வெளியில் இருப்பு வைத்திருப்பதன் காரண மாக சுமார் 6.6 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் அழுகி வீணாகிக் கொண்டி ருக்கின்றன. ஆயினும், இவற்றை ஏழை மக்களுக்கு வழங்கிட ஐ.மு.கூட்டணி-2 அர சாங்கம் மறுத்து வருகிறது. முன்னாள் நிதி யமைச்சரும் இன்னாள் குடியரசுத் தலைவரு மான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, தற் போது கொள்முதல் செய்துள்ள உணவு தானி யங்களை சேமித்து வைப்பதற்கான இடத்தை ஒதுக்குவதற்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் கோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது என்று கூறினார். ஆயினும் இவற்றை ஏழை மக்க ளுக்கு அளித்திட அரசாங்கம் மறுத்து வரு கிறது. அதுமட்டுமல்லாமல், இவ்வாறு நம் மக் களைப் பட்டினியால் மடியச் செய்திடும் சமயத்தில் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற் றுமதி செய்வதன் மூலம் லாபம் ஈட்டவும் அர சாங்கம் முன்வந்திருக்கிறது. பட்டினியால் மடிந்துகொண்டிருக்கும் மக்களைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் இவர்களை மரண வியாபாரிகள் என்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது?

நமது குடியரசின் 13ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி அவர்கள் உறுதிமொழி எடுத்தபின் அளித்திட்ட தன்னுடைய ஏற்பு ரையில், அனைத்து சமத்துவங்களிலும் பொருளாதார சமத்துவமே மிகவும் முக்கிய மான ஒன்று என்று வரையறுத்திருக்கிறார்.

நம் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மையானால் நாட்டில் மிகவும் அடித்தட்டில் உள்ள மக்களும் தாம் இவ்வாறு வளர்ந்துகொண்டிருக்கும் நாட்டின் ஓர் அங்கம் என்கிற உணர்வைப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த அடிப்படையில் அவர் நம் போராட்ட வடிவங் களுக்குப் புதியதொரு பார்வையை அளித் திருக்கிறார்.

“நாட்டில் பட்டினி என்னும் கொடு மையை ஒழித்துக்கட்டும் போராட்டங்களை நாட்டின் இளம் சந்ததியினர் பன்முகப் பாய்ச்சலில் முன்னெடுத்துச் செல்வார்கள். பசி, பஞ்சம், பட்டினி என்பதைவிட அவமான கரமான சொற்கள் வேறெதுவுமில்லை. நம் ஏழை மக்களின் நியாயமான அபிலாசை களை நிறைவேற்றக்கூடிய விதத்தில் நம் நடைமுறைகள் இல்லை. நவீன இந்தியா வின் அகராதியிலிருந்து வறுமை என்னும் சொல்லை அழித்தொழித்து, அடித்தட்டில் உள்ள மக்களை மேலே கொண்டு வரவேண் டும்,’’ என்று பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.

இவர் தன் கூற்றில் உண்மையாக இருக் கிறார் எனில், பின் அவர் தன் அரசாங்கத்தை உணவு உரிமையை அரசியலமைப்புச் சட்டத் தின்கீழ் ஓர் அடிப்படை உரிமையாக மாற்றிட, கட்டளையிட வேண்டும். மாண்புமிகு குடி யரசுத் தலைவர் அவர்களே, நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நாளொன்றுக்கு ஒரு கிலோ கிராம் உணவு தானியங்கள் 2 ரூபாய்க்குக் கிடைப்பதை உத்தரவாதம் செய்யக்கூடிய வகையில் ஒரு சட்டத்தை உருவாக்கி, நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே, இத்தகையதிசை வழியில் நாம் பயணத்தைத் தொடங்கிட முடியும்.

இக்குறிக்கோளை எய்த வேண்டும், நம் நாட்டில் பட்டினிக்கொடுஞ்சிறைக்குள் பதறு கின்ற மனிதர்களைப் பாரினில் உயர்த்திட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், இடதுசாரிக் கட்சிகள், நாடாளுமன்றத்தின் முன் ஐந்து நாட்கள் தர்ணா போராட்டம் மூலமாக ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்திட முன்வந்திருக்கின்றன. பசி - பஞ்சம் - பட்டினி மற்றும் வறுமை இல்லாத சிறந்த தோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத் தில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்கும் போராட்டங்கள் இந்தத் திசைவழியில் எதிர் காலத்தில் வலுப்படுத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, July 15, 2012

வரலாற்றுச் சக்கரத்தைத் திருப்ப முயலும் ப.சிதம்பரம்
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம் பரம் “மினரல் வாட்டர் வாங்குவதற்கு 15 ரூபா யும், ஐஸ்கிரீம் வாங்குவதற்கு 20 ரூபாயும் செல வளிக்கும் மக்கள், அரிசி விலையோ கோது மையின் விலையோ ஒரு ரூபாய் உயரும் போது அதனை பெரிய பிரச்சனையாக ஆக்கு வது ஏன்?’’ என்று பேசியிருப்பதாக பத்திரி கைகளில் வந்திருப்பதைப் பார்க்கும்போது அவர் வரலாற்றுச் சக்கரத்தின் திரும்பிச் செல்லும் பொத்தானை அழுத்தியிருப்பது போலவே தோன்றுகிறது.

பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண் டிருந்த சமயத்தில், ராணி மேரி அண்டாய் னெட், “மக்களுக்கு ரொட்டி கிடைக்கவில் லை என்றால் என்ன? கேக் வாங்கிச் சாப்பிட வேண்டியதுதானே!’’ என்று கிண்டலடித் தாராம். நேர்மையாகச் சொல்வதென்றால், அவர் இவ்வாறு கூறினாரா என்பதற்கு எவ் விதமான பதிவும் இல்லை. உண்மையில் புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானி ஜீன் ஜேக் கஸ் ரூசோ, 1765இல் எழுதிய தன்னுடைய சுயசரிதையில், இதுபோன்றதொரு வாசகத் தை எழுதியுள்ள சமயத்தில் மேரி அண் டாய்னெட்டுக்கு வயது ஒன்பது மட்டுமே. இதேபோன்ற கூற்றுகள் மற்ற நாடுகளிலும் உண்டு. ரொட்டி, கேக்கிற்குப் பதிலாக அரிசி மற்றும் இறைச்சியை சம்பந்தப்படுத்தி சீன மாமன்னர் ஹூயி கூறியதாக ஒரு கூற்று உண்டு. இவ்வாறு இவர்கள் கூறியதாகக் கூறப்பட்டு இருநூறு ஆண்டுகளுக்குப் பின், இப்போது ப.சிதம்பரம் இவ்வாறு திருவாய் மலர்ந்திருக்கிறார்.

மினரல் வாட்டர் வாங்குவதற்கும் ஐஸ் கிரீம் வாங்குவதற்கும் செலவழிக்கும் மக்க ளும், தங்கள் ஜீவனத்திற்காக ஒவ்வொரு நாளும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக் கும் மக்களும் ஒன்றல்ல, வெவ்வேறானவர் கள். தேசிய மாதிரி சர்வே அமைப்பு சமீபத் தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் வறுமைக் கோட் டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 60 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். சில மாநிலங்களில் இது மேலும் அதிகமாகும். வறுமை வரையறையை எதார்த்தமான முறையில் எடுத்துக் கொண்டோமானால், நாட்டில் 80 கோடி மக்களுக்கும் அதிக மானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள வர்களாவர். பிரதமரால் அமைக்கப்பட்ட மறைந்த அர்ஜூன் சென்குப்தா தலைமை யிலான ஆணையமானது, நாட்டிலுள்ள மக்க ளில் 77 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்கூட செலவழிக்க இயலாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற அறிக் கையுடன் மேலே கூறிய அறிக்கை ஒத்துப் போகிறது. இதுதான் உண்மையான இந்தியா. உள்துறை அமைச்சரின் கூற்று, நாட்டில் இரு விதமான இந்தியர்கள் (ஒளிர்கின்ற இந்தியர்களும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் அவதிப்படும் இந்தியர்களும்) இருப்பதையே வெளிப்படுத்துகிறது.

எதார்த்தநிலை இவ்வாறிருக்கும் நிலை யில்தான் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் நாளும் அதி கரித்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். பருவமழையைக் கணித்துக் கூறும் துறையினர், இந்த ஆண்டு நாட்டில் பெய்யும் மழைநீரின் அளவு 25 விழுக்காடு குறையும் என்று கூறியிருப்பதைப் பார்க்கும்போது, நிலைமைகள் மேலும் மோசமாகலாம் . குறிப்பாக புரதச்சத்துக்கு அடிப்படையாக உள்ள பருப்பு மற்றும் தானியங்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக் கின்றது. இதன் காரணமாக அனைத்து வித மான பருப்புகளின் விலைகளும் அதிகரித் துக் கொண்டிருக்கின்றன. ரூபாயின் மதிப்பு 20 விழுக்காடு குறைந்திருக்கக் கூடிய நிலையில், இவற்றை இறக்குமதி செய்வதன் மூலம்கூட நிலைமையைச் சமாளிக்க முடியாது என்றே தெரிகிறது. இதன்மூலம் நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் தங்கள் வாழ்நிலையைத்தக்க வைத்துக் கொள்ள மிகவும் கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தினசரி வாழ்வின் அனைத்து அம்சங்களி லுமே நிலைமைகள் மிகவும் மோசமான முறையில் சீரழிந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான செல வினங்கள் கடுமையாக அதிகரித்திருப்பதால், ஒவ்வோராண்டும் நான்கு கோடி மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டு வருகிறார்கள் என்று திட்டக் கமிஷனின் உயர்மட்ட வல்லு நர் குழு மதிப்பிட்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 விழுக்காட்டிற் கும் குறைவாகவே மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒட்டுமொத்தமாகச் செலவிடு கின்றன என்கிற உண்மையைக் கணக்கில் கொண்டு ஆராய்ந்தோமானால், பொதுச் சுகா தாரச் செலவினங்களுக்கு மிகவும் குறை வாகச் செலவிடும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருவது தெரியவரும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகமாகக் கொடுப்பதால்தான் உணவு தானியங்களின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்கிற உள்துறை அமைச்சரின் வாதமும் ஏற்கத் தக்கதல்ல. விவசாயிகளின் நலனைக் கருத் தில் கொண்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை யை அதிகரிக்க வேண்டியது அவசியம்தான். குறிப்பாக விவசாய நெருக்கடியும் விவசாயி களின் தற்கொலையும் அதிகரிக்கக்கூடிய சூழலில் இது அத்தியாவசியமானதுதான். ஆயினும் இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை சாமானிய மக்களின் மீது ஏற்றிடக் கூடாது. மக்களுக்கு அளித்திடும் உணவுப் பொருள்களின் விற்பனை விலைகளுக்கு அரசாங்கம் மானியங்கள் அளித்திடுவது அவ சியத் தேவைகளாகும். இவ்வாறு மானியங் கள் அளிப்பதற்கு அரசிடம் போதுமான வள ஆதாரங்கள் இல்லை என்பதே அரசுத்தரப் பில் வைக்கப்படும் பொதுவான வாதமாக எப்போதும் இருந்து வருகிறது.

மக்கள் மீது திணிக்கப்படும் மாபெரும் மோசடி இதுவாகும். சென்ற ஆண்டு, சுமார் 5.26 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக பன் னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளுக்கு அரசாங்கம் வரிச் சலுகைகளை வாரி வழங்கி யிருக்கிறது. தற்சமயம் நிதிப்பற்றாக்குறை 6.9 விழுக்காடு - அதாவது 5.21 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அரசாங்கம் மட்டும் மேலே குறிப்பிட்டவாறு முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை அளிக்காது இருந்திருந் தால், அரசுக்கு இவ்வாறு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது, மாறாக நிதி உபரிதான் ஏற் பட்டிருக்கும். ஆயினும், நிதிப் பற்றாக்குறை யைக் குறைக்கிறோம் என்ற பெயரில் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை மட்டும் கருணையற்ற முறையில் வெட்டிக் குறைத்திட அரசு முன்வந்திருக்கிறது. அர சாங்கம் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளை வளர்ச்சிக்கான “ஊக்கத்தொகை’’ என்று கூறுகிறது. இவ் வாறு அரசாங்கம், ஏழைகளுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டி அவர்களின் வயிற்றில் அடித்து, பணக்காரர்களுக்கு மானி யம் அளித்து அவர்களை ஊட்டி வளர்க்கிறது. இத்தகைய அரசின் கொள்கைகள்தான் நாட்டின் இருவிதமான இந்தியர்களை உரு வாக்க இட்டுச் செல்கின்றன. இருவிதமான இந்தியர்களுக்கும் இடையிலான இடை வெளி மேலும் அதிகமாகிட வழிவகுக்கின்றன.

பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் இத்தகைய சலுகைகள் ஒழிக்கப்பட்டு, அரசுக்கு வரவேண்டிய வரிகள் முறையாக வசூலிக்கப்பட்டு, அவை பொது முதலீடு களில் செலுத்தப்பட்டால், நாட்டில் கணிச மான அளவிற்கு வேலைவாய்ப்புகள் அதி கரித்திடும் என்பதோடு அதன் தொடர்ச்சி யாக உள்நாட்டுத் தேவைகளும் அதிகரிப்ப தோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச் சியும் அதிகரித்திடும்.

மாறாக, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்க மானது தொடர்ந்து தாராளமய நிதி சீர்திருத் தங்களை அமல்படுத்துவதன் மூலம் பணக் காரர்களை மேலும் பணக்காரர்களாக்க உத வும் நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. இவை சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலாளிகளைக் கொழுக்க வைத்திட உதவுமேயன்றி, சாமானிய மக்கள் மீது மேலும் கடுமையான முறையில் சுமை களையே ஏற்றிடும்.

நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங் களுக்கும் (வறுமைக்கோட்டிற்கு மேல்/வறுமைக்கோட்டிற்குக் கீழ் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி) ஒவ்வொரு மாதமும் 35 கிலோகிராம் உணவு தானியங்கள் கிலோ கிராம் 2 ரூபாய் என்ற வீதத்தில் அளிப்பதன் மூலமே நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும். இவ்வாறு வழங்குவதற்கு அரசிடம் வள ஆதாரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. உண்மை என்னவெனில், ஐ.மு. கூட்டணி-2 அரசிடம் இதற்கான அரசியல் உறுதிதான் இல்லை. நாட்டில் உள்ள அவ திப்படும் இந்தியர்களை மேலும் அவதிக் குள்ளாக்கி, ஒளிரும் இந்தியர்களை மேலும் ஒளிரச்செய்வதற்கான கொள்கைகளையே ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்க விரும்பு கிறார்கள்.

நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் இந் தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் அர சின் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கு நாடு முழுவதும் வலுவ ான முறையில் மக்கள் இயக்கங்கள் வலுப் படுத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)