Saturday, May 17, 2008

பேய்த்தனமான பயங்கரவாதத்தை வேரறுப்போம்

காட்டுமிராண்டித்தனமான பயங் கரவாதத் தாக்குதல்கள் மீண்டும் ஒரு முறை நடைபெற்றுள்ளன. பதி னைந்தே நிமிடங்களில் ஏழு இடங் களில் நடைபெற்றுள்ள வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஜெய்ப்பூர் நகரையே ரத்தத்தில் தோய்த்தெடுத்து அப்பாவி மக்கள் பலரின் உயிரைப் பலிகொண் டுள்ளன. இந்தத் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 60 பேர் உயிர்ப்பலியாகியுள்ளனர், 150க்கும் மேற்பட்டோர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பயங்கரவாதத் தின் இத்தகைய இழிவான மற்றும் கோழைத்தனமான நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மேலும் உயரும்.இத்தகைய பயங்கரவாதத் தாக்கு தல்களை எவ்வித தயவுதாட்சண்யமு மின்றி கண்டிக்க வேண்டிய அதே சமயத்தில், இத்தகு சவாலை இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று எதிர்த்திட வேண்டும். நம் நாட் டை சீர்குலைக்க மேற்கொள்ளப் படும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்திட வேண்டும். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான விளையாட் டுகள் மூலமாக இந்தியாவின் வளர்ச் சியைத் தடுத்து நிறுத்த எவரையும் அனுமதிக்கக் கூடாது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ‘‘பயங்கரவாதிகளிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள் கிறது’’ என்றும் அதன் விளைவா கவே இத்தகைய தாக்குதல்கள் என்றும், ‘பொடா’ சட் டம் மட்டும் ரத்து செய்யப்படாமல் இருந்திருந் தால், இத்தகு தாக்குதல்கள் நடைபெற்றிருக்காது என்றும் உடனடியாக அத்வானி தெரிவித்து விட்டார். இவ்வாறு கூறி, மதவெறித் தீயை மூட்டிவிட முனைந்துள்ளார். நாட்டின் சட்டப்புத்தகங்களின் அடுக் கில் ‘பொடா’ சட்டமும் அலங்கரித்த சமயத்திலும்கூட, இத்தகைய கொடிய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அர சாங்கத்தில் அத்வானி துணைப்பிர தமராகவும் உள்துறை அமைச்சராக வும் இருந்த சமயத்திலும் கூட இவ் வாறு தாக்குதல்கள் நடைபெற்றுள் ளன. அப்போதும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வித்தியாசங்களை மறந்து தேசிய ஜனநாயக கூட்டணி அர சாங்கத்தின் பக்கத்தில் நின்று இப் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்த்து நின்றன. நாடாளுமன்றம் மீதான தாக்குதல், செங்கோட்டை மீதான தாக்குதல்கள், இரு முறை ரகுநாத் கோவில் தாக்கப்பட்டது, அக மதாபாத்தில் அக்சர்தம் கோவில் தாக் குதல் - இவை அனைத்துமே வாஜ் பாய் தலைமையில் தேசிய ஜனநாய கக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியி லிருந்தபோதுதான் நடந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, ‘‘பயங்கரவா திகளிடம் மிகவும் மென்மையாக நடந்துகொண்டதால்’’ நிச்சயமாக இத்தாக்குதல்கள் எல்லாம் நடை பெற்றுவிடவில்லை. பயங்கரவாதக் குழுக்கள் பல செயல்படக்கூடிய அளவிற்கு இந்தி யாவில் நிலைமைகள் இருக்கின்றன என்பதே யதார்த்தமான உண்மையா கும். 2004 மார்ச்சுக்கும் 2007க்கும் இடையில், இராக் மற்றும் ஆப்கா னிஸ்தான் போன்று யுத்தம் நேரடி யாக நடக்கும் மண்டலங்களைத் தவிர்த்துப் பார்க்கும்போதுகூட, இந்தியா அன்னியில் உலகம் முழு வதும் பயங்கரவாதத் தாக்குதல்களின் விளைவாக 3280 பேர் பலியாகி யிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இந்தக் காலகட்டத்தில் 3674 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே மதவெறித் தீ கொழுந்துவிட்டெறி வதற்கான காரணங்கள்தான் ஆரா யப்பட வேண்டும். நம் நாடு மற்றும் நாட்டுமக்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கருதும் நம் நாட்டின் எதிரிகள்தான் இத்தகைய இழிவான குற்றச்செயல் களில் ஈடுபடுகிறார்கள். இத்தகு கய வர்களின் எண்ணத்திற்கு உரமிடக் கூடிய வகையில் நாட்டிற்குள் உள்ள மதவெறி சக்திகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரத்தவாடை யை வைத்துத்தான் கழுகு கூட தன் இரையை எளிதாகப் பார்த்து, பாய்ந்து பறந்து வந்து கொத்திச் செல் கிறது என்பதை நினைவுகூருங்கள். இவ்வாறு நாட்டிற்குள் ரத்தம் வாடை வீசுவது தடுக்கப்பட வேண்டியது அவசியம். உள்நாட்டுப் பாதுகாப்பை உறு திப்படுத்திட, போர்க்கால அடிப் படையில் கூடுதலான நடவடிக்கை களை ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறத் தேவையில்லை. சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய மாநில அரசு களும் (இப்போது தாக்குதல்களுக்கு உள்ளான ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக அரசாங்கம் ஆட்சியிலிருக் கிறது) தங்கள் பொறுப்புகளை நிறை வேற்றுவதற்கான முயற்சிகளை இரட் டிப்பாக்கிட வேண்டும். சம்பவம் நடைபெற்றது தொடர்பான அனைத்து குறைபாடுகளும் புலனாய்வுக்கு உட் படுத்தப்பட்டு, சரி செய்திடப்பட வேண்டும். இவ்வாறு கூறும் அதே வேளை யில், நம் நாட்டிற்குள் நம்மைப் பிரித் தாள நினைத்திடும், பிரிவினை விதை களை விதைத்திடும் அனைத்து வகையான கிருமிகளையும் பூண் டோடு அழித்து ஒழித்திட வேண்டிய தும் அவசியமாகும். இத்தகு பின் னணியில்தான் ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் தீய கருத்துக்கள் தீய பயக்கும் என்பதால் அவை குறித்து அஞ்ச வேண்டிய நிலைமைகள் ஏற்படுகின் றன. பயங்கரவாதிகளின் இத்தகைய தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் மதவெறித் தீயைக் கொழுந்து விட்டெறிய முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்குக் கேடு பயப் பதுமாகும். பாஜக, நாட்டில் தன்னு டைய தளம் வேகமாகக் கரைந்து கொண்டிருப்பதால் அதனை மீண் டும் அடைவதற்காக இவ்வாறு மத வெறித் தீயை மூட்ட முயற்சிக்கிறது. இதன் மூலம் கர்நாடகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலிலும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை யும் கணக்கில் கொண்டு, பாஜக இவ்வாறு முயற்சிக்கிறது.பயங்கரவாதத்தை முற்றிலுமாக முறியடிப்பதற்கு நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். அதேசமயத்தில் நாட்டில் மதவெறித் தீயை மூட்டுவதற்கு பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனு மதிக்கக் கூடாது. இது, நாட்டின் ஒற் றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும், சமூக நல்லிணக்கத்தையுமே அழித்து விடும். இப்போது நடைபெற்றுள்ள காட் டுமிராண்டித்தனமான தாக்குதல்க ளுக்கு இதுவரை எந்த அமைப்பும் ‘‘உரிமை’’ கொண்டாடவில்லை என்றபோதிலும், சில இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள்தான் இதனைச் செய்திருக்க வேண்டும் என்கிற சந்தேகம் இருக்கிறது. அத் தகைய அமைப்புகள் இனம் காணப் பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, முறி யடிக்கப்பட்டு, நாட்டின் சமூக மற்றும் அரசியல் வாழ்விலிருந்தே தூக்கி எறியப்பட வேண்டும். சமீபத்தில், டியோபாண்ட்டால் பயங்கரவாதத் திற்கு எதிராக வெளியிடப்பட்ட ‘ஃபட்வா’ இத்தகு நடவடிக்கைகளை ‘‘இஸ்லாமுக்கு எதிரானது’’ என்று கூறியிருக்கிறது. இதனை உடனடி யாகச் செய்ய வேண்டிய அதே சமயத்தில், அனைத்து வகையான அடிப்படைவாதங்களும் ஒன்றை மற் றொன்று ஊட்டி வளர்க்கின்றன என்ப தை மனதில் கொள்ள வேண்டும். சிறுபான்மை அடிப்படைவாதமும் பெரும்பான்மை அடிப்படைவாத மும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்க் காமல், வலுப்பெறாமல் உயிருடன் நீடித்திருக்க முடியாது.சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடை பெற்ற தாக்குதல்கள் உட்பட அனைத் துத் தாக்குதல்களும் மதத் தளங்க ளைச் சுற்றியே நடைபெற்றுள்ளதை, நாட்டின் ஊடகங்கள் சுட்டிக்காட்டியி ருப்பதுபோல, ‘‘மக்கள் பெரும் திர ளாகக் கூடும் இடங்களில் தாக்கு தல்கள் புரிவது மட்டுமல்ல, மக்களி டையே மதவெறித் தீயை மூட்டி, பல் வேறு மதத்தினரிடையே ரத்த ஆறு ஓட வேண்டும்’’ என்ற நப்பாசை யுடன் இத்தகு தாக்குதல்களைப் புரிந்திருக்கின்றார்கள் என்பதும் உறுதிப்படுகிறது. 2006 மார்ச் 7 அன்று வாரணாசியில் சங்கட் மொச்சான் கோவிலில் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது - ஒரு செவ்வாய்க் கிழமை. 2006 ஏப்ரல் 14 அன்று டில்லி ஜூம்மா மசூதியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது - ஒரு வெள்ளிக் கிழமை. அதேபோன்று, 2006 செப்டம்பர் 8 அன்று மலே கானில் நூரணி மசூதியில் நடை பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் - ஒரு வெள்ளிக்கிழமை. 2007 மே 18 அன்று ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் நடைபெற்ற தாக்குதலும் ஒரு வெள்ளிக்கிழமையில்தான் நடைபெற்றுள்ளது. 2007 அக்டோபர் 11 அன்று ஆஜ்மீர் ஷெரீப் தர்கா தாக்கப்பட்டதும் ஒரு வெள்ளிக்கிழ மையாகும். ரம்ஜான் விரதத்தை முடித்துவிட்டு வெளிவரக்கூடிய நேரத்தில் வெள்ளிக்கிழமையன்று இத்தாக்குதல் நடைபெற்றது. இப் போது ஜெய்ப்பூரில் நடைபெற்றுள்ள தாக்குதல்கள் செவ்வாய்க்கிழமை அன்று இரு அனுமார் கோவில் களுக்கு அருகில் நடைபெற்றுள்ளன. கோவில்கள் என்றால் செவ்வாய்க் கிழமை, மசூதிகள் என்றால் வெள் ளிக்கிழமை. மதவெறித் தீயை மூட்டி விட மதவெறியர்கள் பின்பற்றும் உத்தியைக் கவனித்தீர்களா? இந்தப் பின்னணியில், ஒருசம யம், லஸ்கர் - இ - தொய்பா என்னும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் செயலாளர், 1999 தேர் தல்கள் நடைபெறும் சமயத்தில் கூறிய வாசகங்களை நினைத்துப் பார்ப்பது அவசியம். ‘‘எங்களுடன் சரியாகப் பொருந்தக் கூடியவர்கள், பாஜகவினர்தான். ஒரே ஆண்டில் அவர்கள் எங்களை அணுசக்தி மற்றும் ஏவுகணைகளை உபயோகிக் கக்கூடிய அளவிற்கு வல்லவர் களாக்கிவிட்டார்கள். பாஜக-வினரின் அறிக்கைகளால் லஸ்கர் - இ - தொய்பாவிற்கு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முன்பை விட இது அதிகம். எனவே, மீண்டும் பாஜகவினரே ஆட்சிக்கு வர வேண் டும் என்று நாங்கள் கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். அவர்கள் ஆட் சிக்கு வந்துவிட்டார்களென்றால் நாங்களும் வலுவடைந்து விடு வோம்.’’ (தி இந்துஸ்தான் டைம்ஸ், 1999 ஜூலை 19.) இத்தகைய முக்கியமான தருணத் தில், நடைபெற்றுள்ள சோகச் சம்பவங் களுக்கு ஆழ்ந்த துயரத்தையும், கவ லையையும் கோபத்தையும் தெரி விக்கும் அதே சமயத்தில், நாம் இத்த கைய மதவெறி சக்திகளிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட உறுதி ஏற்போம். ஒரு மதவெறி மற்றொரு மதவெறிக்குத் தீனிபோட்டு ஊட்டி வளர்ப்பதை மக் கள் மத்தியில் விளக்கி, அனைத்து மதவெறியர்களிடமிருந்தும் மக்களைக் காத்திடுவோம்.

தமிழில்: ச. வீரமணி

Wednesday, May 14, 2008

‘‘நாங்கள் வளமாக வாழ, நீ பட்டினிகிட’’

லக அளவில் உணவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதற்குப் பிரதான காரணம், இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள் அதிக அளவு உணவு உட்கொள்வதுதான் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டுத் தொடர்ந்து கூறிவரு வதை, ‘‘வீணான ஆரவாரப் பேச்சு’’ என்று கூறி ஒதுக்கித்தள்ளிவிட முடி யாது. முன்னதாக, அமெரிக்காவின் அயல்துறை அமைச்சர், கண்டலிசா ரைஸ், உணவு நெருக் கடிக்குக் காரணம் இந்தியர்களும் சீனர்களும் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவை அதிகரித்துக் கொண்டதுதான் என்று கூறி இந்தப் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தார். மேற்கத்திய நாடுகள் உண வுப் பொருள் களிலிருந்து உயிர்-எரி பொருள் (bio-fuel) அதிகமான அள வில் உற்பத்தி செய்வதும், ஏகாதிபத்திய உலகமயத்தின் முக்கிய அம்சமான ஊக வர்த்தகம் என்னும் முன்பேர வர்த்தக முறையும்தான் இந்நெருக்கடிக்கு பிர தானமான காரணங்கள் என்பதை மூடி மறைத்திடவே ஏகாதிபத்தியம் இத்தகு இழிவான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. ஏகாதிபத்தியவாதிகளின் கூற்று கள் எள்ளிநகையாடத்தக்கவையாக இருப் பதோடு மட்டுமல்லாமல், இவர்களின் இத்தகைய இழிவான பிரச்சாரத்திலி ருந்து வளர்முக நாடுகள் வறுமையிலி ருந்தும், போஷாக்கின்மையிலிருந்தும் மீள்வதற்கு எடுத்திடும் முயற்சிகளைக் கூட இவர்கள் எந்த அளவிற்குத் தங்கள் வளமான வாழ்விற்குப் பாதகமான நட வடிக்கைகளாக பார்க்கிறார்கள் என்பதும் நன்கு புலப்படுகிறது. உலகையே தங் கள் காலனியாதிக்கத்தின் மூலமாக கடந்த பல நூற்றாண்டுகளாக கொள்ளையடித்து வந்ததைப்போலவே, எதிர்காலத்திலும் ஏகாதிபத்திய உலக மயத்தின் மூலமாக, தொடர்ந்து கொள்ளையடிக்க வேண்டும் என்கிற சதித் திட்டம் இவர்களின் கூற் றுகளிலிருந்து நன்கு புலனாகிறது.ஆயினும், உலகின் உண்மை நிலை மை என்ன என்பதை முதலில் ஆராய் வோம். அமெரிக்காவின் வேளாண் துறையின் அறிக்கையின்படி, அமெரிக் காவில் ஒவ்வொருவரும் சாப்பிடும் தானியத்தின் அளவு என்பது 1046 கிலோகிராமாகும். ஆனால் இந்தியா வில் இது வெறும் 178 கிலோ கிராம் மட்டுமே.

இவ்வாறு இந்தியர்கள் உட்கொள்வதை விட அமெரிக்கர்கள் ஐந்து மடங்கு அதிக மாக ஒவ்வொரு வரும் உட்கொள்கிறார் கள். அதே போன்று அமெரிக்காவில் ஒவ் வொரு அமெரிக்கனும் உட்கொள்ளும் கோழிக் கறியின் அளவு 45.4 கிலோகிராம், இது ஐரோப்பிய ஒன்றியத்தில் 16.2 கிகி. ஆனால் இந்தியாவில் இது வெறும் 1.9 கிலோகிராம் மட்டுமே. எனவே, யார் அதிகம் சாப்பிடுகிறார்கள்?உலகம் முழுவதும் உணவுப் பொருட் களின் விலை கடுமையாக உயர்ந்தி ருக்கிறது. ஐக்கிய நாடுகள் ஸ்தாப னத்தின் உலக உணவுத் திட்டம் உலகில் தேவைப்படும் நாடுகளுக்கு உணவுப் பொருட்களை அளித்திடும் அமைப்பா கும். இது, இப்போது ஏற்பட்டிருக்கும் உணவு நெருக்கடியை ‘‘அமைதியான சுனாமி’’ என்று குறிப் பிட்டிருக்கிறது. ‘தி எகனாமிஸ்ட்’ ஏடா னது உலகம் முழுவதும் உணவு கோரி கலவரங்கள் வெடிக்கப்போகிறது என்று எச்சரித்திருக்கிறது.

இப்போது பணவீக் கத்தால் ஏற்பட்டிருக்கும் உணவுப் பொருட்களின் அதீத விலை காரணமாக உலகம் முழுவதும் பல நூறு கோடி மக் கள் கடுமையான வறுமை நிலைக்குத் தள் ளப்பட்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு விநியோகித்த அதே அளவிற்கு இந்த ஆண்டும் உணவுப் பொருட்களை விநி யோகித்திட, மேற்படி ஐ.நா. ஸ்தாபனத் தின் உலக உணவுத் திட்டத்திற்கு மேலும் கூடு தலாக 700 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. இந்தியர் களான நம்மைப் பொறுத்தவரை, இதன் பொருள் என்னவெனில், இங் குள்ள ‘‘ஒளிர்கின்ற” இந்தியனுக்கும் ‘‘அவதிப் படுகின்ற’’ இந்தியனுக்கும் இடையே யுள்ள இடைவெளி மேலும் ஆழமாகும் என்பதேயாகும்.

இதன் கடுமையை பல லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள். நாட் டிலுள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந் தைகளும், 78 சதவீதத்திற்கும் அதி கமான கர்ப்பிணிப்பெண்களும் போதிய உணவின்றி போஷாக்கின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில், இந்தியர் களில் 78 சதவீதத்திற்கும் அதிகமான வர்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய்க் கும் குறை வான வருவாயுடன் ஜீவித்து வருகிறார்கள். அரசாங்கத்தின் புள்ளி விவரப்படியே, 1997க்கும் 2005க்கும் இடையிலான ஆண்டுகளில் வறுமை யின் கோரப் பிடியில் சிக்கி 1 லட்சத்து 36 ஆயிரத்து 324 விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு இந்திய னும் உட்கொள்ளும் தானியத்தின் அளவு 1990-91ஆம் ஆண்டில் 468 கிராமாக இருந்தது, இப்போது 2005-06இல் 412 கிராமாகக் குறைந்துள்ளது. அதே போன்று புரதச் சத்து மிகுந்த பருப்பு வகைகள் உட்கொள்வதும் 42 கிராமி லிருந்து 33 கிராமாகக் குறைந்து விட் டது. (இது 1956-57இல் 72 கிராமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.)இந்தியர்கள் அதிக அளவில் உணவு உட்கொள்கிறார்கள் என்று அவர்கள் கூறும் கூற்றை வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும்கூட, இந்தியாவிலிருந்து அதிக அளவில் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்து, அது குறைந்திருந் தால்தான், உலக பொரு ளாதாரத்தில் அதன் தாக்கத்தை உணர முடியும். ஆனால் அப்படியெல்லாம் எது வும் இல்லை. உணவுப் பொருள்களை உலக அளவில் ஏற்றுமதி செய்வதில், இந் தியாவின் பங்களிப்பு என்பது வெறும் 1 சதவீதம் மட்டுமே. இதிலும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி என்பது இந்த 1 சதவீதத்தில் வெறும் 11.7 சதவீதமே. எனவே, இந்தியர்களின் உணவு உட் கொள்ளுதலில் மாற்றம் ஏதும் ஏற்பட்டிருந் திருப்பினும், அது, உலக உணவு நெருக் கடிக்கு எவ்விதத்திலும் பங்க ளிப்பினைச் செய்திடாது. ‘‘உலகில் முதலாளித்துவ நாடுகள் உயிர்-எரிபொருளை மிகப் பெரிய அளவில் தயாரிக்க நடவடிக்கை கள் மேற்கொண்டிருப்பதை அடுத்து, உலக அளவில் மாபெரும் உணவு நெருக் கடி ஏற்படும் அபாயம் தவிர்க்க முடியாத தாக மாறிக் கொண்டிருக்கிறது’’ என்று ஒருசில ஆண்டுகளுக்கு முன், பிடல் காஸ்ட்ரோ எச்சரித்திருந்தார். இவ்வாறு பிடல் காஸ்ட்ரோ எச்சரித்த சமயத்தி லேயே, ஜார்ஜ் புஷ் தன்னை ‘‘ஓர் எத்த னால் ஆசாமி’’ என்று ஞானஸ்நானம் செய்து கொண்டு, இவ்வாறு உயிர்-எரிபொருள் உற்பத் தியை ஆதரித்து அறிக்கை வெளியிட் டார். இதற்காக மற்ற நாடுகள் விரும் பாவிட்டாலும் கூட, அமெரிக்க விவசா யிகளுக்கு ஏராளமான தொகை அள்ளித் தர தயாராயிருப்பதாகவும் கூறினார்.

உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சோளம், முழுமையாக உயிர்-எரிப் பொருள் உற்பத்திக்குத் திருப்பிவிடப் பட் டுள்ளது. 2004ஆம் ஆண்டிற்கும் 2005 ஆம் ஆண்டிற்கும் இடையில் இதன் உற் பத்தி 51 மில்லியன் டன்கள் அதிகரித் திருப்பதாகவும், அமெரிக்கா இவற்றை எத்தனால் உற்பத்திக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்திருக்கிறது. 2010 வாக்கில் தங்கள் நாட்டின் எரிபொருள் உற்பத்தியில் 6 சதவீதம் உயிர்-எரி பொருளாக இருந் திடும் என்று ஐரோ ப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது. ஒரு நபர் ஓராண்டு சோளத்தை முக்கிய உண வாக உட்கொண்டால் அவர் எடுத் துக்கொள்ளும் சோளத்தின் அளவு, ஒரு டாங்க் உயிர்-எரிபொருள் உற்பத்தி செய்யத் தேவைப்படும். இப்போது உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப் பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, உலக அளவில் உணவுதானியங்களின் பரிமாற்றம் ஊக வர்த்தகம் என்கிற முன்பேர வர்த்தகத்தின் கீழ் நடை பெறுவதாகும். அமெரிக்காவில் ஏற்பட் டுள்ள பொருளாதார மந்தத்தின் கார ணமாக, பல நிதி ஜாம்பவான்கள் திவா லாகும் நிலைக்குத் தள்ளப்பட் டிருப்பதும், அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக, உலக ஊக வர்த்தக சூதாடிகள், இவ்வாறு உணவுப் பொருட் களின் பரிமாற்றத் தையும் ஊகவர்த்தகம்/முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்தி வருகிறார்கள். இந்தியாவில் உணவுப் பொருட் களின் பரிமாற்றம் நாளொன்றுக்கு 3 பில்லியன் டாலர் அளவிற்கு நடை பெற் றுக் கொண்டிருக்கிறது. 2007-08ஆம் நிதியாண்டில் நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 40 லட்சத்து 65 ஆயிரத்து 989 கோடி ரூபாய்களாகும். இவ்வாறு இந்த அளவிற்கு ஊக வர்த்தகம் நடை பெறுவதன் மூலம் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. இவர்கள் இவ்வாறு கொள்ளை லாபம் அடிப்பதைக் கட்டுப் படுத்திட, அரசிடம் எவ்விதமான கட்டுப் பாட்டு நிர்வாக எந்திர அமைப்பும் கிடை யாது. உணவுப்பொருள்களின் விலை யைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தேவை யான இருப்பும் அரசு வசம் கிடையாது. மாறாக, உணவுப் பொருட்களின் விலை யை உயர்த்திடத் தேவைப்படும் அள விற்கு, தனியார் வர்த்தக நிறுவனங்கள் போதுமான அளவிற்கு தங்கள் வசம் இருப்பு வைத்திருக்கின்றன. இவ்வாறு வர்த்தகர்கள் அடிக்கும் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், அர சின் வசம் உணவுப் பொருள்கள் போதிய இருப்பு இருந்திட வேண்டும், மக்களுக் கான உணவுப்பொருள் விநியோக முறைக்கும் வலுவான அமைப்பு முறை இருந்தாக வேண்டும். ஆனால் அரசு இத னைச் செய்திடவில்லை. அரசின் இத்த கைய தாராளமயக் கொள்கைகளே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாகும். எனவேதான், 25 அத்தியாவசியப் பொருட்களை ஊக வர்த்தகம்/முன் பேர வர்த்தகத்திலிருந்து தடை செய்து, மக்க ளுக்கு நிவாரணத்தை அளித்திட வேண் டும் என்று வலியுறுத்துகிறோம். ஏகாதிபத்திய உலகமய நிதி மூல தனத்தைப் பாதுகாப்பதற்காகவே, ஜார்ஜ் புஷ் அண்ட் கம்பெனி உலக மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக, இந்தியர் களும் சீனர்களும் அதிகமாக உட்கொள் ளுவதால்தான் உணவு நெருக்கடி ஏற்பட் டிருப்பதாக நம்மீது குறைசொல்லிக் கொண்டிருக் கின்றன. ஆனால் உணவு நெருக்க டிக்கு உண்மையான காரணம் ஏகா திபத்திய உலகமயம் என்கிற கோர முகம்தான் என்பதை அவ்வளவு எளி தாக மக்களிடமிருந்து மறைத்துவிட முடியாது.

தமிழில்: ச. வீரமணி

Saturday, May 3, 2008

மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல்கள் பிற்போக்குக் கும்பல் மீண்டும் தோல்வியுறுவது உறுதி
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடங் கியதை அடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணிக்கு எதிராக நந்திகிராமத்தில் ஒன்று சேர்ந்த அனைத்துப் பிற்போக்கு சக்திகளின் மகா கூட்டணி, இப்போது மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும், வெளியில் என்ன வேடமணிந்தாலும், ஸ்தல மட்டத்தில், காங்கிரஸ் -திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக வினருக்கிடையே ‘மஹாஜோட்’ என்னும் மகா கூட்டணிக்கான முயற்சிகள் எப்போதும் நடைபெறுவது வழக்கம். இடது முன்னணிக்கு எதிராக இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிற்பது வாடிக்கை. ஆயினும், இவை தலைகீழாக நின்றாலும் கூட, இடது முன்னணியை வீழ்த்துவதில் பரிதாபகரமான முறையில் படுதோல்வியையே எப்போதும் சந்தித்து வந்திருக்கின்றன. இந்தத் தடவையும், இந்த மகா கூட்டணி மிகப் பெரிய அளவில் கருக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்து மதவெறி அமைப்பான ஆர்எஸ் எஸ் /பாஜக மற்றும் சில முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் இவற்றுடன் மாவோயிஸ்ட்டுகளும் மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் சில அரசு சாரா நிறுவனங்களும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணிக்கு எதிராகக் கைகோர்த்திருக்கின்றன. இந்த ‘மகாகூட்டணி’க்கு, நந்திகிராம் நிகழ்வுகளின் போது பிற்போக்கு சக்திகளுக்கு உறு துணையாக இருந்த அதே ‘கார்ப்பரேட் ஊடகங்கள்’ கணிசமான அளவிற்கு இப்போதும் உதவி செய்து வருகின்றன. இவர்களுடைய விரக்தி எந்த அளவிற்குச் சென்றிருக்கிறது என்றால், இத்தகைய கூட்டணி ஏன் தேவை என்பது குறித்து மக்களிடம் நயமாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கூட இவர்கள் கவலைப்படவில்லை, மாறாக, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு எதிராக கொலைபாதகத் தாக்குதல்களில் இறங்கக்கூடிய அளவிற் குச் சென்றிருக்கின்றன. இத்த கைய தாக்குதல்களை தங்களை ‘மாவோயிஸ்டுகள்’ என்று சொல்லிக் கொள்பவர்கள் நாம் எதிர் பார்த்தபடியே முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டில் மட்டும், ‘மாவோயிஸ்ட்டு’களால் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 13 பேர் குறிவைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2006 மார்ச்சி லிருந்து 2007 முடிய மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 19 முன்னணி ஊழியர்கள் இக்கொலைகாரக் கும்பலால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

‘மாவோயிஸ்ட்டுகள்’ இவ்வாறு பிற்போக்கு சக்திகளுக்காகக் கொலை செய்திடும் கூலிப்படையாக செயல்பட்டு வருகிறார்கள். அவசரநிலைப் பிரகடனம் தோற்கடிக்கப்பட்டபின், இடது முன்னணி மாபெரும் அளவில் வெற்றிவாகை சூடியதை அடுத்து, மேற்கு வங்கத்தில் மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை கொண்டுவரப்பட்டது. இதனைப் பின்பற்றியே பின்னர் பிரதமராக வந்த ராஜீவ் காந்தி, இம்முறையை நாடு முழு துக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் விரிவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் வழக்கமாக இரு சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடைப் பட்ட காலத்தில் நடத்துவது வழக் கம். இவ்வாறு நடத்துவதன் மூலமாக, மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கருத்தை அறிந்து கொள்வதற்கும், கொள் கைகளில் மாற்றம் ஏதும் மக்கள் விரும்பினால் அதனை மக்களுக்கு ஆதரவாக மேற்கொள்வதற்கும் இது பயன்படும் என்ற முறையில் இவ்வாறு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முப்பதாண்டு காலமாகவே பிற்போக்கு சக்திகள் ‘மகா கூட்டணி’ அமைத்து போட்டியிட்டு வந்த போதிலும் அவற்றால் கடந்த காலங்களில் வெற்றிபெற முடியாது தோல்வியைத் தழுவியது போலவே இம்முறையும் மண்ணைக் கவ்வும் என்பது திண்ணம்.

கடந்த முப்பதாண்டுகளில் மேற்கு வங்கத்தில் நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் அதிகாரங்களைப் பரவலாக்கியதனால் ஏற்பட்டுள்ள ஆதாயங்களைப் பாதுகாத்திட நடைபெற்ற போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பலியாகி இருக்கிறார்கள். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் இந்தப் பிற்போக்கு சக்தி களால் 159 மார்க்சிஸ்ட் ஊழியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1967இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நக்சலைட்டுகள் (இன்றைய ‘மாவோயிஸ்ட்டுகள்’), ‘‘மக்கள் யுத்தம்’’ என்ற கோஷத்தை முன்வைத்துப் பிரிந்து சென்ற போது, மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகவும் அரக்கத்தனமான முறையில் அரை பாசிச அடக்கு முறை ஏவிவிடப்பட்டதையும், அதில் ஆயிரக்கணக்கான தோழர்கள் உயிர்ப்பலியானதையும், பல்லாயி ரக்கணக்கானோர் தங்கள் இல்லங்களிலிருந்து புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதையும் இந்த கேடுகெட்ட பிற்போக்குக் கூட்டணி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆயினும், 1977இல் ஜனநாயகம் மீண்டும் மலர்ந்தபின், அத்தகைய அரை பாசிச அடக்கு முறையைக் கண்டு அஞ்சாத மேற்கு வங்க மக்கள், தங்கள் முழு நம்பிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் இடது முன்னணி மீதும் மீண்டும் அளித்தார்கள். கடந்த முப்பதாண்டு காலமாக கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிற்போக்குக் கூட்டணியின் சூழ்ச்சிகளைத் தவிடுபொடியாக்கி, இடது முன்னணி அரசாங்கத்தால் ஏற்பட்ட ஆதாயங்களை மக்கள் கண்ணின் மணிபோல் காத்து வருகிறார்கள். நந்திகிராமத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து அந்நிய நாடுகளின் உதவி பெறும் அரசு சாரா அமைப்புகள் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுவதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு எதிராக, பிற்போக்கு சக்திகள் கொலைபாதகத்தாக்குதல்களைத் தொடுத்த போதெல்லாம் இவை வாய்மூடி மௌனம் சாதித்ததை நாமறிவோம். இவை பிற்போக்கு சக்திகளின் மகா கூட்டணியின் அட்டூழியங்களை நியாயப்படுத்தத்தான் முயற்சிக்கும் என்பதில் நமக்கு எவ்வித ஆச்சரியமும் கிடையாது.

இவ்வாறு கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் முற்போக்கு சக்திகள் முன்னேறுவதை சீர் குலைத்திட இத்தகைய பிற் போக்கு சக்திகள் முயற்சிப்பது என்பது புதிய விஷயம் ஒன்றும் அல்ல. மாமேதைகள் மார்க்சும் ஏங்கெல்சும் நமக்கு அளித்திட்ட ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யின் எழுச்சி கொள்ளச் செய்யும் தொடக்கப் பத்தியிலேயே, வளர்ந்தோங்கி வரும் கம்யூனிஸ்ட் சக்திக்கு எதிராக ஐரோப்பாவில் அணிதிரண்ட அனைத்துப் பிற்போக்கு சக்திகளின் புனிதக் கூட்டணி குறித்துக் கூறியிருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை நிலைமைகள் மாறவில்லை.

இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணியை மக் கள் மகத்தான முறையில் ஆதரிப்பதை அடுத்து, இங்கும் அதே போன்று அனைத்துப் பிற்போக்கு சக்திகளும் ஒன்று சேர்ந்திருக் கின்றன. இதற்கு முன் நடைபெற்ற அரசியல் போராட்டங்கள் அனைத்திலும் எவ்வாறு மேற்கு வங்க மக்கள் வீராவேசமாகப் போரிட்டு வெற்றிவாகை சூடினார்களோ அதேபோன்று, மிகவும் முக்கிய மான காலகட்டத்தில் நடைபெறு கின்ற இந்தப் பஞ்சாயத்துத் தேர் தல்களிலும் இடது முன்னணியை மகத்தான முறையில் வெற்றி பெறச் செய்வார்கள் என்பது உறுதி.

தமிழில்: ச. வீரமணி