சீத்தாராம் யெச்சூரி
[முதலாளித்துவ அமைப்பின்கீழ் இருந்துகொண்டு கொண்டுவரப்படுகிற
எந்தவொரு சீர்திருத்தமும் மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசம்
என்கிற அரசியல் மாற்று ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும். சுரண்டலிலிருந்து மனிதகுலத்தை
விடுவித்திட வேண்டுமானால், மனிதகுலத்தின்மீது முதலாளித்துவத்தால் ஏவப்பட்டுள்ள கொடுங்கோன்மைக்கு
எதிராக சோசலிசத்திற்கான அரசியல் மாற்று தன் தாக்குதலை உக்கிரப்படுத்திட வேண்டும்.]
தோழர்
லெனின் முன்னதாகவே இறந்ததை அடுத்து, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சோசலிஸ்ட்
தொழில் மற்றும் விவசாயிகளின் விவசாயம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு குறித்து ஒரு விவாதம்
எழுந்தது. விவசாய உற்பத்தி அபரிமிதமாக இருந்ததன் காரணமாக, அதன்மூலம் ஏற்பட்ட உபரியை
தொழிற்துறை செயல்பாடுகளுக்கு எந்த அளவிற்குப் போடுவது என்பது தொடர்பாகவும், இதனை எப்படி
தீர்மானிப்பது என்பது தொடர்பாகவும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன. தொழில்துறை நடவடிக்கைகளை
அதிகப்படுத்துவதற்கு விவசாய உற்பத்தியின் உபரியை வெகுவாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
இதனை எப்படிச் செய்வது? இதில் பிரச்சனைகள் எழுந்தன. விவசாயத்துறையில் புதிதாக உருவான
பணக்கார விவசாயிகள் (குலாக்குகள்) வர்க்கம் அக்டோபர் புரட்சிக்கு ஒரு வித்தியாசமான
விதத்தில் அச்சுறுத்தலாக அமைந்தது. எனினும், உலகம் முழுதும் சோவியத் யூனியனுக்கு எதிராக,
ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் தொடர்ந்து இருந்த சூழ்நிலையில், இப்பிரச்சனையை தோழர்
ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக சமாளித்தார்.
அவ்வாறு
சமாளிக்காமல் மட்டும் இருந்திருந்தால் நாஜிக்கள் சோவியத் யூனியன் மீது மேற்கொண்ட தாக்குதலை
அது வெற்றிகரமானமுறையில் முறியடித்திருக்க முடியாது. அப்போது தோழர் ஸ்டாலின் மக்களுக்கு
விடுத்த அறைகூவல்களை நினைவுகூருங்கள். நாஜிக்களுக்கு எதிராகப் போர்முனையில் போராடுவதால்
மட்டும் வென்றுவிடமுடியாது, மாறாக அதனை தொழிற்சாலைகளிலும், வயல்களிலும் நாம் வெற்றிபெறுவதன்
மூலமே சாத்தியமாக்கிட முடியும். சோசலிசத்தைக் காப்பதற்காகவும், உலகை பாசிசத்திலிருந்து
காப்பதற்காகவும், போர்முனையில் சோவியத் செஞ்சேனை வீரஞ்செறிந்த முறையில் போராடுவதற்கு,
அவர்களின் தேவைகள் எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்யப்பட்டதே அடிப்படைக் காரணமாகும்.
ஆனால் ‘சந்தைப் பொருளாதாரம் என்கிற முதலாளிகளின் கடவுள்’, செல்வாக்கு செலுத்தியதன்
காரணமாகவும், இத்தகைய சோசலிஸ்ட் பொருளாதார அடித்தளங்களை, கோர்பசேவ் படிப்படியாகக் கைவிட்டதன்
காரணமாக, சோசலிசமே கைவிடப்படக்கூடிய நிலைக்கு கொண்டுசென்றது.
தத்துவார்த்த
உணர்வினை உதாசீனம் செய்தல் (Neglect of
Ideological Consciousness):
அடுத்து மாபெரும் குறைபாடு காணப்பட்ட பகுதி, மக்களின் கூட்டு தத்துவார்த்த உணர்வினை
(collective ideological consciousness of
the people) வலுப்படுத்தத் தவறியமையாகும்.
மக்களிடம் இத்தகைய கூட்டு தத்துவார்த்த உணர்வு உயர்ந்தோங்கி இருப்பதன்மூலமாகத்தான்
சோசலிசம் நிலைத்து நிற்கமுடியும் மற்றும் அதனை மேலும் வளர்த்தெடுக்க முடியும்.
இதனை
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த உறுதிப்பாடு இல்லாமல் மேற்கொண்டிட முடியாது.
சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசின் திருத்தல்வாத திரிபுக்கு
(revisionist
deviation)ப் பின்னர் இது மிகப்பெரிய
ஆபத்தாக (casualty-ஆக) மாறியது. இக்குறைபாடுகளின் காரணமாக, சோவியத்
யூனியனிலும் இதர சோசலிச நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்புரட்சி சக்திகள் முன்னுக்கு வரக்கூடிய
நிலை ஏற்பட்டு, சோசலிசம் கைவிடப்பட்டது. இவ்வாறு இந்நாடுகளில் சோசலிசம் கைவிடப்பட்டதற்கு,
மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படைக் கொள்கைகள் காரணமல்ல. மாறாக, மார்க்சியம்-லெனினியத்தின்
அறிவியல் மற்றும் புரட்சிகர சாராம்சத்திலிருந்து நழுவிச் சென்றதே காரணமாகும். உலக முதலாளித்துவம்
மற்றும் சோசலிசம் குறித்து சரியற்ற மதிப்பீடுகளும் காரணமாகும். மார்க்சியத்தின் ஆக்கப்பூர்வ
அறிவியலை வறட்டுத் தனமான முறையில் வியாக்கியானம் செய்ததும் காரணமாகும். மேலும் சோசலிசக்
கட்டுமானத்தின்போது மேலே கூறியவாறு மேற்கொண்ட குறைபாடுகளும் காரணமாகும்.நடப்பு முதலாளித்துவ
நெருக்கடி - சோசலிச மாற்றுமனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட இன்றைக்கும் ஒரே
வழி, சோசலிசம்தான். உலக முதலாளித்துவ நெருக்கடியின் இன்றைய நிலைமைகளிலிருந்து மீள்வதற்கும்
ஒரே மாற்று சோசலிசம்தான். 2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருந்தே,
உலக முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதனை மேலும்
ஆழமான முறையில் புதிய நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு
மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றுவதன் மூலம் இதனை நன்கு உணர முடியும். இவற்றின்
விளைவாக மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்திருக்கின்றன.
முதலாளித்துவ
அமைப்பின்கீழ் இருந்துகொண்டு கொண்டுவரப்படுகிற எந்தவொரு சீர்திருத்தமும் மனிதகுலத்தை
சுரண்டலிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசம் என்கிற அரசியல் மாற்று ஒன்றுதான்
இதற்குத் தீர்வாகும். சுரண்டலிலிருந்து மனிதகுலத்தை விடுவித்திட வேண்டுமானால், மனிதகுலத்தின்மீது
முதலாளித்துவத்தால் ஏவப்பட்டுள்ள கொடுங்கோன்மையாட்சிக்கு எதிராக சோசலிசத்திற்கான அரசியல்
மாற்று தன் தாக்குதலை உக்கிரப்படுத்திட வேண்டும். முதலாளித்துவத்தின் மீதான நெருக்கடி
எவ்வளவுதான் உக்கிரமானதாக இருந்தபோதிலும், நாம் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல,
எந்தக் காலத்திலும் அது தானாக வீழ்ந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடக்கூடிய
விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன்
மூலம் முதலாளித்துவம் எப்படியாவது தன்னைத் தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கும். எனவே,
சோசலிஸ்ட் அரசியல் மாற்று அதனை எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் வெகுவாக வளர்த்தெடுக்கப்பட
வேண்டும். தற்போதைய முதலாளித்துவத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் மக்கள்
மத்தியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிற போதிலும், இன்றையநிலையில் இவை அனைத்தும்
தற்காப்புநிலையில்தான் இருந்து வருகின்றன. தற்காப்புநிலையில்தான் என்று ஏன் கூறுகிறேன்
என்றால், மக்கள் தங்கள் போராட்டங்களின் மூலமாகத் தாங்கள் இதுநாள்வரை பெற்றிருந்த ஜனநாயக
உரிமைகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் பறிக்கப்படும்போது அவற்றைத் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய
விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன. இத்தகு போராட்டங்கள் மூலதனத்தின்
ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்கு அதிகரித்திட வேண்டும்.
இதற்கு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்சனைகள்
மீதான தீர்மானத்தில் அலசி ஆராய்ந்திருப்பதைப்போல, லெனினிஸ்ட் அகநிலைக் காரணியை வலுப்படுத்திட
வேண்டும். அதாவது, மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச்
செல்லக்கூடிய அளவிற்கு புரட்சிக் கட்சியின் வல்லமையை வலுப்படுத்திட வேண்டும்.
…
No comments:
Post a Comment