Monday, June 29, 2020

29 June 2020

தமிழ்ச் சுருக்கெழுத்து - 2013 பிப்ரவரி - முதுநிலை




தமிழ்ச் சுருக்கெழுத்து
பிப்ரவரி 2013

இந்தக் கொள்கை விளக்கக் குறிப்பில் 7 அம்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். முதலாவது, பாதுகாக்கப்பட்ட கு/டிநீருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விரைவில் வழங்கப்பட வேண்டும். ஏனெ//ளில், காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தண்ணீர் மூலம் தான் பரவுகின்றன. ஆகவே, இத்தகைய நோய்களைப் பரவாமல் தடுக்கும் வகையில் எல்லா கிரா///மங்களுக்கும் விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
     அடுத்து, பெரிய நகரங்களில்கூட பாதுகாக்கப்ப(1)ட்ட குடிநீர் மக்களுக்குச் சரியான முறையில் வழங்கப்படாத காரணத்தால், பல சீர்கேடுகள் ஏற்பட்டிருக்கின்றன. மதுரை போன்ற பெரிய நகரத்/திலேயே, பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குழாய்கள் சாலை மட்டத்திற்குக் கீழே இருக்கின்றன. அதனால் மழைக் காலங்களில் அத்//தகைய பள்ளங்களில் கழிவு நீர் தேங்கி, குழாய்களின் வழியாக, பாதுகாக்கப்பட்ட தண்ணீரும் கெடுவதற்கு ஏதுவாகிறது என்பதைச் சுட்டிக்காட்ட வி///ரும்புகிறேன். அங்கேயுள்ள குழாய்களுக்கு அடைப்பான்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடைப்பான்களைப் போட்டாலும், யாராவது அவைகளைத் திருடி(2)க் கொண்டு போய் விடுகிறார்கள். ஆகையால் அவ்வாறு திருடிக் கொண்டு போகாதவாறு அவைகளை அமைத்தால், நன்றாக இருக்கும். அடைப்பான்கள் இல்லாத குழாய்கள் / வழியாக நோய்களைப் பரப்பும் கிருமிகளும் அசுத்தப் பொருள்களும் குடிநீரில் கலந்துவிடாமல் தடுப்பதற்கு ஏற்ற முறைகளை இனியாவது கையாள வேண்//டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
    அடுத்து, நமது நாட்டில் கொசுக்கள் பெருமளவில் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். கொசுவை ஒழிப்பதற்கு///ப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எல்லாம் இதுவரை பலன் அளித்ததாகத் தெரியவில்லை. கொசுத் தொல்லை காரணமாக, நாட்டில் யானைக்கால், மூ(3)ளைக் காய்ச்சல் போன்ற வியாதிகள் பெருமளவுக்குப் பெருகிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். அண்மையில் நம் மாநிலத்தில் சில கிராம/ங்களில் யானைக்கால் வியாதி பரவியிருக்கிறது. அது சாக்கடைகளிலும் பள்ளங்களி//லும் கழிவுநீர் தேங்கியுள்ளது. அதோடு அங்கேயுள்ள சிறு குட்டைகளில் கழிவுநீர் தேங்கியிருக்கிறது. இதன் காரணமாக, அசுத்தமான கொசுக்கள் பெரும///ளவில் உற்பத்தியாகி, அந்தக் கிராமங்களில் உள்ள மக்களில் பல பேர் யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, அங்கெல்லாம் (4)ண்ணீர் தேங்காத நிலையை உருவாக்குவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்து உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
     மருத்துவனைகளிலிரு/ந்து மருந்துகளும் உணவுப் பொருள்களும் அதிகமான அளவுக்குக் களவு போவதைத் தடுப்பதற்கு, கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேணடும். மா//ண்புமிகு அமைச்சர் அவர்கள் அடிக்கடி


மருத்துவனைகளுக்குச் சென்று இம்மாதிரியான தவறுகளைக் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுத்து /// வருகிறார்கள். எனினும் அந்தப் போக்கு இன்னும் தொடர்ந்து இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். (5)
     மதுரை, மணிவண்ணன் புத்தக விற்பனையாளர்கள் சிவகங்கை, ராஜா உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு எழுதுகின்ற கடிதம்.
அன்புடையீர்,
   நாங்/கள் மிக நீண்ட காலமாகப் புத்தக விற்பனையில் ஈடபட்டுள்ளோம் என்பது தங்களுக்கு நன்கு தெரியும். தற்போது புத்தகங்களின் பொருளடக்கம் மாற்//றப்பட்டுள்ளது. வெவ்வேறு வகுப்புகளுக்கு வெவ்வேறு விதமான பாடங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்பது தாங்கள் அறிந்ததே, அதற்கேற்ப நாங்கள் /// புது புத்தகங்களை அச்சிட்டுத் தயார் செய்துள்ளோம்.
    அதோடு கூட, மாணவர்களுக்குத் தேவைப்படும் நோட்டுப் புத்தகங்களையும் நாங்கள் தயாரித்துள்(6)ளோம். அவை கவர்ச்சிகரமான வண்ண அட்டைகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன. மாணவர்கள் இவற்றை விரும்பி வாங்குவார்கள் என்கிற பூரண நம்பிக்/கை எங்களுக்கு இருக்கிறது. இவை மாணவர்களுடைய படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. இவற்றை அவர்கள் வாங்கிப் பயன்படுத்//தி முன்னேற்றம் காண்பார்கள் என்பதில் ஐயமில்லை.
     மாணவர்கள் தேவைப்படும் இதர எழுது பொருள்களும் எங்களிடம் உள்ளன. விலைப் பட்டிய///லின் நகல் ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்களுடைய தேவைக்கான கோரிக்கை மனுவினை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
                                          தங்கள் நம்பிக்கையுள்ள, (7)