Sunday, September 29, 2013

மதவெறி, பிரிவினை சக்திகளைத் தனிமைப்படுத்திடுவோம்!


(புதுதில்லியில் செப்டம்பர் 13 அன்று தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் 16 ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணிக் சர்க்கார் பேசியது:)
‘‘நாட்டின் சில பகுதிகளில் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கக் கூடிய தருணத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டிக்கிறது. அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மத நல்லிணக்கத்தை மீட்டெடுத்திட இக் கூட்டம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்
.நம்முடைய நாடு, பல மொழிகள், பல கலாச்சாரங்கள்,  பல மதங்கள் எனப் பல்வேறு வேற்றுமைகளைக் கொண்ட ஒரு சமூகமாகும். நமக்கு நினைவு தெரிந்த காலம்தொட்டே, பல்வேறு சாதிகள், இனங்கள் மற்றும் மதங்களைச் சார்ந்த மக்கள், சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் ஒருங்கிணைந்தும் வாழ்ந்து வந்திருக் கிறார்கள். சகிப்புத்தன்மை, சமாதான சகவாழ்வு மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவை நம் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தின் கேந்திர மான அம்சங்களாகும்.
ஆயினும், அவ்வப்போது இதற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய விதத்தில் நிகழ்ச்சிப்போக்குகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அடிப் படைவாத மதவெறி சக்திகள் தங்கள் கோர முகங்களை நாட்டின் சில பகுதிகளில் தூக்கியுள்ளன. பல மதங்களைக் கொண்ட நம்மைப்போன்ற ஒரு நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம், எவ்விதமான மிரட்டலுக்கோ, அச்சுறுத்தலுக்கோ ஆளாகாமல் அவர்கள் தங்கள் மதநம்பிக்கைகளைப் பின்பற்றிட அவர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டியது அவசியம். தாங்கள் அவ்வாறு முழுப் பாதுகாப்புடன் இருக்கிறோம் என்று அவர்கள் முழுமனதுடன் உணரக்கூடிய விதத்தில் அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம். அனைத்து மதத்தினரும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சம உரிமைகளைப் பெற்றிருக்கும் அதே சமயத்தில், மதப் பெரும்பான்மையினர், நாட்டின் மதச்சார்பின்மை என்னும் மாண்பைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய விதத்தில், மதச் சிறுபான்மையினர் பாதுகாப்புடன் வாழ்வதற்கான பொறுப்பினை, பெரும் அளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மதம் முழுமையாக ஒரு வரின் தனி விவகாரம். இதற்கு அரசின் ஆக்கமும் ஊக்கமும் தேவையே இல்லை. ஆனால். மதங்களுடன் தங்கள் சொந்த அரசியல் நலன்களை இணைப்பதுதான் மதவெறி வன்முறைக்குப் பிரதானமான மற்றும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். மத்திய அரசும்,  மாநில அரசுகளும் நாட்டில் மத வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றால் அவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்கு இப்போதுள்ள சட்டங்களே போதுமானது. இச்சட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சியாளர்கள்தான் நடுநிலையோடு நின்று காலத்தே செயல்பட வேண்டும். மத வன்முறையில் ஈடுபட்ட கயவர்கள் தாங்கள் புரிந்த குற்றச் செயல்களிலிருந்து தப்பித்துச் செல்ல அனுமதித்திடக் கூடாது. மத வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறும் சமயங்களில் இணையதளம் போன்ற புதிய தகவல் தொடர்பு சாத னங்கள் பிரச்சனைகளை சிக்கலாக்கிவிடுகின்றன. ஏனெனில் பிரிவினை சக்திகள் இந்த சமயங்களில் சமூக வலைத் தளங்களின் மூலமாகத் பிற மதத்தினருக்கு எதிராகக் குரோதத்தையும், வெறுப்பையும் பரப்புகின்றனர்.
இவ்வாறு புதிய சாதனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது வலுவாகக் கண்காணிக்கப்பட வேண்டும். பிற மதத்தினருக்கு எதிராக வெறுப்பு மேலோங்கி இருத்தல்,  இன வன்முறைகள் மற்றும் இடதுசாரி அதிதீவிரவாதம் ஆகியவற்றை வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் மேலும் விரிவாகி ஆழமாகி அதிகமாகி இருப்பதும் உணவு, உறைவிடம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்கு மறுக்கப்படுவதும் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குவதற்கான முக்கியமான காரணிகளாகும். இவை மக்கள் மத்தியில் அந்நியமாதல் மற்றும் ஆற்றாமை உணர்வுகளை அதிகரிக்கின்றன.
இத்தகு சூழ்நிலையில்தான் பிராந்தியங்களுக்கு இடையிலான மற்றும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கு இடையிலான சமச்சீரின்மையை நீக்கிட வேண்டியது அவசியமாகும். சமூகத்தின் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள தலித்துகள், பழங்குடியினர்,  நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாத்திட, அவர்களை சமூகத்தில் உயர்த்திட உரிய ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமாகும்.
நான் இப்போது வடகிழக்கு மாநிலங்களின் பிற்பட்ட நிலைமைகள் குறித்து கூற விரும்புகிறேன். இப்போதும் கூட,  வட கிழக்கு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலேதான் இருக்கின்றன.
இத்தகைய பின்தங்கிய நிலைமைகளை நீக்க வேண்டுமானால்,  சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகள், தொலைதகவல் தொடர்புகள்,  பாசன வசதிகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வட கிழக்கு மாநிலங்களுக்கு வழங்குவதற்கு அதிக முன்னுரிமை கொடுத்து திட்டங்களைத் தீட்டி அமல்படுத்திட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே இப்பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிரிவினை சக்திகளைத் தனிமைப்படுத்த முடியும், மக்களிடம் உள்ள அந்நியமாதல் மற்றும் விரக்தி மனநிலையையும் போக்கிட முடியும்.
திரிபுரா கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய் யும் பல்வேறு அமைப்புகளைக் கொண்டிருந்த வரலாற்றைப் பெற்ற மாநிலமாகும். இவர்களைக் கட்டுப்படுத்துவதில் கணிசமான அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறோம். இதனை எவ்வாறு செய்ய முடிந்தது?  இவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுத்த அதே சமயத்தில், பழங்குடியினர் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றினோம்.
இதன் காரணமாக பழங்குடியின  இளைஞர்களைத் தீவிரவாத சக்திகளுக்கு இரையாவதிலிருந்து தடுக்க முடிந்தது. ஆயினும்,  இதில் நாங்கள் திருப்தி மனப் பான்மையுடன் இருந்துவிட முடியாது. ஏனெனில் இன்னமும் அவர்கள் வங்கதேசத்தில் முகாம்கள் அமைத்துக் கொண்டு,  ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல் பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்து இனத்தைச் சேர்ந்த மக்களும் அமைதியை விரும்புபவர்கள்தான். ஆயினும், சில சமயங்களில்,  சமூகத்தின் சில பிரிவினர் அடிப்படைவாத மற்றும் பிரிவினை சக்திகளின் இழிவான நோக் கங்களுக்கு எளிதாக இரையாகி விடுகிறார்கள்.
இத்தகைய அடிப்படைவாத சக்திகளிடம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சற்றும் இரக்கம் காட்டக்கூடாது. இந்த சக்திகளுக்கு எதிராக தத்து வார்த்தரீதியிலும் அரசியல் ரீதியிலும் மிகவும் ஆழமாகவும், திட்டமிட்ட முறையிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டு,  நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, மேம்படுத்திட வேண்டும். அப்போதுதான் இத்தகைய பிரிவினை சக்திகள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, தனிமைப் படுத்தப்படும்.
(தமிழில்: ச.வீரமணி)



Saturday, September 28, 2013

கருப்பு வைரம் கொள்ளை போகாமலிருக்க...: ச.வீரமணி




இந்தியா ஏழை நாடா என்று ஒருவர் மார்க்சிய வரலாற்றியல் அறிஞர் ரஜினி பாமிதத்திடம் கேட்டபோது, ஏழைகள் நிரம்பிய பணக்கார நாடு என்று அவர் பதி லளித்து,  இந்தியாவில் ஒரு பக்கம் ஏழைகளின் வறிய நிலையையும் மறுபக்கம் நாட்டில் உள்ள இயற் கை செல்வங்களையும் பட்டிய லிட்டிருப்பார். அத்தகைய இயற்கைச் செல் வங்களில் ஒன்று கருப்பு வைரம் எனப்படும் நிலக்கரி. நம் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டி ருந்த வெள்ளையர்கள் இதன் அரு மையை நன்கு அறிந்து இதனை வெட்டி எடுத்துச் செல்ல நடவடிக் கைகளை மேற்கொண்டார்கள்.

நிலக்கரிச் சுரங்கங்களில் தொழி லாளர்களை அடிமைகளைவிட மிகவும் மோசமாக வேலை வாங்கி நிலக்கரியை வெட்டி எடுத்தார் கள். நாடு சுதந்திரம் பெற்றபின், நிலக்கரிச் சுரங்கங்கள் அனைத் தும் தேசியமயமாக்கப்பட்டன. வெள்ளையர்கள் நாட்டை விட்டு போய்விட்ட போதிலும், நிலக் கரிச் சுரங்கங்களில் அடிமைகள் போல் வேலை செய்த தொழிலாளர்களின் நிலைமைகள் மாறிவிட் டனவா, என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன் னும் சரியாகச் சொல்லப் போனால், ஆட்சியாளர்களின் இன்றைய நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, தொழிலாளர்களின் நிலைமைகள் மேலும் மோசமாகிவிட்டன.நிலக்கரி இந்தியா லிமிடெட் என்பது மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமாகும். நாட்டில் உள்ள ஒன்பது நிலக்கரிச் சுரங்கங் கள் இதன் கீழ்தான் செயல்பட்டு வருகின்றன. பல லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை மத்திய அர சுக்கு ஈட்டித்தரும் நிலக்கரிச் சுரங்கங்களை ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடித்துச் செல்ல இந்திய மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இதற்கு தற்போதைய ஐ.மு.கூ. ஆட்சியாளர்களும் குறிப்பாக அதன் நிலக்கரித்துறை அமைச்சரும் இழி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர். இவற்றை எதிர்த்துத்தான் நாடு முழுதும் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதற்கு நாட்டில் இயங்கும் அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.இந்தியத் தொழிற்சங்க மையத்துடன் (சிஐடியு) இணைக்கப் பட்ட இந்திய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் சபா சார்பில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் இன்றைய எதார்த்த நிலை யை வெளிச்சத்திற்குக் கொண்டு வரக்கூடிய விதத்தில் ஒரு குறும் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருட்டு (The Dark) என்று பெய ரிடப்பட்டு, சுமார் 27 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம் சமீபத்தில் தில்லியில் ஒளிபரப்பப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் முழு நேர ஊழியராக உள்ள சௌவிக் பாசு மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் டாக்டர் தேவ் ஜானி ஹால்தர் ஆகியோர் இதனை இயக்கி இருந்தார்கள்.

பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிர காஷ்காரத் இக்குறும்படத்தை ஒளிபரப்பும் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:‘‘நாட்டில் நிலக்கரிச் சுரங்கங் கள் மிகவும் கேந்திரமான இடத்தை வகிக்கின்றன. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 55 விழுக்காடு நிலக்கரி மூலம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் நிலக்கரி அபரிமிதமாக இருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தை வகிக்கிறது.

பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்கிறார்கள். 1973ஆம் ஆண்டில் நிலக்கரிச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன. ஆயினும் ஆட்சியாளர்கள் நவீன தாரா ளமயப் பொருளாதாரச் சீர்திருத் தங்களைப் பயன்படுத்தத் தொடங் கியபின், மீண்டும் இதனை தனியாரிடம் தாரைவார்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி நிலைமைகள் மிக மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரிலும், வேலைகளை அவுட்சோர்சிங்செய்வதன் மூலமாகவும் தொழிலாளர்கள் மிகவும் கடுமையான முறையில் சுரண்டப்படுகிறார்கள். சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படவேண்டிய பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் ஊதியம் மிகவும் குறைவு. நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள், அவர்களது குடும்பங்களும் எப்படி மிகவும் மோசமான நிலைமைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை இக்குறும்படத்தின் மூலம் நிலக்கரிச் சுரங்கத் தொழி லாளர் சபா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறதுஎன்று பிரகாஷ்காரத் கூறினார்.

பின்னர் ‘‘இருட்டு’’ குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆங்கில சப்டைட்டில்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இக் குறும்படம் மேற்குவங்கம் அசன்சால்-ராணிகஞ்ச் பகுதியில் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்டு லிமிடெட் பகுதியில் படமாக்கப்பட்டிருக் கிறது. நாட்டில் நிலக்கரி வெட்டி எடுக்கும் வயல்களில் ராணிகஞ்ச் நிலக்கரிவயல் மிகவும் பெரிய அளவிலானதாகும். தொழிலாளர் கள் எவ்விதப் பாதுகாப்பு கவசமு மின்றி பணிக்குச் செல்வதைப் படம் காட்டுகிறது. சுரங்கங்களுக்குள் கடும் இருட்டு. தொழிலாளர் கள் இடுப்பில் கட்டியுள்ள கச்சையுடன் பொருத்தப்பட்டுள்ள டார்ச் வெளிச்சத்தின் மூலம்தான் உள்ளே ஓரளவுக்கு வெளிச்சம் இருக்கிறது. போதுமான காற்றுக்கும் இடமில்லை.

இதன் காரணமாக வேலைக்கு வருபவர்கள் மிக விரைவில் காச நோய்க்கு ஆளாகிவிடுகிறார்கள். தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி என்பது எல்லாம் பெரிய அளவிற்கு இல்லை என்பது இதில் நன்கு படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. படம், அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகள் சுரங்கங்களுக்கு வெளியே அலைந்து திரிந்துகொண்டிருத்தல் ஆகியவற்றை இயக்குநர்கள் மிகவும் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஈஸ் டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளரையும் இயக்குநர்கள் பேட்டி கண் டிருக்கிறார்கள். அவர் வேலைகளை அவுட்சோர்சிங்செய்த போதிலும், ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டபோதிலும் அவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு அளிக்கப்படுவதைப்போல அனைத்து வசதிகளும் செய்துதரப்படு வதாகக் கூறுகிறார். ஆனால் அடுத்த காட்சியில் அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களின் பேட்டி வருகிறது. அப்போது அவர்கள் பொது மேலாளரின் கூற்றை மறுத்து தங்களின் எதார்த்த நிலையைக் கூறுகிறார்கள். பொதுமேலாளர் ஒரு கேள் விக்குப் பதிலளிக்கையில் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் தான் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண் டியிருக்கிறது என்றும் அவுட்சோர்சிங் முறையில் வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறி தொழிலாளர்களை நிரந் தரப்படுத்தாமல் இருப்பதனை நியாயப்படுத்துகிறார்.


ஆனால் அடுத்த காட்சியில் நிறுவனத்தின் நிதி அறிக்கை ஒளிபரப்பப்பட்டு, நிறுவனத்தில் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் வந்திருப்பது காட்டப்படுகிறது. இவ்வாறு நிலக்கரிச்சுரங்கங்களில் தற்போதுள்ள ஊழல் நிலைமைகளை இக்குறும்படம் நன்கு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. நிலக்கரிச் சுரங்கங்கள் பொதுத் துறையில் இருக்கும்போதே தொழிலாளர்கள் இந்த அளவிற்கு மோசமான நிலைமையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவை தனியாரிடம் சென்றுவிட்டால்? நிலைமைகள் மேலும் மோசமாகும் என்பதில் எள்ளளவும் ஐய மில்லை.

Wednesday, September 25, 2013

மதவெறிக்கு இடம் தரக்கூடாது:தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் சிபிஎம் அறிக்கை




புதுதில்லியில்திங்களன்று (செப்.23)நடைபெற்றதேசியஒருமைப் பாட்டுக் கவுன்சில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்ற பொதுச்செயலாளர் பிர காஷ்காரத் விரிவான குறிப்பு ஒன்றை சமர்ப்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:

அதிகரிக்கும் மதவெறி நிகழ்வுகள்

மிகவும் கவலையளிக்கக்கூடிய விதத் தில் சமீபத்தில் மதவெறி சம்பவங்கள் அதிகரித்துள்ள பின்னணியில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தில் கிஷ்ட்வார், பீகார் மாநிலத்தில் நவாடா மற்றும் பெட்டியா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர்நகரில் மிகப்பெரிய அளவில் வன்முறையில் 48 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆகிய மதவெறி வன்முறைகள் நடைபெற் றுள்ளன.

கடந்த ஓராண்டில் ராஜஸ்தானி லும், உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சி யாக நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சி களை அடுத்து இவை நடந்திருக்கின்றன. சமீபகாலத்தில் வகுப்புவாத நிலை மை மிகவும் மோசமாக மாறிக்கொண்டி ருப்பதற்கு என்ன காரணம்? இவை தற்செயலாக வெடித்த சம்பவங்கள் என்று சொல்வதற்கில்லை, மாறாக ஒருசில மதவெறி-அரசியல் சக்திகளால் திட்ட மிட்டு உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப் பட்டவைகளேயாகும். மத வன்முறைச் சம்பவங்களுக்கான காரணங்கள் கடந்த காலங்களில் நடை பெற்றதைப்போலத்தான் இருந்திருக் கின்றன.

அதாவது, இரு மதத்தினரும் கலந்து வாழக்கூடிய பகுதிகளில் மத ஊர் வலங்கள் செல்லும்போது ஆத்திரமூட் டல் சம்பவங்களை உருவாக்குதல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைச் சேர்ந்த இளம்பெண்கள் மீது இதர சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் பாலியல் துன்புறுத்தல் களை மேற்கொள்ளுதல், மதவெறித் தீயை விசிறிவிடும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு அதன்மூலம் சமூகத்தின ரிடையே பரஸ்பரம் நம்பிக்கையின் மையை உருவாக்குதல், இவற்றின் மூலம் எந்தவொரு சிறு நிகழ்ச்சியையும் தீப் பொறியாகப் பயன்படுத்தி காட்டுத்தீ அள விற்கு மோதலை உருவாக்குதல் - என கடந்த காலங்களில் நடைபெற்றதைப் போலத்தான் இருந்திருக்கின்றன.

ஆயி னும், இதில் மிகவும் சங்கடத்தை ஏற் படுத்தும் அம்சம் என்னவெனில், முசாபர் நகரில் நடந்தைப்போல, இத்தகைய கல வரங்கள் கிராமப்புறங்களில் பரப்பப்படு வதுதான். இவ்வாறு நடைபெற்ற அனைத் துக் கலவரங்களின்போதும், வன்முறை யின் கூர்முனைத் தாக்குதல்களை சிறு பான்மை சமூகத்தினர்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் கொன்று குவிக்கப்படுகின்றனர், அவர் களது சொத்துக்கள்தான் சூறையாடப் படுகின்றன.மதவெறி சித்தாந்தத்தை ஆரத்தழு விக் கொண்டுள்ள அமைப்புகளும், அரசி யல் கட்சிகளும் மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி, பதற்றத்தை உருவாக்கி வன் முறை வெறியாட்டத்தைத் தூண்டு வதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

உள்துறை அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை 497 மதவெறி நிகழ்வுகள் நாட்டில் நடைபெற் றுள்ளன, இவற்றில் 107 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள், 1,697 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.வரவிருக்கும் 2014 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே இவ்வாறு மதவெறி நடவடிக்கைகள் விசிறிவிடப்படு வதாகத் தோன்றுகிறது. இவ்வாறு மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பயன் அடைபவர்கள் யார்? என்பதை எளிதாக அடையாளம் காண முடியும்.
அடையாளம் கண்டு தடுத்திடுக!

எனவே, மத வன்முறைச் சம்பவங் களைக் கட்டுப்படுத்திட வேண்டுமா னால், இதனை உருவாக்கும் அரசியல் - மதவெறி சக்திகள் மற்றும் அமைப்புகள் எவை என்பதை முதலில் அடையாளம் காண வேண்டியது அவசியமாகும். அதன்பின்னர் அவற்றின் நடவடிக்கை கள் மற்றும் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத் திடக்கூடிய வகையில் தடுப்பு நடவடிக் கைகளை எடுத்திட வேண்டும். மத வெறிப் பிரச்சாரத்தைத் தடை செய்தல், இதர சமூகத்தினர் மீது வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களைத் தடை செய்வது சம்பந்தமான சட்டங்களை பிரயோகிக்க வேண்டும்.இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நிர்வாகத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். நிர்வாகமும், காவல்துறையும் காலத்தே செயல்படுவ தும், வன்முறை நிகழ்கையில் பாரபட்ச மின்றித் தலையிட்டு வன்முறையைக் கட்டுப்படுத்துவதும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கயவர்களைக் கைது செய்வதும் கூட மிகவும் அவசியமாகும்.வகுப்புவாத வன்முறைத் தடைச் சட்டமுன்வடிவு (The Prevention of Communal Violence Bill) மேலும் காலதாமதம் எதுவு மின்றி சட்டமாக நிறைவேற்றப் பட வேண்டும். இச்சட்டம் மதவெறி வன் முறைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இது வேறுவகை யிலான மோதல்கள் மற்றும் வன்முறை வடிவங்கள் தொடர்பாக விரிவுபடுத்தப் படக் கூடாது. மேலும், இச்சட்டம் நிறை வேற்றப்படுகையில், மாநில அரசுகளின் சட்டம் - ஒழுங்கு மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்ற அடிப்படைப் பொறுப்புகளைப் பறிப்பதாக இருந்துவிடக் கூடாது, கூட்டாட்சித் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டதாக இருந்திடல் வேண்டும். சில மாநிலங்களில் தற்போதுள்ள கல்விமுறை மற்றும் பாடப் புத்தகங்கள் மதவெறி மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சிந்தனைகளை அடிப்படை யாகக் கொண்டு செயல்பட்டு வருகின் றன. இவற்றையும் பரிசீலனை செய்து, இவற்றில் உள்ள தீமைகளைக் களைய வேண்டியதும் அவசியமாகும்.சமூக ஊடகங்கள் மற்றும் வலைத் தளங்கள் பல மதவெறித் தீயை உமிழ்வ தற்குப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கி றோம். இவ்வாறான மதவெறிப் பிரச்சாரத் தைத் தடை செய்திட வேண்டும், இத்த கைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப் போருக்கு எதிராக உரிய நடவடிக்கை களை எடுத்திட வேண்டும். இது தொடர் பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவு, உரியமுறையில் திருத்தப்பட வேண்டும். இந்தச் சட்டப்பிரிவு மாற்றுக் கருத்துக் கூறுபவர்களை ஒடுக்குவதற்கு துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மதவெறி வன்முறைப் பிரச்சனை என்பது நிர்வாக ரீதியான வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச் சனை மட்டுமல்ல என்று பார்க்கப்பட வேண்டியதும் மிகவும் முக்கியமான தாகும். இந்தியாவில், மதவெறி அரசியல் வரலாற்றை ஆராயுங்கால், இது அடிப்ப டையில் ஓர் அரசியல் பிரச்சனையே என்பதை உணரமுடியும். எனவே இது அரசியல் ரீதியாகவும் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கு மதச்சார் பின்மைக் கொள்கையை உறுதியுடன் பின்பற்றுவது அவசியத்தேவை.

அப் போதுதான் மதவெறி சித்தாந்தத்தையும், அரசியலையும், அதன் ஊற்றுக்கண் மற்றும் மூலவேர் எதுவாக இருந்தபோதி லும், அதனை எதிர்த்து முறியடிப்பது என்பது சாத்தியமாகும். மதநல்லிணக்கம் சம்பந்தமாக மற் றொரு முக்கியமான அம்சமும் உண்டு. அது சிறுபான்மையினர் தொடர்பாக நேர்மையான மற்றும் நடுநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுவது சம்பந்தமானது. வகுப்புவாதம் பயங்கர வாத வன்முறை போன்ற தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கிறது.

பயங்கரவாதத்தை, அதன் ஊற்றுக்கண் எதுவாக இருந்தாலும், அதனை எதிர்த்து முறியடிப்பது அவசியம் என்று சொல்கிற அதே சமயத்தில், தனிப்பட்ட ஓர் இனத்தை மட்டும் இதனுடன் பொருத்திப் பார்க்காது, மிகவும் எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாதத்தை முறியடிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளை ஞர்கள் வேட்டையாடப்படுவதையே அனுபவம் நமக்குக் காட்டுகிறது. எண் ணற்ற வழக்குகளில் முஸ்லிம் இளைஞர் கள் கைது செய்யப்பட்டு, பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு சிறையில் வைக்கப் பட்டிருக்கிறார்கள். இவ்வழக்குகள் பலவற்றில் இவ்வாறு சிறைப்படுத்தப் பட்ட இளைஞர்கள் கடைசியில் விடு தலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் பல வழக்குகளில் இவ்வாறு பொய்யான மற்றும் அற்ப சாட்சியங்களை வைத்துக் கொண்டு இளைஞர்களைக் கைது செய்து வழக்கு தொடுத்ததை நீதித்துறை கண்டித்திருக்கிறது. காவல்துறையினர் மற்றும் பாது காப்புத்துறை ஏஜன்சிகள் மத்தியில் காணப்படும் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறை, அவர்களைத் தனிமைப் படுத்துவதாகவும் கோபத்தை ஏற்படுத்தி யும் இருக்கின்றன. பாகுபாடு காட்டப்படும் இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவு வதும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங் குவதும் அரசின் பொறுப்பாகும்.
இவ்வாறு நீதித்துறையையே நகைப்பிற்காளாக்கிய காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும் அவசிய மாகும்.

பெண்கள் பாதுகாப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் தாக்குதல்கள் அளவுக்கு மீறி அதிகரித்த வண்ணம் உள்ளன. வன்புணர்ச்சி, கூட்டுவன் புணர்ச்சி, இளம் பெண்கள் மீது அமிலம் வீசப்படுதல், குழந்தைகள்கூட பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல் அதிகரித் திருக்கின்றன. ஆயினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்ட னைகள் என்பது மிகவும் வருத்தம் தோய்ந்த நிலைமையில் இருப்பது தொடர்கிறது. இத்தகைய குற்றம்புரிவோர் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண் டும் என்கிற உணர்வு ஆட்சியாளர்கள் மத்தியில் போதிய அளவிற்கு இல்லா திருப்பதே கயவர்கள் ஊக்கத்துடன் செயல்படுவதற்குக் காரணமாகும். இத்தகைய கயவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட் டத்தை மதிக்காது அதனைத் துஷ்பிர யோகம் செய்கிற காவல்துறையினர் மற் றும் புலனாய்வு ஏஜன்சிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இத்தகைய வழக்குகளை விரைந்து தீர்ப்பு சொல்லக்கூடிய விதத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படுவதும் உத்தரவாதப்படுத் தப்பட வேண்டும். அவை அனைத்தும் அவசர அவசியமாகும்.

தில்லியில் நடைபெற்ற கொடூரமான கூட்டு வன்புணர்வு வழக்கினை அடுத்து, மக்கள் கடுங்கோபத்துடன் கிளர்ந்தெழுந் ததை அடுத்து, புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆயினும் இது இன்ன மும் முழுமையாக முறையாக அமல் படுத்தப்படவில்லை. எப்படிப்பார்த் தாலும் இது போதுமானதும் அல்ல. ஏனெனில், இது வர்மா குழு அளித்த அனைத்துப் பரிந்துரைகளையும் சட்டத் தின் ஷரத்துக்களில் இணைத்துக்கொள் ளவில்லை. உதாரணமாக, கவுரவம் என்ற பெயரில் இளம் தம்பதியர் கொல்லப்படும் கொடூரங்கள் தொடர்கின்றன. இத்தகைய கவுரவக் கொலைகள்புரிவோருக்கு எதி ராக தனிச் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டியதும் அவசியத் தேவை யாகும். சில மாநில அரசுகள் இவ்வாறு கொண்டுவர வேண்டியது அவசியம் இல்லை என்று கருதுவதால், இத்தகைய சட்டம் கொண்டுவரப்படாதது துரதிர்ஷ்ட வசமாகும். தங்களுடைய குறுகிய அரசி யல் ஆதாயத்திற்காக படுபிற்போக்குத் தனமான பழைய சமூகப் பழக்க வழக் கங்களுக்கு எதிராக செல்ல அவை விரும்பவில்லை. அனைத்து சமூகத்திலும் உள்ள வகுப்புவாத மற்றும் அடிப்படை சக்திகள் தங்கள் ஆணாதிக்க சிந்தனையைத் (patriarchal values )திணிப்பதற்காக பெண் கள் மீதான கட்டுப்பாடுகளை கட்டாயப் படுத்துகின்றன, அவர்களது உரிமைக ளைத் தராது மீறுகின்றன. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களையும், பெண்கள் துன்புறுத்தப்படுதலையும் மதவெறி அமைப்புகள் தங்கள் மதத்திற்குஎதிரானவை என்பதுபோல் மதவெறிச் சாயம் பூசி, இதர சமூகத்தினருக்கு எதி ராக மதவெறி உணர்வையும், வெறுப்பை யும் தூண்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. இத்தகைய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.அரசியலில் மிக உயர் இடத்தில் இருக் கக்கூடிய நபர்கள் மற்றும் தங்களைத் தாங்களே ‘‘கடவுளின் அவதாரங்கள்’’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய போலிச் சாமியார்கள் பெண்க ளைத் துன்புறுத்தத் தங்கள் அதிகாரத் தைப் பயன்படுத்திக் கொள்வது என்பது மிகவும் வருந்தத்தக்கது. இவ்வாறு எண்ணற்ற பேர்வழிகள் நாடு முழுதும் காணப்படு கிறார்கள். இவர்கள் புரிந்திடும் குற்றங்கள் மிகவும் மோசமானவை களாகக் கருதப்பட்டு அவ்வாறு குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய பேர்வழிகளுக்கு எதிராக சட்டத்தைப் பிரயோகிப்பதில் இரக்கம் காட்டக் கூடாது, இரட்டை நிலை பின்பற்றப்படக் கூடாது.
அதேசமயத்தில், வேலைவாய்ப்பு, சம ஊதியம், உத்தரவாதமளிக்கப்பட்ட சமூகப்பாதுகாப்பு, நிலம் மற்றும் இதர சொத்துக்களில் உரிமைகள் ஆகிய வற்றிலும் சமத்துவமின்மை நீடித்தல் போன்றவை பெண்களை ஆண்களைச் சார்ந்தே வாழ வைத்திருக்கின்றன. எனவே வன் முறைக்கு மிக எளிதாகப் பலியாகி விடுகிறார்கள்.

பொருளாதாரச் சுதந்திரம், குறிப்பாக ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்படுதல், மிகவும் அவசியமாகும். இவர்கள்தான் பாலியல் வன்முறைக்கு மிகவும் பலியா கிறார்கள் என்பதால் இவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அளிக்கப்படக் கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள் கைகள் வகுக்கப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டியது அவசியமாகும்.பாலியல் வன்முறையில்லாத ஒரு சுதந்திரமான சுற்றுச்சூழலை உருவாக்கக் கூடியவிதத்தில் பெண்களுக்கு உரிமை கள் உருவாக்கப்பட வேண்டியது அடிப் படை அவசியமாகும்.

பாலின சமத்துவத் தின் அடிப்படையில், பாலியல் வன் முறையற்ற ஒரு சமூகத்தில் வாழக்கூடிய விதத்தில் பெண்களுக்கு அரசியலமைப் புச் சட்ட உரிமைகள் வழங்கப்பட வேண் டும். இதனை உத்தரவாதப்படுத்தக் கூடிய விதத்தில் நம் கல்வி முறையும் அனைத்து மட்டங்களிலும் மாற்றப்பட வேண்டும்.

தலித்துகள்/பழங்குடியினர் நலன்கள்

தலித்துகள் மற்றும் பழங்குடியின ருக்கு அவர்களது மக்கள்தொகை விகிதா சாரத்திற்கேற்ப பட்ஜெட் ஒதுக்கீடு இருந் திட வேண்டும். ஆயினும், இது தொடர் பான திட்டக் கமிஷன் வழிகாட்டுதல்கள் வெறும் தாள்களிலேயே இருக்கின்றன. பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கிய நிதிகள் அவர்களுக்கு முழுமை யாக செலவு செய்யப்படாமல், காலாவதி யாவது அல்லது வேறு திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுவது அனுபவமாக இருக்கின்றன. இவ்வாறு நடைபெறாமல் தடுத்திட, இவ்வாறு துணைத் திட்டங்களின் ஒதுக் கப்படும் தொகைகள் முறையாக அமல் படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத் தக்கூடிய விதத்தில் உரிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய தொரு சட்டத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி


Tuesday, September 24, 2013

தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலுக்கு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த குறிப்பு
புதுதில்லி, செப். 24-
புதுதில்லியில் திங்கள் அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிப்பு ஒன்று பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:
1. அதிகரித்துவரும் மதவெறி நிகழ்வுகள்:
மிகவும் கவலையளிக்கக்கூடிய விதத்தில் சமீபத்தில் மதவெறி நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ள பின்னணியில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்ட்வார், பீகார் மாநிலத்தில் நவாடா மற்றும் பெட்டியா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர்நகரில் மிகப்பெரிய அளவில் வன்முறையில் நாற்பது பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆகிய  மதவெறி வன்முறைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஓராண்டில் ராஜஸ்தானிலும், உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சிகளை அடுத்து இவை நடந்திருக்கின்றன.
சமீபகாலத்தில் வகுப்புவாத நிலைமை மிகவும் மோசமாக மாறிக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இவை தற்செயலாக வெடித்த சம்பவங்கள் என்று சொல்வதற்கில்லை, மாறாக ஒருசில மதவெறி-அரசியல் சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப் பட்டவைகளேயாகும்.
மத வன்முறைச் சம்பவங்களுக்கான காரணங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதைப்போலத்தான் இருந்திருக்கின்றன. அதாவது, இரு மதத்தினரும் கலந்து வாழக்கூடிய பகுதிகளில் மத ஊர்வலங்கள் செல்லும்போது ஆத்திரமூட்டல் சம்பவங்களை உருவாக்குதல்ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைச் சேர்ந்த இளம்பெண்கள் மீது இதர சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ளுதல், மதவெறித் தீயை விசிறிவிடும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு அதன்மூலம் சமூகத்தினரிடையே பரஸ்பரம் நம்பிக்கையின்மையை உருவாக்குதல், இவற்றின் மூலம் எந்தவொரு சிறு நிகழ்ச்சியையும் தீப்பொறியாகப் பயன்படுத்தி காட்டுத்தீ அளவிற்கு மோதலை உருவாக்குதல் - என கடந்த காலங்களில் நடைபெற்றதைப் போலத்தான் இருந்திருக்கின்றன. ஆயினும், இதில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் அம்சம் என்னவெனில், முசாபர்நகரில் நடந்தைப்போல, இத்தகைய கலவரங்கள் கிராமப்புறங்களில் பரப்பப்படுவதுதான். இவ்வாறு நடைபெற்ற அனைத்துக் கலவரங்களின்போதும், வன்முறையின் கூர்முனைத் தாக்குதல்களை சிறுபான்மை சமூகத்தினர்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் கொன்று குவிக்கப்படுகின்றனர், அவர்களது சொத்துக்கள்தான் சூறையாடப்படுகின்றன.
மதவெறி சித்தாந்தத்தை  ஆரத்தழுவிக் கொண்டுள்ள அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மதவெறிப் பிரச்சாரத்தை நடத்திபதற்றத்தை உருவாக்கி வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டுவதற்குப் பயன்படுத்திக்  கொள்கின்றன.  
உள்துறை அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரங் களின்படி, இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை   497 மதவெறி நிகழ்வுகள் நாட்டில் நடைபெற் றுள்ளன, இவற்றில் 107 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 1,697 பேர் காயங்கள் அடைந்திருக்கிறார்கள்.
வரவிருக்கும் 2014 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே இவ்வாறு மதவெறி நடவடிக்கைகள் விசிறிவிடப்படுவதாகத் தோன்றுகிறது.   இவ்வாறு மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பயன் அடைபவர்கள் யார் என்பதை எளிதாக அடையாளம் காண முடியும்.
2. மதவெறி நடவடிக்கைகளைச் சமாளித்திட நடவடிக்கைகள் எடுத்திடுக:
எனவே, மத வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால், இதனை உருவாக்கும் அரசியல் - மதவெறி சக்திகள்   மற்றும் அமைப்புகள் எவை என்பதை முதலில் அடையாளம் காண வேண்டியது அவசியமாகும். அதன்பின்னர் அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்திடக்கூடிய வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மதவெறிப் பிரச்சாரத்தைத் தடை செய்தல், இதர சமூகத்தினர் மீது வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களைத் தடை செய்வது சம்பந்தமான சட்டங்களை பிரயோகிக்க வேண்டும்.
இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்  நிர்வாகத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். நிர்வாகமும், காவல்துறையும் காலத்தே செயல்படுவதும், வன்முறை நிகழ்கையில் பாரபட்சமின்றித் தலையிட்டு வன்முறையைக் கட்டுப்படுத்துவதும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கயவர்களைக் கைது செய்வதும் கூட மிகவும் அவசியமாகும்.
வகுப்புவாத வன்முறைத் தடைச் சட்டமுன்வடிவு (கூhந ஞசநஎநவேiடிn டிக ஊடிஅஅரயேட ஏiடிடநnஉந க்ஷடைட) மேலும் காலதாமதம் எதுவுமின்றி சட்டமாக நிறைவேற்றப் பட வேண்டும். இச்சட்டம் மதவெறி வன்முறைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இது வேறுவகையிலான மோதல்கள் மற்றும் வன்முறை வடிவங்கள் தொடர்வாக விரிவுபடுத்தப்படக் கூடாது. மேலும், இச்சட்டம் நிறைவேற்றப்படுகையில், மாநில அரசுகளின் சட்டம் - ஒழுங்கு மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்ற அடிப்படைப் பொறுப்புகளைப் பறிப்பதாக இருந்துவிடாது, கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திடல் வேண்டும். 
சில மாநிலங்களில் தற்போதுள்ள கல்விமுறை மற்றும் பாடப் புத்தகங்கள் மதவெறி மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றையும் பரிசீலனை செய்து, இவற்றில் உள்ள தீமைகளைக் களைய வேண்டியதும் அவசியமாகும்.
சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் பல மதவெறித் தீயை உமிழ்வதற்குப் பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறோம். இவ்வாறான மதவெறிப் பிரச்சாரத்தைத் தடை செய்திட வேண்டும், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்போருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுத்திடு வேண்டும். இது தொடர்பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவு, உரியமுறையில் திருத்தப்பட வேண்டும். இந்தச் சட்டப்பிரிவு மாற்றுக்கருத்துக் கூறுபவர்களை ஒடுக்குவதற்கு துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மதவெறி வன்முறைப் பிரச்சனை என்பது நிர்வாகரீதியான வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல என்று பார்க்கப்பட வேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில், மதவெறி அரசியல் வரலாற்றை ஆராயுங்கால், இது அடிப்படையில் ஓர் அரசியல் பிரச்சனையே என்பதை உணரமுடியும். எனவே இது அரசியல் ரீதியாகவும் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கு மதச்சார்பின்மைக் கொள்கையை உறுதியுடன் பின்பற்றுவது அவசியத்தேவை. அப்போதுதான் மதவெறி சித்தாந்தத்தையும், அரசியலையும், அதன் ஊற்றுக்கண் மற்றும் மூலவேர் எதுவாக இருந்தபோதிலும், அதனை எதிர்த்து முறியடிப்பது என்பது சாத்தியமாகும்.
மதநல்லிணக்கம் சம்பந்தமாக மற்றொரு முக்கியமான அம்சமும் உண்டு. அது சிறுபான்மையிர் தொடர்பாக நேர்மையான மற்றும் நடுநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுவது சம்பந்தமானது. வகுப்புவாதம் பயங்கரவாத வன்முறை போன்ற தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கிறது. பயங்கரவாதத்தை, அதன் ஊற்றுக்கண் எதுவாக இருந்தாலும், அதனை எதிர்த்து முறியடிப்பது அவசியம் என்று சொல்கிற அதே சமயத்தில், தனிப்பட்ட ஓர் இனத்தை மட்டும் இதனுடன் பொருத்திப்பார்க்காதுமிகவும் எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாதத்தை முறியடிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் வேட்டையாடப்படுவதையே அனுபவம் நமக்குக் காட்டுகிறது. எண்ணற்ற வழக்குகளில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுநீண்ட காலத்திற்கு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வழக்குகள் பலவற்றில் இவ்வாறு சிறைப்படுத்தப்பட்ட இளைஞர்கள்  கடைசியில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  மேலும் பல வழக்குகளில் இவ்வாறு பொய்யான மற்றும் அற்ப சாட்சியங்களை வைத்துக்கொண்டு இளைஞர்களைக் கைது செய்து வழக்கு தொடுத்ததை நீதித்துறை கண்டித்திருக்கிறது.
காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறை ஏஜன்சிகள் மத்தியில் காணப்படும் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறை சமூகத்தினர் மத்தியில் மனமுரிவையும் (யடநையேவiடிn), கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
பாகுபாடு காட்டப்படும் இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவுவதும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதும் அரசின் பொறுப்பாகும். இவ்வாறு நீதித்துறையையே நகைப்பிற்காளாக்கிய காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறையினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.
3. பெண்கள் பாதுகாப்பு:
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் தாக்குதல்கள் அளவுக்கு மீறி அதிகரித்த வண்ணம் உள்ளன. வன்புணர்ச்சி, கூட்டுவன்புணர்ச்சி, இளம் பெண்கள் மீது அமிலம் (acid) வீசப்படுதல், குழந்தைகள்கூட பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல்  அதிகரித்திருக்கின்றன. ஆயினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனைகள் என்பது மிகவும் வருத்தம் தோய்ந்த நிலைமையில் இருப்பது தொடர்கிறது. இத்தகைய குற்றம்புரிவோர் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற உணர்வு ஆட்சியாளர்கள் மத்தியில் போதிய அளவிற்கு இல்லாதிருப்பதே இத்தகைய கயவர்கள் ஊக்கத்துடன் செயல்படுவதற்குக் காரணமாகும். இத்தகைய கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  சட்டத்தை மதிக்காது அதனைத் துஷ்பிரயோகம் செய்கிற காவல்துறையினர் மற்றும் புலனாய்வு ஏஜன்சிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இத்தகைய வழக்குகளை விரைந்து தீர்ப்பு சொல்லக்கூடிய விதத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படுவதும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அவை அனைத்தும் அவசர அவசியமாகும்.
தில்லியில் நடைபெற்ற கொடூரமான கூட்டு வன்புணர்வு வழக்கினை அடுத்து, மக்கள் கடுங்கோபத்துடன் கிளர்ந்தெழுந்ததை அடுத்து, புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆயினும் இது இன்னமும் முழுமையாக முறையாக அமல் படுத்தப்படவில்லை. எப்படிப்பார்த்தாலும் இது போதுமானதும் அல்ல. ஏனெனில்இது வர்மா குழு அளித்த அனைத்துப் பரிந்துரைகளையும் சட்டத்தின் ஷரத்துக்களில் இணைத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக, கவுரவம் என்ற பெயரில் இளைம் தம்பதியர் கொல்லப்படும் கொடூரங்கள் தொடர்கின்றன.  இத்தகைய கவுரவக் கொலைகள்புரிவோருக்கு எதிராக தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டியதும் அவசியத் தேவையாகும். சில மாநில அரசுகள் இவ்வாறு கொண்டுவர வேண்டியது அவசியம் இல்லை என்று கருதுவதால், இத்தகைய சட்டம் கொண்டுவரப்படாதது துரதிர்ஷ்டவசமாகும். தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக படுபிற்போக்குத்தனமான பழைய சமூகப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக செல்ல அவை விரும்பவில்லை.
அனைத்து சமூகத்திலும் உள்ள வகுப்புவாத மற்றும் அடிப்படை சக்திகள் தங்கள் ஆணாதிக்க சிந்தனையைத் (யீயவசயைசஉhயட எயடரநள ) திணிப்பதற்காக பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை கட்டாயப்படுத்துகின்றன, அவர்களது உரிமைகளைத் தராது மீறுகின்றன. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களையும், பெண்கள் துன்புறுத்தப்படுதலையும் மதவெறி அமைப்புகள் தங்கள் தங்கள் மதத்திற்கு எதிரானவை என்பதுபோல் மதவெறிச் சாயம் பூசிஇதர சமூகத்தினருக்கு எதிராக மதவெறி உணர்வையும், வெறுப்பையும் தூண்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. இத்தகைய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
அரசியலில் மிக உயர் இடத்தில் இருக்கக்கூடிய நபர்கள் மற்றும் தங்களைத்தாங்களே ‘‘கடவுளின் அவதாரங்கள்’’ ("படின அநn") என்று சொல்லிக்கொள்ளக்கூடிய சில பேர்வழிகள் பெண்களைத் துன்புறுத்தத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வது என்பது மிகவும் வருந்தத்தக்கது. இவ்வாறு எண்ணற்ற பேர்வழிகள் நாடு முழுதும் காணப்படுகிறார்கள். இவர்கள் புரிந்திடும் குற்றங்கள் மிகவும் மோசமானவைகளாகக் கருதப்பட்டு அவ்வாறு குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய பேர்வழிகளுக்கு எதிராக சட்டத்தைப் பிரயோகிப்பதில் இரக்கம் காட்டக்கூடாது, இரட்டை நிலை பின்பற்றப்படக் கூடாது.
அதேசமயத்தில், வேலைவாய்ப்பு, சம ஊதியம், உத்தரவாதமளிக்கப்பட்ட சமூகப்பாதுகாப்பு, நிலம் மற்றும் இதர சொத்துக்களில் உரிமைகள் ஆகியவற்றிலும் சமத்துவமின்மை நீடித்தல் பெண்களை ஆண்களைச் சார்ந்தே வாழ வைத்திருக்கின்றன. எனவே வன்முறைக்கு மிக எளிதாகப் பலியாகிவிடுகிறார்கள்.  பொருளாதாரச் சுதந்திரம், குறிப்பாக ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்படுதல், மிகவும் அவசியமாகும். இவர்கள்தான் பாலியல் வன்முறைக்கு மிகவும் பலியாகிறார்கள் என்பதால் இவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அளிக்கப்படக்கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
பாலியல் வன்முறையில்லாத ஒரு சுதந்திரமான சுற்றுச்சூழலை உருவாக்கக்கூடியவிதத்தில் பெண்களுக்கு உரிமைகள் உருவாக்கப்பட வேண்டியது அடிப்படை அவசியமாகும். பாலின சமத்துவத்தின் அடிப்படையில்பாலியல் வன்முறையற்ற ஒரு சமூகத்தில் வாழக்கூடியவிதத்தில் பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதனை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் நம் கல்வி முறையும் அனைத்து மட்டங்களிலும் மாற்றப்பட வேண்டும்.
4. தலித்துகள்/பழங்குடியினர் நலன்கள்:
தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களது மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பட்ஜெட் ஒதுக்கீடு இருந்திட வேண்டும். ஆயினும், இது தொடர்பான திட்டக் கமிஷன் வழிகாட்டுதல்கள் வெறும் தாள்களிலேயே இருக்கின்றன. பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கிய நிதிகள் அவர்களுக்கு முழுமையாக செலவு செய்யப்படாது, காலாவாதியாவது அல்லது வேறு திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுவது அனுபவமாக இருக்கின்றன.
இவ்வாறு நடைபெறாமல் தடுத்திட, இவ்வாறு துணைத் திட்டங்களின் ஒதுக்கப்படும் தொகைகள் முறையாக அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப் படுத்தக்கூடிய விதத்தில் உரிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.  இத்தகையதொரு சட்டத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுவந்து நாடாளுமன்றத் தில் நிறைவேற்றிட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)



     

Monday, September 23, 2013

மதவெறித் தீயை விசிறிவிடாதே!




உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்றுள்ள மதவெறிக் கலவரங்கள் எண்ணற்ற அப்பாவி உயிர்களைப் பலி கொண்டிருக்கின்றன. எண்ணற்றோரை எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளி இருக்கின்றன.

ஆயிரக் கணக்கானோரை அகதிகள் முகாமில் தங்க வைத்திருக்கின்றன. இவை அனைத்தும் வரவிருக்கும் 2014 பொதுத் தேர்தல்களுக்குப் பின் பிரதமராக, தற்போதைய குஜராத் முதல்வர் மோடி முடிசூடுவார் என்று பாஜகவினரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து நடைபெற்றிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்திற்கு, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தங்களுடைய உத்தி மதவெறித் தீயை விசிறிவிடுவதுதான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருந்தால், விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் ஆணவத்துடன் கூறிய பேச்சைக் கேட்டிருந்தார்களானால் அந்த சந்தேகம் நிச்சயம் நீங்கி விடும். ‘2002-இல் குஜராத்தில் சிறுபான்மையினருக்குப் பாடம் கற்பிக்கப்பட்டதுபோல, மீண்டும் ஒருமுறை மேற்கு உ.பி.யில் பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது’’ என்று அசோக் சிங்கால் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
முசாபர் நகரில் நடைபெற்ற ஜாட் இனத்தினரின் கட்டைப் பஞ்சாயத்துக்களில் இந்துப் பெண்களை மயக்கி இழுக்கும் முஸ்லிம் இளைஞர்களிடமிருந்து, ‘‘நம் மகள்களையும் மருமகள்களையும் காப்பாற்றிட’’ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடப்பட்டிருக்கின்றன. இப்போதெல்லாம் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்திற்கு ஜென்டில்மேன்வாஜ்பாய் போன்ற முகமூடிகள் எல்லாம் தேவைப்பட வில்லை. ஏனெனில் பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பீகார் முதல்வரும் அவரது கட்சியான ஐக்கிய ஜனதாதளம் போன்ற முக்கியமான கட்சிகள் எல்லாம் ஏற்கனவே வெளியேறிவிட்டன. இதன் மூலம் பாஜகவின் தலைமையிலான கூட்டணியில் நிலவிய முரண்பாடு மீண்டும் ஒரு முறை முன்னுக்கு வந்திருக்கிறது. அதாவது பாஜகவின் தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்க வேண்டுமானால் அது தன்னுடைய சொந்த மதவெறி நிகழ்ச்சிநிரலை ஓரங்கட்டி வைத்திட வேண்டும். ஆனால் ஆர்எஸ்எஸ் கட்டளையிடும் அரக்கத்தனமான மதவெறி நிகழ்ச்சிநிரலைக் கடைப்பிடிக்கவில்லை எனில் பாஜக தன் அரசியல் தளத்தைத் தக்க வைத்துக்கொண்டு விரிவுபடுத்திட முடியாது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆர்எஸ்எஸ் முன்னிலைப் படுத்திய வெறித்தனமான சகிப்புத்தன்மையற்ற பாசிசத் தன்மைவாய்ந்த இந்து ராஷ்ட்ரம்முறியடிக்கப்பட்டது என்பதை மீண்டும் நினைவுகூர வேண்டியது இப்போதைய தேவையாகும். சுதந்திர இந்தியா ஓரு நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக நிறுவப்பட்டது. ஆயினும், ஆர்எஸ்எஸ் இயக்கமானது நவீன இந்தியக் குடியரசை தாங்கள் விரும்பும் இந்து ராஷ்ட்ரமாகமாற்றுவதற்கான முயற்சிகளைக் கைவிடவில்லை. அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதன் குறிக்கோள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒப்புயர்வற்ற குருவான கோல்வால்கரால் வரையறுக்கப்பட்டிருப்பதுபோல ‘‘அந்நிய இனங்கள் (இந்துக்கள் அல்லாதவர்கள் என்று படிக்க) இந்துக் கலாச்சாரத்தையும் மொழியையும் தழுவ வேண்டும். இந்து மதத்தைத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு அதனை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்து இனத்தையும் கலாச்சாரத்தையும் போற்றிப்புகழ்வதைத் தவிர - அதாவது இந்து தேசம் என்பதைத் தவிர - வேறு சிந்தனையை அனுமதித்திடக் கூடாது. தங்களுடைய தனித்துவத்தைக் கை விட்டு இந்து இனத்தில் சங்கமித்திட வேண்டும். இல்லையேல் நாட்டில் இரண்டாம் பிரஜையாக இந்துக்களுக்கு அடிபணிந்து தங்கிக் கொள்ளலாம். எந்த உரிமையும் சலுகையும் கோரக் கூடாது.

ஏன் குடியுரிமையைக் கூட கோரக்கூடாது’’ என்பதாகும். பாஜக-வின் சார்பில் வருங்காலப் பிரதமர் என்று முடிசூட்டப்பட்ட மோடி இதுதொடர்பாக நடைபெற்ற பேரணி/பொதுக்கூட்டத்தில், ‘வீர்யம்மிகுந்த குஜராத்தைப் போல வீர்யம் மிகுந்த இந்தியாவை உருவாக்குவதே என் லட்சியம் என்று பிரகடனம் செய்திருக்கிறார். இதன் பொருள் என்ன? 2002இல் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைப்போல, இந்தியா பூராவும் செய்ய வேண்டும் என்பதேயாகும். இதுவே அவர்கள் சொல்லும் வீர்யத்தின்உண்மைப் பொருளாகும். குஜராத் மோடியின் தலைமையில் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. உண்மையில் மனித வள வளர்ச்சி அட்டவணையில், குறிப்பாக பெண் குழந்தைகளைப் பொறுத்தவரையில், குஜராத் தேசிய சராசரியைவிட கீழே இருப்பதை இவர்கள் மறைத்தே இவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். குஜராத் மாடல் இந்தியா பூராவும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று நாடு கேட்டுக் கொண்டிருக்கிறதாம். . உலகப் பொருளாதார நெருக்கடி மிகவும் உக்கிரமாய் இருக்கக்கூடிய இன்றைய கால கட்டத்திலும் கார்ப்பரேட் உலகம் தங்கள் கொள்ளை லாப வேட்டையைத் தொடரவே விரும்புகிறது. இதற்கு அவர்களுக்குத் தங்கள் நலன்களுக்கு சேவகம் செய்வதற்கு, தங்கள் கொள்ளை லாபம் தொடர வசதி செய்து கொடுப்பதற்கு, ‘தீர்மானகரமானநடவடிக்கைகளை மேற்கொண்டிடக்கூடிய விதத்தில் ஒரு வலுவானதலைவர் தேவைப்படுகிறார். ஒப்புயர்வற்ற வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் தன்னுடைய தீவிரவாதத்தின் காலம் என்னும் நூலில் குறிப்பிட்டிருப்பதைப்போல, ‘‘பெரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, தங்கள் சொத்தைப் பறிமுதல் செய்யாத எந்தவிதமான ஆட்சியாளர்களுடனும் சமாதானமாகப் போய்விடும். ஆயினும் மற்ற ஆட்சிகளைவிட பாசிசம் தங்களுக்குக் கூடுதலான அனுகூலங்களை அளித்திடும் என்றே பெரும் நிறுவனங்கள் கருதிடும்.’’  இவ்வாறு கூறுகையில் அவர் பல்வேறு அனுகூலங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.

அவற்றில் முக்கியமானவை: தொழிற்சங்கங்களை இல்லாமல் ஒழித்துக் கட்டுவது, இடதுசாரி இயக்கங்களை பலவீனமடையச் செய்து அல்லது தோற்கடித்து, பாசிசத்தின் கீழ் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவது. நம் நாட்டில் பொருளாதார மந்தம் சரியாவதற்கான அடையாளங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியாத நிலையில், உலக அளவிலும் பொருளாதாரம் தடுமாற்றத்துடன் தத்தளித்துக்கொண்டிருப்பது தொடரும் நிலையில், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு, தங்கள் கொள்ளை லாப வேட்கையைத் தொடர்வதற்கு ஹிட்லரைப் போன்று ஒரு பாசிஸ்ட் மீட்பாளர்தேவைப்படுகிறார். எப்படி உலக அளவில் இயங்கும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் குறிப்பாக அமெரிக்க கார்ப்பரேட் ஜாம்பவான்கள், பாசிசம் வளர்வதற்கு முக்கியமான பங்கினை வகித்தன என்பதற்கு வரலாற்றில் ஏராளமான சாட்சியங்கள் உண்டு. இன்றைய தினம் நம் நாட்டில் உள்ள நிலைமை என்பது ஜெர்மனியில் பாசிசம் உருவானபோது இருந்த நிலைமை போன்றதல்ல என்பதை அனைவரும் குறித்துக் கொள்ள வேண்டும். ஆயினும், நம் நாட்டில் உள்ள பிற் போக்குப் பிரிவினர் அரசு அதிகாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பாசிச நடைமுறைகளைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என்பதையும் நாம் காணத் தவறக் கூடாது.

ஜார்ஜி டிமிட்ரோவ் தன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐக்கிய முன்னணி என்னும் நூலில் ஜெர்மனியில் பாசிசம் உருவானதையும் அதன் இயற்கை குணத்தையும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்திருக்கிறார். அவர் கூறுகிறார்: ‘‘பாசிசம், தீவிரமான ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்காகச் செயல்படுகிறது. ஆயினும் அது நாட்டில் இழிவாக நடத்தப்படும் மக்களின் துயர்துடைக்க வந்த வீராதிவீரன் என்று மக்கள் மத்தியில் அது தன்னைக் காட்டிக் கொள்கிறது.’’ அவர் மேலும் கூறு கிறார் : ‘‘பாசிசம் மக்களை மிகவும் ஊழல் மிகுந்த, மிகவும் விஷக்கிருமி பேர் வழிகளின் தயவில் தள்ளிவிடுகிறது. ஆயினும் மக்களிடம் அது நேர்மையான மற்றும் ஊழலற்ற அரசாங்கம் அமைப்போம்என்ற வாக்குறுதியையும் அளிக்கிறது. மக்கள் மத்தியில் நிலவும் விரக்தியின் தன்மைகளுக்கேற்ப, மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் விதத்தில் பாசிசம் தன் கொள்கைகளையும் உருவாக்கிக் கொள்கிறது.’’ ஆர்எஸ்எஸ்/பாஜகவின் தற்போதைய பிரச்சாரம், டிமிட்ரோவின் கூற்றுடன் நன்கு பொருந்துகிறது. நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் தீவிரமாகக் கொண்டுசெல்வோம் என்று வெளிப்படை யாகவே அது கூறுவதன் காரணமாக, சர்வ தேச நிதி மூலதனத்தின் ஒப்புதலை அது முழு மையாகப் பெற்றுவிட்டது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது பாஜக இதனை நியாயப்படுத்தியது) போன்ற சில சீர்திருத்தங்களுக்கு எதிர்ப் பினைத் தெரிவித்தபோதிலும், அந்நிய நேரடி முதலீட்டுக்கு பல்வேறு துறைகளில் வாய்ப்பு வாசல்களைத் திறந்துவிடுவதை இது ஏற்கனவே நியாயப்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு இது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்கே சேவகம் செய்கிற அதேசமயத்தில், இந்துத்துவாவின் அடிப்படை நிகழ்ச்சி நிரலான, ‘‘அழுகிக் கிடக்கிற தேசிய (இந்து என்று படிக்க) உணர்வுகளைச் சரிசெய்கிறோம்’’ என்ற பெயரில் மதவெறித் தீயை விசிறிவிடும் வேலையையும் தொடர்ந்து செய்துகொண்டி ருக்கிறது. இவ்வாறு ஆர்எஸ்எஸ் / பாஜகவின் நடவடிக்கைகள் அனைத்தும், பாசிச நடை முறையுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்று பாருங்கள். வரலாற்றில் தற்செயலாகவே பல நிகழ்வுகள் ஒத்துப்போவதன் மூலமாக வரலாறு தன் சொந்த வழிகளின் மூலமாக செய்திகளை பறைசாற்றுகிறது. 1933 பிப்ரவரி 27 அன்று ஜெர்மனியின் நாடாளுமன்றமான ரெய்ச்ஸ்டாக்கிற்கு தீ வைக்கப்பட்டது. 2002 பிப்ரவரி 27 அன்று சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டி கோத்ராவில் தீயில் வெடித்துச் சிதறியது. முன்னதாகக் கூறப்பட்ட நிகழ்வை ஹிட்லர் தன்னுடைய கேடுகெட்ட கம்யூனிச எதிர்ப்பு ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்திக் கொண்டான், ஜனநாயக உரிமைகளை ரத்து செய்தான். நடைமுறையிலிருந்த ஜெர்மனியின் (வெய்மர்) அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்தான்.

நாஜி பாசிசத்தினைக் கெட்டிப்படுத்தினான். ஜெர்மன் நாடாளுமன்றத்திற்குத் தீ வைக்கப்பட்ட செயலானது பாசிஸ்ட் படையினரின் வேலைதான் என்பது பின்னர் தெரிய வந்தது. 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய் யப்பட்டார். ஆனால் அதே தேதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, 1933இல் அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டான். இப்போது பாஜகவின் சார்பில் பிரதமருக்கான நபராக தூக்கி நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி சமீபத்தில் தேசம் தழுவிய பிரச்சாரம் ஒன்றினை அறிவித்திருக்கிறார். அதன்படி ‘‘இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட சர்தார் பட்டேலின் நினைவிற்குப் புத்துயிரூட்டக் கூடிய விதத்தில், அவருக்குச் சிலை வைக்க இருக்கிறோம்’’ என்றும், ‘‘அந்த சிலை நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவியின் சிலையின் உயரத்தைவிட இரு மடங்கு உயரமாக இருக்கும்’’ என்றும் இந்த சிலை ஒற்றுமை சிலைஎன அழைக்கப்படும் என்றும் இதனைக் கட்டுவதற்கு விவசாயிகளிடமிருந்து இந்தத் தேசம் தழுவிய பிரச்சாரத்தின்போது இரும்பு சேகரிக்கப் படும் என்றும் மோடி அறிவித்திருக்கிறார். மேலும், இந்தச் சிலை ‘‘இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அதன் வளமான கலாச்சாரப் பாரம்பரியப் பெருமை களுடன் சித்தரிக்கக்கூடிய விதத்தில்’’ அமைந்திடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இவர்கள் இப்போது கடைப்பிடிக்க முன்வந்திருக்கும் உத்தியானது, அயோத்தியில் தாவாவில் இருந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்காக செங்கற்கள் சேகரிக்கிறோம் என்று சொல்லி மதவெறித் தீயைப் பரவச் செய்து, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு, அவற் றின் காரணமாக சிறுபான்மை முஸ்லிம் மக்கள் பலர் பலியானதும், அதனைத் தொடர்ந்து மத்தியில் பாஜக தலைமையிலான முதல் அரசாங்கம் அமையவும் காரணாக இருந்த அதே உத்தியை ஒத்திருக்கிறது அல்லவா? இந்தசமயத்தில் நாம் இன்னொன்றையும் நினைவுகூர்தல் நல்லது. இதே வல்லபாய் பட்டேல்தான் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தார். 1948 பிப்ரவரி 4 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்து அறிவிக்கப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், ‘‘சங் பரிவாரத்தின் ஆட்சேபணைக் குரிய மற்றும் ஊறுவிளைவிக்கக்கூடிய நடவடிக்கைகள் முழுவீச்சுடன் தொடர்கின்றன, சங் பரிவாரத்தின் வன்முறைக் கலாச்சாரம் பல உயிர்களைப் பலிகொண்டுவிட்டது. இதற்குப் பலியான மிகவும் சமீபத்திய, மிகவும் விலை மதிக்கமுடியாத உயிர் காந்திஜியினுடையதாகும்.’’ என்று கூறப் பட்டுள்ளது. அத்தகைய சர்தார் பட்டேலையே இப்போது இவர்கள் தவறாகப் பயன்படுத்த முன் வந்திருப்பது என்பது ‘‘இந்து தேசம்’’ என்கிற இவர்களது குறிக்கோளுக்குத் தகுந்த மாதிரி இந்திய வரலாற்றையே மாற்றி எழுதவேண்டும் என்பதன் ஒரு பகுதியேயாகும்.

நவீன இந்திய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசினை தங்களுடைய குறிக்கோளான ‘‘இந்து ராஷ்ட்ரமாக’’ மாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் -இன் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒற்றுமைச் சிலையை சுதந்திர தேவியின் சிலையுடன் ஒப்பிடும்போதே சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவால் வியட் நாம் மீது போர் தொடுக்கப்பட்டிருந்த சமயத்தில், மிகவும் புகழ்பெற்றிருந்த ஒரு கிண்டலான தமாஷை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவியின் சிலையானது, பிரான்ஸ் அரசாங்கத்தால், தங்களுடைய நாட்டில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்என்னும் உயர்நோக்கங்களின் அடையாளமாக நன்கொடையாய் வழங்கப்பட்டது. பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றிருந்த சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் இந்த சிலையைப் பார்த்தபோது
‘‘பிரான்சைப்போல, அமெரிக்காவும், இவ்வாறு சிலைகளை அமைப்பதன் மூலம் நாட்டிற்காக இறந்தவர்களை மதிப்பதாக எனக்குத் தெரியவில்லை.’’ என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மதவெறித் தீயை விசிறிவிடத் தொடங்கியிருப்பது, ‘ஒற்றுமை சிலையைச் சுற்றி, தங்களுடைய பாசிஸ்ட் கொள்கைகளைப் பின்னிப்பிணைத் திருப்பது, ‘இந்து ராஷ்ட்ரம்என்னும் தங்கள் குறிக்கோளை வெற்றி பெறச் செய்வதற்காக முழுமூச்சுடன் இறங்கியிருப்பது ஆகிய அனைத்தும் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள உயர்நோக்கங்களுக்கு சாவுமணி அடிப்பதற்கான சமிக்ஞைகளேயாகும்.
இவ்வாறு இவர்களது நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் இதுகாறும் நிலவி வந்த வளமான சமூக-கலாச்சார-மத வேற்றுமைப் பண்புகளும், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடுமே ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காகப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிற நாம் இதனை ஒருபோதும் அனு மதிக்க முடியாது.

(தமிழில்: ச.வீரமணி)