ஜம்மு
– காஷ்மீரிலிருந்து உமர் அப்துல்லா தலைமையில் வந்த எதிர்க்கட்சித் தலைவர்கள்
தூதுக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு, திங்கள் அன்று மாலை
வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எம். ஏ. பேபி உட்பட அரசியல்
தலைமைக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இது தொடர்பாக சீத்தாராம்
யெச்சூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற
கலந்துரையாடலுக்குப்பின்னர், நாங்கள்
அரசாங்கத்திற்குப்
பரிந்துரைத்தது பின்வருமாறு:
காஷ்மீரில் இயங்கிடும் அனைத்து
அரசியல் சக்திகளுடனும் அரசாங்கம் அரசியல்ரீதியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிட
வேண்டும்.
காஷ்மீர் மக்கள் மத்தியில் நம்பிக்கைகளைக்
கட்டி எழுப்பும் விதத்தில் உடனடியாக சமிக்ஞைகளை அனுப்பிட வேண்டும்.
பெல்லட் குண்டுகள்
பயன்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்திட வேண்டும்.
மக்கள் வாழும் பகுதிகளில்
சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவினை உடனடியாக வழங்கிட வேண்டும்.
இந்தியாவிற்குள்ளான பிரச்சனைகளை
இவ்வாறு நாங்கள் பேசித்தீர்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற முறையில்
பாகிஸ்தானுடனும் பேச்சு வார்த்தைகளை துவங்கிட வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment