Thursday, April 30, 2009

தோழர் அகல்யா ரங்கனேகருக்கு இரங்கல்

புதுடில்லி, ஏப்ரல் 30-
மறைந்த தோழர் அகல்யா ரங்கனேகருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் புதுடில்லியில் உள்ள பிடிஆர் பவனில் வியாழன் அன்று மதியம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சுபாஷினி அலி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன், புரவலர் பிரமிளா பாந்தே, சிஐடியு செயலாளர் தேவராஜ், இந்திய தேசிய மகளிர் சம்மேளத்தின் சார்பில் பிரமிளா லும்பா, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரஞ்சனா மற்றும் இந்து அக்னி கோத்திரி ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள்.
அப்போது சுதா சுந்தரராமன், தோழர் அகல்யா ரங்கனேகர் குறித்து கூறியதாவது:
(ச. வீரமணி)



Wednesday, April 29, 2009

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அழகிரிக்குத் துணைபோகும் அரசு எந்திரம் -

தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்
பிரகாஷ்காரத் கடிதம்
புதுடில்லி, ஏப். 29-
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.க. அழகிரிக்குத் துணைபோகும் அரசு எந்திரத்திற்கு எதிராக, தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கோரியுள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பொ.மோகனுக்கு எதிராகப் போட்டியிடும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி போட்டியிடும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் நிலவும் அசாதாரணமான நிலைமைகள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், தலைமைத் தேர்தல் ஆணையர் சால்வாவிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
‘‘தமிழ்நாட்டில் மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் இருக்கின்ற அசாதாரணமான நிலைமைகள் குறித்து இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். எங்கள் கட்சியின் வேட்பாளர் பொ.மோகன் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தமிழக முதல்வரின் மகன் மு.க. அழகிரி நிறுத்தப்பட்டிருக்கிறார். கடந்த சில வாரங்களாகவே, இத்தொகுதியில் வாக்காளர்களை வஞ்சகமானமுறையில் கவர்வதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பணமும் பொருளும் விநியோகிக்கப்படுவதையும், அரசு எந்திரம் முழுமையாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் காண முடிகிறது. எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட எங்கள் கட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் சமீபத்தில் திருமங்கலம் என்னும் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணபலம் பயன்படுத்தப்பட்டது. அதே ‘திருமங்கலம் பாணி’ மதுரையிலும் பெரிய அளவில் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது.
எங்கள் கட்சியின் சார்பிலும், எங்கள் வேட்பாளரின் தேர்தல் முகவர் சார்பில் செய்யப்பட்டுள்ள முறையீடுகளின் பட்டியலை இத்துடன் இணைத்திருக்கிறேன். இதில் கண்டுள்ள துஷ்பிரயோகங்களை நிறுத்தி, நியாயமான மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற வலுவான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்பட வில்லை.
எனவே, இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும் மதுரை மாவட்டத் தேர்தல் அலுவலர், மாநகரக் காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் உடனடியாக மாற்றல் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நடுநிலை தவறாது செயல்படும் அதிகாரிகள் அப்பொறுப்புக்களிவ் நியமிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், தன்னுடைய சிறப்புப் பார்வையாளர்களை அனுப்பி, அரசு எந்திரம் அங்கே துஷ்பிரயோகம் செய்யப்படாது பார்த்துக்கொள்ள வேண்டும், தேர்தல் நடத்தைவிதி அப்பட்டமாக மீறப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மதுரையில் தேர்தல் பணிகள் கறைப்படுத்தப்படாமல் நடைபெற வேண்டுமெனில் தாங்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு பிரகாஷ்காரத் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
கடிதத்துடன் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள குறிப்பிவ் கூறப்பட்டிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில், ஆளும்கட்சியினர் வாக்காளர்களைக் கவர்வதற்காக மேற்கொண்டுள்ள அனைத்துவிதமான அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டுவந்துகொண்டிருக்கிறோம். தலைமைத் தேர்தல் ஆணையம் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்திருந்தபோதிலும், அவர்களின் இழிவான சட்டவிரோத நடவடிக்கைகள் கிஞ்சிற்றும் குறைந்திடவில்லை, மாறாக தேர்தல் நாள் நெருங்க நெருங்க மேலும் மேலும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆளும் திமுக=-வும் அதன் வேட்பாளரும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திட புதுப் புதுப்பாணிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகமோ, தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பான இத்தகைய இழிவான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, திமுக வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் கட்சியின் மாவட்டச் செயலர், சட்டமன்ற உறுப்பினர், தேர்தல் முகவர் மற்றும் கட்சியின் மற்ற பிரிவு ஊழியர்களால் தரப்பட்டுள்ள கீழ்க்கண்ட நிகழ்வுகள், சட்டவிரோத நடவடிக்கைகளின் தன்மைகளைத் தங்களுக்கு விளக்கிடும்.
(1) திமுக-வின் சார்பில் 3.3.2009 அன்று நுகர்வுப் பொருள்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதற்கு எதிரான முறையீடு.
(2) 3.3.2009 அன்று திமுக வேட்பாளர் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட முறையிடு.
(3) 5.3.2009 அன்று தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்கு எதிராக, மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(4) 20.3.2009 அன்று மிகப்பெரிய அளவில் வாக்காளர்கள் சேர்க்கைக்காக அளிக்கப்பட்ட பட்டியலுக்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(5) 28.3.2009 அ ன்று சுய உதவிக் குழுக்களுக்கும் வாக்காளர்களுக்கும் பணம், புடவை, முதலானவை விநியோகிக்கப்பட்டதற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(6) 31.3.2009 அன்று திமுக-வால் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(7) 3.4.2009 அன்று திமுக-வால் பணம் பட்டுவாடா செய்வதற்காக திருமண மண்டபங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(8) 8.4.2009 அன்று திமுக வேட்பாளரால் தேர்தல் பிரச்சாரத்திற்காக, சாமி கும்பிடும் இடங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(9) 15.4.2009 அன்று மாவட்ட ஆட்சியர், ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறார் என்று, மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் அவர்களால் அளிக்கப்பட்ட முறையீடு.
(10) 15.4.2009 அன்று எங்கள் கட்சி ஊழியர் விஜயராஜன் மீது நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராக காவல்துறையில் முறையீடு அளிக்கப்பட்டும் அதன்மீது அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்காததற்காக அளிக்கப்பட்ட முறையீடு.
(11) 16.4.2009 அன்று திமுக-வினரால் மார்க்சிஸ்ட் கட்சித் தேர்தல் கூட்டத்தை சீர்குலைவு செய்ததற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(12) ஆளும் கட்சியின் அளித்துள்ள பொய்ப் புகார்களின் அடிப்படையில் எங்கள் கட்சி ஊழியர்களைக் கைது செய்ய, காவல்துறை எந்திரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(13) 17.4.2009 அன்று எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் மீது கொலைவெறித் தாக்குதல் தொடுத்திட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் செயல்படாதிருப்பதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(14) 18.4.2009 அன்று திமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்துக்காக மக்கள் தொடர் அலுவலரின் அலுவலகம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(15) 22.4.2009 அன்று மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினரால் டோக்கன்கள் அளிக்கப்பட்டதற்கு எதிராக தரப்பட்ட முறையீடு.
இந்த முறையீடுகளில் பல மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலருக்கு அவ்வப்போது அளிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய விதத்தில் எந்த நடவடிக்கையும் தேர்தல் அலுவலரால் இதுவரை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இவ்வாறு சட்டவிரோத தேர்தல் உத்திகளில் ஈடுபட்டுள்ள கயவர்களுக்கு மேலும் தைர்யம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலர், மாநகரக் காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் தொடர்பு அலுவலர் உடனடியாக அங்கிருந்து மாற்றப்படவில்லை என்றால், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவே மாறிடும்.
எனவே, தேர்தல் ஆணையம், மதுரைத் தொகுதியில் நடைபெறும் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நேர்மையான, நடுநிலை வழுவாத அதிகாரிகளை அங்கு தேர்தல் பணியில் அமர்த்திடுமாறும் கேட்டுக்கொள்கிறோம். அரசு எந்திரம் அங்கே துஷ்பிரயோகம் செய்யப்படுவதாலும், சட்டவிரோதமான பண பலம் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதாலும் சிறப்புப் பார்வையாளர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
(ச.வீரமணி.)

மே தின சபதம் ஏற்போம்



மே முதல் தினம். உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தால் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படக்கூடிய தினம், மே முதல் தினமாகும்.
இந்த மேதினம் கொண்டாடப்படுவது எவ்வாறு தொடங்கியது, அது இந்தியாவில் முதன்முதலில் எப்போது கொண்டாடப்பட்டது என்பதைச் சற்றே ஆராய்வோம்..
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தொழிலாளிகள் வர்க்கமாய் திரளாத சூழலில் முதலாளித்துவம் தனது கொடுங்கரங்களால் தொழிலாளிகளை மொத்தமாக சுரண்டி கொழுத்தது. அப்போது தொழிலாளிகளின் சராசரி ஆயுட் காலம் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமேயாகும்.
தொழிற்புரட்சி கண்ட இங்கிலாந்தில் தொழிலாளிகளின் நிலை படு பாதாளத்தில் இருந்தது. வயது வித்தியாசம், பால் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் 16 மணி நேரம், 18 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. மூன்று வயது குழந்தைகள் கூட 12 மணி நேரம் உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். சோர்ந்து தூங்கிவிடும் குழந்தைகளுக்கு சாட்டையடியே கூலியாகக் கிடைத்தது. தொழிலாளிகளின் இத்தகைய நிலையை எதிர்த்து 1836இல் “சாசன இயக்கம்” உருவானது.. இந்த இயக்கமே உலகின் பெருந்திரள் தொழிலாளிகளை கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக உருவெடுத்தது.
10 மணி நேர வேலை, அனைவருக்கும் வாக்குரிமை, பாராளுமன்றத்தில் ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் பங்கேற்பு முதலிய கோரிக்கைகளை முன்வைத்து 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இதைத் தள்ளுபடி செய்து விட்டது. சாசன இயக்கத்தினர் இரண்டாவது முறையாக 30 லட்சம் கையெழுத்துக்களை பெற்று மீண்டும் சமர்ப்பித்தனர். தொழிலாளிகளின் ஒன்றுபட்ட போராட்டம் வளர்ந்து வருவதை கண்ட பிரிட்டன் முதலாளித்துவ வர்க்கம் பெயரளவுக்கு 1847இல் 10 மணிநேர சட்டத்தை கொண்டு வந்தது. இது தொழிலாளிகளின் தொடர்ச்சியான இயக்கத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
1850களில் மார்க்சும், ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது, சாசன இயக்கத்தினருடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டி வந்தனர். மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் முயற்சியால், “கம்யூனிஸ்ட் புரட்சிக்காரர்களின் சர்வதேசக் கழகம்” உருவாக்கப்பட்டது.
1856இல் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் - விக்டோரியாவில், கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்தான் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக் கங்களை இணைத்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு “ 1886 மே 1, அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது”. இவ்வியக்கமே ‘மே தினம்’ பிறப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்த சமயத்தில், மார்க்சும் - ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். 1847ஆம் ஆண்டு “நீதியாளர் கழகம்” என்ற பெயரில் செயல் பட்டு வந்த அமைப்பு, மார்க்ஸ் - ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு, அவர்களை தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படை யில் மார்க்சும் - ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, இவ்வமைப்பின் பெயரை “கம்யூனிஸ்ட் லீக்” என்று மாற்றினர்.
அத்துடன் நீதியாளர் கழகத்தின் உறுப்பினர் அட்டைகளில் “அனைத்து மனிதர்களும் சகோதரர்களே” என்ற கோஷம் இடம் பெற்றிருந்ததை அகற்றி விட்டு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற புரட்சிகரமான முழக்கத்தை முன்வைத்தனர்.
கம்யூனிஸ்ட் லீக்கின் அறைகூவலுக்கு ஏற்ப உருவாக்கப் பட்டதே மார்க்ஸ் - ஏங்கெல்சின் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.” மார்க்சும், ஏங்கெல்சும் இத்துடன் நிற்காமல், 1864இல் முதல் அகிலம் என்று அழைக்கப்பட்ட, சர்வதேச தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்தினர். இவ்வமைப்பு உலகின் பல நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்க பிரதிநிதிகளை உள்ளடக்கி இருந்தது. 1865இல் ஜெனிவாவில் நடைபெற்ற முதலாம் அகிலத்தின் மாநாட்டு பிரதிநிதிகளிடையே உரையாற்றிய மார்க்ஸ்,
“...வேலை நிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புகளின் போது முதலாளிகள் வெளி நாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதி செய்யக்கூடாது; எட்டு மணிநேர வேலைதான் வேண்டும்; குழந்தைகளுக்கும் குறைந்த வயதினருக்கும் வேலை நேரத்தைக் குறைத்திட வேண்டும்....”
என்று தொழிலாளி வர்க்கத்தின் அக்கால நிலைமைக்கு ஏற்ப கோரிக்கைகளை முன்வைத்தார். இக்கோரிக்கைகளை வென்றெடுக்க உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாடுபட முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அத்துடன் “...சட்டப்பூர்வமான வேலை நேரம் என்பது அடிப்படையானது; இதில் முன்னேற்றம் இல்லாமல், வேறு சமூக முன்னேற்றம் காண்பது அரிது...” என்று கூறி 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை உலகளவில், தொழிலாளர் இயக்கங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முழங்கினார்.
8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம். இவையே தொழிலாளிகளின் முதல் தேவையாக இருந்தது. ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு,’ தொழிலாளர்களிடையே ஓங்கி வளர்ந்த போராட்ட உணர்வை நெறிப்படுத்தி, ஒருங்கிணைத்தது.
அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளான 8 மணிநேர வேலை கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய முறையில் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் 1886 மே 1 அன்று பேரெழுச்சியோடு துவங்கின.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. சிக்காகோவில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
8 மணி நேர வேலைக்கான இயக்கம் அமெரிக்காவில் வீறு கொண்டு எழுந்தது. 1886 மே 3- அன்று “மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் ஆகஸ்ட் ஸ்பைஸ் எழுச்சி மிகு உரையாற்றினார். கூட்டம் அமைதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், பெரும் போலீஸ் படை கூட்டத்தை முற்றுகையிட்டதோடு, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டது. 4 தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
இச்செய்தி நகரெங்கும் பரவியதையொட்டி, சிகாகோ மக்கள் பெரும் கோபாவேசத்திற்கு ஆளாயினர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று கண்டனக் கூட்டம் நடத்தி மிகத் துரிதமாக தொழிலாளர்கள் திட்டமிட்டனர்.
1886 மே 4 ஹே மார்க்கெட் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் மெக்கார்மிக்கில் நடைபெற்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆகஸ்ட் ஸ்பைஸ் , ஆல்பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் பேசத் துவங்கும் போது, போலீசார், கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, அனைவரையும் கலைந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இந்த சமயத்தில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது; இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார். உடனே போலீஸ் படை கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்றைக்கும் வெளி வராத மர்மமாகவே இருக்கிறது. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஹே மார்க்கெட் சதுக்கமே சிவந்தது.
போலீசார் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் எந்தக் கட்டத்திலும் போலீஸார் மீது வெடிகுண்டை வீசியது யார் என்று நிரூபிக்கப்பட வில்லை.
இவ்வழக்கின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ”நம்முடைய நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு, இது போன்றவர்களை தூக்கி லேற்றுவதுதான் முன்னுதாரணமாக இருக்கும்” என்று கூறி 7 பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்புக் கூறினார்.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிஸ்ட் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஏங்கெல்ஸ் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிகாகோ சதியை கண்டித்து, 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்தே மே முதல் நாள் மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் சிங்காரவேலர் இந்தியாவிலேயே முதன் முதலில் 1923இல் மேதினத்தை கொண்டாட திட்டமிட்டார். அந்த அடிப்படையில் 1923 மே 1 அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமிசர்மா தலைமையிலும் மே தினக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய சிங்காரவேலர், 8 மணி நேர வேலையை சட்டமாக்கவேண்டும் என்று அறைகூவினார். அதன் பின் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும் மே தினம் தொழிலாளர் வர்க்கத்தால் மிக எழுச்சியோடு நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு மே தினமும், உலகத் தொழிலாளிகளை எழுச்சிக் கொள்ளச் செய்யும் - அடிமை விலங்குகளில் இருந்து விடுவிக்கும்.
நாமும் மேதினி சிறக்க இம் மேதினத்தில் சபதமேற்போம்.
..
ச.வீரமணி

Sunday, April 26, 2009

விலையிலா வாக்குகளால் விடையளிப்பர் தமிழ் மக்கள்! - உ.ரா.வரதராசன்

கம்யூனிசம் மட்டும் பிடிக்குமே தவிர
கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்கவே பிடிக்காதென
'அருள்வாக்கு' நல்கிய அறிவாலயத் தலைவர்
பெருந்தொலைவு சென்று சீனத்தையே குறி வைத்தார்!
உலகத்து நாடுகளெல்லாம் உருண்டோடி வந்து
இலங்கையில் போர் நிறுத்த ஆயத்தம் ஆயினராம்!
ஐநா சபைதனிலே அறிவிக்கை வெளியாகியதை
சீனா தலையிட்டுத் தடுத்ததோடு,
தீவிரவாதிகளைத் தீர்த்துக் கட்டு என்றதாம்!
கூவி அரற்றிக் கவிதை தீட்டுகையில்
இரட்டை வேடக் கம்யூனிஸ்ட்டுகளெனப்
பட்டம் சூட்டிப் பரிகசிக்கிறார்!
சர்வதேச அரங்கில் நடந்ததொன்று; இங்கு
தேர்தல் களத்தில் திரித்துரைப்பது வேறொன்று.
கலைஞருக்கு இது வாடிக்கை என்றாலும்,
தொலைதூரம் சென்று பதில் தேட வேண்டாம்.
தாயே என்று இவர் இறைஞ்சிய சோனியாவின்
மேவு புகழ் மைந்தன் ராகுல் பேச்சு இது:
`எந்தை ராஜீவை மட்டுமின்றி, அப்பாவி மக்களையும்
சிந்தையில் கருணை ஏதுமின்றிக் கொன்றிட்ட
பயங்கரவாதிகளே விடுதலைப்புலிகள்; அவர்களை நயந்து ஆதரிக்க நாம் தயாரில்லை.'
இளவரசரின் இந்தப் பேச்சு இனிக்கிறது; கண்கள் குளமாகப் பாசப் பெருக்கெடுத்து, பாராட்டும் தொடர்கிறது!
காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் அமெரிக்காவோடு
பாங்காகக் கூட்டு வைத்து, பயங்கரவாதத்தைப்
பார் முழுவதும் எதிர்த்துப் போர் நடத்த ஒப்பியதை
ஊர் அறியும்; உலகறியும். விடுதலைப்புலிகள் மீது
ஈராண்டுக்கு ஒரு முறை தடையாணை விதிக்க, பாரத நாடாளும் அமைச்சரவையில் கைதூக்கி
ஆதரவு அளித்தனரே அறிவாலய உடன்பிறப்புகள்;
பாதகமல்ல அது; 'இடதுசாரிகள் தமிழருக்கு
சாதகமாய் முடிவெடுக்கக் குரல் கொடுப்பதுதான் தீது', என
முத்தமிழ் அறிஞர் கவிதை தீட்டி வித்தகம் காட்டினால் கைகொட்டிச் சிரியாரோ? பொய்யை அடுக்கியே பொழிப்புரை எழுதும் கலைஞர் பெருமானே, உமது பழிப்புரைக்கு
விலையிலா வாக்குகளால் விடையளிப்பர் தமிழ் மக்கள்!

பாஜகவின் நயவஞ்சக நாடகம்!




பாஜக தன்னுடைய ‘‘தொலை நோக்குக் கொள்கைகளை’’ தவணை முறையில் வெளியிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உலகப் பொருளாதார மந்தத்தை அடுத்து, கட னைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துதல்போல் தங்கள் கொள்கை களையும் மாற்றி அமைத்துக் கொண்டி ருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத் தை அடுத்து அதனை எதிர்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்துச் சரி யான பார்வை தங்களுக்கு இல்லாதது இதற்குக் காரணங்களாக இருக்கலாம். அல்லது, மக்களுக்கு தாங்கள் முன்பு அளித்த உறுதிமொழிகளிலிருந்து முரண் படுவதற்கும் மாற்றிச் சொல்வதற்கும் இது வசதியாக இருக்கும் என்று கருது வதும் கூட இதற்குக் காரணங்களாக இருக்கலாம்.

இப்போது வெளிவந்துள்ள பாஜக-வின் தேர்தல் அறிக்கையானது ஏராள மான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந் தாலும், இதற்குமுன் அவர்கள் அளித் திட்ட தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள அம்சங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இரு அம் சங்கள் குறித்து நாம் எதுவும் சொல்லா மல் இருக்கமுடியாது. முதலாவதாக, 1998க்கும் 2004க்கும் இடையில் அவர் கள் அரசாங்கத்தை நடத்திய காலத்தில் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து அவர்களுக்கிருந்த அணுகு முறை இதில் மறுதலிக்கப்பட்டிருக்கிறது. அப்போது அவர்கள் பொதுத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளைப் படிப்படியாகச் செய் வதற்கென்று ஓர் அமைச்சகத்தையே (ஆinளைவசல கடிச னளைinஎநளவஅநவே) உருவாக்கி இருந்தார்கள். அப்போது நடைபெற்ற ஊழல்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அடித்த கொள்ளைகளை எல்லாம் நினைவுகூருங்கள். 2004இல் ஐமுகூ ஆட்சிக்கு வந்த சமயத்தில் இடதுசாரிகளிடமிருந்து வந்த நிர்ப்பந் தத்தின் காரணமாக, ஐமுகூ அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கையே, அந்தத் துறையை ஒழித்துக் கட்டியது தான்.

இப்போது பாஜக வெளியிட்டிருக்கும் தொலைநோக்கு ஆவணத்தில், அவர்கள் கூறுவது என்ன? ‘‘ கடந்த பல ஆண்டு களாக நன்கு கட்டி வளர்க்கப்பட்டுள்ள இந்தியப் பொதுத்துறையானது நம் நாட் டின் பெருமைமிகு சிறப்பம்சமாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங் கம் பொதுத்துறையை வலுப்படுத்தும், இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதனைப் பயன் படுத்திக் கொள்ளும். அதே சமயத்தில், இதில் தனியார் துறையும் பங்கெ டுத்துக் கொள்வதற்கான வகையில் தனியார் துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் முழு மையாக அளிக்கப்படும். அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு (ஞரடெiஉ-ஞசiஎயவந ஞயசவநேசளாiயீ) அடிப்படையில், அரசாங்கத்தின் துறைகளை வளர்த்திட, அரசாங்கம் முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.” இது எப்படி இருக்கிறது? நாம் முன்பே சொன்னதுமாதிரி, பாஜக தங்களுடைய முந்தைய நிலைபாட்டிலிருந்து தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டிருக்கிறது. பொதுத்துறையைச் சார்ந்திருக்கும் வாக்காளர்களை முழுமையாக ஏமாற்றி அவர்களது வாக்குகளை அபகரிக்கும் முயற்சி என்பதைத் தவிர இது வேறொன்றுமில்லை.

இவர்கள் கூறுவதில் உள்ள இன் னொரு முக்கிய அம்சம், அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு என்பதாகும். காங் கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சி களுமே இதனைத் தூக்கிப் பிடிக்கின்றன. ஆயினும், கடந்த காலங்களில் நமக்கு ஏற் பட்டுள்ள அனுபவம் என்ன? விமான நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு, அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு முறையில்தான், ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண் டார்கள். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தனியார் துறையினர், தாங்கள் போட்ட கணக்கு அனைத்தும் தப்புக்கணக்காய் மாறிப்போனதாலும், உலகப் பொருளாதார மந்தத்தை அடுத்து, விமானப் போக்கு வரத்தில் பயணிகள் வரவு மிகவும் குறைந்துபோனதாலும், அவர்கள் கடும் நஷ்டத்தை அடைந்தனர். விளைவு, அத னை விமானப் பயணிகள் தலையில் கட்ட அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கி றது. பெங்களூர் மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் அநியாயமான அளவிற்கு லெவி ஒவ்வொரு பயணியிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது. இதுதான் அர சாங்கம் - தனியார் ஒத்துழைப்பில் உள்ள சூட்சுமம். அதே சமயத்தில் அரசாங்கம் நடத்திடும் விமான நிலையங்கள் நிலை மை என்ன? அவை நட்டத்தில் இயங்கி னாலும் கூட அதன் சுமையை பயணிகள் தலையில் கட்ட அனுமதிக்கப்படுவதில் லை. இவ்வாறு, பாஜக-வின் தொலை நோக்குப் பார்வையானது, மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதற்கான ஒன்று என்பது தெளிவு.

இவ்வாறு நேரத்திற்கு ஏற்றாற்போல, பேசுவதென்பது பாஜகவின் நடைமுறை என்பது, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தங்கள் நிலைபாட்டை அவர்கள் முற்றிலுமாக மாற்றிக் கொண்டி ருப்பதிலிருந்து தெளிவாகிறது. 2007 நவம்பர் 28 அன்று, மக்களவையில் இந் திய - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று அத்வானி கூறியதாவது:

“123 ஒப்பந்தமானது, தற்போதுள்ள நிலையில், நாட்டிற்கு உகந்ததல்ல, ஏற்றுக்கொள்ளத் தக்கதுமல்ல. ஏனெ னில் இது இந்தியாவின் கேந்திரமான மற் றும் நீண்டகால நலன்களுக்கு விரோத மானது. மீண்டும் தேஜகூ ஆட்சிக்கு வந் தால், இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மறு பரிசீலனைக்கு உட்படுத்துவோம். இதில் உள்ள நாட்டின் நலன்களுக்கு விரோத மான அம்சங்கள் அனைத்தும் நீக்கப் படும், அல்லது இந்த ஒப்பந்தமே முழு மையாக ரத்து செய்யப்படும்.’’

ஆனால், இப்போது அவர் என்ன கூறுகிறார்? “அரசாங்கம் என்பது தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நடைமுறையைக் கொண்டதாகும். அயல்நாடுகளுடன் முந்தைய அரசாங் கங்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங் களை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந் துவிட முடியாது.” ஒப்பந்தத்தை “முழு மையாக” ரத்து செய்வதிருக்கட்டும், இதனை “மறுபரிசீலனைக்கு” உட்படுத் தக்கூட இவர்கள் தயாராயில்லை. அதே போன்று, “மறுபரிசீலனை” என்கிற வார்த் தை, பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் எந்தப் பக்கத்திலும் காணப்படவில்லை.

இவ்வாறாக, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, தங் களுடைய அமெரிக்க ஆதரவு நிலைப் பாட்டை மூடிமறைத்திடும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாஜக நாட்டை தவறான பாதையில் இட்டுச் செல்கிறது என்பது தெளிவு. இன்னும் சரியாகச் சொல்வ தென்றால், பாஜக தலைமையிலிருந்த தேஜகூட்டணி அரசாங்கம்தான், அமெ ரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியா ராணுவரீதியான கூட்டணியை ஏற்படுத் திக் கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிய ஒன்றாகும். இவர்கள் ஆட்சி யிலிருந்த காலத்தில்தான் இஸ்ரேலுட னான உறவுகள் மேலும் வலுப்பட்டன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவரு டியாக, தேஜகூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை, மன் மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமும் மிகவும் நன்றாகவே தொடர்ந்து செயல்படுத்தியது.

பாஜகவின் நயவஞ்சக விளையாட் டுக்கள் இவ்வாறு தொடர்கின்றன. மக் களிடம் வெளியே சொல்வதற்கு முற்றி லும் விரோதமான வகையிலேயே அவர் களின் உண்மையான நிகழ்ச்சிநிரலும் உள்ளார்ந்த எண்ணங்களும் இருந்திடும். இதற்கு சரியான உதாரணம், அரசியல மைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை ஏற்றுக் கொள்வதாகக் இவர்கள் கூறுவதை குறிப்பிடலாம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஓர் அரசியல் அங்கமாகச் செயல்படும் இவர்களுக்கு, இக்குடியரசை, வெறி பிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச “இந்து ராஷ்ட்ர”மாக மாற்ற வேண்டு மென்பதே குறிக்கோளாகும். தெளிவான இந்தக் காரணத்திற்காகத்தான் இவர்கள் எவ்விதத்திலும் ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்கிறோம். எனவே தான், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்தை அமைத்திட, இந்திய மக்கள் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை அமைத் திட வேண்டும் என்று கோருகிறோம்.

தமிழில்: ச.வீரமணி

Saturday, April 25, 2009

SITARAM

sitaram

sitaram

ttp://www.youtube.com/watch?v=_OtUVoGAD5I&layer_token=e220fcc02340d943

டார்ஜிலிங் தொகுதியில் மக்கள் வாக்களித்திட உரிய பாதுகாப்பினை தேர்தல் ஆணையம் அளித்திட வேண்டும்:சீத்தாராம் யெச்சூரி கடிதம்

புதுடில்லி, ஏப். 25-
மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் தொகுதியில் மக்களவைத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற, அனைத்துப் பாதுகாப்பு உதவிகளையும், தேர்தல் ஆணையம் அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் தந்துள்ளார்.
அதன்பின் புதுடில்லியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:
‘‘இன்று நான் தேர்தல் ஆணையத்தை சந்தித்ததற்கான அடிப்படைப் பிரச்சனை டார்ஜிலிங் தொகுதியில் உள்ள நிலைமைகள் குறித்து விளக்குவதற்காகும். வெகு நீண்ட காலத்திற்குப் பின்னர் பொது மக்கள்பேரணி இப்போது அங்கே நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு நல்லம்சம். இதுநாள்வரை அப்பகுதியில் கூர்க்கா தனிநாடு கோரி இயக்கம் நடத்தி வந்த கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா இயக்கத்தினர் அப்பகுதியில் வேறெந்த அரசியல் கட்சிகளின் பேரணிகளும் நடத்திட முடியாதவாறு மக்களை அவர்கள் மிரட்டி வந்தனர்.அந்நிலை இன்று மாற்றப்பட்டிருப்பதற்கு முதற்கண் தேர்தல் ஆணையத்தினைப் பாராட்டுகிறேன்.
சமீபத்தில் நான் அங்கு தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டேன். அங்குள்ளமக்களைக் கலந்து பேசினேன். அவர்கள் அங்குள்ள பிரத்யேகமான சூழ்நிலைகளை என்னிடம் தெரிவித்தார்கள். பிரிவினை சக்திகள், தாங்கள் யாருக்கு வாக்களிக்கக் கோருகிறோமோ, அவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றும், தாங்கள் அளித்திடும் வாக்கு யாருக்கு அளித்தீர்கள் என்பதைத் தாங்கள் கண்டுபிடித்துவிடுவோம் என்றும் மீறி வேறெவர்க்கேனும் வாக்களித்திருந்தால் சும்மாவிடமாட்டோம் என்றும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
இதனை அடுத்து தேர்தல் ஆணையம், மேற்படி மக்களுக்கு உரிய தைர்யத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மக்கள் மத்தியில், தாங்கள் அளிக்கும் வாக்கு ரகசியமானது என்றும் தாங்கள் எவருக்கு வாக்களித்தீர்கள் என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்று தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். மலைப்பகுதிகளில் மத்திய ரிசர்வ் படையை அனுப்பி, கொடிப் பேரணிகள் (கடயப அயசஉhநள) நடத்தி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திட வேண்டும்.
அப்பகுதியில் இயங்கிவரும் கூர்க்கா படை (ழுடிசமாய டுயனே ஞநசளடிnநேட) என்னும் தனியார் ராணுவத்தினர், ராணுவத்தினரைப் போல் நடந்து கொண்டு மக்களை மிரட்டி வருகின்றனர். இத்தனியார் படை உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்.
மத்திய ரிசர்வ் படை தேர்தலுக்குப் பின்பும் சிறிது காலத்திற்கு அப்பகுதியில் நீட்டித்திருக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இதனை ஆய்வு செய்துபார்த்துவிட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தேர்தல் ஆணையர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
தற்போது டார்ஜிலிங் தொகுதியில் உள்ள நிலைமை குறித்து சற்றே விளக்கமாகக் கூறுமாறு செய்தியாளர்கள் கேட்டபோது, அங்கே பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் போட்டியிடுகிறார் என்றும், இவருக்கு கூர்கா தனிநாடு கோரும் இயக்கம் ஆதரவு அளிக்கிறது என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூர்க்கா தனிநாடு அளித்திடுவோம் என்று அவர்களிடம் ஜஸ்வந்த்சிங் உறுதி அளித்துவருகிறார் என்றும், ஆனால் அதே சமயத்தில் மேற்கு வங்க பாரதிய ஜனதாக் கட்சியானது, தாங்கள் பிரிவினைக்கு எதிராக இருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறது என்றும் இவ்வாறு பாஜக ஒரு நிலை எடுத்திருக்கிறது, ஆனால் அதன் தலைவர் பிரிவினை சக்திகளுடன் இணைந்து நின்றுகொண்டு வேறு நிலை எடுத்திருக்கிறார் என்றும் சீத்தாராம் கூறினார்.
(ச.வீரமணி)

Friday, April 24, 2009

இலங்கை அரசு உடனடியாகப் போரை நிறுத்திட வேண்டும் -இந்திய அரசு, இதற்கு இலங்கை அரசை நிர்ப்பந்தித்திட வேண்டும்: பிரகாஷ் காரத்



புதுடில்லி, ஏப். 24-
இலங்கை அரசு, உடனடியாகப் போரை நிறுத்திட வேண்டும், இதற்கு இந்திய அரசு, இலங்கை அரசை நிர்ப்பந்தித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் வெள்ளியன்று மாலை செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசியல் தலைமைக்குழு சார்பில் செய்தி அறிக்கையை வெளியிட்டு, பிரகாஷ்காரத் கூறியதாவது:
‘‘இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் போரில் சிக்கிக்கொண்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சொல்லொணா அவலத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பாதுகாப்பு கவுன்சில், இலங்கை அரசாங்கத்தை உடனடியாகப் போரை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறது. இதற்கு இலங்கை அரசு செவி சாய்க்க வேண்டும். போரை உடனடியாக நிறுத்திட வேண்டும், எல்டிடிஇ-இனரால் வலுக்கட்டாயமாக இருத்தி வைக்கப்பட்டுள்ள மக்களையும் பாதுகாத்திட வேண்டும். எல்டிடிஇ-இனர் மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில் அவர்களிடமிருந்தும் போர் நிறுத்தத்திற்கான அறைகூவல் வர வேண்டும் என்று இலங்கை அரசு எதிர்பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முகாமிட்டுள்ள பகுதிகளில் செஞ்சிலுவை சங்கம் உட்பட அனைத்து நிவாரணக் குழுக்களையும் அனுமதித்திட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது இப்போது நம்முன் உள்ள தலையாயக் கடமை என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. எல்டிடிஇ-இனரும் தங்கள் பயனற்ற எதிர்ப்பினை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய அரசாங்கமானது, தன்னுடைய அயல்துறைச் செயலாளரையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. இவர்கள் மூலமாக இந்திய அரசு, இலங்கை அரசாங்கத்தை மேலும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இலங்கை அரசாங்கத்திடம் போரை உடனடியாக நிறுத்திடுமாறும், எல்டிடிஇ-இனரிடம் நிராயுதபாணியாகி சரணடைந்திடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கடுமையாக இருப்பதால், அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவிடும் வகையில் சர்வதேச உதவி அமைப்புகள் வருவதற்கு இலங்கை அரசு அனுமதித்திட வேண்டும். இவற்றை இலங்கை அரசு நிறைவேற்றிட, இந்திய அரசு அதிகபட்ச அளவிற்கு நிர்ப்பந்தத்தை அளித்திட வேண்டும்.
எல்டிடிஇ சரணடைந்தால்தான் போர் நடவடிக்கைகளை நிறுத்துவோம் என்று இலங்கை அரசாங்கம் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. எல்டிடிஇ வலுவிழந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவும் வகையில் அரசு போரை நிறுத்திட வேண்டும். இது மிகவும் அவசரமாகச் செய்யப்பட வேண்டும். இவ்வாறு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள இந்திய அரசு தலையாய முன்னுரிமை கொடுத்திட வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
இலங்கை அரசு போர்நிறுத்தம் (ceasefire) செய்ய முன்வர வேண்டும் என்று ஏன் கோரவில்லை என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, போர்நிறுத்தம் (ceasefire) என்பது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் உடன்பட்டு மேற்கொள்வது என்றும், எல்டிடிஇ-இனர் இதற்கு உடன்படாத நிலையில் இவ்வாறு செய்ய முடியாது என்றும் எனவேதான் எல்டிடிஇ-இனர் உடன்படாவிட்டாலும், போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போர் இடை நிறுத்தம் (cessation of hostilities) என்கிற வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருக்கிறோம் என்றும் பிரகாஷ் கூறினார்.
(ச.வீரமணி.)

Monday, April 20, 2009

தயாநிதி மாறன் முன் சில கேள்விகள்





எங்கள் தொகுதி வேட்பாள ராக மீண்டும் களமிறங்கியுள்ள சன் டிவி, தினகரன், குங்குமம், சூரியன் எப்எம் இன்னும் இதர பலவற்றின் உரிமைப் பங்குதாரரான தயாநிதி மாறன் அவர்களுக்கு, வணக்கம்.மத்திய, மாநில அரசின் சாத னைகளைக் கூறி மக்களிடம் வாக்குகளை கேட்டு வருவதாக அடிக்கடி சன் டிவியில் தோன்றி பேட்டியளித்து வருகிறீர்கள். அப் பாவி வாக்காளர்களாகிய எங்க ளுக்கு இப்போது சில சந்தேகங் கள் எழுகின்றன. விளக்கமளித்து எம் குழப்பத்தைப் போக்குவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் சில கேள்விகள்...மதுரை தினகரனில் 3 அப்பாவி உயிர்கள் தீயில் எரிந்து கருகிப் போனதே... ஏன் சார்? அக்கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தராமல் ஓய மாட்டோம் என நீங்களும், உங்கள் சகோதரர் கலாநிதி மாறனும் தொலைக்காட்சி கேமிரா முன்பு சபதமெல்லாம் மேற்கொண்டீர் களே... அது என்னாச்சு சார்?கடந்த நாடாளுமன்றத் தேர்த லை அடுத்து மத்திய அமைச்ச ராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நீங் கள், இடையில் அமைச்சரவை யில் இருந்து நீக்கப்பட்டீர்களே... ஏன் சார்?சில தினங்களுக்கு முன்பு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறையில் மெகா ஊழல் என்று பக்கம் பக்கமாக தினகரனிலும், மணிக்கொரு முறை சன் நியூ சிலும் பரபரப்பாக செய்தி வெளி யிடப்பட்டதே... அவையெல்லாம் இப்போது காணாமலும் போனதே... ஏன் சார்?அறிவாலயத்தில் செயல்பட்டு வந்த சன்டிவி அலுவலகம், காலி செய்துவிட்டு போனபோது, அலுவ லக கட்டிடங்களை பாழாக்கி விட்டு சென்றனர் என்று படங்களு டன் முரசொலித்து பறைசாற்றப் பட்டதே... ஏன் சார்?இடையில் “நான் என்ன தவறு செய்தேன்? கழக வேட்பாளர் களுக்கு எதிராக அதிருப்தி வேட் பாளர்களை நிறுத்தினேனா?” என ஒரு நேரத்தில் சன்டிவியில் நேரடி பேட்டியெல்லாம் கொடுத்து அசத்தினீர்களே... ஏன் சார்?பாழாப்போன ஞாபக மறதியி னால் இதெல்லாம் உண்மையிலேயே உங்களுக்கு நினைவில் இல் லையா சார்... ஏதேதோ இலவச இணைப் புகள் கொடுக்கும் நீங்கள், இதற் கான விளக்கங்களையும் தினக ரன், குங்குமம் ஆகியவற்றில் இல வச இணைப்பாக வெளியிட்டால், படித்து பொது அறிவை வளப்படுத் திக் கொள்வோம் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்
தமிழக மக்களுக்காக
சென்னை மத்திய தொகுதி வாக்காளர்கள்.

Sunday, April 19, 2009

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம் -பாஜக கூறுவது மக்களை ஏமாற்றும் தந்திரமே-சீத்தாராம் யெச்சூரி சாடல்

புதுடில்லி, ஏப்ரல் 19-
ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் என்று பாஜக கூறுவது, தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்கான தந்திரமே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
தலைநகர் டில்லியில் சனிக்கிழமையன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் மற்றும் கள்ளப்பணம் இருப்பதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சம அளவில் பொறுப்பு உண்டு. இந்தியாவிலிருந்து இவ்வாறு பணம் கள்ளத்தனமாகக் கடத்திச் செல்லப்படுவதற்கு தேஜகூ அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளே காரணமாகும்.
இந்தியாவிலிருந்து இவ்வாறு இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பணத்தைக் கள்ளத்தனமாக எடுத்துச் செல்வதற்கு பாதை அமைத்துத்தந்த அதே பாஜக இப்போதுஅது தொடர்பாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறுவது என்னே விநோதம்?
பாஜக-வின் அறிக்கையின்படியே, இந்தியாவிலிருந்து அவர்கள் தலைமையில் தேஜகூ ஆட்சி நடைபெற்ற சமயத்தில்தான் சுமார் 55 பில்லியன் டாலர்கள் மதிப்பிலா இந்தியப் பணம் இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருக்கிறது.
பாஜக-வினரின் ஆட்சிக் காலத்தில்தான், மொரிசியஸ் மார்க்கம் வழியாக பார்ட்டிசிபேடரி நோட்ஸ் (Participatory Notes) என்னும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக அந்நிய முதலீட்டாளர்கள் ‘பினாமி’ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இவர்கள்தான் நீண்டகால மூலதன ஆதாய வரியை ஒழித்துக்கட்டினர். இவ்வாறு இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாகக் கறுப்புப் பணத்தை எடுத்துச் செல்ல அனைத்துவிதமான விதங்களிலும் அன்றைய தினம் உதவிவிட்டு இப்போது அதற்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டுள்ள பணம் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிப்ரவரியிலேயே ஐமுகூ அரசாங்கத்தை நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் அரசு அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. அந்தப் பணம் அனைத்தும் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியாவின் தொழில் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் அவை முதலீடு செய்யப்பட வேண்டும்.’’
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறிக்கை

புதுடில்லி, ஏப்ரல் 19-
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பல கோடி ரூபாய் கள்ளப்பணத்தையும், கறுப்புப் பணத்தையும் ரகசியமாகப் போட்டு வைத்திருப்பதற்கு பாஜக-வும் ஒரு காரணம் என்றும் எனவே அக்கட்சி அவ்வாறு இந்தியர்கள் பணத்தை இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல உடந்தையாக இருந்ததை பாஜக மறுத்திட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் சனிக்கிழமையன்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
‘‘எல்.கே. அத்வானி மும்பையில் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஸ்விஸ் வங்கிகளிலும் மற்றும் உலகின் பல்வேறு இடங்களிலும் இந்தியர்கள் கள்ளத்தனமாக பல கோடி ரூபாய் கறுப்புப்பணத்தை போட்டு வைத்திருப்பதாகவும் அதனை மீள இந்தியாவிற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஒரு படையை அமைத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அமெரிக்க, வாஷிங்டன்னைச் சேர்ந்த குளோபல் பைனான்சியல் இண்டக்ரிடி என்னும் அமைப்பின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பாஜக இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. ‘‘குளோபல் பைனான்சியல இண்டக்ரிடி அமைப்பின் ஆய்வானது, 2002க்கும் 2006க்கும் இடையிலான கால கட்டத்தில், ஒவ்வோராண்டும் சுமார் 27.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ரூபாய்கள் இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டுவரப் பட்டிருக்கிறது’’ என்று காட்டியிருக்கிறது. இது உண்மையானால், பாஜக ஆட்சியிலிருந்த 2002 முதல் 2004ஆம் ஆண்டுகளில் சுமார் 55 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரூபாய்கள் இந்தியாவிலிருந்து கள்ளததனமாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் எல்.கே. அத்வானிதான் நாட்டின் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர். அவ்வாறு அவர் அதிகாரத்திலிருந்த சமயத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக இந்தியர்கள் பணத்தைக் கொண்டுசெல்லாமல் தடுத்திட அவர் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்?
பாஜக-வின் அறிக்கையானது, சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் இவ்வாறு இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கிறது. பாஜக-வின் மதிப்பீட்டின்படியே பார்த்தாலும், சுமார் 164 பில்லியன் டாலர்கள் அல்லது நாட்டிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பில் 30 சதவீதத் தொகையானது, பாஜக தலைமையிலான தேஜகூட்டணி ஆட்சியின்போதே நடைபெற்றிருக்கிறது.
பாஜக ஆட்சியிலிருந்த காலத்தில் இவ்வாறு இந்தியர்கள் கள்ளத்தனமாகக் கறுப்புப்பணத்தை நாட்டிலிருந்து கடத்திச் செல்வதைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. வரி ஏய்ப்பைத் தடுத்திடும் ஒப்பந்தம் அதாவது இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை கோரியபோதிலும், அதனை பாஜக செய்ய மறுத்துவிட்டது. நாட்டிலிருந்து மூலதன ஆதாய வரி மற்றும் பன்னாட்டு வர்த்தக வரிகள் கள்ளத்தனமாகக் கொண்டு செல்லப்படுவதற்கு மொரிசியஸ் மார்க்கம் பெருமளவில் உதவி வந்திருக்கிறது. 2000 ஏப்ரலிலிருந்து 2008 நவம்பர் வரை, இந்தியாவிற்குள் வந்துள்ள அந்நிய நேரடி முதலீட்டில் சுமார் 44 சதவீதம் மொரிசியஸ் வழியாகத்தான் வந்திருக்கிறது. அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ள அந்நிய நேரடி முதலீடு என்பது முறையே வெறும் 8 மற்றும் 7 சதவீதம்தான். இந்திய வரிவிதிப்பிலிருந்து சூழ்ச்சிசெய்து தப்பித்துக்கொள்வதற்காகவே, அந்நியக் கம்பெனிகள் மொரிசியஸ் மார்க்கத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அம்சத்தைக் குறித்து பாஜகவின் அறிக்கை மவுனம் சாதிக்கிறது.
பாஜக-வின் அறிக்கையானது பார்ட்டிசிபேடரி நோட்ஸ் என்னும் பங்கேற்பு ஆவணங்கள் குறித்தும் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது. ‘‘இதன் மூலம் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிகள், இந்தியாவிலும் ஒரு ஸ்விட்சர்லாந்து இருந்திட அனுமதிக்கிறது. அவ்வாறு இந்தியாவில் ஒரு குட்டி-ஸ்விட்சர்லாந்து இருந்திட அனுமதித்தபின், ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட எப்படி இந்தியா கோர முடியும்?’’ ஆயினும், இவ்வாறு அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, பணப்பட்டுவாடா ஏற்பாடுகள் மூலமாக பணத்தை முதலீடு செய்திட அனுமதித்ததும் இதே பாஜக தலைமையிலான தேஜகூ அரசுதான். இவ்வாறு நாட்டிலிருந்து சென்ற பணத்தில் 50 சதவீதம் அளவிற்கு தேஜகூ ஆட்சியின்போது சென்றிருக்கிறது. உண்மை இவ்வாறிருக்கையில், இத்தகு கொள்கைகளை இன்றைய தினம் பாஜக விமர்சிப்பதில் என்ன நியாயமிருக்கிறது?
பார்ட்டிசிபேடரி நோட்ஸ் என்னும் பங்கேற்பு ஆவணங்களைத் தடை செய்திட வேண்டும் என்றும், நீண்டகால மூலதான ஆதாய வரியை மீளவும் கொண்டுவர வேண்டும் என்றும் அதன்மூலம் ஊகவர்த்தகர்களை ஊக்குவிக்கக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து கோரி வருகின்றன. ஆயினும் அதனை பாஜக தலைமையிலான தேஜகூ ஆட்சியும் செய்திடவில்லை. இப்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசும் ஊக வர்த்தக றிறுவனங்களைத் தாஜா செய்ய வேண்டுமென்பதற்காக இப்பிரச்சனைகள் தொடர்பாக எதுவும் செய்ய மறுத்துவருகிறது.
உலகப் பொருளாதார மந்தம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் செய்து வரும் வரி ஏய்ப்புகள் உலக அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக உலகில் உள்ள பல அரசுகள் இவற்றின்மீது நடவடிக்கைள் எடுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. ஸ்விஸ் வங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்கள் குறித்து விவரங்ளைத் தெரிவிக்குமாறு பணிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இந்திய அரசாங்கமோ இதுவரை உலகப் பொருளாதார மந்தத்திற்கும் தனக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்பது போல வெளியில் காட்டிக்கொண்டிருக்கிறது.
பாஜக இப்போது இவ்வாறு கோருவதற்கு இரு மாதங்களுக்கு முன்னாலேயே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, பிப்ரவரி 23 அன்றே, ‘‘ஐமுகூ அரசாங்கமானது ஸ்விஸ் வங்கிகள் மற்றும் உலகத்தின் பல வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணம் குறித்து விவரங்களைக் கோர வேண்டும் என்று கோரியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பரிவர்த்தனைகள் வரி ஏய்ப்பு மட்டுமல்ல மாறாக சட்டவிரோதமாக இந்தியப் பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்திச் சென்றிருப்பதுமாகும். உண்மையில் அரசு, கறுப்புப் பணத்தை வெளிக்கொணர வேண்டுமெனில், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமெனில், வெளிநாட்டில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணத்தை மீள இந்தியாவிற்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்’’ என்று கோரியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது:
* பங்கு பரிமாற்றத்தின் மீதான வரியை அதிகப்படுத்துதல் மற்றும் நீண்டகால முதலீட்டின் பெற்ற ஆதாயத்தின் மீதான வரியை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஊக முதலீட்டின் ஆதாயத்தின் மீது வரி விதிக்கப்பட வேண்டும்.
* பெரும் நிறுவனங்களுக்கு மேலும் வரிச்சலுகைகள் அளிப்பதை நிறுத்த வேண்டும். கறுப்புப் பணததை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஸ்விஸ் வங்கி உள்ளிட்ட பல நாடுகளில் வரி ஏய்ப்பு செய்து சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணத்தை வெளிக்கொணர வேண்டும்.
* மொரிசியஸ் வரி ஏய்ப்பு மார்க்கத்தை அடைக்க வேண்டும். மொரிசியஸ் மற்றும் பிற நாடுகளுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்திட வேண்டும். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பயன்படுத்தும் பங்கேற்பு ஆவணங்களைத் தடை செய்திட வேண்டும். நிதிச்சந்தை ஊக பேரத்தை மட்டுப்படுத்திட வேண்டும்.
* மூலதனக் கணக்கில் முழுமையான அந்நியச் செலாவணி மாற்றம் என்பதை நோக்கி எடுக்கப்படும் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும். உள்ளே வரும் மற்றும் வெளியேறும் நிதி மூலதனம் மீது முன்பிருந்து வந்ததபோல கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்திட வேண்டும்.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(ச.வீரமணி)

Saturday, April 18, 2009

இலங்கையில் உயிரிழந்து வரும் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி -36 அடி உயரத்திலிருந்து 18 செ.மீ. அளவுள்ள தண்ணீரில் குதித்து-கோவை காவலர் வேல்முருகன் கின்னஸ்

புதுடில்லி, ஏப். 18-
இலங்கையில் இலங்கைஅரசுக்கும் எல்டிடிஇ-இனருக்கும் இடையிலான போராட்டத்தில் சிக்கிக்கொண்டு, உயிரிழந்து வரும் லட்சக்கணக்கான தமிழர்களைப் பாதுகாக்கக்கோரி, உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக, வேல்முருகன் என்னும் காவலர் உலக அளவிலான கின்னஸ் சாதனை நிகழ்ச்சியினை மேற்கொண்டார். இந்நிகழ்பு புதுடில்லி, மந்திர்மார்க்கில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் மேல்நிலைப்பள்ளி விளையாட்டரங்கில் சனிக்கிழமை மதியம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறையில் கோவை மாவட்டம், வால்பாறை காவல்நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணியாற்றும் ஆர். வேல்முருகன், பல்வேறு உலக சாதனைகளைச் செய்துள்ளார். 157 கிலோ மீட்டர் காட்டாற்றில் இடைவிடாது நீச்சல், 15 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் ஓடியது உட்பட இதுவரை 14 உலக சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். இப்போது பதினைந்தாவது சாதனையாக 36 அடி உயரத்திலிருந்து 18 செண்டி மீட்டர் அளவள்ள தண்ணிர் வயிறில் படுவதுபோல் பாய்ந்து சாதனை புரிந்திருக்கிறார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் சிக்கம் என்பவர், 28 அடி உயரத்திலிருந்து 30 செ.மீ. அளவுள்ள தண்ணீரில் பாய்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இத்தகைய என்னுடைய உலக சாதனையை, இலங்கையில் போரில் சிக்கி இறந்து கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு அர்ப்பணம் செய்வதாகவும், இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணா துயரத்தை இந்திய அரசுக்கும், உலகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், தலைநகர் புதுடில்லியில் இந்நிகழ்வினை நடத்தியதாகவும் கூறினார்.
இந்நிகழ்விற்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலர் முகுந்தன், தில்லித் தமிழ்ச் சங்கப் பள்ளி செயலாளர் ஸ் வாமிமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
(ச. வீரமணி)

Friday, April 17, 2009

P Mohan on flood

நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச்சேதம் தொடர்பாக அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகன் பேசியது.

P Mohan on flood

நாடாளுமன்ற மக்களவையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பொ. மோகன் நாடாளுமன்றத்தில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பேசியது.

Monday, April 13, 2009

காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத - மாற்று அணிக்கு -ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது-பிரகாஷ்காரத்


பதினைந்தாவது மக்களவைக்கான முதல் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நடைபெறும் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதென்பது தெளிவாகியுள்ளது. காங்கிரசும், பாஜகவும் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சொல்லியதுபோல இது ஒன்றும் இரு அணிகளுக்கு இடையிலான தேர்தலாக இல்லை. மாறாக, காங்கிரஸ் அல்லாத, பாஜகஅல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து, காங்கிரசுக்கும், பாஜக-விற்கும் பல மாநிலங்களில் சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளன. காங்கிரசும் பாஜக தலைமையும் மூன்றாவது அணி மீது தாக்குதல்களைத் தொடுத்த பின்னணியில் இத்தகு நிலைமை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், மூன்றாவது அணியைத் தாக்கிக் கொண்டிருந்திருக்கிறார். தேர்தலுக்கு முன்னர் இவ்வாறு கூட்டணிகள் அமைப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்று அவர் கூறியிருக்கிறார். இத்தகைய கூட்டணிகளுக்கு கொள்கையோ திட்டமோ கிடையாது என்றும் இது நாட்டிற்குப் பேரிடர் ஏற்படுத்திவிடும் என்றும், கூறியிருக்கிறார். எல்.கே. அத்வானி, பாஜக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகையில், மூன்றாவது அணியை ஒரு ‘‘கேலிக்குரிய மாயை’’ என்று அழைத்திருக்கிறார்.
இவ்வாறாக, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து வருவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவற்றை மதிப்பிழக்கச்செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளும் ஆறு மாநிலக் கட்சிகளும் பல மாநிலங்களில் தேர்தல் உடன்பாடு கொண்டிருப்பதானது, காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் மாபெரும் சவாலாக எழுந்துள்ளதுதான், இவ்விரு கட்சிகளுமே மூன்றாவது அணியைத் தாக்குவதற்குக் காரணமாகும். அவர்கள் கூறுவதுபோல, மூன்றாவது அணி என்பது ஒரு மாயையாக இருந்தாலோ அல்லது கோட்பாடற்ற கதம்பக் கூட்டணியாக இருந்தாலோ, பின் ஏன் இவ்விரு கட்சிகளும் இந்த அளவிற்குத் தாவிக் குதிக்கின்றன?
இவர்களின் கோபத்திற்கான விடையை, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்வதன் மூலம் காண முடியும். 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில், காங்கிரசுக்கு 26.53 சதவீத வாக்குகளும், பாஜக-விற்கு 22.16 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இவ்விரு கட்சிகளின் வாக்குகளையும் இணைத்தால்கூட அது 48.67 சதவீதம்தான், அதாவது 50 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் வருகிறது. இவ்விரு கட்சிகளும், கணிசமான அளவில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளைத் தங்கள் பக்கத்தில் இருத்திக்கொள்ளவில்லையெனில், அவற்றின் வெற்றிவாய்ப்பு என்பது கானல் நீர்தான்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ஐமுகூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் பல அதனைக் கழட்டிவிட்டுவிட்டன. தமிழ்நாட்டில் மட்டும் திமுக-வுடனும், ஜார்கண்டில் ஜேஎம்எம்-உடன் ஒருவிதமான உடன்பாடும் கண்டிருக்கிறது. தேசியவாதக் காங்கிரசைப் பொறுத்தவரை, மகாராஷ்ட்ரா மற்றும் கோவாவில் மட்டும் உடன்பாடு கொண்டிருக்கிறது. மற்றமாநிலங்களில் அது காங்கிரசை எதிர்த்துப் போட்டியிடுகிறது. காங்கிரசின் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருந்த லாலு பிரசாத் யாதவ், பீகாரில் ராம் விலாஸ் பஸ்வானுடன் கைகோர்த்துக் கொண்டு, காங்கிரஸ் தற்போது தக்க வைத்துள்ள மூன்று இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன. உத்தரப்பிரதேசத்திலும், அதன் மற்றொரு கூட்டாளிக்கட்சியான, சமஸ்வாதிக் கட்சி, சோனியா மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் இரு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, ஒரிசாவில் பிஜூஜனதா தளத்திடமிருந்து வந்த தாக்குதலிலிருந்து அது இன்னமும் மீளவில்லை. இவற்றிற்கு முற்றிலும் மாறாக, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள், இடதுசாரிகளுடன் இணைத்து, பல மாநிலங்களிலும் வீறுகொண்டு எழுந்துள்ளன. ஆந்திராவில் தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தமிழ்நாட்டில் அஇஅதிமுக மற்றும் பாமக, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரிசாவில் பிஜூஜனதா தளம் ஆகியவற்றுடன் சேர்ந்து வலுவான கூட்டணிகளாக மாறியுள்ளன.
ஐமுகூ போலல்லாத, தேர்தலுக்கு முன்பே ஒரு வலுவான கூட்டணியாக இது மாறியிருக்கிறது. இது, தேர்தலுக்குப்பின்னர் மேலும் ஒரு முழுமையான வடிவத்தைப் பெறும். இவ்வாறாக, மூன்றாவது அணியில் உள்ள கட்சிகளின் கூட்டணியானது ஒரு யதார்த்தபூர்வமானதாக மாறியிருக்கிறது.
காங்கிரசும், பாஜகவும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. இவை ஒன்றையொன்று, தத்தம் தேர்தல் அறிக்கையை மற்றது காப்பியடித்துவிட்டதாகக் குறைகூறிக் கொண்டிருக்கின்றன யாரை, யார் காப்பியடித்திருக்கிறார்கள் என்பது மக்களைப் பொறுத்தவரைக்கும் தேவையில்லாத ஒன்று. ஆனால், குறித்துக்கொள்ளவேண்டிது என்னவென்றால், இவை இரண்டுமே, ஒரே மாதிரியானவை - அதாவது ஒரே மாதிரியான உறுதிமொழிகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டிருப்பவை என்பதாகும்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அளித்து வந்த எதிர்ப்பினை பாஜக விலக்கிக் கொண்டிருப்பதிலிருந்து இதனைத் தெளிவாகக் காண முடியும். பாஜக-வானது, அணுசக்தி ஒப்பந்தம் மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறது. 2008 ஜூலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது இத்தகு நிலைப்பாடு அவர்கள் மேற்கொண்ட ஒன்றாகும். ஆயினும், தேர்தல் அறிக்கையில், இந்தக் கோரிக்கையை பாஜக கைவிட்டுவிட்டது. பாஜக ஆட்சியிலிருந்த சமயத்தில், அயல்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், ஒருபடி மேலேயே சென்று, அரசாங்கங்கள் சர்வதேச ஒப்பந்தங்களை ரத்து செய்திட முடியாது என்றே கூறியிருக்கிறார். இவ்வாறாக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றுவதில் ஒத்த கருத்துடன்தான் இருக்கின்றன.
இத்தகைய பொதுவான அணுகுமுறை மற்ற பல அடிப்படைக் கொள்கைகளுக்கும் விரிவடைகின்றன. உதாரணமாக, காங்கிரசும் சரி அல்லது பாஜகவும் சரி, தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்துதல் குறித்து எதுவுமே கூறிடவில்லை. நாடாளுமன்றத்திற்கான தேர்தல்அறிக்கையில் காங்கிரஸ் கட்சியானது நிலச்சீர்திருத்தம் குறித்து எதுவுமே கூறாதது இதுதான் முதல்தடவை. நாட்டின் இரு முதலாளித்துவ கட்சிகளின் மத்தியில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் பிடிப்பு எந்த அளவிற்கு இருக்கிறதென்பதையும், நிலச்சீர்திருத்தம் குறித்து உதட்டளவில் கூறுவதற்குக்கூட அவை தயாராயில்லை என்பதையுமே இவை காட்டுகின்றன.
இரு கட்சிகளுமே மீண்டும் அனைவருக்குமான பொது விநியோகமுறையை அமல்படுத்தத் தயாரில்லை. இப்போது உள்ளதுபோன்ற மோசடியான வறுமைக்கோட்டுக்குக் கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்கிற பொது விநியோக முறையையே அமல்படுத்துவதைத் தொடரவும், இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினைரை பொது விநியோக முறைக்கு வெளியில் நிறுத்திடவும் அவை முடிவு செய்திருக்கின்றன என்பதும் அவற்றின் தேர்தல் அறிக்கைகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.
இரு கட்சிகளுமே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் இருக்கின்றன. அதனால்தான் அவை தங்கள் தேர்தல் அறிக்கைகளில், மத்திய மாநில உறவுகளை மறுசீரமைப்பு செய்யவேண்டியதன் அவசியம் குறித்து எதுவுமே சொல்ல வில்லை.
இவ்வாறாக இரு கட்சிகளுமே மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திட எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எனவேதான், மூன்றாவது அணி மக்கள் மத்தியில் வலிவும் பொலிவும் பெற்று மிகவும் வீறுகொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது.
(தமிழில்: ச.வீரமணி)

காங்கிரஸ் - பாஜகவின் கொள்கை கோட்பாடற்ற கதாகாலட்சேபங்கள்



காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாடும் நாட்டு மக்களும் எதிர்நோக்கியுள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது, அற்ப விஷயங்கள் குறித்து கதாகாலட்சேபங்கள் செய்து வருகின்றன. உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்தோ, அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் அளிப்பது குறித்தோ எதுவும் கூறாமல், இவ்வாறு அற்பவிஷயங்களை முன்வைப்பதுதான் தங்களுக்கு நலம் பயக்கும் என்று உண்மையிலேயே அவை கருதுகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடியால் ஒரு கோடிக்கும் மேலான வேலைகள் (jobs) பறிபோய்விட்டன. இதன் காரணமாக வேலையிழந்த தொழிலாளர்கள் தற்கொலைகள் செய்து கொள்வதென்பதும், தங்கள் குடும்பம் உயிர்வாழ வேண்டுமென்பதற்காகத் தங்களின் உடல் உறுப்புகளை விற்பது என்பதும் தொடர்கதையாகிவிட்ட நிலையில், இதைப்பற்றியெல்லாம் எதுவும் கூறாது, மக்களின் நேரடி வாழ்க்கையில் சம்பந்தப்படாத அற்ப விஷயங்களை இக்கட்சிகள் தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.
பாஜக-வானது, அது தன்னுடைய ‘இந்து வாக்கு வங்கியை’ ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக, மதவெறித் தீயை கூர்மைப்படுத்தும் வண்ணம் வெறுப்புப் பேச்சுக்கள் மூலமாக பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளன. இவ்வாறு பிலிபித்தில் பேசிய வருண் காந்தியையும், ஒரிசா மாநிலத்தில் கந்தமகால் தொகுதியில் பேசிய நபரையும் வேட்பாளர்களாக பாஜக நிற்க வைத்து அவர்களைப் பாதுகாத்திட முனைந்துள்ளது. கந்தமகால் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலக்கெடு முடிவடைந்தபின்னர், கிறித்துவ சிறுபான்மையினர் தாக்குதலுக்கு இட்டுச் சென்ற அத்தகைய வெறுப்புப் பேச்சைக் கக்கிய அவ்வேட்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாஜக-வானது தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்திருப்பதைப்போல மதவெறி நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களை விசிறிவிடத் தீர்மானித்திருக்கிறது.
இப்போது பாஜக-வின் சார்பில் பிரதமராக அறிவிக்கப்பட்டிருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பிரதமரும், ஒருவரை ஒருவர் மிகவும் இழிவான முறையில் வசை பாடிக்கொண்டிருக்கின்றனர். அத்வானி, மன்மோகன்சிங்கை மிகவும் பலவீனமான பிரதமர் என்று கூற, மன்மோகன் சிங், அத்வானி மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் மேற்கொண்ட தர்மசங்கடமான அம்சங்களை எடுத்துரைத்திருக்கிறார். கந்தகாரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் தான் கையறு நிலையிலிருந்ததாக அத்வானி கூறியது, கராச்சி சென்றிருந்தபோது ஜின்னா குறித்து கூறியது உட்பட இதில் அடங்கும். இதுவல்லாமல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாவும், அவரது மகன் ராகுலும் கூட பிரதமருக்கு ஆதரவாக நின்று, அத்வானி மீது வசைமாறி பொழிந்து கொண்டிருக்கின்றனர்.
உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக 75 லட்சம் வாக்காளர்களுடன் திகழும் இந்தியாவில் உள்ள பெரிய கட்சிகளாகச் சொல்லிக் கொள்ளும் இவைகள் நடத்திடும் கதாகாலட்சேபம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது? உலகப் பொருளாதார மந்தத்தால் விண்ணையெட்டியுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப்பற்றிக் கிஞ்சிற்றும் இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் நாள்தோறும் சாப்பாட்டிற்கே வழியின்றி திண்டாடும் நிலை குறித்து கொஞ்சமாவது கவலைப்பட்டார்களா?
மக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்தும் அவற்றிற்கு எங்ஙனம் நிவாரணம் அளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கக்கூடாது என்பதில் காங்கிரசும், பாஜகவும் மிகவும் தெளிவாக இருக்கின்றன. எனவேதான், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது மட்டும் கவனம் செலுத்திடும் வகையில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்து விடிவும், நல்லதோர் வாழ்க்கையும் தரக்கூடிய விதத்தில் அதற்காகப் போராடும் ஓர் அரசியல் மாற்று தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
இந்தப் பின்னணியில்தான், பிரதமர் மன்மோகன்சிங், கேரளாவில் தேர்தல் பிரச்சாரப் பயணம் செய்கையில், கம்யூனிஸ்ட்டுகள் மீது வசைமாறி பொழிந்திருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் எப்போதுமே வரலாற்றில் தவறான பக்கத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும் இடதுசாரிக் கட்சிகள் எடுத்து வைத்துள்ள விவாதங்கள் எதற்கும் அவர் பதிலளிக்காமல் இவ்வாறு விலகிச்சென்றிருக்கிறார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கம்யூனிஸ்ட்டுகள் சுதந்திரத்திற்கு எதிராக நின்றார்கள் என்று கடும் பிற்போக்கான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கம்யூனிஸ்ட்டுகளின் ‘பங்கு’ எவ்வாறானதாக இருந்தது என்பது குறித்து 1992 ஆகஸ்ட் 9 அன்று, நாடு தன்னுடைய 50ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடிய தருணத்தில், அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா இந்திய நாடாளுமன்றத்தின் நள்ளிரவு அமர்வின்போது ஆற்றிய உரையைக் கூறினாலே போதுமானது. அப்போது அவர், ‘‘கான்பூர், ஜாம்செட்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களை அடுத்து, அரசின் செயலாளர், 1942 செப்டம்பர் 5 அன்று லண்டனுக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். அதில் அவர், ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பலரின் நடவடிக்கைகளிலிருந்து இவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்கள் என்பது தெளிவாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைவிட வேறேதேனும் சான்று வேண்டுமா, என்ன? சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரே, இந்திய நாடாளுமன்றத்தில், அதிகாரபூர்வமாகக் கொண்டாடப்பட்ட விழாவில் பேசியபோது, ‘கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் ‘‘பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களாக’’ இருந்திருக்கிறார்கள் என்று கூறி பதிவாகியிருப்பதை விட வேறென்ன சான்று தேவை?
ஆயினும், பிரதமர் அவர்கள் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் பாஜக-வுடன் இணைந்து நின்றுகொண்டு, அதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, ஆர்எஸ்எஸ்-இன் பங்கு குறித்து (பாஜக-வானது இதன் அரசியல் அங்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று) எதுவும் கூறாமல் வாய்மூடி மவுனம் சாதிக்கிறார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, பம்பாய் உள்துறை, குறிப்பிட்டிருந்ததாவது: ‘‘ஆர்எஸ்எஸ் அமைப்பானது, 1942 ஆகஸ்ட்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து வாய்திறந்து எதுவுமே கூறவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது முழுமையாக செயல்பட்டது’’. இது தொடர்பாக நானாஜி தேஷ்முக் கூட ஒருதடவை, ‘‘ஏன், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ஓர் அமைப்பு என்ற முறையில், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை’’ என்று வினா எழுப்பினார்.
மக்களின் துன்ப துயரங்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து எதுவுமே கூறாது, வாக்களிக்கக்கோரும் காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் அரசியல் நிலை குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது ஒதுங்கியிருக்கும் இவ்விரு கட்சிகளும், எப்படியாவது ஆட்சியைப் பிடிப்பதற்கு, பணபலத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுவதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. மக்கள் மத்தியில் இவர்கள் முன்வைத்திருக்கும் கேள்வி, யாருடைய கொள்கை சிறந்த கொள்கை என்பதல்ல. மாறாக, யார் அதிக அளவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியும் என்பதுதான். சமீபத்தில் கர்நாடகாவில் இரு வாகனங்களில் இருந்த சாக்குப் பைகளில் சுமார் 12 கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 500 ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டதிலிருந்து எந்த அளவிற்கு, இந்த அரசியல் கட்சிகள், அரசியல் தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதில், மேலும் கொடுமை என்னவெனில், இந்தப் பணத்திற்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை என்பதும், இது எங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்பதை எவரும் கூறாததுமாகும்.
இத்தகைய சூழ்நிலைமையில், இத்தகைய கேடுகெட்ட அரசியல் கட்சிகளின் வலைகளுக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் வலுப்படுத்தக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திடுவோருக்கு தங்கள் ஆதரவினை அளித்திட வேண்டும். இதுநாள்வரை காங்கிரசுடனும், பாஜகவுடனும் ஒட்டிக்கொண்டிருந்த பல கட்சிகள் அவற்றைக் கழட்டிவிட்டுவிட்டு, இத்தகைய மாற்று அரசியல் கொள்கையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய மாற்றால்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். எனவேதான், மக்கள், நடைபெறவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)

காங்கிரஸ் - பாஜகவின் கொள்கை கோட்பாடற்ற கதாகாலட்சேபங்கள்



தலையங்கம்:


காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாடும் நாட்டு மக்களும் எதிர்நோக்கியுள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது, அற்ப விஷயங்கள் குறித்து கதாகாலட்சேபங்கள் செய்து வருகின்றன. உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்தோ, அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் அளிப்பது குறித்தோ எதுவும் கூறாமல், இவ்வாறு அற்பவிஷயங்களை முன்வைப்பதுதான் தங்களுக்கு நலம் பயக்கும் என்று உண்மையிலேயே அவை கருதுகின்றன.

உலகப் பொருளாதார நெருக்கடியால் ஒரு கோடிக்கும் மேலான வேலைகள் (jobs) பறிபோய்விட்டன. இதன் காரணமாக வேலையிழந்த தொழிலாளர்கள் தற்கொலைகள் செய்து கொள்வதென்பதும், தங்கள் குடும்பம் உயிர்வாழ வேண்டுமென்பதற்காகத் தங்களின் உடல் உறுப்புகளை விற்பது என்பதும் தொடர்கதையாகிவிட்ட நிலையில், இதைப்பற்றியெல்லாம் எதுவும் கூறாது, மக்களின் நேரடி வாழ்க்கையில் சம்பந்தப்படாத அற்ப விஷயங்களை இக்கட்சிகள் தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.
பாஜக-வானது, அது தன்னுடைய ‘இந்து வாக்கு வங்கியை’ ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக, மதவெறித் தீயை கூர்மைப்படுத்தும் வண்ணம் வெறுப்புப் பேச்சுக்கள் மூலமாக பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளன. இவ்வாறு பிலிபித்தில் பேசிய வருண் காந்தியையும், ஒரிசா மாநிலத்தில் கந்தமகால் தொகுதியில் பேசிய நபரையும் வேட்பாளர்களாக பாஜக நிற்க வைத்து அவர்களைப் பாதுகாத்திட முனைந்துள்ளது. கந்தமகால் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலக்கெடு முடிவடைந்தபின்னர், கிறித்துவ சிறுபான்மையினர் தாக்குதலுக்கு இட்டுச் சென்ற அத்தகைய வெறுப்புப் பேச்சைக் கக்கிய அவ்வேட்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பாஜக-வானது தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்திருப்பதைப்போல மதவெறி நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களை விசிறிவிடத் தீர்மானித்திருக்கிறது.

இப்போது பாஜக-வின் சார்பில் பிரதமராக அறிவிக்கப்பட்டிருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பிரதமரும், ஒருவரை ஒருவர் மிகவும் இழிவான முறையில் வசை பாடிக்கொண்டிருக்கின்றனர். அத்வானி, மன்மோகன்சிங்கை மிகவும் பலவீனமான பிரதமர் என்று கூற, மன்மோகன் சிங், அத்வானி மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் மேற்கொண்ட தர்மசங்கடமான அம்சங்களை எடுத்துரைத்திருக்கிறார். கந்தகாரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் தான் கையறு நிலையிலிருந்ததாக அத்வானி கூறியது, கராச்சி சென்றிருந்தபோது ஜின்னா குறித்து கூறியது உட்பட இதில் அடங்கும். இதுவல்லாமல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாவும், அவரது மகன் ராகுலும் கூட பிரதமருக்கு ஆதரவாக நின்று, அத்வானி மீது வசைமாறி பொழிந்து கொண்டிருக்கின்றனர்.


உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக 75 லட்சம் வாக்காளர்களுடன் திகழும் இந்தியாவில் உள்ள பெரிய கட்சிகளாகச் சொல்லிக் கொள்ளும் இவைகள் நடத்திடும் கதாகாலட்சேபம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது? உலகப் பொருளாதார மந்தத்தால் விண்ணையெட்டியுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப்பற்றிக் கிஞ்சிற்றும் இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் நாள்தோறும் சாப்பாட்டிற்கே வழியின்றி திண்டாடும் நிலை குறித்து கொஞ்சமாவது கவலைப்பட்டார்களா?


மக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்தும் அவற்றிற்கு எங்ஙனம் நிவாரணம் அளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கக்கூடாது என்பதில் காங்கிரசும், பாஜகவும் மிகவும் தெளிவாக இருக்கின்றன. எனவேதான், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது மட்டும் கவனம் செலுத்திடும் வகையில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்து விடிவும், நல்லதோர் வாழ்க்கையும் தரக்கூடிய விதத்தில் அதற்காகப் போராடும் ஓர் அரசியல் மாற்று தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.


இந்தப் பின்னணியில்தான், பிரதமர் மன்மோகன்சிங், கேரளாவில் தேர்தல் பிரச்சாரப் பயணம் செய்கையில், கம்யூனிஸ்ட்டுகள் மீது வசைமாறி பொழிந்திருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் எப்போதுமே வரலாற்றில் தவறான பக்கத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும் இடதுசாரிக் கட்சிகள் எடுத்து வைத்துள்ள விவாதங்கள் எதற்கும் அவர் பதிலளிக்காமல் இவ்வாறு விலகிச்சென்றிருக்கிறார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கம்யூனிஸ்ட்டுகள் சுதந்திரத்திற்கு எதிராக நின்றார்கள் என்று கடும் பிற்போக்கான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கம்யூனிஸ்ட்டுகளின் ‘பங்கு’ எவ்வாறானதாக இருந்தது என்பது குறித்து 1992 ஆகஸ்ட் 9 அன்று, நாடு தன்னுடைய 50ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடிய தருணத்தில், அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா இந்திய நாடாளுமன்றத்தின் நள்ளிரவு அமர்வின்போது ஆற்றிய உரையைக் கூறினாலே போதுமானது. அப்போது அவர், ‘‘கான்பூர், ஜாம்செட்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களை அடுத்து, அரசின் செயலாளர், 1942 செப்டம்பர் 5 அன்று லண்டனுக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். அதில் அவர், ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பலரின் நடவடிக்கைகளிலிருந்து இவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்கள் என்பது தெளிவாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைவிட வேறேதேனும் சான்று வேண்டுமா, என்ன? சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரே, இந்திய நாடாளுமன்றத்தில், அதிகாரபூர்வமாகக் கொண்டாடப்பட்ட விழாவில் பேசியபோது, ‘கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் ‘‘பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களாக’’ இருந்திருக்கிறார்கள் என்று கூறி பதிவாகியிருப்பதை விட வேறென்ன சான்று தேவை?


ஆயினும், பிரதமர் அவர்கள் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் பாஜக-வுடன் இணைந்து நின்றுகொண்டு, அதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, ஆர்எஸ்எஸ்-இன் பங்கு குறித்து (பாஜக-வானது இதன் அரசியல் அங்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று) எதுவும் கூறாமல் வாய்மூடி மவுனம் சாதிக்கிறார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, பம்பாய் உள்துறை, குறிப்பிட்டிருந்ததாவது: ‘‘ஆர்எஸ்எஸ் அமைப்பானது, 1942 ஆகஸ்ட்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து வாய்திறந்து எதுவுமே கூறவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது முழுமையாக செயல்பட்டது’’. இது தொடர்பாக நானாஜி தேஷ்முக் கூட ஒருதடவை, ‘‘ஏன், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ஓர் அமைப்பு என்ற முறையில், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை’’ என்று வினா எழுப்பினார்.
மக்களின் துன்ப துயரங்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து எதுவுமே கூறாது, வாக்களிக்கக்கோரும் காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் அரசியல் நிலை குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது ஒதுங்கியிருக்கும் இவ்விரு கட்சிகளும், எப்படியாவது ஆட்சியைப் பிடிப்பதற்கு, பணபலத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுவதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. மக்கள் மத்தியில் இவர்கள் முன்வைத்திருக்கும் கேள்வி, யாருடைய கொள்கை சிறந்த கொள்கை என்பதல்ல. மாறாக, யார் அதிக அளவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியும் என்பதுதான். சமீபத்தில் கர்நாடகாவில் இரு வாகனங்களில் இருந்த சாக்குப் பைகளில் சுமார் 12 கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 500 ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டதிலிருந்து எந்த அளவிற்கு, இந்த அரசியல் கட்சிகள், அரசியல் தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதில், மேலும் கொடுமை என்னவெனில், இந்தப் பணத்திற்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை என்பதும், இது எங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்பதை எவரும் கூறாததுமாகும்.


இத்தகைய சூழ்நிலைமையில், இத்தகைய கேடுகெட்ட அரசியல் கட்சிகளின் வலைகளுக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் வலுப்படுத்தக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திடுவோருக்கு தங்கள் ஆதரவினை அளித்திட வேண்டும். இதுநாள்வரை காங்கிரசுடனும், பாஜகவுடனும் ஒட்டிக்கொண்டிருந்த பல கட்சிகள் அவற்றைக் கழட்டிவிட்டுவிட்டு, இத்தகைய மாற்று அரசியல் கொள்கையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய மாற்றால்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். எனவேதான், மக்கள், நடைபெறவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)

Thursday, April 2, 2009

70 இடங்கள் உறுதி-இடதுசாரிகளால்தான் மக்களைக் காக்க முடியும்-அடுத்த பிரதமர் யார் என்பதை அவர்கள்தான் நிர்ணயிக்கப்போகிறார்கள்

மக்களவைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டும் 70க்கம் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்று யூனியன் டெர்ரிடரி இண்டிபெண்ட் என்னும் ஏடு கூறுகிறது. அந்த ஏட்டில் வந்துள்ள செய்திக் கட்டுரை வருமாறு:
இடதுசாரிக் கட்சிகள்தான் உண்மையான அரசியல் கட்சிகள். அவைகளால்தான் மக்களுக்குத் தேவையான மக்கள் நலம்சார்ந்த கொள்கைகளை வடித்தெடுக்க முடிகின்றன. அவர்கள் மக்களிடம் தெளிவான கொள்கைகளுடன் செல்கிறார்கள். மக்கள் நலஞ்சார்ந்த அரசாங்கத்தை அமைத்திட தங்களுக்கு அதிகாரம் வழங்குமாறு கோருகிறார்கள். இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் அவர்களுடைய மிக எளிய வாழ்க்கைமுறை அதே சமயத்தில் மிக உயர்ந்த சிந்தனையாளர்களாக விளங்குதல், அனைத்துத்தரப்பு மக்களும் விரும்பக் கூடியவர்களாக அவர்களை மாற்றியிருக்கின்றன. அவர்கள் எப்போதும் மக்களை நேசமுடன் அணுகும் முறையினால் மக்கள் மத்தியில் மகத்தான செல்வாக்கைப் பெற்றிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இடதுசாரிக் கட்சிகள் மற்ற கட்சியினரையும் மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைகளைப் பின்பற்ற நிர்ப்பந்தம் அளித்து வருகிறார்கள்.

வரவிருக்கும் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டை ஆளக்கூடிய அளவிற்கு இடங்களைப் பெறப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல, 70 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமான இடங்களைப் பெற்று, நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு உருவாகப் போகிறார்கள்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குப்பின், இடதுசாரிக் கட்சிகள்தான் அதிகாரமையமாக உருவாகப்போகிறது என்றும், இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை அவர்கள்தான் நிர்ணயிக்கப் போகிறார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் நம்புகிறார்கள். ‘‘சித்தாந்தரீதியாக, சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக் போன்ற இடதுசாரிக் கட்சிகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைய முடியாது. அதேபோன்று, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டதை அடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணியுடனும் அவர்களால் தங்களை இணைத்துக் கொள்ள முடியவில்லை’’ என்று ஒரு விமர்சகர்க
கூறினார்.
மேலும் அவர், ‘‘இவ்விரு கூட்டணிகளுமே பணக்காரர் ஆதரவு - ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளையே கடைப்பிடித்தன’’ என்றும், ‘‘இதன் காரணமாக நாட்டில் அதிகரித்து வரும் வறுமை மற்றும் ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றால் இடதுசாரிக் கட்சிகள் மிகவும் ஆத்திரமடைந்திருக்கின்றன’’ என்றும், இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனும், நாட்டிற்கு மூன்றாவது மாற்றைக் கொடுத்திருக்கிறார்கள்.’’ என்றும் அவர் கூறினார்.

கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, மத்தியில் அடுத்த ஆட்சி மூன்றாவது முன்னணிக்குத்தான் என்பதையும், அதில் இடதுசாரிக் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தம் என்பதையும் ஊகித்துணர முடிகிறது.
இடதுசாரிக் கட்சிகள் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா மற்றும் சில மாநிலங்களில் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் அவர்களால் முக்கியமான பங்களிப்பினைச் செய்திட முடியும். ‘‘நிச்சயமாக இடதுசாரிக் கட்சிகள் 70 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறுவார்கள். இதில் மிகவும் சிறந்த அம்சம் என்னவென்றால், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், சாமானியர்களைப் போலவே மிகவும் எளிமையானவர்கள். மக்கள் அவர்களை மிக எளிதாக அணுக முடியும். தொலைபேசியில் அவர்களைத் தொடர்பு கொள்ளும்போது, எந்தவிதத் தயக்கமுமின்றி அவர்கள் எடுத்துப் பேசுகிறார்கள். இது அவர்களுக்கு வாக்காளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது. ‘‘நம் தலைவர்களும் நம்மைப் போலவே எளிமையானவர்கள்’’ என்கிற உணர்வை இது வாக்காளர்கள் மத்தியிலும் ஏற்படுத்துகிறது. ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சொகுசு வாழ்க்கையும் அவர்களைச் சுற்றியும் உள்ள துதிபாடிகளின் செயல்களும் இவர்களை அவர்களிடம் நெருங்கவே அனுமதிக்க மறுக்கிறது.

பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் சொகுசு வாழ்க்கை, மக்களுக்கும் அவர்களுக்குமிடையே இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது. இந்திரா காந்தி, ராஜீவ்காந்திக்கு அடுத்து காங்கிரசில் மக்கள்தலைவர் எவரும் இல்லை. இதேநிலைதான் பாஜகவிலும், வாஜ்பாய் உடல் நலிவுற்றதை அடுத்து ஓரளவுக்கு அத்வானியைக் கூறலாம். வேறு மக்கள் தலைவர் எவரும் பாஜகவிலும் இல்லை. ஒருவர் ராகுல் காந்தியைப் பார்க்க விரும்பினால் அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது. பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் கெடுபிடிகள் மிக அதிகம்.

அதேசமயத்தில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களான பிரகாஷ்காரத், சீத்தாராம் யெச்சூரி, டி. ராஜா, குருதாஸ் தாஸ் குப்தா, வாசுதேவ் ஆச்சார்யா, ஏ.பி.பரதன் போன்றோர் சாமானிய நாட்டுப்புற ஏழை மக்களை மட்டுமல்ல, நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய அனைத்துத்தரப்பு மக்களாலும் நேசமுடனும் மதிப்புடனும் ஈர்க்கக்கூடிய தலைவர்களாக உயர்ந்துள்ளார்கள். மற்ற சிறிய கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
(நன்றி: யூனியன் டெர்ரிடரி இண்டிபெண்டண்ட்)

தமிழில்: ச.வீரமணி