Monday, April 20, 2009

தயாநிதி மாறன் முன் சில கேள்விகள்





எங்கள் தொகுதி வேட்பாள ராக மீண்டும் களமிறங்கியுள்ள சன் டிவி, தினகரன், குங்குமம், சூரியன் எப்எம் இன்னும் இதர பலவற்றின் உரிமைப் பங்குதாரரான தயாநிதி மாறன் அவர்களுக்கு, வணக்கம்.மத்திய, மாநில அரசின் சாத னைகளைக் கூறி மக்களிடம் வாக்குகளை கேட்டு வருவதாக அடிக்கடி சன் டிவியில் தோன்றி பேட்டியளித்து வருகிறீர்கள். அப் பாவி வாக்காளர்களாகிய எங்க ளுக்கு இப்போது சில சந்தேகங் கள் எழுகின்றன. விளக்கமளித்து எம் குழப்பத்தைப் போக்குவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் சில கேள்விகள்...மதுரை தினகரனில் 3 அப்பாவி உயிர்கள் தீயில் எரிந்து கருகிப் போனதே... ஏன் சார்? அக்கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தராமல் ஓய மாட்டோம் என நீங்களும், உங்கள் சகோதரர் கலாநிதி மாறனும் தொலைக்காட்சி கேமிரா முன்பு சபதமெல்லாம் மேற்கொண்டீர் களே... அது என்னாச்சு சார்?கடந்த நாடாளுமன்றத் தேர்த லை அடுத்து மத்திய அமைச்ச ராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நீங் கள், இடையில் அமைச்சரவை யில் இருந்து நீக்கப்பட்டீர்களே... ஏன் சார்?சில தினங்களுக்கு முன்பு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறையில் மெகா ஊழல் என்று பக்கம் பக்கமாக தினகரனிலும், மணிக்கொரு முறை சன் நியூ சிலும் பரபரப்பாக செய்தி வெளி யிடப்பட்டதே... அவையெல்லாம் இப்போது காணாமலும் போனதே... ஏன் சார்?அறிவாலயத்தில் செயல்பட்டு வந்த சன்டிவி அலுவலகம், காலி செய்துவிட்டு போனபோது, அலுவ லக கட்டிடங்களை பாழாக்கி விட்டு சென்றனர் என்று படங்களு டன் முரசொலித்து பறைசாற்றப் பட்டதே... ஏன் சார்?இடையில் “நான் என்ன தவறு செய்தேன்? கழக வேட்பாளர் களுக்கு எதிராக அதிருப்தி வேட் பாளர்களை நிறுத்தினேனா?” என ஒரு நேரத்தில் சன்டிவியில் நேரடி பேட்டியெல்லாம் கொடுத்து அசத்தினீர்களே... ஏன் சார்?பாழாப்போன ஞாபக மறதியி னால் இதெல்லாம் உண்மையிலேயே உங்களுக்கு நினைவில் இல் லையா சார்... ஏதேதோ இலவச இணைப் புகள் கொடுக்கும் நீங்கள், இதற் கான விளக்கங்களையும் தினக ரன், குங்குமம் ஆகியவற்றில் இல வச இணைப்பாக வெளியிட்டால், படித்து பொது அறிவை வளப்படுத் திக் கொள்வோம் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்
தமிழக மக்களுக்காக
சென்னை மத்திய தொகுதி வாக்காளர்கள்.

6 comments:

ramalingam said...

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா. ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஞாபகசக்தி இருக்க்க்கூடாது.

ராசா said...

தமிழன் - இழிச்சவாயன்

இவனுங்க குடும்ப அரசியல்ல, தமிழ் அகராதில சேர்க்க வேண்டிய வார்த்தை இது..

கார்த்திகைப் பாண்டியன் said...

நியாயமான கோபம்.. ஆனால் கேள்விக்கு யாரும் பதில் சொல்லப் போறதில்லை நண்பா.. நாமளே நம்ம ஆதங்கத்தை சொல்லி புலம்புறதுதான் மிச்சம்

இரா. வசந்த குமார். said...

நீங்கள் இந்த கடிதத்தை தயாநிதி மாறன் அவர்களுக்கு அனுப்பினீர்களா..? இப்படி உங்களது பதிவுத்தளத்தில் மட்டும் எழுதி வைப்பதில் என்ன பலன்..?

Venkatesh said...

//நியாயமான கோபம்.. ஆனால் கேள்விக்கு யாரும் பதில் சொல்லப் போறதில்லை நண்பா.. நாமளே நம்ம ஆதங்கத்தை சொல்லி புலம்புறதுதான் மிச்சம்//

இது தான் உண்மை

வெங்கடேஷ்

பூங்குழலி said...

ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஞாபகசக்தி இருக்க்க்கூடாது

அதே தான்