Tuesday, March 31, 2009

கல்வி மற்றும் சுகாதாரத்துறை -bமக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை -ஐமுகூ அரசாங்கம் காப்பாற்றத் தவறிவிட்டது:நிலோத்பால் பாசு

புதுடில்லி, மார்ச் 31-
ஐமுகூ அரசாங்கம், கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் செவ்வாய் அன்று மதியம் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ‘‘கல்வி: காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை, ’’ மற்றும் ‘‘சுகாதாரத் துறை: உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது’’ என்னும் தேர்தல் பிரச்சார பிரசுரங்களை வெளியிட்டு, நிலோத்பால் பாசு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், இவ்விரு துறைகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் தாங்கள் எவ்வளவு செலவிட்டோம் என்பதை அவர்கள் கூறிடவில்லை.
ஐமுகூ அரசாங்கம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய சமயத்தில் ஐ.நா. ஸ்தாபனம் ஆண்டுதோறும் வெளியிடும் மனித வளர்ச்சி அறிக்கை (ழரஅயn னுநஎநடடிஅநவே சுநடிசவ)யில் மொத்தம் உலகில் உள்ள 171 நாடுகளில் இந்தியா 128ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிற்கு 132ஆவது இடம் கிடைத்திருக்கிறது. ஒவ்வோராண்டும் பட்ஜெட் தாக்கல் செய்திடும்போது, நிதி அமைச்சர் அவர்கள் பொருளாதார ஆய்வு அறிக்கையையும் (நஉடிnடிஅiஉ ளரசஎநல டிக ஐனேயை), பட்ஜெட்டால் விளைந்த பயன்கள் (டிரவஉடிஅந ரெனபநவ) இரண்டையும் வெளியிடுவார். ஆனால் இந்த ஆண்டு அவற்றை வெளியிடாமல், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் வெளியிட்டுவிட்டு தப்பித்துக் கொண்டார்.
இந்தியாவை ஒரு சூப்பர் பவராக மாற்றப்போகிறோம் என்று தம்பட்டம் அடித்திருக்கிறார்கள். ஆனால் ஐ.நா.வின் அறிக்கையோ இந்தியா எவ்வளவு பரிதாபகரமான நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.
ஐமுகூ அரசாங்கமானது தன்னுடைய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்குவோம் என்று உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால் 2004-05ஆம் ஆண்டில் 2.67 சதவீதம் மட்டுமே ஒதுக்கியிருந்த அரசு, 2008-09இல் 3.08 சதவீத அளவிற்கே உயர்த்தியிருக்கிறது. இந்த உயர்வுக்கும் பல மாநில அரசுகள் கல்விக்காக உயர்த்திய ஒதுக்கீடுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட ஒன்றாகும்.
கல்வி உரிமை சட்டமுன்வடிவை நடைமுறையில் குப்பைத்தொட்டியில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். இதன்மூலம் நாட்டில் 38 கோடி மக்களுக்குக் கல்வி பெறும் உரிமையை - எழுத்தறிவைத் - தராது மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறார்கள்.
மாறாக, கல்வித்துறையை தனியார் கொள்ளையடிக்கக் கூடிய வகையில் வணிகமயப்படுத்தியுள்ளார்கள்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு (சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு) அரசு ஒதுக்கீடு செய்து வந்த தொகையானது ஒவ்வோராண்டும் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. 2007-08ஆம் ஆண்டில் 12,020.2 கோடி ரூபாயாக இருந்தது, 2008-09இல் 11,940 கோடியாகக் குறைந்தது. இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யப்படும் சமயத்தில் அது 11,933.9 கோடியாக மேலும் குறைக்கப்பட்டது.
நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை - 38 கோடி மக்களை - எழுத்தறிவற்றவர்களாகவே வைத்துக்கொண்டு - நாட்டை சூப்பர் பவராக மாற்றப் போவதாகத் தம்பட்டம் அடிக்கிறார்கள். எழுத்தறிவற்றவர்களில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் அதிகமானவர்களாகும். இவர்கள் நிலைமை மேலும் பரிதாபகரமானதாகும்.
சுகாதாரத் துறை
அதேபோல் சுகாதாரத் துறையிலும் ஐமுகூ அரசு அறிவித்துள்ள ‘‘அனைவருக்கும் சுகாதாரம்’’ என்கிற முழக்கம் கானல் நீராகவே தொடர்கிறது. சுகாதாரத் துறைக்கு அரசின் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.9 சதவீதமேயாகும். உலகில் உள்ள நாடுகளில் மிகவும் கீழ் நிலையில் உள்ள நிலையாகும். நம்மைவிட சற்றே கூடுதலாகச் செலவு செய்கிற நாடுகளில் புருண்டி, மியான்மர், பாகிஸ்தான், சூடான் மற்றும் கம்போடியா ஆகியவைதான் வருகின்றன. ஐமுகூ அரசு பொது சுகாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2இலிருந்து 3 சதவீதம் வரை உயர்த்தும் என்று கூறியிருந்த உறுதிமொழியையும் இவ்வாறு அது காற்றில் பறக்கவிட்டுவிட்டது.
இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. நாட்டில் உள்ள குழந்தைகளில் 56 சதவீதத்தினர் தேசியத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துத் தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள முடியவில்லை. நாட்டில் தடுப்பூசி மருந்துகள் தயார் செய்து வந்த நான்கு பொதுத்துறை நிறுவனங்களை ஐமுகூ அரசு மூடியதை அடுத்து, தடுப்பூசி மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளின் விலைகளும் விஷம் போல் ஏறியுள்ளன.
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான திட்டங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால் அது எதிர்கால இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கும். இதை மக்கள் நன்கு உணர்ந்து, வரவிருக்கும் தேர்தலில் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் போதுமான அளவு கவனம் செலுத்தக் கூடிய மாற்று அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த முன்வர வேண்டும்.
இவ்வாறு நிலோத்பால் பாசு கூறினார்.

Sunday, March 29, 2009

காங்கிரஸ்: நினைப்பும் நிலையும்


யதார்த்த நிலைமைகளைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 120 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் தன்னுடைய மிக முக்கியமான கூட்டணிக் கட்சியினர் எவரும் தொகுதி உடன்பாடு செய்துகொள்ளக்கூட மறுத்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியானது, தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடக்கூடிய சமயத்தில், தாங்களே இப்போதுள்ள பிரதமரின் தலைமையின் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.


தேர்தல் காலத்தில், ஒவ்வொரு கட்சிக்கும் தங்கள் கட்சியின் நிலை குறித்து, யதார்த்த நிலைமைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், மாபெரும் கனவுகள் காண்பதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் உண்டுதான். ஆனால், ஒரு மாபெரும் ஜனநாயக அமைப்பில் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் எஜமானர்கள் அதன் மக்களேயாவார்கள். தேர்தலில் மக்கள் அளித்திடும் முடிவுகளின் அடிப்படையில்தான் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு, ஆட்சிபுரிவார்கள் என்ற அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், இடதுசாரிக் கட்சிகள் குறித்தும் மூன்றாவது முன்னணி குறித்தும் கூறப்பட்டிருக்கும் வாசகங்களைச் சற்றே ஆராய்ந்திடுவோம்.
காங்கிஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மூன்றாவது முன்னணியை ‘‘குழப்பமானவர்களின் கூட்டணி’’ என்ற விதத்தில் வர்ணித்திருக்கிறது.

(1) மூன்றாவது முன்னணிக்கு மாற்றுக் கொள்கைகள் கிடையாது,

(2) அது பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கே உதவுகிறது மற்றும்

(3) அது நிலைக்கத்தக்கதல்ல என்பவைகளே அதன் வாதமாகும்.

இப்பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கு முன்பாக, மற்றொரு அம்சம் குறித்து பரிசீலிப்பது அவசியம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘‘மூன்றாது முன்னணிக்கு உந்து சக்தியாகத் திகழும் இடதுசாரிக் கட்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஐமுகூ அரசாங்கத்தை ஆதரித்து வந்தன. அவர்கள் எந்தவிதப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமலேயே ஆட்சியாளர்கள் மீது அதிகாரம் செலுத்த முயற்சித்தார்கள்,’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முதலாவதாக, நாடாளுமன்றத்தில் நுழைந்த 61 இடதுசாரி உறுப்பினர்களில் 54 பேர், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைத் தோற்கடித்தவர்கள் என்றபோதிலும், நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கம் ஒருமைப்பாட்டுக்கும் சவாலாக விளங்கும் மதவெறி சக்திகளை அரசு அதிகாரபீடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அளிக்க வேண்டுமென்பதற்காக, ஐமுகூ அரசாங்கத்தை, இடதுசாரிக் கட்சிகள் மிகவும் முதிர்ந்த தன்மையுடனும் பொறுப்புடனும் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதெனத் தீர்மானித்தன. இவ்வாறு ஆதரிப்பதற்காக, ஆட்சி அதிகாரத்தில் எந்தப் பங்கையும் இடதுசாரிகள் கோரவில்லை. இன்றைய நடைமுறை அரசியலில், அரசு அதிகாரம் மற்றும் அதன் விளைவாக அளிக்கப்படும் சுகபோக வாழ்க்கை வசதிகளைத் துச்சமென நிராகரித்துவிட்டு, கொள்கைகள் வழிநின்று, செயல்படுவது என்பதே அபூர்வமான ஒன்றாகும். இவ்வாறுதான், இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொள்ளாத அதே சமயத்தில் மிகவும் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது, ‘‘ராணுவம்சாரா அணுசக்தி ஒப்பந்தத்திற்கு’’ ஐமுகூ அரசாங்கம் ஆதரவு அளித்ததையொட்டி இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் அந்த அறிக்கையானது, ‘‘இந்தியாவின் உச்சபட்ச தேசிய நலனுக்காகத்தான்’’ அவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக மேலும் கூறுகிறது. அவர்கள், சொல்லாமல் விட்ட ஓர் அம்சம் என்னவெனில், இந்த ஒப்பந்தமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான போர்த்தந்திரக் கூட்டணியின் முழுமையான அங்கம் என்பதையும், அந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவின் இறையாண்மை மற்றும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை நசுக்கப்பட்டுவிட்டது என்பதுமாகும். இரானுக்கு எதிராக சர்வதேச அரங்கத்தில் இந்தியா வாக்களித்ததும், இஸ்ரேலுடன் இப்போது இந்தியா அதிகமான அளவில் கூடிக் குலாவுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இவ்வாறு போர்த்தந்திரக் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதன் விளைவுகளேயாகும்.

மூன்றாவதாக, இடதுசாரிக் கட்சிகள் ஐமுகூ அரசாங்கத்திற்க, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே ஆதரவினை அளித்து வந்தன. ஐமுகூ ஆட்சியிலிருந்த அத்தனை ஆண்டு காலத்திலும், இத்திட்டத்தை அது அமல்படுத்துவதற்காகவும், அதிலிருந்து அது விலகிச் செல்லாமல் இருப்பதற்காகவும் இடதுசாரிகள் தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்து வந்தனர். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியதன் மூலமும், இந்தியர்கள் ஜார்ஜ் புஷ்சை நேசிக்கிறார்கள் என்று உலகிற்கு அறிவித்ததை அடுத்தும், மன்மோகன் சிங் அரசாங்கம் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை மீறிவிட்டது. ‘‘இந்தியாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையானது சர்வதேச உறவுகளின் பல்துருவக் (multipolarity) கோட்பாட்டை மேம்படுத்தக்கூடிய விதத்தில் பின்பற்றிடும். அதனை ஒருதுருவ கோட்பாட்டை (unilateralism) நோக்கி இழுத்துச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்த்திடும்,’’ என்று குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இதனை மீறி, அமெரிக்காவானது, ஈராக்கில் ராணுவ ஆக்கிரமிப்பை வலுவந்தமாக ஏற்படுத்தி. ஒருதுருவக் கோட்பாட்டை அரக்கத்தனமாக அமல்படுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில், ஐமுகூ அரசாங்கமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் போர்த்தந்திரக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

‘‘அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் அதே சமயத்தில், அனைத்து பிராந்திய மற்றும் உலகப் பிரச்சனைகளிலும் இந்தியாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை நிலைப்பாடு, நிலைநிறுத்தப்படும்’’ என்றும் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டிருந்தபோதிலும், அதற்கு முற்றிலும் மாறாக, நாம் மேலே பார்த்ததுபோல, நம்முடைய நாட்டின் அயல்துறைக் கொள்கையானது, அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வரைவு தயார் செய்யப்பட்ட சமயத்தில், முதலில் அமெரிக்காவுடன் போர்த்தந்திர உறவுகள் கொள்வது தொடர்பாகத்தான் வரையப்பட்டிருந்தது. ஆனால் இடதுசாரிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு வேண்டுமானால் அது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தியபிறகுதான், அது நாம் மேலே குறிப்பிட்டவாறு பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, ஐமுகூ அரசாங்கமானது குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளை மீறியது. தான் ஏற்கனவே ஆசைப்பட்டவாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் போர்த்தந்திர உறவுகளை செய்து கொள்வதையே விரும்பியது. இவ்வாறு, ஐமுகூ அரசாங்கமானது குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்குத் துரோகம் இழைத்ததால்தான், இடதுசாரிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவையே நிதர்சன உண்மைகளாகும்.

நாம் இப்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஐமுகூ அரசாங்கத்தின் சாதனைகள் என்று பட்டியலிட்டுள்ள அனைத்துமே, இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் மற்றும் தூண்டுதலால் மேற்கொள்ளப்பட்டவைகளேயாகும். ஐமுகூ - இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து இடதுசாரிகள் வெளியேறுவது என்று தீர்மானித்த பிறகுதான், ஐமுகூ அரசாங்கமானது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தன் பழைய திட்டங்களுக்கு மீண்டும் திரும்பிச் சென்றது. ஐமுகூ அரசாங்கத்தை இடதுசாரிகள் ஆதரித்து வந்தவரை, அது பொதுத்துறை நிறுவனங்களை நீர்த்துப்போகச் செய்திடுவதற்கான எந்த முயற்சியையும் அனுமதித்திடவில்லை. கூடுதலாக. இப்பகுதியில் நாம் முன்பே குறிப்பிட்டிருப்பதைப்போல, ஐமுகூ அரசாங்கமானது நவீன தாராளமயப் பொருளாதார மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களை முழுமையாக அமல்படுத்த முயற்சித்தபோது அதனை அவ்வாறு மேற்கொள்ள விடாது இடதுசாரிகள் தடுத்ததன் விளைவாகத்தான், இன்றைய தினம் உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நம் நாட்டையும் பாதிக்காது. ஓரளவிற்குப் பாதுகாத்திட முடிந்திருக்கிறது.

உண்மை நிலைமைகள் இவ்வாறிருக்கையில், மூன்றாவது அணி சம்பந்தமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதற்கு இப்போது வருவோம். முதலாவதாக, மூன்றாவது முன்னணிக்கு மாற்றுக் கொள்கைகள் இல்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ஐமுகூ அரசாங்கமோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியோ ஏதேனும் கொள்கைத் திட்டங்களை முன்வைத்திருக்கிறார்களா? அனைத்து அரசியல் கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன திட்டங்களை அமல்படுத்துவோம் என்று, தங்களுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திடும். கடந்த இருபதாண்டுகளில், அமைந்திட்ட கூட்டணி அரசாங்கங்கள் அனைத்துமே, தேர்தலுக்குப் பின் உருவானவைதான். 1996இன் ஐக்கிய முன்னணியாக இருந்தாலும் சரி, 1998 இல் உருவான தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும் சரி, அல்லது 2004இல் உருவான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாக இருந்தாலும் சரி. கூட்டணி உருவானபிறகுதான் அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்காக ஒரு பொதுத் திட்டம் வரையப்பட்டு, அனைத்துக் கூட்டணிக் கட்சிகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது.


ஐமுகூ அரசாங்கம் உருவானபோதும் இவ்வாறுதான் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வரையறுத்து உருவாக்கப்பட்டது. 2009 தேர்தல் முடிந்தபிறகும் இதேபோன்று மதச்சார்பற்ற கட்சிகளின் முன்னணியில் ஒரு மாற்று செயல் திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எதுவுமில்லை.

இரண்டாவதாக, இடதுசாரிக் கட்சிகளின் மாற்று முன்னணியால் ‘‘பாஜக வளர்வதற்கே வழிவகுக்கும்’’ என்று ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறது. இதுவும் வெறுமையான ஒன்றேயொழிய வேறில்லை. இடது முன்னணி தீர்மானகரமான சக்தியாக உள்ள மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுராவில் பாஜகவினரால் நாடாளுமன்றத்தை விடுங்கள், சட்டமன்றத்தில் கூட ஓரிடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. மாறாக, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள வடமாநிலங்களில்தான், பாஜக வளர்வதற்கு அது வழிவகுத்துத் தந்திருக்கிறது. ஐமுகூ அரசாங்கத்தின் காலத்தில்தான் காங்கிரஸ் கட்சியானது கர்நாடகா, உத்தர்காண்ட், பஞ்சாப் மற்றும் இமாசலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தன்னுடைய மாநில அரசாங்கங்களை, பாஜகவிடம் இழந்துள்ளது. இவ்வாறு, பாஜக மீண்டும் உயிர்பெறுவதற்கு உதவி செய்திருப்பது யார்?
மூன்றாவதாக, மூன்றாவது மாற்று முன்னணி உறுதியாக இருக்காது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. கடந்த கால அரசாங்கங்களின் அனுபவங்கள் அவ்வாறுதான் இருக்கின்றன. இவ்வாறு உறுதியற்று இருந்தமைக்கு அவற்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த பெரிய கட்சிகள்தான் காரணமாகும். வி.பி. சிங் அரசாங்கத்திற்கு இடதுசாரிக்கட்சிகளும், பாஜகவும் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. அத்வானியின் எரியூட்டும் ரதயாத்திரைக்குப்பின்னர் பாஜக தன் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, அவரது அரசாங்கம் வீழ்ந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியானது சந்திரசேகர் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்தது. அதுவும் ராஜிவ்காந்தியை யாரோ இரு காவல்துறையினர் வேவுபார்க்கிறார்கள் என்று அற்பக் குற்றச்சாட்டைக் கூறி, ஆதரவை விலக்கிக்கொண்டதை அடுத்து, அதுவும் வீழ்ச்சி யடைந்தது. பின்னர் 1996இல் மக்களின் ஆதரவை இழந்த நிலையில் காங்கிரஸ் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இந்தியாவில் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்பதற்காகவும், பாஜக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றின. 13 நாட்கள் மட்டுமே ஆட்சியிலிருந்த வாஜ்பாய் அரசாங்கம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைந்ததை நினைவுகூர்க. காங்கிரஸ் கட்சி இதற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த சமயத்தில் அதன் பிரதமரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. சில மாதங்கள் கழித்து, ஐக்கிய முன்னணியின் ஓர் அங்கமாக இருந்த திமுக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி ஆதரவினை விலக்கிக் கொண்டு அது வீழக் காரணமாக இருந்தது. (பின்னர் அதே திமுக-வுடன் தற்போது ஐமுகூ அரசாங்கம் தன் முழுக் காலத்தையும் கழித்திருக்கிறது என்பது என்னே விநோதம்!) இவ்வாறு காங்கிரஸ் துரோகம் செய்யாமல் இருந்திருந்தால், பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருக்கவும் முடியாது, 1998இல் ஆட்சியை அமைத்திருக்கவும் முடியாது. காங்கிரஸ் கட்சி மட்டும் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் அளித்திருந்த தன் உறுதிமொழியைக் காப்பாற்றியிருந்தால், ஐக்கிய முன்னணி அரசாங்கமானது 2001 வரை நீடித்திருந்திருக்கும். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை கீழே தள்ளுவதற்காக, காங்கிரஸ், பாஜகவுடன் சேர்ந்து - முன்பு வி.பி.சிங் அரசாங்கத்தை வீழ்த்தியது போலவே இப்போதும் - வாக்களித்தது. இவ்வாறு, பாஜக வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தது யார்?
கடந்த காலங்களில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத அரசாங்கங்கள் உறுதியற்றிருந்ததற்கான அனுபவங்கள் அவற்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த கட்சிகளேயாகும். இதற்குத் தீர்வு 2009இல் அமைய இருக்கும் மாற்று மதச்சார்பற்ற முன்னணியானது தன் சொந்த பலத்தில் அமைந்திடுவதிலேயே அடங்கியிருக்கிறது.

இத்தகைய மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைந்திடுவதை உத்தரவாதப்படுத்துவதுதான் எதிர்கால இந்தியாவுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நலம் பயக்கும்.

(தமிழில்: ச.வீரமணி)

ஐமுகூ அரசாங்கம் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாற்றிவிட்டது:சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 28-
ஐமுகூ அரசாங்கம், இந்தியாவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாற்றிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் சனிக்கிழமையன்று மதியம் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ‘‘அயல்துறைக் கொள்கை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்’’ என்கிற சிறுவெளியீட்டை வெளியிட்டு, சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

‘‘ஐமுகூ அரசாங்கத்திற்கு, குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே ஆதரவு அளித்தனர். அதில் அரசாங்கம் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை அனுசரிக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான ஒருதுருவக் கோட்பாடு (unilateralism) அமல்படுத்தப்படாது, மாறாக அனைத்து நாடுகளையும் சமமாகப் பாவிக்கும் பல்துருவக் கோட்பாடே (multipolarity) பின்பற்றப்படும் என்று மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த உறுதிமொழியை உதாசீனப்படுத்திவிட்டு, அமெரிக்காவுடன் ராணுவரீதியான போர்த்தந்திர ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதன் மூலமாக ஐமுகூ அரசாங்கம் இடதுசாரிக் கட்சிகளுக்கும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டது.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்காவுடனான ராணுவரீதியான போர்த்தந்திர ஒப்பந்தத்தின் ஒரு பகுதியேயாகும். ஐமுகூ அரசு அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல, பல்வேறு ராணுவ ஒப்பந்தங்களையும் செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி அமெரிக்காவிற்கு இந்தியா ராணுவ ரீதியாக அனைத்துவிதங்களிலும் ஒத்துழைக்க வேண்டும். இதன் பொருள் இரானைத் தாக்கு என்று அமெரிக்கா கட்டளையிட்டால், இந்தியா இரானைத் தாக்க வேண்டும்.

இவ்வாறு அமெரிக்காவுடன் ஐமுகூ அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாகத்தான் இஸ்ரேலுடனான உறவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டு, மறுபக்கத்தில் பாலஸ்தீனப்பகுதியில் அரக்கத்தனமான முறையில் ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் இஸ்ரேலுடன் உறவுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறது.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அடிப்படையாக உள்ள ஹைடு சட்டம், இனிவருங்காலங்களில் இந்தியாவின் அயல்துறைக் கொள்கை என்பது, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப்போக ‘‘(congruent)’’ வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை ஐமுகூ அரசாங்கம், மாற்றியமைத்திருப்பதானது, நாட்டுக்கு மிகவும் கேடுபயக்கக்கூடிய ஒன்றாகும்.

இந்தியா, தன் அண்டை நாடுகளுடன் நல்லுறவுடன் செயல்பட வேண்டுமானால், அமைதியாகவும் (peace) உறுதியாகவும் (stability) விளங்க வேண்டுமானால் அது சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றியாக வேண்டும். அப்போதுதான் நாம், நம் அண்டை நாடுகளான வங்கதேசம், பர்மா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகியவற்றுடன் நல்லுறவுடன் இருந்திட முடியும்.

அத்தகைய முறையில் நாட்டில் மீண்டும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையை அமல்படுத்த, மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளை வரும் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----

Saturday, March 28, 2009

மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி:சீத்தாராம் யெச்சூரி

புதுடில்லி, மார்ச் 28-
பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக, மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்திடும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் சனிக்கிழமையன்று மதியம் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ‘‘உலகப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவும்:மக்கள் ஆதரவு மாற்றுக் கொள்கை தேவை’’ என்கிற சிறுபிரசுரத்தையும், ‘‘அயல்துறைக் கொள்கை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்’’ என்கிற சிறுவெளியீட்டையும் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டு, செய்தியாளர்களிடையே கூறியதாவது:
‘‘உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆட்சியாளர்கள் போதுமான அளவிற்கு செயலில் இறங்கவில்லை. ஸ்தானரீதியாக வேலையிலிருந்த தொழிலாளர்களிலேயே ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். பல்வேறு மதிப்பீடுகளின்படி தினக்கூலிகளாக இருந்த கோடிக்கணக்கானோர் வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். வளர்ச்சி விகிதம் 2008 அக்டோபர் - டிசம்பருக்கான காலாண்டில் 5.3 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. வேளாண்மைத் துறையில் இது எதிர்மறை வளர்ச்சி விகிதமாக அதாவது 2.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2009 ஜனவரியில், 2008 ஜனவரியுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி 15.9 சதவீதமும், இறக்குமதி 18.2 சதவீதமும் குறைந்திருக்கிறது.
பணவீக்கம், பணச்சுருக்கமாக மாறியிருக்கிறது. ஆயினும் மொத்த விலைக் குறியீட்டு அட்டவணையோ அல்லது நுகர்வோர் குறியீட்ட அட்டவணையோ பத்து சதவிதத்திற்குக் குறையவில்லை. இதன் பொருள், அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் குறையவில்லை என்று பொருள். இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இதன்விளைவாக மக்கள் தொடர்ந்து விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவார்கள். பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருக்காது. வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகமாகும். இது உண்மையில் மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இவற்றிற்கெதிராகச் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், மக்களின் வாழ்க்கை படுநாசமாகும்.
இந்நிலைமையை சமாளிக்க வேண்டுமானால், அரசாங்கம் பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும். தற்சமயம் அரசு பொது முதலீட்டிற்கு ஒதுக்கியுள்ள தொகை மிகவும் குறைவு, நிலைமையைச் சமாளிக்கப் போதுமானதல்ல. சர்வதேச நிதியத்தின் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகில் உள்ள 20 நாடுகளில் (ஜி.20) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவை செலவினத்திற்கு ஒதுக்கும் தொகை குறித்து பட்டியலிட்டிருக்கிறது. அதில் இந்தியா கடைசியிலிருந்து நான்காவதாக வருகிறது. இந்தியாவில் வெறும் 0.5 சதவீதமே பொது செலவினத்திற்காக ஒதுக்கப்படுகிறது. எனவேதான் நாம் இந்த அரசாங்கத்தை, பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும் என்று கோருகிறோம். இதற்கு முன்பும் பலமுறை நாம் இதனைக் கேட்டிருக்கிறோம்.
அதன்மூலம், கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து, வேலைவாய்ப்புகள் பெருகும். அதைவிடுத்து அரசாங்கம், பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதனால் அரசின் இருப்புநிலைக் குறிப்புதான் அழகுபடுத்தப்படுமே யொழிய, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கப் போவதில்லை. அதன் விளைவாக அவர்கள் உள்நாட்டுத் தேவையை விரிவாக்கவும் முடியாது, அதன் தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்க முடியாது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், உள்நாட்டுத் தேவையை அதிகரித்திட வேண்டும். இதற்கு மிகப்பெரிய அளவில் உள்நாட்டுத் தொழில்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
உலகப் பொருளதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மார்க்சிஸ்ட் கட்சி ஏழு விதமான நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.
ஆண்டுத் திட்டச் செலவினத்தை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவிதமாக உயர்த்திட வேண்டும். இப்போது இத 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு, குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு, குறிப்பிட்ட சிறப்பு நிவாரணத் திட்டங்களை அறிவித்திட வேண்டும். அத்தொழில் மையங்களில் வேலைபார்ப்போரக்கு வேலை மற்றும் ஊதியம் வெட்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேளாண்மை மற்றும் பாசனத்துறையில் பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு விலைவீழ்ச்சி ஏற்பட்டால் ஆதரவு விலை அளித்து விவசாயிகளைக் காப்பாற்றிட வேண்டும், இறக்குமதிக் கட்டணங்களை உயர்த்திட வேண்டும்.
வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நாடு முழுமைக்கும் - கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகர்ப்புறங்களுக்கும் - விரிவாக்கிட வேண்டும்.
பொது விநியோக முறையை அனைவருக்கும் அமல்படுத்தி, பதினான்கு அத்தியதாவசியப் பண்டங்களை அதன்மூலம் அளித்திட வேண்டும்.
மாத ஊதியம் வாங்கும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு வருமானவரியிலிருந்து நிவாரணம் அளித்திட வேண்டும். கறுப்புப்பணக்காரர்கள், பணம்படைத்தவர்கள், ஊகவணிகர்கள் மீதான வரிகளை அதிகரித்திட வேண்டும்.
நிதித்துறையை முறைப்படுத்தி, ஊகவணிகம் வாயிலாக நாட்டிலிருந்து வெளியே செல்லும் அல்லது உள்ளேவரும் நிதியை, கறாராகக் கட்டுப்படுத்திட வேண்டும். நாட்டின் நிதிப் புழக்கத்தை அரசு தன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
ஐமுகூ அரசாங்கம் மற்றும் தேஜகூ அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கட்சி இத்தகைய மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறது.
உலகப் பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற, வாக்காளர்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் வாக்களித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----

Friday, March 27, 2009

பெரும்பான்மை மதவெறி, பயங்கரவாதத்தை முறியடித்திடுவோம் - மதச்சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்திடுவோம்:பிரகாஷ்காரத்


புதுடில்லி, மார்ச் 27-
பாஜக கிளப்பிவிடும் பெரும்பான்மை மதவெறிப் பிரச்சாரம் மற்றும் செயல்பாடகளையும், பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்து முறியடித்திடுவோம், கிறித்துவ, முஸ்லீம் மற்றும் பல்வேறு மதச்சிறுபான்மையினர்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் வெள்ளியன்று மாலை செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் சார்பில், ‘‘வகுப்புவாத சக்திகளை முறியடித்திடுவோம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’’ மற்றும் ‘‘சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்திடுவோம்’’ என்னும் தேர்தல் பிரச்சாரத்திற்கான சிறுபிரசுரங்களை வெளியிட்டு, பிரகாஷ்காரத் பேசியதாவது:
‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட சொன்னதற்கிணங்க, தொடர்ந்து கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கான சிறுபிரசுரங்களை வெளியிட்டு வருகிறோம். இன்றைய தினம் ‘‘வகுப்புவாத சக்திகளை முறியடித்திடுவோம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’’ என்னும் சிறுபிரசுரத்தையும், ‘‘சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்திடுவோம்’’ என்னும் சிறுபிரசுரத்தையும் வெளியிடும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நான், தேர்தல் அறிக்கை வெளியிடப்படட அன்று, ‘‘நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவையும், காங்கிரசையும் தோற்கடிப்போம்’’ என்று அறைகூவல் விடுத்தோம். பாஜக-வானது நாட்டில் பெரும்பான்மை மதவெறி சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியாகும். வருண்காந்தியின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான மதவெறிப் பேச்சுக்களை அவர்கள் நியாயப் படுத்துவதிலிருந்தே இதனைத் தெரிந்து கொள்ள முடியும்.
வருண்காந்தியின் மதவெறிப் பேச்சு மட்டுமல்ல. 2007இல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போதுகூட பாஜக கட்சியானது, மதவெறிப் பிரச்சாரம் அடங்கிய ஒரு குறுந்தகட்டைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியிட்டது. அதற்கெதிராக நாடுமுழுதும் கடும் கண்டனக் கணைகள் வந்தன. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதன் மீது 2007 மே மாதம் நடவடிக்கை எடுத்தது. மேற்படி குறுந்தகட்டில் உள்ள சாராம்சம் குறித்து பாஜக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஆரம்பத்தில் பாஜக அந்தக் குறுந்தகட்டில் உள்ள சங்கதிகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றுதான் கூறியதேயொழிய, கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் பாஜகவின் நிலைபாட்டை நிராகரித்து, கண்டனம் தெரிவித்தேயாக வேண்டும் என்று கட்டளையிட்டது. அதன்பின்னர்தான் பாஜக கண்டனம் தெரிவித்தது. இதுதான் பாஜகவின் ‘பண்பாடு’ ஆகும். இந்த வழியில்தான் அது தன் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில், குறிப்பாக மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் எல்.கே. அத்வானி பேசிய பேச்சுக்களை ஒருவர் ஆராய்ந்தாரானால், வருண்காந்தியைப் போன்றே அவரும் பேசியிருப்பதை அறிய முடியும். இந்தவழியில்தான் எண்ணற்ற பாஜகவின் தலைவர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக, வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பேசுவது, அக்கட்சியின் பிரச்சார உத்தியின் ஒரு பகுதியாகும்.
இத்தகைய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் என்பது துரதிர்ஷ்டவசமாக பேச்சோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அதனைத் தங்களுக்கு வாய்ப்பு உள்ள இடங்களில் செயலிலும் காட்டிவிடுகிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில், நாட்டின் பல பகுதிகளில் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை நாமறிவோம். இவர்களின் மதவெறி நடவடிக்கைகளுக்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு, கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சம்பவமாகும். அங்கு ஓர் உணவு விடுதியில் நேற்று இளம் தம்பதிகள் இந்துமதவெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். ‘அவர்கள் பார்வைக்கு இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் போல் இருந்ததாகச் சந்தேகப்பட்டு’ இவ்வாறு தாக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகு மோசமான சம்பவங்கள் கர்நாடகத்தில் தொடர்கதையாகிவிட்டன. இவ்வாறு பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிறித்துவ மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பல்வேறு காரணங்களைக் கூறி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அவர்கள், தங்கள் மதத்தைத் தழுவுவதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மதச்சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இளம்பெண்களை இந்துத்வா வெறியர்கள் பல்வேறு வகைகளிலும் தாக்கி வருகின்றனர். இவ்வாறு கர்நாடகா மாநிலம் முழுதும் நடைபெற்று வருகிறது.
பாஜக-வானது தங்களுடை இந்துத்வா கொள்கையைத் தீவிரமாகப் பிரயோகிப்பதை ஒத்திவைத்திருக்கிறோம் என்று இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் கண்துடைப்பு வேலை. வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அவர்கள் மதவெறி நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள் என்பதே உண்மை.
‘பெரும்பான்மை வகுப்புவாதம்’ (majority communalism) என்னும் தத்துவத்தை வரித்துக்கொண்டிருக்கும் பாஜக-வானது எப்போதுமே ‘மதச்சிறுபான்மையினர் முகஸ்துதி’ செய்யப்படுகிறார்கள் என்கிற பொய்ப்பிரச்சாரத்தையும் செய்து வருகிறது.
நீதியரசர் சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து அவர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக எண்ணற்றப் பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், அவற்றை நிறைவேற்ற ஆட்சியிலிருந்த ஐமுகூ அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் எடுத்திடவில்லை. சச்சார் குழு அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைப்போல் முஸ்லீம் மக்களுக்கு, இடஒதுக்கீட்டிலும், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டிலும் துணைத் திட்டம் (sub plan) கொண்டுவர வேண்டும் என்று பிரதமரைப் பார்த்து வலியுறுத்தினோம். நாங்கள் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கத்தில் இவ்வாறு கொண்டு வந்திருக்கிறோம். கேரளாவிலும் சில நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். ஆனால் மத்திய அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது.
மத்திய அரசும், திட்டக் கமிஷனும் துணைத் திட்டத்தை ஏற்காததால், பல மாநில அரசுகளால் இதற்கான நிதியைப் பெற முடியாமல் ஊனப்பட்டிருக்கின்றன.
பயங்கரவாதம்
பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில பயங்கரவாத அமைப்புகளில் முஸ்லீம் இளைஞர்கள் செயல்படுகிறார்கள் என்றால், வடகிழக்குப் பகுதியில் வேறுவிதமான தீவிரவாதக் குழுக்கள் செயல்படுகின்றன. உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மலேகான் போன்ற இடங்களில் பெரும்பான்மை இந்து தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் கான்பூரில் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள் தயார் செய்துகொண்டிருந்தபோது இருவர் விபத்தில் இறந்துள்ளனர். இவ்வாறு பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரவாதிகள் என்றாலே அவர்கள் முஸ்லீம்கள் என்ற முறையில் நடவடிக்கைகளில் இறங்கி, அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
எனவேதான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் அனைத்த அமைப்புகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், பல்வேறு மாநிலங்களில் செயல்படும் அமைப்புகளுக்கிடையே ஓர் ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்.
ஐமுகூ அரசு, தற்சமயம் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தை கடுமையாக்கியிருக்கிறது. இதனால் அப்பாவி மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள்.
வகுப்புவாதத்திற்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும் மதவேறுபாடின்றிப் போராடுவோம்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
பெரும்பான்மை வகுப்புவாதம் குறித்துக் கூறினீர்கள், சிறுபான்மை வகுப்புவாதம் குறித்துத் தங்கள் கருத்து என்ன என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘‘வகுப்புவாதம் என்றால் அது சிறுபான்மை வகுப்புவாதத்தையும்தான் குறிக்கும்’’ என்றும், ‘‘நாங்கள் சிறுபான்மையினர் குறித்துக் கூறும்போது, அவர்களுடை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறோம்’’ என்றார்.
(ச. வீரமணி)




Thursday, March 26, 2009

தமிழகத்தில் தரிசு நிலமே இல்லையா?கே. வரதராசன் விளக்கம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து கே. வரதராசன்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான கே. வரதராசன் செய்தியாளர்கள் சந்திப்பில்:

Wednesday, March 25, 2009

மாற்று விவசாயக் கொள்கையை முன்வைத்திடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்திட முன்வர வேண்டும்



புதுடில்லி, மார்ச் 25-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் புதனன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ‘‘வேளாண்மைத்துறையில் ஐமுகூ அரசாங்கத்தின் பொய்கள், வஞ்சகம் மற்றும் ஏமாற்று’’என்னும் மக்களவைத் தேர்தல் பிரச்சார பிரசுரத்தை வெளியிட்டு எஸ். ராமச்சந்திரன் பிள்ளை மற்றும் கே.வரதராசன் பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:
‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஐமுகூ அரசாங்கம் வேளாண்மைத் துறையில் கூறுகின்ற பொய்கள், வஞ்சகம் மற்றும் ஏமாற்றை விளக்கி ஒரு சிறுபிரசுரத்தையும் ‘பாரத் நிர்மாண்’ என்னும் ஆட்சியாளர்களின் திட்டம் கிராமப்புற இந்தியாவிற்கு அளித்திடும் ‘புதிய ஒப்பந்தமா’ அல்லது ‘மோசமான ஒப்பந்தமா’ என்னும் சிறுவெளியீட்டையும் (கடிடனநச) இப்போது வெளியிடுகிறோம்.
நம் நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. முன்பு ஆட்சி செய்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பின்னர் இப்போது ஆட்சி செய்திடும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணியும் பின்பற்றிய நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே வேளாண்மைத்துறையில் இந்த அளவிற்கு மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேளாண்மை செய்வதென்பது ஆதாயம் இல்லாத துறையாக மாறிக்கொண்டிருக்கிறது. வேளாண் செலவினம் அதிகரித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன. வேளாண்மைத்துறையின் மூலமாக வந்திடும் வருவாய், வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்லக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இல்லை. எனவேதான் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் பெரும்பான்மையோர் அதனை விட்டுவிட்டு வெளியேறிச் செல்லும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். படிப்படியாக தங்கள் கால்நடைகளை விற்றும், நிலங்களை விற்றும் விவசாயத் தொழிலாளர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்குத் தேவையான கடன் வசதிகளை அரசாங்கம் அரசு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாகத் தருவது சுருங்கிக்கொண்டேயிருப்பதன் காரணமாக, ஏராளமான விவசாயிகள் தனியார் கடன்வலையில் சிக்கி வெளிவரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும். பல்வேறு காரணங்களால் வேளாண்மை பொய்த்துப் போவதை அடுத்து, விவசாயிகளால் தாங்கள் தனியாரிடம் வாங்கிய கடன்களை மீள அடைக்க முடியாததன் விளைவாகவே அவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
விவசாய உற்பத்தியின் வளர்ச்சி விகிதமும் குறைந்து கொண்டிருக்கிறது. உணவு உற்பத்தியின் வளர்ச்சி விகிதமும் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ற அளவிற்கு அதிகரித்திட வில்லை. இதனால் உணவு தான்ய இருப்பில் கடும் பற்றாக்குறையை நாடு எதிர்நோக்க இருக்கிறது.
ஐமுகூ அரசாங்கம் தன்னுடைய குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் எண்ணற்ற உறுதிமொழிகளை விவசாயிகளுக்கு அளித்திருந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்ற உருப்படியான நடவடிக்கைகள் எதையும் அது எடுத்திடவில்லை. பொது முதலீட்டை அதிகரித்திடவில்லை. அரசு வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் அளிப்பதையும் விரிவாக்கிடவில்லை. விளைபொருள்களின் விலை வீழ்ச்சியிலிருந்த விவசாயிகளைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் அது எடுத்திடவில்லை. அதேபோன்று விவசாயத் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கும் ஓர் ஒருங்கிணைந்த மத்தியச் சட்டத்தை அது கொண்டுவர மறுத்தது. விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்திட அது தவறிவிட்டது. நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் விநியோகிக்கப்படவில்லை. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் அது அளித்திட்ட எந்த உறுதிமொழியையும் அது அமல்படுத்தவில்லை. எனவேதான் கடந்த நான்காண்டுகளில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு விவசாயத்துறையில் ஐமுகூ அரசாங்கம் முழுமையாகத் தோல்வி கண்டுவிட்டது.
மாற்று விவசாயக் கொள்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். விவசாயத் துறையை அனைவரும் விரும்பி ஏற்கும் வண்ணம் அதனை மாற்றி இருக்கிறோம். விவசாயிகளுக்கு கட்டுப்பாடியான விலை கிடைக்கக்கூடிய வகையில், பொது முதலீட்டை அதிகப்படுத்தக்கூடிய விதத்தில், அரசுக் கடன்களை விவசாயிகளுக்கு விரிவாக்கக்கூடிய விதத்தில் மாற்றி அமைத்திருக்கிறோம்.
எனவே, மக்கள் இத்தகைய மாற்று விவசாயக் கொள்கையை முன்வைத்திடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு எஸ்.ராமச்சந்திரன் பிள்ளையும், கே.வரதராசனும் கூறினார்கள்.
*****

Tuesday, March 24, 2009

14வது மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த-நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி?


நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் பதினான்காவது மக்களவையில் மிகவும் ஆக்கபூர்வமாகவும், செயலூக்கத்துடனும் செயல்பட்ட ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறப்படும் அதே சமயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்ஙனம் செயல்பட்டிருக்கிறார்கள் என்று ஆராயும்போது அதிர்ச்சிதான் வருகிறது.
நாடாளுமன்ற மக்களவை சார்பில் உள்ள இணையதளத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்ற விவாதங்களின் எண்ணிக்கை மற்றும் விவாதங்ளின் குறிப்புகளும் அவர்களால் முன்வைக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் முன் எடுத்துக்கொள்ளப்பட்ட கேள்வி - பதில்களின் விவரங்களும் தரப்பட்டுள்ளன.
அதனைக் கண்ணுறும்போது, தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, ஆ. ராசா, மணிசங்கர் ஐயர், ஆர்.வேலு, வெங்கடபதி, ரகுபதி, இ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ராதிகாசெல்வி ஆகிய பத்து பேரும் அமைச்சர்களாகிவிட்டார்கள். மீதமுள்ள 29 பேர் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள்?
சென்ற மக்களவையில் மத்தியரயில்வே இணை அமைச்சகராக இருந்த ஏ.கே. மூர்த்தி, இந்தத் தடவை அவையில் வாயே திறக்கவில்லை. காங்கிரஸ் உறுப்பினரான பிரபு 9 தடவைகளும், மதிமுக உறுப்பினரான ஜிஞ்சி ராமச்சந்திரன் 11 தடவைகளும், காங்கிரஸ் உறுப்பினர்களான ராணி, தனுஷ்கோடி ஆதித்தன், திமுக உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் 14 தடவைகளும், பாமகவைச் சேர்ந்த தனராஜூ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் மற்றும் மதிமுக எல்.கணேசன் 17 தடவைகளும் விவாதங்களில் பங்கேற்றிருக்கின்றனர்.
இதற்கு அடுத்ததாக, கே.வி. தங்கபாலு (காங்கிரஸ்) 21 தடவைகளும், இ. பொன்னுசாமி (பாமக) 25 தடவைகளும், டி.வேணுகோபால் (திமுக) 27 தடவைகளும், ஏ.கே.எஸ். விஜயன், காதர்முகைதீன் (திமுக) 28 தடவைகளும், விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த சமயத்தில் செயல்பட்டதுதான். அதன்பின்னர் அவர் வாயே திறக்கவில்லை. கேள்விகளும் எதுவும் தாக்கல் செய்திடவில்லை. மற்ற உறுப்பினர்கள் கணிசமான அளவிற்கு விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகள் தாக்கல் செய்து பதில்களை வரவழைப்பது என்பது ஒரு கலை. இதிலும் தமிழக உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட்டிருக்கிறார்கள்?
ஏ.கே.எஸ். விஜயன், டி. வேணுகோபால், கே.வி.கே. தங்கபாலு ஜிஞ்சி ராமச்சந்திரன், சி. கிருஷ்ணன், தயாநிதிமாறன் ஆகியோர் ஒரு கேள்வி கூட தாக்கல் செய்யவில்லை. பவானி ராஜேந்திரன் (திமுக) 2 கேள்விகளும், காதர்முகைதீன் (திமுக) 5 கேள்விகளும், கிருஷ்ணசாமி (திமுக) 9 கேள்விகளும், பிரபு (காங்) 12 கேள்விகளும் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர்.
இதுதான் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக உறுப்பினர்களில் சிலரின் செயல்பாடுகளாக டில்லியில் இருந்திருக்கிறது. மற்றவர்களைப் பொறுத்தவரை சராசரிக்கும் மேலேயே செயல்பட்டிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொ. மோகன் 88 தடவைகள் விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். 187 கேள்விகள் தாக்கல் செய்திருக்கிறார். ஏ.வி. பெல்லார்மின் 75 தடவைகள் விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். 171 கேள்விகள் தாக்கல் செய்திருக்கிறார்.
மக்களவையில் பொ. மோகன் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. அப்பாதுரை விவாதங்களின்போது தமிழில் உரை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமைத்திடுவோம் - இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் அறைகூவல்


புதுடில்லி, மார்ச் 24,
மத்தியில் மதச்சார்பற்றஅரசாங்கத்தை அமைத்திடுவோம் என்று இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.
இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சார்பில் செய்தியாளர்கள் கூட்டம் செவ்வாயன்று மதியம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மற்றும் டி.ராஜா, பார்வர்ட் பிளாக் சார்பில் தேவபிரத பிஸ்வாஸ் மற்றும் தேவராஜன், ஆர்எஸ்பி சார்பில் சந்திரசூடன் மற்றும் அபானிராய் ஆகியோர் கலந்துகொண்டார்கள். அப்போது பிரகாஷ்காரத் கூறியதாவது:
‘‘இடதுசாரிக் கட்சிகள் சேர்ந்து, பதினைந்தாவது மக்களவைக்கான அறைகூவலை விடுக்கிறது. இவ்வனைத்துக் கட்சிகளும் தேர்தலையொட்டி ஏற்கனவே தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. இப்போது நாங்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கடந்த ஐந்தாண்டுகளில் ஒன்றிணைந்து இடதுசாரிக் கட்சிகள் புரிந்திட்ட பங்களிப்பினையும், வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் விவாதித்து, தங்களுக்கு அளித்திருக்கிறோம். எனவே அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில்ல ஐமுகூ அரசாங்கத்துடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து அம்சங்களிலும் இடதுசாரிக் கட்சிகள் தலையிட்டிருக்கின்றன. ஐமுகூ அரசாங்கம் மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுத்தபோதெல்லாம் இடதுசாரிக் கட்சிகள் உரிய நேரத்தில் தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன. ஐமுகூட்டணி குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு எதிராகச் சென்றபோதெல்லாம் அதனைத் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில் இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்ட நிலைப்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றியிருக்கிறோம் என்பதையும் அதேபோன்று நாட்டின் இறையாண்மை யையும், மக்களின் நலன்களையும் வாழ்வாதாரத்தையும் இடதுசாரிக் கட்சிகள் காப்பாற்றி இருக்கின்றன என்பதையும் இன்றையதினம் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இரண்டாவதாக, பாஜக மற்றும் அதனுடன் இணைந்த மதவெறி சக்திகளும் மக்கள் மத்தியில் மதவெறி உணர்வை எழுப்ப முயற்சித்த போதெல்லாம் அவற்றை உறுதியாக எதிர்த்துநின்று அவற்றின் செயல்பாடுகளில் உள்ள கேடுபயக்கும் அம்சங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வந்துள்ளோம்.
மூன்றாவதாக இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் ஒரு பரந்த மேடையையும் கட்டியிருக்கிறோம்.
இத்தகைய மாற்றுக் கொள்கைகள், ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தை மத்தியில் அமைப்பதற்கான அடிப்படையாக அமைந்திடும் என்று நாங்கள் நம்புகிறோம். பொருளாதாரக் கொள்கைகள், சமூகநீதி மற்றும் சமூகநலக் கொள்கைகள், சுயேட்சைமயான அயல்துறைக் கொள்கை மற்றும் முக்கிய பல அம்சங்களை வடித்திருக்கிறோம். இதன் அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகளை வலுப்படுத்தி, மத்தியில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைந்திட அனைவரும் முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
ஏ.பி.பரதன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசியதாவது:
‘‘இன்றையதினம் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இடதுசாரிக் கட்சிகள் எதிர்மறை அணுகுமுறையோடு நடந்துகொண்டதாக விமர்சித்திருக்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த சட்டமுன்வடிவுகளை யெல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். தகவல் அறியும் சட்டமுன்வடிவாக இருந்தாலும் சரி அல்லது தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவாக இருந்தாலும் சரி அல்லது பழங்குடியினர் வனஉரிமைகள் பாதுகாப்புச் சட்டமாக இருந்தாலும் சரி அவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது அதன் ஷரத்துக்கள் எங்ஙனம் இருந்தன, இடதுசாரிக் கட்சிகள் அவற்றில் தலையிட்டு, உரிய திருத்தங்களைச் செய்தபின் அதன் ஷரத்துக்கள் எங்ஙனம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்றும் பாருங்கள். எந்த அளவிற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட்டிருக்கின்றன என்பது புரியும். இவ்வாறு உண்மையில் இடதுசாரிக் கட்சிகள் ஆக்கபூர்வமாகத்தான் செயல்பட்டிருக்கின்றனவே ஒழிய, எதிர்மறையில் அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியாளர்கள் பல பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்க்க முயற்சித்தார்கள். அதனை இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தியுள்ளன. இது ஆக்கபூர்வமான அணுகுமுறையா அல்லது எதிர்மறையான அணுகுமுறையா என்று கேட்க விரும்புகிறேன்.
வங்கித்துறையில், இன்சூரன்ஸ் துறையில் ஒட்டுமொத்தத்தில் நிதித்துறையில் தனியார் பங்குகளை அதிகரித்த ஆட்சியாளர்கள் முயற்சித்தபோது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதன்மூலம் வங்கித்துறையைக் காப்பாற்றியுள்ளோம்.
இவ்வாறு இடதுசாரிக்கட்சிகள் ஆக்கபூர்வiமாகச் செயல்பட்டு உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் காப்பாற்றியிருப்பது இடதுசாரிக் கட்சிகள்தான். இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் செயல்படாதிருந்திருந்தால் இந்தியாவின் பொருளாதாரமே நிலைகுலைந்து போயிருக்கும்.
எதிர்காலத்தில் நாட்டின் மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட, மதச்சார்பற்ற ஜனநாயகம் காக்கப்பட, நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து போராடி வந்துள்ளன.
இவ்வாறு கடுமையாகப் போராடிவரும் இடதுசாரிக் கட்சிகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பதினான்காவது மக்களவையில் இருந்த உறுப்பினர்களைவிட அதிக அளவில் பதினைந்தாவது மக்களவையில் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பிவைத்திடுமாறு இந்திய மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு ஏ.பி.பரதன் கூறினார்.
---

Monday, March 23, 2009

brinda video


அமோக விளைச்சல் இருந்தும் மக்களை பட்டினியால் துடிக்க வைத்த பாஜக, காங். அரசுகள் பிருந்தா காரத் குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 23-‘விலைவாசி உயர்வு, பஞ்சம், ஊட்டச்சத்துக் குறைவு: சாமானிய மக்களுக்கு காங்கி ரஸ் தலைமையிலான அரசாங் கத்தின் பரிசுகள்’ என்னும் தலைப்பிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சார பிரசுரத்தை, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் பிருந்தாகாரத் எம்.பி., திங்களன்று வெளியிட்டார்.டில்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவ லகமான ஏ.கே.கோபாலன் பவனில், நடைபெற்ற செய்தியா ளர்கள் கூட்டத்தில் இப்பிரசு ரத்தை வெளியிட்டு, பிருந்தா காரத் பேசியதாவது:பதினைந்தாவது மக்கள வைத் தேர்தலையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல் வெளியீடாக, ‘விலைவாசி உயர்வு, பஞ்சம், ஊட்டச்சத்துக் குறைவு: சாமா னிய மக்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத் தின் பரிசுகள்’ என்னும் தலைப் பிலான பிரசுரத்தை வெளியிடு கிறோம். இதைப் போல் மேலும் பதினான்கு பிர சுரங்கள் அடுத்தடுத்து சில நாட்களில் வெளியிடப்பட இருக்கின்றன. உலகில் பசி-பஞ்சத்துடன் உள்ள நாடுகளில் முக்கியமான ஒன்றாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. இதனை ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சாமானிய மக்கள் பட்டினி யிலும் பஞ்சத்திலும் உழன்று கொண்டிருப்பதைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத ஆட்சியாளர்கள், ‘ஜெய்ஹோ’ என முழங்கிக் கொண்டிருக் கின்றனர். ஐ.மு.கூட்டணி அரசாங்கத் திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் கீழ்தான் ஆதரவு அளிக்க முன்வந்தன. அப்போது பொதுவிநியோக முறையை வலுப்படுத்த வேண்டும் என்றும், போலியான, மோசடியான ‘வறுமைக்கோட் டிற்குக் கீழ்’ என்றும் ‘வறுமைக் கோட்டிற்கு மேல்’ என்றும் மக்களைப் பிரிக்கும் முடிவை ரத்து செய்துவிட்டு, அனைவ ருக்கும் பொதுவான பொது விநியோக முறையை அமல் படுத்த வேண்டும் என்றும் வலி யுறுத்தினோம். ஆட்சியாளர் கள் வறுமைக்கோட்டுக்கு நிர் ணயித்திருக்கிற கணக் கீட்டின்படி கிராமப்புறங்களில் 11 ரூபாய்க்கு மேலும், நகர்ப் புறங்களில் 17 ரூபாய்க்கு மேலும் ஊதியம் பெறும் அனைவரும் வறுமைக்கோட் டுக்கு மேலே வந்து விடுகிறார் கள். எனவே இவர்களுக்கு பொது விநியோக முறையில் உணவுப் பொருள்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. என்னே கொடுமை? இதனை மாற்ற வேண்டும் என்று கடந்த ஐந்தாண்டு காலமாகக் கோரி வருகிறோம். ஆட்சியாளர்கள் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இன்றைய நிலைமை என்ன? விளைச்சல் அமோகமாக இருந் தும், மக்கள் பட்டினியால் துடித்துக் கொண்டிருக்கிறார் கள். இத்தகைய அரசின் கொள் கைகளில் மாற்றத்தை ஏற் படுத்தி, சாமானிய மக்களை வாழ வைத்திட வேண்டும் என் பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம். இதனை, முன்பு ஆட்சியிலிருந்த பாஜகவும் செய்யாது, இப்போது ஆட்சி யிலிருக்கும் காங்கிரசும் செய் யாது. இவர்களுக்கு மாற்றாக இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் தலைமையிலான மாற்று மதச்சார்பற்ற அரசாங் கம் மத்தியில் அமைந்தால்தான் இது சாத்தியம். (ந.நி.)

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரகாஷ்காரத் பேச்சு



புதுடில்லி, மார்ச் 16-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திங்களன்று மதியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, எம்.கே. பாந்தே, முகமது அமீன் மற்றும் பிருந்தா காரத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரகாஷ்காரத் பேசியதாது:
‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கையானது எங்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையாகும். இதனை அடுத்து, அடுத்த சில நாட்களில் இடதுசாரிக் கட்சிகள் சார்பாக, ஒரு வேண்டுகோளையும் வெளியிட, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் அனைவரும் சேர்ந்து தீர்மானித்திருக்கிறோம்.
பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெறும் வரவிருக்கும் தேர்தலில் மக்கள் காங்கிரசையும், பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும் என்றும், இடது மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தக்கூடிய வகையில், மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமையக் கூடிய விதத்தில், வாக்களிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஏனெனில், காங்கிரஸ் தலைமையிலிருந்த கடந்த ஐந்தாண்டு கால ஐமுகூ அரசாங்கமானது, மக்களுக்குப் பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்து விட்டது. இதனை அறிக்iயில் முதல் பகுதியில் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் ஆட்சியில் சமூகத்திலிருந்த ஏற்றத்தாழ்வுகள்மேலும் ஆழமாகிவிட்டன. பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மிக மோசமான நிலைக்கும் மாறியுள்ளனர். ஐமுகூ ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைதான் இத்தகைய ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகிடக் காரணமாகும்.
கடந்த நான்கு ஆண்டு காலமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம் என்று அரசு தொடர்ந்து பீற்றிக்கொண்டு வருகிறது. ஆனால் இதன்காரணமாக ஒருசில பெரும் பணக்காரர்களைத்தான் உருவாக்க முடிந்திருக்கிறதேயொழிய, சாமானிய மக்களுக்கு மேலும் மேலும் துன்பதுயரங்களைத்தான் கொண்டு வந்திருக்கிறது.
ஐமுகூ ஆட்சியை, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடி.ப்படையில்தான் இடதுசாரிக் கட்சிகள் ஆதரித்தன. ஆனால், அவற்றில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றிற்கு எதிராகத்தான் அது செயல்பட்டது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட விவசாய நெருக்கடியைத் தீர்த்திட முடியவில்லை. நெருக்கடிக்கு ஆளான விவசாயிகள் இன்றும் தற்கொலைகள் செய்வது தொடர்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையான முறையில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஆட்சியாளர்கள் பணவீக்கம் 4 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள் பொது விநியோக முறையை சீர்குலைப்பதில்தான் குறியாக இருந்தார்களேயொழிய, அதனை வலுப்படுத்திட முன்வரவில்லை. நாம் இந்த அரசை ஆதரித்துக் கொண்டிருந்த சமயத்திலும்கூட, ஆட்சியாளர்களின் பணக்காரர் ஆதரவுக் கொள்கைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த சமயத்தில், மன்மோகன்சிங் - ப.சிதம்பரம் வகையறாக்கள் பெரும் பணக்காரர் ஆதரவு நிலைபாட்டினையே மேற்கொண்டார்கள். பங்குச்சந்தையில் கொள்ளைலாபம் அடிப்போரிடமிருந்து வரி வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஊகவர்த்தகத்தில் நடைபெறும் வரிமோசடிகளைத் தடுத்திட நடவடிக்கைகள் கோரினோம். ஆனால் எதையும் செய்ய அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
நம்மைப் பொறுத்தவரை, நாட்டில் பெரும்பணக்காரர்களுக்கும் சாமானிய மக்களுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இடைவெளி ஏற்பட்டிருப்பதற்கு, ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளே காரணமாகும்.
வகுப்புவாதத்திற் எதிராக....
அடுத்ததாக, 2004ஆம் ஆண்டு, நாம் ஏன் மதச்சார்பற்ற அரசாங்கமாகத் தன்னைக் கூறிக்கொண்ட ஐமுகூ அரசாங்கத்தை ஆதரித்தோம். ஏனெனில் மதவெறி பாஜக தலைமையிலான கூட்டணியைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவ்வாறு செய்தோம். ஆனால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆராந்தோமானால், அது மதவெறி சக்திகளுக்கு எதிராக, நடவடிக்கைள் எடுக்கத் தயங்கியதையும், ஊசலாடியதையும், அவற்றுடன் சமரசம் செய்து கொண்டதையும் பார்த்தோம். ஒரிசாவில் கிறித்தவ சிறுபான்மையினர் தாக்கப்பட்டனர். கர்நாடகாவில் இந்து - முஸ்லீம் மாணவர்கள் நட்புடன் இருப்பதையே சகித்துக்கொள்ள முடியாமல், தாக்குதல் தொடுத்தனர். நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் மதவெறியர்களுக்கு எதிரான பரிந்துரைகள் எதையும் அமல்படுத்திட முன்வரவில்லை.
ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக....
ஐமுகூ ஆட்சியாளர்களின் அயல்துறைக் கொள்கையைப் பொறுத்தவரை, அது மாபெரும் துரோகம் இழைத்துவிட்டது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வரையறுக்கும்போதே, இந்தியா சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றும் என்ற உறுதிமொழியை உத்தரவாதப்படுத்தியிருந்தோம். அதில், அமெரிக்காவுடனான போர்த்தந்திர உடன்பாடு (ளவசயவநபiஉ யடடயைnஉந) குறித்து எதுவும் குறிப்பிடப்பட வில்லை. அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணி வேண்டாம் என்று நாம் இந்த அரசிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்தினோம். ஆனால் நாம் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதற்கு அவர்கள் கூறிய காரணம், நாட்டிற்கு யுரேனியம் தேவைப்படுகிறது என்றும், அது இல்லாமல் நம் நாட்டில் உள்ள அணு உலைகளை இயக்க முடியாது என்றும் கூறினார்கள். ஆனால் நம் நாட்டிலேயே யுரேனியத்தைத் தோண்டி எடுத்திருக்க முடியும் என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி, தன்னுடைய அறிக்கையில் சாடியிருக்கிறார். ஆயினும் ஆட்சியாளர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமெரிக்காவிடமிருந்து அணு உலைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். இதன் காரணமாக நாம் 38 ஆயிரம் கோடி ரூபாய் அளிவிற்கு அணுஉலைகளை இறக்குமதி செய்ய இருக்கிறோம். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கட்டணமும் கடுமையான அளவில் இருந்திடும். இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
நாட்டின் அயல்துறைக் கொள்கையைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தலைமையிலான அரசு துரதிர்ஷ்டவசமாக அணிசேராக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. அதனால்தான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன.
ஐமுகூ அரசுக்கு அதன் முதல் நான்கு ஆண்டுகாலம் நாம் ஆதரவு அளித்தவந்த சமயத்தில், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்ட உறுதிமொழிகளை அது நிறைவேற்றிட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் அதில் எண்ணற்ற திருத்தங்களைக் கொண்டுவந்தோம். அவ்வாறு நாம் கொண்டுவந்திராவிடில் அந்தச் சட்டமே பயனற்றுப் போயிருந்திருக்கும். அதேபோல் பழங்குடியினர் வன உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் ‘கட்-ஆப்’ ஆண்டுகள் தொடர்பாக நாம் திருத்தம் கொண்டுவந்திராவிட்டால் இந்நேரம் பழங்குடியின மக்கள் வனங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்கள்.
ஐமுகூ அரசாங்கம், நாட்டில் தனியார் வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க முயற்சித்தது. அதேபோல் காப்பீட்டுத்துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டின் வரம்பை அதிகரித்திட முயன்றது. இவற்றை நாம் உறுதியுடன் தடுத்திருந்திருக்காவிட்டால், உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் நம் நாட்டில் உள்ள தனியார் வங்கிகள் அனைத்தும் காணாமல் போயிருந்திருக்கும். இன்சூரன்ஸ் துறையும் கடுமையான அளவில் சிதைந்து போயிருக்கும்.
நாட்டின் அயல்துறைக் கொள்கையின் இரு விஷயங்கள் முக்கியமாகச் செய்யப்பட வேண்டியிருக்கிறது. முதலாவதாக, அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டணி ரத்து செய்யப்பட வேண்டும். மற்ற பல்வேறு அம்சங்கள் குறித்து உறவுகள் இருப்பதில் தவறில்லை. ஆனால் ராணுவக் கூட்டு ரத்து செய்யப்பட வேண்டும். இதனையொட்டியுள்ள 123 ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட வேண்டும். இதையெல்லாம் எப்படிச் செய்வது என்பதை புதியஅரசாங்கம் பொறுப்பேற்கும்போது அறிவித்திடுவோம்.
நேற்றையதினம் ஒன்பது கட்சிகள் நம்முடன் இணைந்து செயல்பட முன்வந்திருக்கின்றன. இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அவை நாம் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றன.
மேலேகூறிய கருத்துக்களின் அடிப்படயில் மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட ஒரு மாற்று அரசாங்கத்தை மத்தியில் அமைத்திடுவோம். இந்த அரசாங்கமானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணிக்கும் மாற்றாக அமைந்திடும். பல கட்சிகள் இப்போது நம்முடன் வந்திருக்கின்றன. மேலும் பல கட்சிகள் தேர்தலுக்குப்பின் முடிவுகள் மேற்கொள்வதாக அறிவித்திருக்கின்றன.
இவ்வாறு மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணி மத்தியில் ஆட்சியில் அமைந்திடும். அதற்கேற்ற முறையில் நாம் செயல்படுவோம்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார். இலங்கையில் நடைபெறும் போரில் தமிழர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி இருப்பது தொடர்பாக ஒரு செய்தியாளர் கேட்டபோது, பிரகாஷ்காரத், ‘‘இதில் இரு அம்சங்கள் அடங்கியிருக்கின்றன. ஒன்றுபட்ட இலங்கைக்குட்பட்ட நிலையில் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் இந்தப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இலங்கையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கக்கூடிய வகையில் 13 திருத்தங்களைச் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இலங்கை அரசும் செய்வதாக வாக்குறுதி அளிக்கிறதேயொழிய இதுவரை செய்யாமல் காலம் கடத்தி வருகிறது.அத்திருத்தங்களை அமல்படுத்திட வேண்டும். அவற்றைச் செய்திடாமல் அரசியல் தீர்வு சாத்தியமில்லை. இதனை ஐ.நா. ஸ்தாபனம் மற்றும் பல நாடுகள் அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் செய்திட வேண்டும். இரண்டாவதாக, சண்டை நடைபெறும் பகுதியில் உடனடியாக போர் இடைஓய்வு செய்யப்பட வேண்டும். சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் போர் நடைபெறும் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட வேண்டும். அதற்கு இலங்கை அரசும், எல்டிடியு-உம் முன்வர வேண்டும். ’’ என்று கூறினார்.
---


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சார பிரசுரம்


, மார்ச் 23-‘விலைவாசி உயர்வு, பஞ்சம், ஊட்டச்சத்துக் குறைவு: சாமானிய மக்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பரிசுகள்’ என்னும் தலைப்பிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கான சிறுபிரசுரத்தை, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் திங்களன்று மாலை வெளியிட்டார்.தலைநகர் டில்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில், திங்களன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்பிரசுரத்தை வெளியிட்டு, பிருந்தாகாரத் பேசியதாவது:‘‘மிகவும் முக்கியமான பதினைந்தாவது மக்களவைத் தேர்தலையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கான சிறுபிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன. அதன் முதல் வெளியீடாக, ‘விலைவாசி உயர்வு, பஞ்சம், ஊட்டச்சத்துக் குறைவு: சாமானிய மக்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பரிசுகள்’ என்னும் தலைப்பிலான பிரசுரத்தை இப்போது உங்கள்முன் வெளியிடுகிறோம். இதைப்போல் மேலும் பதினான்கு பிரசுரங்கள் அடுத்தடுத்து சில நாட்களில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களால் வெளியிடப்பட இருக்கின்றன. இன்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய விதத்தில், விலைவாசி உயர்வு மற்றும் வளர்ந்துவரும் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்பான இச்சிறுபிரசுரம் வெளியிடப்படுகிறது. இந்தியா தற்போது, உலகில் பசி-பஞ்சத்துடன் உள்ள நாடுகளில் முக்கியமான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனை ஐ.நா. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சாமானிய மக்கள் பட்டினியிலும் பஞ்சத்திலும் உழன்றுகொண்டிருப்பதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத ஆட்சியாளர்கள், ‘ஜெய்ஹோ’ கோஷத்தை முழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஒருகுறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின்கீழ்தான் ஆதரவு அளிக்க முன்வந்தன. அப்போது பொதுவிநியோக முறையை வலுப்படுத்த வேண்டும் என்றும், போலியான, மோசடியான ‘வறுமைக்கோட்டிற்குக் கீழ்’ என்றும் ‘வறுமைக்கோட்டிற்கு மேல்’ என்றும் மக்களைப் பிரிக்கும் முடிவை ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் பொதுவான பொது விநியோக முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆட்சியாளர்கள் வறுமைக்கோட்டுக்கு நிர்ணத்திருக்கிற கணக்கீட்டின்படி கிராமப்புறங்களில் 11 ரூபாய்க்கு மேலும், நகர்ப்புறங்களில் 17 ரூபாய்க்கு மேலும் ஊதியம் பெறும் அனைவரும் வறுமைக்கோட்டுக்கு மேலே வந்துவிடுகிறார்கள். எனவே இவர்களுக்கு பொது விநியோக முறையில் உணவுப் பொருள்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. என்னே கொடுமை? இதனை மாற்ற வேண்டும் என்று கடந்த ஐந்தாண்டு காலமாகக் கோரி வருகிறோம். ஆட்சியாளர்கள் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இன்றைய நிலைமை என்ன? விளைச்சல் அமோகமாக இருந்தும், மக்கள் பட்டினியால் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அரசின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, சாமானிய மக்களை வாழ வைத்திட வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. இதனை, முன்பு ஆட்சியிலிருந்த பாஜகவும் செய்யாது, இப்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரசும் செய்யாது. இவர்களுக்கு மாற்றாக இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் தலைமையிலான மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் மத்தியில் அமைந்தால்தான் இது சாத்தியம். எனவே, அத்தகையதோர் அரசாங்கத்தை அமைத்திடக்கூடிய வகையில் மக்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு பிருந்தாகாரத் கூறினார்.

இளம் அரசியல் ஊழியர்களுக்கு - பகத்சிங்

(1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அந்தச் சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இடையே ஒருவிதமான சமரசம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் காற்று வாக்கில் செய்திகள் வந்துகொண்டிருந்தன. இந்த ஆவணத்தின் மூலம், பகத்சிங், எந்த சமயத்தில் சமரசத்தை அனுமதிக்கலாம், எப்போது அனுமதிக்கக் கூடாது என்று விளக்கினார். அவர் மேலும், காங்கிரஸ் இயக்கத்தை நடத்திய விதம், அப்படிப்பட்டதோர் சமரசத்தில் முடிவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எழுதினார். அப்போது நாட்டில் இருந்த நிலைமைகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து, இறுதியில் அவர் இளைஞர்களை, மக்கள் மத்தியில் வேலை செய்திட, தொழிலாளர்களை - விவசாயிகளை அணிதிரட்டிட, மார்க்சிய சிந்தனையைத் தழுவிடும்படியும், கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி வளர்த்திடும்படியும் அறிவுறுத்தினார். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபின், இந்த ஆவணம் மிகவும் சிதைக்கப்பட்ட வடிவத்தில் பிரசுரமானது. சோவியத் ஒன்றியம், மார்க்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் கட்சி போன்ற வார்த்தைகள் மிகவும் எச்சரிக்கையாக நீக்கப்பட்டிருந்தன. பின்னர், இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் அதன் போட்டோ நகல் ஒன்று பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.


பெறுநர் - இளம் அரசியல் ஊழியர்கள்


அன்புத் தோழர்களே, நமது இயக்கம், தற்சமயம் மிக முக்கியமானதொரு கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு கால கடும் போராட்டத்திற்குப் பின்னர், வட்ட மேசை மாநாட்டின் மூலம் அரசியலமைப்புச் சட்டத் சீர்திருத்தங்கள் தொடர்பாக சில தெளிவான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் இந்த .....* கொடுப்பதற்காக வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.தற்போதைய சூழ்நிலையில் தங்கள் இயக்கத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இதற்கு ஆதரவாக முடிவெடுக்கிறார்களா அல்லது எதிராக முடிவெடுக்கிறார்களா என்பது நமக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஏதோ ஒரு வழியில் சமரசத்தில் தான்முடியும். கட்டாயம் ஏதாவது ஒரு சமயத்தில் சமரசம் செய்து கொள்ளப்படலாம்.சமரசம் என்பது பொதுவாக நாம் நினைப்பது போல் பழிப்பிற்கும் பரிதாபத்திற்கும் உரியது அல்ல. இன்னும் சரியாகச் சொன்னால், அரசியல் போர்த்தந்திர நடவடிக்கைகளில் சமரசம் என்பது தவிர்க்க முடியாத காரணியாகும். எந்தத் தேசத்திலும் அடக்கு முறையாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இயக்கங்கள் ஆரம்பத்தில் தோல்வியுறும், மத்திய காலங்களில் சமரசங்களின் மூலம் சிறிதளவு சீர்திருத்தங்களைப் பெறும். இறுதிக் கட்டத்திலேயே - நாட்டின் அனைத்து சக்திகளையும் வாய்ப்பு வளங்களையும் முழுமையாக ஒருங்கிணைத்து - அரசாங்க எந்திரத்தைத் தகர்த்தெறிவதில் வெற்றி அடையக்கூடிய கடைசி அடியை அதனால் கொடுக்க முடியும். அப்போதும் கூட அது தோல்வியடையலாம். அதன் காரணமாக, ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொள்வது தவிர்க்க முடியாததாகலாம். இதனை ரஷ்ய உதாரணத்தின் மூலம் சிறப்பாக விளக்க முடியும்.ரஷ்யாவில் 1905ம் ஆண்டில் புரட்சி இயக்கம் வெடித்தது. எல்லாத் தலைவர்களும் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தனர். வெளிநாட்டில் தலைமறைவாய் இருந்த லெனின் நாடு திரும்பினார். அவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். மக்கள் அவரிடம் வந்து, பன்னிரண்டு நிலப்பிரபுக்கள் கொல்லப்பட்டனர் என்றும், அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இருந்த அவர்களது மாளிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் கூறினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் லெனின் அப்போது அவர்களிடம், ‘திரும்பிச் செல்லுங்கள், 1200 நிலப்பிரபுக்களைக் கொல்லுங்கள், அவர்களது அரண்மனைகளையும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கொளுத்துங்கள்’ என்றார்.அவரது மதிப்பீட்டில், ஒரு வேளை புரட்சி தோல்வியடைந்தாலும் அது ஏதோனுமொரு விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதாகும்.ரஷ்ய பாராளுமன்றமான டூமா அறிமுகப்படுத்தப்பட்டது. அதே லெனின் ரஷ்ய பாராளுமன்றமான டூமாவில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து நின்றார். 1907ல் இது நடந்தது. ஆனால் 1906ல் அவர் முதல் டூமாவில் பங்கெடுப்பதை எதிர்த்தார். காரணம், அப்போது அப்போது அதன் உரிமைகள் வெட்டிக் குறைக்கப்பட்டிருந்தன. 1907இல் சூழ்நிலைகள் மாறியிருந்தன. அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. எனவே. லெனின் டூமாவைப் பயன்படுத்தி. சமூகப் பிரச்சனைகளை விவாதிக்கும் மேடையாக மாற்றத் திட்டமிட்டிருந்தார். மீண்டும் 1917 புரட்சியின்போது, பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையில் கையெழுத்திடுமாறு போல்ஷ்விக்குகள் நிர்பந்திக்கப்பட்டபோது, லெனினைத் தவிர மற்ற அனைவருமே அதனை எதிர்த்தனர். ஆனால் லெனின், “ ‘சமாதானம்’, ‘சமாதானம்’, மீண்டும் ‘சமாதானம்’ வேண்டும். என்ன விலைகொடுத்தேனும் சமாதானம் வேண்டும். ரஷ்யாவின் பல மாகாணங்களை ஜெர்மன் யுத்தப் பிரபுகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தாலும், சமாதானம் வேண்டும்’’ என்றார். அப்போது சில போல்ஷ்விக் எதிர்ப்பாளர்கள் இந்த உடன்படிக்கைக்காக லெனினைத் தூற்றியபோது, லெனின், “ஜெர்மனியின் கடுந்தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் போல்ஷ்விக்குகள் இல்லை. எனவே, அவர்கள் போல்ஷ்விக் அரசாங்கம் முற்றாக அழித்தொழிக்கப் படுவதற்குப் பதிலாக, உடன்படிக்கையை தேர்ந்தெடுத்தனர்’’ என்று வெளிப்படையாக அறிவித்தார்.நான் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், சமரசம் என்பது, போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் இடையிடையே பிரயோகிக்கப்படவேண்டிய இன்றியமையாத ஆயுதமேயாகும். ஆனால், எதற்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோமோ அதன் லட்சியம் குறித்தும், அதில் நாம் எய்தியுள்ள சாதனைகளின் அளவு குறித்தும் சரியாகக் கணித்திட வேண்டும். இதனை நாம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே, நமது இயக்கத்தின் வெற்றி, தோல்வியை சரிபார்ப்பதற்கு நமக்கு உதவும். நமது எதிர்கால செயல் திட்டத்தையும் நம்மால் எளிதாக வகுக்க முடியும். திலகருடைய கொள்கை- அவரது குறிக்கோள் நீங்கலாக அவரது கொள்கை, அதாவது அவரது போர்த் தந்திரம் சிறப்பானது. உன்னுடைய எதிரியிடமிருந்து பதினாறு அணாக்களைப் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறாய். ஒரேயரு அணா மட்டுமே உனக்குக் கிடைக்கிறது. முதலில் அதை வாங்கிக் கொள், மீதமுள்ளவற்றிற்காகப் போராடு.



மிதவாதிகளின் போராட்டம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? அவர்கள் ஒரு அணா அடைவதை இலக்காகக் கொண்டு போராட்டத்தைத் துவங்குகின்றனர். அதையும் கூட அவர்களால் பெற முடிவதில்லை. புரட்சியாளர்கள் முழுமையான புரட்சி ஒன்றுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை, எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். முழுமையான ஆட்சியதிகாரம் தங்கள் கைகளுக்கு வரும் வரையில் அவர்களுக்கு ஓய்வில்லை. சமரசங்கள் அவர்களுக்குப் பேரச்சம் தருகின்றன. ஏனென்றால், பழமைவாதிகள், சமரசத்தைப் பயன்படுத்தி, புரட்சிகர சக்திகளை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். ஆயினும், திறமையும் துணிவும் மிக்க புரட்சித் தலைவர்களால் அத்தகைய படுகுழிகளில் இருந்து இயக்கத்தை காப்பாற்ற முடியும். அத்தகைய சூழ்நிலைகளில் - குறிப்பாக நம் லட்சியம் குறித்து - எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் மிகுந்த விழிப்புடன் இருந்திட வேண்டும். பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர்கள் தங்கள் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து, கபடவேடமிடும் ஏகாதிபத்தியவாதிகளாக சுருங்கிவிட்டனர். என்னைப் பொறுத்தவரை, இத்தகைய ஏகாதிபத்திய ஆதரவு தொழிலாளர் தலைவர்களுக்கு, கடும் பிற்போக்காளர்கள் எவ்வளவோ மேலானவர்களேயாவர். இயக்கத்தின் போர்த்தந்திரம் மற்றும் அதன் உத்திகள் (stக்ஷீணீtமீரீஹ் ணீஸீபீ tணீநீtவீநீs) குறித்து அறிந்து கொள்ள நாம் ஒவ்வொருவரும் லெனினின் வாழ்வையும் பணியையும் கற்க ஆழ்ந்த வேண்டும். சமரசம் குறித்து அவரது தீர்மானகரமான கருத்துக்களை, ‘’இடதுசாரி கம்யூனிசம்’’ என்னும் நூலில் காணலாம். இப்போது நடந்துகொண்டிருக்கும் இயக்கம் - அதாவது இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் - தவிர்க்கமுடியாத வகையில் ஏதேனும் சில சமரசத்துடன்தான் முடிவடைய இருக்கிறது, இல்லையெனில் அது முழுமையாகத் தோல்வியுறும் என்றே நான் குறிப்பிட்டிருக்கிறேன். இவ்வாறு நான் ஏன் கூறுகிறேன் என்றால், என்னைப் பொறுத்தவரை, இம்முறை உண்மையான புரட்சிகர சக்திகள் இயக்கத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. மத்தியதர வணிகர்கள் மற்றும் ஒருசில முதலாளிகளைச் சார்ந்து இப்போராட்டம் தொடங்கியது. இந்த இரண்டு வர்க்கங்களுமே, அதிலும் குறிப்பாக முதலாளி வர்க்கம் எந்தவொரு போராட்டத்திலும் தனது சொத்துக்களுக்கோ உடைமைகளுக்கோ ஆபத்து நேர்வதற்கு ஒருபோதும் துணியாது. உண்மையான புரட்சிகர ராணுவம் கிராமங்களிலும் தொழிற் சாலைகளிலும் இருக்கிறது. விவசாயிகளும் தொழிலாளர்களுமே அவர்கள். ஆனால், நமது முதலாளித்துவ தலைவர்களுக்கோ, அவர்களைக் கையாளுவதற்கான சாமர்த்தியமோ துணிச்சலோ கிடையாது. உறங்கிக் கொண்டிருக்கும் அந்த சிங்கத்தை அதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து தட்டியெழுப்பிவிட்டால், நமது தலைவர்கள் அடையக் கருதிய இலக்கை அடைந்த பின்னரும்கூட அதனைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும்.1920இல் அகமதாபாத் தொழிலாளர்களுடன் தனக்கு ஏற¢பட்ட முதல் அனுபவத்திற்குப் பின்னர் மகாத்மா காந்தி, “நாம் தொழிலாளர்களை இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது அபாயகரமானது’’ என்று பிரகடனம் செய்தார். (தி டைம்ஸ், மே,1921). அதிலிருந்தே அவர்களுக்குத் தொழிலாளர்களை இயக்கத்திற்குள் கொண்டுவருவதற்கான துணிச்சல் கிடையாது. எஞ்சியிருப்பது விவசாயிகள். அந்நிய நாட்டின் மேலாதிக்கத்தை மட்டுமல்லாது, நிலப்பிரபுக்களின் நுகத்தடியையும் உதறித் தள்ளுவதற்காய் எழுந்த மாபெரும் விவசாய வர்க்க எழுச்சியைக் கண்டபோது இத்தலைவர்கள் அடைந்த பீதியை 1922ம் ஆண்டு பரதோலி தீர்மானம் தெள்ளத் தெளிவாகவே காட்டுகிறது. அங்குதான், நமது தலைவர்கள், விவசாயிகளிடம் சரணடைவதை விட பிரிட்டிஷாரிடம் சரணடைவதே மேல் என முடிவு செய்தனர். பண்டிட் ஜவஹர்லால் நேருவை விட்டு விடுங்கள். விவசாயிகளையோ அல்லது தொழிலாளர்களையோ அணிதிரட்டுவதற்கு ஏதேனும் முயற்சி செய்த தலைவர்கள் உங்களால் வேறு யாரையாவது காட்ட முடியுமா? முடியாது. அவர்கள், வருமிடர் துணிந்து ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கத் தயாராயில்லை. அங்குதான் அவர்களின் குறைபாடே உள்ளது. அதனால்தான் ‘அவர்கள் ஒருபோதும் முழுமையான புரட்சியை மனதிற் கொண்டிருக்கவில்லை’ என்று நான் கூறுகிறேன். பொருளாதார மற்றும் நிர்வாக நிர்ப்பந்தங்களின் மூலமாக, இந்திய முதலாளிகளுக்கு ஆதரவாக, ஒரு சில சீர்திருத்தங்களை, ஒருசில சலுகைகளைப் பெற முடியும் என்றே அவர்கள் நம்புகின்றனர். அதனால்தான் ஏதேனும் ஒருவகை சமரசத்திற்குப் பின்னரோ அல்லது அதுவடு இல்லாமலோ இந்தப் போராட்டத்தின் முடிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று நான் கூறுகிறேன்.இளம் தொழிலாளர்கள், “இன்குலாம் ஜிந்தாபாத்” (புரட்சி நீடூழி வாழ்க) என்று மிகவும் நேர்மையுடன் உரத்து முழக்கமிட்டபோதிலும், இயக்கத்தைத் தாங்களே முன்னெடுத்துச் செல்லுமளவிற்கு, ஸ்தாபனத்தப்பட்டவர்களாகவோ வலுவானவர்களாகவோ இல்லை. உண்மையில் சொல்லப்போனால், நம்முடைய மாபெரும் தலைவர்களுக்கும்கூட, (ஒருக்கால் பண்டிட் மோதிலால் நேரு விதிவிலக்காக இருக்கலாம்) தங்கள் தோள்மீத ஏதேனும் பொறுப்புக்களைச் சுமந்து கொள்வதற்கான துணிவு இல்லை. அதனாலேயே நம் தலைவர்கள் அடிக்கடி காந்திக்கு முன்னால் நிபந்தனையற்ற முறையில் சரணடைகின்றனர். தங்களுக்குள் எவ்வளவு கருத்துவேற்றுமைகள் இருந்தாலும், அவரது கருத்துக்களுக்கு எதிராக ஆழமாக அவர்கள் எதுவும் தெரிவிப்பதில்லை, மகாத்மா கொண்டுவரும் தீர்மானத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, முன்னெடுத்துச் செல்கிறார்கள். இத்தகு சூழ்நிலைகளில்தான், ஒரு புரட்சிக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டிருக்கும், நேர்மையான இளம் அரசியல் ஊழியர்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். மேலும் கடினமான நாட்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் சரியாக எதிர்நோக்கவில்லை என்றால், மிகவும் குழம்பிப்போய், மனதைத் தளர விட்டுவிடுவோம். மாபெரும் தலைவர் காந்தி அறிவித்த இரு போராட்டங்களின் பெற்ற அனுபவத்திலிருந்து, இன்றைய நம் நிலை குறித்தும், எதிர்காலத் திசைவழி குறித்தும் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.இப்போது, நிகழ்வுகளை எளிமையான முறையில் எடுத்துச் சொல்ல என்னை அனுமதியுங்கள். “இன்குலாப் ஜிந்தாபாத்’’ என்று நீங்கள் முழக்கமிடுகிறீர்கள். அதன் உண்மையான பொருளை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நான் ஊகித்துக் கொள்கிறேன். பாராளுமன்ற வெடிகுண்டு வழக்கில் எங்களது பதிலறிக்கையில் கூறியதைப்போல, “புரட்சி என்பது, தற்போது நடப்பிலுள்ள சமூக அமைப்பை முற்றாகத் தூக்கியெறிந்து விட்டு அந்த இடத்தில் சோசலிச சமூக அமைப்பை நிறுவுவதையே” குறிக்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே நமது உடனடியான குறிக்கோள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக உள்ளது. உண்மையில், அரசு என்பதும், அரசு எந்திரம் என்பதும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் தங்கள் நலன்களைப் பாதுகாத்து மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக உள்ள ஆயுதமேயாகும். நாம் அதனை பறிப்பதற்கும், நமது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கும் - அதாவது மார்க்சிய அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்குப் பயன்படும் வகையில் அதனைக் கையாள்வதற்கும் - விரும்புகிறோம். இந்த நோக்கத்திற்காகவே, அரசாங்க எந்திரத்தைக் கைப்பற்றுவதற்கு நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தத் திசைவழியில், நாம் நம் மக்களைப் பயிற்றுவித்து, நமது சமூகநலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடியவிதத்தில் சாதகமானதொரு சூழலை உருவாக்கிட வேண்டும். போராட்டங்களினூடே அவர்களை நாம் நன்கு பயிற்சியளித்து, பயிற்றுவிக்க முடியும். இவ்வாறு நம்முன் உள்ள பணிகள் நமக்குத் தெளிவாகிவிட்டன. அதாவது உடனடிக் கடமைகள் மற்றும் இறுதி இலக்கு மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டுவிட்டது. இன்றைய நிலைமைகளைப் பரிசீலனை செய்வதுடன் நாம் முன்னேறுவோம். நாம் எந்தவொரு நிலைமையைப் பகுப்பாய்வு செய்யும்போதும், மிகவும் தெளிவாகவும், காரியவாதிகள் போலவும் இருக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தில் இந்தியர்கள் பங்கேற்பது குறித்தும் அதன் பொறுப்புக்களை இந்தியர்கள் பகிர்ந்து கொள்வது குறித்தும் குய்யோ முறையோ என்று கூக்குரல் எழுப்பப்பட்டதால், மிண்டோ - மார்லி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், அவை கலந்தாலோசிக்கும் உரிமைகளுடன் வைஸ்ராய் கவுன்சிலை அமைத்ததும் நமக்குத் தெரியும். உலகப் போரின்போது, இந்தியர்களின் உதவி மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டபோது, தன்னாட்சி குறித்த உறுதிமொழியும், இப்போது வந்திருக்கும் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. சட்டமன்றங்களுக்கு வைஸ்ராயின் நல்லெண்ணத்திற்குட்பட்டு மிகவும் குறைந்த அளவில் அதிகாரங்களும் அளிக்கப்பட்டன. இப்போது மூன்றாவது கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.இப்போது சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இனிவருங்காலங்களில் அவை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குறித்து நம் இளைஞர்கள் எப்படி மதிப்பிட முடியும்? இது ஒரு கேள்வி. காங்கிரஸ் தலைவர்கள் அவற்றை எந்த அளவுகோலைக்கொண்டு, எப்படி மதிப்பிடப்போகிறார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனாலும், புரட்சியாளர்களாகிய நம்மைப் பொறுத்தவரை, நாம் கீழ்க்கண்ட அளவுகோள்களை முன்வைத்திருக்கிறோம்:1. இந்தியர்களின் தோள்களுக்கு மாற்றப்படவிருக்கும் பொறுப்பின் அளவு.2.அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அரசாங்க நிறுவனங்களின் வடிவம் மற்றும் அதில் மக்கள் பங்குபெறுவதற்கான உரிமையின் எல்லை.3. எதிர்கால வாய்ப்புகளும், காப்புக்கூறுகளும்.இவற்றிற்கு மேலும் சிறிது விளக்கம் தேவைப்படலாம். முதலில், நிர்வாகத்தில் நம்மவர்களுக்குத் தரப்படும் அதிகாரத்தின் எல்லையைக் கொண்டு இதனை நாம் எளிதாக மதிப்பிட முடியும். இன்றைய நிலை வரைக்கும், நிர்வாகத்தரப்பினர் சட்டமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. அதேபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவரும் எந்த ஒரு தீர்மானத்தையும் குப்பைத்தொட்டியில் எறியும் ரத்து அதிகாரம் (ஸ்மீtஷீ ஜீஷீஷ்மீக்ஷீ) வைஸ்ராய்க்கு உண்டு. இந்த அசாதாரணமான அதிகாரத்தை, தேசியப் பிரதிநிதிகளின் மதிப்புமிக்க தீர்மானங்களை வெட்கமின்றி, காலில் போட்டு மிதிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு வைஸ்ராயை உள்ளாக்கிய சுயராஜ்யக் கட்சியினரின் முயற்சிகளுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். இது குறித்து அனைவருக்கும் நன்கு தெரியுமாதலால், இதற்குமேல் இது குறித்து விவாதம் தேவை இல்லை. இப்போது, நிர்வாக அமைப்பு முறை எப்படி வர இருக்கிறது என்று பார்ப்போம். நிர்வாக அலுவலர்கள், அனைத்து மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்களா? அல்லது இப்போது இருப்பதுபோல் மேலே இருந்து திணிக்கப்படுவார்களா? மேலும், இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்களாக இருப்பார்களா அல்லது கடந்த காலங்களில் இருந்தது போல் அவற்றைத் துச்சமெனக் கருதி அவமதிப்பார்களா? இரண்டாவது இனத்தைப் பொறுத்தவரை, வாக்குரிமையின் தன்மை மூலம்தான் அதனை மதிப்பிடலாம். வாக்குரிமைக்குத் தகுதி பெற ஒருவருக்கு சொத்து இருக்க வேண்டும் என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். வயது வந்த ஆண் - பெண் அனைவரும் வாக்களிப்பதற்கான உரிமை பெற வேண்டும். தற்சமயம், இந்தத் திசைவழியில் எவ்வளவு தூரம் செல்லப்போகிறோம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.வடிவம் சம்பந்தப்பட்டவரை, நாம் இரண்டு அவைகளைக் கொண்ட அரசாங்கத்தை வைத்துள்ளோம். எனது கருத்துப்படி மேலவை என்பது முதலாளிகள் - பழம்பஞ்சாங்கங்கள் நிறைந்த ஓர் ஆடம்பர அவையே. என்னைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரேயரு அவையைக் கொண்ட அரசாங்கம் மட்டுமே மிகச் சிறந்தது என்று நாம் எதிர்பார்க்கலாம் என்பதேயாகும்.ஆளுநரின் அதிகாரங்களுடன் கூடிய மாகாண சுயாட்சி பற்றி இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் நான் கேள்விப்பட்டதிலிருந்து, சட்டமன்றத்திற்கும் மேலான நிலையில், உயர்ந்த அசாதாரண அதிகாரங்களுடன் மேலிருந்து திணிக்கப்படும் ஆளுநர் என்பவர், ஒரு கொடுங்கோலன் என்ற நிலைக்குச் சற்றும் குறைந்தவர் அல்ல என்று மட்டுமே என்னால் கூறமுடியும். நாம் இதனை ஆளுநரின் கீழான மாகாண சுயாட்சி என்று அழைப்பதை விட ‘மாகாண கொடுங்கோலாட்சி’ என்று அழைப்பதே சிறந்தது. அரசு நிறுவனங்களை ஜனநாயகமயப்படுத்துவதில் இது ஒரு விசித்திரமான வகையாகும்.மூன்றாவது இனம் முற்றிலும் தெளிவானது. பிரிட்டிஷாரின் கஜானா காலியாகும் வரைக்கும் ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இன்னொரு பகுதி சீர்திருத்தங்கள் வழங்கப்படும் என்ற மாண்டேகுவின் வாக்குறுதியை குலைப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசியல் வாதிகள் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.வருங்காலம் குறித்து அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று நாம் பார்க்கலாம்.சாதனைகளைக் கண்டுபூரித்துப் போவதற்காக நாம் இந்த விஷயங்களை ஆராயவில்லை. மாறாக, மக்களை அறியாமையிலிருந்து விடுவிப்பதற்காகவும் அடுத்த கட்ட போராட்டத்திற்கு அவர்களை தயார்படுத்துவதற்காகவும் நமது இன்றைய நிலையில் தெளிவான கொள்கையை வகுப்பதற்கே இந்த விஷயங்களை ஆராய்கிறேன் என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். நமக்கு சமரசம் என்பது ஓரடி முன்னேற்றத்தையும் சிறிது ஓய்வையும் குறிக்குமேயழிய, அது ஒருபோதும் சரணாகதியைக் குறிக்காது. அவ்வளவுதான், வேறொன்றுமில்லை.*** *** ***இன்றைய நிலை குறித்து விவாதித்துவிட்டோம். இனி நமது எதிர்கால செயல் திட்டத்தையும் நாம் கைக்கொள்ள வேண்டிய செயல் வழியையும் விவாதிக்கத் துவங்குவோம்.நான் ஏற்கனவே கூறியதுபோல் எந்தவொரு புரட்சிகரக் கட்சிக்கும் ஒரு தீர்மானகரமான நடைமுறை செயல் திட்டம் மிகவும் இன்றியமையாததாகும். புரட்சி என்றால் செயல் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஸ்தாபனரீதியான மற்றும் திட்டமிடப்பட்ட வேலைகளின் மூலமாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவருதல் என்பதாகும். அது, திடீரென்ற - ஸ்தாபனப்படுத்தப்படாத அல்லது தன்னெழுச்சியான மாற்றம் அல்லது சீர்குலைவிற்கு எதிரானது. ஒரு கட்சித் திட்டத்தை வகுப்பதற்கு ஒருவர் கண்டிப்பாக ஆய்ந்து அறிய வேண்டியவைகள் கீழ்வருமாறு:.1. இலக்கு,2. எங்கிருந்து தொடங்குவது. அதாவது தற்போதைய நிலைமைகள். 3. செயல் திட்டங்கள், அதாவது வழிகளும் முறைகளும்.இந்த மூன்று காரணிகளைப் பற்றிய தெளிவானதொரு கோட்பாட்டை ஒருவர் கொண்டிருக்காவிடில் கட்சித்திட்டம் பற்றி எதையுமே அவரால் விவாதிக்க முடியாது.தற்போதை சூழ்நிலையை ஓரளவிற்கு நாம் விவாதித்து விட்டோம். இலக்கு பற்றியும் லேசாகத் தொட்டுள்ளோம். நாம் ஒரு சோசலிசப் புரட்சியை வேண்டுகிறோம். இதற்கு அரசியல் புரட்சி தவிர்க்கமுடியாத அடிப்படையாகும். இதுவே நமக்கு வேண்டியது. அரசியல் புரட்சி என்றால், அரசு அதிகாரத்தை பிரிட்டிஷாரின் கைகளிலிருந்து இந்தியர்களின் கைகளுக்கு மாற்றுவது என்று பொருள் அல்ல, மாறாக பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அதிகாரம் புரட்சிக் கட்சியின் கைகளுக்கு மாறுவதேயாகும். அதன்பிறகு. சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை முழுமையாக புனர்நிர்மாணம் செய்வதற்கான வேலைகளில் முழுமூச்சுடன் இறங்குவதாக இருக்கும். இத்தகைய புரட்சியை நீங்கள் பொருள்கொள்ளவில்லை என்றால், பின்னர் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக) என்று முழங்குவதை நிறுத்திவிடுங்கள். புரட்சி என்கிற சொல் மிகவும் புனிதமானது. குறைந்தபட்சம் நமக்கு அது புனிதமானது. அதனை மேலெழுந்தவாரியாகவோ அல்லது துஷ்பிரயோகமோ செய்யாதீர்கள். ஆனால், நீங்கள் தேசியப் புரட்சிக்காகவே இருப்பதாகவும், உங்களுடைய போராட்டத்திற்கான இலக்கு அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் போன்ற இந்தியக் குடியரசுதான் என்றும் சொல்வீர்களானால், பின் நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன், நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைவதற்காக நீங்கள் விரும்பும் புரட்சியை கொண்டுவர உதவிடும். நீங்கள் சார்ந்திருக்கும் சக்திகள் எவை என்று எனக்குக் கூறுங்கள். எந்தவொரு புரட்சியை சாதிக்க வேண்டுமானாலும் - அது தேசியப் புரட்சியோ சோசலிசப் புரட்சியோ எதுவானாலும்- நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுதியான சக்திகள் விவசாயிகளும் தொழிலாளர்களும் மட்டுமே. அந்த சக்திகளைத் திரட்டும் துணிவு காங்கிரஸ் தலைவர்களுக்குக் கிடையாது. இந்த இயக்கத்தில் அதை நீங்களே பார்த்தீர்கள். இந்த சக்திகள் உடனில்லாவிட்டால் அவர்கள் முழுமையான நிராதரவானவர்கள் என்பது மற்ற எவரையும் விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானத்தை - அது உண்மையில் ஒரு புரட்சியையே அர்த்தப்படுத்துகிறது - அவர்கள் நிறைவேற்றும் போது உண்மையில் அவர்கள் அதை மனதிற் கொண்டிருக்கவில்லை. இளைஞர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே அத்தீர்மானத்தை அவர்கள் கொண்டுவரவேண்டியிருந்தது. அதன் பின்னர் அவர்களது மனதிற்குள்ளிருந்த ஆசையாகிய டொமினியன் அந்தஸ்தைப் பெறுவதற்கு ஓர் அச்சுறுத்தலாக அத்தீர்மானத்தைப் பயன்படுத்த விரும்பினர். காங்கிரஸ் கட்சியின் கடைசி மூன்று அமர்வுகளில் (அதாவது சென்னை, கல்கத்தா, லாகூர் ஆகிய அமர்வுகளில்) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆய்வு செய்தீர்களானால், அதனை நீங்கள் மிக எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். கல்கத்தாவில், டொமினியன் அந்தஸ்து பன்னிரண்டு மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கப்படாவிட்டால் ‘பூரண ஸ்வராஜ்யம்’ என்பதைத் தங்கள் குறிக்கோளாகக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதேபோன்று 1929 டிசம்பர் 31 நள்ளிரவு வரை அத்தகையதொரு வரத்திற்காக முழுமையான பயபக்தியுடன் காத்துக்கொண்டும் இருந்தார்கள். அதன் பின் தங்களது “நேர்மையை முன்னிட்டு” சுயராஜ்யத் தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள். இல்லாவிட்டால் அவர்கள் அதனை எண்ணியிருக்கவே மாட்டார்கள். ஆனால் அப்போதும் கூட (சமரத்திற்கான) கதவுகள் திறந்திருப்பதை மகாத்மாஜி ஒளிவுமறைவாக வைத்திருக்கவில்லை. அதுவே அவர்களது உண்மையான மனப்பாங்காகும். தங்களது இயக்கம் ஏதோவொரு சமரசத்தில் தான் போய் முடியும் என்று ஆரம்பத்திலேயே அவர்களுக்குத் தெரியும். போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதனைச் செய்து கொள்வதை நாங்கள் வெறுக்கவில்லை, மாறாக இத்தகைய அரைமனதுடனான செய்கையினையே நாங்கள் வெறுக்கிறோம். எப்படியிருந்தாலும், ஒரு புரட்சிக்காக நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய சக்திகளைப் பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எனினும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் செயல்முனைப்புள்ள ஆதரவை திரட்டுவதற்காக அவர்களை நாங்கள் அணுகுவோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உணர்ச்சிகரமான பசப்பு வார்த்தைகள் எதற்கும் அவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். “எதற்காக எங்களை உங்கள் போராட்டத்தில் இணைந்து தியாகம் செய்யச் சொல்கிறீர்கள்? அப்புரட்சியின் விளைவாக நாங்கள் அடையப்போகும் பலன்தான் என்ன? இந்திய அரசாங்கத்தின் சார்பாக லார்ட் ரீடிங்கிற்குப் பதிலாக அந்த இடத்தில் சர் புருஷோத்தமதாஸ் தாகூர்தாஸ் அவர்களை உட்கார வைப்பதால் என்ன வித்தியாசம் எங்களுக்கு ஏற்பட்டுவிடப் போகிறது? லார்ட் இர்வின் இடத்தில் சர் தேஜ் பகதூர் சப்ரூ அமர்வதால் எங்கள் விவசாயிகளுக்கு என்ன வந்துவிடப் போகிறது?” என்று அப்பழுக்கற்ற நேர்மையோடு அவர்கள் உங்களைக் கேட்பார்கள். இவ்வாறு அவர்களது தேசிய உணர்வுகளைத் தூண்டிவிடுவதால் எந்தப் பயனுமில்லை. உங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்களைப் “பயன்படுத்த” முடியாது. உண்மையிலேயே நீங்கள் அவர்களுக்காகவும் போராட வேண்டும், நடைபெறவிருக்கும் புரட்சி என்பது அவர்களின் நலன்களைப் பாதுகாத்திடும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். புரட்சி என்பது தொழிலாளர்களின் தொழிலாளர்களுக்கான புரட்சியாகும். உங்களது இலக்குகள் பற்றிய இந்த தெளிவான கொள்கையை நீங்கள் உருவாக்கிக் கொண்டதையடுத்து, உடனடியாக அத்தகையதொரு நடவடிக்கைக்காக உங்களது சக்திகளை முழுமனதோடு ஒன்று திரட்டத் தொடங்கலாம். இப்பொழுது இரண்டு வெவ்வேறு கட்டங்களை நீங்கள் கடந்தாக வேண்டியுள்து. முதலாவது தயாரிப்புப் பணிகள், இரண்டாவது நேரடி நடவடிக்கை. தற்போதைய போராட்டம் முடிந்தபின்னர், உண்மையாகச் செயல்பட்ட புரட்சியாளர்கள் மத்தியில் வெறுப்பும் அவநம்பிக்கையும் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உணர்ச்சிவயப்படுதலை ஒதுக்கி வையுங்கள். யதார்த்த நிலைமைகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். புரட்சி என்பது மலர்ப்பாதை அல்ல, அது மிகவும் கடினமான பணியாகும். புரட்சியை ஏற்படுத்துவது என்பது எந்த ஒரு தனிநபரின் சக்திக்கும் அப்பாற்பட்டதாகும். அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதி ஏதேனுமொன்றில் கொண்டு வரவும் முடியாது. சமூகப் பொருளாதார மற்றும் பிரத்யேகச் சூழ்நிலைகளினால் அது கொண்டுவரப்படும். அத்தகைய சூழ்நிலைகள் தரும் வாய்ப்புகளை ஸ்தாபனம் வலுவாக உள்ள ஒரு கட்சியின் செயல்பாடுகள் பயன்படுத்திக்கொள்கிறது. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும் புரட்சிக்கான சக்திகளை ஒன்று திரட்டுவதும் மிகவும் கடினமான பணியாகும். அதற்கு புரட்சிகர ஊழியர்களின் மத்தியிலிருந்து மாபெரும் தியாகம் தேவைப்படுகிறது. நான் வெளிப்படையாகவே கூறிவிடுகிறேன், நீங்கள் ஒரு வணிகராகவோ அல்லது இவ்வுலக சுகங்களை அனுபவிப்பவராகவோ அல்லது குடும்பஸ்தராகவோ இருந்தால், தயவுசெய்து நெருப்புடன் விளையாடாதீர்கள். ஒரு தலைவர் என்ற முறையில் உங்களால் கட்சிக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. மாலை நேரத்தில் சிலமணி நேரம் மேடை அலங்காரப் பேச்சுகளுக்காக ஒதுக்கிடும் அத்தகைய தலைவர்களை முன்னமேயே நாங்கள் ஏராளமாகப் பெற்றுவிட்டோம். அவர்களால் எந்தப் பிரயோசனமும் இல்லை. தோழர் லெனின் மிகவும் பிரியத்துடன் பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்வதானால் “புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்களே” நமக்குத் தேவை. புரட்சியைத் தவிர வேறெந்த ஆசாபாசங்களும் வேலையும் இல்லாத முழுநேர ஊழியர்களே நமக்குத் தேவை. எந்த அளவிற்கு அத்தகைய ஊழியர்கள் ஒரு புரட்சிக் கட்சிக்குக் கிடைக்கிறார்களோ அந்த அளவிற்கு அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும். திட்டமிட்டமுறையில் செயலாற்றுவதற்கு, உங்களுக்குத் தேவை, மேலே விவரித்ததுபோன்று மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் கூரிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும், விரைந்து செயல்படும் ஆற்றலும் கொண்டவர்கள் நிறைந்த ஒரு கட்சியாகும். கட்சி உருக்கு போன்ற கட்டுப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும். அதற்காக அது ஒன்றும் தலைமறைவுக் கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு மாறான நிலையில் கூட இருக்கலாம். அதேபோன்று தாமாகச் சிறைக்குச் செல்லவேண்டும் என்கிற கொள்கையும் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும். அத்தகைய கொள்கைதான் எண்ணற்ற ஊழியர்களை தலைமறைவு வாழ்க்கை நிலைக்கு நிர்ப்பந்திக்கிறது. அவர்கள் அதே ஆர்வத்துடன் வேலைதிட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இத்தகைய ஊழியர் பட்டாளம்தான், தலைசிறந்த தலைவர்களை எதிர்காலத்தில் உருவாக்கும்.கட்சிக்குத் தேவைப்பகின்ற ஊழியர்களை வாலிபர் சங்கத்தின் மூலமாக மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆகவே வாலிபர் சங்கத்தையே நமது கட்சித் திட்டத்தின் தொடக்கப் புள்ளியாக நாம் காண்கிறோம். வாலிபர் சங்கமானது, கல்விக் குழுக்கள் (stuபீஹ் நீவீக்ஷீநீறீமீs)/ அரசியல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தல் (நீறீணீss றீமீநீtuக்ஷீமீs), துண்டறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் வெளியிட வேண்டும். இதுவே அரசியல் ஊழியர்களை உருவாக்குவதற்கான சிறந்த தேர்வு முறை மற்றும் பயிற்சிக்கான களமாகும்.
சிந்தனை முதிர்ச்சி கொண்ட வாலிபர்களை தங்கள் வாழ்க்கையை மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்துக்காக தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் வாலிபர்களை கட்சிக்குக் கொண்டுவரலாம். கட்சி ஊழியர்களும் எப்போதும் வாலிபர் சங்கத்திற்கு வழிகாட்டி, அவர்கள் பணிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். கட்சி, வெகுஜனப் பிரச்சாரத்தின் மூலம் பணியைத் தொடங்க வேண்டும். இது மிகவும் அவசியம். 1914-15களில் செயல்பட்ட கதார் கட்சியின் முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, மக்கள்திரள் பற்றிய அறியாமையும் அக்கறையின்மையும் சில சமயங்களில் அவர்களுக்கு எதிராக இருந்த எதிர்நிலையுமேயாகும். அதுவன்னியில், விவசாயிகள் - தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துவதும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும். கட்சியின் பெயரை அல்லது ................. * ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று .....’*மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அரசியல் ஊழியர்களைக் கொண்ட இக்கட்சியானது, அதன்கீழ் உள்ள அனைத்து இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும். இது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சிகளை, தொழிலாளர் சங்கங்களை அமைத்திட வேண்டும். இது, காங்கிரஸ் கட்சியையும் அதன் சகோதர அமைப்புகளையும் கைப்பற்றுவதற்கும் கூட துணிந்து முயற்சிக்க வேண்டும். தேசிய அரசியல் மட்டுமல்ல வர்க்க அரசியலையும் சேர்த்து அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு கட்சி, ஒரு பெரும் பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும். சோசலிசக் கொள்கை பற்றிய அறிவை பொதுமக்களிடத்தில் எளிதாகக் கொண்டு செல்லும் வகையில் அனைத்துத் துறைகள் குறித்தும் கொண்டு வரப்பட வேண்டும். அவை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.தொழிலாளர் இயக்கத்தில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அரசியல் சுதந்திரம் தேவை இல்லை என்றும், அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் மட்டும் இருந்தால் போதும் என்றும் அபத்தமான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்களை மக்களின் உணர்ச்சிகளை கிளறிவிட்டுக் குளிர்காய்பவர்கள் அல்லது குழப்பவாதிகள் என்று கூறலாம். அத்தகைய சிந்தனைகள் கற்பனை செய்ய முடியாததும் பகுத்தறிவுக்குப் புறம்பானதுமாகும். மக்களின் பொருளாதார விடுதலையை நாமும் மனதிற் கொண்டுள்ளோம். அந்நோக்கத்தை அடைவதற்காகவே அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில், தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கை களுக்காகவும் மற்றும் சில சலுகைகளுக்காகவும் போராட வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இப்போராட்டங்கள் தான் அரசியல் அதிகாரத்தைப் பறிப்பதற்கான இறுதிப் போராட்டத்திற்கு அவர்களைப் பயிற்றுவிப்பதற்குரிய சிறந்த வழிமுறையாகும். இவை நீங்கலாக, ராணுவத் துறை ஒன்றையும் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கியமானதாகும். பல சமயங்களில் இதன் தேவை மிக அவசியமாக உணரப்படுகிறது. ஆனால் திடீரென்று அத்தகையதொரு அமைப்பை போதுமான வசதிகளுடன் உருவாக்கி செயல்படுத்திட முடியாது. இது மிகவும் எச்சரிக்கைத்தன்மையுடன் விளக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இப்பொருள் குறித்து தவறாகப் புரிந்துகொள்வதற்குரி வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. வெளிப்பார்வைக்கு நான் ஒரு பயங்கரவாதியைப் போல் செயல்பட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு பயங்கரவாதி அல்ல. நான் ஒரு புரட்சியாளன். இங்கே இப்போது நாம் விவாதித்ததுபோல, தீர்மானகரமானமுறையில் வரையறுக்கப்பட்ட ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு புரட்சியாளன். ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற என்னுடன் “ஆயுதம் ஏந்திய தோழர்கள்”, தூக்குமேடைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பிரிவில் ஏதோ ஒருவிதமான பிற்போக்குத்தன்மையுடன் (அது உண்மையல்ல) நடந்துகொண்டதாக என்னைக் குறை கூறலாம். வெளியில் இருந்தபோது என்னவிதமான கொள்கையை, உறுதியை, உணர்வைக் கொண்டிருந்தேனோ அதே கொள்கையைத்தான், உறுதியைத்தான், உணர்வைத்தான் இப்போதும் நான் கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாகச் சொல்வதானால் அப்போதிருந்ததைவிட மேலும் சிறப்பாகக் கொண்டிருக்கிறேன். எனவே என் வார்த்தைகளை வாசிக்கும் வாசகர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் எனது எழுத்துக்களுக்குப் பின்னணியில் வேறேதும் இருப்பதாக ஊகித்தறிய முயற்சி செய்ய வேண்டாம். எனது சக்தி அனைத்தையும் ஒன்றுதிரட்டி உரக்க அறிவிக்கிறேன். நான் ஒரு பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. பயங்கரவாத நடைமுறைகளின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் உறுதியுடன் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேசனின் வரலாற்றில் இருந்து ஒருவர் இதனை எளிதாக மதிப்பிடலாம். எங்கள் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு இலட்சியத்தை நோக்கி செலுத்தப்பட்டன. அதாவது, ஒரு மாபெரும் இயக்கத்துடன் எங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, அதன் படைப்பிரிவாக, செயல்பட்டோம். எவரேனும் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அவர் தனது கருத்தைத் திருத்திக் கொள்ளட்டும். வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் உபயோகமற்றவை என்று நான் பொருள்கொள்ளவில்லை. ஆனால், நான் கூறவிரும்புவது, வெறுமனே குண்டுகளை எறிவதென்பது பயன்விளைவிக்காது என்பது மட்டுமல்ல, சிலசமயங்களில் அது கேடுவிளைவிப்பதாகவும் மாறிவிடும். கட்சியின் படைப் பிரிவு, எந்த அவசர காலத் தேவையின்போதும் பயன்படுத்தக்கூடிய வகையில் எப்போதும் தன் போர் ஆயுதங்களைத் தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். அது கட்சியின் அரசியல் பணிகளுக்குப் பின்னணியாக இருக்க வேண்டும். அது எப்போதும் சுயேச்சையாக செயல்பட முடியாது, செயல்படக் கூடாது. மேலே சுட்டிக்காட்டிய திசைவழியில், கட்சி தன் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி தன்னுடைய தொழிலாளர்களை அனைத்துத் துறைகளிலும் பயிற்றுவித்து, பிரகாசிக்கச் செய்திட வேண்டும். இந்தத் திசைவழியில் நீங்கள் செயல்படத் தொடங்கினால், ஆரவார உணர்ச்சிக்கு இடங்கொடுக்காது மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கவேண்டியிருக்கும். கட்சித் திட்டம் முழுமையாக நிறைவேற குறைந்தது இருபது ஆண்டுகளாவது தேவைப்படும். ஒராண்டுக்குள் சுயராஜ்யம் என்ற காந்தியின் கற்பனாவாத வாக்குறுதியைப் போன்றே, பத்து ஆண்டுகளுக்குள் புரட்சி என்ற உங்களின் இளமை கால கனவுகளையும் உதறித் தள்ளுங்கள். புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை, மாறாக உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது. முதலில் உங்களது தனித்துவத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்கள் பற்றிய கனவுகளை உதறித் தள்ளுங்கள். பின்னர், செயல்படத் தொடங்குங்கள். அங்குலம் அங்குலமாக முன்னேறுங்கள். இதற்குத் தைர்யம், விடாமுயற்சி, மிகவும் வலுவான மனவுறுதி வேண்டும். எவ்விதமான சிரமங்களும் துன்ப துயரங்களும் உங்களை நம்பிக்கையிழக்கச் செய்திடக்கூடாது. எந்தத் தோல்வியும் அல்லது துரோகங்களும் உங்களை மனம் தளரச் செய்திடக்கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகர உணர்வைக் கொன்று விடக்கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றிகரமாக மீண்டு வரவேண்டும். தனிநபர்கள் அடையும் இந்த வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்.



இன்குலாப் ஜிந்தாபாத்புரட்சி நீடூழி வாழ்க!



பகத்சிங் 2 பிப்ரவரி 1931.

மதவெறி அரசியலை வீழ்த்துவோம்!



பாஜகவினருக்கு ஒரு சிறு துளியாவது அரசியல் நாகரிகம் இருக்குமானால், உடனடியாக வருண்காந்தியை, தேர்தல் கூட்டங் களில் மதவெறி நஞ்சைக் கக்கிய குற்றத்திற் காக, மக்களவைத் தேர்தலில் பிலிபித் தொகு தியில் வேட்பாளராக நிறுத்தியிருப்பதிலிருந்து விலக்கிக் கொள்ள உடனடியாக முன்வரவேண்டும். தேர்தல் ஆணையம் மிகவும் சுறுசுறுப் புடன் வருண்காந்திக்கு எதிராக கிரிமினல் வழக்கு ஒன்றைப் பதிவு செய்திட உள்ளூர் காவல்துறையினருக்குக் கட்டளையிட்டுள் ளது. இந்தியத் தண்டனைச் சட்டமும், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிதுவச் சட்ட மும் ‘‘மதவெறித் துவேஷத்தை ஏற்படுத்து பவர்கள்’’ அல்லது ‘‘வேட்பாளரின் மதத்தின் அடிப்படயில் வாக்குகளைக் கோருவது’’ ஆகிய இரண்டையுமே இழிந்த, ஊழல் அரசி யல் நடைமுறைகள் என்று தெள்ளத்தெளி வாக வரையறுத் திருக்கின்றன. தேர்தல் நடைபெறும் சமயமாக இருந்தாலும் இல்லா விட்டாலும், இந்தியத் தண்டனைச் சட்டத் தைப் பொறுத்தவரை, அதன் 153ஏ பிரிவின்படி, ‘‘பல்வேறு குழுக்களுக்கி டையே மதத்தில் பெயராலோ, இனத்தின் பெயராலோ, பிறப்பிடத்தின் பெயராலோ அல்லது இருப்பிடத்தின் பெயராலோ, அல் லது மொழியின் பெயராலோ, அல்லது வேறேதேனும் ஒருவிதத்திலோ பகைமை யை ஏற்படுத்தும் விதத்தில் பேசினாலோ, நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்து கொண்டாலோ, மூன்றாண் டுகள் வரை சிறைத் தண்டனையும், அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை யும், அல்லது இரண்டும் சேர்த்தே தண் டனை விதிக்கக்கூடிய’’ கைது செய்தற் குரியதோர் குற்றமாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும், 125ஆவது பிரிவின்படி, ‘‘தேர்தலையொட்டி வகுப்பினருக்கிடையே பகைமையை ஏற் படுத்துவோருக்கு’’ இதேபோன்றதோர் தண்டனையை விவரித்திருக்கிறது. இந்தப் பிரிவின்கீழ், மதத்தின் அடிப்படையில் பகை மையை அல்லது வெறுப்பை ஏற்படுத்து வோர் இதேபோன்று தண்டிக்கப் படுவார்கள் என்று குறிப்பிட்டே விவரித்திருக்கிறது. வருண்காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், பாஜக இப் போது, ‘‘சட்டம் அதன் கடமையைச் செய்யட் டும்’’ என்று கூறியிருக்கிறது. ஆனால் அது போதாது. சிவசேனையின் தலைவர் பால் தாக்கரே வழக்கில், அவரது வாக்குரிமை ஆறாண்டு காலத்திற்குப் பறிக்கப்பட்டது மற்றும் அந்தக் காலத்தில் அவர் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்ட போதி லும், இவ்வாறு ஆணை வருவதற்கு வெகு நீண்ட காலமானது. பால் தாக்கரே, 1987இல் வெலிபார்லி சட்டமன்றத் தொகுதிக்கு நடை பெற்ற இடைத்தேர்தலின்போது, இதே போன்று அவதூறு பொழிந்து, மதவெறி நஞ் சைப் பரப்பினார் என்பதற்காக குற்றம் சாட்டப் பட்டிருந்தார். இவ்வாறான மதவெறித்தீயை உருவாக்கிய அவரது பேச்சுக்கு எதிராக, உயர் நீதிமன்றம் அளித்த மேற்படி தீர்ப்பை, உச்ச நீதிமன்றம், 1999இல் இறுதியாக உறுதிசெய்த போதுதான், அமலுக்கு வந்தது. சட்டவிதி முறைகளின்படி, அப்போது குடியரசுத் தலை வராக இருந்த மறைந்த கே.ஆர்.நாராயணன், உச்சநீதிமன்றத்தின் ஆணையை, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, தண்டனையின் அளவு குறித்து தீர்மானிப்பதற்காக அனுப்பி வைத்தார். தேர்தல் ஆணையமானது, அதன் மீது, பால்தாக்கரேயை ஆறாண்டு காலத் திற்கு வாக்குரிமையைப் பறித்து ஆணை பிறப்பித்தது.இப்போது, வருண்காந்தி வழக்கில், இவ் வாறு சட்டம் தம் கடமையைச் செய்திட நீண்டகாலம் காத்துக்கொண்டிருக்கக் கூடாது. வருண்காந்தியால் காக்கப் பட்ட மதவெறி நஞ்சு தொடர்பான வீடியோக் கள் ‘‘போலியானவை’’ என்று கூறப்படுபவை எல்லாம் ‘‘யு ட்யூப்’’ (லடிர வரநெ) போன்ற இணையதளம் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் பல்வேறு ஒளிபரப் புகளின் மூலம் தூள் தூளாக்கப்பட்டு விட் டன. வருண்காந்தி, தான் பேசியதன் காரண மாக எங்கும் எவ்வித வன்முறைச் செயலும் நடைபெறவில்லை என்பதால், தான் குற்ற வாளி அல்ல என்று விசித்திரமானதோர் விளக்கத்தை கூறியுள்ளார். அவர் கக்கிய நஞ்சுப் பேச்சுக்களை மீண்டும் ஒருமுறை நம் இதழில் வெளியிட்டு அருவருப்புகொள்ள நாம் தயாரில்லை. எந்த ஒரு நாகரிகமுடைய மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல்வாதி யாலும் அவரது பேச்சை சகித்துக் கொள்ள முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்ய நடவடிக்கையைத் தொடரும் அதே சமயத் தில், பாஜகவானது வாக்காளர்கள் மத்தி யில், தங்களுடைய நிலைபாட்டைத் தெளிவு படுத்தக்கூடிய விதத்தில், வருண்காந்தியை, தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆயினும் இதுபோன்றெல்லாம் பாஜக போன்ற ஒரு கட்சியிடம் எதிர்பார்ப்பது, அதீத மான ஒன்றுதான். ஆர்எஸ்எஸ் அமைப்பா னது, “அயோத்தியில் தாவாவுக்குரிய இடத் தில் ராமர் கோவிலைக் கட்ட யார் உறுதி மொழி அளிக்கிறார்களோ அவர்களைத் தான் ஆதரிப்போம்” என்று கூறியுள்ள நிலை யில், பாஜக, 2009 பொதுத் தேர்தலுக்கு தன்னுடைய வெறித்தனமான இந்துத்வா நிகழ்ச்சிநிரலை மீண்டும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரகடனம் செய் துள்ளது. சமீபத்தில், கர்நாடகாவில், இருப தாம் நூற்றாண்டின் இணையற்ற கலைஞ ரான சார்லி சாப்ளின் சிலையை வைத்திட அனுமதிக்காமல் இழுத்தடித்திருப்பதி லிருந்து, தேர்தல் ஆதாயங்களுக்காக பாஜக, மதவெறித் தீயை விசிறிவிட முன்வந்திருப்ப தைத் தெளிவாகக் காண முடிகிறது. இவ் வாறாக, ஒரு சமயத்தில் பாஜக-வின் கூட் டணிக்கட்சிகளாக இருந்தவை - குறிப்பாக கிழக்குக் கடற்கரையோரம் முழுவதும் அதன் அணியில் இருந்த கட்சிகள் - அதனை அநாதையாகக் கைவிட்டுவிட்டு, விலகிக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதிகதூரம் போக வேண்டிய தில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அடிப்படை முரண்பாடு என்பது - பாஜக எந்த அளவிற்குத் தன்னுடைய வெறித்தன மான இந்துத்வா நிகழ்ச்சிநிரலை மீண்டும் செயல்படுத்திட முயற்சிக்கிறதோ அந்த அளவிற்கு அதன் கூட்டணிக் கட்சிகள் அதனைக் கைவிட்டுவிட்டு விலகி ஓடு வதும் தவிர்க்கமுடியாதது.இத்தகைய சூழ்நிலைமைகளில், வாக்கா ளர்கள், வரவிருக்கும் தேர்தலில் இத்தகைய மதவெறி நஞ்சைக் கக்கும் கிரிமினல் அரசி யல்வாதிகளை மறுதலித்திடக் கூடிய வகை யில் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
தமிழில் : ச.வீரமணி