மனிதனது மதிக்க முடியாத இனிய உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனென்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ, வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இளம் வயதிலேயே இறந்த தோழர் நிக்கொலாய் ஒ ஸ்தி
ரோவ்ஸ்க்கிய், தன்னுடைய வீரம் விளைந்தது நாவலில் கூறிய மேற்கண்ட கட்டளைகளின் அடிப்படையிலேயே இந்த இடுகையை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதனைப் பார்க்கும், படிக்கும் நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
ச.வீரமணி
0 comments:
Post a Comment