Showing posts with label pd editorial. Show all posts
Showing posts with label pd editorial. Show all posts

Tuesday, April 16, 2013

கார்ப்பரேட்டுகளின் கனவுகள் விற்பனை...




நாட்டில் மிகவும் விசித்திரமான விதங் களில் எல்லாம் அரசியல் நாடகங்கள் அரங் கேறிக் கொண்டிருக்கின்றன. அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள்ளாகவே தற்போது ஆளும் ஐ.மு.கூட் டணியின் பிரதானக் கட்சியான காங்கிரசிலும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவிலும் எதிர் கால பிரதமரை முன்னிறுத்துவதில் போட்டா போட்டி தொடங்கிவிட்டது. இவர்களது போட்டா போட்டியைப் பார்க்கும்போது, தெலுங் கில் கூறப்படும் பழமொழிதான் நமக்கு நினை வுக்கு வருகிறது. ஆலு லேது, சூலு லேது, கொடுக்குப் பேரு சோமலிங்கம்என்று தெலுங்கில் சொல்வார்கள். அதாவது, ‘‘எனக்கு இருக்க இடம் இல்லை, இன்னும் கல் யாணமே ஆகவில்லை, ஆனால் என் பிள் ளையின் பெயர் சோமலிங்கம்’’ என்பது இதன் பொருள். இன்னும் தேர்தல்களே அறிவிக்கப் படவில்லை. இந்தக் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று இன்னமும் ஆட்சியே அமைக்கவில்லை.

ஆயினும் அதற்குள் ளாகவே இக்கட்சிகள் எதிர்கால இந்தியாவின் பிரதமர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்தான் என சித்தரிக்கத் தொடங்கிவிட்டன.அதுமட்டுமல்ல இவ்விரு கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வரும்போது தங்கள் கட்சி யின் சார்பில் பிரதமர் யார் என்பதை கார்ப்ப ரேட்டுகளின் மேடையில் நின்று அறிவித்த தில் ஆச்சரியப்படுவதற்கும் எதுவுமில்லை. இது இன்றைய இருவித இந்தியாவின் எதார்த் தப் பிரதிபலிப்பேயாகும். ஒளிரும்இந்தி யரின் பிரகாசம், ‘அல்லல்பட்டு ஆற்றாது அழுது கொண்டிருக்கும்இந்தியரின் இழி நிலையோடு நேரடியாகத் தொடர்புடைய தாகும். தங்கள் கட்சியின் சார்பில் பிரதமரை அறிவித்திட, கார்ப்பரேட்டுகளின் மேடை களை இக்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டி ருப்பதானது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இருவேறு இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவாக்கிடக்கூடிய வகையிலேயே இப்போது மேற்கொண்டிருப் பதைப் போன்றே கார்ப்பரேட்டுகளின் நலன் களுக்கு வெண்சாமரம் வீசும் கொள்கை களையே தொடர்வோம் என்பதையும் அதன் மூலம் மிகவும் தெளிவான முறையில் அவர் கள் சமிக்ஞை காட்டிவிட்டார்கள். எனவே, இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் சாமா னிய மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றக் கூடிய வகையில் நவீன தாராளமய பொருளா தாரச் சீர்திருத்தங்களையே மேலும் தீவிரமாகப் பின்பற்றுவார்கள் என்பது தெள்ளத் தெளி வாகிவிட்டது. இந்தியத் தொழில் அதிபர்கள் கூட்டமைப் பில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘இந்தியா வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் வெள்ளைக் குதிரையில் தன்னந்தனியே வரும் தூதுவனால் தீர்த்து வைத்திட முடி யாது’’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இதேபோன்றே இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பில் பேசி யிருக்கிற பாஜக முன்னிறுத்த முனைந்துள்ள நபரும் இதேபோன்ற தொனியில்தான் உரை யாற்றி இருக்கிறார். அலைஸ் இன் வொண் டர்லாண்ட்டில் வரக்கூடிய வால்ரஸ் போன்றே - ‘‘முட்டைக்கோசிலிருந்து முடி சூடா மன்னன்வரை... பல விஷயங்களைப் பேசத் தொடங்கி யிருக்கிறார். வரவிருக்கும் தேர்தல்களில் மக்களின் ஆதரவினைப் பெறுவதற்காக இவ்வாறு இரு வருமே ‘‘கனவுகளை’’ விற்றுக்கொண்டிருக் கிறார்கள். காங்கிரஸ் கட்சி நாட்டிலுள்ள நூறு கோடி இந்தியர்களை வலுவுள்ளவர்களாக ஆக்குவோம் என்று சொல்லிக் கொண்டிருக் கிறது. ஆனால் அதே சமயத்தில் நூறு கோடி இந்தியர்களையும் பட்டினி போட்டு கொல்லக் கூடிய வகையில் நடவடிக்கைகளை எடுத் துக் கொண்டிருக்கிறது. பாஜகவும் வீரியம்மிக்க குஜராத்தைப் போல, ‘வீரியம்மிக்க இந்தியாவை உருவாக்கு வோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. 2002இல் குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனப் படுகொலைகள் நடைபெற்ற தைப்போல இந்தியா பூராவிலும் நடத்து வதற்கு அனுமதி கோருகிறார்கள் என்பதே இதன் பொருளாகும். குஜராத் முதல்வர் தன் மாநிலத்தில் பட்டகடனை, இந்தியா பூராவும் உள்ள மக்களிடம் திருப்பிச் செலுத்துவதற்குக் கோருகிறார். மேலும் மிகவும் விசித்திர மானமுறையில் அவர் பெண்களுக்கு அதி காரம் கொடுப்பது குறித்தும் அளந்து கொண் டிருக்கிறார். ஆனால் அவர் சார்ந்திருக்கிற ஆர்எஸ்எஸ் இயக்கமோ பெண்களை இரண் டாம்தரப் பிரஜைகளாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது. மனிதவள வளர்ச்சி அட்டவணையில் தேசிய சரா சரியைவிட, மிகவும் கீழான நிலையில், அதி லும் குறிப்பாக பெண்குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைவு, கல்வி முதலான விஷயங் களில் மிகவும் கீழான நிலையில் குஜராத் இருக்கிறது.இத்தகைய கனவு வியாபாரிகள்நாட்டின் எதார்த்த உண்மைகளை முற்றிலுமாக மூடி மறைத்து விட்டு, தங்கள் சொந்தச் சரக்குகளை விற்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார் கள்.

இத்தகைய கனவுகளை அவர்கள் விற்க முயல்வதன் மூலமாக, தாங்கள் சமைக்க விருக்கும் கனவு உலகில் பாலும் தேனும்ஆறாக ஓடும் என்று மக்களை நம்ப வைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் மக்களுக்குத் தேவை என்ன? உண்மையான எதார்த்த உலகில் தற்போ துள்ள தங்கள் நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுதான். பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவ தென்பது கனவு காண்பதால் மட்டும் எக் காலத்திலும் நடந்துவிடாது. பல சமயங்களில் இத்தகைய கனவுகள் தீக்கனவுகளாக முடிந்துவிடும். இவ்வாறு இவ்விரு கட்சிக ளுமே தாங்கள் கனவு காணும் கொள்கை களின் ஊடாக நாட்டை கொண்டுசெல்ல முயல்கின்றன. நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண் டுமானால் கனவுகள் கண்டால் நடக்காது, மாறாக தொலைநோக்குப் பார்வையோடு கொள் கைகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். பாஜகவின் தொலைநோக்குப் பார்வை என்பது நாட்டை ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் திட்ட மான ஒரு வெறி பிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரமாகஇந்தியாவை மாற்ற வேண்டும் என்றிருக்கக்கூடிய அதே சமயத் தில், பாஜகவும் காங்கிரசும் பின்பற்றும் பொரு ளாதாரக் கொள்கைகள் என்பவை அநேகமாக நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கும் ஏழைக ளுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் ஆழமாக்கக்கூடிய விதத்திலேயே தொடர்கின்றன என்பதேயாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்ததோர் இந்தியாவைப் படைக்கும் விதத்தில் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கை இவ்விரு 
கட்சிகளிடமும் கிடையாது என்பதே உண் மையாகும்.

இரு கட்சிகளிடமும் மற்றும் ஒரு விஷயத் திலும் ஒற்றுமை காணப்படுகிறது. இரு கட்சி களுமே இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் அடிவருடியாக மாற்ற வேண்டும் என்பதில் ஒத்துப்போகின்றன. நம் நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டுச் சந்தை யையும் அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத் தின் கொள்ளைலாப வேட்டைக்குத் திறந்து விட வேண்டும் என்பதிலும் நம் நாட்டின் வளங்களையும் செல்வாதாரங்களையும் அவை கொள்ளையடித்துச் செல்ல அனுமதிப் பதிலும் போட்டி போட்டுக்கொண்டு முன் னணியில் நிற்கின்றன. மாறாக, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்ததோர் இந்தியா உரு வாக்குவதற்கேற்ற விதத்தில் இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.இதனைச் செய்ய முடியுமா? நிச்சயமாக வும் முழுமையாகவும் வெற்றிகரமாகவும் செய்ய முடியும். நாட்டில் ஆட்சியாளர்களால் பல்வேறு மெகா ஊழல்கள் மூலம் கொள்ளை யடிக்கப்பட்ட பணத்தையும், பணக்காரர்களுக் கும் அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத் திற்கு அளித்துள்ள மிகப்பெரிய அளவிலான வரிச்சலுகைகளையும் நிறுத்தினாலே, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் போதுமான வளத்தை வழங்கிட முடியும். மேலும் அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் குடியிருப்பு வசதி களையும் செய்து தர முடியும். சிறந்ததோர் இந் தியாவை உருவாக்குவதற்கான இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கையை நிறைவேற்ற வேண்டுமானால், தேவைப்படுவது என்ன? ஆட்சியாளர்களின் கொள்கைத் திசைவழியில் மாற்றத்தை ஏற் படுத்த வேண்டியதே இதற்கு அத்தியாவசியத் தேவையாகும். மக்கள் நலம் சார்ந்த விதத்தில் கொள்கைத் திசைவழியை மாற்றக்கூடிய அதே சமயத்தில் நம் பொருளாதார அடித்தளங் களையும் வலுப்படுத்திட வேண்டும். இவற்றை எய்திட நம் நாட்டில் அபரிமிதமாகக் கிடைத்திடும் பொருளாதார, கனிம மற்றும் மனித வளங்களைச் சரியானமுறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி என்னும் வெள்ளைக் குதிரையில் ஏறி சவாரி செய்திட ராகுல் காந்தியும், மோடி யும் 
போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ராமாயணத்தில் ராமர் யாகம் செய்த சமயத்தில் அவரது குதிரையை லவ, குசா என்னும் இரட்டை சகோதரர்களால் நிறுத்தப்படும். அதேபோன்று இன்றைய நவீன அரசியலில், ஆட்சி என்னும் குதிரை இரு சகோதரர்களால் தடுத்து நிறுத்தப்படும். அவர்கள் செங்கொடி யின் கீழ் இயங்கும் தொழிலாளி (சுத்தியல்) மற்றும் விவசாயி (அரிவாள்)கள்தான். செங் கொடிதான் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வற்ற சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார் வையுடன் கூடிய கொள்கையைப் பெற்றிருக் கிறது. ஆட்சியாளர்களைத் தங்கள் கொள் கைத் திசைவழியை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் மக்களைத் திரட்டி வலுவான போராட்டங்களை நடத்துவதன் மூலம் செங் கொடி இயக்கம் இதனைத் தீர்மானித்திடும்.

தமிழில்: ச.வீரமணி

Friday, January 27, 2012

உரிமைகளுக்காகப் போராடுவோம்!



பாரதம் எனப்படும் இந்தியா தன்னு டைய 63வது குடியரசு தினத்தை நிறைவு செய்திருக்கிறது. இதேபோன்றதொரு தினத் தன்று ஈராண்டுகளுக்கு முன்பு, குடியரசு தன் னுடைய அறுபதாண்டுகளை நிறைவு செய்த சமயத்தில், இந்தியா உட்பட பல புராதன நாகரிக சமுதாயங்களில் கருதப்படுவதைப் போல, இது ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், நம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சிறந்த தோர் இந்தியாவிற்காக ஏங்கிக் கொண்டிருப் பதையும் தெரிவித்திருந்தோம்.

துரதிர்ஷ்டவசமாக, நாட்டு மக்களுக்கு, கடந்த ஈராண்டு காலம் என்பது அதற்கு முன்பிருந்த நிலைமைகளின் தொடர்ச்சியாக மட்டுமல்ல, அதைவிட மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட நிலைமையே ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து ஏறிவருவது, மக்களின் ஆரோக்கியமான வாழ்வாதாரங்களைக் கடுமையாக அரித்துத் தின்று கொண்டிருக் கிறது. தொடர்ந்து விரிவாகி வரும் பொரு ளாதார சமத்துவமின்மை மக்களின் துன்ப துயரங்களை மேலும் அதிகரித்திருக்கிறது. நாட்டில் பணக்காரர்களின் வாழ்வில் ஏற் பட்டுள்ள வளத்திற்கும், ஏழைகளின் வாழ் வில் ஏற்பட்டுள்ள வளமின்மைக்கும் இடையேயான இடைவெளி என்பது மேலும் விரிவடைந்து ஆழமாகி இருக்கிறது.

நம் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை யில் வளர்ந்து வரும் அவலங்கள் குறித்து தொடர்ந்து விளக்கி வந்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல, நாட்டின் பிரதமர் கூட, ஊட்டச்சத்துக் குறைவு தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடும் சமயத்தில், இது ஒரு ‘‘தேசிய அவமானம்’’ என்று குறிப்பிட்டு, நாட்டு மக்க ளின் சுகாதாரமற்ற நிலையினை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆயினும், இந்நிலை யினை மாற்றிட அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எதனையும் எடுத்திட வில்லை. அதுமட்டுமல்ல, இது தொடர்பாக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, இந் நிலை, தொடர அனுமதித்திருப்பது அனைத் தையும்விட மோசமான அம்சமாகும். சுகாதா ரம் மற்றும் கல்வி என்பது சாமானிய மக்க ளின் எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக் கிறது. அரசாங்கம் சுகாதாரத்திற்காக ஒதுக் கிடும் தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காட்டிற்கும் குறை வாக இருக்கும் நிலை தொடர்கிறது. புற்றீசல் போல் முளைத்துக் கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகள் பணக்காரர்களுக்கு மட்டும் சேவகம் செய்யும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கல்வியும் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டு வணிகமயமாகி விட்டது. அரசு ஆரம்பப் பள்ளிகள் பெருமள வில் மூடப்பட்டு வருவதாக அறிக்கைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கல்விக் காக அரசு நாட்டின் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 6 விழுக்காடு ஒதுக்குவதாக ஒப்புக் கொண்டிருந்தபோதிலும், நடைமுறையில் அதில் பாதியளவுகூட இதுவரை ஒதுக்கிட வில்லை. நாட்டில் ஆறு வயதுக்கும் பதி னான்கு வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் கல்வி அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என் கிற முறையில் நாடாளுமன்றத்தில் அரசிய லமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, கல்வி உரிமையை, நிறைவேற்றி இருந்த போதிலும், இதுதான் இன்றைய எதார்த்த நிலையாகும். அரசாங்கம் கல்விக்காக செலவு செய்வதை அதிகரிப்பதன் மூலம் கல்வி உரிமை அளிப்பதை உத்தரவாதம் செய் திருக்க வேண்டும். மாறாக, அரசாங்கம் நம் நாட்டின் எதிர்காலமாக விளங்கும் இளம் தலைமுறையினருக்கு தான் அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்றாமல் நழுவிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. கல்விக்கு நிதி ஒதுக்குவதற்குப் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசு தான் அளித்திட்ட உறுதிமொழிகளை நிறை வேற்றாமல் துரோகம் இழைத்துக் கொண்டி ருப்பதோடு, பழியை மாநில அரசுகளின் மீதும் சுமத்திக் கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் நிதி ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான வாய்ப்பு வசதிகள் மிகவும் அறுகிப் போயுள்ள நிலையில், தேவையான நிதியை சேகரிக்க முடியாமல் இப்பொறுப்பினை நிறைவேற்ற முடியாமல் இயற்கையாகவே திணறிக் கொண்டிருக்கின்றன. எனவே, அரசாங்கம் அளித்திட்ட மற்ற உரிமைகளைப் போலவே, இந்த உரிமையும் தாளில் மட்டுமே தொடர்ந்து நீடிக்கிறது.

நாட்டில் உள்ள குழந்தைகள் அனைத் தையும் பள்ளிகளில் சேர்க்க வேண்டு மானால் எவ்வளவு செலவாகும்? கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் கவுன்சில் (சூஊநுசுகூ), இந்த இலக்கை எட்ட ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வோராண்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று மதிப்பிட்டிருக்கிறது. இந்த ஐந்தாண்டுகள் என்பது புதிய பள்ளிகளுக் கான கட்டிடங்கள் கட்டுவதற்கும், லட்சக் கணக்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கும், மதிய உணவு மற்றும் பாடப் புத்தகங்கள் முதலானவை அளிப்பதற்கும் தேவைப்படும் கால அளவாகும். மொத்தத்தில் ஐந்தாண்டு களுக்கும் இத்தொகை என்பது 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்களாகும். அதாவது நம் நாட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் கொள்ளையடிக்கப்பட்ட தொகையைவிட இத்தொகையானது ஆயிரம் கோடி ரூபாய் குறைவானதாகும்.

அதேபோன்று, நம் நாட்டு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்கிற உறுதிமொழியும் ஏட்டளவிலேயே இருக் கிறது. நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதத்திற்கு 3 ரூபாய் விலையில் 35 கிலோ கிராம் உணவுதானியங்கள் அளிக்க இருப்ப தாக அரசின் திட்டம் கூறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வறுமைக்கோட் டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடும் பார்க்காது, அனைத்துக் குடும்பத்தினருக்கும் 2 ரூபாய் விலையில் அளித்திட வேண்டும் என்று கோருகிறது. இதற்கு அரசாங்கத்திற்கு ஆண் டொன்றுக்கு 88 ஆயிரம் கோடி ரூபாய் கூடுத லாக செலவினமாகும். இதுவும்கூட 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் அடிக் கப்பட்ட கொள்ளையுடன் ஒப்பிடுகையில் அதில் பாதிதான்.

மக்களுக்கு அரசு தன் உறுதிமொழியை நிறைவேற்றிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் நாட்டில் போதிய வளங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. மாறாக, நாட்டின் வளங்கள் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் வாயிலாக மிகவும் அதிர்ச்சியடையக்கூடிய விதத்தில் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டிருக் கின்றன. நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற மெகா ஊழல்களைத் தடுத்து நிறுத்தி யிருந்தாலேயே நாட்டு மக்களுக்குத் தேவை யான வசதிகளைச் செய்து தந்திருக்க முடி யும். அவர்களின் ஊட்டச்சத்துக் குறை வினைப் போக்கி இருக்க முடியும், தேவை யான கல்வியை அளித்திருக்க முடியும், இளைஞர்களை போதுமான அளவிற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும், சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றளவும் நாட்டின் சாபக்கேடாக இருந்து வருகிற பசி, பஞ்சம், பட்டினியை விரட்டி அடித்திருக்க முடியும்.

ஆயினும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் உயர்மட்ட அளவில் நடந்துவரும் ஊழலை ஒழித்துக்கட்டும் வகையில் வலுவான வகையில் லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டங்களைக் கொண்டுவர நாடாளுமன் றத்தை அனுமதித்திட மறுத்து வருவது தொடர்கிறது. இவ்வாறாக அரசாங்கம், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும் உறுதிமொழி களை நிறைவேற்ற மறுப்பதோடு மட்டுமல் லாமல், நம் நாட்டின் செல்வங்கள் நவீன தாராளமயக் கொள்கைகளின் மூலம் கார்ப்ப ரேட்டுகள் அதிகபட்ச லாபம் என்ற பெயரில் கொள்ளையடித்துச் செல்லவும் வசதி செய்து கொடுத்திருக்கிறது.

இவ்வாறு ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டு களுக்கு ஆதரவாகக் கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளில், மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய விதத் தில் தீவிரமானமுறையில் மாற்றத்தைக் கொண்டுவராவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழி களை நிச்சயமாக நிறைவேற்றிட முடியாது. கடந்த காலங்களில் இப்பகுதியில் பல தடவை நாம், ஆட்சியாளர்கள் பணக்காரர் களுக்கு அளித்து வரும் வரிச்சலுகை களைக் கைவிட்டு அத்தொகைகளை பொது முதலீடுகளில், குறிப்பாக விவசாயத் துறையில், ஈடுபடுத்தினால், தற்போது நாட்டு மக்கள் அனுபவித்து வரும் சொல்லொண் ணாத் துன்பதுயரங்களையும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதையும் தடுத்து நிறுத்திட முடியும் என்று குறிப்பிட்டு வந் திருக்கிறோம். மேலும் நாட்டில் வேலை வாய்ப்பையும் அதிகப்படுத்தி, நம் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் இது இட்டுச் செல்லும்.

இவ்வாறு நாம் கூறுவதால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்றோ அல்லது முன்னேறிடவில்லை என்றோ பொருளல்ல. நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தால் ஏற்பட்ட பயன்கள் நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கு மட்டுமே சென்றடைந்துள்ளன. மீதமுள்ள கோடிக் கணக்கான மக்களை துன்ப துயரங்களில் தள்ளியுள்ளன. இத்தகைய அரசின் ஒரு சார்புத் தன்மை சரிசெய்யப்பட்டாக வேண் டும். இதனை, ஆட்சியாளர்கள் தங்கள் பொரு ளாதாரக் கொள்கைகளை மக்கள் சார்பான தாக மாற்றக்கூடிய விதத்தில், வலுவான மக்கள் இயக்கங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே, செய்திட முடியும்.

எனவே, 63ஆவது குடியரசு தினம் நாட்டுப்பற்று மிக்க இந்தியர் அனைவரையும், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய வகையில் மக்களின் உரிமைகளைப் பாது காத்திடக்கூடிய வகையில் ஆட்சியாளர் களின் இத்தகைய மோசமான கொள்கை களுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்திட முன்வரவேண்டும் என்று அறை கூவி அழைக்கிறது.

தமிழில்: ச.வீரமணி

Tuesday, January 17, 2012

குழந்தைகளின் பரிதாப நிலை

சில அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் பசி, பட்டினி, ஊட்டச்சத் துக் குறைவு தொடர்பாக நடத்திய ஆய்வு களின் மீதான அறிக்கை ஒன்றை பிரதமர் வெளியிடுகையில், ‘‘ஊட்டச்சத்துக் குறைவு பிரச்சனை ஒரு தேசிய அவமானம்’’ என்று புலம்பியிருக்கிறார். இது ஒரு தேசிய அவ மானம் என்பது உண்மையேயாகும். ஆயினும், இதற்கு முன் பிரதமர் அவர்கள், இந்தியா ‘‘வலு வான பொருளாதார நிலையை’’ எய்தி விட்டது என்று படாடோபமாக அறிவித்தது குறித்தோ, இருபதாண்டுகளுக்கு முன் தன் னால் தொடக்கி வைக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மாபெரும் வெற்றி பெற்று விட்டதாக பீற்றிக்கொண்டது குறித்தோ எதுவும் கூறாமல் தற்போது மவுனம் சாதிக் கிறார்.

பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை, நம் நாட்டில் ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந் தைகளில் 42 விழுக்காடு, குறைந்த எடை யுடன் காணப்படுவதாகவும், 59 விழுக்காடு தங்கள் வயதுக்குரிய வளர்ச்சியுடன் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆய் வானது நாட்டில் 2011ஆம் ஆண்டில் கிராமப் புறங்கள் நிறைந்த, நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளில் சுமார் 20 விழுக்காட்டினரை உள்ளடக்கியுள்ள 112 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டவைகளாகும்.

பிரதமர் இவ்வாறு அதிர்ச்சிதரத்தக்க செய் திகளை வெளிப்படுத்திப் பேசியுள்ள போதி லும், இம்முடிவுகள் புதியவை அல்ல. இருப தாண்டுகளுக்கு முன் இன்றைய பிரதமரும் அன்றைய நிதி அமைச்சருமாகிய மன் மோகன் சிங் அவர்களால் தொடங்கப்பட்ட நவீன தாராளமயப் பொருளாதார ‘சீர்திருத் தங்கள்’ நாட்டு மக்கள் மத்தியில் சமச்சீரின் மையை, ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி, இருவித இந்தியாவை உருவாக்கவே இட்டுச் சென்றுள்ளன என்று அரசாங்கத்தின் ஆய்வு கள் பல ஏற்கனவே கண்டறிந்துள்ளன. அவ் வாறு வெளியிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஆய்வுகள் சிலவற்றை இப்போது நாம் ஆராய் வோம்.

நாட்டின் வறுமைநிலை குறித்து பல்வேறு புள்ளிவிவரங்களுக்கிடையே பல்வேறுவித மான விவரங்கள் இருந்தபோதிலும், சமீபத் தில் திட்டக் கமிஷன் சார்பில் வெளியிடப் பட்டுள்ள மனிதகுல வளர்ச்சி அறிக்கை (ழரஅயn னுநஎநடடியீஅநவே சுநயீடிசவ)யில், நம் மக்களில் சுமார் 31 கோடி பேர் அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ் கின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறது. 1973-74க்குப் பின், வறுமைக்கோட்டுக்குக் கீழா னோர் எண்ணிக்கை வெறும் 1 கோடியே 90 லட்சம் மட்டுமே குறைந்திருக்கிறது. வறுமை குறித்து சரியான அளவில் விவரங்கள் சேக ரிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக் கட்டும், அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கைகளின்படியே, ஒருவர் உட் கொள்ள வேண்டிய உணவின் அளவு (அதா வது குறைந்தபட்ச கலோரிகள் மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவு உட்கொள்ளுதல் என் பது) 1983க்கும் 2005க்கும் இடையே கிராமப் புறங்களில் 8 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 3.3 விழுக்காடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பசி-பட்டினியில்லாத மாநிலம் என்று எது வுமே இல்லை என்று இது தொடர்பான அறிக் கைகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவைகள் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளா கும். இது ஆப்ரிக்க நாட்டின் நிலைமையை விட மோசமானதாகும். நாட்டின் குழந்தை களில் பாதிக்கும் மேற்பட்டவைகளுக்கு தடுப்பூசிகள் முழுமையாகப் போடப்படுவ தில்லை. இதன் விளைவாக இவை, முற்றிலு மாக தடுக்கப்படக்கூடிய வியாதிகளைக் கூட இவற்றால் தடுக்க முடியாமல், நோய்க்கு இரையாகி இறக்கும் அவல நிலை இன்னமும் இருந்து வருகிறது. நாட்டில் சுகாதாரத் திற்காக அரசு செலவிடும் மொத்த செல வினம் என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் விழுக்காட்டின் அடிப்படையில் பார்த் தோமானால், ஒட்டுமொத்த ஆப்ரிக்க நாடு களில் மேற்கொள்ளப்படும் செலவினத்தை விடக் குறைவானதாகும். நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்தபின்னரும் நம் நாட்டின் துப்புரவு நிலைமைகள் மிகவும் வேதனையளிக்கக்கூடிய விதத்திலேயே இருக்கின்றன. நாட்டில் உள்ள குடும்பங் களில் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேற்பட் டவை, கழிப்பறை வசதிகளின்றியே இருக் கின்றன.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-2 நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-3 நடத்தப்பட்டிருக்கிறது. ஆய்வு-2இன் போது இருந்த நிலைமை களைவிட தற்போது ஆய்வு-3இன் போது உள்ள நிலைமைகள் மிகவும் வேதனை யளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக் கின்றன. 6 மாதங்களுக்கும் 35 மாதங்களுக் கும் இடைப்பட்ட வயதில் உள்ள குழந்தை களில் ரத்தசோகை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 74.2 விழுக்காட்டிலிருந்து 79.2 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. 15 வயதுக்கும் 49 வயதுக்கும் இடையே மண மாகியுள்ள பெண்களில் ரத்தசோகைக்கு ஆளானோர் எண்ணிக்கை 51.2 விழுக் காட்டிலிருந்து 56.2 விழுக்காடாக உயர்ந் திருக்கிறது. இதே வயதில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் ரத்தசோகைக்கு ஆளானோர் எண்ணிக்கை 49.7 விழுக்காட்டிலிருந்து 57.9 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-3 மேற் கொண்ட ஆய்வின்படி, மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 38.4 விழுக் காட்டுக் குழந்தைகள், தாங்கள் இருக்க வேண்டிய வளர்ச்சியைவிட குறைவாகவே இருக்கின்றனர் என்றும். 46 விழுக்காட்டுக் குழந்தைகள் குறைந்த எடையுடன் காணப் படுகின்றனர் என்றும், 79.2 விழுக்காட்டுக் குழந்தைகள் ரத்த சோகையுடன் காணப் படுகின்றனர் என்றும் கூறியிருக்கிறது. இதுதான் நம் தாய்மார்கள் மற்றும் குழந்தை களின் இன்றைய நிலையாகும்.

நம் குழந்தைகளின் சுகாதாரம் என்பது நம் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்துடன் நேர டியாக சம்பந்தப்பட்டவை என்று அனைத்து ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ள உண்மை யாகும். ஆட்சியாளர்கள், நாட்டின் பொருளா தார வளர்ச்சி விகிதம் உயர்ந்து கொண்டே இருப்பதாக பீற்றிக்கொண்டிருந்தாலும், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் 2007ஆம் ஆண்டில் 2.8 விழுக்காடாக இருந்தது, 2009-10ஆம் ஆண்டில் 9.4 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது என்று மதிப்பிட்டிருக்கிறது. வேலையில் உள்ளவர் களில் கூட, 16 விழுக்காட்டினர்தான் முறை யான ஊதியத்துடன் வேலையில் உள்ளவர் கள். மற்றவர்களில் 49 விழுக்காட்டினர் சுய வேலை பார்ப்பவர்கள் (அதாவது வீதிகளில் சுற்றி பொருள்களை விற்போர். சாலையோரங் களில் பொருள்களை விற்போர் போன்று சமூ கத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள்) மற்றும் 39 விழுக்காட்டினர் அத்துக்கூலி கேசுவல் தொழிலாளர்களாவார்கள்.

ஊட்டச்சத்துக் குறைவுடன் எடை குறைந்து காணப்படும் குழந்தைகள் 2004ஆம் ஆண்டில் 53 விழுக்காடாக இருந் தது, 2011இல்42ஆகக் குறைந்துவிட்டது என்பது உண்மையானாலும், இவ்வாறு 42 விழுக்காட்டுக் குழந்தைகள் எடை குறை வுடன் இருப்பது குறித்து, பொறுப்புள்ள பிரஜைகளைக் கவலைக்குள்ளாக்கி இருக் கிறது என்றும், இதனை எவரும் ஏற்க முடி யாது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

இதில் வேடிக்கை விநோதம் என்ன வெனில், பிரதமர்தான் இந்தியாவின் ஊட்டச் சத்து சவால்களுக்கான தேசிய கவுன்சிலின் தலைவராவார். நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவுடன் காணப்படும் குழந்தைகள் பிரச் சனையை சமாளிப்பதற்காக ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் என்னும் அமைப்பினை நாடு முழுதுக்கும் அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. இது வும் கூட அரசாங்கம் தானாக முன்வந்து விரும்பி, செய்திடவில்லை. மாறாக, உச்ச நீதிமன்றத்தின் கட்டளையின்படி அரசால் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். அவ்வாறு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டிருந்த போதிலும்கூட, பிரதமரின் தலைமையில் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மேற் பார்வையாளர்கள் (ஐஊனுளு ளரயீநசஎளைடிசள) பணி யிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நாடு முழுதும் இன்னமும் நிரப்பப்படாமல் இருக் கின்றன. இத்திட்டத்தை அமல்படுத்து வதற்கு மிகவும் முக்கியமானது அங்கன்வாடி மையங்களாகும். நாடு முழுதும் அமைக்கப்பட வேண்டிய 14 லட்சம் அங்கன்வாடி மையங்களில், 1 லட்சத்து 10 ஆயிரம் மையங் கள் இன்னமும் செயல்படுத்தப்படாமல் இருந்து வருகின்றன. செயல்படும் அங்கன் வாடி மையங்களிலும் மிகப் பெரும்பாலான வற்றின் நிலைமைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. பீகார் மாநிலத்தில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் கட்டிட வசதி எதுவுமின்றி திறந்த வெளியில் இயங்கி வருகின்றன. பாதிக்கும் மேற்பட்ட மையங்களில் கழிவறை வசதி களோ, குடிநீர் வசதிகளோ கிடையாது. அர சாங்கத்தின் தாரக மந்திரமான பொது-தனி யார்-ஒத்துழைப்பு திட்டப்படி, இம்மையங்களுக்கான உணவு விநியோகம் தனியாரால் மேற்கொள் ளப்பட்டிருக்கின்றன. இது எவ்வித ஒழுங்கு முறையுமின்றியும், தரப்படும் உணவின் தரம் மற்றும் அளவு குறித்து எவ்வித சரிபார்த் தலுமின்றி பெயரளவிலும் மிகவும் மோசமான முறையில் அளிக்கப்பட்டு வருகின்றன.

அங்கன்வாடி மையங்களின் பரிதாபகர மான நிலைமைகளுக்கு எதிராகப் பல இடங்களில் மக்கள் கிளர்ச்சிகள் நடை பெற்றுள்ளபோதிலும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலமுறை விவாதங்கள் நடைபெற்றுள்ள போதிலும், அங்கன்வாடி ஊழியர்களின் நிலைமைகளும் மிகவும் வேதனையளிக்கக்கூடிய விதத்திலேயே உள்ளன. அவர்களின் பணி நிலைமைகள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையிலேயே இன்றளவும் இருந்து வருகின்றன. மாத ஊதியமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு 1500 ரூபாயும், அங்கன்வாடி உதவியாளர் களுக்கு 750 ரூபாயும் அளிக்கப்படுகிறது. நாட்டின் எதிர்காலமாக விளங்குகின்ற குழந்தைகளில், ஊட்டச்சத்துக் குறைவாக உள்ளவற்றைக் கண்டறிந்து, அவர்களைப் பேணி வளர்த்திடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்களின் பரிதாப நிலை இவ் வாறுள்ளது.

ஆயினும், அரசாங்கம் இத்துறையை உதா சீனப்படுத்துவது இன்னமும் தொடர்கிறது. நாடு முழுதும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வளர்ச்சிப் பணிகள் திட்டத்தை விரிவாக் கிடத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அர சாங்கம் இன்னமும் செய்திடவில்லை. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே பொது சுகாதாரத்திற்காக ஆட்சியாளர்கள் செலவு செய்கிறார்கள். உண்மையில், பொது சுகா தாரத்திற்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள அற் பத்தொகையான 22 ஆயிரத்து 300 கோடி ரூபாயைவிட, நாட்டில் நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள தொகையானது எட்டு மடங்கிற்கும் அதிக மாகும்.

நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் குழந்தைகளின் நிலைமையை மாற்ற வேண்டும் என்பது குறித்து பிரதமர் உண் மையிலேயே அக்கறையுள்ளவராக இருந் தால், பின் அவர் அடிப்படை சுகாதார நலன் களை அனைவருக்குமானதாக மாற்றிட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இதற்கு நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 3 விழுக்காடு சுகாதார நலனுக்கான திட்டங்களுக்காக ஒதுக்கிட வேண்டும். நம் அரசாங்கத்திற்கு நியாயமாக வரவேண்டிய வரி வருவாய்களில் இதைவிட அதிகமான அளவுத் தொகை தற் போது அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் தள் ளுபடி செய்திருக்கிற தொகை, கடந்த மூன் றாண்டுகளில் மட்டும் 14 லட்சத்து 28 ஆயி ரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் 3 லட் சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அள விற்கு கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர் களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக வளப்படுத்திடும், ஏழை களை மேலும் ஓட்டாண்டிகளாக மாற்றிடும், ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய ‘சீர்திருத்தங்களை’ குழிதோண்டிப் புதைத்திடாமல், நாட்டின் நலனிலும், நாட்டு மக்களின் நலவாழ்விலும் முன்னேற்றம் எதனையும் உருப்படியாகச் செய்திட முடியாது. நாட்டிலுள்ள ஏழை - பணக்காரர்கள் மத்தியில் இடைவெளியை அதிகப்படுத்திடும் ஆட்சியாளர்களின் கொள்கை கைவிடப்பட வேண்டியதாகும். பணக்காரர்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் கொட்டு வது கைவிடப்பட்டு, நாட்டிற்கு மிகவும் தேவைப்படுகின்ற கட்டமைப்பு வசதி களைக் கட்டுவதற்கும், அதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பைப் பெருக்கு வதற்கும் வழிசெய்யக்கூடிய விதத்தில் அத் தொகைகளை பொது முதலீடுகளில் உப யோகப்படுத்திட வேண்டும். நாட்டு மக் களின் வாழ்க்கைத்தரத்தையும், அதன் மூலம் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான விதத்தில் அவர்களது நல வாழ் வையும் மேம்படுத்துவதற்கான ஒரே வழி இதுவேயாகும்.

தமிழில்: ச.வீரமணி

Saturday, December 17, 2011

வலுவான லோக்பால் சட்டம் தேவை



ரசாங்கத்தின் உயர் மட்டத்திலும் மற்றும் பல்வேறு பொதுநிறுனங்களிலும் நிலவும் ஊழல்கள் ஒழிக்கப்படக்கூடிய வகையில் ஒரு வலுவான லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் படலாம் என்கிற முறையில் அபரிமிதமான ஆர்வத்துடன் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவக்கூடிய பின்னணியில்தான் அரசாங்கம் நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த வரைவு சட்டமுன்வடிவின் மீது அளித்துள்ள பல்வேறு பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக அனைத்துக் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. நாம் இப்பகுதியில் கடந்த காலங்களில் பலமுறை சொல்லி வந்ததைப்போல், கடந்த இருபதாண்டு காலமாகவே நாட்டில் லோக்பால் போன்றதொரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வந்திருக்கிறது. போஃபோர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கியபின், அதன் விளைவாக அரசாங்கத்திலும் அரசியல் தலைமையில் மாற்றம் வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, உயர்மட்டங்கள் நடைபெறும் ஊழலை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்தில் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோரி வந்திருக்கிறது. 1989இல் விபி சிங் அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து வந்த சமயத்தில், இத்தகையதோர் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது. அந்த சமயத்திலும், பின்னர் இரு தடவைகளிலும், 1996இல் தேவ கவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமும் அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தயவில் ஆட்சியில் நீடித்த சமயத்திலும் லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டது. ஆயினும் அது சட்டமாக நிறைவேறக்கூடிய சூழல் உருவாகவில்லை. மீண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தத்தின் விளைவாக, 2004இல் ஐமுகூ-1 அரசாங்கம் உருவாவதற்கும், நிலைத்து நிற்பதற்கும் இடதுசாரிகளின் தயவை நாடியிருந்த சமயத்தில், அதனுடைய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், லோக்பால் சட்டம் கொண்டுவரப்படும் என்கிற உறுதிமொழியைச் சேர்க்கப்பட்டது.

மேற்கண்டவாறு நாம் முயற்சிகள் மேற்கொண்ட அனைத்து சமயங்களிலும் வரைவு சட்டமுன்வடிவு பல்வேறு பிரச்சனைகளில் சச்சரவுகள் இருந்து வந்ததால் வெளிச்சத்திற்கே வரவில்லை. அதில் மிகவும் முக்கியமான விஷயம், இச்சட்டத்தின் வரையறைக்குள் பிரதமரையும் கொண்டுவருவது குறித்ததாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எப்போதுமே, அதிலும் குறிப்பாக போஃபோர்ஸ் ஊழலுக்குப் பின், பிரதமரும் லோக்பால் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வந்திருக்கிறது.

இந்தத் தடவையும் அரசின் உயர்மட்ட அளவில் நடைபெற்றுள்ள மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள பின்னணியில், மக்களின் கோபாவேசம் அதிகரித்துள்ளது.
ஐமுகூ-2 அரசாங்கமானது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலை விசாரணை செய்திட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த அடாவடித்தனத்தின் காரணமாக, 2010இல் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுமையாக வீணடிக்கப்பட்ட கசப்பான உண்மையை அடுத்து, நாடாளுமன்றத்தின் மீதே மக்களுக்கிருந்து வந்த நம்பிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இவ்வாறு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபாவேசத்தை அறிந்தபின்னர் ஐமுகூ-2 அரசாங்கம் கடைசியில் முந்தைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வரைவு சட்டமுன்வடிவை மீளவும் தாக்கல செய்ய முன்வந்துள்ளது.

தற்போது, நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய விவாதங்களை முடித்துள்ள நிலையில், சட்டமுன்வடிவானது இறுதி வடிவத்திற்கு வந்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இதன் மீது அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி, வரைவு சட்டமுன்வடிவை ஒரு வலுவான சட்டமுன்வடிவாக மாற்றிட, அச்சட்டமுன்வடிவில் சேர்க்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளையும், திருத்தங்களையும் சமர்ப்பித்தார். அவ்வாறு அவர் சமர்ப்பித்த குறிப்புகளுடன், தற்போது நடைபெறும் அனைத்துக் கட்சியினர் கூட்டத்திலும், கீழ்க்கண்ட முன்மொழிவுகள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் தாக்கல் செய்யப்பட்டது.

(1) லோக்பால் சட்டத்தின் அதிகாரவரம்பெல்லைக்குள் பிரதமரையும் கொண்டுவருவது தொடர்பாக ஒரு பொதுவான கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. லோக்பாலின் வரையறைக்குள் பிரதமரும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். இது தொடர்பாக அரசு துல்லியமான பரிந்துரைகளுடன் வர வேண்டும். எக்காரணம் கொண்டும், சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் பிரதமர் அலுவலகத்தின் வணிகத் தொடர்புகள் எதுவும் இதன் வரையறையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படக் கூடாது.

(2) ஊழலை வலுவாகக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் நீதித்துறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். நீதித்துறையிலும் நியமனங்கள், மாற்றல்கள் தொடர்பாக ஊழல் புகார்கள் வரும்பட்சத்தில் அவற்றை விசாரிக்கக்கூடிய அளவிற்கு ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

(3) நாட்டில் தேர்தல்கள் நடைபெறும்போது பணபலம் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழித்திட வகைசெய்யும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படாமல் நம் நாட்டில் இலஞ்ச ஊழலை வலுவாக ஒழித்திட முடியாது.

(4) அனைத்து மட்டங்களிலும் லஞ்ச ஊழலால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் தொடர்பாக வரும் குறைபாடுகளை விசாரிப்பதற்குத் தனியே குறைதீர் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
(5) லோக்பால் சட்டத்தின் அதிகாரங்கள் ஊழலில் ஈடுபடும் அனைத்துத்தர அதிகாரிகளின்மீதும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய அளவிற்கு விரிவாக்கப்பட வேண்டும். இதேபோன்று அனைத்து இனத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மாநில மட்டத்தில் லோகாயுக்தாக்கள் அமைக்கப்பட வேண்டும்.

(6) லோக் பால் சட்டத்தின் கீழ் ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act) மீது பிரத்யேக அதிகாரவரம்பெல்லையுடன் தனியே ஒரு புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஊழல் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் விசாரிக்கக்கூடிய அளவிற்குத் தனி புலனாய்வு அமைப்பாக இது அமைந்திட வேண்டும். மத்தியப் புலனாய்வுக் கழகமும் லோக்பால் வரம்பெல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எவ்வித அதிகாரமுமற்ற, வலுவற்ற அமைப்பாக லோக்பால் மாற்றப்பட்டுவிடக் கூடாது.

(7) லோக்பால் கீழான தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் சுயேச்சையான தேர்வுக் குழுவின் மூலமே மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் இயக்குநரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

(8) இத்தகைய நியமனங்களுக்கான தேர்வுக் குழுவிற்கு பரிசீலனைக்காக அனுப்பப்படும் பெயர்களைத் தயார் செய்வதற்கான ஆய்வுக் குழு அமைக்கப்படுதல் கட்டாயமாக்கப் பட வேண்டும்.

(9) ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வீச்சுடன் நடத்திட, 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் வரையறை (னநகinவைiடிn) திருத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இன்றுள்ள சட்டத்தின்படி லஞ்சம் பெறுபவர் மட்டுமே குற்றத்துடன் பிணைக்கப்படுகிறார், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குப் புறம்பாக முறைகேடாக ஆதாயம் அடைபவர்கள் குற்றத்துடன் பிணைக்கப்படுவதில்லை. யாருடைய செயல்பாடுகளினாலும் முடிவுகளினாலும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறதோ அவர்கள் அனைவரும் இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் கொண்டுவரப் பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுரிமை மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை ஆகியவை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படும் அதே சமயத்தில், அவர்கள் லஞ்சஊழலில் ஈடுபட்டால் இதனை அமல்படுத்திடக் கூடாது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தேவைப்பட்டால் அரசமைப்புச் சட்டத்தின் 105ஆவது விதி திருத்தப்படுவது உட்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இல்லாவிடில், இகழார்ந்த ஜேஎம்எம் லஞ்சை வழக்கில் நடைபெற்றதைப்போல லஞ்சம் கொடுத்தவர் தண்டிக்கப்படுவதையும், லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவதையும் (exonerated) தடுத்திட முடியாது. இது தொடர்பாக மிகவும் அருவருக்கத்தக்க மற்றொரு உதாரணம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மீது 2008இல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் பெற்ற அசிங்கமாகும்.

(11) ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவாக அமைந்திட வேண்டுமானால், ஒப்பந்தங்கள், உரிமங்கள் முதலானவற்றைப் பெற்றிட கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் லஞ்சலாவண்யங்களை விசாரிக்கக்கூடிய அளவிலும் லோக்பால் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசின் உதவிகளைப் பெறும் அனைத்து அமைப்புகளும் இச்சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

லோக்பால் சட்டம் தொடர்பான விதிகள் ஆட்சிகள் மாறும்போதெல்லாம் மாறக்கூடிய விதத்தில் அமைந்துவிடக் கூடாது. முறையான நடைமுறை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள இந்த ஆலோசனைகள் அரசு உரிய முறையில் பரிசீலித்து உரிய திருத்தங்களுடன் மீண்டும் அனைத்துக் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டிட வேண்டும்.
இவ்வாறு அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்மொழிவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சனை மீது ஓர் அவசரகதியில் அரசாங்கத்தை செயல்பட வைப்பதை உத்தரவாதப்படுத்திட நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வலுவான வகையில் நிர்ப்பந்தம் அளித்திடக் கூடிய வகையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, December 3, 2011

அந்நிய நேரடி முதலீடு: அமைச்சரவை முடிவைத் திரும்பப்பெறுக



நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்த விடாது எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. சென்ற தடவையும் 2ஜி அலைக்கற்றை வரிசை ஊழல் தொடர்பாக விசாரணை செய்திட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்கிற எதிர்க்கடசி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த அரசின் அடாவடித்தனத்தினால் சென்ற கூட்டத் தொடர் முழுவதும் வீணடிக்கப்பட்டது. கடைசியில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்து, கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்தது. இத்தகைய விவேகம் முன்னதாகவே அரசுக்கு வந்திருக்குமானால், ஒட்டுமொத்த கூட்டத்தொடரும் வீணடிக்கப்படாது இருந்திருக்கும். மன்மோகன் சிங் அரசாங்கம் நாடாளு மன்றத்தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் இவ்வாறுதான் ஆணவத்துடன் அவமதித்துக் கொண்டிருக் கிறது.

நாட்டில் வால்மார்ட், கேரிஃபோர், டெஸ்கோ போன்ற மாபெரும் சர்வதேச சூப்பர் மார்க்கெட் ஜாம்பவான்களை இந்தியாவில் கடை பரப்பிட அனுமதிக்கக்கூடிய வகையில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திடும் அமைச்சரவை முடிவால் இத்தகையதொரு நிலைமையை மீண்டும் அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.
அமைச்சரவையானது நிர்வாக முடிவுகளை மேற்கொள்ள உரிமை படைத்திருக்கக்கூடிய அதே சமயத்தில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் இவ்வாறு முடிவுகள் மேற்கொண்டு அறிவிப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். இவ்வாறு அறிவித்திருப்பதானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்குமே முற்றிலும் முரணானதாகும். எனவேதான் நாடாளுமன்றவாதிகள் அரசியல் கட்சி மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, இது தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னர்தான் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று கோரியிருப்பது அடிப்படையற்ற ஒன்றல்ல. இப்பிரச்சனையில் முடிவு எதுவும் எடுக்கப்பட்டபின்னர் அதன் மீது விவாதம் நடைபெறுவது பயனற்றதாகும்.
இப்போது ஆட்சிபுரியும் இதே காங்கிரஸ் கட்சிதான், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், கொள்கை முடிவுகளை அரசாங்கம் அறிவிப்பதைக் கடுமையாக ஆட்சேபித்திருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். 1989இல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், துணை ராணுவப் படைகளில் ஒன்றாக நேஷனல் ரைஃபிள்ஸ் என்னும் படைப்பிரிவை நிறுவிடும் முடிவை அரசாங்கம் அறிவித்த சமயத்தில், அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு எதிராக உரிமைமீறல் தீர்மானத்தை (privelege motion) தற்போது உள்துறை அமைச்சராக இருப்பவர் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தீர்மானம் அனுமதிக்கப் படவில்லை என்றபோதிலும் கூட அப்போது மக்களவை சபாநாயகராக இருந்த ரபி ராய் அரசாங்கத்தின் இத்தகைய முடிவானது நேர்மை தவறியமை (breach of propriety) என்று தீர்ப்பளித்திருக்கிறார். பின்னர், 1999இல், இதே போன்று அப்போதைய பிரதமர் வாஜ்பாயி நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததாக நாடாளுமன்றத்திற்கு வெளியே அறிவித்தமைக்காக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தோஷ் மோகன் தேவ் இதேபோன்றதொரு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அன்றைய மக்களவை சபாநாயகர் பாலயோகியும் இதேபோன்றதொரு தீர்ப்பினைக் கொடுத்திருக்கிறார்.

ஆயினும், இன்று காங்கிரஸ் கட்சியானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை நியதிகளை முற்றிலுமாக மீறி நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும்விட மிகவும் மோசமான விஷயம் என்னவெனில், பிரதமர் அவர்கள் இளைஞர் காங்கிரஸ் விழா ஒன்றில் பேசுகையில், அரசாங்கத்தின் இத்தகைய முடிவை நியாயப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல், இதனால் ஏற்படவிருக்கும் நன்மைகளையும் பட்டியலிட்டிருக்கிறார். இது, வேலைவாய்ப்பைப் பெருக்கிடுமாம், விலைவாசியைக் குறைத்திடுமாம், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திடுமாம். இவ்வாறெல்லாம் கதையளந்திருக்கிறார்.

இப்படித்தான் முன்பு மின்சார உற்பத்திக்காக என்ரான் என்னும் பன்னாட்டு நிறுவனத்தினை அனுமதிக்கும்போதும் அதனை நியாயப்படுத்தி பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நாட்டில் நலிவடைந்துள்ள எரிசக்தித் துறைக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும், எரிசக்தி பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்திட இது இட்டுச்செல்லும் என்றெல்லாம் புகழப்பட்டது. இதேபோன்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மாறி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டபோதும் அதனை நியாயப்படுத்தி, கதை அளக்கப்பட்டது. அதாவது, விவசாயிகள் தட்டுப்பாடின்றி மின்சாரம் பெறுவார்கள் என்றும் இதனால் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும், மின்வெட்டு எதுவுமின்றி குழந்தைகள் தங்கள் பாடங்களைப் படிப்பார்கள் என்றெல்லாம் அளக்கப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? என்ரான் மிகவும் அவமானகரமான முறையில் நாட்டிலிருந்து வெளியேறியது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் நம் நாட்டின் சுயேச்சையான அயல்துறைக் கொள்கைதான் பலியாகியிருக்கிறதேயொழிய, நாட்டிற்கோ அல்லது நாட்டுமக்களுக்கோ இதுவரை எந்தவிதப் பயனையும் அது கொண்டுவரவில்லை.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்று அரசுத்தரப்பில் 2004-05ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட அந்தக் கணத்திலிருந்தே அதன் மீதான எதிர்ப்பு என்பதும் தொடங்கிவிட்டது. இடதுசாரிக் கட்சிகள் மிகவும் உறுதியான முறையில் எதிர்ப்பினை அளித்து வந்த காரணத்தால், அப்போது ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு அவர்களின் ஆதரவு முக்கியமாக இருந்தமையால், இது கிடப்பில் வைக்கப்பட்டிருந்தது.
அரசின் முடிவை எதிர்த்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஐமுகூ-இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு (ருஞஹ-டுநகவ ஊடிடிசனiயேவiடிn ஊடிஅஅவைவநந)விற்கு 2005 அக்டோபரில் ஒரு குறிப்பு தரப்பட்டது. அதில், சில்லரை வர்த்தகம் நாட்டில் அனுமதிக்கப்பட்டால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 11 விழுக்காடு அளவிற்குப் பங்கினைச் செலுத்திடும் என்றும், 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் என்றும் கூறப்பட்டிருந்தது. 1998ஆம் ஆண்டின் நான்காவது பொருளாதாரக் கணக்கெடுப்பானது (குடிரசவா நுஉடிnடிஅiஉ ஊநளேரள 1998), நாட்டில் சில்லரை வர்த்தகம் ஒட்டுமொத்த வேளாண்மை அல்லாத நிறுவனங்களில் வர்த்தகத்தில் கிராமப் பகுதிகளில் 42.5 விழுக்காடு அளவிற்கும் நகர்ப்பகுதிகளில் 50.5 விழுக்காடு அளவிற்கும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. இது இப்போது கிராமப்பகுதிகளில் 38.2 விழுக்காட்டினருக்கும் நகர்ப்பகுதிகளில் 46.4 விழுக்காட்டினருக்கும் வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. இவ்வாறு இன்றைய தினம் சில்லரை வர்த்தகத்தைத் தங்களின் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருக்கிறார்கள். இவ்வுண்மை நிலைமையைப் புறக்கணித்துவிட்டு, பன்னாட்டு ஜாம்பவான்களை இத்துறைக்குள் அனுமதித்தோமானால், இத்துறையை இப்போது சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்து, வறுமையிலும் கடும் துன்ப துயரத்திலும் தள்ளப்படுவார்கள். தற்சமயம் நாட்டில் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட வருமானம் இல்லாமல் அவதிப்படும் 80 கோடிக்கும் மேலான மக்கள்தொகை இதனால் மேலும் கூடும்.
சூப்பர்மார்க்கெட் ஜாம்பவான்கள் நாட்டிற்குள் நுழைந்தார்களானால், விலைவாசிகள் குறையும் என்பதும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்பதும் கட்டுக்கதைகளாகும். உண்மையில், வால்மார்ட் வெற்றி குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் (ருளு ழடிரளந டிக சுநயீசநளநவேயவiஎநள) ஒரு குழு, 2004 பிப்ரவரியில் ஓர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதில், ‘‘வால்மார்ட்டின் வெற்றி என்பது தொழிலாளர்கள் பெறும் ஊதியங்கள் மற்றும் பயன்களை குறைப்பதற்கு நிர்ப்பந்தம் கொடுத்திருக்கிறது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மூர்க்கத்தனமாக மீறப்பட்டிருக்கின்றன, நாடு முழுதும் பல்வேறு இனத்தினரிடையே வாழ்க்கைத்தரம் வீழும் என்கிற அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வணிகத்தின் வெற்றி என்பது தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் வயிற்றிலடிப்பதாக இருந்துவிடக் கூடாது. இத்தகைய குறுகிய லாபநோக்கம் கொண்ட உத்திகள் இறுதியில் நம் பொருளாதாரத்தையே அரித்து வீழ்த்திவிடும்,’’ என்று முடிவுரையாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான முடிவு என்பது நம் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சமீபத்தில் பாலியில் நடைபெற்ற சந்திப்பின்போது எடுக்கப்பட்டதென்பது தெள்ளத் தெளிவு. மிகவும் ஆழமாகியுள்ள உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார இரட்டிப்பு ஆழத்தில் சென்றுள்ள மந்த நிலை (னடிரடெந னiயீ சநஉநளளiடிn), சர்வதேச நிதி மூலதனம் தங்கள் கொள்ளை லாபத்திற்குப் புதிய பாதைகளைக் காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இதற்கு இந்திய சில்லரைச் சந்தை ஒரு மிகவும் இலாபகரமான தேர்வாகும். இந்த முடிவானது சர்வதேச மூலதனம், இந்தியாவின் பொருளாதாரத்தையும், இந்திய மக்களையும் நன்கு சுரண்டி, மிக அதிக அளவில் லாபம் ஈட்டுவதற்கு அனுமதித்திடும் என்பதில் ஐயமேதுமில்லை.

மேலும், இவ்வாறு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் நம் நாட்டில் சரிந்து வரும் ரூபாய் மதிப்பைத் தடுத்து நிறுத்திடலாம் என்றும் அரசு கருதுவதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு மாயையேயாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஈரோ ஐரோப்பிய நாடுகளின் பொது நாணயமாக நீடிக்குமா என்று ஐயப்படக்கூடிய அளவிற்கு பொருளாதார நெருக்கடி அங்கே முற்றியிருக்கிறது. ஜப்பானிலும் யென் நாணயத்தின் மதிப்பு கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே, நம் நாட்டில் சில்லரை வர்த்தகத்தை சர்வதேச மூலதனத்திற்கு திறந்து விடுவது என்பது அவை தங்கள் லாபத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்குத்தானேயொழிய வேறெதற்காகவும் கிடையாது. அதை மூடி மறைக்கும் விதத்திலேயே அரசாங்கத்தின் வாதம் அமைந்திருக்கிறது.

சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருள்களின் பணவீக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் காட்டுவது என்ன? லத்தீன் அமெரிக்க நாடுகள் (மெக்சிகோ, நிகரகுவா, அர்ஜண்டினா), ஆப்பிரிக்க நாடுகள் (கென்யா, மடகாஸ்கர்), வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள், பாரம்பர்யமான சந்தைகளில் உள்ள அதே உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலைகளைவிட அதிகமாகத்தான் இருந்திருக்கின்றன.

அதேபோன்று சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் வேலைவாய்ப்புப் பெருகும் என்பதும் வியட்நாம் அனுபவத்திருந்து பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தெருவில் வியாபாரம் செய்பவர் 18 பேருக்கு வேலை அளிக்கிறார், பாரம்பர்ய சில்லரை வியாபாரி 10 பேருக்கு வேலை அளிக்கிறார், கடை வைத்திருப்பவர் 8 பேருக்கு வேலை அளிக்கிறார், ஆனால் சூப்பர் மார்கெட்டில் 4 நபர்களை வைத்துக்கொண்டு அந்த வேலையைச் செய்து முடித்து விடுகிறார்கள். இதுதான் உலகம் முழுதும் உள்ள அனுபவமாகும்.
அடுத்து, உற்பத்தியாளர் நல்ல விலையைப் பெறுவார் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் கதைதான். இது தொடர்பாக ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தரப்பட்ட குறிப்பில் ஓர் ஆய்வினைச் சுட்டிக் காட்டியிருந்தோம். கானா நாட்டைச் சேர்ந்த கோகா (cocoa) விவசாயி ஒரு தனித்துவமான மில்க் சாக்கலேட் தயாரிப்பதற்கு உற்பத்தி செய்த கோகோவை, சில்லரை வர்த்தக ஜாம்பவான்களுக்கு விற்றபோது, சாக்கலேட்டின் விலையில் 3.9 விழுக்காடு விவசாயிக்குக் கிடைத்த அதே சமயத்தில், சில்லரை வர்த்தகர் 34 விழுக்காடு லாபம் ஈட்டியிருக்கிறார். அதே போன்று வாழை உற்பத்தி செய்த விவசாயி, தான் விற்ற வாழைப்பழங்களுக்கு அவை விற்ற விலையில் 5 விழுக்காடு அளவிற்குத் தொகையைப் பெற்ற அதே சமயத்தில், வர்த்தகரோ 34 விழுக்காடு லாபம் ஈட்டியிருக்கிறார். இதேபோன்று ஜீன்ஸ் தயாரித்த தொழிலாளிக்கு 12 விழுக்காடு தொகை கிடைத்த அதே சமயத்தில் சில்லரை வர்த்தகர் அதில் 54 விழுக்காடு தொகையை அடைந்துள்ளார்.

இப்போது மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் ஒப்புக்கொண்டால்தான் தங்கள் முடிவு அமல்படுத்தப்படும் என்று இப்போது வாதிடுகிறது. மாநில அரசாங்கங்கள் இம்முடிவினை அமல்படுத்துவது தொடர்பாக தங்கள் விருப்பம்போல் நடந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் மாநிலங்கள் அல்லாது மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும் அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களில்தான் இவை நடைபெறும் என்று நாடு நம்பவேண்டும் என்று மன்மோகன் சிங் அரசாங்கம் விரும்புகிறதா என்று தெரியவில்லை.

இத்தகைய அம்சங்கள் அனைத்துமே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவைகளாகும். இதற்கு அரசாங்கம் இதன்மீதான தன் முடிவை ரத்து செய்துவிட்டு, ஒரு பொருள்பொதிந்த விவாதத்திற்கு அனுமதித்தால் மட்டுமே இது சாத்தியம். இதனைத் தொடர்ந்து அரசாங்கமானது அவையின் உணர்வை உயர்த்திப்பிடித்து அதன் அடிப்படையில் ஒரு முடிவினை மேற்கொண்டிட உறுதிபூண வேண்டும்.

இவ்வாறாக, இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடர் வீணாகாமல் காப்பாற்றப்படுமா, அல்லது, இதுபோன்றதொரு நியாயமான மற்றும் பொருத்தமான கோரிக்கைக்கு செவிமடுத்திட அரசாங்கம் தன் விருப்பத்தினைத் தெரிவிக்காது வீணடிக்கப்பட விருக்கிறதா என்பது அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தே இருக்கிறது. இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் சட்டமுன்வடிவு உட்பட மிக முக்கியமான பல சட்டமுன்வடிவுகள் தாக்கல் செய்யப்படும் என்று நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டிருந்தன. லோக்பால் வரைவு சட்டமுன்வடிவை ஆய்வு செய்து வந்த நாடாளுமன்ற நிலைக்குழு அதன் மீதான தன் ஆய்வுகளை முடித்து, தன் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி விட்டது என்று தெரியவருகிறது. இச்சட்டமுன்வடிவு, அரசாங்கம் உறுதி அளித்தபடியும், இரு அவைகளிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது போலவும், இக்குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுமா, இல்லையா என்பது சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை தன் முடிவைத் திரும்பப் பெறுவதைப் பொறுத்தே இருக்கிறது.

இவ்வாறு நடைபெறாவிட்டால், பின், அரசாங்கத்தின் உள்நோக்கங்கள் குறித்து மிகவும் ஆழமான முறையிலும் அதன் நேர்மையின் மீதும் ஐயங்கள் எழத் தொடங்கிவிடும. லோக்பால் சட்டமுன்வடிவில் சம்பந்தப்பட்டுள்ள சச்சரவுக்குரிய பல்வேறு பிரச்சனைகள் உட்பட விண்ணையெட்டியுள்ள விலைவாசி உயர்வு, வெளிச்சத்திற்கு வந்துள்ள உயர்மட்ட அளவிலான லஞ்ச ஊழல்கள், கறுப்புப் பணம் முதலானவை குறித்தும் மக்களுக்குப் பதில் எதுவும் அளிக்காது அரசாங்கம் சவுகரியமாகத் தப்பித்துக் கொள்ள இவ்வாறு குளிர்காலக் கூட்டத் தொடரின் சீர்குலைவு அனுமதித்துவிடும். கடந்த இருபதாண்டுகளில் லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்திற்கு முன் கொண்டுவரப்படும்போதெல்லாம் இதன் வரையறைக்குள் பிரதமரைக் கொண்டுவருவதா, வேண்டாமா என்பதில் ஒத்த கருத்து ஏற்படாததால், இச்சட்டமுன்வடிவே நாடாளுமன்றத்தினை எட்டிப்பார்க்காது கிடப்பில் போடப்பட்டிருப்பதை நினைவுகூர்க. இப்போது நாடாளுமன்றம் சீர்குலைக்கப்படுவதற்கும் அரசாங்கமே முழுப்பொறுப்பாகும்.
பந்து, இவ்வாறு, இப்போது அரசின் பக்கம் இருக்கிறது. சாமானிய மக்களின் நலன் மீது அரசாங்கத்திற்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இம்முட்டுக்கட்டையைப் போக்கிட அரசாங்கம்தான் நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதற்கு அது சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான தன் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்திட வேண்டும். அதன்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளுக்கிணங்க முடிவினை எடுத்திட வேண்டும்.

இப்பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும் அதே சமயத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தத்தை அளித்திட வேண்டும். டிசம்பர் 1 அன்று வர்த்தகர் சங்கங்கள் அறைகூவலுக்கிணங்க நடந்த கடையடைப்புப் போராட்டம் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

(நவம்பர் 30, 2011)

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, May 22, 2011

மேற்குவங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை: மார்க்சிஸ்ட்டுகள் மீது தொடுக்கப்பட்டுள்ள வர்க்கத் தாக்குதல் முறியடிக்கப்படும்

நாம் எதிர்பார்த்ததைப் போலவே, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடனேயே, திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கும்பலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி யின் தொழிலாளர்களுக்கு எதிராக கொலை வெறித் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் மே 13 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகையி லேயே தொடங்கிவிட்டன. மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில், அதிலும் குறிப்பாக இடது முன்னணி வென்ற பகுதிகளைக் குறி வைத்து, கட்சி அலுவலகங்கள் மற்றும் தொழிற்சங்க அலுவலகங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டிருக்கின்றன. செங்கொடிகள் கிழித்து எறியப்பட்டிருக்கின்றன. அந்த இடங் களில் திரிணாமுல் காங்கிரசின் கொடிகள் வலுக்கட்டாயமாக ஏற்றப் பட்டிருக்கின்றன. இடது முன்னணியின் உள்ளூர்த் தலைவர் களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக் கின்றன மற்றும் சூறையாடப்பட்டிருக்கின் றன. இவற்றை எதிர்க்கும் இடது முன்னணித் தோழர்கள் கொலைவெறியுடன் தாக்கப்பட்டி ருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட, முதல் 48 மணி நேரத்திலேயே, பர்து வான், மேற்கு மிட்னாபூர் மற்றும் பங்குரா மாவட்டங்களைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூன்று முக்கிய முன்ன ணித் தோழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், தேர்தல் என்பவை ஒருதரப்பினரை வெற்றி பெறச் செய்திடும், மற்றொரு தரப்பினரைத் தோல்வியுறச் செய்திடும். பொதுவாக இது வழக்கம்தான். ஆயினும் வங்கத்தில் இடது முன்னணியின் தேர்தல் தோல்வி என்பது ஆளும் வர்க்கங்களின் பிற்போக்கு சக்திக ளுக்கு இடது முன்னணி மீது வன்முறையை ஏவுவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத் தப்படுகிறது. இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் மக்களுக்குக் கிடைத்த ஆதாயங் களை அபகரித்திடக் கூடிய வகையில் அவர் கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். இதனை இத்தாக்குதல்களில் நன்கு பார்க்க முடிகிறது.

நிலப்பிரபுக்கள் தலையெடுப்பு

உதாரணமாக, ஜங்கல் மஹால் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் உதவியுடன் திரிணா முல் காங்கிரஸ், இடது முன்னணியின் நிலச் சீர்திருத்தத் திட்டங்களின் விளைவாக நிலங்களைப் பெற்றவர்கள் மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இதுநாள்வரை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாகவும், ஏழை விவசாயிகளாகவும் இருந்தவர்கள், நீதிமன் றங்களில் நடைபெற்ற பல்வேறு நீண்ட நெடிய வழக்குகளுக்குப்பின் இப்போது சட் டப்பூர்வமாக நிலத்தின் சொந்தக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். இப்போது முந்தைய நிலப்பிரபுக்கள் தங்கள் கையைவிட்டுப் போன நிலங்களை மீண்டும் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், வங்கத்தில் நிலச் சீர் திருத்தங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற ஆதா யங்களை அவர்களிடமிருந்து மீண்டும் பறித் திட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக் கிறார்கள். ஒரு சில இடங்களில், விவசாயத் தொழிலாளர்களின் வேலை நேரங்கள் வலுக் கட்டாயமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன, அவர்களின் நாட்கூலிகள் குறைக்கப் பட் டிருக்கின்றன. கடந்த முப்பதாண்டு கால மாக, வேலை நேரத்தின் போது, விவசாயத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அரிசி மற்றும் உணவுகள் நிறுத்தப்படுகின் றன. சில இடங்களில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டவைகளை அறுவடை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பதிலாக, அவை சட்டவிரோதமாக அறுவடை செய்யப் படுகின்றன.

ஹிட்லர் பாணியில்....
மேற்கு வங்கத்தில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் முக்கியமான தெரு முனைகளி லும், முச்சந்திகளிலும் பலகைகளில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கணசக்தி’ நாளிதழின் அனைத்துப் பக்கங்களையும் ஒட்டி வைப்பதென்பது வழக்கமான நடை முறையாக இருந்து வருகிறது. காசு கொடுத்து பத்திரிகையை வாங்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் படித்துவிட்டுச் செல்வதற் காக இவ்வாறு அங்கே செய்யப்பட்டிருக் கிறது. மாநிலம் முழுவதும் இவ்வாறிருந்த பல கைகளை அடித்து நொறுக்கி இருக்கின்றனர், தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர்.

இவர்கள் பயன்படுத்தும் பாசிஸ்ட் தொழில்நுட்பங்கள், அந்தக் காலத்தில் ஹிட்லர், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகத் தொடுத்த தாக்குதல்களை நினைவுபடுத்து கின்றன. பாசிஸ்ட்டுகள் தங்களுடைய ரெய்ச் ஸ்டாக் மாளிகைக்குத் தாங்களே நெருப்பு வைத்துவிட்டு, பழியை கம்யூனிஸ்ட்டுகள் மீது போட்டு, அவர்களைத் தாக்கியதைப் போல இவர்களும் செய்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களிலும், கட்சித் தலைவர்களின் இல்லங்களிலும் ஆயுதங்களை வைத்துவிட்டு, காவல்துறை யினரை அழைத்து, ‘‘இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்கள் இவர்கள் வைத்திருப்பதற்காக இவர்களைக் கைது செய்யுங்கள்’’ என்று கூறிக் கொண்டிருக் கிறார்கள். இத்தகைய படுகேவலமான அளவிற்கு இன்றைய வர்க்கப் போர் சென்றிருக்கிறது.

வெளிப்பகட்டிற்கு, திரிணாமுல் காங்கி ரசும் அதன் தலைவியும் பொதுக்கூட்டங் களில், இத் தேர்தல்களில் “நாங்கள் மாற்றம் தான் கோருகிறோமே யொழிய, நாங்கள் பழிக் குப் பழி கோரவில்லை” என்றார்கள். அவ்வாறு சொல்லுகிற அந்தத் தருணத்திலேயே, திரிணாமுல் காங்கிரசின் தலைவி, இடது முன்னணி ஆதரவாளர்களுக்கு எதிராக வன் முறை நடப்பின், அது அவர்களுக்குள் நடை பெறும் உள்கட்சி சண்டை என்றார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் “திரிணாமுல் காங்கிரஸ் ஊழியர்கள், இடதுசாரிகளுக்கு எதிராகச் சரியாகப் பாடம் கற்பிப்பார்கள்” என்று தன்னுடைய நெருப்பைக் கக்கும் பேச்சுக்கள் மூலம் தங்கள் ஊழியர்கள் மத்தி யில் உணர்ச்சித் தீயைத் தூண்டி வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் மிகவும் பண்புடனும் அடக்கத் துடனும், தங்கள் உறுப்பினர்கள் ஓர் ஆக்கபூர் வமான எதிர்க்கட்சி உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் என்று கூறிய அதே சமயத் தில், திரிணாமுல் காங்கிரஸ் கும்பல் வங்கத் தில் வர்க்கப் போரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இது முதல்முறையல்ல
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடது முன்னணியையும் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு வர்க்கப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. இதன் மூலம் நம்முடைய சமூகத்தில் சுரண்டப்பட்ட வர்க்கங்களாக இருந்தவர்கள், நிலச் சீர்திருத்தங்கள் மூல மாகவும் பஞ்சாயத்து ராஜ் மூலமாகவும் வங்கத் தில் கடந்த முப்பதாண்டுகளில் பெற்ற அபரி மிதமான ஆதாயங்கள் அனைத்தையும் அப கரித்து, அவர்களைப் பலவீனப்படுத்திட இவ் வர்க்கப் போரைத் தொடுத்திருக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக இத்தகைய வர்க் கத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பது இது முதல்முறையல்ல. 1972இல் பெரிய அள வில் மோசடியாக சட்டப்பேரவைத் தேர் தலை நடத்தி, ஆட்சிக்கு வந்தபின் கட்சிக்கு எதிராக அரைப் பாசிச அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் மேற்கொண்ட அடக்குமுறைகள் 1977இல் அவசரநிலை தோல்வியடையும் வரை நீடித் தது. இவ்வாறு கட்சியின் மீது இவர்கள் அடக் குமுறையை ஏவியதன் நோக்கம் கம்யூ னிஸ்ட்டுகளின் தலைமையிலான வெகுஜன இயக்கங்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும். அப்போது 1400 தோழர்கள் கொல்லப்பட்டார்கள். 22 ஆயிரத் திற்கும் மேற்பட்ட கட்சிக் குடும்பங்கள் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்று, இவர் களின் அரைப் பாசிச அடக்குமுறை நடவடிக் கைகளை வெற்றிகரமாகத் தடுத்து முறியடித் தன. ஆளும் வர்க்கங்களின் நம்பிக்கைகள் தவிடுபொடியாகக்கூடிய விதத்தில் மேற்கு வங்க மக்கள் 1977 தேர்தல்களின்போது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணிக்கு ஆதரவு அளித்தது மட்டுமல்ல, நாட்டில் வேறெங்கும் பார்க்க முடி யாத அளவிற்கு அதற்கு அளித்து வந்த ஆதர வைத் தொடர்ந்தனர். அவ்வாறு மக்கள் வைத் திருந்த நம்பிக்கை ஏழு தேர்தல்கள் வரை தொடர்ந்தது.

அதேபோன்று இப்போதும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள வர்க் கத் தாக்குதல் எதிர்கொள்ளப்பட்டு முறியடிக் கப்படும். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து இதுநாள்வரையில் சுமார் 400க்கும் மேற்பட்ட இடது முன்னணி ஊழியர்கள் தியாகிகளாகி இருக்கிறார்கள். இவர்களின் தியாகம் வீண்போக அனுமதியோம். வங்கத் தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நம் சகோதர வர்க்கத்தினருக்கு நாம் நம் ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்வோம். இடது முன்னணியின் ஆட்சிக்காலத்தில் வங்க மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்பட ஒருபோதும் அனுமதியோம்.

தமிழில்: ச.வீரமணி

Saturday, May 14, 2011

நில வளத்தைச் சூறையாடுவதை நிறுத்துக



உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சால் கிரா மத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதைக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு மிகவும் அநீதியான முறையில் நிலம் கையகப் படுத்தியதை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காவல் துறையினருக்கும் விவசாயிகளுக் கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு காவல்துறையினர் உட்பட நால்வர் இறந்திருக்கிறார்கள்.

மாயாவதி அரசாங்கமானது, கிரேட்டர் நொய்டாவிலிருந்து ஆக்ரா வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, ஜே.பி.அசோசியேட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக கவுதம் புத் நகரிலிருந்து ஆக்ரா வரை 2 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலங்கள் விவசாயி களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டிருக் கின்றன. ஆனால், கையகப்படுத்துதல் என்பது இத்துடன் முடிந்துவிடவில்லை. யமுனா எக்ஸ்பிரஸ்பாதை தொழில் வளர்ச்சிக் குழுமம் (கூாந லுயஅரயே நுஒயீசநளளறயல ஐனேரளவசயைட னுநஎநடடியீஅநவே ஹரவாடிசவைல), எக்ஸ்பிரஸ் பாதையைச் சுற்றிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களையும் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தி, அதன் பின்னர் அவற்றை பத்திலிருந்து இருபது மடங்கு விலை வைத்து ரியல் எஸ்டேட் கம் பெனிகளுக்கு விற்றுக்கொண்டிருக்கிறது. வீடுகள் கட்டும் கட்டிடக்காரர்களும் (ரெடைனநசள), ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் அவ்வாறு பெற்ற நிலங்களை ஐம்பதி லிருந்து நூறு மடங்கு விலை வைத்து விற்றுக்கொண்டிருக்கின்றன. 2010 டிசம்பரில் உத்தரப்பிரதேச மாநில அர சாங்கமானது ஓர் அறிவிக்கை வெளி யிட்டது. அதன்படி யமுனா எக்ஸ்பிரஸ் பாதை செல்லும் ஆறு மாவட்டங்களில் உள்ள 1187 கிராமங்களை, யமுனா எக்ஸ்பிரஸ்பாதை தொழில் வளர்ச்சி அதிகாரக் குழுமத்தின்கீழ் கொண்டு வந்தது. இப்பகுதியில் நகர்ப்புற மையங் களும் (ரசயெn உநவேசநள) தொழிற்பேட்டை களும் (iனேரளவசயைட யசநயள) கட்ட வேண்டும் என்பதே இக்குழுமத்திற்குக் கொடுக்கப் பட்டுள்ள பணியாகும்.

நொய்டாவிற்கும் கிரேட்டர் நொய்டா விற்கும் இடையில் உள்ள நிலங்கள் கையகப்படுத்துதலில் என்ன நடைபெற் றது என்பதை விளக்கினால் வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இப்பகுதியில் நிலத்தைக் கையகப் படுத்தும்போது, ஒவ்வொரு 300 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலத்திற்கும் விவ சாயிகளுக்குத் தலா 50 ரூபாய் என்கிற முறையில் தரப்பட்டது. ஆனால் இன்று, அதே இடத்தில் ஜே.பி.கம்பெனி 2500 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கிறது. இக் கம்பெனி இங்கே மனைகளை ஒரு சதுர மீட்டர் 15 ஆயிரம் ரூபாய் என்ற விதத்தில் விற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு 50 ரூபாய்க்கு விவசாயிகளிட மிருந்து வாங்கி, அதே நிலத்தை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறது.

இதுதான் விவசாயிகளைக் கோப மடைய வைத்திருக்கிறது. யமுனா எக்ஸ் பிரஸ் பாதை நெடுக, இவ்வாறு கடந்த ஓராண்டு காலமாக நிலங்களை விற்ற விவசாயிகள் தற்போது கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அலிகார் மாவட்டத்தில் தப்பால் என்னுமிடத்தில் 2010 ஆகஸ்டில் விவசாயிகள் கிளர்ச்சிப் போராட்டம் நடத்திய சமயத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு மூவர் பலியாகினர். மதுரா, ஆக்ரா மற்றும் கவுதம் புத் நகர் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டங் கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேச மாநில அரசாங்க மானது விவசாயிகளிடமிருந்து மிகப் பெரிய அளவில் நிலங்களை கையகப் படுத்தி, அவற்றை ஜே.பி.அசோசியேட்ஸ் போன்று தங்களுக்கு வேண்டிய கம்பெனி களிடம் எக்ஸ்பிரஸ்பாதை அமைப்பதற் காக மட்டுமல்ல, நகரக் குடியிருப்புகள் (வடிறளோiயீள) மற்றும் பெரும் வணிக வளா கங்கள் (அயடடள) கட்டுவதற்கும் ஒப் படைத்துக் கொண்டிருக்கின்றது. தப்பால் கிளர்ச்சிகள் இவ்வாறு கையகப்படுத்தப் பட்ட நிலங்களை நகரக் குடியிருப்புகள் கட்டுவதற்காக, கம்பெனி ஒன்று பயன் படுத்த முன்வந்ததை அடுத்தே நடை பெற்றுள்ளன. கிரேட்டர் நொய்டாவுக்கும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பால்லி யாவுக்கும் இடையேயான 1,047 கிலோ மீட்டர் தூரத்தில் அமையவுள்ள கங்கா எக்ஸ்பிரஸ் பாதை மற்றொரு மாபெரும் திட்டமாகும். இப்பாதையின் இரு மருங் கிலும் நகரக் குடியிருப்புகளும், தொழிற் பேட்டைகளும் கட்டப்படவிருக்கின்றன. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு, ஜே.பி. அசோசியேட்சுக்கும் மற்றும் பல தனியார் கம்பெனிகளுக்கும் ஒப் படைக்கப்படவிருந்தன. சுமார் 70 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை இதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்த இருந்தனர். இதில் மொத்தம் 1250 கிரா மங்கள் பாதிக்கப்படவும் அக்கிராமங்களி லிருந்த மக்கள் காலி செய்யப்பட்டு விரட்டியடிக்கப்படவும் இருந்தார்கள். இத்திட்டம் தொடர்பாக மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் ஆட்சேபணைகள் தாக் கல் செய்திருப்பதால் இத்திட்டம் இன் னமும் தொடங்கப் படவில்லை.

இவ்விரு திட்டங்களிலுமே, சட்ட விரோத மூலதனம் (உசடிலே உயயீவையடளைஅ) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ் விரு திட்டங்களையுமே மாயாவதி அர சாங்கம் ஒரேயொரு கம்பெனியிடம்தான் ஒப்படைத்திருக்கிறது. யமுனா எக்ஸ் பிரஸ் பாதையைப் பொறுத்தவரை, இந்தக் கம்பெனியானது அடுத்த 35 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பாதையின் இரு மருங்கிலும் மிகப்பெரிய அளவில் நகரக் குடியிருப்புகள் கட்டுவதற்கும், விளை யாட்டு நகரம் அமைப்பதற்கும் நிலங்கள் இக்கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட் டிருக்கின்றன.

விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரித்து, பெரும் வர்த்தகச் சூதாடிக ளிடமும், ரியல் எஸ்டேட் முதலை களிடமும் ஒப்படைத்திடும் இந்தச் செயல் பட்டவர்த்தனமான பகற்கொள் ளையாகும். இவ்வாறு கையகப்படுத் தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்குக் கிடைப்பதும், அவர்கள் உரிய முறையில் மீளக் குடிய மர்த்தப்படுவதும், அவர்களின் மறுவாழ் வுக்கு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வதும் மட்டுமல்ல, அவர்களின் நிலங்கள் கடைசியாக விற்கப்படுவதன் மூலம் கிடைத்திடும் லாபத்திலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டியதும் அவ சியமாகும்.

ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது இதுநாள்வரை நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கான திருத்தச் சட்டமுன் வடிவையும்,மறுவாழ்வு மற்றும் மீளக்குடியமர்வுச் சட்டமுன்வடிவையும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தவறிவிட்டது. இது உடனடியாக செய்யப்பட வேண்டும். ஆனால் அதுமட்டும் கார்ப்பரேட் நிறு வனங்கள் அடித்திடும் நிலப்பறிக் கொள் ளையால் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்த்துவிடாது. மாயாவதி அரசாங்கம் பின்பற்றும் இதே கொள்கையைத்தான் இடதுசாரி அல்லாத வேறு பல மாநில அரசாங்கங்களும் பல்வேறு படிநிலை களில் செயல்படுத்திக் கொண்டிருக்கின் றன. விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி, மாநில அரசாங்கங்கள் அவற்றை ரியல் எஸ் டேட் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒப்படைக்கும் நடைமுறைக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

Sunday, May 8, 2011

புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட்ட வழக்கு நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடுக!

மத்திய உள்துறை அமைச்சர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச் சாரத்தின்போது, ‘‘நாட்டிலேயே மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம்’’ என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்மாநிலத்தை ‘‘கொலை நிலம்’’ (‘killing fields’)ஆக மாற்றிவிட்டது என்றும் கூறியவை ஆடி அடங்குவதற்கு முன்ன மேயே, 1995 டிசம்பரில் புருலியாவில் விமானம் மூலம் ஆயுதங்கள் வீசிய சம்பவத்தில் மூளையாக இருந்து செயல் பட்ட கிம் டேவி அது தொடர்பாக அளித் துள்ள விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

1995ஆம் ஆண்டு டிசம்பர் 17 - 18 தேதிகளின் இரவில் ஒரு விமானம் முழு மையாக அபாயகரமான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆகாயவழியே பறந்து வந்து மேற்கு வங்கம், புருலியா மாவட்டத் தில் ஆனந்த மார்க்கம் தலைமையகம் இருக்குமிடம் அருகே, ஆயுதங்களை வீசியது. இது தொடர்பாக கொல்கத்தா வில் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தின் முன், 2000 பிப்ரவரியில் மத்தியக் குற்றப் புல னாய்வுக் கழகம் (சிபிஐ) சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அவ்வாறு வீசப்பட்ட ஆயுதங்களில் ஏகே-47 துப்பாக்கிகள் 500 வீசப்பட்டதென்றும், அவற்றில் 87 மட்டுமே கைப்பற்றப்பட்டன என்றும், அதேபோன்று மொத்தம் 15 லட்சம் சுற்றுக்கள் வெடிமருந்து மற்றும் பல் வேறு அபாயகரமான ஆயுதங்கள் வீசப் பட்டதில் மிகச்சிறிய அளவிற்கே கைப் பற்றப்பட்டன என்றும் கூறியிருக்கிறது. இந்த ஆயுதங்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றன என்றும், இவ்வாறு மாநிலத்தைக் ‘‘கொலை நிலமாக’’ மாற் றியது யார் என்றும் உள்துறை அமைச்சர் கூறுவாரா?

அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் கம்யூனிச எதிர்ப்பு வன்முறை நடவடிக் கைகளில் ஈடுபட்டு வந்த ஆனந்த மார்க் கம் என்ற அமைப்புக்காகத்தான் இந்த ஆயுதங்கள் வீசப்பட்டன என்பது விரி வான அளவில் நம்பப்பட்டது. அதுமட்டு மல்ல, மேற்படி ஆனந்த மார்க்கம் சார்பில் அச்சம்பவத்திற்கு முன்பு தோழர் ஜோதி பாசு அவர்களைக் கொலை செய்வதற்கு ஆனந்தமார்க்கிகள் முயற்சிகள் மேற் கொண்டு அது தோல்வியுற்றதையும் அறிவோம். சிபிஐ சமர்ப்பித்த அறிக்கை யில் மேலும், 1995 ஆகஸ்ட் 18 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேக னில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்தான் என்னென்ன ஆயுதங்கள் வாங்க வேண் டும் என்று இறுதிப்படுத்தப்பட்டது என் றும், இக்கூட்டத்தில் கிம் டேவியும்,பீட்டர் பிளீச் என்பவனும் கலந்து கொண்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சதிச் செயலில் ஆறு நாடுகளைச் சேர்ந் தவர்கள் கலந்து கொண்டிருப்பதன் மூலம் இது ஒரு சர்வதேச சதிச் செயல் என்ற உண்மையும் புலனாகியிருக்கிறது.

ஆனந்தமார்க்க அமைப்பின் வெறித் தனமான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத் திற்கு தீனி போடுவதற்காகத்தான் இவ் வாறு ஆயுதங்கள் வீசப்பட்டன என்று கூறும் அதே சமயத்தில், தற்போது கிம் டேவியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விஷயங்கள், உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவ்வாறு அபாயகரமான ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவத்தில் மத் திய அரசும் உடந்தையாக இருந்திருக் கிறது என்று தெரிய வருகிறது. மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைப் பலவீனப்படுத்த வேண் டும் என்பதற்காக, வங்கத்தில் இவ்வாறு வன்முறை மற்றும் அராஜக நடவடிக்கை களை மேற்கொள்ள அன்றைய பி.வி.நர சிம்மராவ் தலைமையிலான மத்திய காங் கிரஸ் அரசாங்கம் தங்களை அனுமதித் தது என்று கிம் டேவி குற்றம் சாட்டியிருக் கி றான். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன் றத்திற்கும் 1996இல் தேர்தல்கள் நடக்க வேண்டியிருந்தது. டேவி மேலும் ஒருபடி சென்று, எப்படித் திரிபுரா மாநிலத்தில் பல்வேறு பிரிவினைவாதக் குழுக்க ளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, அங்கே ஆட்சியிலிருந்த இடது முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முன்பு முயற்சி நடந்ததோ, அதேபோன்று வங்கத்திலும் ஒரு நிலைமையை உருவாக் கக் கோரப்பட்டது என்றும் கூறியிருக் கிறான்.

அப்போது ஏற்பட்ட மர்மமான சம் பவங்களின் அடிப்படையில் இவனது கூற்றுக்களை ஆய்வு செய்தோமானால் இன்றைய தினம் வரைக்கும் பல விஷ யங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் எம்ஐ5 (ஆஐ 5) போன்ற சர்வ தேச புலனாய்வு அமைப்புகளிடமிருந்து இது தொடர்பாக வந்த தகவலை இந்திய அரசு அக்கறையுடன் எடுத்துக் கொள்ளா மல் தற்செயலாக எடுத்துக் கொண்டது. இவ்வாறு சர்வதேச ஸ்தாபனம் ஒன்று உஷாராக இருக்குமாறு அனுப்பிய தக வலை இந்திய அரசோ மேற்குவங்க மாநில அரசுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்தது. அந்தத் தபால் ஆயு தங்கள் வீசப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு தான் மாநில அரசாங்கத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பாகிஸ்தான் எல்லைப் பகுதி யிலிருந்து ஒரு அயல்நாட்டு விமானம் நம் நாட்டின் வான்பாதைக்குள் நுழைய எப்படி அனுமதிக்கப்பட்டது? இவ்வாறு நுழைந்தது கவனிக்கப்படாமல் விடு பட்டுவிட்டது என்று கூறப்படுமானால், பின் அது நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக விளங்கக்கூடிய ஒரு ஆழ மான கவனக்குறைவாகும். ஆனால், அவ்வாறில்லாமல், அவ்விமானம் மத்திய அரசின் உடந்தையுடன்தான் நம் வான் பகுதிக்குள் வந்தது என்றால், அது அதை விட மிகவும் மோசமான விஷயமாகும். அது உண்மையாக இருக்குமானால், மத்திய அரசு மீது, மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்ப டுத்திட வேண்டும் என்கிற அவா தொடர் பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட் டுக்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின் றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை யாக இருக்கும் பட்சத்தில், மத்திய அர சாங்கமே நாட்டின் பாதுகாப்புக்குக் குந் தகம் விளைவிக்கும் விதத்தில், வெளி நாட்டு விமானத்திலிருந்து ஆயுதங் களைப் போட வைத்ததன் மூலம் மிகப் பெரிய மோசடியை அனுமதித்திருக்கிறது. இரண்டாவதாக, மத்திய அரசானது இத் தகைய முயற்சிகள் மூலமாக, நம் அர சியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங் களில் ஒன்றாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்தையே அழித்திடக் கூடிய வகையில் செயல்பட்டிருக்கிறது என் றாகிறது. தன் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை அடைந்திட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்டு வந்த மத்திய அரசாங்கமே தான், எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டதோ, அதே அரசியலமைப்புச் சட்டத்தினை அழித்திடத் தயாராகிவிட்டது என்றா கிறது. உண்மையில் இது ஒரு மிகப்பெரிய விஷயமாகும். கொடிதிலும் கொடிய விஷயம் என்னவெனில், மேற்படி விமா னம் ஆயுதங்களை வீசியபின் இடை மறிக்கப்பட்டு மும்பை விமானத் தளத் தில் கீழிறக்கப்பட்டபோது, கிம் டேவி மிக வும் சுதந்திரமாக நடந்து செல்ல அனு மதிக்கப்பட்டிருக்கிறான். அவனுடன் வந்த கூட்டுக் களவாணியான பீட்டர் பிளீச் என்பவனும், அவனுக்கு உதவியாக வந்த மேலும் ஆறு பேரும் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார்கள்.

(இந்த ஆறு பேரும் லாட்வியர்கள். பின் னர் ரஷ்ய நாட்டுப் பிரஜா உரிமையைப் பெற்றனர்.) இந்த ஆறு பேரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். பீட்டர் பிளீச் விசாரணை செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றான். ஆயினும் மிகவும் விசித்திரமான முறையிலும், விளக்கமுடி யாத வகையிலும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது பீட்டர் பிளீச்சை குடியரசுத் தலைவரின் மன்னிப்பைப் பெற்று விடுதலை செய்திடத் தீர்மானித் தது. அவ்வாறு முடிவு எடுக்கும் சமயத் தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் திரிணாமுல் காங்கி ரஸ் தலைவியும் ஓர் உறுப்பினராக இருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிளீச் தனக்கு மன்னிப்பு அளித்திட வேண்டும் என்று கோரிய மனுவை ஏற்றுக் கொள் வதற்கான பிரச்சனையே எழவில்லை என்று திரும்பத் திரும்ப அரசாங்கத்தால் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடப் பட்டு வந்த பின்னணியில்தான் இவ் வாறு அரசாங்கம் முடிவெடுத்தது. பிளீச் தனக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரிய வேட்பு மனுவை, குடி யரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நிராகரித்து விட்டார் என்று அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி, தில்லி உயர்நீதி மன்றத்தில் 2003 ஜூலை 3 அன்று தெரிவித்தார். ஆயினும், 2004 ஜனவரி 30 அன்று குடியரசுத் தலைவர் பீட்டர் பிளீச்சின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அரசியலமைப்புச் சட்டம் 72(1)(பி) பிரிவின் கீழ் மீதமிருந்த தண்டனைக் காலத்தை கழித்தும், அவனை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும் ஆணை பிறப்பித்து, ஆணை யின் நகலை மேற்கு வங்க உள்துறை செய லாளருக்கு அனுப்பி இருக்கிறார். இவ் வாறு பீட்டர் பிளீச், கொல்கத்தாவில் இந் திய சிறைகளில் எட்டு ஆண்டுகள் 30 நாட்களைக் கழித்த பின், அப்போது மத் திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியின் கீழான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட்டி ருக்கிறார். இக்குற்றத்துடன் சம்பந்தப் பட்ட கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவர இந்திய அரசு முயற்சிகள் மேற்கொள் ளாமல் காலம் தாழ்த்தி வரக்கூடிய சூழ லில்தான், கைது செய்யப்பட்டு நீதிமன் றத்தால் தண்டிக்கப்பட்ட நபரை சுதந்தி ரமாக விடுவித்திடக்கூடிய நடவடிக்கை யும் எடுக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறாக, காங்கிரஸ் கட்சியும் பாஜக-வினால் தலைமை தாங்கப்பட்ட தேசிய ஜன நாயகக் கூட்டணியும்தான் இன்னமும் வெளியுலகத்திற்கு விளக்க முடியாத வகையில் விசித்திரமாகச் செயல்பட் டிருக்கின்றன. இன்றைய தினம் கிம் டேவி இவர்கள் குறித்துக் கூறியுள்ள குற்றச் சாட்டுக்களுக்கு இவர்களின் நடவடிக் கைகள் சான்றுகளாக அமையக்கூடிய விதத்தில் இருந்திருக்கின்றன.

இவ்வாறு வெளிநாட்டு விமானம் ஒன்று ஆயுதங்கள் வீசியதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்கியிருந்த போதி லும், அப்போதைய காங்கிரஸ் அரசாங் கம் இது தொடர்பாக பல்வேறு தில்லு முல்லுகளைச் செய்துவிட்டு, இப்போது மேற்குவங்க தேர்தலில் திரிணா முல் காங்கிரசுடனான கூட்டணிக்கு இருக்கும் வாய்ப்பை சிதைப்பதற்காக இந்தத் தருணத்தில் இதனை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி கூச்சல் எழுப்புகிறது. டேவி யின் குற்றச்சாட்டுக்களை வெளிக் கொண்டு வந்த தொலைக்காட்சி அலை வரிசையின் கூற்றின்படி, இந்திய அர சாங்கம் தன்னை மீண்டும் இந்தியா விற்குக் கொண்டுவருவதற்காக நடவடிக் கைகளை நெருக்கியதை அடுத்தே, டேவி இவ்வாறு குற்றச்சாட்டுக்களைக் கூறி யுள்ளான் என்று தெரிவித்திருக்கிறது. 2010 ஏப்ரல் 27 அன்று ஊடகங்களில் வெளி யான செய்திகளின்படி, சர்வதேச அமைப்பான இண்டர்போல், டென்மார்க் அதிகாரிகள் புருலியா ஆயுதங்கள் வீசிய வழக்கின் மூளையாகச் செயல்பட்ட கிம் டேவியை இந்தியாவிற்கு அனுப்பி வைத் திடத் தீர்மானித்திருப்பதாக, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்குத் (சிபிஐக்கு) தெரிவித்திருந்தது. கிம் டேவி, இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டு, இந்திய நீதிமன்றங்களின் முன் நிறுத்தப் பட்டு, உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டியது, இந்தியப் பாதுகாப்பின் நலன்களுக்கு அத்தியாவசியமானதாகும். அதே போன்று இது தொடர்பாக நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து தில்லு முல்லுகள் குறித்தும், அன்றைய மத்திய அரசாங்கம் அவற்றிற்கு உடந்தையாக இருந்ததா என்பது குறித்தும் புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதே போன்று, இந்திய ஜனநாயகத்தின் நலன் கள் கருதி, பீட்டர் பிளீச்சுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கக் காலத்தில், குடி யரசுத் தலைவரின் மன்னிப்புக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் குறித்தும் ஐயந் திரிபற பதிலளிக்கப்பட வேண்டும். இவ் வாறு அனைத்து சூழ்நிலைகள் குறித்தும் ஆய்வு செய்திட உடனடியாக ஒரு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்ட நடைமுறையை அழித்திடக்கூடிய வகையில் எவ்வித முயற்சி மேற்கொள்ளப்படுவதையும் அனுமதிக்கக்கூடாது.

தமிழில்: ச.வீரமணி

Sunday, April 17, 2011

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைக் கேலி செய்வதை அனுமதிக்க முடியாது



அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் மற்றும் லோக்பால் சட்ட முன்வடிவு ஆகியவை தொடர்பாக ஐமுகூ-2 அரசாங்கத்திற்கு இருந்து வந்த முட்டுக்கட்டை கடைசியாக நீங்கி விட்டதுபோல் ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. லோக்பால் வரைவுச் சட்ட முன்வடிவை ஏற்படுத்துவதற்காக, கூட்டுக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எது எப்படி இருந்தபோதிலும், சமீப காலங்களில் மாபெரும் மெகா ஊழல்கள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஊழலுக்கு எதிராக ஒரு வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இவை ஏற்படுத்தியுள்ளன.

லோக்பால் சட்டத்திற்கான கருத்தாக்கம் 1969இல் மறைந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் குழுவால் பரிந்துரைக்கப் பட்டது. மாநிலங்கள் அளவில் லோகாயுக்தா நிறுவனங்களுடன் இது இணைக்கப்படுவதாக இருந்தது. ஆயினும், பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புகள் வந்த நிலையில் இச்சட்டமுன்வடிவானது மிக நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

1996இல் தேவகவுடா தலைமையில் மத்தியில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைந்த சமயத்தில் இடதுசாரிக் கட்சிகள் அதனை ஆதரிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை முன்வைத்தன. இதற்கான ஒரு சட்டமுன்வடிவும் உருவாக்கப்பட்டது. ஆனால் அது பல அம்சங்களில் முழுமையாக அமையாமல் இருந்தது. மிகவும் ஆட்சேபத்திற்குரிய அம்சம், இதன் அதிகார வரம்பெல்லைக்குள் பிரதமரின் அலுவலகத் தையும் சேர்க்காமல் இருந்ததாகும். பிரதமரின் அலுவலகத்தையும் சேர்த்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆயினும், அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கங்களின் ஸ்திரமற்ற தன்மைகளின் காரணமாக, இந்தச் சட்டமுன்வடிவானது வெளிச்சத்திற்கு வரவேயில்லை. பின்னால் ஆறாண்டு காலம் ஆட்சியில் அமர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும் இதன்மீது நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, லஞ்ச ஊழலுக்கு எதிரான சட்டமுன்வடிவைக் கொண்டு வராமல் நாட்டு மக்களுக்குத் துரோகம் இழைத்தது.
மீண்டும் ஒருமுறை இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, ‘‘லோக்பால் சட்டமுன்வடிவு சட்டமாக நிறைவேற்றப்படும்’’ என்ற உறுதிமொழி, 2004இல் ஐமுகூ-1 அரசாங்கத்திற்கான குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர், ஒரு சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு, நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, அதன் பரிந்துரைகளுடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு முன் வைக்கப்பட்டது. ஆயினும் இதுவும் கூட திருப்திகரமாக அமைந்திடவில்லை. ஒரு பொருள்பொதிந்த சட்டமாக இதனை மாற்றக்கூடிய விதத்தில் பல முக்கியமான ஷரத்துக்களைச் சேர்க்க வேண்டிய தேவை இருந்தது. அதே சமயத்தில், பல சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு ஜன் லோக்பால் சட்டமுன்வடிவு என்கிற ஒரு வரைவினை உருவாக்கினார்கள். அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு இவ்வரைவுதான் அடிப்படையாக அமைந்திருந்தது. இப்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் வரைவுக் குழுவானது இவ்விரு சட்டமுன்வடிவுகளின் வரைவுகளையும் நிச்சயமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில், குறைந்தபட்சம் சமீப காலத்தில் முன்வந்துள்ள இரு முக்கிய அம்சங்கள் குறித்து பரிசீலனை செய்திட வேண்டியதும் அவசியமாகும்.

நாட்டின் சட்டங்களை உருவாக்கும் இடமான நாடாளுமன்றத்திற்குள் தாங்கள் ஏன் நுழையவில்லை என்று அண்ணா ஹசாரேயிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர், மக்களை மிகவும் கேலி செய்யும் விதத்தில் மிகவும் மோசமான விதத்தில் பதிலளித்திருக்கிறார். அதாவது, தான் ‘‘எந்தக்காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’’ என்றும், தான் ‘‘போட்டியிட்டால், ஜாமீன்தொகையை இழந்துவிடுவேன்’’ என்றும், ஏனெனில், ‘‘சாதாரண வாக்காளர்கள் விழிப்புணர்வு இல்லாதவர்கள்’’ என்றும், ‘‘அவர்கள், வேட்பாளர்கள் அளித்திடும் நூறு ரூபாயையோ அல்லது ஒரு பாட்டில் மதுவையோ அல்லது ஒரு புடiவையோ பெற்றுக்கொண்டு தங்கள் வாக்குரிமையை அவர்களுக்கு அளித்துவிடுவார்கள்’’ என்றும் கூறி சாமானிய மக்களை அவமதித்திருக்கிறார். வாக்காளர்கள் மீதான இத்தகைய ஏளனமான வசவுகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையை அவர் அவமதித்திருப்பதானது உண்மையில் கவலையளிக்கக்கூடிய ஒன்றாகும்.

நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்புக்கு ஆபத்து ஏற்பட்ட சமயங்களில் எல்லாம், இதே வாக்காளர்கள்தான் அவற்றை உயர்த்திப்பிடித்து, நவீன இந்தியாவின் மாண்பினைக் கண்ணின் கருவிழியைக் காப்பதுபோல் காத்து நின்றிருக்கிறார்கள். இந்திராகாந்தியின் அவசரகால ஆட்சியைத் தோற்கடித்து, நாட்டில் ஜனநாயகத்தை வீறார்வத்துடன் மீண்டும் நிறுவியது இதே வாக்காளர்கள்தான். மக்கள் மத்தியில் உள்ள இத்தகைய ஜனநாயக உணர்வானது
இந்தியாவின் எதார்த்த நிலைமைகளுடன் பின்னிப்பிணைந்ததாக இப்போது மாறியிருக்கிறது. இவ்வாறான ஜனநாயக அமைப்புமுறைதான் நாட்டில் சமூக ஆர்வலர்கள் செயல்படுவதற்கும், இவ்வாறு உண்ணாவிரதங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்புகளை அளித்திருக்கிறது.
நமது நாட்டில் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சமயத்தில், 2004இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடித்ததன் மூலம் அவர்களால் படாடோபமாக அறிவிக்கப்பட்ட ‘‘ஒளிரும் இந்தியா’’ என்கிற கருத்தாக்கத்தை இதே வாக்காளர்கள் தரைமட்டமாக்கி, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்கள். இத்தகைய வாக்காளர்கள் இன்றி, இன்றைய இந்தியா நிச்சயமாகக் கிடையாது. இவர்கள்தான் நாட்டில் மகத்தான போராட்டங்களும் உண்ணா விரதங்களும் நடைபெறுவதற்கு உந்துசக்தியாக இருந்து வருகிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற நீண்ட நெடிய விவாதங்களின்போது, நவீன இந்தியாவின் மூலவர்கள் இந்தியாவானது வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர் மூலம் ஆளப்பட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதன்மூலம் அவர்கள் ‘‘ஒரு நபர் - ஒருவாக்கு, ஒரு வாக்கு - ஒரு மதிப்பு’’ என்னும் விதியை உருவாக்கினார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். அரசியலமைப்புச் சட்டம், மக்கள் விருப்பத்தின் மையக்கருவாகவே அமைந்திருக்கிறது. இதனை அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை, ‘‘இந்திய மக்களாகிய, நாம்,...’’ என்று தொடங்கி, ‘‘இதன்மூலம் நாமே இயற்றி, சட்டமாக்கி, நமக்கு நாமே அளித்துக்கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டம்’’ என்று மிகவும் செம்மாந்து வரையறுத்துள்ளது. இதன்மூலம் பிரகடனப் படுத்தப்படும் முக்கியமான செய்தி என்ன வெனில், நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்திற்கும் மேலானவர்கள், முதன்மையானவர்கள் மக்கள்தான் என்பதேயாகும். இத்தகைய மக்களை ஏளனமாகக் குறிப்பதும், அவமதிப்பதும் நம் அரசியலமைப்புச் சட்டத்தையே கீழறுக்கும் அபாயங்களுக்கு இட்டுச்செல்லும். இதனை அனுமதித்திட முடியாது.

அண்ணா ஹசாரே இவ்வாறு மக்களை மட்டமாகக் கருதி கருத்துக்கூறியுள்ள அதே சமயத்தில், மத்திய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சரோ லோக்பால் சட்டமுன்வடிவிற்கு எதிராக அதற்கிணையாக ஏளனமான கருத்து ஒன்றினை உதிர்த்திருக்கிறார். ‘‘ஓர் ஏழைக் குழந்தை கல்விக்காக எவ்விதமான வசதியும் இல்லாதிருந்தால், பின் அதற்கு லோக்பால் சட்டமுன்வடிவு எவ்விதத்தில் உதவிடும்?’’ என்று கேட்டிருக்கிறார்.
உதாரணத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக் கொள்வோம். மத்திய தலைமைத் தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி) மதிப்பிட்டுள்ள 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்தால் வசூலிக்கப்பட்டிருந்தால், நம் நாட்டில் 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்கக்கூடிய விதத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி இருக்க முடியும். உண்மையில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத்தின் குறிக்கோள் இதுதான். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் மத்திய மாநில அரசுகள் இதனை நிறைவேற்ற தங்களிடம் போதுமான வாய்ப்பு வசதிகள் இல்லையென்று கூறிவருவதால் இது எவ்வித அசைவுமின்றி நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே வெறும் தாளாகவே இன்னமும் இருந்து வருகிறது.

கல்விக்கான திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய நிலையம், நம் நாட்டில் தேவையான பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கும், ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கும், மதிய உணவு, பாடப் புத்தகங்கள், சீருடைகள் போன்றவை வழங்குவதற்கும் ஓராண்டிற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் என்ற விதத்தில் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்குச் செலவிட வேண்டி யிருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது. அதாவது ஐந்தாண்டுக் காலத்திற்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று குறிப்பிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தடுத்தி நிறுத்தியிருந்தோமானால், நம் நாட்டில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளையும் பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்திருக்க முடியும். நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை சிறந்த முறையில் ஏற்படுத்த முடியாத வண்ணம் நாட்டில் நடைபெற்றுள்ள மெகா ஊழல்கள் அவர்களின் வாழ்க்கையையே கொள்ளை கொண்டு விட்டன.

இதேபோன்றுதான், தேசிய ஆலோசனைக் கவுன்சில், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் - வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்துக் குடும்பத்தினருக்கும் - மாதத்திற்கு 35 கிலோ உணவு தான்யங்களை கிலோ ஒன்றிற்கு 3 ரூபாய் வீதம் அளித்திட வேண்டுமானால் அரசுக்குக் ஓராண்டிற்குக் கூடுதலாக 88 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறது. (காங்கிரஸ் கட்சியானது சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, உணவு தான்யங்களை கிலோ ஒரு ரூபாய் என்ற வீதத்தில் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்திருப்பது வேறு விஷயம்.) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தடுத்து நிறுத்தப் பட்டிருக்குமாயின், அரசுக்கு வரவேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படாமல் சரிசெய்யப்பட்டிருக்குமாயின், பின்னர் அடுத்த ஈராண்டுகளுக்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி இருக்க முடியும். இவ்வாறு ஊழல்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட்டிருந்தால் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கியிருக்க முடியும்.
ஆயினும், லோக்பால் சட்டமுன்வடிவிற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழு தன் வரைவை நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்காகத் தாக்கல் செய்யும் வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டங்களை உருவாக்கும் இடம் நாடாளுமன்றம்தான். நாடாளுமன்றத்தில் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும். லஞ்ச ஊழல்களை அனைத்து முனைகளிலும் தடுக்கக்கூடிய விதத்தில் ஒரு வலுவான மற்றும் வெளிப்படையான சட்டத்தை நிறைவேற்றிட இடதுசாரிக் கட்சிகள் உறுதிபூண்டிருக்கிறது.

(தமிழில்: ச. வீரமணி)

Thursday, April 7, 2011

ஊழல் பேர்வழிகளைத் தோற்கடிப்பீர்




இந்த இதழ் வாசகர்களின் கைகளை அடையும் சமயத்தில், அநேகமாக நாட்டில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் நெருங்கிக் கொண்டிருக்கும். அஸ்ஸாமில் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கும்.
மிகப் பெரும்பாலோரால் எதிர்பார்க்கப்பட்டபடி, ஒவ்வொரு மாநிலத்தின் பிரத்யேக பிரச்சனைகளுடன், ஆட்சியாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ள ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சாரத்தில் பிரதானமாக இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணி காங்கிரசின் உதவியை முழுமையாகப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற அன்பளிப்புத் திட்டங்கள் (உண்மையில் 50 விழுக்காட்டுக் குடும்பத்தினருக்குக் கூட இவை போய்ச் சேரவில்லை) திமுக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒவ்வொரு குடும்பத்தினரின் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. தமிழ் நாட்டு அளவில் நடைபெற்றுள்ள பல்வேறு ஊழல்களுடன், ஊழல்களில் அரசியாகத் திகழும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலானது, உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழல்களை மையக் கருவாகக் கொண்டு வந்திருக்கிறது.

ஆயினும், ஊழல் என்பது தமிழ்நாட்டோடு மட்டும் சுருங்கிவிடவில்லை. சமீப காலத்தில் வெளிப்பட்டுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஸ் வீட்டுவசதி சங்க ஊழல், ஆன்ட்ரிக்ஸ்-ஐஎஸ்ஆர்ஓ ஊழல், வாக்காளர்களுக்குப் பணம் தருதல், சட்டவிரோதமாகக் கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற ஊழல் போன்று அடுக்கடுக்காக நடைபெற்ற பல்வேறு ஊழல்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ-2 அரசாங்கத்தை உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழல் பேர் வழிகளுக்குப் பாதுகாப்பு அளித்திடும் ஒன்றாகக் குறைத்து விட்டது. இவர்களின் கேவலமான செயல்பாடுகள் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையைத் தான் நமக்கு நினைவு படுத்துகின்றன. ஆயினும், தற்போதைய சூழ்நிலைக்கும் அக்கதைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. அலிபாபா இல்லாத நிலையில் 40 திருடர்களும் வெறித்தனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஊழல் பேர்வழிகள் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்ததன் மூலம் பெரும்பான்மை மக்களுக்குப் போய்ச்சேரவேண்டிய நலத்திட்டங்கள் பலவற்றை முடக்கியது மட்டுமல்லாமல், இப்போது தேர்தல் சமயத்தில் அவ்வாறு தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு அதே மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களது வாக்குகளை வாங்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தக் கேவலமான செயல் தமிழ்நாட்டில் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக மத்திய டெலிகாம் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு திமுக தலைவரும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான மு.க. அழகிரி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார். தேர்தல் வெற்றிக்கு பணபலத்தைப் பயன்படுத்துவதில் பேர்போன இவர், எங்கே தான் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற ஐயுறவுக்கு ஆட்பட்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களிலும் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, பல கோடி ரூபாய்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. உண்மையில், தேர்தல் ஆணையமானது, காவல்துறை வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் அதனைத் தடுத்து நிறுத்திட உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. சமீபத்தில், ஒரு தனியார் ஆம்னி பஸ்ஸில் பல கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டதைக் கைப்பற்றி இருக்கிறார்கள். நம்பிக்கை இழந்த நிலையில் உள்ள திமுக தேர்தல் வெற்றியை எந்த வகையிலாவது வாங்கிட வேண்டும் என்பதற்காக அனைத்துவிதமான வேலைகளிலும் வெறித்தனமாக இறங்கி யிருக்கிறது.

இவ்வாறு ஊழல் என்பது நம் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பிற்கே கடும் பாதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது. மக்கள் தாங்கள்அளிக்கும் வாக்குக்குப் பணம் கொடுப்பதன் மூலம், ஊழல் வாக்காளர்களாக மாற்றுவதன் மூலம் அவர்கள் ஜனநாயகபூர்வமாகத் தங்கள் வேட்பாளரைத் தேர்வு செய்யும் வாய்ப்பைச் சீர்குலைக்கிறார்கள். நாட்டின் உயர் மட்ட அளவில் ஊழலுக்குத் துணை போகிறவர்கள் திமுக-வினர் மட்டுமல்ல, காங்கிஸ் கட்சியினரும்தான் ஆவார்கள். எனவே இவ்விரு கட்சியினருமே நடைபெற விருக்கும் தேர்தல்களில் ஓரங்கட்டப்பட வேண்டியவர் களாவர்.

மேலும் இதில் ஒரு முக்கிய அம்சம் அடங்கியிருக்கிறது. இவ்வாறு உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலை ஒரு நாடு எப்படித் தடுத்திட முடியும்? ஊழலைத் தடுப்பது என்பது ஓர் அறநெறிப் பிரச்சனை மட்டுமல்ல. இது மாபெரும் ஒழுக்கக்கேடு என்பது உண்மைதான். இவ்வாறு கேவலமாக சேர்க்கப்பட்ட செல்வமும், சட்டவிரோதமான கறுப்புப் பணமும் வெளிநாடுகளில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கைப்பற்றி நம் நாட்டு மக்களுக்குத் தரமான வாழ்க்கையைத் தரக்கூடிய வகையில் செலவிட வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் கொள்ளையிடப்பட்ட தொகை மட்டுமே நம் நாட்டில் (வறுமைக் கோட்டிற்குக் கீழும், வறுமைக் கோட்டிற்கு மேலும் உள்ள அனைத்துக்) குடும்பங்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு முழுமையாக உணவுப் பாதுகாப்பினை அளித்திடப் போதுமானவை என்பதை இப்பகுதியில் பலமுறை நாம் குறிப்பிட்டிருக்கிறோம். அல்லது, இந்தத் தொகையை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு செலவளித்திட முடியும் என்றும் எழுதியிருக்கிறோம். கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்திட ஒவ்வோராண்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் ஐந்தாண்டுகளுக்கு, நாடு முழுதும் புதிய பள்ளிகளைக் கட்டுவதற்காகவும், புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்காகவும், மதிய உணவுத் திட்டத்திற்காகவும் செலவு செய்திட வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் இவ்வாறு மாபெரும் அளவில் ஊழல்கள் புரிந்ததன் காரணமாக, இவையனைத்தும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், ஊழல் புரிவதற்கு இதற்கு முன்னெப்போதும் இல்லாத பல்வேறு வழிகளை, ‘சட்டவிரோத முதலாளித்துவத்தின்’ (`crony capitalism) மூலமாக வகுத்துத் தந்திருக்கிறது. மக்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் தரமான வாழ்க்கைத் தரத்தை அளிக்கக்கூடிய விதத்தில் வளங்கள் நிறைந்த நாடுதான் நம் நாடு. ஆயினும், சாமானிய மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்க முடியாத வகையில் ஆட்சியாளர்களின் ஊழல்கள் இந்த வளங்கள் அனைத்தையும் கொள்ளை கொண்டுவிட்டது. ஆட்சியாளர்களின் லஞ்ச லாவண்யங்கள், நாடு தன்னிடம் உள்ள அபரிமிதமான சக்தியைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு முடக்கிவிட்டது.

நம்முடைய அமைப்பில் புரையோடிப் போயுள்ள இந்தக் கேடுகெட்ட நிலைமையை எப்படிச் சரி செய்வது என்கிற முக்கியமான கேள்வியை நம்முன் கொண்டு வந்திருக்கிறது. நாற்பது திருடர்களின் கொட்டத்தை அடக்கக்கூடிய விதத்தில் அலிபாபா என்னும் நிர்வாக எந்திரத்தை உருவாக்கிட வேண்டியிருக்கிறது. மக்களுக்குப் பதில் சொல்லும் கடப்பாட்டிலிருந்து அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தப்பிவிடக் கூடாது. ஊழலில் திளைக்கும் இழிபிறவிகளுக்கு அதற்கான தண்டனைகளை அளிக்காமல் தப்ப விடக்கூடாது. மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் இந்த மனோபாவத்தையே சமூக ஆர்வலர்களில் ஒரு பிரிவினர் லஞ்ச ஊழலுக்கு எதிராகத் தற்போது நடத்தி வரும் கிளர்ச்சிகள் பிரதிபலிக்கின்றன. அத்தகையதோர் நிர்வாக எந்திரமான லோக்பால் குறித்த உள்ளடக்கம் தொடர்பான விவாதங்கள் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து ஊழல்கள் குறித்த குற்றப் பொறுப்புக்களையும் விசாரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இவ்வாறு நடைபெற்றுள்ள ஊழல்களின் மூலம் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மீளவும் இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளிலிருந்து திசைதிருப்பக் கூடிய வகையில் இது அமைந்துவிடக் கூடாது. லஞ்ச ஊழல்கள் மூலம் கொள்ளையடித்த வர்களையும், வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப் பத்திரப்படுத்தியுள்ளவர்களையும் கடுமையாகத் தண்டித்திட வேண்டும் என்று தனியே கூறத் தேவையில்லை. வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் லோக்பால் சட்டமுன்வடிவை நிறைவேற்றிட வேண்டும். அதற்கு முன்னதாக அது தொடர்பாக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மிகவும் முக்கியமாக மக்கள் மத்தியில் விரிவான வகையில் ஒரு பொருள்பதிந்த விவாதம் நடத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)