நாட்டில்
மிகவும் விசித்திரமான விதங் களில் எல்லாம் அரசியல் நாடகங்கள் அரங் கேறிக்
கொண்டிருக்கின்றன. அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.
அதற்குள்ளாகவே தற்போது ஆளும் ஐ.மு.கூட் டணியின் பிரதானக் கட்சியான காங்கிரசிலும்
பிரதான எதிர்க்கட்சியான பாஜகவிலும் எதிர் கால பிரதமரை முன்னிறுத்துவதில் போட்டா
போட்டி தொடங்கிவிட்டது. இவர்களது போட்டா போட்டியைப் பார்க்கும்போது, தெலுங் கில் கூறப்படும் பழமொழிதான்
நமக்கு நினை வுக்கு வருகிறது. ‘ஆலு
லேது, சூலு லேது, கொடுக்குப் பேரு சோமலிங்கம்’ என்று தெலுங்கில் சொல்வார்கள். அதாவது, ‘‘எனக்கு இருக்க இடம் இல்லை, இன்னும் கல் யாணமே ஆகவில்லை, ஆனால் என் பிள் ளையின் பெயர் சோமலிங்கம்’’ என்பது இதன் பொருள். இன்னும் தேர்தல்களே
அறிவிக்கப் படவில்லை. இந்தக் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று இன்னமும் ஆட்சியே
அமைக்கவில்லை.
ஆயினும்
அதற்குள் ளாகவே இக்கட்சிகள் எதிர்கால இந்தியாவின் பிரதமர் எங்கள் கட்சியைச்
சேர்ந்தவர்தான் என சித்தரிக்கத் தொடங்கிவிட்டன.அதுமட்டுமல்ல இவ்விரு கட்சிகளுமே
தாங்கள் ஆட்சிக்கு வரும்போது தங்கள் கட்சி யின் சார்பில் பிரதமர் யார் என்பதை கார்ப்ப
ரேட்டுகளின் மேடையில் நின்று அறிவித்த தில் ஆச்சரியப்படுவதற்கும் எதுவுமில்லை. இது
இன்றைய இருவித இந்தியாவின் எதார்த் தப் பிரதிபலிப்பேயாகும். ‘ஒளிரும்’ இந்தி யரின் பிரகாசம், ‘அல்லல்பட்டு ஆற்றாது அழுது கொண்டிருக்கும்’ இந்தியரின் இழி நிலையோடு நேரடியாகத் தொடர்புடைய
தாகும். தங்கள் கட்சியின் சார்பில் பிரதமரை அறிவித்திட, கார்ப்பரேட்டுகளின் மேடை களை
இக்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டி ருப்பதானது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இருவேறு இந்தியர்களுக்கும் இடையிலான
இடைவெளியை மேலும் விரிவாக்கிடக்கூடிய வகையிலேயே இப்போது மேற்கொண்டிருப் பதைப்
போன்றே கார்ப்பரேட்டுகளின் நலன் களுக்கு வெண்சாமரம் வீசும் கொள்கை களையே தொடர்வோம்
என்பதையும் அதன் மூலம் மிகவும் தெளிவான முறையில் அவர் கள் சமிக்ஞை
காட்டிவிட்டார்கள். எனவே, இவர்களில்
எவர் ஆட்சிக்கு வந்தாலும் சாமா னிய மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றக் கூடிய
வகையில் நவீன தாராளமய பொருளா தாரச் சீர்திருத்தங்களையே மேலும் தீவிரமாகப்
பின்பற்றுவார்கள் என்பது தெள்ளத் தெளி வாகிவிட்டது. இந்தியத் தொழில் அதிபர்கள்
கூட்டமைப் பில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘இந்தியா வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் வெள்ளைக் குதிரையில்
தன்னந்தனியே வரும் தூதுவனால் தீர்த்து வைத்திட முடி யாது’’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
இதேபோன்றே
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பில் பேசி யிருக்கிற பாஜக
முன்னிறுத்த முனைந்துள்ள நபரும் இதேபோன்ற தொனியில்தான் உரை யாற்றி இருக்கிறார்.
அலைஸ் இன் வொண் டர்லாண்ட்டில் வரக்கூடிய வால்ரஸ் போன்றே - ‘‘முட்டைக்கோசிலிருந்து முடி சூடா
மன்னன்வரை... பல விஷயங்களைப் பேசத் தொடங்கி யிருக்கிறார். வரவிருக்கும்
தேர்தல்களில் மக்களின் ஆதரவினைப் பெறுவதற்காக இவ்வாறு இரு வருமே ‘‘கனவுகளை’’ விற்றுக்கொண்டிருக் கிறார்கள். காங்கிரஸ் கட்சி நாட்டிலுள்ள
நூறு கோடி இந்தியர்களை வலுவுள்ளவர்களாக ஆக்குவோம் என்று சொல்லிக் கொண்டிருக்
கிறது. ஆனால் அதே சமயத்தில் நூறு கோடி இந்தியர்களையும் பட்டினி போட்டு கொல்லக்
கூடிய வகையில் நடவடிக்கைகளை எடுத் துக் கொண்டிருக்கிறது. பாஜகவும் ‘வீரியம்’ மிக்க குஜராத்தைப் போல, ‘வீரியம்’ மிக்க
இந்தியாவை உருவாக்கு வோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. 2002இல் குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு
எதிராக இனப் படுகொலைகள் நடைபெற்ற தைப்போல இந்தியா பூராவிலும் நடத்து வதற்கு அனுமதி
கோருகிறார்கள் என்பதே இதன் பொருளாகும். குஜராத் முதல்வர் தன் மாநிலத்தில் பட்டகடனை, இந்தியா பூராவும் உள்ள மக்களிடம்
திருப்பிச் செலுத்துவதற்குக் கோருகிறார். மேலும் மிகவும் விசித்திர மானமுறையில்
அவர் பெண்களுக்கு அதி காரம் கொடுப்பது குறித்தும் அளந்து கொண் டிருக்கிறார். ஆனால்
அவர் சார்ந்திருக்கிற ஆர்எஸ்எஸ் இயக்கமோ பெண்களை இரண் டாம்தரப் பிரஜைகளாக மாற்ற
வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது. மனிதவள வளர்ச்சி அட்டவணையில் தேசிய சரா
சரியைவிட, மிகவும் கீழான நிலையில், அதி லும் குறிப்பாக பெண்குழந்தைகளின்
ஊட்டச் சத்துக் குறைவு, கல்வி
முதலான விஷயங் களில் மிகவும் கீழான நிலையில் குஜராத் இருக்கிறது.இத்தகைய ‘கனவு வியாபாரிகள்’ நாட்டின் எதார்த்த உண்மைகளை முற்றிலுமாக
மூடி மறைத்து விட்டு, தங்கள்
சொந்தச் சரக்குகளை விற்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார் கள்.
இத்தகைய
கனவுகளை அவர்கள் விற்க முயல்வதன் மூலமாக, தாங்கள் சமைக்க விருக்கும் கனவு உலகில் ‘பாலும் தேனும்’ ஆறாக ஓடும் என்று மக்களை நம்ப வைத்திட
முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் மக்களுக்குத் தேவை என்ன? உண்மையான எதார்த்த உலகில் தற்போ துள்ள தங்கள் நிலை மாற்றப்பட
வேண்டும் என்பதுதான். பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவ
தென்பது கனவு காண்பதால் மட்டும் எக் காலத்திலும் நடந்துவிடாது. பல சமயங்களில்
இத்தகைய கனவுகள் தீக்கனவுகளாக முடிந்துவிடும். இவ்வாறு இவ்விரு கட்சிக ளுமே
தாங்கள் கனவு காணும் கொள்கை களின் ஊடாக நாட்டை கொண்டுசெல்ல முயல்கின்றன. நாட்டின்
பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண் டுமானால் கனவுகள்
கண்டால் நடக்காது, மாறாக
தொலைநோக்குப் பார்வையோடு கொள் கைகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்பாடுகள்
அமைந்திட வேண்டும். பாஜகவின் தொலைநோக்குப் பார்வை என்பது நாட்டை ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் திட்ட மான
ஒரு வெறி பிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச ‘இந்து ராஷ்ட்ரமாக’ இந்தியாவை
மாற்ற வேண்டும் என்றிருக்கக்கூடிய அதே சமயத் தில், பாஜகவும் காங்கிரசும் பின்பற்றும் பொரு ளாதாரக் கொள்கைகள்
என்பவை அநேகமாக நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கும் ஏழைக ளுக்கும் இடையிலான இடைவெளியை
மேலும் ஆழமாக்கக்கூடிய விதத்திலேயே தொடர்கின்றன என்பதேயாகும். நாட்டு மக்கள்
அனைவருக்கும் சிறந்ததோர் இந்தியாவைப் படைக்கும் விதத்தில் ஒரு தொலைநோக்குப்
பார்வையுடன் கூடிய கொள்கை இவ்விரு
கட்சிகளிடமும் கிடையாது என்பதே உண் மையாகும்.
இரு
கட்சிகளிடமும் மற்றும் ஒரு விஷயத் திலும் ஒற்றுமை காணப்படுகிறது. இரு கட்சி களுமே
இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் அடிவருடியாக மாற்ற வேண்டும் என்பதில்
ஒத்துப்போகின்றன. நம் நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டுச் சந்தை யையும் அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத்
தின் கொள்ளைலாப வேட்டைக்குத் திறந்து விட வேண்டும் என்பதிலும் நம் நாட்டின்
வளங்களையும் செல்வாதாரங்களையும் அவை கொள்ளையடித்துச் செல்ல அனுமதிப் பதிலும்
போட்டி போட்டுக்கொண்டு முன் னணியில் நிற்கின்றன. மாறாக, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்ததோர்
இந்தியா உரு வாக்குவதற்கேற்ற விதத்தில் இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப்
பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.இதனைச் செய்ய முடியுமா? நிச்சயமாக வும் முழுமையாகவும்
வெற்றிகரமாகவும் செய்ய முடியும். நாட்டில் ஆட்சியாளர்களால் பல்வேறு மெகா ஊழல்கள்
மூலம் கொள்ளை யடிக்கப்பட்ட பணத்தையும், பணக்காரர்களுக் கும் அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத் திற்கு
அளித்துள்ள மிகப்பெரிய அளவிலான வரிச்சலுகைகளையும் நிறுத்தினாலே, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் போதுமான
வளத்தை வழங்கிட முடியும். மேலும் அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் குடியிருப்பு வசதி களையும் செய்து தர
முடியும். சிறந்ததோர் இந் தியாவை உருவாக்குவதற்கான இத்தகைய தொலைநோக்குப்
பார்வையுடன் கூடிய கொள்கையை நிறைவேற்ற வேண்டுமானால், தேவைப்படுவது என்ன? ஆட்சியாளர்களின் கொள்கைத் திசைவழியில் மாற்றத்தை ஏற் படுத்த வேண்டியதே
இதற்கு அத்தியாவசியத் தேவையாகும். மக்கள் நலம் சார்ந்த விதத்தில் கொள்கைத்
திசைவழியை மாற்றக்கூடிய அதே சமயத்தில் நம் பொருளாதார அடித்தளங் களையும்
வலுப்படுத்திட வேண்டும். இவற்றை எய்திட நம் நாட்டில் அபரிமிதமாகக் கிடைத்திடும்
பொருளாதார, கனிம மற்றும் மனித வளங்களைச்
சரியானமுறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி என்னும் வெள்ளைக் குதிரையில்
ஏறி சவாரி செய்திட ராகுல் காந்தியும், மோடி யும்
போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ராமாயணத்தில்
ராமர் யாகம் செய்த சமயத்தில் அவரது குதிரையை லவ, குசா என்னும் இரட்டை சகோதரர்களால் நிறுத்தப்படும். அதேபோன்று
இன்றைய நவீன அரசியலில், ஆட்சி
என்னும் குதிரை இரு சகோதரர்களால் தடுத்து நிறுத்தப்படும். அவர்கள் செங்கொடி யின்
கீழ் இயங்கும் தொழிலாளி (சுத்தியல்) மற்றும் விவசாயி (அரிவாள்)கள்தான். செங்
கொடிதான் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வற்ற சிறந்ததோர் இந்தியாவை
உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார் வையுடன் கூடிய கொள்கையைப் பெற்றிருக் கிறது.
ஆட்சியாளர்களைத் தங்கள் கொள் கைத் திசைவழியை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில்
மக்களைத் திரட்டி வலுவான போராட்டங்களை நடத்துவதன் மூலம் செங் கொடி இயக்கம் இதனைத்
தீர்மானித்திடும்.
தமிழில்:
ச.வீரமணி
No comments:
Post a Comment