Monday, December 6, 2010

அமெரிக்க அரசின் முகத்தை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்




விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க அரசின் சுமார் நான்கு லட்சம் ரகசிய யுத்த ஆவணங்களை முன்பு வெளிப்படுத்தி இருந்தது. இப்போது அமெரிக்க அரசாங்கம் உலகம் முழு வதும் உள்ள தன் தூதரகங்களுக்கு கம்பி வழித் தந்தி மூலம் அனுப்பி வைத்த இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மிகவும் ரகசியமான ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் சமீபத்தில் பிப்ரவரியில் அனுப்பி வைத்தவைகளும் அடங்கும். இவை, மீண்டும் ஒருமுறை, அமெரிக்க ஏகாதி பத்தியம் உலகம் முழுவதும் தன் மேலா திக்கத்தை நிறுவிட, பழிபாவத்திற்கு அஞ்சாது எந்த நிலைக்கும் தாழ்ந்திடும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது.

விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தி இருக் கும் அமெரிக்க அரசின் ரகசிய யுத்த ஆவ ணங்கள் இராக்கிலும் ஆப்கானிஸ் தானத்திலும் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் மூலம் அதன் கொடூர முகத்தை வெளிப்படுத்தியது. இப்போது விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தி இருக்கும் ஆவணங்கள், அமெரிக்கா பல் வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங் களில் எப்படியெல்லாம் தலையிட்டிருக் கிறது என்பதைக் காட்டுகின்றன.

இதில் மிகவும் கண்டனத்திற்குரிய செயல்பாடு எதுவெனில், அமெரிக்க அர சின் அயல்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், ஐ.நா. பொதுச் செயலாளர் உட்பட ஐ.நா. உயர்மட்ட அதிகாரிகள் அனைவர் நடவடிக்கைகள் குறித்தும் உளவு பார்க்க வேண்டும் என்று கட்ட ளையிட்டிருப்பதுதான். ஐ.நா. மீது உளவு பார்ப்பது தடை செய்யப்பட்டு பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள் இருப்பதை நினைவுகூர்தல் வேண்டும். தனிநபர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து 1946ஆம் ஆண்டு ஐ.நா. கன் வென்ஷன் கூறுவதாவது: ‘‘ஐ.நா. ஸ்தா பன வளாகம் மிகவும் புனிதமான இட மாகும். ஐ.நா.வின் சொத்துக்களும் உட மைகளும் அவை எங்கே நிறுவப்பட் டிருந்தாலும், யாரால் பேணப்பட்டு வந் தாலும், அவை நிர்வாகத் தரப்பின ராலோ, நீதித்துறையினராலோ அல்லது நாடாளுமன்ற/ சட்டமன்ற நடவடிக்கை களாலோ சோதனை செய்யப்படுவதி லிருந்தும், பறிமுதல் செய்யப்படுவதி லிருந்தும், விலக்களிக்கப்பட்டவை களாகும்.’’

இவற்றை முற்றிலுமாக மீறக்கூடிய விதத்தில் கிளிண்டன் ரகசிய தந்திச் செய்திகள் மூலமாக, ஐ.நா. உயர் அதி காரிகளின் கிரெடிட் கார்டு எண்கள், அவர்கள் பயணம் செய்யும் விமானங் களின் எண்கள், கைரேகைகள், டிஎன்ஏ சோதனை விவரங்கள் உட்பட அனைத் தையும் சேகரிக்குமாறு கட்டளையிட்டி ருக்கிறார். அவை மட்டுமல்ல, அவற்றின் ரகசிய சங்கேதச் சொற்கள், சங்கேதக் குறியீடுகள், கணினியின் செயல்பாடு கள் ஆகியவை குறித்த விவரங்களை சேகரித்து வைத்திருப்பது என்பதும் நிச் சயமாக அமெரிக்கா, சர்வதேச அளவில் ஒரு தாக்குதலைத் தொடுக்கத் தன் னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக் கிறது என்கிற சந்தேகங்களை எழுப்பி யுள்ளது.

லண்டன் கார்டியன் எழுதியிருப்ப தாவது: ‘‘ஞாயிறு அன்று வெளியாகி இருக்கும் அமெரிக்க அரசின் கம்பி வழித் தந்திச் செய்திகள் எப்படி அமெரிக்கா தன்னுடைய தூதரகங்களை, உலகத்தை வேவுபார்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப் படுத்துகின்றன.’’ மேலும் அது கூறு கிறது: ‘‘ஹில்லாரி கிளிண்டன் பெயரி லும் அவருக்கு முன் அயல்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்த கண் டோலிசா ரைஸ் பெயரிலும் வெளியாகி யுள்ள செய்திகள், தங்கள் தூதரக அதி காரிகளை, தாங்கள் உள்ள நாடுகளில் உள்ள ராணுவத் தளங்கள், ஆயுதங் களின் விவரங்கள், அரசியல் தலைவர் களின் வாகன விவரங்கள் ஆகியவற்றை யும் சேகரித்திடுமாறு கேட்டுக்கொண் டிருக்கின்றனர்.’’ இந்தக் குற்றச்சாட்டுக் களின் மேல் அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளரிடம் கார்டியன் வினவிய போது, அவர், ‘‘அமெரிக்கத் தூதரக அதி காரிகள், உளவு வேலைகளைச் செய்திட அமர்த்தப்படவில்லை’’ என்று கூறி அவற்றை மறுத்திருக்கிறார். ஆயினும் அமெரிக்கா, உளவு வேலைகளையும் வேவுபார்க்கும் வேலைகளையும் தூதரக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதுகிறது என்பது தெளிவாகும்.

ஹில்லாரி கிளிண்டன் ஒருபடி மேலேயே சென்று, ‘‘நாட்டின் மிக முக் கியமான தகவல்கள் சட்டவிரோதமாக வெளியாகி இருப்பதற்கு’’ கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். முக்கிய மான தகவல்கள் சட்டவிரோதமாக ‘‘வெளியாகி’’ இருப்பதற்குத்தான் அவர் கண்டனம் தெரிவித்திருப்பதையும், ஆனால் அவற்றின் ‘‘சாராம்சங்கள்’’ குறித்து அல்ல என் பதையும் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ள ஹில்லாரி கிளிண்டன், அதைச்சொன்ன அதே மூச்சில், ‘‘அமெரிக்க நிர்வாகம், உலகப் பொருளாதாரத்தை நன்னிலைக்குக் கொண்டு செல்வதற்காகவும், சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிப்பதற் காகவும், அழிவுதரும் ஆயுதப் பரவலைத் தடுப்பதற்காகவும், மனித உரிமைகளை யும் மண்ணின் மாண்புகளையும் முன்னேற்றுவதற்காகவும் ஒரு வலுவான அயல்துறைக் கொள்கையைக் கடைப்பிடித்துக் கொண்டிருக் கிறது’’ என்றும் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அரசின் கொள்கைகள் உன்னதமானது எனில், அது ஏன் இத்த கைய இழிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும்? இதற்கு ஹில்லாரி கிளிண்டன் அளித் துள்ள பதிலிலேயே காரணங்கள் காணப் படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத் தியத்தைப் பொறுத் தவரை, மண்ணின் மாண்புகள் என்றால், அமெரிக்காவின் நலன்களை மேம்படுத்துதல் என்று பொருள். மனித உரிமைகள் என்றால் அமெரிக்காவின் நலன்களை மேம்படுத்திடும் நபர்களின் மனித உரிமைகள் என்று பொருள். இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் முத லான நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்களின் மனித உரிமைகள் ஒழித்துக் கட்டப்பட்டிருப்பது குறித்து அதற்கு சிறிதளவும் கவலை கிடையாது.

அமெரிக்க ரகசிய ஆவணங்கள், மத்தியக் கிழக்கு நாடுகளின் அமைதி நடவடிக்கைகளில் அமெரிக்காவின் செயல்பாடுகளில் உள்ள இரட்டை வேடத்தை நன்கு காட்டுகின்றன. இஸ்ரேல், ஜோர்டான், சிரியா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க அரசின் தூதரகங்கள், பாலஸ்தீன அரசாங்கம் குறித்தும் ஹமாஸ் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குறித்தும் குறிப்பாக காசா மற்றும் மேற்கு கரைக்குள் உள்ள படையினர் குறித்தும் தகவல்கள் சேகரிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட்டு, பாலஸ்தீனர் களுக்கு தாய்நாட்டிற்கான உரிமை களைப் மறுப்பதற்கான வேலைகளைச் செய்ய உதவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதுபோன்று இன்னும் அதிகமான அளவில் ரகசிய ஆவணங்கள் வெளி யிடப்படும் என்று உலகத்திற்கு உத்தர வாதம் தரப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமானமற்ற கொடூரமான முகத்தை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் அவை அமையலாம். கிளிண்டன், ‘‘இவ்வாறு ரகசிய ஆவ ணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பது அமெரிக்காவின் அயல்துறைக் கொள்கை மீதான தாக்குதல்கள் மட்டு மல்ல, உலகத்தைப் பாதுகாத்திடவும், பொருளாதார வளமையைக் கொண்டு வருவதற்காகவும் ஒன்றுபட்டுச் செயல்படும் சர்வதேச சமூகத்தினரின் மீதான தாக்குதலுமாகும்’’ என்று கூறியிருக்கிறார். யாருடைய ‘பாது காப்பு’ மற்றும் யாருடைய ‘வளமை’?

அமெரிக்க மக்கள், ஓர் ஆப்ரிக்க-அமெரிக்கரைத் தங்கள் நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தபோது உலகமே அதனை வியந்து பார்த்தது. உலக மக்கள் மத்தியில் இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தபோது, நாம் ‘‘வேங்கைப்புலி தன் புள்ளிகளை எக்காலத்திலும் மாற்றிக்கொள்ளாது’’ என்று கூறி எச்சரித்திருந்தோம். அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகத்தை மேலாதிக்கம் செய்திட மிகவும் அரு வருக்கத்தக்க செயல்களில் இறங்கி யிருப்பதாக ரத்தத்தை உறைய வைத் திடும் விதத்தில் விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கப் பேராசை முறியடிக்கப்பட் டால்தான், பரஸ்பர சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப் படையில் சர்வதேச உறவுகள் அமைந் தால்தான், ‘மனித உரிமைகளையும் மண்ணின் மாண்புகளையும் முன் னெடுத்துச் செல்லுதல்’ சாத்தியமாகும்.

-தமிழில்: ச.வீரமணி