Saturday, December 4, 2010

2ஜி என்றால் என்ன?

நாட்டின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இமாலய ஊழல் நடந்திருப்பது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்தான். 2ஜி, 2ஜி என்று செய்தித்தாள்களில் அடி படும்போது, விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக உள்ள மக்கள் இந்த 2ஜி என்றால் என்ன என்று கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

1990களில் தொலைபேசி என்பது மிகவும் அபூர்வமான ஒன்று. ஒருவருக்குத் தொலைபேசி இணைப்பு வேண்டும் என்றால் அவர் தொலைபேசி அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆண்டுக்கு பதினைந்து இணைப்புகளுக்கு மட்டும் பரிந்துரை செய்திடலாம். தொலைபேசிகள் தொலைபேசிக் கம்பிகளின் வழியாக இணைக்கப்பட்டிருந்தன.

பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிரடிப் புரட்சி ஏற்பட்டது. இதனை தலைமுறை மாற்றம் என்று குறிப்பிடுகிறார்கள். தொலைபேசிக் கம்பிகளுக்குப் பதிலாக, கம்பியில்லா நிலையிலேயே தொலைவில் உள்ளவர்களைத் தொடர்புகொள்ளக்கூடிய வசதிகள் கிடைத்தன.

1ஜி என்கிற முதல் தலைமுறை தொலைபேசி வந்த சமயத்தில், இந்தியா வில் இதனைப் பாதுகாப்புக் கருதி ராணுவம் மற்றும் காவல்துறையினர் மட்டும் உபயோகித்தனர். காவலர் கள் பேசும்போது பேச வேண்டிய இடத்திற்குப் பேசிவிட்டு, ‘ஓவர்’ என்று சொன்னபிறகு, மறு முனை யிலிருந்து பதில் சொல்லி விட்டு அவர் ‘ஓவர்’ என் பார். இந்த 1ஜி இணைப்பு மக்களுக்கோ, தனியாருக்கோ தரப்படவில்லை.

அடுத்து 2ஜி என்கிற இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசைகள் அறிமுகமாயின. 1ஜி அன லாக் ரேடியோ சமிக்ஞை களைப் பயன்படுத்திய அதே சமயத்தில், 2ஜி டிஜிட்டல் ரேடியோ சமிக்ஞைகளைப் பயன்படுத்தியது. இதன் காரணமாக இதில் மிகவும் அதிகமான அழைப்பு களைப் பதிவு செய்து, அனுப்பிட முடியும். 2ஜி செல்போன் கருவிகள், மிகவும் குறைந்த அளவே ரேடியோ அலைக்கற்றையை அனுப்புவதால், இவை 1ஜி-யைவிட மிகவும் சிறியன.

2ஜி-இன் மற்றொரு அனுகூலம். இதன் பேட்டரி லைஃப், 1ஜியைவிட அதிக மாகும். இது தகவல்களை டிஜிட்டல் மூலமாக அனுப் புவதால், 2ஜி மூலம் குறும் செய்தி சேவை (எஸ்எம் எஸ்), மின் அஞ்சல் முதலா னவற்றைக்கூட இதன் மூலம் அளிக்க முடியும். மேலும் 2ஜி மிகவும் குறைந்த அளவே மின் சக் தியைப் பயன்படுத் துவதால் நுகர்வோர் வைத்திருப்பதற் கும் மிகவும் பாதுகாப் பானதாகும்.

இவ்வாறு 2ஜி அதிகப் பயன்பாட்டை அளித்த தால், மக்கள் மத்தியில் மிக வேகமாகக் காலூன்றியது. 1990களில் மிகவும் அரிதாக இருந்த தொலைபேசி இணைப்புகள் பல கோடி அளவிற்கு உயர்ந்தது. ஒரு தெருவிற்கே ஒரு தொலை பேசிதான் என்று இருந்த நிலை மாறி, ஒரு வீட்டி லேயே ஒவ்வொருவருக்கும் ஒரு கைபேசி என்ற நிலை ஏற்பட்டது.

3ஜி

அடுத்து இப்போது 3ஜி என்று ஒயர்லெஸ் தொழில் நுட்பத்தின் மூன்றாம் தலைமுறை தொலை பேசி கள் வந்துவிட்டன. முன்பி ருந்த 2ஜியின் வேகத்தை விடப் பன்மடங்கு வேகத் துடன், மிகவும் முன்னேறிய மல்ட்டிமீடியா வசதிகளு டன், உலக அளவில் பேசக் கூடிய வாய்ப்புடன் 3ஜி வந்திருக்கிறது. 3ஜி தற்சம யம் அதிகமான அளவில் கைபேசியில் இணையதள இணைப்பைப் பெறு வதற்குப் பயன்படுத்தப் படு கிறது. மேலும் எதிர்முனை யில் பேசுபவரின் ஒலிக்குறியு டன் ஒளிக்குறியையும் காட் டக்கூடிய வகையில் ‘வீடியோ கால்களை’ 3ஜி மூலம் பெற முடியும். இவற்றைப் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்ய முடியும். இணைய தளத்தை உலகில் எந்நேரத்திலும் எங்கேயிருந்தும் மேய (browse) முடியும்.

2ஜியைவிட பன்மடங்கு வேகத்தில் தகவல்களை 3ஜி மூலம் அனுப்ப முடியும். ஒலி, ஒளி முதலியவை 2ஜி யில் கிடைப்பதைவிட மேலும் மேம்படுத்தப்பட்ட வகையில் 3ஜியில் கிடைத் திடும். வீடியோ கான்பரன் சிங் சாத்தியம். இணைய தளத்தினில் மிக அதிக வேகத்தில் உலாவரமுடியும். இணையதளத்தின்மூலம் தொலைக்காட்சி அலை வரி சைகளைக்கூடக் காண முடியும்.

4ஜி
இப்போது 4ஜி என்கிற நான்காம் தலைமுறை ஒயர் லெஸ் தொழில்நுட் பமும் வந்துவிட்டது.3ஜியின் வேகத்தைவிட, 4ஜி பன் மடங்கு வேகமானதாகும். எனவேதான் தொழில்நுட் பத் துறையினர் 4ஜி தொழில் நுட்பத்தை ‘‘மேஜிக்’’ (“MAGIC”) என்று அழைக்கிறார்கள். அதாவது, மொபைல் மல்ட்டி மீடியா, எந்தநேரத்திலும்/எங்கிருந் தும், உலக அளவில் பேசக் கூடிய வாய்ப்பு, ஒருங்கி ணைக்கப்பட்ட ஒயர்லெஸ் தீர்வு, தனிப்பட்டவர் தேவைக்கேற்பத் திருத்தி அமைத்துக்கொள்ளக்கூடிய வசதிகள் என்று பொருள் படக்கூடிய Mobile Multimedia, anytime/anywhere, global mobility support; integrated wireless solution and customized personal services வசதிகள் இதில் இருக்கின்றன.

--

No comments: