Sunday, April 28, 2013

அரசின் பிடிவாதமே நாடாளுமன்றம் நடைபெறாததற்குக் காரணம்




தற்போது உள்ள நிலைமைகளைப் பார்க்கும்போது, மீதமுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களும் எவ்வித விவாதங் களும் இன்றி முடக்கப்பட்டுவிடும் என்றே தெரிகிறது. ஐ.மு.கூட்டணி - 2 அரசாங்கம் சிறிது காலமாகவே, அரசி யலமைப்புச் சட்டத்தின் கீழ் நாடாளு மன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பைத் தவிர்த்துக் கொண்டே வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நம் குடியரசின் மையமான மற்றும் முதன்மையான நோக்கமே மக் களின் உயர்ந்தபட்ச இறையாண்மை யைப் பாதுகாப்பதில்தான் அடங்கி இருக்கிறது. இது நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளால் பிரயோகிக்கப்படுகிறது. இதனை அடுத்து, அரசாங்கம் நாடாளு மன்றத்திற்குத் தன் செயல்பாடுகள் குறித்துப் பதில் சொல்லக் கடமைப்பட்டி ருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நாடாளு மன்றமும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

இத்தகைய நடைமுறையின் மூலமாகவே நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து வகையான அமைப்புகளின் மூலமாகவும் மக்களின் உயர்ந்தபட்ச இறையாண்மை நடைமுறைப்படுத்தப்படுகிறது. சங்கிலித் தொடர்போன்ற நம் அரசி யலமைப்பில் ஏதேனும் ஒரு கண்ணி உடைந்தாலும் அல்லது உடைக்கப்பட் டாலும் பின்னர் ஒட்டுமொத்த அரசி யலமைப்பே மீறப்பட்டதாக ஆகிவிடு கிறது. நாடாளுமன்றத்தின் நடவடிக்கை கள் முடக்கப்படுவதன் மூலமாக, அர சாங்கம் தன் பொறுப்பை நாடாளுமன் றத்தின் முன் கூறாமல் தப்பித்துக்கொள் வதற்கான முயற்சிகளை அனுமதிப்பதன் மூலமாக இப்போது இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.இப்போது நம்முன்னுள்ள பிரச்சனை, நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்றுள்ள ஊழல் தொடர்பானதாகும். சட்ட அமைச்சர், மத்தியப் புல னாய்வுக் கழகம்(சிபிஐ) நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு சம்பந்தமான ஊழல் புகார்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கட்டளையிட்டதை யடுத்து சிபிஐ மீது செல்வாக்கு செலுத்த முயற்சித்தார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சரியாகவே எதிர்க்கட்சிகள் கோரிக்கொண்டு இருக் கின்றன.
அரசாங்கம் இதனை இதுவரை தவிர்த்து வருகிறது. பிரதமரும் சட்ட அமைச்சரும் இது தொடர்பாக தங்கள் நிலையினை விளக்கி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவற்றின்மீது உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும் இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இடது சாரிக் கட்சிகள் வலியுறுத்திக் கொண்டி ருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இக்கோரிக்கைக்கு ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால் இப்போது பிரதமரும் சட்ட அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்கள் நிலை யை மாற்றிக் கொண்டுள்ளது. 

இவர்களு டைய கோரிக்கையுடன் அரசாங்கத்தின் பிடிவாதமும் சேர்ந்துகொண்டு தற் போதைய முட்டுக் கட்டையை நீடிக்கச் செய்கின்றன. நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு களில் சில தில்லுமுல்லுகள் தே.ஜ.கூட் டணி அரசாங்கக்காலத்திலேயும் நடை பெற்றுள்ளன. இந்த வாரம் நாடாளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலக்கரி மீதான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இவை தில்லுமுல்லுகள்தான் என்கிற விதத்தில் சந்தேகத்திற்கிடமின்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் தலை மையில் அமைந்திருந்த இக்குழுவானது, நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்த தில் நடைபெற்றுள்ள அனைத்துவிதமான முறைகேடுகளையும் மிகவும் ஆதாரங்க ளோடு பதிவு செய்திருக்கிறது. இதில் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி அரசாங்கக்காலத்தில் நடைபெற்ற வைகளும் அடங்கி இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில், வாஜ்பாய் அரசாங்கத்தில் நிலக்கரி அமைச்சராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார் என்ப தாகும். இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் அமைந்த குழுவின் அறிக்கையானது அவரது கட்சித் தலைவர் மீதே குற்றம் சாட்டி இருக்கிறது. ஆயினும், இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதி லும், அரசாங்கமும் இப்பிரச்சனை மீதான புலனாய்வுகளில் மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மீது செல்வாக்கு செலுத்த வில்லை என்றும் தாங்கள் அப்பழுக்கற்ற வர்கள்தான் என்றும் மெய்ப்பிக்க முன்வர வேண்டியது அவசியமாகும்.

தன்னுடைய சிறுபான்மை அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மத்தியப் புல னாய்வுக் கழகத்தைத் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கெல்லாம் மிகவும் இழி வான முறையில் பயன்படுத்திக்கொள் கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் அரசாங் கத்தின் மீது அடிக்கடி சுமத்தப்படுவதால், அரசாங்கம் இவ்வாறு தன்னை அப்பழுக் கற்றவராகக் காட்டிக்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆயினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல் மீதான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையானது, அதன் தலைவரால் ஒருதலைப்பட்சமாகத் தயார் செய்யப்பட்டு சுற்றுக்கு விட்டிருப்பதி லிருந்து, ஐ.மு.கூட்டணி அரசாங்கமானது மீண்டும் ஒருமுறை தன் பொறுப்புக்களி லிருந்து நழுவிக்கொண்டிருக்கிறது. நாட்டில் நடைபெற்றுள்ள மெகா ஊழலில் இருந்து பிரதமரையும் நிதியமைச்சரையும் காப்பாற்றக்கூடிய விதத்தில் அனைத்தை யும் மூடிமறைத்து இந்த அறிக்கை தயாரிக் கப்பட்டுள்ளது. மத்தியத் தணிக்கைத் துறைத் தலைவர் (சிஏஜி)-இன் அறிக்கை யின்படி நாட்டின் கருவூலத்திற்கு வந் திருக்க வேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பிற்கு டெலிகாம் துறை யில் நடைபெற்ற அனைத்துக் கோளாறு களுக்கும் குளறுபடிகளுக்கும் அப் போதைய டெலிகாம் அமைச்சர் ஆ. ராசா மட்டுமே பொறுப்பு என்று அறிக்கை குற்றம் சாட்டி இருக்கிறது

திராவிட முன் னேற்றக் கழகம் ஐ.மு.கூட்டணி அர சாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதாலும் அது கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்ட தாலும், காங்கிரஸ் கட்சியானது, டெலி காம் துறையில் நடந்த குளறுபடிகளுக் கும், கோளாறுகளுக்கும் தாங்கள் எவ் விதத்திலும் பொறுப்பு அல்ல என்று தங்க ளைத் தற்காத்துக்கொண்டு இதில் நடை பெற்றுள்ள ஊழலுக்கு திமுகவின் ஆ.ராசா மட்டுமே பொறுப்பு என்று மிகவும் தைரிய மாகக் கூற முன் வந்துள்ளது.நாடாளுமன்ற நிலைக்குழுவின் நடவடிக்கைகளிலிருந்து 2ஜி ஸ்பெக் ட்ரம் ஊழல், பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் அன்றைய டெலிகாம் அமைச்சர் ஆகிய மூவரின் கூட்டு முடிவு என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. இவ் வாறு இந்த மாபெரும் மெகா ஊழலுக்கு ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம்தான் கூட்டாகப் பொறுப்பாகிறது.மேலும் இந்த அறிக்கையானது நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் களுக்குப் போய்ச் சேருவதற்கு முன் பாகவே ஊடகங்களுக்குக் கசிய விடப் பட்டுள்ளது. இவ்விதத்தில் இது நாடாளு மன்றத்தின் உரிமை மீறல் பிரச்சனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவும் மாறிப்போயிருக்கிறது. நிலைக்குழுவில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் அதன் மீதான அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக வெளி யாகக்கூடாது என்பது நாடாளுமன்ற நடைமுறை விதியாகும். இந்த வழக்கில் இந்த நடைமுறை முழுமையாக மீறப்பட் டிருக்கிறது. இதுவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்பட இருக் கும் மற்றுமொரு பிரச்சனையாக உரு வெடுக்கும். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் 

இவ்வாறு முடக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
நாட்டின் பெரும் பான்மையான மக்களின் வாழ்வாதாரங் களைப் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்ச னைகள் குறித்து நாடாளுமன்றம் விவா தித்து, அவற்றின் மீது பல்வேறு நட வடிக்கைகளை எடுத்திட அரசாங் கத்திற்கு நிர்ப்பந்தம் அளித்து, அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டியதிருக்கிறது. மக்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்ச னைகளை எழுப்பமுடியாத விதத்தில் நாடாளுமன்றம் இவ்வாறு முடக்கப்படும் போது, மக்களின் நலன்களைக் காத்திட அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் அளித்திடு வதற்கான ஒரே வழி மக்கள் போராட் டங்களை முன்னெடுத்துச் செல்வது தான். வரவிருக்கும் காலங்களில் இவை வலுப்படுத்தப்பட வேண்டியது அவசிய மாகும்.நாடாளுமன்றம் நடைபெறாது இவ் வாறு முடக்கப்படுவதன் மூலம், அரசாங் கம் மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தாமலேயே பல கொள்கை முடிவுகளை மேற்கொண்டு அமல்படுத்திடவும் துணிந்துவிடும். இது மிகவும் ஆபத்தானதாகும்.தற்போது நாடாளுமன்றத்தின் முன் ஆய்வுக்காக நிலுவையில் உள்ள நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட கொள்கை முடிவுகள் அனைத்தும் அரசாங்கத்தின் நிர்வாக முடிவுகளாக வெளிவரக்கூடும்.

இதனை எக்காரணம் கொண்டும் அனுமதித்திடக் கூடாது. இந்த அரசாங்கமானது, நிதித் துறையில் நவீன தாராளமய சீர்திருத்தங் களை முன் னிலும் பன்மடங்கு வேகமாக உந்தித் தள்ள அனைத்து ஏற்பாடுகளை யும் செய்து விட்டது. ஏற்கனவே ஏழை களுக்கு அளித்து வந்த அற்பசொற்ப மானியங் களையும் முழுமையாக இல்லாதொழிக் கத்தக்க விதத்தில், ஐரோப்பிய யூனியனு டன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துள் ளது போன்று அந்நிய நேரடி முதலீட்டை நாட்டிற்குள் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் அது செய்து வைத்திருக் கிறது. இவை அனைத்துப் பிரச்சனைகள் மீதும் விழிப்புடனிருந்து செயல்பட வேண் டியது மிகவும் அவசியமாகும். இத்தகைய சூழ்நிலையில் நம் நாட்டில் மாற்றுக் கொள்கைத் திசைவழிக்கான மக்கள் போராட்டங்கள் மேலும் வலுப் படுத்தப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய மாற்றுப் பாதைக் கான போர் முழக்கப் பயணத்தின் போது அது முன்வைத்த மாற்றுக் கொள்கைக் காக நாட்டில் சுதந்திரத்திற்கு முன் நடை பெற்ற பிரம்மாண்டமான ஒத்துழையாமை இயக்கக் குணாம்சம் போன்று அடுத்த மே மாதத்தின் கடைசி இரு வாரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அகில இந்திய அளவில் முற்றுகைப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்த இயக்கத்தின் பலம்தான் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் மேலே குறிப்பிட்ட அனைத்து மக்கள் விரோத நடவடிக்கை களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான தடையாக அமைந்திட முடியும். இவ்வாறு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்காக, நம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு சிறந்த வாழ்வாதாரங்களை வழங்கிடுவதற்காக, நாம் நடத்தவிருக்கும் முற்றுகைப் போராட்டம் வெற்றி பெறுவ தோடு மட்டும் நின்றுவிடாது, அரசாங்கம் போய்க் கொண்டிருக்கும் கேடுகெட்ட பாதையில் மேலும் போகாதவாறு தடுத்து நிறுத்தக்கூடிய விதத்திலும் வலு வானதாக அமைந்திட வேண்டும். 

(தமிழில்: ச.வீரமணி)


Tuesday, April 23, 2013

சமூகத்தை சீரழிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும்:சீத்தாராம் யெச்சூரி



சட்டம் - ஒழுங்கு அமலாக்கத் துறை மற்றும் நீதித்துறை அதிகரிக்கப்பட வேண்டும்
வர்மா குழு பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்
சமூகத்தை சீரழிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும்
மாநிலங்களவையில்
சீத்தாராம் யெச்சூரி பேச்சு
புதுதில்லி, ஏப். 23-
வர்மா குழு பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும், சட்டம் - ஒழுங்கு அமலாக்கத்துறை மற்றும் நீதித்துறையில் போதிய அளவிற்கு ஊழியர்கள் மற்றும் நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும், சமூகத்தைச் சீரழிக்கும் நிலப்பிரபுத்துவ பெண்ணடிமை சமுதாயமும், நவீன தாராளமய சீர்திருத்தங்கள் உருவாக்கியுள்ள நுகர்வுக் கலாச்சாரமும்   இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள நச்சுக்கலவைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி,எம்.பி. பேசினார்.
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அட்டூழியங்கள் மற்றும் சமூகக் கொடுமைகள் ஏவப்படுவதனால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து திங்கள் அன்று மாநிலங்களவையில் குறுகிய கால விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விவாதம் நடைபெறுகையில், அவையின் இருக்கையில் ஊசியளவு சந்தேகம் கூட எழாத அளவில் உள்ள ஒருவரின் தலைமையில் இவ்விவாதம் நடைபெறுவதற்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பதை எண்ணுகையில் மிகவும் மன வேதனையாகவும் கோபமாகவும் இருக்கிறது. அதிலும் இப்போது மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்றிருக்கிற குற்றத்தைப் பார்க்கும்போது, அதனைக் கண்டிப்பதற்கான வார்த்தைகளே இல்லை என்கிற அளவிற்கு மிகவும் மோசமான அளவில் இது நடைபெற்றிருக்கிறது.
‘‘இடிமுழக்கம்போன்ற குரலை எனக்குக் கொடு
தாய் என்றும் சேய் என்றும் பாராது
இத்தகைய நரவேட்டையாடும் மிருகங்களை
வீசியெறியக்கூடிய விதத்தில்
இடிமுழக்கம்போன்ற குரலை எனக்குக் கொடு’’
என்று கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தனக்கு அளிக்கப்பட்ட வீரத்திருத்தகைப் பட்டத்தைத் திருப்பி அளிக்கையில் கூறிய கவிதை வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.
நடைபெறும் சம்பவங்களைப் பார்த்து நாடே அவமானத்தால்  தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறது. நம்மால் இத்தகைய நரவேட்டையாடும் மிருகங் களிடமிருந்து நம் தாய்மார்களையும், நம் குழந்தைகளையும்  காப்பாற்ற முடியவில்லை. ஐந்து வயதுச் சிறுமிக்கு எதிராக ஏன் இந்த மிருகத்தனமான நடத்தை? சமூகம் இந்த அளவிற்கு எப்படிச் சீரழிந்தது என்று உங்களால் கற்பனைச் செய்ய முடிகிறதா? பொருளாதார வல்லமையைப் பெற வேண்டும் என்று நாம் விவாதித்துக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் இவ்வாறு ஏன் நடந்து கொண்டிருக்கிறது?
நாம் நவீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை நாமே பீற்றிக்கொள்கிறோம். ஆனால், இத்தகைய விதத்தில் மிருகத்தனமான உணர்ச்சிகளையும் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறோம். 
தி கார்டியன் ஏடு, இந்தியாவில் பெண்கள் இருப்பதற்கே இலாயக்கற்ற இடமாக மாறிவிட்டது என்று முத்திரை குத்தி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய ஒரு நாட்டில் இது எப்படி நடைபெறலாம்
பெண்களின் உரிமைகளுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும், தாம்சன் ரேட்டார்ஸ் டிரஸ்ட் லா விமன்  என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில்இந்தியாவை, ஆப்கானிஸ்தான், காங்கோ மற்றும் சோமாலியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, இந்நாடுகளில் எல்லாம் பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
நாட்டில் என்ன நடக்கிறது? வன்புணர்வு வழக்குகளில் பதிவு செய்யப்படாதவைகள் அதிகம். பதிவு செய்யப்படும் வழக்குகளிலும் நான்கில் மூன்று வழக்குகளில் குற்றமிழைத்த கயவர்கள், 2002க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற வழக்குகளில் எவ்விதத் தண்டனையுமின்றி விடுதலையாகி இருக்கிறார்கள்.
2007க்கும் 2011க்கும் இடையிலான தேசிய குற்றப் பதிவுகள் நிலையம் (The National Crime Record Bureau)அளித்துள்ள அதிகாரபூர்வமான புள்ளி விவரங்களின்படி, வன்புணர்வு நிகழ்வுகள் 9.7 விழுக்காடு அதிகரித்திருப்பதாக வெளியாகி இருக்கிறது.
இது காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, நம் சமூகம் போகும் நிலை குறித்தும் மிகவும் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.  
சமூகம் நாளுக்கு நாள் சீர்கேடு அடைந்து கொண்டிருக்கிறது. இது ஏன் என்பதை ஆராய்ந்து, இதனைச் சரி செய்ய என்ன செய்வது என்பது குறித்தும் இந்த அவை ஆராய்ந்து தன் பங்களிப்பினைச் செய்திட வேண்டும்.
இதில் இருவிதமான பிரச்சனைகள் சம்பந்தப் பட்டிருக்கின்றன.
ஒன்று, நம்முடைய ஜனநாயக அமைப்பின்கீழ் சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் அமைப்பும் நீதித்துறையும் இயங்கும் விதமாகும். இவை இரண்டுமே மிகவும் பரிதாபமான நிலையில் செயல்பட்டுக் கொண்டிருப்பது தொடர்கிறது.  போலீசைப் பார்த்தோ, நீதிபதி அல்லது நடுவரைப் பார்த்தோ எவரும் பயப்படுவதில்லை. இவர்களுக்கு எவரும் மரியாதை செலுத்துவதும் இல்லை. இவ்வாறு நிலைமைகள் ஏன் மாறிப்போயின?
ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம்  1987இல் ஓர் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் தற்போது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 1.05 நீதிபதிகள் என்று இருப்பதை, ஐந்து ஆண்டுகளுக்குள் ஐந்து நீதிபதிகளாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்து அறிக்கை அளித்தது. இன்று அதன் நிலைமை என்ன? இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின், இன்றும் அதே நிலை. அதாவது ஒரு லட்சம் மக்களுக்கு 1.4 என்ற நிலையில் நீதிபதிகள் இருக்கிறார்கள். எப்படி உங்களால் விரைந்து நீதி வழங்கிட முடியும்? உங்களால் விரைந்து நீதி வழங்கமுடியாத நிலை இருக்கும்போது, சட்ட அமலாக்கம், குற்ற அமலாக்கங்களும் சரிவர ஒழுங்காக இயங்க முடியாது.நீதி வழங்கப்படாவிட்டால், புலனாய்வுகள் மேற்கொள்ளப்படுவதால் என்ன பயன்? ஏன் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்? இவ்வாறு நிலைமைகள் நாட்டில் தொடர்கின்றன.
வன்புணர்வு வழக்குகள் என்றில்லைபெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மட்டுமல்ல, நாட்டில் செயல்படும் ஒட்டு மொத்த சட்ட அமலாக்கத் துறையும், நீதித்துறையும் மிகப் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டாக வேண்டும். இவ்வாறு மேம்படுத்தப்படவில்லை என்றால், அதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால், நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
இரண்டாவது அம்சம், இன்றைய நவீன ஜனநாயகத்தின் நடைமுறை சம்பந்தப்பட்டதாகும். நாம் நம்மை நவீனமானவர்கள் என்று பீற்றிக்கொள்கிறோம். என்னுடைய கல்லூரி நண்பனும் குறிப்பிடத்தக்க சமூகவியலாளருமான திபங்கர் குப்தாநவீனத்துவம் என்றால் என்ன என்று வரையறுத்திருக்கிறார்.    ‘‘நவீனத்துவம் என்பது அனைவரும் சமம் என்கிற மனோபாவத்தோடு அனைவரையும் மதித்து நடந்திட வேண்டும்’’ என்று அவர் வரையறுத்திருக்கிறார். இது மிகவும் முக்கியமானதும் நாம் அனைவரும் இதனை நன்கு உணர்ந்திட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.
இப்போதுள்ள இன்றைய நவீன சமூகத்தில் உண்மையில்  நாம் அனைவரும் சமமாக இல்லை. ஆயினும், மக்கள் மத்தியில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்பட்ட போதிலும், நவீனத்துவம் என்பது, மக்கள் கண்ணியத்துடன் வாழ,அடிப்படைத் தேவைகளை அளித்திட வேண்டும் என்று கோருகிறது.   நவீன சமூகம் என்றால் சமத்துவ சமூகம் என்பதேயாகும்.
முற்காலத்தில் மன்னர்கள் ஆண்டார்கள், மக்கள் அவரால் ஆளப்படுபவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. ஆனால் ஜனநாயக அமைப்பில் மக்கள் குடியுரிமை - பிரஜா உரிமை - பெற்றவர்கள். இருப்பினும் பழைய மிச்சசொச்சம் இன்றும் தொடர்கிறது. 
தந்தைவழிச் சமுதாய சிந்தனை இன்னமும் நம்முடைய சமூகத்தில் நன்கு ஊடுருவிப் பரவி இருக்கிறது.
நம்மை நாம் நவீனமானவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், நவீனமானமுறையில் நடை உடை காலணிகளை அணிந்துகொண்டபோதிலும், நவீன சிந்தனையை இன்னும் நாம் பெறவில்லை.
உங்கள் பெண்குழந்தைக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றால், சொந்த சாதியிலேயே மணமகனைத் தேடுகிறீர்கள். பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டுமா, அல்லது பெண் குழந்தையாக இருக்க வேண்டுமா என்று கேட்டால், ஆண் குழந்தைதான் வேண்டும் என்கிறீர்கள்.
இதன் பெயர் நவீன சமுதாயம் அல்ல, மாறாக நச்சு சமுதாயம் ஆகும். நச்சு சமுதாயத்தை அகற்றப்பட்டு, நவீன சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்.
செய்தித்தாள்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் மணமக்களைத் தேடும் பக்கங்களைப் பரிசீலித்தீர்கள் என்றால், மணமகனோ அல்லது மணமகளோ வெளிநாடு வாழ் இந்தியராக இருப்பார்கள். அவர்களுக்கு மணமகளோ அல்லது மணமகனோ கோரி இருப்பார்கள். அவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவில் வாழப்போவதில்லை. ஆயினும் தனக்கு வரப்போகும் மணமகள் அல்லது மணமகன் சொந்த சாதியில் இருக்க வேண்டும் என்று கேட்டிருப்பார்கள். இது என்ன? இதுவா நவீன சமுதாயம்?
இன்றையதினம் நாம் ஒரு மிக மோசமான சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் ஆண்டான் - அடிமை சிந்தனையோடு நவீன தாராளமய நுகர்வு கலாச்சாரத்தையும் இணைத்து புதியதொரு கலவையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நச்சுக் கலாச்சாரம்தான் நம் சமூகத்தில் நிலவிவந்த மாண்புகள் அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய  கலவைதான் இன்றைய அனைத்துவிதமான இழி கலாச்சார நடவடிக்கைகளுக்கும் மூலாதாரமாக இருந்து வருகிறது. இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்கள் புதிய அபிலாசைகளை உருவாக்குகின்றன. அவை அனைத்துவிதமான சமூக இழிகுணங்களையும் உருவாக்குகின்றன.
தொலைக்காட்சி அலைவரிசைகள் நம் பெண்களை எப்படிச் சித்தரிக்கின்றன? பெண்கள் என்றால் போகப் பொருள். அவர்கள் சம மனிதர்கள் அல்ல, மாறாக போகப் பொருள். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் இழிவான சிந்தனைகளை இன்றைய தொலைக்காட்சிகள் மிகவும் சாதுர்யமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. இவற்றைப் பொடிப்பொடியாக்கிடாமல், இன்றைய நிலைமைகளை உண்மையில் நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
நம்முடைய சட்டம் - ஒழுங்கு அமலாக்கத் துறை (அதாவது காவல்துறை) மற்றும் நீதித்துறை மிகவும் அதிகமான அளவில் மேம்படுத்தப்பட, அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த அவை வலியுறுத்த வேண்டும்.  இதனைச் செய்கிற அதே சமயத்தில், நிலப்பிரபுத்துவ பெண்ணடிமைச் சிந்தனையும், இன்றைய நவின தாராளமய சீர்திருத்தங்கள் உருவாக்கித் தந்துள்ள நுகர்வுக் கலாச்சாரமும் இணைந்து வழங்கியிருக்கும் புதியதொரு நச்சுக் கலவைக் கலாச்சாரத்தை மேலும் வளர விடாது தடுக்கக்கூடிய விதத்தில் நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும்.
 சென்ற டிசம்பரில் மிகவும் மோசமான விதத்தில் தலைநகரில் கூட்டு வன்புணர்வுக் குற்றம் நடைபெற்றது. அதன்பின்னர் என்ன நிலைமை? தயவுசெய்து பதிவேடுகளைப் பரிசீலனை செய்து பாருங்கள். வன்புணர்வு குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. குறையவில்லை.  நீங்கள் இது தொடர்பாகச் செய்தது என்ன?
சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கிற மிருக உணர்ச்சியை அழித்து ஒழிப்பதற்குப் பதிலாகநம் தொலைக்காட்சிகள் விளம்பரங்கள் மூலமாக அதனை வளர்க்கக்கூடிய விதத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இவற்றை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீங்கள் அமல்படுத்தும் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம், புதியதொரு மிருகத்தையும் நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்குகிறீர்கள். நிலவுடைமை பெண்ணடிமைத்தனமும் நவீன தாராளமய நுகர்வுக் கலாச்சாரமும் இணைந்த ஒரு நச்சுக் கலவை மிருகம் இது. இது மிகவும் ஆபத்தான மிருகமாகும். எனவேதான், இந்த அரசாங்கம், நீதியரசர் வர்மா குழு  அளித்திட்ட பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 
சீரழிந்துகொண்டிருக்கும் இச்சமூகத்தினை மாற்றிட நம்மாலான அனைத்தையும் நாம் செய்திடவேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(ச. வீரமணி)


Monday, April 22, 2013

சந்தர்ப்பவாதக் கட்சி என்ற முறையில் திரிணாமுல் எவருடன் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளும் பிரகாஷ் காரத் பேட்டி






புதுதில்லி,
சந்தர்ப்பவாதக் கட்சி  என்ற முறையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, பாஜக-வுடனும் கூட்டணி அமைத்துக்கொண்டிருக்கிறார். காங்கிரசுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளை எதிர்ப்பதல் மட்டும்தான் எப்போதும்மாறாத நிலை எடுத்திருக்கிறார் என்று பிரகாஷ் காரத் கூறினார்.
தி ஆசியன் ஏஜ் நாளேடு, ஞாயிறு (14.04.13) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தைப் பேட்டி கண்டு வெளியிட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:

கேள்வி: சமீபத்தில் மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை
வெடித்தது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

பிரகாஷ் காரத்:  2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு வந்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் வலுவாக இருந்து வரும் இடதுசாரித் தளத்தை நசுக்குவதற்கான முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஊழியர்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் நடைபெற்றுவரும் தாக்குதல்களுக்கு திரிணாமுல் காங்கிரசே பொறுப்பாகும்.  இத்தாக்குதல்கள் 2011 மே சட்டமன்றத் தேர்தல்களுக்குப்பின் உக்கிரமடைந்தன.  திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 96 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  திட்டக் கமிஷன் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு,  இடது முன்னணியின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் மீது மீண்டும் வெறியாட்டத்தை ஏவிடப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கேள்வி: திட்டக் கமிஷனுக்கு வெளியே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீதும், மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா மீதும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி என்ன சொல்கிறீர்கள்?  நீங்கள் அதனைக் கண்டிக்கிறீர்களா? இது நல்லதொரு முன்னுதாரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பிரகாஷ்காரத்: முதல்வருக்கு எதிராக எந்தவிதத் தாக்குதலும் இல்லை.  இந்திய மாணவர் சங்கத் தலைவர் சுதிப்தே குப்தா போலீஸ் காவலில் அடைந்த மரணம்  சம்பந்தமாக  மாநில அரசின் அணுகுமுறைக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  துரதிர்ஷ்டவசமாக, ஆர்ப்பாட்டத்தின்போது,  மித்ரா தொடர்புடைய நிகழ்வு நடந்துள்ளது. அதனை நாங்கள் கண்டித்திருக்கிறோம். இதற்கு முன்பும் பல சமயங்களில்,  இத்தகைய நிகழ்வுகள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் எப்போதும் ஏற்றதில்லை என்பதோடு கண்டித்தும் வந்திருக்கிறோம்.

கேள்வி: மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்று மமதா பானர்ஜி கூறியிருக்கிறாரே?

பிரகாஷ் காரத்: அபாண்டமான முறையில் இவ்வாறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவது அவரது வழக்கம்தான். இப்போதுகூட, அவரைக் கொல்ல ஓர் முயற்சி நடந்ததாகக் கூறியிருக்கிறார். மொத்தத்தில் இவற்றிற்கு எந்த அடிப்படையும் கிடையாது.
கேள்வி: மேற்கு வங்க அரசு, இந்திய மாணவர் சங்கத் தலைவர் சுதிப்தே குப்தா கொலை வழக்கைக் கையாண்டு கொண்டிருக்கும் விதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பிரகாஷ் காரத்: போலீஸ் காவலில் 23 வயது இளைஞர் ஒருவர் இறந்திருக்கிறார். இது ஓர் அற்ப விஷயம் என்று மம்தா பானர்ஜி அறிவிக்கிறார். மேற்கு வங்க அரசு இந்நிகழ்வு குறித்து நீதித்துறை விசாரணைக்கு ஏன் கட்டளையிடக்கூடாது? மரணம் கொல்லப்பட்டதால் நடைபெற்றதா அல்லது விபத்தால் நடந்ததா என்கிற உண்மை வெளிவரட்டுமே.
கேள்வி: மேற்கு வங்கம் அரசியல் வன்முறை வரலாற்றைப் பெற்றிருக்கிறது. இடதுசாரிகள் அங்கே முப்பதாண்டு காலம் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். வன்முறையை முன்னின்று நடத்தினார்கள் என்றும், மாநிலத்தில் அரசியல் வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்கியதற்கு அவர்களே பொறுப்பு என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே!
பிரகாஷ்காரத்: இடதுசாரிகளுக்கு எதிராக அடிக்கடிக்கூறப்படும் புளித்துப்போன குற்றச்சாட்டே இது.  1950களிலும் 1960களிலும் கம்யூனிஸ்ட்டுகளையும், இடதுசாரி இயக்கங்களையும் நசுக்கிட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு எதிராக ஆளும் வர்க்கங்களாலும் நிலப்பிரபுக்களாலும் அரசு எந்திரத்தாலும்  அரசியல் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இடது முன்னணி ஆட்சியிலிருந்த சமயத்தில் கூட தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகவும் விவசாய இயக்கங்களுக்கு எதிராகவும் வன்முறை ஏவப்பட்டது,  இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள் இடது முன்னணி ஆட்சி அமைப்பதற்கு முன்பும், அது ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும் தொடர்கிறது என்பதே உண்மையாகும். திரிணாமுல் காங்கிரஸ் பிற்போக்கு சக்திகளைப் பிரநிதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி. எனவேதான் அது ஜனநாயக உரிமைகளை நசுக்கிட முயற்சிக்கிறது.

கேள்வி: மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மமதா பானர்ஜிக்கும், மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே முட்டுக்கட்டை நிலை நீடிப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? தேர்தல்களைத் திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பிரகாஷ்காரத்:  பஞ்சாயத்துத் தேர்தல்கள் காலத்தே நடத்தப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். மாநில அரசாங்கம்தான் பஞ்சாயத்துத் தேர்தல்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அளித்திட்ட பரிந்துரைகளை வேண்டும் என்றே உதாசீனம் செய்துள்ளது. தேர்தல்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற்று அதில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் ஆணவத்துடன் அதிகாரம் செலுத்த விரும்புகிறது. அதனால்தான் மாநிலத் தேர்தல் ஆணையம் அளித்திட்ட விவேகமான பரிந்துரைகளை எதிர்த்துக்கொண்டிருக்கிறது.

கேள்வி: மமதா பானர்ஜி மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

பிரகாஷ் காரத்: ஒரு சந்தர்ப்பவாதக் கட்சி என்ற முறையில்,  திரிணாமுல் காங்கிரஸ் எவருடன் வேண்டுமானாலும் போகும். திரிணாமுல் காங்கிரஸ் பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்திருக்கிறது என்பதையும், அதில் மமதா பானர்ஜி அமைச்சராக இருந்தார் என்பதையும் மறந்துவிடக் கூடாது. மமதா பானர்ஜி, பாஜக கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் மாறி மாறி இருந்திருக்கிறார். அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு எதிரான நிலை எடுப்பதில் மட்டும்தான் மாறாதிருந்திருக்கிறார்.

கேள்வி: உங்கள் கட்சி, ஐமுகூட்டணியில் அங்கம் வகிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

பிரகாஷ் காரத்: காங்கிரசையும், பாஜகவையும் சேர்த்தேர எதிர்த்திட வேண்டும் என்று எங்கள் கட்சி ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. இடதுசாரிகள் என்ற முறையில் நாங்கள் அனைவரும் இதில் ஒருமித்து நிலை எடுப்போம்.  நாங்கள், மத்தியில் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அரசாங்கம் அமைய வேண்டும் என்றே விரும்புகிறோம்.

கேள்வி: மூன்றாவது அணி அமைத்திட இந்தத் தடவை இடதுசாரிகள் ஏன் தலைமைப் பாத்திரத்தை எடுக்க வில்லை?

பிரகாஷ் காரத்: மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு மாற்றை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். இதனை, மாற்றுக் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகள் கூட்டாக இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே கொண்டுவர முடியும்.  மூன்றாவது அணி என்பது    பொதுவாக தேர்தல் கூட்டணியுடனேயே சம்பந்தப்படுத்தப்படுகிறது.  பொதுத்தேர்தல்களைப் பொறுத்தவரை எங்கள் கட்சி மற்ற இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து நின்று போட்டியிடும். மாநில அளவில் சில மாநிலக் கட்சிகளுடன்  ஒருவிதமான புரிந்துணர்வுக்கு வரலாம்.

கேள்வி: நரேந்தர மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருப்பதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பிரகாஷ் காரத்: பாஜக நரேந்திர மோடியை பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தத் தீர்மானித்திருக்கிறது என்றால், அது தன்னுடைய அரக்கத்தனமான இந்துத்வா நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தத் துணிந்துவிட்டது என்கிற தெளிவான செய்தியாகும்.  நாட்டிலுள்ள பெரும் வர்த்தகநிறுவனங்கள் மோடிக்கு ஆதரவாக அணிதிரண்டுகொண்டிருக்கின்றன. இத்தகைய இந்துத்வா மற்றும் பெரும் வர்த்தகநிறுவனங்களின் ஆதரவு என்பது ஒருவிதமான பாசிசத்தின் (incipient fascism) வடிவமேயாகும்.  வளர்ச்சியில் குஜராத் மாதிரி என்பது அதுதான், அதாவது, முஸ்லீம்கள் இரண்டாம் தர பிரஜைகளாக அடித்து கீழிறக்கப்படுவார்கள்.
(தமிழில்: ச. வீரமணி)

மோடி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்


பெங்களூரு நகரத்தில் குண்டு வெடிப்புகள் நடந்திருப்பது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பயங்கரவாதம் எந்த ரூபத் தில் வந்தாலும் அல்லது எந்த வகையின தாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தல்ல. சுருக்கமாகச் சொல்வதென்றால், பயங்கரவாதம் என்பது தேச விரோத மானது, அதனை எக்காரணம் கொண்டும் அரசோ அல்லது சமுதாயமோ சகித்துக் கொள்ளக் கூடாது. ஆயினும் துரதிர்ஷ்டவசமாக இவ் வாறு பயங்கரவாதத் தாக்குதல் எங்கு நடந்த போதிலும், அதில் சம்பந்தப்பட் டிருப்பவர்கள் யார் என்பது குறித்து, அவ சரப்பட்டு முடிவுக்கு வரக்கூடிய நிலை இருந்து வருகிறது. இத்தகைய போக் கானது, உண்மையான கயவர்களை அடையாளம் காண்பதற்கு இயலாமல் பிரச்சனையைத் திசைதிருப்பி விட்டு விடுகிறது. அதைவிட மோசமான அம்சம், பலரால் இது தங்கள் சொந்த அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளப் படுகிறது. கடந்த காலங்களில் நாட்டில் இத்தகைய துரதிர்ஷ்டவசமான அனுப வங்கள் நிறையவே நடந்திருக்கின்றன. ஆஜ்மீர் செரீப், ஹைதராபாத் மெக்கா மசூதி, மாலேகாவ் போன்ற இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு விபத்துக்கள் சில இந்துத்வா கூட்டத்தினரின் வேலை என்பதும், இச்சம்பவங்கள் நடந்தவுடனே சந்தேகப்பட்டதைப் போல முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களின் வேலை அல்ல என்பதும் இப்போது மெய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன.

எப்படி இருந்தபோதி லும், தற்போது பெங்களூரில் நடந்துள்ள குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குக் காரண மான கயவர்கள் யார் என்பதைக் கண்டு பிடித்திட விரைந்து ஒரு முறையான புல னாய்வு மேற்கொள்ளப்பட்டு, குற்றமிழைத் தோர் தண்டிக்கப்பட வேண்டியது அவ சியமாகும். இந்த குண்டு வெடிப்புகள் அனைத் தும் மே 5 அன்று மாநில சட்டமன்றத் தேர் தல்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வந்தபிறகு நடந்துள்ளன. இத்தகைய சம் பவங்களை, தங்களுடைய சொந்த அர சியல் லாபத்திற்குப் பயன்படுத்திக் கொள் வதற்காக, சிலரால் மதவெறியைக் கூர் மைப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும் போக்கு இருக்கிறது. இதனை எக்காரணம் கொண்டும் அனு மதித்திடக் கூடாது. ஆயினும், பாஜக-வில் வலுவான பிரி வினர் தூண்டுதலில் குஜராத் முதல்வரை எதிர்காலப் பிரதமர் என சித்தரித்திருப் பது, வரவிருக்கும் காலங்களில், பாஜக-வின் முக்கியமான தேர்தல் உத்தியாக மத வெறியைக் கூர்மைப்படுத்தல் இருந் திடுமோ என்கிற ஐயத்தை வலுவாக ஏற் படுத்தி இருக்கிறது. துரதிர்ஷ்டவசமான கோத்ரா ரயில் சம்பவத்தையடுத்து தொடர்ந்து, புலனாய்வு அறிக்கைகளை, குஜராத் மாநில அரசு பெற்றிருந்தபோதிலும், அவற் றின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக் காது, மாநிலத்தில் மதவெறியைக் கொழுந்து விட்டெரியச் செய்வதற்கே, குஜராத் அரசு சூழ்நிலையை உருவாக்கித் தந்தது என் பதும், அதன் காரணமாகவே 2002இல் முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் நடந்தன என்பதும் சாட்சியங்கள் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதும் அப்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அத்தனை சம்பவங்களிலும் குஜராத் மாநில அரசும் உடந்தையாக இருந்தது என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த ஆவணங்கள் அனைத்தும் குஜராத்தில் முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக நடைபெற்ற கொலைச் சம்பவங்களை விசாரணை செய்து வந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு அது தன் னுடைய இறுதி அறிக்கையை அளிப்ப தற்கு மூன்றரை மாதங்களுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன.

எனினும் சிறப்புப் புலனாய்வுக் குழுவானது மாநில அரசு செய்துள்ள குற்றங்கள் அனைத்தை யும் மூடி மறைத்து, மாநில அரசாங்கத்தின் மீது எவ்விதக் குறையும் கூறாது வழக்கை முடித்துள்ளது. நீதித்துறை இவ்வுண் மைகளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மாநில அரசாங்கம், மாநில புலனாய்வுப் பிரிவுகள் அளித்த எச் சரிக்கைகளை வேண்டுமென்றே உதா சீனம் செய்துவிட்டு, முஸ்லிம்கள் மீதான கொலைச் சம்பவங்களை நிகழ்த்தி யுள்ளன என்பதை நீதித்துறை விசார ணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.இத்தகைய சூழ்நிலைகளில், அறநெறி யின் எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் குஜராத் முதலமைச்சர் உடனடியாக ராஜி னாமா செய்திட வேண்டும். அதுமட்டுமல்ல குஜராத்தில் நடை பெற்ற கலவரங்களின்போது மிகவும் கொடூ ரமான முறையில் கொல்லப்பட்ட நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் ஈசான் ஜாஃப்ரி, மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி சிறப் புப் புலனாய்வுக்குழுவின் இறுதி அறிக் கையை நிராகரித்திட வேண்டும் என்றும் மோடி உட்பட 59 பேர்களின் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்திட வேண்டும் என்றும், தாக்கல் செய்துள்ள ஆட்சேப மனு, உரியமுறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நம் முடைய ஜனநாயகத்தில் நீதி வழங்கப் படும் முறையானது மோசடிக்கு உள்ளாக் கப்படாமலும், தாமதப்படுத்தப் படாமலும் இருப்பதை நீதித்துறையானது உத்தர வாதப்படுத்த வேண்டும். தாமதப்படுத் தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியேயாகும்.இவ்வாறு குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான படு கொலைச் சம்பவங்களில் குஜராத் முத லமைச்சர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என் பதைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படா மல், அவர் இந்தியாவின் எதிர்காலப் பிரத மராகச் சித்தரிக்கப் படுவதிலேயே மிக வும் துடியாய் இருக்கிறார். ஆயினும் இது நாள்வரை தேஜகூட்டணியின் முக்கிய அங்கமாக விளங்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மோடியை பிரதமருக்கான வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என்று மிகவும் தெளிவாகக் கூறிவிட்டார். இவ்வாறு பாஜக-வின் கூட்டணிக்குள் சரிசெய்யப்பட முடியாத அளவிற்கு முரண் பாடுகள் முன்னுக்கு வந்துள்ளன. அதா வது பெரும்பான்மையைப் பெறக்கூடிய விதத்தில் கூட்டணி வலுவாக இருக்க வேண்டுமெனில் பாஜக-வானது தன்னு டைய வெறிபிடித்த மதவெறி நிகழ்ச்சி நிரலைக் கைவிட வேண்டும் அல்லது ஒத்திப்போட வேண்டும் அல்லது பின் னுக்குத் தள்ளி வைக்க வேண்டும். ஆனால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்ட ளைக்கிணங்க முஸ்லிம் மக்களுக்கு எதி ரான அரக்கத்தனமான மதவெறி நிகழ்ச்சி நிரலைப் பின்பற்ற வில்லை என்றால் பாஜக-வினால் தன் சொந்தத் தளத்தை தக்க வைத்துக்கொள்ளவோ, விரிவு படுத் தவோ முடியாது. இவ்வாறு இக் கூட்டணியில் முரண்பாடுகள் மிகவும் கூர்மையடைந்திருக்கின்றன. ஆயினும் ஆர்எஸ்எஸ்-பாஜகவானது இந்திய கார்ப்பரேட்டுகளின் புதிய ஆத ரவுத் தளத்தைப் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பொருளாதார நெருக்கடி கள் மிகவும் உக்கிரமாக இருக்கக்கூடிய சூழலில், தங்களின் உச்சபட்ச லாபத்திற் கான கார்ப்பரேட் உலகத்தின் வெறி படிப் படியாக அதிகரித்துக்கொண்டே செல் கிறது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற் றும் சிவில் உரிமைகள் பற்றியெல்லாம் கவலைப்படாத நபராக இருந்தாலும் பர வாயில்லை, தங்கள் நலன்களுக்கு வசதி செய்து தரக்கூடிய விதத்தில் மிகவும் ‘‘உறுதியாக’’வுள்ள ‘வலுவான’ தலைவர் அவர்களுக்குத் தேவை. மாபெரும் அறி ஞரான எரிக் ஹாப்ஸ்வாம், பெரும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாகக் கூறுகையில் தங்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய் யாதவரை எந்த ஆட்சியாக இருந்தாலும் அதனை ஆதரிக்கவும் அவற்றுடன் சமர சம் செய்துகொள்ளவும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் தயாராகவே இருக்கின்றன என்று கூறியிருப்பதுடன், ... பாசிச சித் தாந்தத்துடன் ஆட்சி செய்பவர்கள் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு மிகவும் அனுகூலமானவர்களேயாவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு கூறியுள்ள அவர், பல்வேறு அனுகூலங்களைப் பட்டி யலிட்டுள்ளார். அவற்றுள் தொழிற்சங்கங்களை ஒழித்துக் கட்டுவது, இடதுசாரிகளைப் பலவீனப் படுத்துவது அல்லது எதிர்த்து முறியடிப்பது போன்ற வையும் அடங்கும். 1930களில் மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட சமயத்தில் இத்தகைய மோசமான நிலைமைதான் ஏற்பட்டது.இப்போது நம்முடைய உள்நாட்டுப் பொருளாதார மந்தமும், உலகப் பொரு ளாதார நிலைமையும் தொடர்ந்து தள்ளா டிக்கொண்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில், உச்சபட்ச லாபத்திற்காக ஏங் கிக் கொண்டிருக்கும் இந்திய கார்ப்ப ரேட்டுகளுக்கு ‘மோடி’ போன்ற மீட்பாளர் தான் தேவைப்படுகின்றார். எப்படியெல் லாம் உலகப் பெரும் வர்த்தக நிறுவனங் கள், குறிப்பாக அமெரிக்க கார்ப்பரேட் ஜாம்பவான்கள், பாசிசம் தலைதூக்கு வதில் முக்கியமான பாத்திரம் வகித்திருக் கிறார்கள் என்பதற்கு வரலாற்றில் நிறை யவே சாட்சியங்கள் காணப்படுகின்றன. ஆயினும் இன்றைய தினம் நம் நாட்டில் காணப்படும் நிலைமை என்பது, ஜெர் மனியில் பாசிசம் உருவான காலத்தி லிருந்த நிலைமை போன்றதல்ல என் பதை நாம் கவனத்தில் கொள்ள வேண் டும். பாசிஸ்ட் முறைகளைப் பயன் படுத்தி, அரசு அதிகாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் பிற்போக்கு சக்திகளின் குணம் என்பது அன்றைக் கும் சரி, இன்றைக்கும் சரி கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். ஜார்ஜ் டிமிட்ரோவ், தன்னுயை ஐக்கிய முன்னணி தந்திரம் என்னும் புகழ்பெற்ற நூலில், ஜெர்மனியில் பாசிசம் உருவானதையும் மற்றும் அதன் குணத்தையும் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து அளித்திருக்கிறார். ‘‘பாசிசம் தீவிர மான ஏகாதிபத்தியவாதிகளின் நலன்க ளுக்கு சேவகம் செய்கிறது. ஆனால், மக்கள் மத்தியில் அது தன்னை தேசத் தில் மிகவும் மோசமாக நடத்தப்படு பவர்களைக் காப்பாற்ற வந்த மாவீரன் தானே என்பதுபோலக் கூறி, மக்கள் மத்தி யில் தேசவெறி, இனவெறியை ஊக்கு விக்கவும் முனைகிறது.’’ என்று டிமிட் ரோவ் கூறுகிறார், அவர் மேலும், ‘‘பாசிசம் மக்களை மிகவும் ஊழல்மிகுந்த இழிபிற விகளின் கருணையில் வாழும்படி வைக் கக்கூடிய அதேசமயத்தில், அத்தகைய இழிபிறவிகள், மக்கள் மத்தியில் தங்களை மிகவும் யோக்கியசிகாமணிகள் போன்று காட்டிக்கொள்ளவும் செய்கிறது. ஒவ் வொரு சூழ்நிலைமையின் பிரத்யேக அம் சங்களையும் கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப மக்களின் தேசிய உணர்வு களைக் கிளப்பிவிட்டு, அவர்களின் தலை வனாகவும் பாசிசம் தன்னை மாற்றிய மைத்துக் கொள்கிறது”.

ஆர்எஸ்எஸ், பாஜக-வின் தற்போ தைய பிரச்சாரம் பற்றி அப்போதே டிமிட் ரோவ் அவர்களால் மிகவும் சரியாகப் பேச முடிந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ், பாஜக வகையறாக்கள் நவீன தாராளமயப் பொரு ளாதார சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை வெளிப்படையாகவே நியாயப் படுத்துவ தோடு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவற்றை மேலும் தீவிரமாக நிறைவேற் றுவோம் என்று கூறுவதன் மூலம் சர்வ தேச நிதி மூலதனத்தின் ஆதரவையும் பெற்றுள்ளார்கள். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு போன்ற சில சீர் திருத்தங்களுக்கு எதிர்ப்பினை இவர்கள் காட்டியிருந்தபோதிலும், இவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஆட்சி புரிந்த சமயத்தில் அவற்றை அனுமதிக்கக் கோரினார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. மேலும், அந்நிய நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புவாசல்களை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை தற்போது நியாயப் படுத்தவும் தொடங்கிவிட்டது. இவ்வா றாக இது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்குச் சேவகம் செய்யத் தொடங்கிவிட்டது. அதே சமயத்தில் அது மக்களின் தேசிய (`இந்துமத` என்று வாசிக்கவும்) உணர்வுகளைக் கிளப்பிவிட்டு, மத வெறியைக் கூர்மைப்படுத்தி, அவர்களின் தலைவனாக மாறுவதற்காக இந்துத்வா வெறிப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் பாசிஸ்ட் நடைமுறைகளை எவ்வளவுத் துல்லி யமாகப் பின்பற்றுகிறார்கள்?நவீன இந்தியக் குடியரசின் மதச்சார் பற்ற ஜனநாயக அடித்தளங்களை அழிப் பதற்கு மேற்கொள்ளப்படும் இவர்களின் இத்தகைய இழிமுயற்சிகள் வெற்றிபெற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இவர் களின் நிகழ்ச்சிநிரலை முறியடிப்பதற் காக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதேசமயத்தில், நாட்டின் பெரும் பான்மை மக்களின் மீது முன்னெப் போதும் இல்லாத அளவிற்குத் துன்ப துய ரங்களைத் தொடர்ந்து ஏற்றுவதற்குக் காரணமாய் அமைந்துள்ள நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டங்களை இந்திய மக் கள் வலுப்படுத்துவதும் அவசியம். இவ்வாறாக இன்றைய நிலையில் நாட்டிற்குத் தேவை என்னவெனில் ஆட் சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கைகளுக்கு எதிராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமீபத்தில் நடத்தி முடித்துள்ள மாற்றுக்கொள்கைக் கான போர் முழக்கப் பயணத்தின்போது முன்வைத்த மாற்றுக் கொள்கைத் திசை வழியேயாகும். சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் இத்தகைய வழிகளில் போராட்டங்களை வலுப்படுத்துவோம்.

(தமிழில்: ச.வீரமணி)


Tuesday, April 16, 2013

மம்தாவின் இரட்டை வேடம்


மக்களின் கோபம் எதிர்பாராத விதங்களில் எதிர்பாராத வடிவங்களை எடுக்கக்கூடும். மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிர சின் ஈராண்டு கால ஆட்சிக்கு எதிராக மனக்கசப்பு வளர்ந்து கொண்டிருப்பது, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த முன்னணி ஊழியர் சுதிப்தா குப்தா ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையின ரால் கைது செய்யப்பட்டபின் இறந்ததற்கு எதிராக நடைபெற்று வரும் கிளர்ச்சிகளில் நன்கு வெளிப்படுகிறது. இது ஒரு சாதா ரண விபத்து என்று காவல்துறையினரால் கூறப்படுவது போல இருந்தாலும் சரி, அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுவது போல் சிறையில் கொல்லப்பட்ட சம்பவ மாக இருந்தாலும் சரி, முதல்வர் மம்தா பானர்ஜி இத்துயர சம்பவம் குறித்துக் கூறு கையில், இது ‘‘ஒரு சிறிய, அற்ப’’ விஷயம் என்று கூறியிருப்பது மக்களின் கோபத் தைக் குறைத்து மதிப்பிட்டிருப்பது போலவே தோன்றுகிறது.

தன்னுடைய அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களுக்கு எதிராக மம்தா பானர்ஜி எந்த அளவுக்கு சகிப்புத்தன்மையின்றி யும் பொறுமையிழந்தும் காணப்படுகி றாரோ அந்த அளவுக்கு அவர் அரக்கத் தனமாகவும் மக்களைப் பற்றிக் கவலைப் படாது சொரணையற்று இருப்பவராகவும் பார்க்கப்படுகிறார்.இந்திய மாணவர் சங்கத்தினால் நடத் தப்படும் கிளர்ச்சிகள் அரசியல் ரீதியாக தூண்டிவிடப்பட்டவை என்று கூறு வதற்கு மம்தா பானர்ஜிக்கு நிச்சயமாக முழு உரிமை உண்டு. ஆயினும் அவருக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையுமே பாசாங்குத்தனமானவை என்றும் இடது முன்னணி தனக்கு எதிராகச் செய்திடும் சதி என்று கூறுவதன் மூலமும் அவர் தன் சொந்த ஆதரவுத் தளங்களிலிருந்தே மிகப்பெரிய அளவில் தனிமைப்படுகிறார் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண் டும். எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மக்களின் நாடி யைப் பிடித்துப் பார்ப்பதிலும், வெகுஜன இயக்கங்களுக்குத் தலைமை தாங்குவதி லும் மிகவும் திறமைபெற்றதாக இருந்தது. இப்போது அனைத்துக் கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் தன்னை ஆட்சியி லிருந்து கீழிறக்குவதற்கான மற்றும் சட் டம்-ஒழுங்கைக் குலைப்பதற்கான முயற் சிகள் என்று கூறுவது ‘எதிர்க்கட்சி வரி சையில் இருக்கும்போது ஒருமாதிரியாக வும் ஆட்சியில் இருக்கும்போது வேறொரு மாதிரியாகவும்’ இருக்கிறார் என்று மக்கள் மத்தியில் உருவாகியுள்ள எண்ணம் வலுப்பெறுவதற்கே இட்டுச்செல்லும். பஞ்சாயத்துத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து அர சாங்கத்திற்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே சட்டரீதி யாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக் கக்கூடிய நிலையில், மம்தா பானர்ஜி முன்பு வீதியிலிறங்கிப் போராடிய சுவடே சுத்தமாக இல்லாமல் ஒரு எதேச்சதி காரியைப் போல நடந்துகொள்ளத் துவங்கி இருக்கிறார். இதனைப் பார்க்கும்போது, மம்தா போராட்டத்திலிருந்து ஓடி ஒளிவது போலவே தோன்றுகிறது.

(இந்து, தலையங்கத்தின்பகுதிகள் (ஏப். 9),தமிழில்: ச.வீரமணி

கார்ப்பரேட்டுகளின் கனவுகள் விற்பனை...




நாட்டில் மிகவும் விசித்திரமான விதங் களில் எல்லாம் அரசியல் நாடகங்கள் அரங் கேறிக் கொண்டிருக்கின்றன. அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள்ளாகவே தற்போது ஆளும் ஐ.மு.கூட் டணியின் பிரதானக் கட்சியான காங்கிரசிலும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவிலும் எதிர் கால பிரதமரை முன்னிறுத்துவதில் போட்டா போட்டி தொடங்கிவிட்டது. இவர்களது போட்டா போட்டியைப் பார்க்கும்போது, தெலுங் கில் கூறப்படும் பழமொழிதான் நமக்கு நினை வுக்கு வருகிறது. ஆலு லேது, சூலு லேது, கொடுக்குப் பேரு சோமலிங்கம்என்று தெலுங்கில் சொல்வார்கள். அதாவது, ‘‘எனக்கு இருக்க இடம் இல்லை, இன்னும் கல் யாணமே ஆகவில்லை, ஆனால் என் பிள் ளையின் பெயர் சோமலிங்கம்’’ என்பது இதன் பொருள். இன்னும் தேர்தல்களே அறிவிக்கப் படவில்லை. இந்தக் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று இன்னமும் ஆட்சியே அமைக்கவில்லை.

ஆயினும் அதற்குள் ளாகவே இக்கட்சிகள் எதிர்கால இந்தியாவின் பிரதமர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்தான் என சித்தரிக்கத் தொடங்கிவிட்டன.அதுமட்டுமல்ல இவ்விரு கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வரும்போது தங்கள் கட்சி யின் சார்பில் பிரதமர் யார் என்பதை கார்ப்ப ரேட்டுகளின் மேடையில் நின்று அறிவித்த தில் ஆச்சரியப்படுவதற்கும் எதுவுமில்லை. இது இன்றைய இருவித இந்தியாவின் எதார்த் தப் பிரதிபலிப்பேயாகும். ஒளிரும்இந்தி யரின் பிரகாசம், ‘அல்லல்பட்டு ஆற்றாது அழுது கொண்டிருக்கும்இந்தியரின் இழி நிலையோடு நேரடியாகத் தொடர்புடைய தாகும். தங்கள் கட்சியின் சார்பில் பிரதமரை அறிவித்திட, கார்ப்பரேட்டுகளின் மேடை களை இக்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டி ருப்பதானது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இருவேறு இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவாக்கிடக்கூடிய வகையிலேயே இப்போது மேற்கொண்டிருப் பதைப் போன்றே கார்ப்பரேட்டுகளின் நலன் களுக்கு வெண்சாமரம் வீசும் கொள்கை களையே தொடர்வோம் என்பதையும் அதன் மூலம் மிகவும் தெளிவான முறையில் அவர் கள் சமிக்ஞை காட்டிவிட்டார்கள். எனவே, இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் சாமா னிய மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றக் கூடிய வகையில் நவீன தாராளமய பொருளா தாரச் சீர்திருத்தங்களையே மேலும் தீவிரமாகப் பின்பற்றுவார்கள் என்பது தெள்ளத் தெளி வாகிவிட்டது. இந்தியத் தொழில் அதிபர்கள் கூட்டமைப் பில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘இந்தியா வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் வெள்ளைக் குதிரையில் தன்னந்தனியே வரும் தூதுவனால் தீர்த்து வைத்திட முடி யாது’’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இதேபோன்றே இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பில் பேசி யிருக்கிற பாஜக முன்னிறுத்த முனைந்துள்ள நபரும் இதேபோன்ற தொனியில்தான் உரை யாற்றி இருக்கிறார். அலைஸ் இன் வொண் டர்லாண்ட்டில் வரக்கூடிய வால்ரஸ் போன்றே - ‘‘முட்டைக்கோசிலிருந்து முடி சூடா மன்னன்வரை... பல விஷயங்களைப் பேசத் தொடங்கி யிருக்கிறார். வரவிருக்கும் தேர்தல்களில் மக்களின் ஆதரவினைப் பெறுவதற்காக இவ்வாறு இரு வருமே ‘‘கனவுகளை’’ விற்றுக்கொண்டிருக் கிறார்கள். காங்கிரஸ் கட்சி நாட்டிலுள்ள நூறு கோடி இந்தியர்களை வலுவுள்ளவர்களாக ஆக்குவோம் என்று சொல்லிக் கொண்டிருக் கிறது. ஆனால் அதே சமயத்தில் நூறு கோடி இந்தியர்களையும் பட்டினி போட்டு கொல்லக் கூடிய வகையில் நடவடிக்கைகளை எடுத் துக் கொண்டிருக்கிறது. பாஜகவும் வீரியம்மிக்க குஜராத்தைப் போல, ‘வீரியம்மிக்க இந்தியாவை உருவாக்கு வோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. 2002இல் குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனப் படுகொலைகள் நடைபெற்ற தைப்போல இந்தியா பூராவிலும் நடத்து வதற்கு அனுமதி கோருகிறார்கள் என்பதே இதன் பொருளாகும். குஜராத் முதல்வர் தன் மாநிலத்தில் பட்டகடனை, இந்தியா பூராவும் உள்ள மக்களிடம் திருப்பிச் செலுத்துவதற்குக் கோருகிறார். மேலும் மிகவும் விசித்திர மானமுறையில் அவர் பெண்களுக்கு அதி காரம் கொடுப்பது குறித்தும் அளந்து கொண் டிருக்கிறார். ஆனால் அவர் சார்ந்திருக்கிற ஆர்எஸ்எஸ் இயக்கமோ பெண்களை இரண் டாம்தரப் பிரஜைகளாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது. மனிதவள வளர்ச்சி அட்டவணையில் தேசிய சரா சரியைவிட, மிகவும் கீழான நிலையில், அதி லும் குறிப்பாக பெண்குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைவு, கல்வி முதலான விஷயங் களில் மிகவும் கீழான நிலையில் குஜராத் இருக்கிறது.இத்தகைய கனவு வியாபாரிகள்நாட்டின் எதார்த்த உண்மைகளை முற்றிலுமாக மூடி மறைத்து விட்டு, தங்கள் சொந்தச் சரக்குகளை விற்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார் கள்.

இத்தகைய கனவுகளை அவர்கள் விற்க முயல்வதன் மூலமாக, தாங்கள் சமைக்க விருக்கும் கனவு உலகில் பாலும் தேனும்ஆறாக ஓடும் என்று மக்களை நம்ப வைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் மக்களுக்குத் தேவை என்ன? உண்மையான எதார்த்த உலகில் தற்போ துள்ள தங்கள் நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுதான். பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவ தென்பது கனவு காண்பதால் மட்டும் எக் காலத்திலும் நடந்துவிடாது. பல சமயங்களில் இத்தகைய கனவுகள் தீக்கனவுகளாக முடிந்துவிடும். இவ்வாறு இவ்விரு கட்சிக ளுமே தாங்கள் கனவு காணும் கொள்கை களின் ஊடாக நாட்டை கொண்டுசெல்ல முயல்கின்றன. நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண் டுமானால் கனவுகள் கண்டால் நடக்காது, மாறாக தொலைநோக்குப் பார்வையோடு கொள் கைகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். பாஜகவின் தொலைநோக்குப் பார்வை என்பது நாட்டை ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் திட்ட மான ஒரு வெறி பிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரமாகஇந்தியாவை மாற்ற வேண்டும் என்றிருக்கக்கூடிய அதே சமயத் தில், பாஜகவும் காங்கிரசும் பின்பற்றும் பொரு ளாதாரக் கொள்கைகள் என்பவை அநேகமாக நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கும் ஏழைக ளுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் ஆழமாக்கக்கூடிய விதத்திலேயே தொடர்கின்றன என்பதேயாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்ததோர் இந்தியாவைப் படைக்கும் விதத்தில் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கை இவ்விரு 
கட்சிகளிடமும் கிடையாது என்பதே உண் மையாகும்.

இரு கட்சிகளிடமும் மற்றும் ஒரு விஷயத் திலும் ஒற்றுமை காணப்படுகிறது. இரு கட்சி களுமே இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் அடிவருடியாக மாற்ற வேண்டும் என்பதில் ஒத்துப்போகின்றன. நம் நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டுச் சந்தை யையும் அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத் தின் கொள்ளைலாப வேட்டைக்குத் திறந்து விட வேண்டும் என்பதிலும் நம் நாட்டின் வளங்களையும் செல்வாதாரங்களையும் அவை கொள்ளையடித்துச் செல்ல அனுமதிப் பதிலும் போட்டி போட்டுக்கொண்டு முன் னணியில் நிற்கின்றன. மாறாக, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்ததோர் இந்தியா உரு வாக்குவதற்கேற்ற விதத்தில் இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.இதனைச் செய்ய முடியுமா? நிச்சயமாக வும் முழுமையாகவும் வெற்றிகரமாகவும் செய்ய முடியும். நாட்டில் ஆட்சியாளர்களால் பல்வேறு மெகா ஊழல்கள் மூலம் கொள்ளை யடிக்கப்பட்ட பணத்தையும், பணக்காரர்களுக் கும் அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத் திற்கு அளித்துள்ள மிகப்பெரிய அளவிலான வரிச்சலுகைகளையும் நிறுத்தினாலே, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் போதுமான வளத்தை வழங்கிட முடியும். மேலும் அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் குடியிருப்பு வசதி களையும் செய்து தர முடியும். சிறந்ததோர் இந் தியாவை உருவாக்குவதற்கான இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கையை நிறைவேற்ற வேண்டுமானால், தேவைப்படுவது என்ன? ஆட்சியாளர்களின் கொள்கைத் திசைவழியில் மாற்றத்தை ஏற் படுத்த வேண்டியதே இதற்கு அத்தியாவசியத் தேவையாகும். மக்கள் நலம் சார்ந்த விதத்தில் கொள்கைத் திசைவழியை மாற்றக்கூடிய அதே சமயத்தில் நம் பொருளாதார அடித்தளங் களையும் வலுப்படுத்திட வேண்டும். இவற்றை எய்திட நம் நாட்டில் அபரிமிதமாகக் கிடைத்திடும் பொருளாதார, கனிம மற்றும் மனித வளங்களைச் சரியானமுறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி என்னும் வெள்ளைக் குதிரையில் ஏறி சவாரி செய்திட ராகுல் காந்தியும், மோடி யும் 
போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ராமாயணத்தில் ராமர் யாகம் செய்த சமயத்தில் அவரது குதிரையை லவ, குசா என்னும் இரட்டை சகோதரர்களால் நிறுத்தப்படும். அதேபோன்று இன்றைய நவீன அரசியலில், ஆட்சி என்னும் குதிரை இரு சகோதரர்களால் தடுத்து நிறுத்தப்படும். அவர்கள் செங்கொடி யின் கீழ் இயங்கும் தொழிலாளி (சுத்தியல்) மற்றும் விவசாயி (அரிவாள்)கள்தான். செங் கொடிதான் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வற்ற சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார் வையுடன் கூடிய கொள்கையைப் பெற்றிருக் கிறது. ஆட்சியாளர்களைத் தங்கள் கொள் கைத் திசைவழியை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் மக்களைத் திரட்டி வலுவான போராட்டங்களை நடத்துவதன் மூலம் செங் கொடி இயக்கம் இதனைத் தீர்மானித்திடும்.

தமிழில்: ச.வீரமணி

Saturday, April 13, 2013

அயர்வறியாப் போராளி அம்பேத்கர்::கே. வரதராசன்




(அம்பேத்கர் மனித உரிமைகளுக்கான போராளி. அவரைப் பொறுத்தவரைமனிதனின் உண்மையானவிடுதலை என்பது அரசியல் விடுதலையில் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது சமூக, பொருளாதார, பண்பாட்டு விடுதலையிலும் அடங்கியிருக்கிறது)

இந்தியாவில் சாதியக் கொடு மைகளுக்கு எதிராகப் போரா டிய பலருக்கு முன்னோடி என்று அம்பேத் கரைச் சொல்லலாம். அம்பேத்கர் அறிவின் மீது கொண்டிருந்த தாகம் ஈடிணையற்றதாகும். வரலாறு, பொருளாதாரம், அரசியல், சட்டம் என அனைத்துத் துறைகளிலும் தன்னிகரற்று விளங்கினார். மூன்று புகழ்பெற்ற ஆங்கிலம் மற்றும் அமெரிக் கப் பல்கலைக் கழகங்களின் மிக மிக உயர்ந்த பட்டங்களை அவர் பெற்றுள் ளார். புத்தகங்கள் படிப்பதில் பேரார் வம் கொண்டிருந்தார். ஏழு மொழிகள் தெரிந்து வைத்திருந்தார். அம்பேத்கர் மனித உரிமைகளுக் கான போராளி. அவரைப் பொறுத்த வரை மனிதனின் உண்மையான விடு தலை என்பது அரசியல் விடுதலை யில் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது சமூக, பொருளாதார, பண்பாட்டு விடுதலையிலும் அடங்கியிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை அரசு என் பது மனித முன்னேற்றத்தை மேலும் ஒரு நிலைக்கு மேம்படுத்த உதவு வதற்கான ஒரு காரணி மட்டுமே. ஒரு நல்ல அரசு என்பது ஓரினம், மற்றோர் இனத்திற்கு எதிராகத் தாக்குதல் தொடுத்தால் அதனைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு அளிப்பதை உத்தர வாதப்படுத்துவதேயாகும். அம்பேத்கர் ஒரு மிகச்சிறந்த பொருளாதாரவாதியாவார்.

அம்பேத் கர், நிலச்சீர்திருத்தம், விவசாயம் மற் றும் தொழில்மய நடவடிக்கைகள் எப் படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பவைகள் குறித்து தம் கருத்துக் களை வெளிப்படுத்தி இருக்கிறார். தீண்டத்தகாதோரில் பெரும்பகுதி யினர் நிலமற்றவர்களாக அல்லது சிறு, குறு விவசாயிகளாக இருக்கிறார்கள். இவர்களை மேலே தூக்கிவிட வேண் டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. தீண்டாமைக்கு ஆளாகி யுள்ள நிலமற்ற விவசாயிகளின் பிரச்ச னைக்கான தீர்வு என்பது இந்திய விவ சாயப் பிரச்சனைக்குத் தீர்வு காணப் படுவதை இன்னும் விரிவாகக் கூற வேண்டுமானால் நாட்டின் பொருளா தாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுவதைச் சார்ந்தே இருக் கிறது என்பதை அவர் உணர்ந்தார். அம்பேத்கரின் கூற்றுப்படி, இந்தி யாவின் பிற்பட்ட பொருளாதார நிலைக்கு அடிப்படைக் காரணம், நில உறவு முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்து வதில் தாமதம் செய்வதே என்பதா கும். இதற்கு உண்மையான தீர்வு, பொருளாதாரக் கட்டமைப்பு, உற்பத் தித் திறன் மற்றும் கிராமப்பொருளா தாரத்தை முற்றிலுமாக மாற்றியமைத் தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜன நாயகக் கூட்டாட்சி முறையை செயல் படுத்துவதேயாகும். பொருளாதாரச் சுரண்டலையும், சமூக அநீதியையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதை அது குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். இந்து மதத்தில் உள்ள சாஸ்திரங் கள் அனைத்தும் அநேகமாக பிராம ணர்களின் உருவாக்கமே என்று அம் பேத்கர் குறிப்பிட்டார். பிராமணர்களது குறிக்கோள் தங்கள் உயர்சாதித் தன் மையையும், உரிமைகளையும் என் றென்றைக்கும் தக்க வைத்துக் கொள் வது என்பதேயாகும்.

சாஸ்திரங்கள் அனைத்தையும் சட்டரீதியாகத் தடை செய்திட வேண்டும் என்று அவர் உறுதியான கருத்தைக் கொண்டிருந் தார். புராணங்கள் மற்றும் சாஸ்திரங் களைப் பொறுத்தவரை, பிராமணர்கள், நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஏழைகளையும், எழுத்தறிவற்றவர் களையும், மூடநம்பிக்கையில் ஆழ்ந்து கிடக்கும் இந்துக்களையும் முட்டாள் களாகவே வைத்திருக்கவும், வசியப் படுத்தவும், ஏமாற்றி மோசடி செய்தி டவும் ஏற்படுத்தப்பட்டவை என்று அம்பேத்கர் கருதினார். சுதந்திர இந்தியாவின் அரசிய லமைப்புச் சட்டத்தை உருவாக்கு வதில் அம்பேத்கர் ஆற்றிய கடின மான பணி மிகவும் போற்றுதலுக் குரியது. குறிப்பாக அவரது சட்ட நுணுக்கம், சோர்வில்லாத செயல் பாடு, அளப்பரிய திறமை, உருக்கு போன்ற உறுதியுடன் அரசியலமைப் புச் சட்டத்தின் வரைவுக்குழுத் தலை வராக செயல்பட்டதை மறந்துவிட முடியாது. தீண்டத் தகாதோருக்கு சுயராஜ் யம் என்பது என்னவாக இருக்கும்? என்று அம்பேத்கர் கேள்வியும் கேட்டு, ‘‘ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளா மல் இருப்பதோடு மட்டுமல்லாமல், சட்டமன்றங்களும் அவர்கள்பால் அசிரத்தையாக இருந்திடும். ஆட்சி யாளர்களும் அவர்களிடம் முரட்டுத் தனமாக நடந்துகொள்வார்கள். எனவே, சுயராஜ்ஜியத்தில் தீண்டத் தகாதவர்கள், இந்து சமூகம் விதித் துள்ள இழிநிலையிலிருந்து தப்பித் திட வழியே இல்லை.’’ என்று பதிலும் அளித்தார். அம்பேத்கர், தன்னுடைய ‘‘அரசு களும் சிறுபான்மையினரும்’’ என்ற நூலில் பொருளாதாரப் பாதுகாப்பு இல்லாது, அடிப்படை உரிமைகள் மட்டும் இருப்பதால் சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தாலேயே பொருளாதார லட்சியத்தை எய்திட முடியாது என்று கூறியிருக்கிறார். சாதி அழித்தொழிப்பு என்ற புத்த கத்தில் அம்பேத்கர், சாதிய உணர்வு முறை அனைத்துப் பொருளாதார வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக் கிறது என்று கூறியுள்ளார். வேளாண் மைக்கும், இதர நடவடிக்கைகளுக் கும் கூட்டாகச் செயல்படுவதற்கு இது தீங்கு விளைவிக்கும் சூழ்நிலை களை உருவாக்குகிறது, சாதிய உறவு கள் வலுவாக இருக்கும் காரணத்தால் கிராமப்புற வளர்ச்சி சோசலிசத் தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் என்றார்.
எனவே சாதியத்தின் அடிப் படையில் அமைந்துள்ள பெரிய அள விலான நிலப்பிரபுத்துவ எஸ்டேட்டு கள் தகர்க்கப்பட வேண்டும், உழுப வனுக்கே நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும், நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டுமே வேகமாக முன்னேற்றம் அடைவதற்கு ஏற்ற வகையில், அப்போதுதான் அவர் களால் ஒன்றிணைந்து கூட்டாகப் பயிர் செய்திட முடியும் என்று அம் பேத்கர் கூறினார். காங்கிரஸ் குறித்தும், காந்தியம் குறித்துமே அம்பேத்கர் சரியான நிலை எடுத்துள்ளார். காங்கிரசும், காந்தியும் என்கிற தன்னுடைய நூலில் அம்பேத் கர், ‘‘காந்தியம் வசதி படைத்தவர்கள் மற்றும் சொகுசு வர்க்கத்தாரின் சித்தாந்தமாகும். அது வாழ்வின் அவலநிலையைக் கூட மிகச் சிறந்த நல்லதிர்ஷ்டங்களாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களுக் குத் தவறாக வழிகாட்டுகிறது. காந்தி யம் தெருக் கூட்டும் முறையைக் கூடச் சமூகத்தின் உன்னதமான பணி என்று கூறி அதனை மிகவும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறது’’ என்று குறிப்பிட்டிருக் கிறார். தரிசு நிலங்களை விவசாயத்திற் காகக் கையகப்படுத்தி அவற்றை நில மற்ற விவசாயத் தொழிலாளர்களுக் குக் கொடுப்பதன் மூலம் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அம்பேத் கர் கூறினார். அனைவருக்கும் கொடுப்பதற்கு நிலம் எங்கே இருக்கிறது என்று கேட் பவர்களுக்கும் அம்பேத்கர் பதில் சொல்கிறார். ‘‘நான் சோவியத் அமைப்பு முறையை சிறந்ததெனத் தேர்ந்தெடுக் கிறேன். நம்முடைய அவலநிலையை அகற்றுவதற்கு ஒரே வழி கூட்டுப் பண்ணை விவசாயம்தான், என் கருத்துப்படி சோவியத் நாட்டில் உள்ள விவசாய முறை சிறந்தது,’’ என்கிறார்.அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக இருக்கும் தலித்து கள் வாழ்வின் உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கர், இந்திய அர சியலமைப்புச் சட்டத்தை உருவாக்கு வதிலும் பங்கேற்று அந்தச் சட்டத் திலே மனிதனுக்கு மனிதன் சமம் என்ற வகையில் சாதியால், மதத்தால் ஒடுக்கப்பட்டவர்கள், சட்ட ரீதியாக நிவாரணம் கிடைக்கப் போராடலாம் என்று பதிவு செய்தது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதையெல்லாம் பாராட்டுகிற அதே நேரத்தில், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பகுதி இன் றும் ஏட்டளவிலேதான் இருக்கிறதே யொழிய, நாட்டில் பெருமளவில் நடைமுறையில் இல்லை என்பதும் மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும்.இந்து மதம், எங்கள் மதம் என்று, இந்தியர்கள் என்று வேதாந்தம் பேசும் அத்வானி வகையறாக்கள், சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகித் தவிக் கும் தலித்துகளை இந்துக்கள் என்று கணக்கில் கொள்வதில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகை யில் 20 விழுக்காடு அளவிற்கு உள்ள தலித்துகளில் பெரும்பகுதியினர் இந்துக்கள்தான் என்பதைக் கணக் கில் கொள்ளும்போது, இந்து மதவெறி யர்களான பாஜக/ஆர்எஸ்எஸ்-காரர்கள் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக மட்டுமல்ல, இந்து மதத் திலேயே ஐந்தில் ஒரு பகுதியினராக இருக்கக்கூடிய தலித்துகளுக்கும் எதிரானவர்கள் என்பது வெள்ளிடை மலை.

தலித்துகளுக்கு எதிரான கொடு மைகள் நாடு முழுவதும் இன்றும் தொடர்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில், தலித் சிறுவன் ஒரு வன் உயர்சாதியினர் வளர்த்த நாயைக் கல்லால் அடித்தான் என்பதற்காக, அவன் வசித்த கிராமத்தையே உயர் சாதியினர் அடித்து நொறுக்கியுள் ளார்கள். இதேபோன்று தூத்துக்குடி மாவட் டத்தில் ஒரு கிராமத்தில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு இருப்பதையும் முன்பு நாம் குறிப்பிட்டிருக்கிறோம். சமீபத் தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட தலித் இளைஞரை, வஞ்சக மாக வரவழைத்து, கொடூரமான முறையில் சாதி வெறியர்கள் கொன் றுள்ளார்கள். தருமபுரி மாவட்டத்தில் தலித்துகள் கிராமங்களையே சாதி வெறியர்கள் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இவ்வாறு தலித்துகள் மீது தாக்கு தல்கள் தொடர்கின்றன. இந்நிலையில் ராமதாஸ் போன்ற வர்கள் என்ன செய்கிறார்கள்? சாதி வெறியைத் தூண்டுகிற விதத்தில் தீண்டாமையை நியாயப் படுத்தக்கூடிய வகையில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். தலித் ஆண் கள், பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற் படுத்தப்பட்ட/முன்னேறிய சாதியைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்யக் கூடாதாம். ஆனால் அதே சமயத்தில் மேல் சாதி ஆண்கள், கீழ் சாதிப் பெண்களை எது வேண்டு மானாலும் செய்யலாம். சதுர்வர்ணம் எனப்படும் நால்வர் ணம் இதைத்தான் சொல்கிறது. அதா வது, கீழ் சாதி ஆண்கள், மேல் சாதி பெண்களுடன் உறவு கொண்டால் அது கடுமையான குற்றம். இதைத் தான் இப்போது ராமதாஸ் வேறுவித மாகக் கூறிக்கொண்டிருக்கிறார். தனது சாதி என்று மட்டும் சொன்னால் எடு படாது என்பதற்காக பிற்படுத்தப்பட்ட /மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்புக்களை சேர்த்துக்கொண்டு தலித்துகளுக்கு எதிராக இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவ் வாறு இவர் தலித்துகளுக்கு எதிராக சாதி வெறியைக் கிளப்புகிறார் என்பது மட்டுமல்ல, இவ்வாறு தீண்டாமைக் கொடுமைகளுக்கு அடிப்படையாக இருக்கும் பிராமணீயத்திற்கும், அதற்கு அடிப் படையாக இருக்கும் மனு(அ)தர்மத் திற்கும் வக்காலத்து வாங்குகிறார். அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சாதியத்திற்கு எதிராக, சதுர்வர்ணத் திற்கு எதிராக, அம்பேத்கர், ஜோதி பாபுலே, நாராயணகுரு, தந்தை பெரி யார் போன்றவர்கள் மேற்கொண்ட இயக்கங்களை எல்லாம் புறந்தள்ளக் கூடிய விதத்தில் பாஜக/ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் வட இந்தியாவிலும், ராமதாஸ் போன்றவர்கள் தமிழகத் திலும் முன்வந்திருக்கிறார்கள். இவர் களின் இத்தகைய மதவெறி, சாதி வெறிப் பிரச்சாரங்களை முறியடிக் கக்கூடிய விதத்தில் அம்பேத்கரின் பிறந்த தினத்தில் அனைவரும் உறுதி ஏற்போம்.

(இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்ததினம்)