தற்போது
உள்ள நிலைமைகளைப் பார்க்கும்போது, மீதமுள்ள
நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களும் எவ்வித விவாதங் களும் இன்றி முடக்கப்பட்டுவிடும்
என்றே தெரிகிறது. ஐ.மு.கூட்டணி - 2 அரசாங்கம் சிறிது காலமாகவே, அரசி யலமைப்புச் சட்டத்தின் கீழ் நாடாளு மன்றத்திற்குப் பதில் சொல்ல
வேண்டிய பொறுப்பைத் தவிர்த்துக் கொண்டே வருகிறது. இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின்படி நம் குடியரசின் மையமான மற்றும் முதன்மையான நோக்கமே மக் களின்
உயர்ந்தபட்ச இறையாண்மை யைப் பாதுகாப்பதில்தான் அடங்கி இருக்கிறது. இது
நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளால்
பிரயோகிக்கப்படுகிறது. இதனை அடுத்து, அரசாங்கம் நாடாளு மன்றத்திற்குத் தன் செயல்பாடுகள் குறித்துப் பதில்
சொல்லக் கடமைப்பட்டி ருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நாடாளு மன்றமும் மக்களுக்குப்
பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
இத்தகைய
நடைமுறையின் மூலமாகவே நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து வகையான அமைப்புகளின்
மூலமாகவும் மக்களின் உயர்ந்தபட்ச இறையாண்மை நடைமுறைப்படுத்தப்படுகிறது. சங்கிலித்
தொடர்போன்ற நம் அரசி யலமைப்பில் ஏதேனும் ஒரு கண்ணி உடைந்தாலும் அல்லது உடைக்கப்பட்
டாலும் பின்னர் ஒட்டுமொத்த அரசி யலமைப்பே மீறப்பட்டதாக ஆகிவிடு கிறது.
நாடாளுமன்றத்தின் நடவடிக்கை கள் முடக்கப்படுவதன் மூலமாக, அர சாங்கம் தன் பொறுப்பை நாடாளுமன்
றத்தின் முன் கூறாமல் தப்பித்துக்கொள் வதற்கான முயற்சிகளை அனுமதிப்பதன் மூலமாக
இப்போது இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.இப்போது நம்முன்னுள்ள பிரச்சனை, நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு
செய்ததில் நடைபெற்றுள்ள ஊழல் தொடர்பானதாகும். சட்ட அமைச்சர், மத்தியப் புல னாய்வுக் கழகம்(சிபிஐ)
நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு சம்பந்தமான ஊழல் புகார்கள் மீது விசாரணை நடத்த
வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கட்டளையிட்டதை யடுத்து சிபிஐ மீது செல்வாக்கு
செலுத்த முயற்சித்தார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக அரசாங்கம் விளக்கம் அளிக்க
வேண்டும் என்று சரியாகவே எதிர்க்கட்சிகள் கோரிக்கொண்டு இருக் கின்றன.
அரசாங்கம்
இதனை இதுவரை தவிர்த்து வருகிறது. பிரதமரும் சட்ட அமைச்சரும் இது தொடர்பாக தங்கள்
நிலையினை விளக்கி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
என்றும் அவற்றின்மீது உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும் இதற்கு
அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இடது சாரிக் கட்சிகள் வலியுறுத்திக்
கொண்டி ருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இக்கோரிக்கைக்கு ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால் இப்போது
பிரதமரும் சட்ட அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்கள் நிலை யை மாற்றிக்
கொண்டுள்ளது.
இவர்களு டைய கோரிக்கையுடன் அரசாங்கத்தின் பிடிவாதமும் சேர்ந்துகொண்டு
தற் போதைய முட்டுக் கட்டையை நீடிக்கச் செய்கின்றன. நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு
களில் சில தில்லுமுல்லுகள் தே.ஜ.கூட் டணி அரசாங்கக்காலத்திலேயும் நடை பெற்றுள்ளன.
இந்த வாரம் நாடாளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலக்கரி மீதான நாடாளுமன்ற
நிலைக்குழு அறிக்கையில் இவை தில்லுமுல்லுகள்தான் என்கிற விதத்தில்
சந்தேகத்திற்கிடமின்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரிணாமுல்
காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் தலை மையில் அமைந்திருந்த இக்குழுவானது, நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்த
தில் நடைபெற்றுள்ள அனைத்துவிதமான முறைகேடுகளையும் மிகவும் ஆதாரங்க ளோடு பதிவு
செய்திருக்கிறது. இதில் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி அரசாங்கக்காலத்தில் நடைபெற்ற
வைகளும் அடங்கி இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில், வாஜ்பாய் அரசாங்கத்தில் நிலக்கரி
அமைச்சராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார் என்ப
தாகும். இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் அமைந்த
குழுவின் அறிக்கையானது அவரது கட்சித் தலைவர் மீதே குற்றம் சாட்டி இருக்கிறது.
ஆயினும், இவ்வாறு அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதி லும், அரசாங்கமும் இப்பிரச்சனை மீதான புலனாய்வுகளில் மத்தியப் புலனாய்வுக்
கழகம் (சிபிஐ) மீது செல்வாக்கு செலுத்த வில்லை என்றும் தாங்கள் அப்பழுக்கற்ற
வர்கள்தான் என்றும் மெய்ப்பிக்க முன்வர வேண்டியது அவசியமாகும்.
தன்னுடைய
சிறுபான்மை அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மத்தியப் புல னாய்வுக்
கழகத்தைத் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கெல்லாம் மிகவும் இழி வான முறையில்
பயன்படுத்திக்கொள் கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் அரசாங் கத்தின் மீது அடிக்கடி
சுமத்தப்படுவதால், அரசாங்கம்
இவ்வாறு தன்னை அப்பழுக் கற்றவராகக் காட்டிக்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆயினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல் மீதான
நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையானது, அதன் தலைவரால் ஒருதலைப்பட்சமாகத் தயார் செய்யப்பட்டு சுற்றுக்கு
விட்டிருப்பதி லிருந்து, ஐ.மு.கூட்டணி
அரசாங்கமானது மீண்டும் ஒருமுறை தன் பொறுப்புக்களி லிருந்து
நழுவிக்கொண்டிருக்கிறது. நாட்டில் நடைபெற்றுள்ள மெகா ஊழலில் இருந்து பிரதமரையும்
நிதியமைச்சரையும் காப்பாற்றக்கூடிய விதத்தில் அனைத்தை யும் மூடிமறைத்து இந்த
அறிக்கை தயாரிக் கப்பட்டுள்ளது. மத்தியத் தணிக்கைத் துறைத் தலைவர் (சிஏஜி)-இன்
அறிக்கை யின்படி நாட்டின் கருவூலத்திற்கு வந் திருக்க வேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பிற்கு டெலிகாம்
துறை யில் நடைபெற்ற அனைத்துக் கோளாறு களுக்கும் குளறுபடிகளுக்கும் அப் போதைய
டெலிகாம் அமைச்சர் ஆ. ராசா மட்டுமே பொறுப்பு என்று அறிக்கை குற்றம் சாட்டி
இருக்கிறது
திராவிட
முன் னேற்றக் கழகம் ஐ.மு.கூட்டணி அர சாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்
கொண்டிருப்பதாலும் அது கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்ட தாலும், காங்கிரஸ் கட்சியானது, டெலி காம் துறையில் நடந்த குளறுபடிகளுக்
கும், கோளாறுகளுக்கும் தாங்கள் எவ்
விதத்திலும் பொறுப்பு அல்ல என்று தங்க ளைத் தற்காத்துக்கொண்டு இதில் நடை பெற்றுள்ள
ஊழலுக்கு திமுகவின் ஆ.ராசா மட்டுமே பொறுப்பு என்று மிகவும் தைரிய மாகக் கூற முன்
வந்துள்ளது.நாடாளுமன்ற நிலைக்குழுவின் நடவடிக்கைகளிலிருந்து 2ஜி ஸ்பெக் ட்ரம் ஊழல், பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் அன்றைய டெலிகாம் அமைச்சர் ஆகிய மூவரின்
கூட்டு முடிவு என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. இவ் வாறு இந்த மாபெரும் மெகா
ஊழலுக்கு ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம்தான்
கூட்டாகப் பொறுப்பாகிறது.மேலும் இந்த அறிக்கையானது நாடாளுமன்ற நிலைக்குழு
உறுப்பினர் களுக்குப் போய்ச் சேருவதற்கு முன் பாகவே ஊடகங்களுக்குக் கசிய விடப்
பட்டுள்ளது. இவ்விதத்தில் இது நாடாளு மன்றத்தின் உரிமை மீறல் பிரச்சனைக்கு
உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவும் மாறிப்போயிருக்கிறது. நிலைக்குழுவில் நடைபெறும்
விவாதங்கள் மற்றும் அதன் மீதான அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக வெளி யாகக்கூடாது
என்பது நாடாளுமன்ற நடைமுறை விதியாகும். இந்த வழக்கில் இந்த நடைமுறை முழுமையாக
மீறப்பட் டிருக்கிறது. இதுவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்பட இருக்
கும் மற்றுமொரு பிரச்சனையாக உரு வெடுக்கும். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள்
இவ்வாறு முடக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
நாட்டின்
பெரும் பான்மையான மக்களின் வாழ்வாதாரங் களைப் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்ச னைகள்
குறித்து நாடாளுமன்றம் விவா தித்து, அவற்றின் மீது பல்வேறு நட வடிக்கைகளை எடுத்திட அரசாங் கத்திற்கு
நிர்ப்பந்தம் அளித்து, அதன் மூலம்
மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டியதிருக்கிறது. மக்கள் வாழ்வாதாரங்கள் மற்றும்
பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்ச னைகளை எழுப்பமுடியாத விதத்தில் நாடாளுமன்றம்
இவ்வாறு முடக்கப்படும் போது, மக்களின்
நலன்களைக் காத்திட அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் அளித்திடு வதற்கான ஒரே வழி மக்கள்
போராட் டங்களை முன்னெடுத்துச் செல்வது தான். வரவிருக்கும் காலங்களில் இவை
வலுப்படுத்தப்பட வேண்டியது அவசிய மாகும்.நாடாளுமன்றம் நடைபெறாது இவ் வாறு முடக்கப்படுவதன்
மூலம், அரசாங் கம் மக்களுக்குப் பதில் சொல்லும்
பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு
உட்படுத்தாமலேயே பல கொள்கை முடிவுகளை மேற்கொண்டு அமல்படுத்திடவும் துணிந்துவிடும்.
இது மிகவும் ஆபத்தானதாகும்.தற்போது நாடாளுமன்றத்தின் முன் ஆய்வுக்காக நிலுவையில்
உள்ள நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட கொள்கை முடிவுகள்
அனைத்தும் அரசாங்கத்தின் நிர்வாக முடிவுகளாக வெளிவரக்கூடும்.
இதனை
எக்காரணம் கொண்டும் அனுமதித்திடக் கூடாது. இந்த அரசாங்கமானது, நிதித் துறையில் நவீன தாராளமய
சீர்திருத்தங் களை முன் னிலும் பன்மடங்கு வேகமாக உந்தித் தள்ள அனைத்து ஏற்பாடுகளை
யும் செய்து விட்டது. ஏற்கனவே ஏழை களுக்கு அளித்து வந்த அற்பசொற்ப மானியங் களையும்
முழுமையாக இல்லாதொழிக் கத்தக்க விதத்தில், ஐரோப்பிய யூனியனு டன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துள் ளது
போன்று அந்நிய நேரடி முதலீட்டை நாட்டிற்குள் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் அது
செய்து வைத்திருக் கிறது. இவை அனைத்துப் பிரச்சனைகள் மீதும் விழிப்புடனிருந்து
செயல்பட வேண் டியது மிகவும் அவசியமாகும். இத்தகைய சூழ்நிலையில் நம் நாட்டில்
மாற்றுக் கொள்கைத் திசைவழிக்கான மக்கள் போராட்டங்கள் மேலும் வலுப் படுத்தப்பட
வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய மாற்றுப் பாதைக் கான போர்
முழக்கப் பயணத்தின் போது அது முன்வைத்த மாற்றுக் கொள்கைக் காக நாட்டில்
சுதந்திரத்திற்கு முன் நடை பெற்ற பிரம்மாண்டமான ஒத்துழையாமை இயக்கக் குணாம்சம்
போன்று அடுத்த மே மாதத்தின் கடைசி இரு வாரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு
அகில இந்திய அளவில் முற்றுகைப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்த இயக்கத்தின் பலம்தான்
ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் மேலே குறிப்பிட்ட அனைத்து மக்கள் விரோத நடவடிக்கை
களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான தடையாக அமைந்திட முடியும். இவ்வாறு
சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்காக, நம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு சிறந்த வாழ்வாதாரங்களை
வழங்கிடுவதற்காக, நாம்
நடத்தவிருக்கும் முற்றுகைப் போராட்டம் வெற்றி பெறுவ தோடு மட்டும் நின்றுவிடாது, அரசாங்கம் போய்க் கொண்டிருக்கும்
கேடுகெட்ட பாதையில் மேலும் போகாதவாறு தடுத்து நிறுத்தக்கூடிய விதத்திலும் வலு
வானதாக அமைந்திட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment