மேற்குவங்கத்தில்
தேர்தலுக்குப்பின் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்று வரும் வன்முறைச்
சம்பவங்கள், வரலாற்றில் இதற்குமுன் கூறப் பட்டுவந்த பல கொடூரக்கதைகளை எல்லாம்
வெட்கித் தலைகுனிய வைத்துவிட்டன. மக்கள் `அபரிமிதமானமுறையில் வெற்றிதேடித்
தந்திருக்கிறார்கள்’ என்று பத்திரிகை களில் கட்டுரைகள் எழுதுவோர் வர்ணித்துள்ள
பின்னணியில்தான் விவரிக்கமுடியாத அளவிற்கு இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
திரிணாமுல் காங்கிரஸ்
தலைவியும், மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப் பட்டிருப்பவரும், தேர்தலுக்கு
முன் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில், “நாங்கள்மீண்டும்
ஆட்சிக்கு வந்தால், எங்களுக்கு எதிராக இருந்த மக்களுக்கும், எதிர்க்கட்சி
களுக்கும் `அங்குலம் அங்குலமாக’ பாடம் புகட்டுவோம் என்று கூறி வந்தார். `தேர்தல்
நடத்தை விதி’யின் கீழ் மாநிலத்தில் தேர் தலை நேர்மையாகவும் நியாயமாகவும்
நடத்தவேண்டும் என்பதற்காக செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையத்தையும் அதிகாரிகளை யும்
கூட மம்தா எப்படியெல்லாம் மிரட்டி வந்தார் என்பதை அனைவரும் அறிவார்கள்.
அதுமட்டுமல்ல, திரிணாமுல் காங்கிரஸ் அணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே யான
வித்தியாசம் என்பது வெறும் 32 லட்சம்வாக்குகள் என்பதை ஊடகங்கள் வசதியாககண்டுகொள்ள
மறுக்கின்றன. ஆனால் திரிணாமுல் காங்கிரசுக்கு இந்த உண்மைநன்கு தெரியும்.
இதனால்தான் எதிர்க்கட்சி யினர் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து
விட்டிருக்கிறது. முழுக்க முழுக்க ஓர் எதேச்சதிகார ஆட்சியை மாநிலத்தில் நடத்தத்
துவங்கி இருக்கிறது. இத்தகு ஆட்சியை தேர்தலுக்கு முன்பே அது தொடங்கிவிட்டது.
இப்போது மேலும் மோசமான முறையில் இறங்கி இருக்கிறது.
வன்முறையின் கோர
வடிவங்கள்
மாநிலத்தில் சட்டத்தின்
ஆட்சி என்பது கற்பனையான ஒன்றாக மாறிவிட்டது என்பது தெள்ளத் தெளிவாகும்.
மாநிலத்தில் நியாயமான மற்றும் நேர்மையான தேர்தல் நடத்திட முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்ட போதிலும், தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியைச் சேர்ந்த நான்கு ஊழியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள் என்பது
உண்மை. இதை எவரும் மறுக்க முடியாது. இந்த ஒவ்வொரு கொலையும், எதிர்க்கட்சிகளை,
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினரையும் இடதுசாரிகளையும் அடிபணிய
வைத்திட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டவைகளாகும். வாக்காளர்களை நன்கு தெரிந்து
வைத்திருந்த வாக்குச்சாவடி முகவர்களைக் குறிவைத்து வன்முறை ஏவப்பட்டது. காரணம்,
இதன்மூலம் வாக்காளர்களை மிரட்ட வேண்டும் என்பதே திரிணாமுல் கட்சியினரின்
நோக்கமாகும்.
அநேகமாக இந்த வழக்குகள்
அனைத்திலுமே, காவல் நிலையத்தில் அளித்த புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள
கொலையாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஒரு பயங்கரமான நிலைமையை உரு வாக்கி
மக்களை அச்சுறுத்தும் சூழல் இருந்தபோதிலும், மக்கள் மத்தியில் இவற்றைப்
புறந்தள்ளிவிட்டு வாக்களிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது.
தேர்தல்
தேதிகள்அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்து தேர்தல்
ஆணையத்தால் நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்ட போதிலும், மாநிலத்தில் நிலவிய பயங்கரவாத
நிலைமை முற்றிலுமாக சரிசெய்யப்பட்டது என்று சொல்ல முடியாது. மாநிலத்தின் 20
மாவட்டங்களிலும் நான்குமுனைகளிலும் இடதுசாரிகளுக்கு எதிராகஇந்த வன்முறைச்
சம்பவங்கள் தலைவிரித் தாடியபோதிலும், இதில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய
அம்சம் என்ன வெனில், எங்கெல்லாம் திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் அராஜகங்களையும்
மீறி எதிர்க் கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றனவோ, அது சட்டமன்றத் தொகுதியாக
இருந்தா லும் சரி, அல்லது நகராட்சி வார்டுக்கான பகுதியாக இருந்தாலும் சரி, அல்லது
பஞ்சாயத்து அல்லது தனியொரு வாக்குச்சாவடியாக இருந்தாலும் சரி, அங்கெல்லாம்தான்
இவர்கள் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். இவர் களுடைய
தாக்குதலின் முக்கிய நோக்கம், தங்களுடைய அடாவடித்தனத்திற்கு எங்கெல்லாம் எதிர்ப்பு
வருகிறதோ அதனை வளரவிடாமல் அதன் கழுத்தை நெரித்திட வேண்டும் என்பதேயாகும்.அதிலும்
குறிப்பாக, ஜாதவ்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றுள்ள வெறியாட்டங்களைப்
புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியமாகும்.
2011 சட்டமன்றத்
தேர்தலில், இத்தொகுதியில் புத்ததேவ் பட்டாச்சார்யா 30 ஆயிரம் வாக்குகளுக்கும்
மேலான வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலின்போதும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில்
பின்தங்கி இருந்தார். கொல்கத்தா மாமன்றத் தேர்தலின்போது பல வார்டுகளின் வாக்குச்சாவடிகளில்
நடைபெற்ற மோசடிகள், இடதுசாரி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவதற்குக் காரணங்களாக
அமைந்தன. ஆனால், இந்தமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு
உறுப்பினரான டாக்டர் சுஜன் சக்கரவர்த்தி, சுமார் 15 ஆயிரம் வாக்குகள்
வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் மொத்தம் உள்ள பத்து
நகராட்சி வார்டுகளில் ஒவ்வொன்றிலும் முன்னணியில் வந்திருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரசின்
அராஜக நடவடிக்கைகளை வலுவாகத் தடுத்து நிறுத்தியதும், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட
நடவடிக்கைகளும்தான் இதற்குக் காரணங்களாகும். சுஜன் சக்கர வர்த்தி, திரிணாமுல்
காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த முன்னாள் உள்துறை அமைச்சரும், மின்துறை
அமைச்சராக வரவிருந்தவருமான ஒருவரைத்தான் தோற் கடித்திருந்தார். தேர்தல் முடிவுகள்
வெளி யான பின்னர் முதலமைச்சர் மம்தாவால் இதனை நம்பவே முடியவில்லை, `இது குறித்து
ஆராய வேண்டியது அவசியம்’ என்றுஎழுதினார்.
இதனைத் தொடர்ந்துதான்
அங்கேவன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மீது மட்டுமல்ல, சாமானிய
வாக்காளர்கள் மீதும் கூட வன் முறை கடுமையாக ஏவப்பட்டது. வீடுகள் தாக்கப்படுவதும்,
கட்சி அலுவலகங்கள் கைப்பற்றப்படுவதும் தற்போது தினசரி நிகழ்வுகளாகி விட்டன. மற்றொரு
முக்கியமான பகுதி, தொழில்நகரமான ஹால்டியா. இதற்குப் பக்கத்தில் தான் நந்திகிராம்
இருக்கிறது. இந்தப் பகுதி யில் கட்சியும், இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரசார்
ஏவிவிட்ட வன்முறைகளை மட்டுமல்ல, மாறாக மக்கள் விரோத மற்றும் கட்சி விரோத
நடவடிக்கைகளுக்காக கட்சியி லிருந்து வெளியேற்றப்பட்ட, நாடாளுமன்ற முன்னாள்
உறுப்பினரும், கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினருமான லெக்ஷ்மண் சேத்
என்பவர் தொடங்கியிருந்த புதிய கட்சியின் சீர்குலைவு வேலைகளையும் எதிர்கொள்ள
வேண்டியிருந்தது.
ஆயினும், இவை அனைத்தையும்
முறியடித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான தபசி மண்டல் என்னும்
பெண்மணி 10 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
எனவேதான், இந்தப் பகுதி மேற்படி திரிணாமுல் குண்டர்களின் தாக்குதலுக்கு குறிப்பாக
ஆளாகி இருக்கிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றஉறுப்பினரின் வீடு உட்பட
வகைதொகையற்றவிதத்தில் வன்முறையில் இறங்கி இருக்கின்றனர்.
இதேபோன்று எல்லா
இடங்களிலும் இவர்கள் தாக்குதலைத் தொடுத்திருப் பதைக் காண முடியும்.மாநிலம்
முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்கள்
வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, சின்னாபின்னமாக இடிக்கப்பட்டுள்ளன.கட்சித்
தலைவர்கள், வெகுஜன அமைப்பின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்
கப்பட்டுள்ளவர்கள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் உட்பட எவரையும் இவர்கள்
விட்டு வைக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கடுமையான முறையில் தோற்றுள்ள இடங்களில்
வாக்காளர்களிடம் அதீதமான தொகையை அபராதமாக வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அபராதத் தொகையைத்தரவில்லையெனில் உயிரையும் உடைமை யையும் உங்கள் குடும்பத்தாரையும்
விட்டு வைக்க மாட்டோம் என்று மிரட்டி வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். வன்முறை
வெறியாட்டங்கள் சம்பந்தமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவெனில்,
அரசியல்ரீதியாக மிகவும் மோசமானமுறையில் பழிவாங்கும் விதத்தில் குற்றங்களில்
ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிராக காவல்துறையினர் எவ்வித நட வடிக்கையும் எடுக்க
மறுப்பதாகும். இதற்கான காரணங்களைக் காண்பது அப்படி ஒன்றும் கடினமல்ல. தேர்தலுக்கு
முன்னர் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தபோது தேர்தல்ஆணையத்தால் மாற்றப்பட்ட
சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேர்தல் முடிந்தவுடனேயே மீண்டும் தாங்கள்
முன்பு வேலை பார்த்த இடங்களுக்கே மாற்றப்பட்டு வந்துவிட்டார்கள்.
அதே போன்றேதேர்தலில்
தோற்கடிக்கப்பட்ட முன்னாள்அமைச்சர்களில் பலர் முன்பு தங்களின் பொறுப்பிலிருந்த
துறைகளில் உயர் பதவி களில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, மேற்குவங்க
மாநிலத்தில் நடைபெற்றுவரும் வன்முறை வெறியாட்டங் களுக்கு எதிராக ஒற்றுமையும்,
தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளும் வளர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றன.
எதேச்சதிகாரம் நிரந்தரமாக இருக்க முடியாது. மத்திய - மாநில அரசாங்கங்களின்
கொள்கைகள் நிச்சயமாக மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரங் களை நிச்சயமாகவும்
கடுமையாகவும் பாதிக் கும். ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமும், மக்கள்
விரோதக் கொள்கை களுக்கு எதிரான போராட்டமும், குடிமை உரிமைகளை மீட்டெடுப்பதற்கான
போராட்டமும் ஒன்றுக்கொன்று கைகோர்த்து முன்னேற வேண்டியவைகளாகும். இதனை மனதில்
கொண்டுதான், சமீபத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல்
தலைமைக்குழு மிகவும் தெளிவான தோர் அறைகூவலை விடுத்திருக்கிறது: மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி மேற்குவங்க மக்களுக்கு மாநிலத்தில் மேற் கொள்ளப்பட்டிருக்கும்
ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகள் மீதான படுகொலையை ஒன்றுபட்டுநின்று தடுத்திட
முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது. மக்கள் ஒற்றுமையின் பலத்தின் மூல
மாகத்தான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையைத்
தடுத்திட முடியும். ’’
தமிழில்: ச. வீரமணி
No comments:
Post a Comment