மதிய உணவிற்காக க்ரீன் பார்க்கில்
உள்ள ஒரு உணவகத்திற்கு அனைவரும் சென்றார்கள். சிறுவர்கள் காலியாக இருந்த இருக்கைகளின்
மேல் தொப்பென குதித்து அமர்ந்தார்கள்.
இந்த இளஞ் சிறார்களைப் பார்த்ததும்
அடுத்த மேசையில் இருந்த ஒருவன் தனது பாட்டிலிலிருந்து பீரை கோப்பையில் ஊற்றினான். பிரதீப்
பார்த்துக்கொண்டே, “இந்த இடம் மிகவும் அழகாக
இருக்கிறது அல்லவா’’ என்று கேட்டான். பிரதீப்
அவனைப் பார்த்து தலையசைத்துக்கொண்டே சொன்னான், “அழகு
என்பது பீர் குடிப்பவரின் கண்களில் உள்ளது. அது ம்ட்டுமல்ல, மதுவின் இனிமையை அதைக்
குடிப்பவரை நோக்கினால் தெரியும் அல்லவா,’’ என்றான். எல்லோரும் புன்னகைத்தனர்.
சர்வருக்காக காத்திருக்கும்
வேளையில் அபி ஒரு நகைச்சுவைத் துணுக்கை சொன்னான்.
“ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை நன்கு பரிசோதித்தார்.
அதன் பின் சொன்னார், ‘எதனால் இந்த வியாதி உனக்கு வந்தது என எனக்கு சரியாகக் கண்டறிய முடியவில்லை. இது குடிப்பழக்கத்தினால் தோன்றியது போல் இருக்கிறது.’ இதைக்கேட்டவுடன் நோயாளி சொன்னார், ‘அப்படியென்றால்
உங்களுக்கு போதை தெளிந்தபின் நான் வருகிறேன்,’ என்று. இது எப்படி இருக்கு’’ என்று சிரித்தான்
அபி.
சர்வர் வந்தபிறகு அபி அவர்களுக்குத்
தேவையானவற்றை மெனு கார்டைப் பார்த்து பட்டியலிட்டான். மெனு கார்டின் கடைசியில் க்ரீன் பார்க் என்று எழுதப்பட்டிருந்தது. “இந்த
க்ரீன் பார்க் என்றவுடன் எனக்கு ஒரு வாகன உரிம அதிகாரியும் இந்திராபவனும் நினைவுக்கு
வருகிறது,’’ என்றான் அபி. “இந்திராபவனா?’’,
என்று அவனது சகோதரர்கள் ஆவலுடன் கேட்டார்கள். “ஆமாம்.
இந்திரா பவன்தான்’’ என்று சொல்லிவிட்டு அந்த வாகன உரிம அதிகாரியின் வீட்டைப் பற்றிக்
கூறினான் அபி.
“போக்குவரத்து துறையில் உரிமம் வழங்குபவர்களிடம்
உள்ள முறைகேடுகளைக் கேள்விப்பட்டுள்ளீர்களா?
எப்பொழுது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்ததோ, க்ரீன் பார்க்கில் இருந்த அந்த
அதிகாரியின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரது பதவி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் பதவிக்கு
இணையானது என்றாலும், அவரது வீட்டிற்குள் நுழைந்த
ஆய்வுக்குழு தங்கள் கற்பனைக்கு மீறிய பொருட்களை அந்த வீட்டில் பார்த்தனர். அதிர்ச்சிக் கடலில் மூழ்கினர். அதிகமாக ஊழல் செய்யும்
போலீஸ் அதிகாரி கூட இந்த அளவிற்கு சொத்து குவித்ததில்லை.
அவர்களது கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை. பலருக்கு அந்தப் போக்குவரத்து அதிகாரி
மேல் பொறாமை கூட ஏற்பட்டது.
தில்லியில் மிகவும் விலை அதிகமான
பகுதிகளில் க்ரீன் பார்க்கும் ஒன்று. இந்தப் பகுதியில் ஒரு சிறிய 1000 சதுர அடி கொண்ட
வீடு வேண்டும் என்றால் கூட ஒருவர் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். இத்தகு
பகுதியில் ஒரு போக்குவரத்து அதிகாரிக்கு சொந்த வீடு.
இது வெறும் அடுக்குமாடி குடியிருப்புதான்
என்று சொன்னால் அதன் தகுதியை குறைத்து எடைபோடுவது போலாகும். அது ஓர் அரண்மனை. ஒட்டுமொத்த
தரைதளம் ஐயாயிரம் சதுர அடியிருக்கும். உள்ளே சென்று பார்த்தால், ஒரு பத்திரிகையாளர் சொன்னது
போல், அது இந்திரலோகம்தான். அந்த வீட்டின்
ஒவ்வொரு அங்குலமும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்களும்
அதிக விலையுடையது. எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டவை. ஒவ்வொரு ஃபர்னிச்சரும்
இறக்குமதி செய்யப்பட்டது. ஒவ்வொரு படுக்கை அறையிலும் குளிர்சாதன பெட்டி. படுக்கை அறை மட்டுமல்ல, குளியல் அறையிலும் கூட குளிர்சாதனப்
பெட்டிகள். அங்கிருந்த ஒரு புகைப்படம் அனைவரையும்
ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்தப் போக்குவரத்து
அதிகாரியின் மகள் தனது தலையில் ஒரு வைர கிரீடம் அணிந்திருந்தாள். ஓர் இளவரசி போல் அந்த
புகைப்படத்தில் அவள் காணப்பட்டாள்.
இவ்வளவு சொத்தை வெளிப்படையாகக்
காட்டினால், தெரியாமல் அந்த அதிகாரி எவ்வளவு சொத்தை பதுக்கி வைத்திருப்பார்? நகைகள்,
பணம், சொத்துக்கள், முதலீடு என்று எவ்வளவு இருந்திருக்கும்?
அந்த நேரத்தில் இதுதான் மிகவும்
பரபரப்பான செய்தி. பல்வேறு தொலைக்காட்சி சானல்கள் இந்த செய்தியை அடிக்கடி ஒளிபரப்பின.
எங்களது கல்லூரி கேண்டீனிலும் இதே பேச்சுதான்.
பல மூத்த மருத்துவர்கள் மற்றவரது இந்திராபவனைக் குத்திக் காட்டி கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்’’
அபியின் இந்தத் தகவலைக் கேட்டதும்,
“நம்பவே முடியவில்லை’’ என்றான் ரவி. அப்போது சர்வர் அவர்களது உணவைக் கொணர்ந்தார்.
…..
அன்று காலை அவர்கள் கண்விழித்தபோதே
சேகர் வீட்டில் இல்லை. காலை சிற்றுண்டிக்காக
அவர்கள் அமர்ந்திருந்தபோது அன்றைய திட்டத்தை சொன்னான் அபி. அன்று அவர்கள்
குதுப் மினாருக்கு சென்று, அதன் பிறகு மெரௌலியில்
கடைத்தெருவுக்குச் செல்லலாம். மதிய
உணவிற்கு க்ரீன் பார்க் செல்லலாம் என திட்டம். வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்னர்
ஏதாவது சினிமா பார்க்கலாம் எனத் திட்டமிட்டிருந்தனர். “இங்கிருந்து
மெரௌலிக்கு நாம் மெட்ரோவில் செல்லலாம்’’ என்றான்
பிரதீப். மெட்ரோ பயணத்தை நினைக்கும்போது அவன் உள்ளம் பூரித்தது.
கதவுகள் திறக்கின்றன...பயணிகள் வெளி வருகிறார்கள்... அதன்
பின் மக்கள் உள்ளே செல்கின்றனர்... கதவுகள் மீண்டும் தானாக மூடுன்றன.,.மெட்ரோ ரயில்
நகர்கிறது...மீண்டும் அடுத்த நிலையத்தில் கதவுகள் தானாக திறக்கின்றன...பயணிகள் வெளி
வருகிறார்கள்... மீண்டும் மீண்டும் இந்த செயல் திரும்புகிறது...ஸ்டேசனுக்குப் பின்
ஸ்டேசன்...
இப்பொழுது அவர்கள் குதுப் மினாருக்கு
அருகே வந்துவிட்டனர். குத்புதீன் அய்பெக்கின் வெற்றிச் சின்னமான 73மீட்டர் உயரம் கொண்ட
வெற்றி கோபுரத்தை பார்த்த சகோதரர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். அவர்கள் இதற்கு முன்பு இவ்வாறு கற்பனை கூட செய்து
பார்த்ததில்லை. அவ்வளவு பெரிய கோபுரத்தின்
முன் அவர்கள் சின்னஞ்சிறுவர்களானார்கள். அந்தக் கோபுரத்தைப் பற்றி அங்குள்ள சுற்றுலா
வழிகாட்டி கூறினார், “முன்பெல்லாம் இதற்குள்ளே
எல்லோரையும அனுமதித்தனர். சில ஒளிவீச்சுக்களாலும் பழுது சரிபார்த்தலாலும் கட்டிடம்
பலவீனமடைந்தது. மேலும் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதனால் இப்பொழுது யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தக் கோபுரத்தைக் கட்டி 800 ஆண்டுகள் ஆகிறது.’’ என்றார்.
சிறுவர்களின் மனம் குத்புதீன்
ஐபெக்கின் காலத்திற்குத் தாவியது. அதன் பின்
குப்தப் பேரரசின் மன்னனான இரண்டாம் சந்திர குப்த விக்ரமாதித்தியரால் நிறுவப்பட்ட
7 மீட்டர் உயரம் கொண்ட துரு பிடிக்காத இரும்புத் தூணை அவர்கள் கண்டனர். அந்த வழிகாட்டியின் வர்ணனைகளும் அந்த இடத்தின் புராதனமும்
அவர்கள் பள்ளிக்காலத்தில் படித்த வரலாற்றிற்கு அவர்களை இழுத்துச் சென்றன.
அவர்கள் அதன் பின் மெரௌலி மார்கெட்டுக்குச்
சென்றார்கள். அதனருகில் உள்ள பண்ணை வீடுகளை
அவர்களிடம் காண்பித்தான் அபி. ஊழல் பணம் எவ்வாறெல்லாம்
அந்த வீடுகளில் முதலீடு செய்யப்படுகிறது என அவனது அப்பா அவனுக்கு பல முறை விவரித்துள்ளதைக்
குறிப்பிட்டான் அபி. அங்கு சில நேரம் சுற்றிய பிறகு அவர்கள் க்ரீன் பார்க்கிற்கு சென்று
அங்குள்ள உணவகத்திற்குள் நுழைந்தார்கள்.
…..
அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
இந்திரா பவன் பற்றியும், எய்ம்ஸ் பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டே தங்களது மதிய உணவை
முடித்தார்கள். அதன் பின் அவர்கள் அருகிலிருக்கும்
தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார்கள்.
இதற்கிடையில் கடைத்தெருவிற்கு சென்ற சுமனும் ரேகாவும் வீடு திரும்பினர்.
சிறுவர்கள் மாலையில் வீட்டிற்கு
சென்றனர். அவர்களை கண்டதும் புஜ்ஜி ஓடி வந்து
அவர்களை நோக்கி வளைந்தது. அதைப் பார்த்து ஃப்ருட்டி
செல்லமாகக் குலைத்தது. அபியின் கைகளில் ஏதேனம்
இருக்கிறதா என புஜ்ஜி தேடியது. குதுப் மினாரில்
கிடத்த சுற்றுலா ஏட்டை அதனிடம் கொடுத்தான்
அபி. அதனைத் தன் வாயில் கவ்விக்கொண்டு புஜ்ஜி
வீட்டிற்குள் ஓடியது. தனது பங்கிற்கு, எப்போதும் போல் பெங்குவின் ஸ்டைலில் அமர்ந்திருந்தது ஃப்ருட்டி. தனது நாக்கை நீடடி, காதை விறைப்பாக்கி, வாலை இங்கும்அங்கும் ஆட்டியது. அது தனது அன்பை தேடுகிறது என்பதை உணர்ந்த அபி, அதனைக்
கையில் எடுத்து அதன் முதுகில் செல்லமாகத் தட்டினான். இதைப் பார்த்ததும பாப்லுவும் ஓடிவந்தது.
அதனை பிரதீப் தூக்கி வைத்துக்கொண்டு அதனுடன் விளையாடினான்.
“ஹாய் அம்மா. ஹாய் மாமி. நீங்கள்இரண்டு
பேரும் இன்று என்ன செய்தீர்கள்,’’ என்று கேட்டான் ப்ரதீப்.
“சற்று
நேரத்திற்கு முன்புதான் நாங்கள் இருவரும் கமலா நகரில் ஷாப்பிங் முடித்துவிட்டு வந்திருந்தோம். பேரம் பேசாத கடைகளுக்கு உங்கள் அத்தை என்னை அழைத்துச்
சென்றார். எல்லாம் நிர்ணயித்த விலைதான். நல்ல
குறைந்த விலைக்கு வாங்கியிருக்கலாம் என்று நாம் பின்னர் எண்ண வேண்டியதில்லை. அது இருக்கட்டும். உங்கள் பயணம் எப்படி?’’ என்றார்
சுமன்.
“நன்றாக
இருந்தது அம்மா. நீங்கள் குதுப் மினார் பார்த்திருக்கிறீர்களா,’’ என்றான் ப்ரதீப்.
“நாங்கள்
திருமதி சுப்ரமணியத்துடன் செல்கிறோம்’’
வேக வைத்த சோளத்தை அவர்களுக்காக
கொண்டுவந்தார் ரேகா. அதை உண்டுகொண்டே சிறுவர்கள்
டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன்
சேர்ந்து புஜ்ஜியும் டி.வி. பார்த்தது. ஃப்ருட்டியும் பப்லுவும் ஒன்றோடொன்று இணைந்து
செல்லங் கொஞ்சிக் கொண்டிருந்தன.
இரவு உணவு நேரத்தின்போதுதான்
சேகர் அங்கு வந்தார். அந்த செல்லப்பிராணிகளின் கொஞ்சல்களை தவிர்த்த பிறகு, அவர்கள்
அனைவரும் இரவு உணவிற்கு அமர்ந்தனர்.
தனது தங்கை மகன்களைப் பார்த்து,
“இன்று
பயணம் எப்படி?’’ என்றார் சேகர்.
“ மிகவும்
நன்றாக இருந்தது. குதுப் மினார், மெரௌலி, க்ரீன் பார்க் என எல்லா இடங்களுக்கும் சென்ற
பிறகு, நாங்கள் சினிமா பார்க்க சென்றோம்,’’ என்றான் பிரதீப்.
“வாவ்.
நல்லா சந்தோசமாக ஊர் சுற்றினீர்களா,’’ என்றார் சேகர்.
“ஆமாம்
மாமா. அது மட்டுமல்ல அங்குள்ள பண்ணை வீடுகளைப
பற்றியும், இந்திரா பவன் பற்றியும், போக்குவரத்து அதிகாரி பற்றியும் பல கதைகள் சொன்னான்
அபி.’’
“நாங்கள்
ஒரே ஒரு போக்குவரத்து அதிகாரியைத்தான் பிடித்தோம். ஆனால் எல்லா போக்குவரத்து அதிகாரிகளையும்
பிடிக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை. இங்குள்ள ஊழல் பொறியாளர்கள் போல் அவர்களும் மிகவும்
அழுக்கு ஆசாமிகள்,’’ என்றார் சேகர்.
‘மாமா. அரோராக்கள் எந்தப் பகுதியினவர்கள்?’
என்றான் ரவி.
‘ஏன்,’ எனக் கேட்டார் சேகர்.
“ஒன்றுமில்லை.
போபாலில் சில அரோராக்கள் நிறைய நிறுவனங்கள் வைத்துள்ளனர். அந்த பெயர் கொண்ட பல கடைகளை
நாங்கள் மெரௌலியில் பார்த்தோம்.’’ என்றான் ரவி.
“அரோராக்கள்
பஞ்சாபைச் சேர்ந்த வணிகர்கள். நில மாஃபியா
கும்பலால் கைப்பற்றப்பட்ட ஒரு அரோரா குடும்பத்தின் சொத்து பற்றி எனக்கு தற்போது நினைவு
வருகிறது. அந்த சொத்து ஒரு முதிய தம்பதியினருடையது’’ என்றார் சேகர்.
சேகர் இப்படி சொன்னவுடன் அடுத்த
கதையைக் கேட்க ஆயத்தமானர்கள் சிறுவர்கள்.
“சரி,
சரி அது பற்றி பின்பு சொல்கிறேன்,’’ என்றார் சேகர்.
“அதெல்லாம்
முடியாது மாமா, இப்போதே சொல்லவேண்டும்’’ என்று கெஞ்சினார்கள் சிறுவர்கள். சேகருக்கு வேறு வழியில்லை. தனது கதையை ஆரம்பித்தார்.
“தில்லியில்
நிலத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கிறது. இது தெரிந்து பல நில மாஃபியாக்கள் பல்வேறு இடங்களில்
நிலத்தைக் கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். இந்த வளங்கொழிக்கும் தொழிலை
செழுமையாக நடத்துவதற்கு அவர்களுக்கு போலீசும்
பல அரசு அதிகாரிகளும் உடந்தை. இவர்களுடன்
கைகோர்த்துக்கொணடு இந்த கொள்ளை கும்பல் அரசு நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
இது மட்டுமல்ல. தனியார் சொத்துக்களுக்கும் பாதுகாப்பில்லை. அப்படி பாதிக்கப்பட்டவர்களில்
அரோராக்களும் ஒருவர்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு
தில்லியில் நிலத்தின் விலை இவ்வளவு அதிகம் அல்ல.
அந்தக் காலத்தில் அரோரா மூன்று இலட்சம் ருபாய்க்கு ஓர் இடத்தை வாங்கி தன்னுடைய
சொந்த வீட்டைக் கட்டிக்கொண்டார். மிகவும் கஷ்டப்பட்டு
சேர்த்த பணத்தில் இந்த வீட்டை அவர் கட்டினார்.
தனது நாட்களை மிகவும் சந்தோஷமாக அந்த வீட்டில் கழித்தார். இப்போது அந்த வீட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய்
இருக்கும்.
ஓராண்டுக்கு முன்பு, ஒரு அழுக்குபடிந்த
பெண்மணி, சில குண்டர்களுடனும் ஒரு போலீஸ்காரனுடனும் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள். அவர்களது வருகை குழப்பத்தை விளைவிக்கவே, அவர்கள்
எதற்காக அங்கு நழைந்தனர் என்று அரோரா கேட்டார்.
“இந்த
இடத்தை நான் வாங்கியிருக்கிறேன். நீங்கள் இடத்தை காலி செய்யவும்,’’ என்று கிஞ்சிற்றும்
கவலை இல்லாமல் அந்தப் பெண் சொன்னாள். “இல்லை,
இந்த இடத்தை அவளுக்கோ அல்லது வேறு யாருக்குமோ விற்கவில்லை’’ என்று அரோரா கூறினார்.
உடனே அந்தப் பெண், “நீங்கள்
இந்த இடத்தின் சொந்தக்காரர் கிடையாது. இந்த இடத்தின் சொந்தக்காரரிடமிருந்து இதனை நான்
வாங்கியுள்ளேன். எந்த குழப்பமும் ஏற்படுத்தாமல் விரைவில் இந்த இடத்தை நீங்கள் காலி
செய்யவும்,’’ என்றாள் அந்தப் பெண். அவளுடன் வந்த குண்டர்கள், அங்கிருந்து சாமான்களை
தூக்கியெறிந்துவிட்டு அரோராவை வீட்டைக் காலி செய்ய நிர்ப்பந்திக்கத் தொடங்கினர். அரோராவிற்கு
என்ன செய்வதென்றே தெரியவில்லை. வந்திருந்த போலீஸ்காரரை நோக்கி, “ஐயா,
இது எங்கள் வீடு. நாங்கள் இதை யாருக்குமே விற்கவில்லை. இந்த வீட்டை வேறு ஒருவரிடமிருந்து
வாங்கியதாக இந்த அம்மாவால் எப்படி சொல்லமுடியும்,’’ என்றார் அரோரா.
உடனே அந்த போலீஸ்காரர், “இங்கே
பாருங்கள். நீங்கள் யாரிடமிருந்து இந்த இடத்தை வாங்கினீர்களோ அவரது மனைவி, இந்த இடத்திற்கு
நீங்கள் போதிய பணம் தரவில்லை என்று கூறி தற்போது ஒரு புகார் அளித்துள்ளார். உங்கள்
ஒட்டுமொத்த குடும்பத்திற்கு எதிராகவும் ஒரு புகார் கூறப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும்
இப்போது குற்றவாளிகள்,’’ என்றார்.
அரோரா அதிர்ந்துவிட்டார். “ஐயா,
நாங்கள் அந்த விதவைக்கு பேசிய பணத்தை சரியாகத்தான் கொடுத்தோம். எங்கள் பெயரில் இந்த
சொத்து முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்படியிருக்க நாங்கள் எப்படி ஏமாற்றமுடியும்?’’ என்றார்.
உடனே அந்த போலீஸ்காரருக்கு கோபம்வந்தது.
“நீங்கள்
ஏமாற்றியதற்கான எல்லா ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. இப்போது அந்த மூதாட்டி தனது இடத்தை
இந்த பெண்ணிற்கு விற்றுவிட்டாள். நீஙகள் வீட்டைக் காலி செய்துதான் ஆகவேண்டும். உங்களுக்கு
வேறு வழியில்லை,’’ என்றார் கண்டிப்புடன். அரோராவுக்கு
என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஓவென்று அழ ஆரம்பித்தார்.
அதிர்ச்சியுடன் ரவி கேட்டான், “மாமா,
அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது அரோராக்களும் அன்று முதலாளியாக இருந்த வயோதிகனும்.
இன்று அவர் இறந்து விட்டார். இருபத்தைந்து வருடங்களுக்கப் பிறகு அவரது விதவை அளிக்கும்
புகாரை வைத்து அவர்களால் எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்?’’.
“அது
தான் இந்தப் பிரச்சினையின் முக்கிய கரு. தவறான தகவல்களையும் போலி ஆவணங்களையும் வைத்து போலீஸ் ஒரு வழக்கு பதிவு செய்தது. அரோராவிடம்
ஆராய்ந்து உண்மையைக் கண்டறிய அவர்கள் முயற்சி செய்யவில்லை,’’ என்றார் சேகர்.
“இதன்
பின்தான் அரோராக்களுக்கு உண்மையான பிரச்சினையே ஆரம்பித்தது. என்ன நடக்குமோ என்ற பயத்தில்,
அவர் போலீஸ்காரரைக் கெஞ்சி இந்த சிக்கலை தீர்க்க தனக்கு சற்று அவகாசம் கேட்டார். மனமே இல்லாமல் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன் பின்
அரோராக்கள் அங்கும் இங்கும் பித்துபிடித்தது போல் அலைந்தனர். நீதிமன்றத்திற்கு சென்று முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர்.
ஆனால் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. இந்த விஷயத்தில் தலையிட கீழமை நீதிமன்றம் மறுத்தது.
நம்பிக்கையுடன், அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். அவர்கள் பக்கம் சிறிது நம்பிக்கை துளிர்த்தது. அவர்கள் கைதாகாமல் இருக்க இடைக்கால தடை கிடைத்தது.
அவர்களுக்கு சிறிது அவகாசம் கிடைத்தது. ஒரு சிலரின் உதவியுடன் அவர்கள் இலஞ்ச ஒழிப்பு
துறையை அணுகினர். அங்கு தங்கள் குறைகள் அனைத்தையும் கொட்டினர்.
துணிந்தவருக்கு துக்கம் இல்லை.
அதனால் அதிர்ஷ்டம் அவர்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கியது. நல்ல மனசாட்சியுள்ள ஒரு
அதிகாரியிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது. அவர் ஒவ்வொன்றாக தோண்டித் துருவி விசாரணை
செய்ய ஆரம்பித்தார்.
அரோராக்கள் ஆவணங்களை ஒவ்வொன்றாக
அவர் ஆராயத் துவங்கினார் - விற்பனை ஆவணம், நிதியளித்த ரசீதுகள், உடைமையாளர் ஆவணம், மின்சாரக் கட்டணங்கள், தண்ணீர் வரி, மற்றும்
வீட்டு வரி ஆகிய அனைத்தையும் சோதித்தார். எல்லாம் மிகச்சரியாக இருந்தன. எதனால் இவர்கள் மேல் வழக்கு போடப்பட்டது என்று அவர்களால்
புரிந்துகொள்ளவே முடியவில்லை. இத்தனை ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு மோசடி வழக்கு அவர்கள் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகக் கவனமாக சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதில்
அவர் தெளிவாக இருந்தார்.
புலன்
விசாரணையில் ப்ல உண்மைகள் வெளிவந்தன. அரோராவிடம் சண்டை போட்ட அந்த அழுக்குப் பெண்மணி,
வீட்டை அரோராவிற்கு விற்றவரின் விதவையிடம்
வேலைக்காரியாக பணிபுரிந்தவள். ஒரு சேரியில் வாழ்ந்துகொண்டிருப்பவள். அவள் அந்த விதவையிடம் 45 இலட்ச ரூபாய்கள் கொடுத்து இந்த இடத்தை வாங்கியிருக்கிறாள். வட்டியில்லா கடன் அவளுக்கு ஒருவர் கொடுத்ததாக அவள் வாதாடினாள். அந்த மனிதர் அவளுக்கு சொந்தமோ
பந்தமோ கிடையாது. எந்தவிதமான வணிகத்தொடர்பும் அவர்களுக்குள் கிடையாது. அப்படியிருக்க
யாரோ ஒருவர் அந்தப் பெண்மணிக்கு ஏன் இவ்வளவு பணம் கொடுக்கவேண்டும்? இந்த வழக்கின் மீதுள்ள
உண்மையை அறிய போலீஸ் என்ன முயற்சிகள் எடுத்தது என்ற கேள்விகள் அந்த புலனாய்வு அதிகாரிக்கு
எழுந்தன.
இது கண்டிப்பாக ஏதேனும் ஒரு
நிலமோசடிக் கும்பலின் வேலைதான் என்று அவருக்குப் புலப்பட்டது. இதில் காவல்துறையினருக்கும்
பங்குள்ளதும் புலப்பட்டது. தனது அறிக்கையை அவர் தெளிவாக சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கை காவல்துறை ஆணையரை
அடைந்தது. இம்முறை அதிர்ஷ்டம் அரோராக்களின் பக்கம் இல்லை. காவல்துறை ஆணையர் அவர்களுக்கு
எந்த நிவாரணமும் வழங்க வில்லை. அவர்களது போராட்டம்
தொடர்ந்தது. வழக்கு பல ஆண்டுகள் நீடித்தது. அவர்கள் இங்கும் அங்கும் ஓடினார்கள். கடைசியில்
காவல்துறையினர்தான் பொய் வழக்கு போட்டனர் என்று மெய்ப்பிக்கப்பட்டது.
தாங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லை
யெனினும், நீதிக்காக அவர்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. எப்பொழுது கைதாவோம் என்ற அச்சம் வேறு. அவர்களது
விடாமுயற்சிதான் அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தது.’’ என்றார் சேகர்.
“தனக்கு
தீங்கிழைத்த அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டுமானால் அவர்கள் இன்னும் பல நீதிமன்றங்களுக்கு
செல்ல வேண்டியிருக்கும்,’’ என்றார் சேகர்.
இதைக்கேட்டுக்கொண்டிருந்த புஜ்ஜி
எல்லாம் புரிந்தது போல் தனது தலையை சிலிர்த்துக்கொண்டு எழுந்தது. அதனுடைய எலும்புத்துண்டை
வேறு யாரோ பிடுங்கிகொண்டு போனது போல் கனவு கண்டிருக்கும்.
“அடேயப்பா.
போலீஸ்காரர்கள் இவ்வளவு பெரிய கிரிமினல்களா. அவர்களது சேவை இல்லாமல் இருத்தலே நாட்டிற்குப்
பெரிய சேவை,’’ என்றான ரவி.
“ஆனால்
அது நிலையான தீர்வல்ல. மிகவும் நல்ல போலீஸ்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பல அரசுத்துறைகளிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்துதான் உள்ளனர். ஒரு சில இராட்சசர்களும்
அங்கு உண்டு. இதற்கு உண்மையான தீர்வு என்னவென்றால், இலஞ்ச ஒழிப்புத்துறையை, இத்தகு
துறைத்தலைமையிடமிருந்து தனியாகப் பிரித்து,
ஏதாவது ஒரு சுதந்திர முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். லோக்பால் அல்லது லோகாயுக்தா போன்ற
முகமைகளிடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐ-யும், ஊழலுக்கு எதிரான
துறையும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் செல்லவேண்டும். அப்பொழுதுதான் நல்ல பலன் கிடைக்கும்,’’
என்றார் சேகர்.
அதன் பின் அவர்கள் அனைவரும்
அமர்ந்து டி.வி. பார்த்தனர். முதல் நாள் இரவு சம்பவம் குறித்து, ரவி கேட்டான், “மாமா,
நேற்று இரவு நீங்கள் சென்றவுடன் இது குறித்து நான் நெடுநேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் என்னால் தீர்வு காண முடியவில்லை. நன்கு சிந்தித்தால் நம்பிக்கையின்மையே ஏற்படுகிறது. நீங்கள் சொன்னது போல் குடும்பம், சமூகம், மதம் மற்றும்
நீதிமுறை ஆகிய அனைத்தும் குற்றத்தைத் தடுக்கத் தவறிவிட்டன. இதற்கு மாற்றுதான் என்ன?’’
இதைக்கேட்டவுடன் சேகர் மெல்ல
நகைத்தார். அவனது இளம் மூளையின் செயல்பாடு குறித்து அவருக்கு ஆச்சர்யம். “அது
ஒரு மாபெரும் செயல். ஆனால் அதற்கு ஒட்டுமொத்த
சமூகமும் ஈடுபட வேண்டும். பலருக்கு பல எண்ணங்கள்
உதித்தாலும் உருப்படியாக எந்த எண்ணமும் புலப்படவில்லை. சரி உனக்கு என்ன தோன்றுகிறது,’’
என்று கேட்டார் சேகர்.
“நாம்
வரலாற்றிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்ளாம் எனத் தோன்றுகிறது. முற்காலத்தில் பஞ்சாயத்துகள் நல்ல நீதி வழங்கியுள்ளன.
ஜமீன்தார்களும் அரசவைகளும் பல்வேறு நீதிகளை வழங்கியதை நாம் கதைகளிலே கண்டுள்ளோம். இன்றும்
கூட அருணாச்சலப் பிரதேசம் போன்ற வடகிழக்கு
மாநிலங்களில் பஞ்சாயத்துகள் நீதி வழங்குவதை நாம் பார்க்கிறோம். மரபுரீதியான சட்டதிட்டங்களை
வைத்து, மனசாட்சியுடன் வழக்குகளை விசாரித்து , தக்க முறையில் அபராதங்களை விதித்து நீதிகள்
வழங்கப்படுகின்றன,’’ என்றான் ரவி.
உடனே ரேகா குறுக்கிட்டு, “ஒரு
நிமிடம். நாங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்தபோது இத்தகு பஞ்சாயத்துகளை சில இடங்களில் கண்டோம். அவர்கள் அனைவரும் அவர்களது
பாரம்பரிய முறைப்படி உடை அணிந்திருந்தார்கள். தங்களது வழக்கு குறித்து தானே விவாதித்தார்கள்.
இறுதியில் தண்டனை குறித்து அறிவித்தபோது, அந்த குற்றவாளியை ஊரை விட்டு தள்ளி வைத்தார்கள்.
அந்த மனிதன் விக்கித்துப்போனான். அது மட்டுமல்லாமல், அவன் மதச்சடங்குகளில் பங்கேற்காவிட்டால்,
அவனது முன்னோர் தேசத்தை அவனது ஆன்மா அடையாது என்றனர். இத்தகு நீதிகள் வழங்கப்பட்டால்
ஒவ்வொருவரும் குற்றம் செய்யத் தயங்குவர்.’’
“அதென்ன
கட்டப் பஞ்சாயத்து போலல்லவா இருக்கிறது,’’ என்றார் சுமன்.
“இல்லை.
இல்லை. கட்டப் பஞ்சாயத்துகளில் சாதியின் பெயராலும் கோத்திரத்தின் பெயராலும் கொலைகள்
கூட ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனால் மலைப்பிரதேசங்களில் சமூகம் மிகவும் முதிர்ச்சியுடன்
உள்ளது. அவர்களுக்கு சாதியோ மதமோ சிடையாது. இப்படிப்பட்ட குற்றங்களை அவர்கள் ஊக்குவிப்பதே
இல்லை. அவர்களது ஒரே நோக்கம் குற்றங்களைக் குறைப்பதுதான்.
ஆனால் இதில் விசித்திரம் என்னவெனில்,
நாம், சமவெளியில் வாழும் மக்கள், நாகரிமானவர்கள் என்று நம்மை சொல்லிக்கொள்கிறோம். பல்வேறு
சட்டதிட்டங்களையும வழிமுறைளையும் நமக்காக உருவாக்கி இருக்கிறோம். ஆனால் தனது சுயநலத்திற்காக இவற்றை தவறாக எவ்வளவு
பேர் பிரயோகித் திருக்கிறார்கள்? எல்லோருமே
நீதி வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் முடிவு என்ன? ஆனால் பாதிக்கப்பட்டவர் குறித்து
நாம் சிறிது கூட கவலைப்படுவதில்லை. நம்முடைய
இலக்கு என்பது குற்றங்களைத் தடுப்பது. அது குறித்தும் நாம் கவலைப்படுவதில்லை.
நமது அடிப்படைத் தேவை என்பது ஒரு திருப்திகரமான நீதி. அது திருந்துவதற்கு வாய்ப்பளிப்பதாக
இருக்கவேண்டும். குற்றங்களைத் தடுப்பதாக இருக்கவேண்டும். இது நடந்தால் கண்டிப்பாக குற்றங்களைத்
தடுக்கமுடியும்,’’ என்றார் சேகர்.
பிரதீப் ஏதோ கேட்க முனைந்தான். உடனே ரவி அவனைத் தடுத்தார்.
“ஓர்
அறிவாளியால் பதில் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு முட்டாளால் கேள்வி கேட்க முடியும்,’’
என்றான் பிரதீப். “மனோ தத்துவம் படித்தவர்களுக்கு
பிரதீப் ஒரு சுவாரசியமான கதாபாத்திரம்,’’ என்றான் அபி. பிரதீப் மௌனமானான். ரவி தன்
கேள்வியை ஆரம்பித்தான், “மாமா, அவர்களது நடைமுறையை நீங்கள்
எப்படி பயன்படுத்தலாம் என்று விரும்புகிறீர்கள்?’’
சேகர் தனது திட்டத்தை விளக்கினார்.
“எடுத்துக்காட்டாக,
பஞ்சாயத்துகளும் மக்கள் மன்றங்களும் சிறிய
வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் உள்ளவை என எடுத்துக்கொள்வோம். நீதிமன்றங்கள் சரியான வழிமுறைகளை இவர்களுக்கு வழங்கினால்
கண்டிப்பாக இவர்களால் நல்ல நீதி வழங்க முடியும்.
இந்த முறையில் குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கும் உள்ளது. இந்த வழியில் சென்றால் குற்றங்களைத் தடுக்கலாம். இப்படிச் சென்றால் எத்தனை நிறுவனங்கள் உருவாகும்
தெரியுமா? கிட்டத்தட்ட லட்சக்கணக்கான நிறுவனங்கள் உருவாகும். இப்படி உருவானால் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை
பெருமளவில் குறையும். மற்ற முக்கிய வழக்குகளில்
கவனம் செலுத்தி நீதி முறை திறனுடன் செயல்படும்.’’
என்றார் சேகர்.
“அப்படி
என்றால் நமது பகாசுரன்களின் கதி என்ன?’’ என்றான் ரவி.
“சிறப்பு
நீதிமன்றங்களின் மூலம் விரைவான நீதி, லோக்பால்
மற்றும் லோகாயுக்த அமைப்புகளின் மூலம் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆகியவை ஏற்பட்டால் நிச்சயமாக
ஊழல் என்னும் குற்றம் குறையும. அதே சமயம், இன்னொரு திட்டமும் உள்ளது. பொது வாழ்வில் உள்ள ஒவ்வொரு அதிகாரியையும் பொய் கண்டறியும் கருவி மூலமும் போதைத் தடுப்பு சோதனைகள் மூலமும் குறிப்பிட்ட இடைவெளியில்
சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவரது நேர்மை சோதனைக்கு உட்படுத்தப்படும். ஆனல் ஊழல் அதிகாரிகள் இதனை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள். இது அரசமைப்புச்சட்டத்திற்கு
எதிரானது என்று வாதாடுவார்கள்? இவர்கள் நாட்டை சுரண்டுவதற்கு அரசமைப்புச் சட்டம் அனுமதி
கெடுத்துள்ளதா? எல்லா நேர்மையான அதிகாரியும் இத்தகு சோதனைக்கு உடன்படுவான். நேர்மையற்ற அதிகாரிதான் இதனை எதிர்ப்பான்,’’ என்று தன் கருத்துக்களை வெளியிடடார்
சேகர்.
“வணிகம்,
தொழில் என்ற பெயரில் நாட்டை ஏமாற்றுபவர்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? அவர்களும் பகாசுரன்கள்தானா?’’
என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் பிரதீப்.
“ஏன்
இல்லை. ஏமாற்றுவதும் ஒரு பெரிய குற்றம்தான்.
இதற்கான சூத்திரம் மிகவும் எளியது. சிறிய குற்றத்தை செய்பவன் பேய். பெரிய குற்றங்களை செய்பவன் ராட்சசன். பேராசையால் மாபெரும் குற்றங்களை செய்பவன் பகாசுரன்.’’ என்றார் சேகர்.
அவரது வார்த்தைகள்ரவியின் நரம்புகளை
முறுக்கேற்றின. அவனது கண்கள் பெருமையால் பூரித்தன. “மாமா,
எனக்கு உங்களை ஏற்கனவே ரொம்பப் பிடிக்கும்.
இப்பொழுது உங்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது. உங்கள் எண்ணங்கள் எப்பொழுதுமே
சமூகத்தையும் நாட்டையும் பற்றித்தான் இருக்கின்றன,’’ என்றான் ரவி பெருமிதத்துடன்.
அவனது பாராட்டு சேகரை மெய்சிலிர்க்க
வைத்தது. “நான் ஒரு சாதாரண அதிகாரி. என்னை வானளாவப் புகழாதே. அரசாட்சியிலும் சில மாற்றங்கள் முழுமையாகத் தேவைப் படுகின்றன.’’
“எப்படிப்பட்ட
மாற்றங்கள்தேவைப்படுகின்றன?’’ என்றான் ரவி.
“தற்பொழுது
நாம் ஒரு துறையின் சாதனையைக் கணக்கிட புள்ளி
விவரங்களைப் பயன்படுத்துகிறோம். இது போக்குவரத்து துறை வழங்கும் ரசீதுகளைப் போல. ஆனால் போக்குவரத்து துறை சரியாக செயல்படுகிறதா என்பதை மக்கள்தான்
கூறவேண்டும். அந்தத்துறை போக்குவரத்து நெருக்கடியை அதிகப்படுத்துகிறதா அல்லது போக்குவரத்தை சீர்படுத்தி நல்ல பயணத்திற்கு வழிவகுக்கிறதா என நாம் உணர வேண்டும். அதே போல் ஒவ்வொரு துறைக்கும் அதனை வழிகாட்டும் அளவுகோல்கள்
உள்ளன. இதற்கு பொது கணிப்புக் குறியீட்டெண்
என்று பெயர். இத்தகு காரணிகளை பல்வேறு அறிவுஜீவிகளும்
நிபுணர்களும் விவாதித்து கருத்தொற்றுமை ஏற்பட வழிவகுக்க வேண்டும். புள்ளிவிவரம் இவற்றின் ஒரு பகுதிதான்.
பொதுக் கணிப்புக் குறியீட்டெண்
நடைமுறைக்கு வந்தால் புள்ளிவிவரங்கள் கடந்த கால நிகழ்வாகிவிடும். எடுத்துக்காட்டாக இந்தக் குறியீட்டெண்ணின்படி, எந்த
ரசீதும் கொடுக்காமலேயே போக்குவரத்து அலகால் நல்ல முறையில் போக்குவரத்தை சரி செய்ய முடியும்.
அப்பொழுது அவர்களுக்கான மொத்த பாராட்டும் அவர்களுக்கே செல்லும்,’’ என்றார் சேகர்.
“நீங்கள்
சொல்வது மிகவும் சரி என்றாலும் இப்படி நடப்பது
சாத்தியமாகுமா? எனக்கு இது குறித்து சில தயக்கங்கள் உள்ளன.’’ என்றான் ரவி.
ஆனால் சேகர் எதிலும் உறுதியளிக்கவில்லை.
“நான்
இதனை உறுதியாக சொல்ல முடியாது. நான் உங்களுக்கு நம்பிக்கைதான் அளிக்க முடியும். ஒரு ஜனநாயக நாட்டில் நல்லது நடக்கும் என்று நம்புவதற்கு எல்லா சுதந்திரமும்
உள்ளது,’’ என்றார் சேகர்.
“நாம்
நினைப்பதை எல்லாம் சோதித்து ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நம் நாட்டில் உண்மையான ஜனநாயகம்
இருக்கிறதா மாமா,’’ என்றான் பிரதீப்.
“நீ
பிரச்சினையின் உண்மையான இழையை கண்டறிந்து விட்டாய். மக்களின் எண்ணப்படி தேர்தல் நடைபெறவில்லை என்றால்
ஜனநாயகத்தின் அர்த்தம்தான் என்ன? அதிகாரத்தில்
உள்ளோரின் வாரிசுகளும் மற்ற முன்னணித் தலைவர்களும் தேர்தல் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்கள். சமீபத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி
தான் தேர்தலுக்காக எட்டு கோடி ருபாய் செலவு செய்ததாகக் கூறினார்.
அது மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட 100 கோடி ருபாய்க்கு விற்கும் அரசியல் கட்சிகள்
உள்ளன.
தில்லி மாநிலத் தேர்தல் ஆணையம்
சமீபத்தில் ஒரு பெரிய மோசடியiக் கண்டறிந்தது. பதின்மூன்று லட்சம் பொய் வாக்காளர்களும்
ஏற்கெனவே இறந்துபோன எண்பதாயிரம் பேரின் பெயர்களும் வாக்காளர் பதிவில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. உண்மையான ஜனநாயகத்தை அடைவதற்கு நாம் இன்னும் வெகு
தூரம் செல்லவேண்டியிருக்கிறது. அதனால்தான்
லோக்பால் அமைப்பிற்கான கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீங்களாவது இது குறித்து
இப்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளீர்களே என்று எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
ஏனெனில் நாட்டின் எதிர்காலம் உங்களைப்போன்ற இளைஞர்களின் கையில்தானே இருக்கிறது,’’ என்றார்
சேகர்.
“மாமா,
நீங்கள் என்னை நம்பலாம். நான் உங்களால் மிகவும்
கவரப்பட்டுள்ளேன். என்னுடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களிடம் இத்தகைய சிந்தனையை நான் உருவாக்குவேன். நாங்கள்
பல பட்டிமன்றங்கள் நடத்தி நேர்மையாக இருப்பது என சூளுரைப்போம்,’’ என்றான் ரவி. தனது
தங்கை மகனைப் பார்த்து சேகரின் உள்ளம் பூரித்தது. “எனக்குத்
தெரியும் ரவி. உன்னால் இது முடியும். நிச்சயமாக முடியும்,’’ என்றார் சேகர்.
உடனே பிரதீப்பிற்குக் கோபம்.
“அதென்ன,
ரவியைமட்டும் நம்புகிறீர்கள். என்னால் முடியாதா?’’ என்றான் பிரதீப்.
“அப்படியில்லை
குழந்தை. உங்கள் எல்லோராலுமே முடியும். நீங்கள்
அனைவரும் ஒன்றிணைந்தால் உங்களால் நிச்சயமாக முடியும்,’’ என்றார் சேகர்.
“மாமா,
ரவி கடைசியில் தான் மேற்கொண்ட முடிவில் நம்பிக்கை இழக்கலாம். ஆனால் நான் அப்படி அல்ல.
எதுவுமே நம்பிக்கையையும் முடிவையும் நாம் எப்படிச் சார்ந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே.
நாம் எதையும் நம்பிக்கையற்ற முடிவாகவும் பார்க்கமுடியும் அல்லது முடிவற்ற நம்பிக்கையாகவும்
பார்க்க முடியும்,’’ என்று தத்துவமழை பொழிந்தான். சேகர் அவனது நகைச்சுவையை நன்கு ரசித்த
அதே சமயத்தில் அவனுடைய உறுதியையும் உணர்ந்துகொண்டார்.
கடைசியில் பையன்கள் அனைவரும் தூங்கச் சென்றனர். அவர்களது செல்ல நாய்க்குட்டிகளும் சோபாக்களில் உறங்கின. ஆனால் படுக்கையில் படுத்துக்கொண்டு அவர்கள் பேசிக்
கொண்டேயிருந்தனர்.
“இந்த
நாய்க்குட்டிகளைப் பார். தங்கள் எஜமானர்கள் மீது எவ்வளவு விசுவாசமாக பாசத்துடன் இருக்கின்றன.
ஆனால் பூனைகள் அப்படியில்லை. நமது அரசியல்வாதிகளும் இந்த பூனைகள் போல்தான்.’’ என்றன்
பிரதீப்.
“ஏய்,
நான் மார்கெட்டில் சில சிங்கிகளைப் பர்த்தேன். தில்லியில் நிறைய பேர் இருக்கிறார்கள். எங்கள் கல்லூரியில் கூட ஒரு ஜோடி பேர் உள்ளனர்,’’ என்றான் ரவி.
“சூ.
சிங்கி என்று அப்பாவுக்கு முன் சொல்லிவிடாது. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது.’’ என்றான்
அபி.
“ஆனால்
எங்கள் கல்லூரியில் எல்லோருமே அவர்களை அப்படித்தான் கூறுவோம்,’’ என்றான் ரவி.
“அவர்களும்
நம்மைப் போன்றவர்கள்தான். அவர்களது முக லட்சணங்கள்
மங்கோலியர்கள் போல் இருக்கும். அது ஒன்றுதான் வித்தியாசம். எங்களது நண்பர்கள் பாயெங்குகள் வடகிழக்கிலிருந்து
வந்துள்ளனர். இவர்கள் மிகவும் எளிமையானவர்கள். நேர்படி பேசுபவர்கள். அவர்களது உணவு முறைகூட அவர்களைப் போலவே எளிமையானது. அவர்கள் எல்லாவற்றையும் வெறுமனே வேகவைத்து, சுவைக்காக
இஞ்சியையும் மூங்கில் கிளையையும் சேர்ப்பர்,
அவர்கள் மிகவும் நல்லவர்கள் தெரியுமா,’’ என்றான் அபி.
ரவி தனது தவறை உணர்ந்து தலைகுனிந்தான்.
“வடகிழக்கு
மாணவர்களின் பெரும் பிரச்சினை மூங்கில் கிளைகள்தான்.
அவர்கள் உணவை அவர்கள் சமைக்கும்போது கருவாட்டு வாசனை வெளிவரும். இது அவர்களது அண்டை
வீட்டுக்காரர்களுக்கு பிடிக்காது. இதற்காக
அவர்கள் மீது காவல்துறையிலும் வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. அதனால் இவர்கள் தங்கள் உணவுமுறைகளை கட்டுப்படுத்த
முயற்சிக்கின்றனர். அவர்களுக்குள் உள்ளார ஒரு
கோபம் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவு நாட்களுக்கு தங்கள் உணவுப்பழக்கத்தை அவர்களால்
மாற்றிக்கொள்ள இயலும்? சிறுவயதிலிருந்தே அவர்கள் இவ்வாறு உண்டு பழகியவர்கள். அது மட்டுமல்ல, இங்குள்ள மக்களுக்கு சாதிப்பெருமை
அதிகம் உண்டு. வெள்ளைத் தோல் அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ஆனால் மஞ்சள் தோலும்
சிறிய கண்களும் கொண்டவர்களைப் பிடிப்பதில்லை. அவர்களைக் கிண்டல் செய்து துன்புறுத்துகிறார்கள். அதனால் இவர்கள் தங்கள் சமூகத்திற் கென்று தனி இருப்பிடம்
வகுத்துக்கொண்டு அங்கு வாழ்கிறார்கள்.’’ என்றான் அபி.
ரவி தனது தவறை உணர்ந்து வெட்கித்
தலைகுனிந்தான். இதை உணர்ந்துகொண்ட ரவி, “பரவாயில்லை
ரவி. நமக்கு சில உண்மைகள் தெரியாதபோது இப்படியெல்லாம் நடக்கும். சரி. சரி. இதனை விடு.
நான் உனக்கு ஒரு ஜோக் சொல்கிறேன் கேள்,’’ என்றான் அபி.
“எய்ம்ஸ்
மருத்துவமனைக்கு ஒரு முதியவர் வருடாந்திர சோதனைக்காக வந்தார். அவரை முழுமையாக சோதித்த மருத்துவர், “உங்கள்
வயதுக்கு ஏற்றபடிதான் நீங்கள் ஆரோக்கியாக இருக்கிறீர்கள்,’’
என்றார். உடனே அந்த முதியவர் கேட்டார், “எனக்கு
எழுபத்தைந்து வயதாகிறது. நான் எண்பது வயதுவரை வாழ முடியுமா?’’ என்றார்.
உடனே டாக்டர் கேட்டார், “உங்களுக்கு
புகைப்பிடிக்கும் பழக்கமோ அல்லது மதுவருந்தும் பழக்கமோ உண்டா?’’
“இல்லை’’
என்றார் முதியவர்.
“நீங்கள்
நல்ல இனிப்பையோ அல்லது கொழுப்பு நிறைந்த இறைச்சியையோ உண்கிறீர்களா,’’ என்றார் டாக்டர். “இல்லை’’
என்றார் முதியவர்.
“நன்கு
வேகமாக வாகனம் ஓட்டுவது, அல்லது பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடுவது
உண்டா?’’ என்றார் டாக்டர். “இல்லை’’
என்றார் முதியவர்.
“அப்படியென்றால்
எண்பது வயதென்ன, அதற்கு மேலும் நீங்கள் வாழ்வீர்கள். ஆனால் அப்படி வாழ்ந்து நீங்கள்
என்ன அனுபவிக்கப் போகிறீர்கள்?’’ என்றார் மருத்துவர்.
இதைக் கேட்டு பையன்கள் அனைவரும்
விழுந்து விழுந்து சிரித்தனர். பின்னர் நன்கு உறங்கினர்.
No comments:
Post a Comment