Sunday, September 15, 2013

முசாபர் நகர் - ஓர் எச்சரிக்கை மணி


முசாபர்நகர் கலவரம் சமீப ஆண்டு களில் நடைபெற்ற மிக மோசமான வகுப்புக்கலவரமாகும். முப்பத்திரண்டு பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இளம் சிறார்கள் உட்பட ஏராளமானோர் காயம் அடைந்திருக்கிறார்கள். மிகவும் சங் கடத்திற்குரிய அம்சம் என்னவெனில், வன்முறை கிராமங்களுக்கும் விரிவடைந்து ஏராளமானோர் தங்கள் வீடு களைத் துறந்து ஓடி ஒளிந்திருப்பதாகும். ஒரு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் கேலி செய்யப்பட்டதை அடுத்து, ஒரு முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதனை அடுத்து, இதற்குப் பழிவாங்கும் முறையில் இரு இந்து இளைஞர்கள் கொல்லப் பட்டதுதானது, வகுப்புக் கலவரம் காட்டுத் தீ போல் பரவக் காரணமாகிவிட்டது.கடந்த ஓராண்டு காலமாகவே மாநி லத்தில் தொடர்ச்சியாக வகுப்புத் துவேஷ நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வந்ததை அடுத்து முசாபர்நகர் கலவரம் நடைபெற்றிருக்கிறது. 2012 பிப்ரவரியில் சமாஜ்வாதிக் கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர், கோசிகலான், பரேலி, பிரதாப்கார், பைசாபாத் மற்றும் பல இடங்களில் மத வன்முறை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
இந்நிகழ்வுகள் பலவற்றின்போதும். கோசி கலான் மற்றும் பைசாபாத் ஆகிய நிகழ்வுகளின்போது நடைபெற்றதுபோன்று, மதவெறித் தீயை சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல முயற்சிகள் நடைபெற்றன. முசாபர்நகரில் நிலைமையைச் சமாளிப்பதில் நிர்வாகம் நிச்சயமாக மிகவும் மந்தமாக இருந்துவிட்டது. ஆகஸ்ட் 27 அன்று முதல் நிகழ்வு நடை பெற்ற பின்னர், நிலைமையைப் பயன் படுத்திக் கொள்ள மதவெறி சக்திகளுக்கு முழுமையாக பத்து நாட்கள் கால அவகாசம் தரப்பட்டிருக்கிறது.

ஜாட் வகுப்பினரின் கட்டைப் பஞ்சாயத்துக்கள் நடைபெற்றிருக்கின்றன. மேலும் செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற மகா கட்டைப் பஞ்சாயத்தும் மதவெறித் தீயை உசுப்பிவிடப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர்தான் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. கடந்த ஓராண்டாகவே மதவெறியைக் கிளப்பும் நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துவந்ததைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இவ்வாறு ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் நடைபெறக்கூடிய சமயத்தில், உத்தரப்பிரதேச அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
நிர்வாகம் காலத்தே செயல்படத் தவறியதைச் சுட்டிக்காட்டும் அதே சமயத்தில், ஆர் எஸ்எஸ் / பாஜக கூடாரம் இந்நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தி மதவெறித் தீயை விசிறிவிட மேற்கொண்ட நடவடிக்கைகளையும் காணத் தவறிவிடக்கூடாது. நான்கு பாஜக எம்எல்ஏ-க்கள், மக்கள் மத்தியில் மதவெறித் தீயைக் கிளறி விட்ட தாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு எம்எல்ஏ, ஒரு போலி வீடியோ காட்சியை தொலைக்காட்சி அலைவரிசைகளில் பதிவேற்றம் செய்த தாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அந்த போலி வீடியோ காட்சியில் முஸ் லீம்கள் இந்துக்களைக் கொல்வது போல் காட்டப்படுகிறது.
உண்மையில் இந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். கடந்த ஓராண்டு காலத்தில், ஆர் எஸ்எஸ் இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் மதவெறி அடிப்படையில் மக்களின் உணர்ச்சிகளைக் கிளப்பிடும் பிரச்சனைகளைத் திட்டமிட்டு உரு வாக்கி, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற் படுத்தி வந்தன. சென்ற ஆண்டு மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ளப் பட்ட பசுவைக் கொல்லுவதற்கு எதிரான பிரச்சாரம் இத்தகைய நிகழ்வுகளில் ஒன்று. வன்முறை வெடிப்பதற்கு முன்பு, பைசாபாத்தில் யோகி ஆதித்யநாத் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆத்திர மூட்டும் வகையிலான பேச்சுக்கள் மற் றோர் எடுத்துக்காட்டாகும்.

2014இல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர் தலின் போது பாஜக பயனடைய வேண் டும் என்பதற்காக, மதவெறித் தீயை உரு வாக்கும் விதத்தில் ஆர்எஸ்எஸ் தன் அமைப்புகளைச் செயல்படுமாறு முழு மையாக இறக்கிவிட்டுள்ளது. முசாபர் நகரில் நடைபெற்றுள்ள கலவரங்களும் ஜாட் இனத்தினரை பாஜக முகாமிற்குள் இழுப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளப் படும்.இரு மாதங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் கட்சி விவகாரங்களைக் கவனிப்பதற்காக, குஜராத்தில் நரேந்திர மோடியின் வலதுகரமாக விளங்கிவந்த அமித் ஷாவை அனுப்பிவைத்திட, பாஜக தீர்மானித்தது. அமித் ஷாவும் அயோத்தி யில் ராமர் கோவில் கட்டுவதற்காகத் தற் காலிகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தி லிருந்து தன் பயணத்தைத் துவக்கினார்.

அப்போதிருந்தே இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல வேலை யைக் கடுமையாகத் துவக்கிவிட்டார். கடந்த சில மாதங்களாகவே மதவெறி வன்முறைச் சம்பவங்கள் கணிசமான அளவிற்கு அதிகரித்து வந்தன. ஜம்முவில் கிஷ்ட்வார், பீகாரில் நவாடா மற்றும் பெட்டியா ஆகிய நகரங்களில் ஆர்எஸ் எஸ்/பாஜக கூடாரத்தின் வெறித்தனமான நடவடிக்கைகள் மூலம் இந்து - முஸ்லீம் மோதல்கள் உருவானதைப் பார்த்தோம்.
உண்மையில், பெட்டியா மற்றும் நவாடா நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற சமயத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் நரேந்திரமோடி வாழ்கஎன்று கோஷமிட்டதாகவும் அதற்குப் பிறகு அவர்கள் வன்முறை வெறியாட்டங் களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளும் தில்லியில் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகளை உருவாக்கு வதற்காக ஒரு ரகசியக் கூட்டத்தை நடத்தி யிருப்பதிலிருந்து, ஆர்எஸ்எஸ், பாஜகவை 2014ல் நடைபெறவுள்ள தேர்தலுக்குத் தயாராகுமாறு கட்டளை யிட்டிருப்பது தெளிவாகிறது.
இந்தக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங், எல்.கே.அத் வானி, நரேந்திர மோடி உட்பட பாஜகவின் அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ஆர்எஸ் எஸ்சின் கட்டளையின்படி, பாஜக நரேந் திர மோடியை அதன் பிரதமர் வேட்பாள ராக அறிவித்திடப் பணிக்கப்பட்டிருக் கிறது. நாட்டில் மதவெறி வன்முறை நிகழ்வு கள் அதிகரித்து வருவது குறித்தும், இவற் றில் இந்துத்வா சக்திகளின் பங்கு குறித் தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறது. அடுத்த மாதம் அக்டோபரில் தசரா, துர்கா பூஜா, பக்ரித் பண்டிகைகள் வரவிருக் கின்றன. அந்த சமயத்தில் மத ஊர்வலங் கள் மிகவும் பதற்றமான பகுதிகளில் செல்லும்போது மதவெறியர்களால் வகுப்புக் கலவரங்கள் உருவாக்கப்படக் கூடும்.
மத்திய அரசும், மாநில அரசு களும் மிகவும் விழிப்புடனிருந்து முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத் திட வேண்டும். மதவெறியர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து அவர்களது சதிகளை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டும். முசாபர்நகர் நிகழ்வுகள் ஓர் எச் சரிக்கை மணியாகும். மதவெறி சக்தி களை - அவை எந்த இனத்தைச் சேர்ந்த வையாக இருந்தாலும் சரி - தனிமைப் படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் தில்லுமுல்லு களைத் தோலுரித்துக்காட்டிட ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரிக் கட்சிகள் ஒன்றுபட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)



No comments: