Saturday, September 28, 2013

கருப்பு வைரம் கொள்ளை போகாமலிருக்க...: ச.வீரமணி




இந்தியா ஏழை நாடா என்று ஒருவர் மார்க்சிய வரலாற்றியல் அறிஞர் ரஜினி பாமிதத்திடம் கேட்டபோது, ஏழைகள் நிரம்பிய பணக்கார நாடு என்று அவர் பதி லளித்து,  இந்தியாவில் ஒரு பக்கம் ஏழைகளின் வறிய நிலையையும் மறுபக்கம் நாட்டில் உள்ள இயற் கை செல்வங்களையும் பட்டிய லிட்டிருப்பார். அத்தகைய இயற்கைச் செல் வங்களில் ஒன்று கருப்பு வைரம் எனப்படும் நிலக்கரி. நம் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டி ருந்த வெள்ளையர்கள் இதன் அரு மையை நன்கு அறிந்து இதனை வெட்டி எடுத்துச் செல்ல நடவடிக் கைகளை மேற்கொண்டார்கள்.

நிலக்கரிச் சுரங்கங்களில் தொழி லாளர்களை அடிமைகளைவிட மிகவும் மோசமாக வேலை வாங்கி நிலக்கரியை வெட்டி எடுத்தார் கள். நாடு சுதந்திரம் பெற்றபின், நிலக்கரிச் சுரங்கங்கள் அனைத் தும் தேசியமயமாக்கப்பட்டன. வெள்ளையர்கள் நாட்டை விட்டு போய்விட்ட போதிலும், நிலக் கரிச் சுரங்கங்களில் அடிமைகள் போல் வேலை செய்த தொழிலாளர்களின் நிலைமைகள் மாறிவிட் டனவா, என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன் னும் சரியாகச் சொல்லப் போனால், ஆட்சியாளர்களின் இன்றைய நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, தொழிலாளர்களின் நிலைமைகள் மேலும் மோசமாகிவிட்டன.நிலக்கரி இந்தியா லிமிடெட் என்பது மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமாகும். நாட்டில் உள்ள ஒன்பது நிலக்கரிச் சுரங்கங் கள் இதன் கீழ்தான் செயல்பட்டு வருகின்றன. பல லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை மத்திய அர சுக்கு ஈட்டித்தரும் நிலக்கரிச் சுரங்கங்களை ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடித்துச் செல்ல இந்திய மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இதற்கு தற்போதைய ஐ.மு.கூ. ஆட்சியாளர்களும் குறிப்பாக அதன் நிலக்கரித்துறை அமைச்சரும் இழி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர். இவற்றை எதிர்த்துத்தான் நாடு முழுதும் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதற்கு நாட்டில் இயங்கும் அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.இந்தியத் தொழிற்சங்க மையத்துடன் (சிஐடியு) இணைக்கப் பட்ட இந்திய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் சபா சார்பில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் இன்றைய எதார்த்த நிலை யை வெளிச்சத்திற்குக் கொண்டு வரக்கூடிய விதத்தில் ஒரு குறும் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருட்டு (The Dark) என்று பெய ரிடப்பட்டு, சுமார் 27 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம் சமீபத்தில் தில்லியில் ஒளிபரப்பப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் முழு நேர ஊழியராக உள்ள சௌவிக் பாசு மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் டாக்டர் தேவ் ஜானி ஹால்தர் ஆகியோர் இதனை இயக்கி இருந்தார்கள்.

பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிர காஷ்காரத் இக்குறும்படத்தை ஒளிபரப்பும் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:‘‘நாட்டில் நிலக்கரிச் சுரங்கங் கள் மிகவும் கேந்திரமான இடத்தை வகிக்கின்றன. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 55 விழுக்காடு நிலக்கரி மூலம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் நிலக்கரி அபரிமிதமாக இருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தை வகிக்கிறது.

பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்கிறார்கள். 1973ஆம் ஆண்டில் நிலக்கரிச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன. ஆயினும் ஆட்சியாளர்கள் நவீன தாரா ளமயப் பொருளாதாரச் சீர்திருத் தங்களைப் பயன்படுத்தத் தொடங் கியபின், மீண்டும் இதனை தனியாரிடம் தாரைவார்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி நிலைமைகள் மிக மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரிலும், வேலைகளை அவுட்சோர்சிங்செய்வதன் மூலமாகவும் தொழிலாளர்கள் மிகவும் கடுமையான முறையில் சுரண்டப்படுகிறார்கள். சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படவேண்டிய பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் ஊதியம் மிகவும் குறைவு. நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள், அவர்களது குடும்பங்களும் எப்படி மிகவும் மோசமான நிலைமைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை இக்குறும்படத்தின் மூலம் நிலக்கரிச் சுரங்கத் தொழி லாளர் சபா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறதுஎன்று பிரகாஷ்காரத் கூறினார்.

பின்னர் ‘‘இருட்டு’’ குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆங்கில சப்டைட்டில்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இக் குறும்படம் மேற்குவங்கம் அசன்சால்-ராணிகஞ்ச் பகுதியில் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்டு லிமிடெட் பகுதியில் படமாக்கப்பட்டிருக் கிறது. நாட்டில் நிலக்கரி வெட்டி எடுக்கும் வயல்களில் ராணிகஞ்ச் நிலக்கரிவயல் மிகவும் பெரிய அளவிலானதாகும். தொழிலாளர் கள் எவ்விதப் பாதுகாப்பு கவசமு மின்றி பணிக்குச் செல்வதைப் படம் காட்டுகிறது. சுரங்கங்களுக்குள் கடும் இருட்டு. தொழிலாளர் கள் இடுப்பில் கட்டியுள்ள கச்சையுடன் பொருத்தப்பட்டுள்ள டார்ச் வெளிச்சத்தின் மூலம்தான் உள்ளே ஓரளவுக்கு வெளிச்சம் இருக்கிறது. போதுமான காற்றுக்கும் இடமில்லை.

இதன் காரணமாக வேலைக்கு வருபவர்கள் மிக விரைவில் காச நோய்க்கு ஆளாகிவிடுகிறார்கள். தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி என்பது எல்லாம் பெரிய அளவிற்கு இல்லை என்பது இதில் நன்கு படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. படம், அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகள் சுரங்கங்களுக்கு வெளியே அலைந்து திரிந்துகொண்டிருத்தல் ஆகியவற்றை இயக்குநர்கள் மிகவும் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஈஸ் டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளரையும் இயக்குநர்கள் பேட்டி கண் டிருக்கிறார்கள். அவர் வேலைகளை அவுட்சோர்சிங்செய்த போதிலும், ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டபோதிலும் அவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு அளிக்கப்படுவதைப்போல அனைத்து வசதிகளும் செய்துதரப்படு வதாகக் கூறுகிறார். ஆனால் அடுத்த காட்சியில் அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களின் பேட்டி வருகிறது. அப்போது அவர்கள் பொது மேலாளரின் கூற்றை மறுத்து தங்களின் எதார்த்த நிலையைக் கூறுகிறார்கள். பொதுமேலாளர் ஒரு கேள் விக்குப் பதிலளிக்கையில் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் தான் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண் டியிருக்கிறது என்றும் அவுட்சோர்சிங் முறையில் வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறி தொழிலாளர்களை நிரந் தரப்படுத்தாமல் இருப்பதனை நியாயப்படுத்துகிறார்.


ஆனால் அடுத்த காட்சியில் நிறுவனத்தின் நிதி அறிக்கை ஒளிபரப்பப்பட்டு, நிறுவனத்தில் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் வந்திருப்பது காட்டப்படுகிறது. இவ்வாறு நிலக்கரிச்சுரங்கங்களில் தற்போதுள்ள ஊழல் நிலைமைகளை இக்குறும்படம் நன்கு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. நிலக்கரிச் சுரங்கங்கள் பொதுத் துறையில் இருக்கும்போதே தொழிலாளர்கள் இந்த அளவிற்கு மோசமான நிலைமையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவை தனியாரிடம் சென்றுவிட்டால்? நிலைமைகள் மேலும் மோசமாகும் என்பதில் எள்ளளவும் ஐய மில்லை.

No comments: