நிலக்கரிச் சுரங்கப் படுகைகளை ஒதுக் கீடு செய்ததில் நடைபெற்றுள்ள ஊழல்களில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் பங்கு குறித்து வந்த ஐயங்களை உறுதிப் படுத்தும் வண்ணம் மத்தியப்புலனாய்வுக் கழகத்தின் புலனாய்வில் மத்திய அரசு தலையிட்டிருப்பது தொடர்பாக சிபிஐ இயக்குநர் ஒத்துக்கொண்டிருப்பதை அடுத்து, உச்சநீதிமன்றம் ஏப்ரல் 30 அன்று கடும் விமர்சனங்ளைச் செய்திருக்கிறது. நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, மதன் பி. லோகுர் மற்றும் குரியன் ஆகிய மூவரடங் கிய அமர்வாயம், ‘‘நாட்டின் முதன்மை யான புலனாய்வு ஏஜென்சி என்ற முறை யில், உங்கள் நடவடிக்கைகள் அதன் நம்பகத்தன்மையையும், நடுவுநிலைமை யையும் உயர்த்திப்பிடிப்பதாக இருக்க வேண்டும். சுதந்திரம் என்பதன் பொருள் நீங்கள் (சிபிஐ) நிர்வாகத்தின் ஊன்று கோல்களின் துணைகொண்டு இயங்கு வது அல்ல. உங்கள் நடவடிக்கைகள் (அதாவது உங்கள் அறிக்கையை சட்ட அமைச்சருடனும் இதர அதிகாரிகளு டனும் பகிர்ந்து கொண்டதானது) சுதந்திர மான நடவடிக்கைகளை ஆட்டம் காணச் செய்துள்ளது. முதலாவதாக நாங்கள் செய்ய வேண்டியது, மத்தியப் புலனாய்வுக் கழகத்தை அயலார் தலையீடுகளிலி ருந்து விடுவிப்பதேயாகும்.
அப்போதுதான் புலனாய்வு என்பது
வேதனை அளிக்கக் கூடியதாக இருக்காது. இதுவே நம்முன் உள்ள பிரதானமான பணியாகும். இந்த
வழக்கில் வெளிவந்துள்ள சங்கடத்தை விளைவிக்கும் நிகழ்வுகள் புலனாய்வின் நம்பகத்
தன்மையையே பாதித்திருக்கிறது. இந்தப் புலனாய்வும், இது முதற்கொண்டு
மேற்கொள்ளப்படுகிற அனைத்துப் புல னாய்வுகளும் அயலார் தலையீடு எதுவும் இல்லாததாக
அமைந்திட வேண்டும்.’’ இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்திருப்பதன்
மூலம் சட்ட அமைச்சர் பதவியில் மேலும் தொடர்வது என்பது முற்றிலும் ஏற்றுக்
கொள்ளத்தக்கதாக இல்லை. இந்த ஊழல் தொடர்பாக மூன்று அம் சங்கள்
சம்பந்தப்பட்டிருக்கின்றன. முத லாவதாக, இதில் சம்பந்தப்பட்டுள்ள தனி
நபர்களின் குறைகூறத்தக்க நிலையுடன், மத்திய அரசும் கூட்டாக, புலனாய்வின்
மீது செல்வாக்கு செலுத்த முயற்சித்திருப் பதை நிறுவுவது. இரண்டாவதாக, மத் தியப்
புலனாய்வுக் கழகத்தின் நடுவு நிலைமையையும் அதன் சுயாட்சித்தன் மையையும்
உத்தரவாதப்படுத்த வேண் டிய மிக முக்கியமான பிரச்சனை. அதே அளவுக்கு
முக்கியத்துவமுடைய மூன்றா வது பிரச்சனை: அதாவது, நிலக்கரிச் சுரங்கங்களை
சட்டவிரோதமாக ஒதுக் கீடு செய்ததற்குப் பொறுப்பான தனி நபர் களை அடையாளம் காணுதல். அவ்வாறு
அடையாளம் கண்டு அவர்களைத் தண் டித்து நீதி வழங்கப்படுவதை உத்தரவாதப் படுத்துவதுடன், அதன்
காரணமாக அர சின் கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பில் ஓரளவிற்காவது இழந்தவற்றை
மீண்டும் பெறக்கூடிய விதத்தில் அத்தகைய ஒதுக் கீடுகளை ரத்து செய்து, அவற்றைத்
தற் போதைய சந்தை விலையில் மறுபடியும் ஒதுக்கீடு செய்வது ஆகியவைகளாகும்.2012 ஆகஸ்ட்
17 அன்று மத்தியத் தலைமைத் தணிக்கைத்துறைத் தலை வர் (சிஏஜி), நாடாளுமன்றத்திற்கு
சமர்ப் பித்தத் தன்னுடைய அறிக்கையில், நிலக் கரிச் சுரங்கப் படுகைகள்
ஒதுக்கீடு செய்த முறை, அரசுக்கு சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம்
கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரி வித்திருந்தார். ( உண்மையில்
2012 மார்ச் 22 அன்று அவர் தயார்செய்திருந்த வரைவு
அறிக்கையில் 10 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் என்று
மதிப்பிட்டிருந்தார்.) 2012 செப்டம்பர் 6 அன்று உச்ச
நீதிமன்றம், 2004க்கும் 2011க்கும் இடையில் நிலக் கரிச் சுரங்கங்கள்
ஒதுக்கப்பட்டவை களை ரத்து செய்துவிட்டு மீளவும் ஒதுக் கீடு செய்யவேண்டும் என்று
கோரி பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந் ததை அனுமதித்திருக்கிறது. அதன்
மீதான வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இப்போது விசாரணை செய்து கொண் டிருக்கிறது.
வழக்கின் விசாரணை சமயத்தில் மத்
தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) உச்சநீதிமன்றத்தில் 2013 மார்ச்
8 அன்று தாக்கல் செய்திருந்த தகுநிலை அறிக்கை (ளவயவரள சநயீடிசவ )யில், முறையான
விதி முறைகளைப் பின்பற்றாமல் ஒதுக்கீடு கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று
குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், அந்த அறிக்கையில் மார்ச் 6 அன்று
மத்திய சட்ட அமைச்சரிடம் அது காட்டப்பட்டது குறித்தோ, அவர் அதில்
திருத்தம் செய்தது குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. இந்தப் பிரச்சனை இப்போது
மிகவும் முக் கியத்துவம் உடையதாக மாறிவிட்டது. ஏனெனில், இந்தப்
பிரச்சனையில் சிபிஐ, உச்சநீதிமன்றம் முன் இதன் மீதான
புலனாய்வு சுதந்திரமானதாக இருக்கும் என்று ஐயப்பாட்டுக்கு இடமில்லாத வகையில்
தெரிவித்திருந்தது. இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங் களும் சட்ட
அமைச்சருடன் விவாதிக்கப் பட்டிருப்பதும், அவற்றில் சட்ட அமைச் சர்
அளித்திட்ட பரிந்துரைகளுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதும் அசிஸ் டண்ட்
சொலிசிட்டர் ஜெனரல் ஹரிண் ராவல் ராஜினாமா கடிதத்தின் மூலம் உறு
திப்படுத்தப்பட்டுவிட்டது. ஹரிண் ராவல், தன்னுடைய ராஜினாமா கடிதத் தில், அட்டார்னி
ஜெனரல் ஜி.இ. வாஹன் வாதி முன்னிலையில் சட்ட அமைச்ச ருடன் நடைபெற்ற சந்திப்பின்போது
நடைபெற்ற நடவடிக்கைகள் அனைத் தையும் விவரமாக முன்வைத்திருக்கிறார். மத்தியக்
குற்றப் புலனாய்வுக் கழகத் திற்கும், சட்ட அமைச்சருக்கும் இடையே
நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியானது, அது
அரசியல் வட்டாரத்தில் சீற்றத்தை ஏற்படுத்தியது ஆகியவற்றைத் தொடர்ந்து உச்ச
நீதிமன்றம் 2013 ஏப்ரல் 15 அன்று ‘‘சிபிஐ அறிக்கை எவருடனும்
பகிர்ந்து கொள்ளப்படவில்லை’’ என்பதை ஓர் உறுதி வாக்குமூலத்துடன் (அபிடவிட்டுடன்)
சமர்ப்பிக்குமாறு மத்தியப் புல னாய்வுக் கழகத்திற்குக் கட்டளையிட்டது. அதனை
அடுத்து ஏப்ரல் 26 அன்று சிபிஐ இயக்குநர் ஓர்
உறுதிவாக்குமூலம் தாக் கல் செய்தார். அதில் அவர், தங்கள் அறிக் கையானது சட்ட
அமைச்சருடனும் பிர தமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சகத்தில் உள்ள சில அதிகாரி
களுடனும் பகிர்ந்து கொள்ளப் பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, எந்த
அமைச்சகங்கள் நிலக்கரிச் சுரங்கப் படு கைகளை ஒதுக்கீடுகள் செய்தது
தொடர் பான ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கின் றனவோ அதே அமைச்சகங்களுடன் தாங்கள்
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் அறிக்கை பகிர்ந்து கொள்ளப்
பட்டதாக அவர் தெரிவித் துள்ளார்.
அதனைத் தொடர்ந்துதான் உச்சநீதிமன்றம்
ஏப்ரல் 30 அன்று மத் தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தைக் கடுமையான முறையில்
கண்டித்துள்ளது. மேலும் மே 6 அன்று புதிதாக ஓர் உறுதி
வாக்குமூலத்தைத் தாக்கல் செய்யுமாறும், அது மே 8 அன்று
விசாரணைக்கு வரும் என்றும் கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் ஏழு அம்சங்கள் குறித்து
விளக்கங்களைக் கோரியுள்ளது. (1) மார்ச் 8 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகு
நிலை அறிக்கையில், அது நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக அரசாங் கத்துடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது என் பதை
ஏன் பகிரங்கப் படுத்தவில்லை? (2) அறிக்கையானது எவரொருவருடனும்
பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்று எந்த அடிப்படையில் அடிசனல் சொலி சிட்டர் ஜெனரல்
ஓர் உறுதி அறிக்கையை மார்ச் 12 அன்று நீதி மன்றத்தின் முன் தாக்கல்
செய்தார்? (3) வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன? அவை யாரு
டைய தூண்டுதலில் செய்யப்பட்டுள் ளன? (4) அவை சட்ட அமைச்சர், பிரதமர்
அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் அல்லாது வேறொருவருட
னாவதுபகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறதா? (5) பிரதமர் அலுவலகத்திலும், நிலக்கரி
அமைச்சகத்திலும் உள்ள அதிகாரிகளில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அதிகாரிகள் யார் யார்? (6) நீதிமன்றங்களால்
கேட்டுக் கொள்ளப்பட்டபடி புலனாய்வுகள் மேற் கொள்ளப்படும் வழக்குகளின் தகுநிலை
அறிக்கைகளை பகிர்ந்துகொள்வது தொடர்பாக குற்றப்புலனாய்வுக் கழகத்தின் குறிப்பேடுகள்
மற்றும் விதிகளில் கண் டுள்ள நடைமுறை என்ன? மற்றும் (7) இந்தப்
புலனாய்வை நடத்திவரும் சிபிஐ குழுவினரின் பின்னணி விவரங்கள் என்ன? மேற்கண்ட
ஏழு கேள்விகளுக்கும் அளிக்கப்படும் விடைகள் ‘‘ஒளிவுமறை வற்றவிதத்திலும், நேர்மையாகவும், பதி
வுருக்களின் அடிப்படையிலும்’’ இருந் திட வேண்டும் என்றும்
உச்சநீதிமன்றம் கறார்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளபடி இந்தத்
திசை வழி கடைப்பிடிக்கப்பட்டால், பின், மத் தியக் குற்றப்புலனாய்வுக்
கழகமும், மத் திய அரசாங்கமுமே சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்பது திண்ணம். ஏனெனில், ஏற்கனவேயே
நிலக்கரிச் சுரங்க ஊழல் கள் தொடர்பான புலனாய்வுகளை மேற் கொண்டு வந்த அதிகாரி
ரவிகாந்த் என் பவர், தன்னுடைய எஜமானர்களின் விருப் பத்திற்கு
ஏற்ப நடக்காததால் வெளியே தூக்கிவீசப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம், 1997ஆம்
ஆண்டு வினீத் நாராயணன் வழக்கில் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தை சுதந்திர
மானதாக மாற்ற வேண்டும் என்று கருத் துரை வழங்கியிருந்தபோதிலும், அவ் வாறு
கூறி பதினைந்து ஆண்டுகளான பிறகும் அது இன்னமும் நடைமுறைப் படுத்தப்படாததற்கும், ஆட்சியாளர்கள்
மத்தியப் புலனாய்வுக் கழகத்தை நடுவு நிலைமையுடன் செயல்படத் தேவை யான நடவடிக்கைகள்
எடுக்காதிருப்பதற் கும் தன் வருத்தத்தைப் பதிவு செய்து கொண்டுள்ளது. சிபிஐ இவ்வாறு
தன் னுடைய அறிக்கையை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொண்டிருப்பது தொடர்பாக வழக்கை
விசாரித்து வரும் நீதிபதிகள், சிபிஐ மீதிருந்த ‘‘நம்பிக்கை
முற்றிலுமாக அரிக்கப்பட்டுவிட்டது’’ என்றும், அதன்
நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் ‘‘ஒட்டுமொத்த மனசாட்சியையே உலுக்கி
விட்டது’’ என்றும் கடும் வார்த்தைகளில் மிகவும் கூர்மையான முறையில் தாக்
குதலைத் தொடுத்திருக்கிறார்கள்.
மே 6 அன்று
உச்சநீதிமன்றத்தின்முன் சிபிஐ சொல்லப் போகும் விஷயங்கள் அதன் எதிர்கால
செயல்பாடுகள் மீது முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தில்
லோக்பால் சட்டமுன் வடிவின் மீதான விவாதங்களின்போது, சிபிஐ பாரபட்சமற்ற முறையில்
நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக இதேபோன்ற கவலைகள் உறுப்பினர் களால்
தெரிவிக்கப்பட்டன. இச்சட்ட முன்வடிவானது இன்னமும் நிறைவேற் றப்படாமல்
மாநிலங்களவையில் நிலு வையில் இருந்து வருகிறது. மக்கள வையில் ஏற்கனவே
நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவினை ஆய்வு செய்வதற் காக அமைக்கப்பட்ட தெரிவுக் குழு பரிந்துரை
களை ஏற்கனவே அனுப்பிவிட்டது. அதன் பரிந்துரைகளில் ஒன்று, சிபிஐ
தொடர் பாக மிகவும் விரிவாக ஆராய்ந்து அளிக் கப் பட்டிருக்கிறது. இச்சட்டமுன்வடிவு
மாநிலங்களவை முன் இதுநாள்வரை கொண்டுவரப்படவில்லை. ஆட்சியில் அமர்பவர் எவராக
இருந்தாலும் சரி, மத் தியப் புலனாய்வுக் கழகத்தைத் தங்கள்
நோக்கங்களை நிறைவேற்றிக் கொள் வதற்கானதொரு கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொள்ள
விரும்புவது இயற்கையே. நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையைத் தக்க வைத்துக்கொள்
வதற்காக பல்வேறு அரசியல்கட்சிகளை மிரட்டிப் பணிய வைப்பதிலிருந்து, ‘‘சலுகைசார்
முதலாளித்துவ’’த்தின் மூலமாக நாட்டின் செல்வங்களைச் சூறையாடு வோரைப் பாதுகாப்பதுவரை, சிபிஐ
பயன்படுத்தப்படுகிறது. மேற்கண்டவாறு நாம் முன்வைத் துள்ள மூன்று அம்சங்கள்
குறித்தும் விரைந்து தீர்வுகாணப்பட வேண்டும். இப்பிரச்சனை குறித்து தற்போது அரசாங்
கமும், நீதித்துறையும், நாடாளுமன்றமும் மிகவும் ஆழமாக
ஆராய்ந்துகொண் டிருப்பதால், நீண்டகாலமாக நிலுவை யில் இருந்துவரும்
இப்பிரச்சனை மீது முடிவுகள் மேற்கொள்வதற்கு உண்மை யில் இதுவே சரியான தருணமாகும்.
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment