Tuesday, November 23, 2010
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமாநாடு மாணிக் சர்க்கார் அழைப்பு
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வைரவிழா - 22வது மாநாடு ஏழைகளின் போராட்டத்திற்கு துணை நிற்போம்! காப்பீட்டு ஊழியர்களுக்கு மாணிக் சர்க்கார் அழைப்பு
புதுதில்லி, நவ. 21-
ஆட்சியாளர்களின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகளை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் முறைசாராத் தொழிலாளர்களையும் ஈடுபடுத் திட, அணிதிரட்டப்பட்ட தொழி லாளர் வர்க்கத்தில் மிகவும் கூர் மையான வர்க்கப்பார்வையைக் கொண்டுள்ள இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கம் முக்கிய பாத்திரம் வகிக்க வேண்டும் என்று திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் அறைகூவல் விடுத்தார்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைர விழா ஆண்டில் 22ஆவது பொது மாநாடு, சனிக்கிழமையன்று மாலை புது தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டைத் துவக்கி வைத்து திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் உரை யாற்றினார்.
அப்போது அவர் கூறிய தாவது:
நாட்டின் நலன்களைப் பாது காப்பதில் இன்சூரன்ஸ் துறை மிகுந்த முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக் குப் பல வழிகளில் அது மிகவும் உதவியாக இருந்து வருகிறது.
நமது நாட்டில் இன்சூரன்ஸ் வணிகம் 1880களில் துவங்கியது. அவற்றில் பெரும்பாலான நிறு வனங்கள் கல்கத்தாவில்தான் தங்கள் வணிகத்தை ஆரம்பித் தன. அவை அனைத்தும் தனி யார் நிறுவனங்களாக இருந்த தால் அவை மக்களின் நலன்கள் குறித்தோ, மக்களுக்கு உதவ வேண்டும் என்றோ கவலைப்பட வில்லை. எனவே நாட்டில் ஜன நாயக எண்ணம் கொண்ட மக்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களையடுத்து இந் திய அரசு அவற்றை தேசியமய மாக்க முடிவு செய்தது. 1956இல் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு, ஆயுள் இன் சூரன்ஸ் சங்கம் உருவானது. பின் னர் 1972இல் பொது இன்சூரன்ஸ் துறை அமைக்கப்பட்டது. அத னைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் துறையில் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்பட் டன.
இன்சூரன்ஸ் துறை நாட்டின் வளர்ச்சியில், நாட்டின் அடிப் படை உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதில் மிக வும் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. 2008-09இல் மட்டும் இன்சூரன்ஸ் துறையானது நாட் டின் பல்வேறு பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்காக அரசுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மாக வழங்கி இருக்கிறது.
ஆனாலும் இன்றைய பரிதாப நிலை என்ன? ஆட்சியாளர்கள் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியபின், நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் மீது, நாட் டின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கத் தொடங்கி இருக்கி றது. குறிப்பாக ஆயுள் இன்சூ ரன்ஸ் துறையை குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் பங்குகளைத் தனியாருக் குத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் மக்கள் விரோ தக் கொள்கைகள் காரணமாக சாமானிய மக்கள் கடும் துன் பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். சாமானிய மக்களின் பிரச்சனை களை மிகவும் ஆழமாக நாம் பரிசீலிக்காமல் போனால், இன் சூரன்ஸ் துறையில் உள்ள பிரச் சனைகளும் கடும் சோதனை களுக்குள்ளாகும் என்று அஞ்சு கிறேன். எனவே, சாமானிய மக் களுக்கு எதிராக மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதலை எதிர்த்து முறியடிக்க இன்சூ ரன்ஸ் ஊழியர்களாகிய நீங்களும் முன்வர வேண்டும்.
அதிலும் முக்கியமாக விலை வாசி உயர்வு. நம்முடைய கோரிக்கை, விலைவாசி உயர்வு கட்டுப்படுத் தப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அரசு அதனைச் செய்ய மறுக்கிறது. விலைவாசி உயர் வைக் கட்டுப்படுத்த நாம் பல ஆலோசனைகளை அரசுக்குச் சொல்லி இருக்கிறோம். நாட்டில் பொது விநியோக முறையை வலுப்படுத்தி, அனைவருக்கு மான பொது விநியோக முறையை அமல்படுத்துமாறு கோரினோம். நியாய விலைக்கடைகளின் மூல மாக அத்தியாவசியப் பொருட் களை மானிய விலையில் அளித் திட வேண்டும் என்று கோருகி றோம். ஆனால் அதனைச் செய்ய அரசு மறுக்கிறது. மாறாக கள்ளச் சந்தைக்காரர்களையும், ஊக வணிகர்களையும் கொழுக்கச் செய்யக்கூடிய விதத்தில் அரசு சாமானியமக்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை. சரியாகச் சொல்வ தென்றால் செயற்கைப் பற்றாக் குறையை இத்தகைய பேர்வழி கள் உருவாக்கி விலைவாசியை உயர்த்திடும்போது, அதை அரசு கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக் கொள்கிறது. நாடாளுமன் றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதற்கு உதவிடும் கள்ளச் சந்தைக்காரர்களையும், ஊக வர்த்தகப் பேர்வழிகளையும் கொழுக்கச் செய்வதில் உள்ள அக்கறை, சாமானிய மக்களின் மீது இல்லை. மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, ஓர் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத் திடாவிட்டால், மத்திய அரசு தன் கொள்கைகளை மாற்றிக் கொள் ளாது.
மத்திய அரசு இவ்வாறு மக் கள் விரோதக் கொள்கைகளைத் தான் கடைப்பிடிப்பதோடு மட்டு மல்லாமல், மாநில அரசுகளையும் அவ்வாறே நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது. மத்திய அரசு நாட்டில் பெரும்பகுதியாக உள்ள இளைஞர்களுக்கு வேலையளித் திட எவ்விதமான திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப அது தயாராக இல்லை. மேலும் புதிதாக பணியிடங்களை யும் அது உருவாக்கவில்லை. தான் செய்யாதது மட்டுமல்ல, மாநில அரசுகளையும் அவ்வாறு நடந்துகொள்ளுமாறு அது கட்ட ளையிடுகிறது. ஆனால் இடது சாரி அரசாங்கங்களான மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரபுரா மாநில அரசுகள் அதற்குச் செவி சாய்க்கவில்லை. நாங்கள் அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பியுள்ளோம். புதிய பணி யிடங்களையும் ஏற்படுத்தி வரு கிறோம். இதன்மூலம் இளைஞர் களை நாட்டின் முன்னேற்றத் திற்கான திட்டப் பணிகளைச் செய்திட ஏற்பாடுகளைச் செய் துள்ளோம்.
நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் ஏகபோக முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங் களால், குறிப்பாக தொலைக் காட்சிகளால், தவறான முறை யில் வழிநடத்தப்படுகின்றனர். இவ்வாறு தவறான வழியில் நடத்தப்படும் அவர்களை வென் றெடுத்திட வேண்டும். நாட்டில் பெரும்பான்மையினர் முறை சாராத் தொழிலாளர்கள்தான். அவர்களிடம் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு, ஸ்தாபன ரீதியாகத் திரண்டுள்ள உங்களைப்போன்ற அமைப்புகளால்தான் முடியும்.
எனவே நாட்டிலேயே மிகச் சிறந்த முறையில் ஸ்தாபனரீதி யாகத் திரட்டப்பட்டு, தங்கள் துறையினை அரசின் அழிவுக் கொள்கைகளிலிருந்து பாது காத்து வந்துள்ள நீங்கள், நாட்டில் கடும் துன்பத்திற்கு ஆளாகி யுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை களையும், அணிதிரட்டப்படாத தொழிலாளர்களின் பிரச்சனை களையும் தீர்த்து வைக்க அவர் கள் போராடும்போது அவர்க ளுக்கு உற்ற துணையாக நிற்க வேண்டும்.
இவ்வாறு மாணிக் சர்க்கார் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment