Sunday, November 21, 2010
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் பிரதமரின் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்படுகிறதா?
புதுதில்லி, நவ. 21-
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கின் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்படுவதாக காங்கிரஸ் எழுப்பியுள்ள புகாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. பதில ளித்தார்.
புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலு வலகமான ஏ.கே.கோபாலன் பவனில் ஞாயிறு அன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தின்போது சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தேவையில்லாமல் பிரதமரின் பெயர் இழுக்கப்படுவதாக இப்போது ஒரு முறையீடு காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக அரசாங்கத்திற்கும், ஆளும் கட்சிக் கும், பிரதமருக்கும் நன்கு தெரியும் என்பதற்கு பல ஆதாரங்களை உங்கள் முன் சமர்ப்பித்தி ருக்கிறோம்.
உச்சநீதிமன்றத்தில் தொலை தொடர்பு அமைச்சகத்தின் சார்பாக ஓர் உறுதிவாக்குமூலம் (அபிடவிட்) தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பக்கம் 45-ல் தொலைதொடர்பு அமைச்சகத்தில் எடுக்கப்பட்டுள்ள அத்தனை முடிவுகள் குறித்தும் பிர தமருக்கும், பிரதமர் அலுவலகத்திற் கும் தெரியும் என்றும், பிரதமர் அலு வலகத்திற்கும் அமைச்சகத்திற்கும் இடையே இதில் எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. எனவே, தேவையில்லாமல் பிரதமரின் பெயரை இழுக்கிறார்கள் என்று கூறுவதில் அர்த்தம் எதுவுமில்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஆ. ராசாவும் பிரதமருக்குக் கடிதம் எழுதி யிருக்கிறார். பிரதமரும் ஆ.ராசாவுக் குக் கடிதம் எழுதியிருக்கிறார். 2007 நவம்பர் மற்றும் டிசம்பரில் கடிதப் போக்குவரத்து நடைபெற்றிருக்கிறது. இவ்வாறு இதில் பிரதமர் சம்பந்தப் பட்டிருப்பது தொலைதொடர்பு அமைச்சகத்தால் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உறுதி வாக்கு மூலத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக் கிறது.
சிஏஜி அறிக்கை மீது பொது கணக்கு குழு விசாரணை நடந்தால். ஆனால் அது வெறும் கணக்குக் குழு தான். அதனால் ஊழல் குறித்தோ அதன் பின்னணி குறித்தோ எதுவும் கூற முடியாது. எனவே பொதுக் கணக் குக் குழு மட்டும் போதுமானதல்ல.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர் பாக என்ன செய்ய வேண்டும்? அரசு கஜானாவிற்கு வரவேண்டிய கோடிக் கணக்கான ரூபாய் அரசின் கஜானா விற்கு வராமல் தடுக்கப்பட்டது எப் படி? மிகப் பெரும் ஊழல் நடைபெற் றது எப்படி? இவ்வாறு பெரும் ஊழல் கள் எதிர்காலத்தில் நடைபெறாவண் ணம் தடுத்திட என்ன செய்ய வேண் டும்?
இவற்றிற்கான வழிகாட்டும் நெறி முறைகளைத் தயாரிக்க வேண்டியிருக் கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் அடையாளம் காண வேண்டியிருக் கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. எதிர் காலத்தில் இதுபோன்று நடைபெறா மல் தடுக்க வேண்டியிருக்கிறது. இதனைச் செய்வதற்காகத்தான் ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக் கப்பட வேண்டும் என்று கோருகி றோம்.
கூட்டு நாடாளுமன்றக் குழு மூல மாக புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதனைத் தனி நபர் எவரும் செய்துவிட முடியாது. கூட்டு நாடாளுமன்றக் குழுதான் செய்திட முடியும்.
எனவேதான், கூட்டு நாடாளு மன்றக் குழு அமைத்திட அரசு முன் வர வேண்டும், நாடாளுமன்றத்தை இயங்கவும் செய்திட வேண்டும் என் கிறோம்.
பிரதமரின் நேர்மை குறித்து எவ ரும் வினா எழுப்பவில்லை. அவரது பிழையாத்தன்மை குறித்துத்தான் அனைவரும் வினா எழுப்புகிறார்கள்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment