Monday, March 27, 2017

முதலமைச்சராக ஆதித்யநாத் இந்துத்துவாவின் திருவிளையாடல்



கோரக்நாத் கோவிலின் சாமியார் ஆதித்ய நாத்என்பவரை (இவர் தற்சமயம் கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினராகவும் இருக்கிறார்) உத்தரப்பிரதேச மாநில முதல மைச்சராக தேர்வு செய்திருப்பது, ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் தங்களுடைய எதிர்கால அரசியல் உத்தியாக இந்துக்களை ஒரு முகப்படுத்திடும் நிலையையே பின்தொடர விரும்பியிருக்கிறது என்பதன் தெள்ளத்தெளிவான சமிக்ஞையாகும்.ஆதித்யநாத், கோரக்பூரிலிருந்து 1998இல் மக்களவை உறுப்பின ராகத் தேர்வு செய்யப்பட்ட காலத்திலிருந்தே, முஸ்லிம்களுக்கு எதிராகவிஷத்தைக் கக்குவதிலும், கோரக்பூரிலும் அதனைச் சுற்றியுள்ளமாவட்டங்களிலும் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடுவ திலும் நேரடியாகவே சம்பந்தப்பட்டு வருவது அனைவருக்கும் நன்கு தெரியும். இவர் இந்து யுவ வாஹினி என்னும் ஓர் அமைப்பை உருவாக்கிநடத்தி வருகிறார். இது ஒரு ஆயுதந்தாங்கிய ரவுடிகளின் குழுவாகும். அவருடைய அரசியல் பிரச்சாரம் மற்றும்அவருடைய தேர்தல் பிரச்சாரங் களின்போது காணப்படுவது ஒன்றே ஒன்றுதான். அதாவது முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை உமிழ்தல்.
ஆதித்யநாத் மீது எண்ணற்ற கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
கொலை செய்ய முயற்சி, கலகம், அபாயகரமான ஆயுதங்களை வைத்திருத்தல், மதத்தின ருக்கிடையே மதவெறியை உருவாக்கியமை, மதத் தொழுகை நடக்கும் இடத்தை சேதப்படுத்தி யமை போன்ற எண்ணற்ற குற்றங் களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரது தலைமையின்கீழ் இயங்கும் யுவ வாஹினி அமைப்பின் மிக முக்கியமான வேலையே, பொதுஇடங்களில் நடைபெறும் சிறுசிறுபிரச்சனைகளைக்கூட ஊதிப் பெரி தாக்கி, மதவெறிக் கலவரங்களாக மாற்றுவதாகும்.
இத்தகையதொரு கிரிமினல் பேர்வழியை உத்தரப்பிரதேச முதலமைச்சராக உட்கார வைத்திருக் கிறார்கள் என்றால், அதனை வேண்டும் என்றே உருவாக்கப்பட்ட ஒரு தீர்மானமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.மாநிலத்தில் பாஜக பெரியஅளவில் வெற்றி பெற்றிருப்பதி லிருந்து இதனை நன்கு உணர முடிகிறது.
.பி. வெற்றி, மோடிஷா இரட்டையரின் வெற்றி யாகவே பார்க்கப்பட்டது. நரேந்திரமோடி மக்களிடம் கவர்ச்சிகரமான முறையில் வேண்டுகோள் விடுத்ததன் மூலமாகவும், அமித் ஷாவினுடைய ஸ்தாபனத் திறமை கள் மூலமாகவும்தான் இந்த வெற்றி கிடைத்ததாகக் கூறப்பட்டது. அந்தசமயத்தில் எவரும் ஆதித்ய நாத்தை முதலமைச்சராக முன்னிறுத் திடவில்லை. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து நான்கில் மூன்று பகுதி இடங்களைப் பெற்றிருப்பதானது, முதலமைச்சர் பதவியை இன்னாருக்குத்தான் தர வேண்டும் என்று எந்தத் தலைவரையும் நிர்ப்பந்தம் அளிக்க விடாமல் தவிர்க்கச் செய்துவிட்டது.
எனவே, நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா இரட்டையர், ஆர்எஸ்எஸ்-இன் ஒப்புதலுடன், எப்போதும் பிரச்சனைக்குரிய விதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகவிஷத்தைக் கக்கிவரும் ஆதித்ய நாத்தையே நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக்கிட முடிவெடுத்து ள்ளனர்.தற்போது நாட்டில் பிரதான ஊடகங்களில் ஒரு பிரிவு, ஆதித்யநாத்தின் முகத்தை மாற்றி யமைப்பதற்கான வேலைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இறங்கி இருக்கின்றது.அவருக்குக் கீழ் உள்ள மடங்களில்எப்படி முஸ்லிம்கள் பல்வேறு விதமான பணிகளில் அமர்த்தப் பட்டிருக்கின்றனர்,
எந்தெந்த முஸ்லிம்கள் எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினரான ஆதித்யநாத்தை அணுகி தங்கள் வேலைகளை எல்லாம் செய்து கொண்டுள்ளனர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன. மிகவும் சரியாகச் சொல்வ தென்றால், இந்துத்துவாவின் நோக்கம் இதுதான்:முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருக்கலாம்; ஆனால் அவர்கள் இந்து ராஷ்ட்ரத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டில் இருந்திட வேண்டும். கோரக்பூரில் கடந்த இருபதாண்டு காலமாக இவ்வாறு முஸ்லிம்களை அச்சுறுத்தி அடக்கிஇந்து மகாராஜாவிடம்கூழைக்கும்பிடு போட்டு மனு கொடுக்கும் நபர்களாக மாற்றி வைத்திருக்கின்றனர்.ஆர்எஸ்எஸ்சும், நரேந்திர மோடியும் தங்களுடைய இந்து ராஷ்ட்ரத்தை உந்தித்தள்ளுவதற்காக மிகவும் துடுக்குத்தனமான நட வடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள்.அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்படும் ஒரு நபரை நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வராக அமர வைத்திருக்கிறார்கள்.சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற வெற்றியைக் கொண்டா டும் விதத்தில் பாஜகவின் தலைமை யகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நரேந்திர மோடிபுதிய இந்தியாஉருவாகிக்கொண்டிருப்பதாகப் பேசியிருக்கிறார். அவர் கூறியுள்ளபுதிய இந்தியாஎன்பதன் வடிவமும், மேலீடான பண்பும் என்ன என்பதை ஆதித்யநாத்திற்கு இந்தப் புதிய பொறுப்பை அளித்திருப்பதன்மூலம் அவர் மிகவும் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிட்டார்.
மார்ச் 22, 2017
தமிழில்: . வீரமணி

No comments: