Wednesday, March 1, 2017

ஆர்எஸ்எஸ் என்ற ‘தீமை’க்கு எதிராக போராட்டம் துவங்கிவிட்டது நல்லவர்களே, இடதுசாரிகளுடன் இணைந்து நிற்பீர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு


ஆர்எஸ்எஸ் என்றதீமைக்கு எதிராக போராட்டம் துவங்கிவிட்டது
நல்லவர்களே, இடதுசாரிகளுடன் இணைந்து நிற்பீர்!
தில்லி மாணவர் பேரணியில்
சீத்தாராம் யெச்சூரி அழைப்பு

புதுதில்லி, மார்ச் 1 -மத நல்லிணக்கத்தை வேரறுத்து, மக்கள்ஒற்றுமையைச் சிதைக்கும் ஆர்எஸ்எஸ்- பாஜக மதவெறியர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த, நாட்டு மக்கள் அனைவரும்ஒரணியில் திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத் துள்ளார்.மேலும், நாட்டில் தற்போது நடப்பது, வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான போராட்டம் அல்ல; இதுதவறானவர்களுக்கும் சரியானவர்களுக்குமான போராட்டம் என்றும் யெச்சூரி கூறியுள்ளார்.ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவானஅகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ (ஏபிவிபி) கும்பல், தில்லி மாணவர்கள் மற்றும்பேராசிரியர்கள் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து, செவ்வாயன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற யெச்சூரி, மதவெறியர் களை கடுமையாக சாடினார்.
கருத்தரங்கை நடத்த விடாமல் அராஜகம்
தில்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்டராம்ஜாஸ் கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 21 அன்றுகலாச் சாரப் போராட்டம்என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் உமர் காலித், ஷீல ரெஷித் ஆகியோர்பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்குறித்து பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, பல்கலைக் கழகஏபிவிபிமாணவர் அமைப்பினர், வெளியிலிருந்து ஆர்எஸ்எஸ் குண்டர்கள் பலரையும் கல்லூரிக்குள் அழைத்துவந்து, கருத்தரங்கத்தை நடத்தவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர்.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தேச விரோதிகளின் கூடாரம் என்றும், அங்கிருந்து மாணவர் தலைவர்களை அழைத்துவரக் கூடாது என்றும் கூறி காலித்தனங்களில் ஈடுபட்டனர். இடதுசாரிகள் தேசத் துரோகிகள் அவர்களை அழைத்து வந்து கருத்தரங்கம் நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கருத்தரங்கம் நடைபெற இருந்த அரங்கின் முன்பு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீஸ் கண்முன்பே வன்முறை வெறியாட்டம்
கருத்தரங்கை நடத்த விடாமல், ஏபிவிபிகுண்டர்கள் அராஜகம் செய்வது குறித்து, பல்கலைக்கழக ராம்ஜாஸ் கல்லூரி மாணவர் களும் பேராசிரியர்களும் காவல்துறையிடம் புகார் கொடுக்கச் சென்றனர். அப்போதும் விடாமல், மாணவர்கள் பேராசிரியர்களைப் பின்தொடர்ந்த, ஏபிவிபி- ஆர்எஸ்எஸ் குண்டர்கள் கொடூரத்தாக்குதலை நடத்தினர். மறுபுறம் இந்த தாக்குதலை எதிர்த்து அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
ஆசிரியர்கள்- மாணவர்கள் காயம்
ஆயினும் ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி-யினர் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு நடத்திய இந்த வன்முறையில், ஏராளமான மாணவர்களும், பேராசிரியர்களும் ஊடகத்துறையினரும் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் 12 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். தில்லிப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் பிரசண்டா சக்ரவர்த்தியும் படுகாயம் அடைந்த நிலையில், அவர் நொய்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏபிவிபியினரின் இந்த வன்முறை அனைத்தும் காவல்துறையின் கண் முன்னாலேயே நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
நாடு முழுவதும் கொந்தளிப்பு
ஏபிவிபியின் இந்த திட்டமிட்ட வன் முறை நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில்கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவர்களும், மாணவர் அமைப்புக்களும் கடும்கண்டனங்களைத் தெரிவித்ததுடன், ஆங்காங்கே எதிர்ப்பு இயக்கங்களையும் நடத்தினர்.ஆர்எஸ்எஸ் - ஏபிவிபியின் நடவடிக் கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும் கடும் கண்டனம் தெரிவித்தது.கார்கில் தியாகியான கேப்டன் மன்தீப்சிங்-கின் மகள் குர்மேஹர் கவுர் என்பவரும், ஏபிவிபி வன்முறையைக் கண்டித்து முகநூலில் பதிவிட்டார். இதையடுத்து அவரை பாலியல் வல்லுறவு செய்யப்போவதாக மதவெறியர்கள் மிரட்டவே, இதற்கு எதிராகவும் நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில் தில்லியில் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தில்லி பல்கலை.க்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் செவ்வாயன்று பல்லாயிரக்கணக்கில் தில்லியில் திரண்டனர். அவர்கள் ஆர்எஸ்எஸ்- ஏபிவிபி குண்டர்களுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்ட அவர்கள், மாணவர்கள் பேராசிரியர்களைத் தாக்கிய குற்றவாளி களைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதில் இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் கழகம் உள்ளிட்ட மாணவர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
தில்லியில் உள்ள கல்சா கல்லூரியி லிருந்து தில்லி ஆர்ட்ஸ் ஃபேகல்டி கிரௌண்ட் வரை நடைபெற்ற இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய ாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி.யும் கலந்துகொண்டார். அப்போது, தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி கும்பல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய யெச்சூரி,மதவெறி சக்திகளுக்கு எதிராக, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை அடுத்து இப்போது தில்லிப் பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் வரலாறு படைத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு வகுத்துத் தந்திருப்பது இந்திய தேசியவாதம்; ஆனால், ஆர்எஸ்எஸ் - பாஜக விரும்புவதுபாசிஸ்ட் இந்துத்துவா தேசியவாதம்’; அவர்கள் கூறும் இந்துத்துவா தேசியவாதமானது மக்களை மத அடிப் படையில் பிளவுபடுத்துவது; இத்தனை ஆண்டு காலம் நாம் போற்றிப் பாதுகாத்து வரும் மத நல்லிணக்கத்தை வேரறுப்பது; இதனை நாம் அனுமதிக்க முடியாதுஎன்று கூறிய யெச்சூரி, “இன்று நாம் பெற்றிருக்கும் சுதந்திரத்துடனும், உரிமைகளு டனும் சமரசம் செய்துகொள்ள முடியாது; ஏனெனில் எதிர்காலத்தில் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான அடிப்ப டையே சுதந்திரமும் உரிமையும்தான்என்றார். அந்த வகையில், “இந்தியாவின் எதிர்காலமான மாணவர்கள், என்ன உண்ண வேண்டும், எதனை உடுத்த வேண்டும், எவரெவருடன் நட்பு கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, இதை ஆர்எஸ்எஸ்- பாஜக- ஏபிவிபி குண்டர்கள் தீர்மானிக்க விட முடியாது”; என்று கூறிய யெச்சூரி, “இப்போது நடந்துகொண்டிருக்கும் அரசியல் போராட்டம் என்பது இடதுசாரிகளுக்கும் வலதுசாரி களுக்கும் இடையேயானது அல்ல; இந்தப் போராட்டம் சரியானவர்களுக்கும், தவறானவர்களுக்கும் இடையேயான போராட்டம்; சிறந்ததோர் இந்தியாவை கட்டி எழுப்பிக் கொண்டிருப்பவர்களுக்கும், அதனை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்று துடிப்பவர்களுக்கும் இடையேயான போராட்டம்எனவும் தெரிவித்தார்.“நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றுவிரும்பும் நல்லெண்ணம் கொண்டோர் அனைவரும் இந்துத்துவா வெறியர்களுக்கு எதிராக - இடதுசாரிகள் நடத்தும்போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்என்றும் யெச்சூரி அழைப்புவிடுத்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து. ராஜா எம்.பி. உள்ளிட்டோரும் பேரணி- ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


No comments: