Sunday, October 9, 2016

போர் வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக, பதற்றத்தைத் தவிர்த்திடுக


(People's Democracy தலையங்கம்) நாட்டின் நலன் மீது மோடி அரசாங்கத்திற்கு கொஞ்சமாவது கவலை இருக்குமானால், அது பாகிஸ்தானுடன் சிறுபிள்ளைத்தனமாகச் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதைக் கைவிட்டுவிட்டு, பாகிஸ்தானுடன் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் துவக்கிடவேண்டும். அதே சமயத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்தும் அரசியல்ரீதியாக கவனம் செலுத்த வேண்டியது அவசரமாகும்.
எல்லைக்கோட்டுக்கு அப்பால் அதிரடித்தாக்குதல்கள் நடத்தியது பற்றி அரசுத்தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்து ஒரு வாரம் கழிந்தபிறகும், அந்தத் தாக்குதல் குறித்தும், அதன்மூலம் நாம் அடைந்தவை என்ன என்பது குறித்தும்தெளிவான விஷயங்கள் எதுவும் தெரிய வில்லை. அரசுத்தரப்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிரடிப்படையினரின் இரு குழுக்களால் அங்கே இருந்த ஏழு பயங்கரவாத முகாம்கள்குறிவைத்துத் தாக்கப்பட்டு அழிக்கப் பட்டதாகவும், அதன்மூலம் 38 பயங்கரவாதி களும், அவர்களின் உதவியாளர்களும் கொல்ப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் ஊடகங்களில் ஒருசில, குறிப்பாக தொலைக்காட்சி அலைவரிசைகள், போர் வெறிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஆயினும், இந்த நிகழ்வு நடந்ததாகக் குறிப்பிடப்பட்டு ஒருசில நாட்கள் கழிந்தும்கூட, அன்றிரவு என்ன நடந்தது என்பது குறித்த சங்கதிகள் வெளிச்சத்திற்கு வராமல் இன்னமும் இருட்டாகவே இருக் கிறது. ராணுவரீதியான நடவடிக்கை என்ன வாக இருந்தபோதிலும், நடந்தவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியைச் சுற்றி நறுமணம் கமழக்கூடிய விதத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் செய்திகளை உருவாக்கி அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றன. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் போரில் வெற்றிபெற்று விட்டது போல் வெளியிடும் வெறித்தனமான அறிக்கைகள் சிறுபிள்ளைத்தன மானவைகளாக இருக்கின்றன.
அதிரடித் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பாகிஸ்தான் இன்னமும் வெளிவராமல் இருக்கிறது என்று மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பிரகடனம் செய்திருக்கிறார். திருடனுக்குத் தேள் கொட்டி அவன் கத்தமுடி யாத நிலையில் இருப்பதைப்போல பாகிஸ்தான்இருப்பதாக வெங்கய்ய நாயுடு வர்ணித்திருக்கிறார். இவ்வாறு அறிக்கைகள் வெளியிடு வதன்மூலம் பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டி அது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இவர்கள் விரும்பு கிறார்கள். அதன்மூலம் இங்கே ஒரு போர் நெருக்கடி சூழலை உருவாக்கி அதனைத் தங்கள் சுயலாபத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பார்ப்பதுபோல் தெரிகிறது.இந்திய அரசு கூறுவதுபோல எல்லைக்கோட்டைத் தாண்டி வந்து பாகிஸ்தானுக் குள் அதிரடித் தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற் காக பாகிஸ்தான் அரசு, சர்வதேச ஊடகவியலாளர்களை வரவழைத்து அந்த இடங்களைக்காண்பித்திருக்கிறது. ராணுவத்தினரின் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படும் இடங்களில் அமைதி மற்றும் இயல்பான சூழல் நிலவுவதை மெய்ப்பிக்கும் விதத்தில் சிஎன்என், பிபிசிமற்றும் மேற்கத்திய ஊடகங்கள் ஒளிபரப்பு களைச் செய்திருக்கின்றன. மோடி அரசாங்கம், அதிரடித் தாக்குதல் நடைபெற்றது தொடர்பாக எவ்விதமான வீடியோ சாட்சியத்தையும் வெளியிடவில்லை. இந்திய மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு இடையே சொற்சண்டைகள் நடந்து கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், மேற்கொள்ளப் பட்ட ராணுவ நடவடிக்கையின் விதம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்திட வேண்டியது அரசின் கடமையாகும். அவ்வாறு எதுவும் அரசுத்தரப்பில் செய்யாததன் காரணமாக, அரசாங்கமும், ஆளும் கட்சியும் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே இவ்வாறு போர்வெறிப் பிரச்சாரத்தை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கின்றன என்கிற சந்தேகம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எல்லைக்கோட்டின் இரு பக்கங்களிலும் கூடுதல் ஆயுதப் படையினர் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
ராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் எல்லைக்கோடு மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பஞ்சாப்பில் மட்டும் ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும்வாழ்நிலைகள் இந்த நடவடிக்கைகளால் கடுமையாக சீர்குலைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மக்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். அதிரடித் தாக்குதல் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டபின்னர் ஒருசில நாட்கள் கழித்து, பாரமுல்லாவில் ராணுவம் மற்றும் எல்லைப்பாதுகாப்புப் படையினர் முகாம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது. இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இந்திய ராணு வத்தின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் பதில் நடவடிக்கை எப்படிஇருந்திடும் என்பதை இந்நிகழ்வு வெளிப் படுத்தி இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல்களும் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன. பாதுகாப்புப் படையினர் இந்த அச்சுறுத்தலை மிகவும் சிரமமான மற்றும் மக்கள் பகைமை பாராட்டும் சூழலில் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
ஏனெனில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரித் தாக்குதலுக்காக ராணுவரீதியாக பதிலடி கொடுத்தது வீண் செயல்; அது இருநாடுகளுக்கும் இடையேயான அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்காது என்றும் அதற்கு ஒருநீண்ட நெடிய அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் தேவை.மோடி அரசாங்கம், இப்பகுதியில் நிலவும் அரசியல்-பூகோள எதார்த்த நிலைமைகளை உதாசீனம் செய்திட முடியாது. உரி நிகழ்வு நடைபெற்றதற்குப்பின்னர் மூன்று நாட்கள் கழித்து, அமெரிக்க - பாகிஸ்தான் ராணுவ கலந்தாலோசனைக் குழுக் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்தக்கூட்டமானது, இந்தியாவிற்கும் அமெரிக்கா விற்கும் இடையே நடைபெற்ற இந்திய - அமெரிக்க ராணுவ கொள்கைக் குழுக் கூட்டத்திற்கு இணையான ஒன்றாகும். இஸ்லாமா பாத்தில் நடைபெற்ற அக் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பொதுவான போர்த்தந்திர குறிக்கோள்களை எய்துவதற்கு, அதிலும் குறிப்பாக பயங்கரவாதத்தை ஒடுக்கிட, பிராந்திய உறுதிப் பாட்டை நிலைநிறுத்திட, மற்றும் பாதுகாப்புஒத்துழைப்பு தேவைப்படும் இதர பகுதி களிலும் ஒரு வலுவான ராணுவ உறவினைமுடுக்கிவிட உறுதி எடுத்துக்கொள்வதாக அறிவித்திருக்கின்றன.
ஆப்கானிஸ்தானத்தில் அஸ்ரப் கானி தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசாங்கம் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. தலிபான் படையினர்தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின் றனர். இத்தகைய சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அமெரிக்கா அங்கீகரித்திருக் கிறது. உரி சம்பவத்திற்குப் பின்னர் ஒருசில நாட்கள் கழித்து, பாகிஸ்தானும், ரஷ்யாவும் சேர்ந்து பாகிஸ்தான் மண்ணில் கூட்டு ராணுவபயிற்சிகளை நடத்தி இருக்கின்றன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கூட்டாக ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருப் பதைத் தொடர்ந்து, இது நடந்திருக்கிறது என்பது பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். உலகின் பெரிய வல்லரசுகள் அனைத்தும்- அதாவது அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும்ஐக்கிய நாடுகள் அனைத்தும் - தன்னடக் க்கத்தைக் கடைப்பிடிக்குமாறும், நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறி போகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மோடி அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளன. இதேபோன்ற அறிவுரை பாகிஸ்தான் அரசுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 30 அன்று இந்தி யப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான் நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்டார் என்கிற தகவல், மோடி அரசாங்கம் சர்வதேச கருத்து குறித்து கவலைப்படவில்லை என்பதையே காட்டுகிறது. ஆனாலும், பாஜக அரசாங்கம் வரவிருக்கும் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்களை மனதில் வைத்துக்கொண்டு, தங்களுடைய குறுகிய அரசியல் லாபத்திற்காகவே போர்வெறியை தூண்டிவிட்டிருக்கிறது என்றும், பதற்றத்தைத் தணிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தயாராயில்லை என்றுமே தெரிகிறது. நாட்டின் நலன் மீது மோடி அரசாங்கத் திற்குச் கொஞ்சமாவது கவலை இருக்கு மானால், அது பாகிஸ்தானுடன் சிறுபிள்ளைத் தனமாகச் சண்டை சச்சரவுகளில் ஈடுபடு வதைக் கைவிட்டுவிட்டு, பாகிஸ்தானுடன் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் துவக்கிடவேண்டும். அதே சமயத்தில் காஷ்மீர் பிரச் சனை குறித்தும் அரசியல்ரீதியாக கவனம் செலுத்த வேண்டியது அவசரமாகும்.
(அக்டோபர் 5, 2016)-
தமிழில்: . வீரமணி

No comments: