Monday, October 24, 2016

வரலாற்றுச் சாதனையாளர் ராணா அய்யூப் அ.மார்க்ஸ்



(குஜராத்தின் உள்துறை அமைச்சரும் நரேந்திர மோடியின் மிக மிக மிக நெருக்கமான அந்தரங்க நண்பருமான அமித்ஷா உத்தரவின் பேரில் எடுபிடி ஐ.பி.எஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட படுகொலைகள் என்பதை அமித்ஷாவின் அந்த தொலைபேசி உரையாடல்களின் மூலம் வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்தியவர்தான் ராணா. ஒரு உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனைக்குக் காரணமாக இருந்தவர்தான் அந்த முஸ்லிம் இளம் பெண் ராணா.)
குஜராத் தொடர்பாக குறைந்தபட்சம் இரண்டு ஸ்டிங் ஆபரேஷன்களை (sting operation) தெஹல்கா செய்தது. ஆசிரியர்குழுவில் இருந்த அஷிஷ் கேதன் இந்துத்துவாச் சார்பான ஆய்வாளர் போலச் சென்று அந்தப் படுகொலைகளைச் செய்த பஜ்ரங் தள் தலைவன்கள், கொலை செய்த பழங்குடி அடியாட்கள் எனப் பலரையும் சந்தித்துப் பின்அந்த உரையாடல்கள், அவற்றில் பல நம்இரத்தத்தை உறைய வைப்பவை, தெஹல்காவில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. வெளிவந்த ஒரு வாரத்தில்அதன் முக்கியப் பகுதிகளை மொழியாக்கினேன். ‘குஜராத் 2002: தெஹல்கா அம்பலம்’ எனும்தலைப்பில் 140 பக்கங்களில் விரிவான முன்னுரைப்புகளுடன் நண்பர் விஜயானந்த் (பயணி வெளியீட்டகம்) அதை வெளியிட்டார்.தெஹல்கா செய்த இன்னொரு ஆபரேஷன்தான் இது. இந்த ஆபரேஷனில் இந்தக்கொலைகள் நடந்தபோது (2002) உயர்பதவிகளில் இருந்த காவல் அதிகாரிகள், அரசுச்செயலர்கள், உளவுத்துறைப் பெருந்தலைகள், நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து பின் இந்தக் கொலைகளில் அவருக்குரிய பாத்திரம் வெளிப்படுத்தப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் மாயாகோட்னானி முதலியவர்களை ஏமாற்றி, நட்பாகி, பின் அவர்களைப் பேச வைத்து, உண்மைகளைக் கறந்து வடிக்கப்பட்டதுதான் குஜராத் கோப்புகள். ஆனால் எல்லாம் முடிந்தபின் இறுதியில் தெஹல்கா இதை வெளியிட மறுக்க, இப்போது ராணாவே வெளியிட்டுள்ளார்.ராணா அய்யூப் ஒரு ‘முஸ்லிம் இளம் பெண்’.இதில் ஒவ்வொரு சொல்லும் முக்கியம். ஒருபெண், அதுவும் இளம் பெண், அதுவும் முஸ்லிம்இளம்பெண் இத்தனை துணிச்சலாய் இதைச் செய்துள்ளது நம்ப இயலாத ஒன்று. ராணா இதைச் செய்தபோது அவருக்கு வயது சுமார்26 தான்.. அவர் 1984ல், அதாவது தில்லியில்இந்திரா கொலையை ஒட்டி சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கொடு வன்முறைகளின் காலத்தில் பிறந்தவர். குஜராத்தில் இந்தக் கொடு வன்முறைகள் அரங்கேறியபோது அவருக்குவயது 18. அதற்கு எட்டாண்டுகளுக்குப் பின் இந்த ஸ்டிங் ஆபரேஷனைச் செய்துள்ளார்.ராணாவின் தந்தையும் ஒருபோதில் பத்திரிகையாளராக இருந்தவர். உருது மொழியில் சில கவிதைகளையும் எழுதியவர். அவருடையஅன்னை பாசம் மிக்க எல்லா அன்னையரையும் போல ஒரு அன்னை. அவர்கள் இதன் ஆபத்துகளை அறிந்தனரோ இல்லையோ தடையேதும் செய்யவில்லை. ராணா சோர்ந்து னநயீசநளளiடிnக்கு ஆட்பட்ட தருணங்களில் அவருக்கு ஆறுதல் அளித்தவர்கள். என்ன அற்புதமான மனிதர்கள்.
ஆம், இது மிகவும் ரிஸ்க் ஆன செயல்தான்.ராணா அப்படி ஒன்றும் குஜராத்துக்கு அறிமுகம் ஆகாதவரும் அல்ல.. இந்த ‘ஆபரேஷனுக்கு’ம் கொஞ்சம் முன்னர் அவர், சொராபுதீன், கவுசர் பீவி, பிரஜாபதி ஆகியோரின் போலிஎன்கவுண்டர் என்பது அன்றைய குஜராத்தின் உள்துறை அமைச்சரும் நரேந்திர மோடியின் மிக மிக மிக நெருக்கமான அந்தரங்க நண்பருமான அமித்ஷா உத்தரவின் பேரில் எடுபிடிஐ.பி.எஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட படுகொலைகள் என்பதை அமித்ஷாவின் அந்த தொலைபேசி உரையாடல்களின் மூலம்வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்தியவர்தான் ராணா. இந்தியாவிலேயே காவல்துறைக்குப் பொறுப்பான ஒரு உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனைக்குக் காரணமாக இருந்தவர்தான் அந்த முஸ்லிம் இளம் பெண் ராணா.இப்படி எல்லோருக்கும் அறிமுகமான அந்த முகம், அந்த அழகிய முகம், அந்த அறக்கோபம் மிக்க இளம் முகம்தான் சற்றே தன்னைமாற்றிக் கொண்டு, இல்லை முற்றிலும் மாற்றிக் கொண்டு, மைதிலி தியாகி எனும் உயர்சாதி (காயஸ்தர்) அடையாளத்துடன் களம் புகுந்தது.
ராணா அய்யூப் மைதிலி தியாகி ஆன கதை
காயஸ்தர் வகுப்பைச் சேந்த மைதிலி தியாகியின் தந்தை சம்ஸ்கிருதப் புலமை உள்ளவர்; இந்துப் பண்பாட்டில் பற்றுள்ளவர். மகளுக்கு சீதாப் பிராட்டியின் திருப்பெயர்களில் ஒன்றை இட்டவர். அந்தக் குடும்பம் இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளது. மைதிலி ஒருஆவணப்படத் தயாரிப்பாளர். குஜராத்தின் வளர்ச்சி குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்காக அகமதாபாத் வந்துள்ளார். மைதிலிக்குஒரு உதவியாளன். மைக் எனும் ஒரு ஃப்ரெஞ்சுக்காரன். அவன் ஒரு சுவையான இளைஞன். முழுமையாக மைதிலியுடன் ஒத்துழைக்கிறான்.இப்படி ஒரு கதையை உருவாக்கினால் மட்டும் போதுமா? அதற்குத் தக ஓரளவு உருவத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அமெரிக்க யஉஉநவே உடன் ஆங்கிலம் பேச வேண்டும். அவசரத்தில் நம் இந்தியன் இங்கிலீஷைப் பேசிவிடக் கூடாது. உடலெங்கும் ரகசியக் கேமராக்களைப் பொருத்திக் கொண்டு ‘மெட்டல் டிடெக்டர்களை’ ஏமாற்றி உள்நுழைந்துவேலை தொடங்குகையில் கேமராவின் பொத்தான்களை மறக்காமல் இயக்கி, அப்போது அது உமிழும் சிவப்பு வெளிச்சத்தை மேலங்கியால் லாவகமாக மறைத்து, அதே நேரத்தில் காமிராக்கள் சரியாக அவற்றின் பணியைச் செய்து கொண்டுள்ளனவா என கவனிக்க அவ்வப்போது ஏதாவது ஒரு பொருளைக் கீழே தவறவிட்டுப் பின் குனிந்து அதைஎடுப்பது போல காமிராவை நோட்டம் விட்டு அப்பப்பா, தெரிந்தால் என்ன ஆகும்?எதுவும் ஆகலாம். அவர்களில் பலர் ஏகப்பட்ட என்கவுண்டர்களைச் செய்து புகழ்பெற்றவர்கள். சிங்கால் எனும் அந்த அதிகாரிஇஷ்ரத் ஜெஹான் எனும் 19 வயதுப் பெண்ணைஇதர மூன்று இளைஞர்களுடன் பிடித்துச் சென்று தீர்த்துக் கட்டிய குழுவில் இருந்தவன். இப்படியான தீர்த்துக்கட்டல்களில், தீர்த்துக்கட்டினால் மட்டும் போதாது. தீர்த்துக்கட்டப்பட்டவர்கள் மீது அவதூறுகள் பொழியவேண்டும். ஆனால் அது எளிது. அவதூறுகளைச் சொன்னாலே போதும். அவற்றை நிறுவ வேண்டியதில்லை. அவை நிரூபிக்கப்பட்டவையாகவே ஏற்றுக் கொள்ளப்படும். நீங்கள் நம்புவீர்கள். பத்திரிகைகள் நம்பும். ஏன், நீதிமன்றங்களே நம்பும். இஷ்ரத் ஜெஹான் எனும்அந்த 19 வயதுப் பெண் லஷ்கர் ஏ தொய்பா எனச்சொல்லி ஒரு நாயைப்போலச் சுட்டுக்கொல்லப்பட்டது போல இந்த 26 வயதுப் பெண்ணை அவர்கள் சுட்டுக் கொல்லமுடியாதா?அதுவும் ராணா விஷயத்தில் இது இன்னும் எளிது. பெயரை மாற்றி, அடையாளத்தை மாற்றி சிம்கார்டு வாங்கியவள், பொய்ப் பெயரில் அகமதாபாத்தில் பல இடங்களில் தங்கியவள், முஸ்லிம்… இவை போதாதா கதை கட்ட… கதை முடிக்க.ராணாவின், பின் புகழ் பெற்ற தெஹல்கா இதழ் இருந்தது உண்மைதான். இப்படி அவர்கொல்லப்பட்டிருந்தால் அது உரத்தக் குரல்எழுப்பும் என்பது உண்மைதான். நாமெல்லோரும் கண்டித்து ஸ்டேடஸ் போடுவோம் என்பதும் உண்மைதான். கொஞ்சநாள் இதுபேச்சாகும். ஆனால் ராணா எனும் அந்த இளம்பெண்ணின் கதை… முடிந்தது முடிந்ததுதானே.ஒவ்வொரு ‘ரிஸ்க்கை’யும் தெஹல்காவின் ஷோமா சவுத்ரியையோ தருண் தாஜ்பாலையோ தொடர்பு கொண்டு கேட்டு முடிவெடுக்க இயலாது. அந்தக் கணத்தில் முடிவெடுத்தாக வேண்டும். ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் விளைவைச் சுமக்க வேண்டும். எது நடந்தாலும் அதற்கு அவரே பொறுப்பு. அந்தச் சிலமாதங்கள் அந்தப் பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்? இடையில் depression ஏற்பட்டு மருத்துவர்களையும் சந்திக்க நேர்கிறது.அப்படித்தான் ஒருமுறை உஷா என்றொரு உயர் போலீஸ் அதிகாரி. அவர் மைதிலியை முழுமையாக நம்பியவர்களில் ஒருவர். அவர் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு உடன் வரச் சொல்லி போன் செய்கிறார். எப்படி இருக்கும். ஒரு வேளை போகாவிட்டால் அந்தத் தொடர்புஅற்றுப் போகலாம். கொண்ட பணிக்கு அதுஒவ்வாது. போய்த்தான் ஆக வேண்டும். போகிறார். அதுவும் அவர் வரச் சொன்னது ஒரு மாதிரியான இடம். ஆட்டோகாரரே எரிச்சல் உறுகிறார். இறுதியில் விஷயம் சாதாரணமானதுதான். ஒரு திரைப்படத்திற்குப் போகலாம் என்கிறார். அதுவும் இதுபோல ஒரு அரசியல் படந்தான்.இன்னொரு முறை, ஒரு அதிகாரியுடன் மைதிலி போகும்போது ‘மெட்டல் டிடெக்டர்’க்கு ஆட்படவேண்டிய நிலை. இவர் உடம்பெங்கும் துடுக்குடன் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் அந்த உளவுக் காமிராக்கள்… இன்றோடு கதைமுடிந்தது என அவர் தடுமாறிய தருணம் ஒரு கீழ் மட்ட அதிகாரி ஓடி வந்து இவர்களுக்கு ‘சல்யூட்’ செய்து உள்ளே அழைத்துப் போகிறார்.2002ல் அந்தப் பெருங் கொடுமை நடந்ததோடு அங்கு எல்லாம் ஓய்ந்து விடவில்லை. இப்படியான பெருங் கொடுமைகளைத் தொடர்ந்து நியாயப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேர்கிறது. அதற்கு இன்னும் சில கொலைகளைச் செய்தாக வேண்டும். இப்போது மேற்கொள்ளப்பட்டவை நேரடியான அரச கொலைகள். இதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள் உயர் காவல்துறை அதிகாரிகள். அவர்களுக்கான ஆணை நேரடியாக அன்றைய உள் துறைஅமைச்சர் அமித்ஷாவிடமிருந்து செல்கிறது.இணையாக நரேந்திரமோடியின் உயிருக்குஆபத்து; லஷ்கர் போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன என கதைகள் கட்டப்படுகின்றன. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், ஜி.சி. சிங்கால், அமின் ஆகிய உயர் அதிகாரிகள் களத்தில் இறக்கப்படுகின்றனர். இவை எதுவும் நமக்குத் தெரியாதவை அல்ல. பின் எந்த வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது? இந்த ஸ்டிங் ஆபரேஷன் அளிக்கும் வாசடைட நம்மை வளைத்துப் போடுகிறதா?அது மட்டுமல்ல. சில நுணுக்கமான விவரங்கள் (microscopic details) இந்நூலில் நம் கவனத்தை ஈர்க்கின்றன.
நன்றி : புத்தகம் பேசுது (அக், 2016

No comments: