மோடியின் உண்மையான முகம் எது?
“”முஸ்லீம் பெண்களின்
உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டாமா? அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டாமா? என்பதற்கு
நீங்கள்தான் (மக்கள்) பதில் கூற வேண்டும்.” (தினமணி, 25 அக்.2016)
என்று பிரதமர் மோடி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மஹோபா என்னுமிடத்தில் பேசியதாகக்
குறிப்பிட்டிருக்கிறது,
இதே மோடி 2002இல் குஜராத்தில்
முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் அங்கே அமைக்கப்பட்டிருந்த நிவாரண
முகாம்களில் இருந்த முஸ்லீம் பெண்களைப் பார்த்து என்ன கூறினார் தெரியுமா?
“குஜராத்தில் உள்ளவை
முஸ்லீம்கள் பாதிப்பு நிவாரண முகாம்களா? அல்லது குழந்தை உற்பத்தி செய்யும்
தொழிற்சாலைகளா?,” என்று கிண்டலடித்தார். இவரது பேச்சை என்டிடிவியும், தி இந்தியன்
எக்ஸ்பிரஸ் நாளேனும் வெளியிட்டிருந்தன.
அது எந்த மோடி? இது எந்த
மோடி?
2 comments:
2002 2016....huge gap....
2002 2016....huge gap....
Post a Comment