Friday, October 21, 2016

ஜேஎன்யு மாணவர் நஜீப் எங்கே? மீண்டும் போராட்டக் களமானது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்




புதுதில்லி, அக். 21-
ஜேஎன்யு மாணவர் நஜீப் அகமது காணாமல் போனது தொடர்பாக மாணவர்கள் கிளர்ச்சிப்போராட்டங்கள் நடத்திவருவதைதொடர்ந்து அங்கே 144 தடை உத்தரவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர் கள் நாடாளுமன்ற காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். காவல்துறைஆணையர் எம்.கே. மீனா செய்தியாளர்களி டையே இதனை உறுதி செய்தார்.
ஜேஎன்யு நிகழ்ச்சிப் போக்குகள் குறித்துஇந்திய மாணவர் சங்கம் ஓர் அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜேஎன்யு வளாகத்தில் ஜேஎன்யு மாணவர் நஜீப் அகமது காணாமல் போய் ஏழு நாட்களாகின்றன. இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்தேஜேஎன்யு நிர்வாகம் மிகவும் ஒருதலைப்பட்ச மாகவே நடந்துகொண்டு வருகிறது. நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் நஜீப் மீது மட்டுமே நிர்வாகம் குறைகூறிக் கொண்டிருக்கிறது.வளாகத்திற்குள் வன்முறையைத் தூண்டி யவர்கள் ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள் என்பது அடிக்கோடிட்டுக் கூறப்படவேண்டிய ஒன்றா கும். ஆயினும் நிர்வாகம் ஏபிவிபியைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருக் கிறது, 
மாணவர்களை வகுப்புவாத அடிப்ப்படை யில் பிரித்திட அரை உண்மைகளும், வடிகட்டிய பொய்களும் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.நஜீப்பை விரைந்து கண்டுபிடித்திட வேண்டும். 14ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்திட வேண்டும்.ஜேஎன்யு துணைவேந்தர் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்டு ஜேஎன்யு மாணவர் பேரவை மீதும் அதன் இயக்கத்தின்மீதும் அவதூறு பொழிந்து வருகிறார். 
ஊடகங்களும் ஆர்எஸ்எஸ்/பாஜகவும் ஜேஎன்யுவையும், இடதுசாரி அமைப்புகளையும் மோசமாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.ஜேஎன்யு நிர்வாகம், ஆர்எஸ்எஸ்/பாஜகவின் அரசியல் கட்டளைகளின்கீழ் செயல்படுவ தால், ஜேஎன்யு மாணவர்கள் வெள்ளியன்று உள்துறை அமைச்சகத்தின் முன் கிளர்ச்சியில் ஈடுபட முடிவெடுத்தனர். ஆயினும் அவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தப் பிரச்சனையில் இப்போது தலையிட்டு நஜீப்பைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு தில்லி காவல்துறையினருக்குக் கட்டளை பிறப்பித் திருக்கிறார். காவல்துறை ஆணையர் தலைமையில் மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக் கிறது.
ஜேஎன்யு மாணவர்களுக்கு எதிராக சீர் குலைவாளர்கள் மற்றும் உள்கையாட்கள் மேற் கொள்ளும் தில்லுமுல்லுகளிலிருந்து உஷாராக இருந்து அவர்களைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்றும், ஜேஎன்யு மாணவர்கள் அனை வரும் ஜேஎன்யு மாணவர் பேரவைப் பதாகை யின்கீழ் அணிதிரண்டு, நஜீப்பிற்கு நீதி கோரும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.
 (ந.நி.)

No comments: