Saturday, March 24, 2018

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள், உணர்த்துவது என்ன?



உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவைக்கு, கோரக்பூர் மற்றும் பூல்பூர் ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக எவரும் எதிர்பாராவிதத்தில் அதிர்ச்சிகரமான முறையில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. 2014இல் இந்த இரு தொகுதிகளிலும் இப்போது முதலமைச்சராக இருக்கின்ற யோகி ஆதித்யநாத்தும், துணை முதலமைச்சராக இருக்கின்ற கேசவ் பிரசாத் மௌர்யாவும் தலா மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்கள். இந்தத்தடவை இவ்விரு தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்த பின்னணியில் சமாஜ்வாதிக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் எதிர்கால அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்திடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 2014 மக்களவைத் தேர்தலின் போது பாஜக உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதனை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ் வாதிக் கட்சிக்கு வெறும்5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை.
இப்போது அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் தேர்தல் முடிவுகள் வந்திருப்பது எப்படி? இருதொகுதிகளிலுமே சமாஜ்வாதிக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. பகுஜன் சமாஜ் கட்சி இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற தங்கள் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் வேட்பாளர்எவரையும் நிறுத்திடவில்லை. ஆனாலும், தேர்தல் நடைபெற இருந்த சமயத்தில் அதற்கு ஒருவாரத்திற்கு முன்பு, இரு இடங்களிலும் போட்டியிடும் சமாஜ்வாதிக்கட்சி வேட்பாளர்களுக்கு, பகுஜன்சமாஜ் கட்சி தன் ஆதரவை அறிவித்தது. அவ்வாறு அறிவித்த தோடு மட்டும் நின்றுவிடாமல், தங்கள் கட்சி ஊழியர்களும் ஆதரவாளர்களும் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கிறசெய்தியை அனைவரிடத்திலும் எடுத்துச்சென் றார்கள். இவ்வாறு இரு கட்சிகளும் இணைந்ததன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோரின் வாக்குகள் ஒருங்கிணைந்து ஒரே வேட்பாளருக்கு விழுவதற்கு இட்டுச்சென்றன என்பதையே தேர்தல் முடிவுகள் தெரி விக்கின்றன. இதோடு, கடந்த ஓராண்டுகாலயோகி ஆதித்யநாத் ஆட்சியின்வெறித்தனத்தால் வெறுப்புற்றுள்ளவர்களின் வாக்குகளும் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
முதல் முறையாக...
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில்ஒன்றிணைந்து செயல்பட்டது என்பது இதுவே முதல் தடவையாகும். 1993 சட்டமன்றத் தேர்தலின்போது இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு நல்கியபோது இது குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் நடைமுறையில் அப்போது தேர்தல் கூட்டணி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. தேர்தலுக்குப் பின்னர்தான் இரு கட்சிகளும் இணைந்து, முலாயம்சிங் யாதவை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டு ஓர் அரசாங்கத்தை அமைத்திட இரு கட்சிகளும் முன்வந்தன. இரண்டு ஆண்டுகளில் அந்தக் கூட்டணி உடைந்தது. அதன்பின்னர் இதுவரை இவ்விருகட்சிகளுக்கும் இடையே எவ்விதமான ஒத்துழைப்பும் இருந்ததில்லை.
பாஜகவை தோற்கடிக்கும் தேர்தல் உத்திகள்...
பாஜகவைத் தோற்கடிப்பதற்கு தேர்தல் உத்திகள் எப்படி இருந்திட வேண்டும் என்பதற்கு உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் முக்கியமான படிப்பினைகளை அளித்திருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இந்த அளவிற்கு பாஜக இடங்களைக்கைப்பற்றியிருந்திருக்காவிட்டால், மக்களவையில் அதற்கு இந்த அளவிற்குப் பெரும்பான்மை கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. பாஜக அல்லாத பெரிய கட்சிகள்ஒன்றுபட்டு நின்றால், பின்னர் சிறிய கட்சிகளும் கூட அவற்றின்பின்னே அணிசேர வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகும்.இப்போது நடைபெற்ற இடைத்தேர்தலின் போதும், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ் வாதிக் கட்சிக்கு ஆதரவினை அளித்திட முன்வந்த தைத்தொடர்ந்து, இடதுசாரிக் கட்சிகளும் சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர்களுக்குத் தங்கள் ஆதரவினை அறிவித்தன. இதைத்தொடர்ந்து இதர சிறிய கட்சிகளும் அக்கட்சிக்கு ஆதரவினை நல்கின. காங்கிரஸ் கட்சி தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளாத நிலையில், மிகவும் மோசமான முறையில் வாக்கு களைப் பெற்று தன்னுடைய பிணைத் தொகைகளையும் இழந்தது. எனினும், இவ்விரு கட்சி களும் தங்கள் ஒத்துழைப்பை நீட்டித்திடுமா என்பதையும், அது மாநிலங்களவைத் தேர்தல்வரை நீடிக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் காட்டிடும் இரண்டாவது படிப்பினை என்னவெனில், பாஜகவைத் தோற்கடிப்பதற்கு அகில இந்திய அளவில் ஒரு கூட்டணி உருவாக வேண்டும் அல்லது அனைத்து எதிர்க்கட்சிகளின் முன்னணி உருவாக வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதேயாகும். பாஜகவை எதிர்கொள்ள ஐமுகூ பாணியில் ஒரு கூட்டணியை அமைத்திட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் இது வெற்றி பெறப் போவதில்லை. காங்கிரஸ் கட்சி மாற்றுத் திட்டத்தை முன்வைத்து ஒரு கூட்டணியை உருவாக்கக்கூடிய அளவிற்கான நம்பகத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், தெலுங்கானாவில் உள்ள தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி, ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம் போன்று பல மாநிலக் கட்சிகள், காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதை ஏற்கவில்லை. தங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையேற்பதற்குப் பல கட்சிகள் எச்சரிக்கையாகவே இருக்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசுடன் அகில இந்திய அளவில் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறது.அதேபோன்று, தெலுங்கானா முதலமைச்சர் கே.சி.ராவ் முன்மொழிந்துள்ள பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத சமஷ்டி முன்னணி (Federal Front) யும் தோல்வியையே தழுவும். திமுக, ஆர்ஜேடி போன்ற சில மாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலங்களில் காங்கிரசுடன் கைகோர்த்திருக்கின்றன. மேலும், மாநிலக்கட்சிகளுக்கு மத்தியிலும்கூட கொள்கைகள் மற்றும் மாநில அளவிலான நலன்களைப் பொறு த்தவரை பல்வேறுவிதமான முரண்பாடுகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைவதை இத்தகைய முரண்பாடுகள் தடுக்கின்றன.எனவே, மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் அந்தந்த மாநிலங்களில் உள்ள பாஜகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கக்கூடிய விதத்தில் ஒரு வலுவான தேர்தல் உத்தியைஉத்தரவாதப்படுத்திட வேண்டும். உத்தரப் பிரதேச மாநில இடைத் தேர்தலில் இதுதான் நடந்தது.
ஜோதிபாசுவின் வேண்டுகோள்
இதுதொடர்பாக இதற்கு முன் நடைபெற்ற ஒருநிகழ்வைக் குறிப்பிடுவது நலம் பயக்கும். 1993ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தோழர்ஜோதிபாசு நான்கு நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, பாஜக அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்ட தைத்தொடர்ந்து இத்தேர்தல் நடைபெற்றது. அரசமைப்புச்சட்டம் மற்றும் மதச்சார்பின்மை மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்காக பாஜகவைத் தோற்கடிப்பது அவசியமாக இருந்தது.வாரணாசியில் முதல்நாள் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தோழர் ஜோதிபாசு, உங்கள் தொகுதியில் பாஜக வேட்பாளரைத் தோற்கடிக்கக்கூடிய விதத்தில் இருக்கின்ற கட்சிக்கும், வேட்பாளருக்கும் வாக்களியுங்கள், என்று மக்களுக்கு வேண்டு கோள் விடுத்தார். பாஜகவிற்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்பதே இதன் சாராம்சமாகும். பாஜக தோற்கடிக்கப்பட்டது. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் அரசாங்கம் அமைந்தது.1993இல் உத்தரப்பிரதேச மாநிலத்துடன், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சி செய்த பாஜக அரசாங்கங்களும் பாபர் மசூதி இடிப்பிற்கு அவை ஆற்றியிருந்த பங்களிப்புகளின் காரணமாக, டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் அம்மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இங்கேயும், கட்சி எங்கே சற்றே வலுவாக இருக்கிறதோ அங்கே ஒருசிலஇடங்களில் மட்டும் போட்டியிடுவது என்றும்இதர இடங்களில் பாஜகவைத் தோற்கடிப்ப தற்காகப் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், அப்போதுதான் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் ஒரு சேர ஒரே இடத்தில் சேர்ந்திடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முதன்முறையாகத் தீர்மானித்தது.
இவ்விரு மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிராகவுள்ள பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தது.பாஜகவைத் தோற்கடிப்பதற்காக கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் பின்பற்றப்படவுள்ள உத்தி குறித்து சில மதச்சார்பற்ற வட்டங்களிலிருந்து கேள்விகள் எழும்பின. மோடி அரசாங்கத்தின் பணக்காரர் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்திடுவதற்கான போராட்டங்களை உக்கிரப்படுத்திடவும், மதவெறி சக்திகள் மற்றும் எதேச்சதிகாரத் தாக்குதல்களை எதிர்த்துப்போரிடுவதற்காக ஒரு விரிவான ஒற்றுமையைக் கட்டி எழுப்பிடவும் அந்த அரசியல் நிலைப்பாடு அறைகூவல் விடுத்தது.ஆர்எஸ்எஸ்/பாஜகவிற்கு எதிராக மக்கள் ஒற்றுமையை ஒருமுகப்படுத்திட இந்தப் போராட்டங்களும் இயக்கங்களும் திட்ட மிட்டன. பாஜக பின்பற்றிவரும் இதே நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றிடும் காங்கிரசுடன் ஒரு தேர்தல் கூட்டணியோ அல்லது புரிந்துணர்வோ வைத்துக்கொள்வது எவ்விதப் பயனையும் அளித்திடாது.இத்தகைய நிலைபாட்டின் அடிப்படையில், பாஜகவிற்கு எதிரான வாக்குகளை அதிகபட்ச அளவில் பெறக்கூடிய விதத்தில் தேர்தல் உத்திகளை வகுத்திட முடியும். 1993இல் மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கொண்ட தேர்தல் உத்திகளும், சமீபத்திய உத்தரப்பிரதேச மக்களவை இடைத் தேர்தல்களும் காட்டியதைப்போல, ஒவ்வொரு மாநிலத்திலும், பாஜகவைத் தனிமைப்படுத்தி தோற்கடித்திடுவதற்கு மிகவும் சரியான நடைமுறையாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் கட்சியின் நலன்களைப் பாதுகாத்திடவும் இடது ஜனநாயக சக்திகளை முன்னெடுத்துச் சென்றிடவும் பாதை அமைத்தும் தரும்.
(1993இல்) கட்சி எங்கே சற்றே வலுவாக இருக்கிறதோ அங்கே ஒருசில இடங்களில் மட்டும் போட்டியிடுவது என்றும் இதர இடங்களில் பாஜகவைத் தோற்கடிப்பதற்காகப் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், அப்போதுதான் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் ஒரு சேர ஒரே இடத்தில் சேர்ந்திடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முதன்முறையாகத் தீர்மானித்தது. இவ்விரு மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிராகவுள்ள பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தது.
(மார்ச் 21, 2018)
(தமிழில்: ச.வீரமணி)

Thursday, March 22, 2018

யுத்தம் தொடர்கிறது




ச.வீரமணி
[1927 மே 29 முதல் ஜூலை 4 வரையிலான காலத்தில் ஒரு நாள், லாகூர் ரயில்வே காவல்நிலையத்தில் உள்ள சிறையில் ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படம் இது. லாகூர் குண்டு வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட மாவீரன் பகத்சிங்கிடம், லாகூர் குற்ற புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் கோபால் சிங் பன்னு விசாரித்துக் கொண்டிருந்த காட்சி இது.]
எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 1931 மார்ச் 23 அன்று தியாகி பகத்சிங் மற்றும் அவரது இரு தோழர்கள் தியாகி ராஜகுரு, தியாகி சுகதேவ் லாகூரில் பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார்கள். பகத்சிங் தன்னைத் தியாகப்படுத்திக் கொண்ட சமயத்தில் அவருக்கு வயது வெறும் 23தான். இன்னும் வாழ வேண்டிய காலம் மிக அதிகம் இருந்த சமயத்திலும்கூட, பகத்சிங், தன்னுடைய குடும்பத்தாரும், தன்னை மிகவும் நேசித்தவர்களும் விரும்பியபோதிலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து கருணை எதிர்பார்த்து கடிதம் எதுவும் எழுத மறுத்துவிட்டார். பகத்சிங் காலனிய ஆட்சியாளர்களுக்குக் கடைசியாக எழுதிய மனுவில் (இதனை அவருடைய உயில் என்றும் கூறலாம்), “உண்மையிலேயே வெள்ளையர் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் - அதாவது காலனிய ஆட்சிக்கு எதிராக யுத்தம் புரிந்தார் என்று என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டின்கீழ் உண்மையாக இருப்பார்களேயானால், என்னைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக, சுட்டுக் கொல்லுங்கள்” என்று எழுதியிருந்தார்.
மேலும் அந்த ஆவணமானது, இந்தியா குறித்து அவர் கொண்டிருந்த ஒரு தெளிவான பார்வையை முன்வைத்தது. அதில் அவர் நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள் மீது பிரிட்டிஷார் அல்லது இந்திய “ஒட்டுண்ணிகள்” மூலம் ஏவப்படும் அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய செயற்குழுவில் ‘தேசியவாதம்’ என்கிற சொல்லை உயர்த்திப்பிடித்திருக்கிற இந்த சமயத்தில், பகத்சிங் தேசியவாதம் குறித்து தேசப்பற்றுடனும் கொள்கையுடனும் கூறியுள்ள அணுகுமுறையை, பாஜகவின் “இந்துத்துவா” கொள்கையின் மூளையாக விளங்கிய வி.டி. சாவர்க்கரின் அணுகுமுறையுடன் ஒப்பிடுவது பொருத்தமானதாக இருந்திடும்.1911இல் அந்தமான் செல்லுலர் சிறையில் தன்னுடைய புரட்சிகர நடவடிக்கைகளுக்காக அடைக்கப்பட்டிருந்த வி.டி.சாவர்க்கர், தன்னுடைய 50 ஆண்டு சிறைத் தண்டனை தொடங்கிய ஒருசில மாதங்களுக்குள்ளேயே தன்னை விடுவித்திட வேண்டும் என்று கோரி பிரிட்டிஷாருக்கு மனு எழுதிய நபராவார். பின்னர் மீண்டும் 1913இலும் மற்றும் பல சமயங்களிலும் அந்தமானிலிருந்து இந்தியாவிற்குள் உள்ள சிறை ஒன்றுக்கு 1921இல் இறுதியாக மாற்றப்படும் வரைக்கும், அதன்பின் 1924இல் கடைசியாக விடுவிக்கப்படும் வரைக்கும் பல தடவை அவர் மனுக்கள் சமர்ப்பித்திருந்தார். அவற்றில் அவர், “என்னைப் போகவிடுங்கள்; சுதந்திரத்திற்கான போராட்டத்தை நான் கைவிட்டு விடுகிறேன். காலனிய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.சாவர்க்கருக்குத் தற்போது வக்காலத்து வாங்குபவர்கள், அவர் கூறிய உறுதிமொழிகள் அனைத்தும் ஓர் உத்தி என்று கூறிப் பிதற்றுகிறார்கள். அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகு, அவர் வெள்ளையருக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு இணங்க, சுதந்திரப் போராட்டத்திலிருந்து விலகியே இருந்தார். உண்மையில், அவர் முஸ்லீம் லீக்கின் இரு தேசக் கொள்கையின் மற்றொரு வடிவமாகத் திகழ்ந்த தன்னுடைய “இந்துத்துவா” பிரிவினைக் கொள்கை மூலம் பிரிட்டிஷாருக்கு உதவிக் கொண்டிருந்தார்.1913இல் வி.டி.சாவர்க்கர் அனுப்பிய கடிதத்தின் சாராம்சம்... ஒரு அடிமையின் சாசனம். ஆனால், பகத்சிங் அனுப்பிய கடிதம், முதலாளித்துவ- ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை சாசனம்.
பெறுநர்
பஞ்சாப் ஆளுநர்.
ஐயா,
கீழ்க்கண்ட விவரங்களைத் தங்களுடைய மேலான கவனத்திற்கு மிகுந்த மரியாதையுடன் கொண்டுவருகிறோம். நாங்கள், பிரிட்டிஷ் இந்தியாவின் உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் உள்ள மேதகு வைஸ்ராய் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்ட சிறப்பு லாகூர் சதி வழக்கு அவசரச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட, பிரிட்டிஷ் நீதிமன்றமான, எல்.சி.சி. தீர்ப்பாயத்தின் கீழ் 1930 அக்டோபர் 7 அன்று மரண தண்டனை விதிக்கப் பட்டோம். எங்கள்மீது புனையப்பட்ட குற்றச்சாட்டு, நாங்கள்இங்கிலாந்து அரசர், மேதகு ஜார்ஜ் அரசருக்கு எதிராக யுத்தம் புரிந்தோம் என்பதாகும். நீதிமன்றம், இரண்டு அம்சங்களில் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வந்திருக்கிறது. முதலாவதாக, பிரிட்டிஷ் தேசத்திற்கும், இந்தியத்தேசத்திற்கும் இடையே யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பதாகும். இரண்டாவதாக, நாங்கள் அந்த யுத்தத்தில் பங்கெடுத்திருக்கிறோம் என்றும் எனவே நாங்கள் யுத்தக்கைதிகளாவோம் என்பதுமாகும். இரண்டாவது கூற்று சற்றே எங்களைப் புகழ்வதுபோலஅமைந்திருக்கிறது. எனினும் அவ்வாறு எங்களை நீங்கள் பாராட்டியிருப்பதால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியிலிருந்து எங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரை சில விஷயங்களை ஆழமாகத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த சொற்றொடர் குறிப்பிட்டுள்ளபடி உண்மையில் யுத்தம் எதுவும் நடந்திடவில்லை. எனினும், உங்கள் கூற்றின் செல்லத்தக்க தன்மையை ஏற்றுக்கொள்ள எங்களை அருள்கூர்ந்து அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆனால், இதனைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாங்கள் அதனை மேலும் விளக்கிட வேண்டும்.
இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களும் அவர்களின் இயற்கை வளங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில ஒட்டுண்ணிகளால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும்வரை அதனை ஒழித்துக்கட்டுவதற்கான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்ந்து எதிர்காலத்திலும் நடக்கும் என்று நாங்கள் பிரகடனம் செய்கிறோம். அவ்வாறு சுரண்டுபவர்கள் சுத்தமான பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம், அல்லது பிரிட்டிஷ் மற்றும் இந்திய முதலாளிகளின் கலப்பாகவும் இருக்கலாம் அல்லது சுத்தமாக இந்திய முதலாளிகளாகவும் இருக்கலாம்.
தங்களுடைய கபடத்தனமான சுரண்டலை இருதரப்பினரும் கலந்தோ அல்லது பூரணமாக இந்திய அதிகார வர்க்க எந்திரத்தைக் கொண்டோ முன்னெடுத்துச் செல்லலாம். இவை அனைத்திலும் எந்தவித வித்தியாசமும் இல்லை. உங்கள் அரசாங்கம், சில்லரைச் சலுகைகள் மற்றும் சமரசங்கள் மூலமாக, இந்திய சமூகத்தின் உயர் அடுக்குத் தலைவர்களை திருப்திப்படுத்தி, சமரசம் செய்து, அவர்களை வென்றிருக்கக் கூடும். அதன் மூலமாக போராடும் சக்திகளிடையே ஒரு தற்காலிக அறநெறிப் பிறழ்வை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.
அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.போராட்டக்களத்தினூடே, இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணிப் படையினரால், புரட்சிக் கட்சித்தனித்து விடப்பட்டபோதிலும், அதைப்பற்றி எங்களுக்குக்கவலை இல்லை. எங்கள் மீது தனிப்பட்டமுறையில் இரக்கத்தைக் காட்டிடும் தலைவர்களுக்காகத் தனிப்பட்டமுறையில் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். எனினும், விடுதலை இயக்கத்தில் முன்னின்று போராட்டத்தில் ஈடுபட்ட வீடற்றவர்களுக்காகவோ, எதுவுமற்ற பெண் தொழிலாளர்களுக் காகவோ, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட சமயத்தில் எதுவுமே கூறாது மவுனம் சாதித்தது குறித்தும் எங்களுக்குக் கவலை இல்லை. உங்கள் அகிம்சைக் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்ற விதத்தில் இந்த நாட்டின் விடுதலைக்காக, தங்கள் கணவன்மார்களை இழந்து, சகோதரர்களை இழந்து, தங்கள் உயிருக்குயிராய் நேசித்த எண்ணற்றவர்களை இழந்து வீர மரணம் எய்திய வீராங்கனைகளைப்பற்றி உங்கள் தலைவர்கள் ஒருவார்த்தை கூட கூறாதது மட்டுமல்ல, உங்கள் அரசாங்கம் அந்தத் தியாகிகளையெல்லாம் சட்டத்திற்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்தியதைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை.
உங்கள் ஏஜண்டுகள் எவ்வித அடிப்படையுமின்றி அவர்கள் குறித்தும், அவர்களின் கட்சிக்குக் களங்கத்தைஏற்படுத்த வேண்டும் என்ற விதத்திலும், அவதூறை அள்ளி வீசியபோதிலும் எங்களுக்குக் கவலை இல்லை. யுத்தம் தொடரும். அது பல சமயங்களில் பல வடிவங்களை எடுத்திடும். சில சமயங்களில் வெளிப்படையாக இருக்கும். சில சமயங்களில் மறைந்திருக்கும். இப்போது முழுக்க முழுக்க கிளர்ச்சி அடிப்படையானதாக, இப்போது வாழ்வா சாவா என்கிற வீரம் செறிந்த போராட்டமாக நடக்கிறது.
எங்கள் போராட்டம் அமைதி வழியிலானதா அல்லது இரத்தம் சிந்தக்கூடியதா, எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்களைச் சார்ந்தே இருக்கிறது.
உங்களுக்கு எது விருப்பமோ அதைத் தெரிவு செய்திடுங்கள். ஆனால், சிறிய அளவிலான மற்றும் அர்த்தமற்ற தத்துவங்களை எல்லாம் சுமந்துகொள்ளாமல் இந்த யுத்தம் எவ்வித சமரசமுமின்றி தொடரும். சோசலிசக் குடியரசை நிறுவும்வரை, இப்போதுள்ள சமூக அமைப்பை முற்றிலுமாக மாற்றி அமைக்கும்வரை, மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும்வரை மனித குலம் உண்மையான மற்றும் நிரந்தரமான அமைதியைப் பெறும் காலம் வரை இந்த யுத்தம் தொடரும். விரைவில் நிரந்தர யுத்தம் மேற்கொள்ளப்பட்டு, நிர்ந்தரத் தீர்வு எட்டப்படும்.
முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த யுத்தம் எங்களால் தொடங்கப்பட்டதும் இல்லை அல்லது எங்களுடனும் முடிந்துவிடாது. வரலாற்று நிகழ்வுகளும் தற்போதுள்ள சுற்றுச்சூழலும் மாற்றத்தைக் கொண்டுவருவது என்பதுதவிர்க்கமுடியாததாகும்.
எங்கள் பணிவான தியாகங்கள் என்பவை தியாகிகள் ஜதின் தாஸ் மற்றும் தோழர் பகவதி சரண் மற்றும் வீர மரணம் எய்திய சந்திர சேகர் ஆசாத் ஆகியோரின் தியாகத்துடன் பின்னிப்பிணைந்தவைகளாகும். எங்கள் விதியை நிர்ணயம் செய்வது தொடர்பாக, நீங்கள் எங்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்என்று தீர்மானித்தால், (நிச்சயமாக அதை நீங்கள் செய்வீர்கள்.) அது தொடர்பாக ஒருசில வார்த்தைகள் கூற எங்களை அனுமதியுங்கள். உங்கள் கைகளில் அதற்கான அதிகாரம் இருக்கிறது. அதிகாரம் படைத்தவனே உலகில் நீதிமானாவான். “வல்லவன் வகுத்ததே சரி” என்கிற பழமொழி எங்களுக்குத் தெரியும். அதைத்தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்கள் வழக்கு நடத்தப்பட்ட லட்சணமே அதைத் தெளிவாகக் காட்டும். உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக யுத்தம் நடத்தினோம் எனவே யுத்தக் கைதிகளாக இருக்கிறோம் என்பதைச்சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே அவ்வாறே எங்கள் மரணமும் அமைந்திட வேண்டும் என்று விரும்புகிறோம். அதாவது, நாங்கள் தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். உங்கள் நீதிமன்றம் சொல்லியிருப்பதை நீங்கள் உண்மையில் புரிந்துகொண்டிருக்கிறீர்களா என்பது நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. எங்கள் மரணத்தை நிறைவேற்றிட ராணுவத்துறையிலிருந்து ஒரு பிரிவை அனுப்பி வைத்திட ஆணை பிறப்பிப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்; விரும்புகிறோம்.
தங்கள்,
பகத்சிங்.



Monday, March 12, 2018

Sitaram Yechury on the discussion on commitment to India's constitution as part of the 125th Birth Anniversary celebration of Dr. B.R. Ambedkar.

Sitaram Yechury on amendment to constitution (for GST Bill)

Sitaram Yechury on GST

Sitaram Yechury on India's Foreign Policy

Short Duration Discussion on the draft National Education Policy - 2016. Aug 11, 2016

Sitaram Yechury on Hamid Ansari's farewell

மக்களின் நலன்களுக்காக மார்க்சிஸ்ட்டுகள் போராடுவதை-மதவெறியர்களால் தடுத்திட முடியாது சீத்தாராம் யெச்சூரி


  


மக்களின் நலன்களுக்காக மார்க்சிஸ்ட்டுகள் போராடுவதை
மதவெறியர்களால் தடுத்திட முடியாது  சீத்தாராம் யெச்சூரி
அகர்தலா, மார்ச் 13-
பாஜக தலைவரின் முழக்கம் எதிர்க்கட்சி இல்லா இந்தியா உருவாக்கும் என்பது. முதலில் எதிர்க்கட்சி இல்லா திரிபுரா, பின்னர் எதிர்க்கட்சி இல்லா இந்தியா என்று கூறிக்கொண்டிருக்கிறார். இவர்கள் ஆசை ஈடேறாது. நாங்கள் மக்களுடன் இருப்பவர்கள். மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்கள். எவ்வளவுதான் அடக்குமுறை வெறியாட்டங்களை நீங்கள் ஏவினாலும் மக்களின் நலனுக்காக நாங்கள் போராடுவதை உங்களால் பறித்திட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
திரிபுரா மாநிலத் தலைநகரான அகர்தலாவில்  ஞாயிறு அன்று மாலை 7.30 மணியளவில் சீத்தாராம் யெச்சூரி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கடந்த இரண்டு நாட்களாக திரிபுரா மாநிலம் முழுதும் சுற்றிப்பார்த்தேன்.  நேற்றைய தினம் வட திரிபுராவிலும் இன்று தெற்குத் திரிபுராவிலும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைச் சுற்றிப்பார்த்தேன். இவ்வாறு நான் பார்த்தவற்றிலிருந்தும் ஊடகங்களில் வெளியாகி இருக்கிற தகவல்களிலிருந்தும் எங்களுக்குத் தோழர்கள் அனுப்பியுள்ள செய்திகளிலிருந்தும் கிடைத்துள்ள விவரங்கள் தெளிவாகத் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால் இம்மாநிலத்தில் நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்கள் எங்களை அச்சுறுத்தி, அடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜகவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கையாகும். எங்கள் தோழர்களின் வீடுகள் மட்டுமல்ல, நன்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய சந்தைப் பகுதிகளைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. கடுமையானமுறையில் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள். இதனால் பல கடைகள் மூடி இருந்தன. இதுகுறித்து அவர்களிடம் நாங்கள் கேட்டபோது  வன்முறைகள் தொடருமோ என்ற பயத்துடன்தான் நாங்கள் கடைகளைத் திறக்கவில்லை என்று தெரிவித்தார்கள். அநேகமாக ஒரு சில நகரப்பகுதிகளைத்தவிர கிராமப்புறங்கள் முழுமையாக வெறிச்சோடிக் கிடக்கின்றன.
வன்முறை வெறியாட்டங்களை பாஜகவினர் எப்படி மேற் கொண்டிருக்கிறார்கள்?
 முதலில் வீடுகளைக்  கொள்ளையடித்துள்ளனர். பின்னர் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். பல இடங்களைத் தாங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். தங்களுடன் கொண்டுவந்த பூட்டுகளைப் போட்டு பூட்டி வைத்துள்ளனர். இது இனி எங்கள் வீடு என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒருசில இடங்களில் தங்களுடைய வர்ணத்தை அடித்திருக்கின்றனர். எங்கள் தோழர்களை அச்சுறுத்தி தங்கள் சொந்தவீடுகளிலிருந்து அவர்களை விரட்டி அடித்திருக்கின்றனர்.
இவற்றிலிருந்து தெரியவருவதுஎன்னவென்றால் இவை அனைத்தும் ஏதோ திடீரென்று தன்னிச்சையாக ஏற்பட்டது அல்ல, மாறாக நன்கு முன்கூட்டியே திட்டமிட்ட  வன்முறைத் தாக்குதல்களே என்பதாகும். சிலைகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியிருப்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல்களேயாகும்.
இவ்வாறு இவர்கள் சிலைகளை உடைத்ததன்மூலம் நாம் மேற்கொண்டிருக்கிளற தத்துவத்தை அடித்து ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற தத்துவத்தை இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள் மூலமாக அடக்கிவிடமுடியாது. அது மேலும் எங்களை பதப்படுத்திடும். எங்கனை மேலும் உருக்குபோன்று உருவாக்கி எங்கள் முன்னேற்றத்தை மேலும் வேகமாக உந்தித்தள்ளும்.  
பாஜக தலைவரின் முழக்கம் எதிர்க்கட்சி இல்லா இந்தியா உருவாக்கும் என்பது. முதலில் எதிர்க்கட்சி இல்லா திரிபுரா, பின்னர் எதிர்க்கட்சி இல்லா இந்தியா என்று கூறிக்கொண்டிருக்கிறார். இவர்கள் ஆசை ஈடேறாது. நாங்கள் மக்களுடன் இருப்பவர்கள். மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்கள். எவ்வளவுதான் அடக்குமுறை வெறியாட்டங்களை நீங்கள் ஏவினாலும் மக்களின் நலனுக்காக நாங்கள் போராடுவதை உங்களால் பறித்திட முடியாது.

புதிதாக இம்மாநிலத்தில் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் புதிய அரசாங்கத்தின்  முன் உள்ள கடமைகள்
1.                            தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள். இன்று காலையில் கூட தாக்குதல்கள் நடைபெற்றன. நான் பார்க்கச் சென்ற பெலோனியா மற்றும் சில இடங்களில் இன்றைக்கு வைத்த தீ, எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். இவ்வாறு மாநிலம் முழுதும் வன்முறை வெறியாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இவர்கள் முன்னரே நன்கு திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். இத்தகைய வன்முறை வெறியாட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
2.                            எங்கள் தோழர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியது, தீக்கிரையாக்கியது மட்டுமல்ல. எங்கள் தோழர்களையும் கடுமையாகத் தாக்கி இருக்கிறீர்கள். இவ்வாறு உடைமைகளை சேதப்படுத்தியதற்கும், தோழர்களைக் காயப்படுத்தியதற்கும் உரிய இழப்பீடுகளை புதிய அரசு அறிவித்திட வேண்டும்.
3.                            தாக்குதல்களில் நிறைய தோழர்கள் காயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும். இதற்கான பொறுப்பை புதிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
4.                            பல இடங்களில் வன்முறையாளர்கள் மிரட்டிப் பணம் பறித்திடும் வேலைகளில் இறங்கியுள்ளார்கள்.  எங்கள் தோழர்களின் வீடுகளுக்குச் சென்று, வீட்டிலுள்ள பெண்களிடம், “உங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால், உங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் பாதுகாப்புடன் போய்விட்டுத் திரும்ப வேண்டுமானால், லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும்,” என்று மிரட்டிச் சென்றுள்ளார்கள். இத்தகைய மிரட்டல்களுக்கு புதிய அரசு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.
5.                            எங்கள் தோழர்களின் வீடுகளையும், எங்கள் கட்சி அலுவலகங்களையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித் திருக்கிறார்கள். அவற்றை உடையவர்களிடம் உடனடியாகத் திருப்பித் தந்திட வேண்டும். ஒருவரின் இடத்தை இன்னொருவர் தட்டிப்பறிப்பது இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரான செயல். இந்த அரசாங்கம் இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ்தான்  பதவிப்பிரமாணம் செய்து கொண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது. எனவே அரசமைப்புச்சட்டத்தின் வரையறைகளின்படி அது நடந்து கொள்ள வேண்டும். வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டுள்ள இடங்களை அதன் உரிமையாளர்களிடம் மீளவும் ஒப்படைத்திட வேண்டும்.
6.                            மாநிலத்தில் வன்முறையாளர்களால் பலர் அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருப்பதால் அவர்களால் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு மீண்டும் செல்ல முடியவில்லை. அவ்வாறு செல்ல முடியாததால் அவர்கள் சம்பளத்தை இழக்கும் அபாயமும், வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவ்வாறு அச்சுறுத்தல் மூலம் விரட்டியடிக்கப்பட்டவர்களை, மீளவும்  வீடுகளுக்கும், பணியிடங்களுக்கும் திரும்புமாறு புதிய அரசு அழைப்பு விடுத்திட வேண்டும். இது புதிய அரசின் பொறுப்புமாகும்.
புதிய அரசாங்கத்தின் முன் உள்ள அடிப்படைப் பொறுப்புகள் இவை ஆகும். இவற்றைப் புதிய அரசு உடனடியாகச் செய்திட வேண்டும்.
நம் நாட்டில், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கத் தேர்தல்கள் நடக்கும். ஒரு கட்சி வெற்றி பெறும். ஒரு கட்சி தோல்வியுறும். வெற்றி பெற்ற கட்சி, தோல்வியடைந்த கட்சி மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது ஜனநாயக முறையல்ல. அது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். நம் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானதாகும்.  இதனை அனுமதிக்க முடியாது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ள முதலமைச்சரும், இதர அமைச்சர்களும்  அரசமைப்புச்சட்டத்தை மீறும் செயல்களாகும். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.
இவை அனைத்தையும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் செய்திட வேண்டும்.
அடுத்ததாக இங்கே அமர்ந்திருக்கிற செய்தியாளர்களிடம் நான் கூற விரும்புவது, இரண்டு நாட்களாக நான் திரிபுராவில் நடந்துள்ள வன்முறைகளை எல்லாம் பார்த்து வந்திருக்கிறேன். ஆனால் இங்கு வெளிவரும் ஊடகங்களைப் பார்த்தோமானால் இம்மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் குறித்து அநேகமாக எதுவுமே அவை வெளியிடவில்லை. நடந்துள்ள வன்முறைகள் குறித்து எதுவும் பிரசுரிக்கப்படவில்லை.  அந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் பத்திரிகை உரிமையை, ஊடகங்களின் உரிமையைப் பறித்து வைத்திருக்கிறார்கள். இதனைப் புதிய அரசு கைவிட வேண்டும். ஊடகங்களும் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சிடாமல் செய்திகளை வெளியிட வேண்டும்.”
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
(ந.நி.)


Sitaram Yechury on issues of HSU and JNU--Don't teach us patriotism

Sitaram Yechury on demonetization

Sitaram Yechury on atrocities on dalits and minorities.on 19.7.17

Sitaram Yecchury on Quit India Movement

Q

Sitaram Yechury's speech on farewell address on 10-0802917

Friday, March 9, 2018

திரிபுரா தேர்தல் முடிவு



 தலையங்கம்
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், ஓர் எதிர்பாராத தீர்ப்பினை அளித்திருக்கிறது. பாஜக-ஐபிஎப்டி கூட்டணி வாக்குப்பதிவில் 50.5 சதவீத (பாஜக - 43 சதவீதம், ஐபிஎப்டி 7.5 சதவீதம்) வாக்குகளைப் பெற்று மொத்தம் உள்ள இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த, 1993இலிருந்து தொடர்ந்து ஐந்து தேர்தல்களிலும் அபரிமிதமான வெற்றியைப் பெற்ற இடது முன்னணி, இப்போது 45 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிற போதிலும்,  சட்டமன்ற இடங்களைப் பொறுத்தவரை வெறும் 16 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.
நாடகக் காட்சி போல எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது?  மாநிலத்தில்  இயங்கிவந்த அரசியல் கட்சிகளில் மிகப்பெரிய அளவில் இடப்பெயர்வு ஏற்பட்டிருப்பது ஒரு முக்கிய காரணமாகும். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி  பாரம்பர்யமாக மிகப்பெரிய இரண்டாவது கட்சியாக இதுவரை இருந்து வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சியாக அதுதான் இருந்து வந்தது. 1988இல் நடைபெற்ற தேர்தல்களின் போது அந்தவிதத்திலேயே அக்கட்சி கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன், வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, தேர்தலின்போது மோசடி  நடவடிக்கைகளில் இறங்கி, நிருபன் சக்ரவர்த்தி தலைமையிலிருந்த இடது முன்னணி அரசாங்கத்தை அகற்றியது. அப்போதிருந்த காங்கிரஸ் – டியுஜேஎஸ் கூட்டணி அரசாங்கம், அரைப்பாசிச அடக்குமுறைக்கு பேர்போன ஓர்  அரசாங்கமாக செயல்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களில் 350 பேரை கொன்று குவித்தது.
இப்போது மாநிலத்தில் பிரதானமாக இருந்த இந்தக் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக பாஜகவிற்குத் தாவி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை  உள்ள அனைத்துப் பேர்வழிகளையும் பாஜக தன் வசம் இழுத்துக்கொண்டுசென்றுவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் இருந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்களில் ஏழு பேர், முதலில் திரிணாமுல் காங்கிரசுக்குச் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து வெகுவிரைவிலேயே  பாஜகவிற்குத் தாவி விட்டார்கள்.
இதன் காரணமாக, 2013 சட்டமன்றத் தேர்தலின்போது, 36.54 சதவீத அளவிற்கு வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தடவை நடைபெற்ற தேர்தலில் வெறும் 1.8 சதவீத வாக்குகள்தான் கிடைத்திருக்கிறது. காங்கிரசுடன் கைகோர்த்திருந்த ஐஎன்பிடி (INPT-Indigenous National Partty of Tripura) கட்சி பெற்றிருந்த வாக்கு சதவீதம் 8.1 சதவீதத்திலிருந்து, 0.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
பாஜக நிறுத்தியிருந்த வேட்பாளர்களில் பலர், வெறிபிடித்த கம்யூனிஸ்ட் எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்களேயாவர். இதன் விளைவாக, பாஜக-வானது தன்னுடைய வெறிபிடித்த கம்யூனிஸ்ட் எதிர்ப்புடன் காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வாக்குகளையும் ஒருமுகப்படுத்த முடிந்துள்ளது. அதேபோன்று,  பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த பழங்குடியினர் கட்சியான  ஐபிஎப்டி, காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த ஐஎன்பிடி என்கிற பழங்குடியினர் கட்சியை ஒன்றுமில்லாததாக மாற்றி அதனுடைய தளத்தையும் கையகப்படுத்த முடிந்திருக்கிறது. பாஜக கூட்டணி 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் வாங்குவதற்கு இவை மட்டுமே காரணம் அல்ல. வேறு பல காரணிகளும் உண்டு.   
மாநிலத்தில் தேர்தலுக்கு முன், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பாஜக கூட்டணி, பணத்தை வாரி இறைத்தது. தேர்தலுக்கு வெகு காலத்திற்கு முன்பே, இதர முதலாளித்துவக் கட்சிகளிலிருந்த வேட்பாளர்களை விலைக்கு வாங்கிட மிகப்பெரிய அளவில் பணம் புகுந்து விளையாடியது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சாமானிய ஊழியர்களுக்கு மொபைல் போன்களும், மோட்டார் சைக்கிள்களும் விநியோகிக்கப்பட்டதுடன் அவர்களின் பலவிதமான  இழிவான  தரம் தாழ்ந்த ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. ஒட்டுமொத்த முதலாளித்துவ ஊடகங்களும் பாஜகவின் அடிமையாகி, இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்மறைப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருந்தன.  
பாஜக, மாற்றம் என்னும் கோஷத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இது இளைய தலைமுறையினர் மத்தியில், குறிப்பாக நகர்ப்புறம் மற்றும் பழங்குடி இளைஞர்களிடையே, ஓர் ஈர்ப்பினை ஏற்படுத்தியிருப்பது போலவே தோன்றுகிறது.  இடது முன்னணி அரசாங்கம் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை செய்திருந்தபோதிலும், படித்த இளைஞர்களுக்கு வேலைகளை உருவாக்குவது என்பது அதற்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. தொடர்ந்து ஆட்சியிலிருந்து வந்த இடது முன்னணி அரசாங்கங்கள், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்குக் கல்வி வசதிகளை மிக விரிவான அளவில் கொண்டு சென்றிருந்ததன் மூலமாக, கல்வி கற்ற இளைஞர்களின் எண்ணிக்கை, குறிப்பாக பழங்குடியின இளைஞர்களின் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.  திரிபுரா என்பது கிட்டத்தட்ட வங்கதேசத்தால் மூன்று பக்கங்களும் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதியாகும். இம்மாநிலம் பூகோளரீதியாக மிகவும் ஒதுங்கிய நிலையில் இருப்பதாலும், போதுமான  அளவிற்குத் தகவல் தொடர்புகள் இல்லாததாலும்,  மாநிலத்திற்குள் முதலீடுகளையும், தொழில்பிரிவுகளையும்  ஈர்ப்பதென்பது மிகவும் சிரமமாக இருந்தன. அரசாங்க வேலைகள் மட்டும்தான் பிரதான வேலைவாய்ப்பாக இருந்தன. இதனையும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு மேல் செய்ய முடியவில்லை.
மாநிலத்தில் வெகுகாலம் இருந்த பயங்கரவாதிகளின்  கலக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படுத்தி, ஓர் அமைதியான மற்றும் ஸ்திரமான மாநிலத்தை இடது முன்னணி அரசாங்கம் உத்தரவாதப்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து எழுத்தறிவு மற்றும் பல்வேறு சமூக நலக் குறியீடுகளிலும் அபரிமிதமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது. ஆயினும், மத்தியில் மோடி அரசாங்கம் அமைந்தபிறகு, கடந்த மூன்றாண்டுகளில், மாநில  அரசு மேற்கொண்டுவந்த நலம்சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி, கடுமையாக வெட்டிக் குறைக்கப்பட்டது. இதன்காரணமாக நாட்டிலேயே இம்மாநிலத்தில் மிகச் சிறப்பாக நிறைவேற்றுப்பட்டு வந்த இத்திட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளானது. அதேபோன்று, பொது விநியோக முறைக்கு ஒதுக்கப்பட்டு வந்த உணவு தான்யங்களும் கடந்த மூன்றாண்டுகளில் மிகப் பெரிய அளவிற்கு வெட்டப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணி அரசாங்கமும் கடந்த நாற்பது ஆண்டுகளாக பிளவுவாத மற்றும் பிரிவினைவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வந்த  மாநிலத்தில் பழங்குடியினர் – பழங்குடியினரல்லாதார் ஒற்றுமையை உருவாக்குவதில் வரலாற்றுச்சிறப்புமிக்க பங்களிப்பினைச் செய்திருந்தது. வட கிழக்க மாநிலங்களில் பல்வேறு இனக்குழுக்களிடையே ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதிலும், நல்லிணக்கத்தைப் பேணுவதிலும் நல்லதொரு அரசாங்கமாக திரிபுரா மாநில அரசு திகழ்ந்தது. இருப்பினும் கூட, பாஜக – ஐபிஎப்டி கூட்டணியால், பழங்குடியின மக்கள் மத்தியில் கணிசமான அளவிற்கு ஆதரவினை வென்றெடுக்க முடிந்திருக்கிறது.
பழங்குடியின மக்களில் ஒருசில பிரிவினர் நம்மைவிட்டு விலகிச்சென்றிருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை,  கட்சி வெகு எச்சரிக்கையாக ஆய்வு செய்திட வேண்டியிருக்கிறது.  இடது முன்னணி அரசாங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துக்களின் செயல்பாடுகளில் மக்களுடனான தொடர்பு பலவீனமடைந்ததா என்பதை விமர்சனரீதியாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இத்தகையதொரு விமர்சனரீதியான ஆய்வு கட்சி ஸ்தாபனம் மற்றும் வெகுஜன அமைப்புகளின் வேலைகளுக்கும் தேவைப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழு, மக்களின் கோரிக்கைகளுக்காக மக்களுடன் ஒன்றுபட்டு நின்று போராடியதில், பெருமிதம் கொள்ளக்கூடிய அளவிற்குப் பதிவினை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, கட்சி, இத்தகைய ஆழமான பின்னடைவுகள் ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிந்திடவும், இவற்றைச் சரிசெய்திடத் தேவையான அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏதேனும் எதிர்மறைப் போக்குகள் அல்லது பலவீனங்கள் இருப்பின் அவற்றைக் களைந்திடவும் வேண்டும்.
மார்ச் 3 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, உடனேயே, மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க அலுவலகங்கள் மிகவும் விரிவான அளவில் தாக்குதல்களுக்கு உள்ளானதைப் பார்த்து வருகிறோம். கட்சித் தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகள் தாக்குதல்களுக்கு ஆளாகிவருகின்றன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள். பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல்கள் கட்சியையும் இடது முன்னணியையும் அடக்குமுறை மூலம் நசுக்கிட முனைந்துள்ளன. லெனின் சிலை தகர்க்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இத்தாக்குதல்களை எதிர்த்துநின்பதில் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் தாக்குப்பிடித்திருக்கின்றன.  புதிய அரசியல் சூழ்நிலையில் செயலாற்றிடத் தங்களைத் தகவமைத்துக்கொண்டுவருகின்றனர். அவர்கள் நாடு முழுதும் உள்ள அனைத்து இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளின் ஆதரவினையும் ஒருமைப்பாட்டையும் பெற்றிருக்கிறார்கள். 
திரிபுரா தேர்தல் தோல்வி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் மற்றும்  நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகளுக்கும் மிகப்பெரியதொரு பின்னடைவாகும். இடது முன்னணி பாஜகவைத் தன்னுடைய பிரதான எதிரியாக நிறுத்தி போராடியது இதுவே முதல்தடவை.  பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் தாக்குதலை எதிர்கொள்வதற்கேற்ற விதத்தில் கட்சி தன்னுடைய அரசியல், தத்துவார்த்த மற்றும் ஸ்தாபன வேலைகளை விமர்சனரீதியாக மதிப்பீடு செய்வதற்கு தேர்தல் தோல்வி நம்மை இட்டுச்சென்றிருக்கிறது. விரைவில்  நடைபெறவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாடு, எதிர்வரும் காலங்களில் போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு நம்மைத் தயார் படுத்திடும். 
(மார்ச் 5, 2018)
(தமிழில்: ச.வீரமணி)


Saturday, March 3, 2018

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்க!



பாகிஸ்தானுடனான மோடி அரசாங்கத்தின் கொள்கையானது, எப்பக்கம் செல்வதென்று வழிதெரியாது, விழிபிதுங்கி நின்றுகொண்டிருக்கிறது. 2015 ஆகஸ்டில் இந்த அரசாங்கம் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை விலக்கிக்கொண்டபின், இதுவரையிலும், ‘பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும்வரை பேச்சுவார்த்தைகள் கிடையாது’ என்ற நிலையில் உறுதியாக இருந்து வருகிறது. 2016 செப்டம்பரில் நடைபெற்ற எல்லை தாண்டிய துல்லியத் தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு, இந்தியாவின் உறுதியான பதிலடி என்று தம்பட்டம் அடித்து வந்தது. அப்போது இராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கரால் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, தொடர்ந்த போர்நிறுத்த மீறல்களுக்குப்பின்னர், இதுவே சரியான பதிலடி என்று கூறப்பட்டது.ஆயினும், துல்லியத் தாக்குதல்கள் நடைபெற்றதற்குப் பின்னரும்கூட, எல்லைப் பகுதியிலும், ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையிலும் துப்பாக்கிச் சண்டைகளும், குண்டு வீச்சுகளும் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன. 2003 நவம்பரில் போர் நிறுத்தம் அறிவித்தபின்னர், 2017ஆம் ஆண்டுதான் இதுவரை நடைபெற்ற அத்துமீறல்களிலேயே அதிக அளவிலான எண்ணிக்கையைக் கண்டிருக்கிறது. எல்லை தாண்டிய பகுதிகளில் 860 நிகழ்வுகளும், சர்வதேச எல்லையில் மேலும் 120 நிகழ்வுகளும் நடைபெற்றிருக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் – அதாவது 2017 டிசம்பர் மற்றும் 2018இன் முதல் இரண்டு மாதங்களில் – நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களிலேயே 400 அத்து மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. நடைபெற்றுள்ள மோதல்களில் பாகிஸ்தானின் தரப்பில் 23 படைவீரர்களை இழந்திருப்பதாகக் கூறப்படும் அதே சமயத்தில்,இந்தியாவின் தரப்பில் 16 படைவீரர்களை இழந்திருக்கிறோம்.தொடர்ந்து வெடிகுண்டு மற்றும் பீரங்கிப்படைத் தாக்குதல்கள் இரு பக்கங்களிலும் எண்ணற்ற அப்பாவி மக்களின் உயிர்களையும் பலிகொண்டிருக்கின்றன. இந்தியாவின் தரப்பில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 22இலிருந்து, உரி பகுதியில் வாழ்ந்துவந்த 2000 கிராமத்தினர், உரி நகரில் அகதிகளாக தஞ்சமடைந்திருக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் அவ்வப்போது மூடப்பட்டு வருகின்றன, மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகச் சீர்குலைந்துள்ளன.

ராணுவம் - பிஎஸ்எப் படை முகாம்கள் மீது தாக்குதல்
துல்லியத் தாக்குதல்கள், இராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்களின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்களை நிறுத்திடவில்லை. சமீபத்திய தாக்குதல் என்பது ஜம்முவில் சஞ்ச்வான் இராணுவ முகாமிலும், ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) முகாமிலும் நடத்தப்பட்டிருக்கின்றன.எல்லைப்பகுதியில் நடைபெறும் அனைத்துக் கிளர்ச்சிகளும், பிரிவினைக் கோரிக்கைகளும் பாகிஸ்தானால் உருவாக்கி அனுப்பப்பட்டவை என்கிற மோடி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான பார்வையானது, ஜம்மு-காஷ்மீருக்குள் ஓர் அரசியல் பேச்சுவார்த்தையை நடத்திடுவதற்கான எந்தவொரு ஆழமான நடவடிக்கையையும் எடுப்பதிலிருந்து தடுத்துவருகிறது. அப்பகுதியில் அது மேற்கொண்டுவரும் முழுமையான இராணுவ அணுகுமுறையானது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் முதல்வர் மெஹபூபா முப்தி, “நடைபெற்றுவரும் ரத்தக்களறிக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமானால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை அவசியமாகும்…. பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமானால், பேச்சுவார்த்தை நடத்துவதைத்தவிர வேறு வழியில்லை,” என்று உரையாற்றியிருக்கிறார். இதனை பாஜகவும் மத்திய அரசும் உடனடியாக நிராகரித்திருக்கின்றன. பாஜகவின் பொதுச் செயலாளரான ராம் மாதவ், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தைகளும் பின்னிப்பிணைந்து போக முடியாது என்று உடனடியாகக் கோபத்துடன் பதிலளித்திருக்கிறார்.

அப்பாவிகள் பலி அதிகரிப்பு
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளுக்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டதன்மூலம், மோடி அரசாங்கம் என்னசெய்வதென்று தெரியாது, விழிபிதுங்கி நின்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு முடிவேதும் ஏற்படவில்லை. எல்லைப் பகுதியில் அறிவித்திருந்த போர்நிறுத்தம் கந்தல் கந்தலாகியிருக்கிறது. மத்திய அரசின் இத்தகைய கொள்கை காரணமாக, பாதுகாப்புப் படையினரும், அப்பாவி மக்களும் பலியாகிக் கொண்டிருப்பது என்பதுதான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.மத்திய மோடி அரசாங்கம், இத்தகைய கடிவாளமிட்ட மோதல் நிலைப்பாட்டை விலக்கிக் கொள்ள வேண்டியது உடனடித் தேவையாகும். முதலாவதாக, எல்லைப் பகுதியிலும் ஜம்மு-காஷ்மீர் எல்லையிலும் போர் நிறுத்தம் மற்றும் அமைதியை மீண்டும் நிலைநாட்ட, பேச்சு வார்த்தைகள் அவசியம். இதற்கு, நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். எல்லை தாண்டிவரும் தீவிரவாதிகளின் அத்துமீறல்களை ஒடுக்கிட, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்துவதுடன் இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும்.

அரசியல் தீர்வுக்கு அவசியம்
அதே சமயத்தில், அரசாங்கம் பாகிஸ்தானுடன் ஓர் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். மத்திய அரசாங்கத்தின் “பேச்சுவார்த்தைகள்” இல்லை என்கிற நிலை தற்போது தொடர்ந்தபோதிலும், இரு நாட்டின் தேசிய பாதுகாப்புஆலோசகர்கள் மூன்றாவது நாடுகளில் சந்தித்திருக் கிறார்கள். இந்தியா, மார்ச் மூன்றாவது வாரத்தில் தில்லியில் நடைபெறவுள்ள உலக வர்த்தக அமைப்பின் முறைப்படி அமையாத அமைச்சரகக் கூட்டத்தில் (informal ministerial meeting) பங்கேற்குமாறுபாகிஸ்தான் வர்த்தகத்துறை அமைச்சர் அழைக்கப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை மீண்டும்தொடங்குவது எப்படி என்பதற்கான பேச்சுவார்த்தை களும் தொடரப்பட வேண்டும். மோடி அரசாங்கம் தன்னுடைய வீறாப்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் காஷ்மீர்பிரச்சனை மீதான தேசபக்தியுடனான நிலைப்பாடு எதுவாகஇருந்தாலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது என்பது, ஜம்மு – காஷ்மீர் பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு அவசியமானதொரு அம்சம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

பிப்ரவரி 28, 2018
தமிழில்: ச.வீரமணி