Showing posts with label Bhagat Singh. Show all posts
Showing posts with label Bhagat Singh. Show all posts

Sunday, March 22, 2020






பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்: 90ஆம் ஆண்டு
தியாகிகள் தினத்தின் முக்கியத்துவம்


-சீத்தாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம், ஜனவரியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றபோது, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30வரை நடைபெறவிருக்கும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக் கணக்கெடுப்பிற்கான எந்தக் கேள்விக்கும் ஏன் பதிலளிக்கக் கூடாது என்று விளக்கி மார்ச் மாதத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தது. இந்தப் பிரச்சாரம், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தியாகிகள் தினமான மார்ச் 23 அன்று உச்சத்தை அடைந்திட வேண்டும் என்றும் கூறப்பட்டது. பின்னர், இதேபோன்ற அறைகூவலை இடதுசாரிக் கட்சிகளும் விடுத்தன. தியாகிகள் தினத்தைத் தேர்வு செய்ததற்கு, இந்தியாவையும், அதன் அரசமைப்புச் சட்டத்தையும் இன்றையதினம் இந்துத்துவா மதவெறியர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காகவும், அனைவருக்குமான நவீன இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்காகவும் இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்ட போராட்டத்தை உயர்த்திப் பிடித்திட வேண்டும் என்பதற்காகவுமாகும்.
கொரானா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருவதைத் தொடர்ந்து, அன்றைய தினம் பெரிய அளவில் மக்கள் கூடுவதையும், பொதுக் கூட்டங்கள் நடத்துவதையும் தவிர்த்திட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவதைப் போலவே தியாகிகள் தினம் இப்போதும் அனுசரிக்கப்படும்.
பகத்சிங்கின் முக்கியமான பங்களிப்புகள்
அனைவருக்குமான நவீன இந்தியாவை உருவாக்குவதில் பகத்சிங்கின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவைகளாகும். 1920-21 ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி திடீரென்று கைவிட்டதைத் தொடர்ந்து, இந்திய தேசிய இயக்கத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இந்த இயக்கத்தின்போது நடைபெற்ற சௌரி சௌரா நிகழ்வு காந்திஜியையும், எதிர்கால ஆளும் வர்க்கங்களையும் அலற வைத்தது. மக்கள் மத்தியில் புரட்சிகர உணர்வு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் ஆபத்தாக முடியும் என்று அவர்கள் கருதினார்கள். மக்களிடையே எழுந்துவரும் புரட்சி அலை, நாட்டை பிரிட்டிஷ் காலனிய கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டிற்
குள்ளேயே இருந்துவரும் சுரண்டல்பேர்வழிகளையும் விழுங்கிவிடும் என்று கருதினார்கள். இதனால்தான் காந்திஜி, தான் ஒரு பெரிய
இமாலயத் தவறு (Himalayan blunder) செய்துவிட்டேன் என்று கூறி இந்த இயக்கதை விலக்கிக் கொண்டார். காந்திஜி, இவ்வாறு இயக்கத்தை விலக்கிக்கொண்டது தொடர்பாக, அந்த சமயத்தில் செயல்பட்டு வந்த புரட்சியாளர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த முக்கியமான தலைவர்களே ஆச்சரியப்பட்டு, காந்திஜியிடம் இது குறித்துக் கேட்கவும் செய்தனர். ஜவஹர்லால் நேரு, சிறையிலிருந்து, இந்த இயக்கம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது என்றும், அதனை விலக்கிக் கொண்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் எழுதினார்.
மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், இருந்த பொதுவான விரக்தி நிலை, பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான மார்க்கத்தையும், திசைவழியையும் தேடியது. இந்தப் பின்னணியில்தான் பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்கள் ஒரு தெளிவான திசைவழியை அளித்திடும் விதத்தில் எழுந்தார்கள். அது மக்கள் மத்தியில் ஓர் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியது. நாடு சுதந்திரம் பெற்றபின்னரும் கூட இன்று வரையிலும் அது தொடர்கிறது.
பகத்சிங்கும், அவருடைய தோழர்களும் அவருக்கு 24 வயது ஆவதற்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டார்கள். இவ்வாறு  அவர் வாழ்ந்தகாலம் மிகவும் குறுகியதே என்றாலும், அதற்குள்ளாகவே அவர் எண்ணற்ற வீரதீரச் செயல்களைப் புரிந்துள்ளார்.  லாலா லஜபதி ராய் மீது கொடூரமானமுறையில் குண்டாந்தடி நடத்திய சாண்டர்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டது, தில்லி பாராளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசியது (தில்லி வெடிகுண்டு வழக்கு) முதலியவை, எப்படி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல  வேண்டும் என்பதில் பகத்சிங்கிற்கு இருந்த சிந்தனைத் தெளிவையும், அதன் அடிப்படையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் காட்டின. மார்க்சியம் குறித்தும், இந்திய மக்களை விடுவிப்பதற்கான புரட்சியின் குறிக்கோள் குறித்தும் அவர் கொண்டிருந்த தெளிவான பார்வையுடன் இவற்றை அவர் மேற்கொண்டார்.
சிந்தனைகளுக்கு இடையேயான போராட்டம்
சுதந்திரப் போராட்டக் காலத்தில், சுதந்திர இந்தியாவின் குணாம்சம் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து, பல்வேறு சிந்தனைகளுக்கு இடையேயும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட சிந்தனையோட்டம் என்பது, தேசிய இயக்கத்தின் குறிக்கோள் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்பதாக இருந்தது. இடதுசாரிகள் இதனை மறுக்காத அதே சமயத்தில் இத்துடன், மேலும் ஓரடி முன்னே சென்று, இவ்வாறு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நிலைத்திருக்க வேண்டுமானால், அவ்வாறு நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்தை ஒவ்வோர் இந்தியனின் பொருளாதார சுதந்திரமாகவும் மாற்றுவதில் நாம் எய்துகிற வெற்றியைச் சார்ந்திருக்கிறது, அதாவது, சுரண்டலற்ற ஒரு சமூகத்தை, சோசலிச சமூகத்தை, அமைப்பதில் அடங்கி இருக்கிறது என்றார்கள்.
இவ்விருவிதமான சிந்தனையோட்டங்களுடனும் நேரடியாகவே முரண்படக்கூடிய விதத்தில் ஒரு சிந்தனையோட்டமும் இருந்தது. அதாவது, சுதந்திர இந்தியாவின் குணாம்சம் மக்களின் மத அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே அந்தச் சிந்தனையாகும். இது மேலும் இருவிதமான சிந்தனைகளுக்கு வழிவகுத்தது. ஆர்எஸ்எஸ்-ஆல் முன்னெடுக்கப்பட்ட இந்து ராஷ்ட்ரா என்கிற சிந்தனைக்கும், முஸ்லீம் லீக்கால் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய அரசு என்கிற சிந்தனைக்கும் வழிவகுத்தது. வி-டி. சாவர்க்கரால் முன்னெடுக்கப்பட்ட இந்த இரு தேசக் கோட்பாட்டை, பின்னர் முகமது அலி ஜின்னாவும் பின்பற்றினார்.
தேசிய இயக்கத்தின் பிந்தைய நடவடிக்கைகள், துரதிர்ஷ்டவசமான முறையில் நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கும், பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதற்கும் இட்டுச் சென்றது. எனினும், இந்தியாவின் இதர பகுதி, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு கருத்தாக்கத்தையே தேர்வு செய்தது. அப்போது இந்து ராஷ்ட்ரம் என்னும் சிந்தனையை நிராகரித்ததுதான், அவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி, காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது. ஆயினும், ஆர்எஸ்எஸ்-இன் சிந்தனையோட்டமான இந்து(த்துவா) ராஷ்ட்ரத்தை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தன. இந்த முயற்சிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, தங்களுடைய இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் பிரதிபலிக்கிறது.
இதன் தொடர்ச்சிதான் இன்று நாம் ஈடுபட்டுள்ள போர்க்களமாகும். சுதந்திரத்திற்குப் பின் கடந்த எழுபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள அனுபவம், இடதுசாரிகள் அன்றைய தினம் கூறிய கருத்துக்களை, அதாவது, மக்கள் போராட்டம் சோசலிசத்தை நோக்கி முன்னேறவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகக்
குடியரசு நிலைத்திருக்க முடியாது என்று கூறியதை, மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதைத்தான் பகத்சிங் உயர்த்திப்பிடித்து, நடைமுறைப்படுத்தி வந்தார்.
பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவு தொடர்கிறது
பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவு, இன்றும் நம் போராட்டங்களில் செல்வாக்கு செலுத்துவது தொடர்கிறது. பகத்சிங்கின் நவஜவான் பாரத் சபையின் ஆறு விதிகளில், இரண்டு பின்வருமாறு: 1. வகுப்புவாத அமைப்புகளுடன் அல்லது வகுப்புவாத சிந்தனைகளைப் பரப்புகின்ற அமைப்புகளுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை. 2. மதம் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை என்று கருதும் விதத்தில் மக்கள் மத்தியில் பொது சகிப்புத்தன்மையை உருவாக்குவது, அதன் அடிப்படையில் முழுமையாகச் செயல்படுவது.
பகத்சிங், தங்களுடைய இந்துஸ்தான் குடியரசு சேனை என்னும் பெயரை, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனை (HSRA-Hindustan Socialist Republican Army) என்று மாற்றியமைத்தபின்னர் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரிலேயே, அனைத்துவிதமான மத வகுப்புவாதங்களுக்கும், சமயச் சடங்குகளுக்கும் தடையைப் பிறப்பித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, (பிறப்பால் சர்தார் ஆக விளங்கிய) பகத்சிங், தன் தலைமுடிக்கும், தாடிக்கும் விடை கொடுத்தார். இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் அறிக்கை (manifesto), இளைஞர்களைப் பீடித்திருக்கக்கூடிய, கொத்தடிமை சிந்தனைகளிலிருந்தும், மத மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுபடுவதற்கான விருப்பத்தில், இளைஞர்களின் அமைதியின்மையில் புரட்சியின் வருகையைப் பார்த்தது.
பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் அந்நிய மற்றும் உள்நாட்டு சுரண்டல்காரர்களுக்கு இடையேயான தொடர்பினை அறிந்திருந்தார்கள். இவ்வாறு அவர்கள், சுதந்திரத்தை மனிதனுக்கு மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இணைத்தார்கள். பகத்சிங், சிறையிலிருந்து எழுதிய செய்தியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்: விவசாயிகள் தங்களை,  அந்நிய நுகத்தடியிலிருந்து மட்டுமல்ல, நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் நுகத்தடிகளிலிருந்தும் விடுவித்தக் கொள்ள வேண்டியிருக்கிறது.
தில்லி வெடிகுண்டு வழக்கு
தில்லி வெடிகுண்டு வழக்கு விசாரணையின்போது, பகத்சிங்கும், படுகேஸ்வர் தத்தும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் போதும், நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போதும், இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டார்கள். இந்த முழக்கத்தின் பொருள் என்ன என்று நீதித்துறை நடுவர் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் எழுத்துபூர்வமான பதிலை அவருக்குச் சமர்ப்பித்தார்கள்.  7 மற்றும் 8 என்று எண்ணிடப்பட்ட, அதன் கடைசி இரண்டு பத்திகளை, இங்கே கீழே இணைத்திருக்கிறோம். இதில் அவர்கள், சுதந்திரத்திற்கான போராட்டத்தையும், சோசலிசத்திற்கான போராட்டத்தையும் அற்புதமான தெளிவுடன்  இணைத்திருக்கிறார்கள். இவை, அனைவருக்குமான நவீன இந்தியா குறித்து பகத்சிங்கிற்கும் அவருடைய புரட்சித் தோழர்களுக்கும் இருந்த தொலைநோக்குப் பார்வையை உயர்த்திப்பிடிக்கிறது. (இந்தப் பதில், 1929 ஜுன் 9 அன்று மாவட்ட அமர்வு நீதிபதியின் உத்தரவின்படி பதிவுருக்களிலிருந்து நீக்கப்பட்டது. அவர்கள் தியாகிகளான பின் ஐம்பதாண்டுகள் கழித்து, 1981 மார்ச்சில் தேசிய ஆவணக் காப்பகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.) 
(7) பகத்சிங் ஆகிய என்னிடம், ‘புரட்சி’ (இன்குலாப்) என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கீழமை நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், புரட்சி என்பது ரத்தம் சிந்தும் போராட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அங்கே தனிநபர் பழிதீர்க்கும் பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சி என்பதற்கு  ‘வெளிப்படையான அநீதியின் அடிப்படையில் இப்போது இருக்கிற அமைப்பு மாற்றப்பட வேண்டும்’ என்றே நாங்கள் பொருள் கொள்கிறோம். உற்பத்தி செய்பவர்கள் அல்லது தொழிலாளர்கள் சமூகத்தின் அடிப்படை மூலக்கூறாக இருந்த போதிலும்கூட, அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன. அவர்களின் அடிப்படை உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. ஒரு பக்கத்தில் அனைவருக்கும் உணவை உற்பத்தி செய்து அளித்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறார், உலகத்தில் உள்ள அனைவருக்கம் நவீன ஆடைகளை அணிவதற்கு உலகச் சந்தைக்கு துணிகளை விநியோகித்திடும் நெசவாளர் தன்னையோ, தன் குழந்தைகளையோ முழுமையாகப் போர்த்திக்கொள்ளும் அளவிற்கு ஆடைகளின்றி இருக்கிறார். அற்புதமான அரண்மனைகளைக் கட்டி எழுப்புகின்ற கொத்தனார்கள், கருமான்கள்(smiths), ஆசாரிகள் (carpenters), சேரிகளில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில், சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக விளங்கும் முதலாளித்துவ சுரண்டல்காரர்கள்,  தங்கள் விருப்பத்திற்கிணங்க லட்சக்கணக்கில் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பயங்கரமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில் வலிந்துதிணிக்கப்படும் பாரபட்சம், பெருங்குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமை என்றென்றும் நீடித்திருக்க முடியாது. எரிமலையின் விளிம்பின்மீது சுரண்டல்காரர்களின் அப்பாவிக் குழந்தைகளும், சுரண்டப்படுபவர்களின் பல லட்சக்கணக்கான குழந்தைகளும் ஓர் ஆபத்தான செங்குத்துச் சரிவில் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் இன்றைய சமூக அமைப்பு சந்தோஷமாக ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகும். இந்த நாகரிகத்தின் (civilization) ஒட்டுமொத்த கம்பீரமான கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், நொறுங்கி வீழ்ந்துவிடும். எனவே, ஒரு புரட்சிகர மாற்றம் அவசியம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டியது, இதனை உணர்ந்த ஒவ்வொருவரின் கடமையுமாகும். இதனைச் செய்யாவிட்டால், மற்றும் மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும், ஏகாதிபத்தியமாக முகமூடி அணிந்துகொண்டு தேசங்களை தேசங்கள் சுரண்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், மனிதகுலம் இன்றையதினம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பதுயரங்கள் மற்றும் படுகொலைகள் தடுக்கப்பட முடியாவிட்டால், யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் உலகளாவிய அமைதிக்குக் கட்டியங்கூற வேண்டும் என்றும் கூறுவதெல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் பாசாங்குத்தனமாகும். புரட்சி என்பதன் மூலம் நாங்கள் புரிந்துகொண்டிருப்பது, தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதும், இது எவராலும் அச்சுறுத்தப்பட முடியாத அளவிற்கு அமைந்திடும் என்பதுமாகும். இதன் விளைவாக அமைந்திடும் உலக சம்மேளனம் மனித குலத்தை முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்களின் துன்ப துயரங்களிலிருந்தும் மீட்டிடும்.
(8) இதுவே எங்கள் சித்தாந்தம். எங்கள் உத்வேகத்திற்கான இந்த சித்தாந்தத்துடன், நாங்கள் ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கை விடுக்கிறோம். எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால் மற்றும் இப்போதைய அரசமைப்பு முட்டுக்கட்டையாக இருப்பது தொடருமானால், அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியும் விதத்தில், நன்றாக இருக்கின்ற இயற்கையான சக்திகள், ஒரு கடுமையான போராட்டத்தை நடத்தி, புரட்சியின் லட்சியங்களை நிறைவேற்றும் விதத்தில்,  தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவிடும்.
புரட்சி, மனிதகுலத்தின் தவிர்க்கமுடியாத உரிமை. சுதந்திரம் அனைவரின் விவரிக்கமுடியாத பிறப்புரிமை. தொழிலாளர்கள்தான் சமூகத்தின் உண்மையான பராமரிப்பாளர்கள். மக்களின் இறையாண்மை தொழிலாளர்களின் இறுதி விதியாக இருந்திடும்.
இந்த லட்சியங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக எவ்வளவு துன்பங்கள் எங்கள் மீது ஏவப்பட்டாலும் அவற்றை நாங்கள் வரவேற்போம். புரட்சியின் பலிபீடத்திற்கு நாங்கள் எங்கள் இளைஞர்களைத் தூபமாகக் கொண்டு வந்திருக்கிறோம். அற்புதமான லட்சியத்திற்காக அர்ப்பணித்துக்கொள்வதைவிட உயர்ந்த தியாகம் எதுவுமில்லை. நாங்கள் திருப்தி மனப்பான்மையுடனேயே இருக்கிறோம். புரட்சியின் வருகையை எதிர்பார்க்கிறோம்.
புரட்சி நீடூழி வாழ்க.   
இன்றைய சூழல்
இவ்வாறு, இன்றைய சூழலில், குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு/தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம், ஆழமாகவும், அகலமாகவும் வளர்ந்திருக்கிற நிலையில், மோடி அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கும் விதத்தில் சுரண்டல் கொள்கைகளை அதீதமான முறையில் பின்பற்றி வருகிறது. பொருளாதார மந்தம் நாட்டின் சொத்துக்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும், வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பணத்தை அந்நிய மற்றும் உள்ளூர் கார்ப்பரேட்டுகளின் ஆதாயத்திற்குத் திருப்பிவிடும் விதத்திலும் சூறையாடுவதுடன் இணைத்திருக்கிறது. 
இவை அனைத்தும், தொழிலாளர் நலச் சட்டங்களை  முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றும்விதத்தில் தொழிலாளர் சீர்திருத்தங்கள் மூலமாக உழைக்கும் மக்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதுடனும், ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கூறும் அனைவரையும் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தி அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள்மீது தாக்குதல் தொடுப்பதுடனும், பகுத்தறிவாளர்கள் மீது தாக்குதல் தொடுப்பதுடனும் இணைந்திருக்கிறது. இன்றைய தாக்குதல்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்களை வலுப்படுத்த அனுமதிப்பதற்கான உரிமைகளைப் பாதுகாத்திட, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களுடன், இந்தப் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திட, மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதகாத்திட, நாட்டிலுள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் மத்தியில் நிலவும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்திட, இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதகாப்பது மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு, பகத்சிங், தூக்கிலிடப்பட்ட தியாக தினம் 90 ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவருடைய வாழ்வும் பணியும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தச் செல்லவும், வலுப்படுத்தவும் நமக்கு உத்வேகம் அளித்து,  வழிகாட்டும் ஒளிவிளக்காக இருப்பது தொடர்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)
  


Thursday, March 22, 2018

யுத்தம் தொடர்கிறது




ச.வீரமணி
[1927 மே 29 முதல் ஜூலை 4 வரையிலான காலத்தில் ஒரு நாள், லாகூர் ரயில்வே காவல்நிலையத்தில் உள்ள சிறையில் ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படம் இது. லாகூர் குண்டு வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட மாவீரன் பகத்சிங்கிடம், லாகூர் குற்ற புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் கோபால் சிங் பன்னு விசாரித்துக் கொண்டிருந்த காட்சி இது.]
எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 1931 மார்ச் 23 அன்று தியாகி பகத்சிங் மற்றும் அவரது இரு தோழர்கள் தியாகி ராஜகுரு, தியாகி சுகதேவ் லாகூரில் பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார்கள். பகத்சிங் தன்னைத் தியாகப்படுத்திக் கொண்ட சமயத்தில் அவருக்கு வயது வெறும் 23தான். இன்னும் வாழ வேண்டிய காலம் மிக அதிகம் இருந்த சமயத்திலும்கூட, பகத்சிங், தன்னுடைய குடும்பத்தாரும், தன்னை மிகவும் நேசித்தவர்களும் விரும்பியபோதிலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து கருணை எதிர்பார்த்து கடிதம் எதுவும் எழுத மறுத்துவிட்டார். பகத்சிங் காலனிய ஆட்சியாளர்களுக்குக் கடைசியாக எழுதிய மனுவில் (இதனை அவருடைய உயில் என்றும் கூறலாம்), “உண்மையிலேயே வெள்ளையர் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் - அதாவது காலனிய ஆட்சிக்கு எதிராக யுத்தம் புரிந்தார் என்று என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டின்கீழ் உண்மையாக இருப்பார்களேயானால், என்னைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக, சுட்டுக் கொல்லுங்கள்” என்று எழுதியிருந்தார்.
மேலும் அந்த ஆவணமானது, இந்தியா குறித்து அவர் கொண்டிருந்த ஒரு தெளிவான பார்வையை முன்வைத்தது. அதில் அவர் நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள் மீது பிரிட்டிஷார் அல்லது இந்திய “ஒட்டுண்ணிகள்” மூலம் ஏவப்படும் அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய செயற்குழுவில் ‘தேசியவாதம்’ என்கிற சொல்லை உயர்த்திப்பிடித்திருக்கிற இந்த சமயத்தில், பகத்சிங் தேசியவாதம் குறித்து தேசப்பற்றுடனும் கொள்கையுடனும் கூறியுள்ள அணுகுமுறையை, பாஜகவின் “இந்துத்துவா” கொள்கையின் மூளையாக விளங்கிய வி.டி. சாவர்க்கரின் அணுகுமுறையுடன் ஒப்பிடுவது பொருத்தமானதாக இருந்திடும்.1911இல் அந்தமான் செல்லுலர் சிறையில் தன்னுடைய புரட்சிகர நடவடிக்கைகளுக்காக அடைக்கப்பட்டிருந்த வி.டி.சாவர்க்கர், தன்னுடைய 50 ஆண்டு சிறைத் தண்டனை தொடங்கிய ஒருசில மாதங்களுக்குள்ளேயே தன்னை விடுவித்திட வேண்டும் என்று கோரி பிரிட்டிஷாருக்கு மனு எழுதிய நபராவார். பின்னர் மீண்டும் 1913இலும் மற்றும் பல சமயங்களிலும் அந்தமானிலிருந்து இந்தியாவிற்குள் உள்ள சிறை ஒன்றுக்கு 1921இல் இறுதியாக மாற்றப்படும் வரைக்கும், அதன்பின் 1924இல் கடைசியாக விடுவிக்கப்படும் வரைக்கும் பல தடவை அவர் மனுக்கள் சமர்ப்பித்திருந்தார். அவற்றில் அவர், “என்னைப் போகவிடுங்கள்; சுதந்திரத்திற்கான போராட்டத்தை நான் கைவிட்டு விடுகிறேன். காலனிய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.சாவர்க்கருக்குத் தற்போது வக்காலத்து வாங்குபவர்கள், அவர் கூறிய உறுதிமொழிகள் அனைத்தும் ஓர் உத்தி என்று கூறிப் பிதற்றுகிறார்கள். அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகு, அவர் வெள்ளையருக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு இணங்க, சுதந்திரப் போராட்டத்திலிருந்து விலகியே இருந்தார். உண்மையில், அவர் முஸ்லீம் லீக்கின் இரு தேசக் கொள்கையின் மற்றொரு வடிவமாகத் திகழ்ந்த தன்னுடைய “இந்துத்துவா” பிரிவினைக் கொள்கை மூலம் பிரிட்டிஷாருக்கு உதவிக் கொண்டிருந்தார்.1913இல் வி.டி.சாவர்க்கர் அனுப்பிய கடிதத்தின் சாராம்சம்... ஒரு அடிமையின் சாசனம். ஆனால், பகத்சிங் அனுப்பிய கடிதம், முதலாளித்துவ- ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை சாசனம்.
பெறுநர்
பஞ்சாப் ஆளுநர்.
ஐயா,
கீழ்க்கண்ட விவரங்களைத் தங்களுடைய மேலான கவனத்திற்கு மிகுந்த மரியாதையுடன் கொண்டுவருகிறோம். நாங்கள், பிரிட்டிஷ் இந்தியாவின் உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் உள்ள மேதகு வைஸ்ராய் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்ட சிறப்பு லாகூர் சதி வழக்கு அவசரச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட, பிரிட்டிஷ் நீதிமன்றமான, எல்.சி.சி. தீர்ப்பாயத்தின் கீழ் 1930 அக்டோபர் 7 அன்று மரண தண்டனை விதிக்கப் பட்டோம். எங்கள்மீது புனையப்பட்ட குற்றச்சாட்டு, நாங்கள்இங்கிலாந்து அரசர், மேதகு ஜார்ஜ் அரசருக்கு எதிராக யுத்தம் புரிந்தோம் என்பதாகும். நீதிமன்றம், இரண்டு அம்சங்களில் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வந்திருக்கிறது. முதலாவதாக, பிரிட்டிஷ் தேசத்திற்கும், இந்தியத்தேசத்திற்கும் இடையே யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பதாகும். இரண்டாவதாக, நாங்கள் அந்த யுத்தத்தில் பங்கெடுத்திருக்கிறோம் என்றும் எனவே நாங்கள் யுத்தக்கைதிகளாவோம் என்பதுமாகும். இரண்டாவது கூற்று சற்றே எங்களைப் புகழ்வதுபோலஅமைந்திருக்கிறது. எனினும் அவ்வாறு எங்களை நீங்கள் பாராட்டியிருப்பதால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியிலிருந்து எங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரை சில விஷயங்களை ஆழமாகத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த சொற்றொடர் குறிப்பிட்டுள்ளபடி உண்மையில் யுத்தம் எதுவும் நடந்திடவில்லை. எனினும், உங்கள் கூற்றின் செல்லத்தக்க தன்மையை ஏற்றுக்கொள்ள எங்களை அருள்கூர்ந்து அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆனால், இதனைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாங்கள் அதனை மேலும் விளக்கிட வேண்டும்.
இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களும் அவர்களின் இயற்கை வளங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில ஒட்டுண்ணிகளால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும்வரை அதனை ஒழித்துக்கட்டுவதற்கான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்ந்து எதிர்காலத்திலும் நடக்கும் என்று நாங்கள் பிரகடனம் செய்கிறோம். அவ்வாறு சுரண்டுபவர்கள் சுத்தமான பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம், அல்லது பிரிட்டிஷ் மற்றும் இந்திய முதலாளிகளின் கலப்பாகவும் இருக்கலாம் அல்லது சுத்தமாக இந்திய முதலாளிகளாகவும் இருக்கலாம்.
தங்களுடைய கபடத்தனமான சுரண்டலை இருதரப்பினரும் கலந்தோ அல்லது பூரணமாக இந்திய அதிகார வர்க்க எந்திரத்தைக் கொண்டோ முன்னெடுத்துச் செல்லலாம். இவை அனைத்திலும் எந்தவித வித்தியாசமும் இல்லை. உங்கள் அரசாங்கம், சில்லரைச் சலுகைகள் மற்றும் சமரசங்கள் மூலமாக, இந்திய சமூகத்தின் உயர் அடுக்குத் தலைவர்களை திருப்திப்படுத்தி, சமரசம் செய்து, அவர்களை வென்றிருக்கக் கூடும். அதன் மூலமாக போராடும் சக்திகளிடையே ஒரு தற்காலிக அறநெறிப் பிறழ்வை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.
அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.போராட்டக்களத்தினூடே, இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணிப் படையினரால், புரட்சிக் கட்சித்தனித்து விடப்பட்டபோதிலும், அதைப்பற்றி எங்களுக்குக்கவலை இல்லை. எங்கள் மீது தனிப்பட்டமுறையில் இரக்கத்தைக் காட்டிடும் தலைவர்களுக்காகத் தனிப்பட்டமுறையில் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். எனினும், விடுதலை இயக்கத்தில் முன்னின்று போராட்டத்தில் ஈடுபட்ட வீடற்றவர்களுக்காகவோ, எதுவுமற்ற பெண் தொழிலாளர்களுக் காகவோ, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட சமயத்தில் எதுவுமே கூறாது மவுனம் சாதித்தது குறித்தும் எங்களுக்குக் கவலை இல்லை. உங்கள் அகிம்சைக் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்ற விதத்தில் இந்த நாட்டின் விடுதலைக்காக, தங்கள் கணவன்மார்களை இழந்து, சகோதரர்களை இழந்து, தங்கள் உயிருக்குயிராய் நேசித்த எண்ணற்றவர்களை இழந்து வீர மரணம் எய்திய வீராங்கனைகளைப்பற்றி உங்கள் தலைவர்கள் ஒருவார்த்தை கூட கூறாதது மட்டுமல்ல, உங்கள் அரசாங்கம் அந்தத் தியாகிகளையெல்லாம் சட்டத்திற்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்தியதைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை.
உங்கள் ஏஜண்டுகள் எவ்வித அடிப்படையுமின்றி அவர்கள் குறித்தும், அவர்களின் கட்சிக்குக் களங்கத்தைஏற்படுத்த வேண்டும் என்ற விதத்திலும், அவதூறை அள்ளி வீசியபோதிலும் எங்களுக்குக் கவலை இல்லை. யுத்தம் தொடரும். அது பல சமயங்களில் பல வடிவங்களை எடுத்திடும். சில சமயங்களில் வெளிப்படையாக இருக்கும். சில சமயங்களில் மறைந்திருக்கும். இப்போது முழுக்க முழுக்க கிளர்ச்சி அடிப்படையானதாக, இப்போது வாழ்வா சாவா என்கிற வீரம் செறிந்த போராட்டமாக நடக்கிறது.
எங்கள் போராட்டம் அமைதி வழியிலானதா அல்லது இரத்தம் சிந்தக்கூடியதா, எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்களைச் சார்ந்தே இருக்கிறது.
உங்களுக்கு எது விருப்பமோ அதைத் தெரிவு செய்திடுங்கள். ஆனால், சிறிய அளவிலான மற்றும் அர்த்தமற்ற தத்துவங்களை எல்லாம் சுமந்துகொள்ளாமல் இந்த யுத்தம் எவ்வித சமரசமுமின்றி தொடரும். சோசலிசக் குடியரசை நிறுவும்வரை, இப்போதுள்ள சமூக அமைப்பை முற்றிலுமாக மாற்றி அமைக்கும்வரை, மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும்வரை மனித குலம் உண்மையான மற்றும் நிரந்தரமான அமைதியைப் பெறும் காலம் வரை இந்த யுத்தம் தொடரும். விரைவில் நிரந்தர யுத்தம் மேற்கொள்ளப்பட்டு, நிர்ந்தரத் தீர்வு எட்டப்படும்.
முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த யுத்தம் எங்களால் தொடங்கப்பட்டதும் இல்லை அல்லது எங்களுடனும் முடிந்துவிடாது. வரலாற்று நிகழ்வுகளும் தற்போதுள்ள சுற்றுச்சூழலும் மாற்றத்தைக் கொண்டுவருவது என்பதுதவிர்க்கமுடியாததாகும்.
எங்கள் பணிவான தியாகங்கள் என்பவை தியாகிகள் ஜதின் தாஸ் மற்றும் தோழர் பகவதி சரண் மற்றும் வீர மரணம் எய்திய சந்திர சேகர் ஆசாத் ஆகியோரின் தியாகத்துடன் பின்னிப்பிணைந்தவைகளாகும். எங்கள் விதியை நிர்ணயம் செய்வது தொடர்பாக, நீங்கள் எங்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்என்று தீர்மானித்தால், (நிச்சயமாக அதை நீங்கள் செய்வீர்கள்.) அது தொடர்பாக ஒருசில வார்த்தைகள் கூற எங்களை அனுமதியுங்கள். உங்கள் கைகளில் அதற்கான அதிகாரம் இருக்கிறது. அதிகாரம் படைத்தவனே உலகில் நீதிமானாவான். “வல்லவன் வகுத்ததே சரி” என்கிற பழமொழி எங்களுக்குத் தெரியும். அதைத்தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்கள் வழக்கு நடத்தப்பட்ட லட்சணமே அதைத் தெளிவாகக் காட்டும். உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக யுத்தம் நடத்தினோம் எனவே யுத்தக் கைதிகளாக இருக்கிறோம் என்பதைச்சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே அவ்வாறே எங்கள் மரணமும் அமைந்திட வேண்டும் என்று விரும்புகிறோம். அதாவது, நாங்கள் தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். உங்கள் நீதிமன்றம் சொல்லியிருப்பதை நீங்கள் உண்மையில் புரிந்துகொண்டிருக்கிறீர்களா என்பது நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. எங்கள் மரணத்தை நிறைவேற்றிட ராணுவத்துறையிலிருந்து ஒரு பிரிவை அனுப்பி வைத்திட ஆணை பிறப்பிப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்; விரும்புகிறோம்.
தங்கள்,
பகத்சிங்.



Tuesday, November 15, 2016

பகத்சிங்குகளை உருவாக்கிய நவம்பர் புரட்சி


(பகத்சிங்குடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட தோழர் சிவவர்மா, ‘நாட்டில் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி - சபேகார் முதல் பகத்சிங் வரை’ என்னும் தன்னுடைய நூலில், மாபெரும் நவம்பர் புரட்சி எந்த அளவிற்கு தோழர் பகத்சிங்கையும், தங்கள் இயக்கத்தையும் உருக்குபோன்று மாற்றி அமைத்தது என்பதையும் விளக்குகிறார்.)
மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் - விவசாயிகள் - படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார்.
நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியானது மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாகும். அது ரஷ்யாவிலிருந்த ஏகாதிபத்திய ஆட்சியை முற்றிலுமாக அழித்து ஒழித்ததோடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருந்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் திகிலூட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனிதனை மனிதன், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டும் முறைக்கு நவம்பர் புரட்சி முற்றுப்புள்ளி வைத்தது.
சோவியத் மக்கள் தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும் எஜமானர்களாக மாறினார்கள்.அது உலகில் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த பல்வேறு நாட்டின் விடுதலைப் போராளிகளுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது, தங்களுடைய லட்சியப் போராட்டமும் வெல்லும் என்கிற நம்பிக்கையை விளைவித்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்தது. இந்தியாவில் விடுதலைக்கான போராட்டமும், உலகத்தில் நடைபெற்று வந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதி என்ற அடிப்படையில், பாதிக்கப்படாமலிருக்க முடியவில்லை.
இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் உதயம்பொதுவாக 1920களிலும், குறிப்பாக 1928-1930களிலும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இந்தக் காலகட்டத்தில்தான், இடதுசாரி சக்திகள் அமைப்புரீதியாக வலுவான சக்தியாக உருவாகத் தொடங்கியிருந்தன. பெரிய அளவில் வீரஞ்செறிந்த தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன.
அமைப்புரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் சிறந்த வேலை நிலைமைகளுக்காகவும், கூடுதல் ஊதியத்திற்காகவும் வலுவான போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரிக்கத் தொடங்கியது. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் மீதான ஈர்ப்பு வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. முதன்முறையாக, அமைப்புரீதியாக விரிவான முறையில் இடதுசாரி அரசியல் இயக்கம் நாட்டில் உருவாகிக் கொண்டிருந்தது.
நாங்கள் சோசலிச சிந்தனையை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருந்தோம். நாங்கள் கைது செய்யப்பட்ட பின்னர்தான், எங்களுக்கு நிறைய நேரமும், புத்தகங்களும் கிடைத்தன. அவற்றைப் படித்தோம், விவாதித்தோம், கடந்த காலங்களில் நாங்கள் செய்தவற்றைத் தீர ஆய்வுசெய்து, சரியான முடிவுகளுக்கு வந்தோம்.முதலாவதாக, நாங்கள் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், நாங்கள் மார்க்சியத்தை முறையாக ஆழ்ந்து கற்றதன் அடிப்படையில் அமைந்திடவில்லை.
நம் நாட்டில் அன்றைக்கு மேலோங்கியிருந்த சமூகச் சூழ்நிலைமையில், மார்க்சியத்தைக் கசடறக் கற்பது என்பது அப்படியொன்றும் அவ்வளவு எளிதல்ல.இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் முன்னெடுத்துச் சென்ற நடவடிக்கைகளில் மார்க்சியத்தை அதன் தத்துவமாகவும், சோசலித்தை அதன் இறுதி லட்சியமாகவும் ஏற்றுக்கொண்டதை மிகப்பெரிய முதல் நடவடிக்கை என்றுகூற முடியும்.
விஞ்ஞானப்பூர்வமான சோசலிசத்தை நோக்கி ...
பகத்சிங் இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். மார்க்சையும் லெனினையும் கற்க வேண்டும் என்றும், அவர்கள் போதனைகளை செயலுக்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் - விவசாயிகள் - படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார். மக்களின் கட்சி ஒன்று இல்லாமல் அது அனைத்தும் சாத்தியமல்ல என்றும் அவர் மேலும் கூறினார். கட்சி குறித்த அவரது சிந்தனையை மேலும் விளக்கும் வகையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
‘‘தோழர் லெனின் மிகவும் பிரியத்துடன் பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்வதானால் ‘புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்களே’ நமக்குத் தேவை. புரட்சியைத் தவிர வேறெந்த ஆசாபாசங்களும் வேலையும் இல்லாத முழுநேர ஊழியர்களே நமக்குத் தேவை. எந்த அளவிற்கு அத்தகைய ஊழியர்கள் ஒரு புரட்சிக் கட்சிக்குக் கிடைக்கிறார்களோ அந்த அளவிற்கு அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும்.’’ அவர் மேலும், ‘திட்டமிட்டமுறையில் செயலாற்றுவதற்கு உங்களுக்குத் தேவை, மேலே விவரித்ததுபோன்று மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் கூரிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும், விரைந்து செயல்படும் ஆற்றலும் கொண்டவர்கள் நிறைந்த ஒரு கட்சியாகும். கட்சி உருக்கு போன்ற கட்டுப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும்.
அதற்காக அது ஒன்றும் தலைமறைவுக் கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு மாறான நிலையில் கூட இருக்கலாம். ... கட்சி வெகுஜனப் பிரச்சாரப் பணியுடன் தொடங்கப்பட வேண்டும். ... விவசாயிகள் - தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துவதும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும். கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்திடலாம். மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அரசியல் ஊழியர்களைக் கொண்ட இக்கட்சியானது, அதன்கீழ் உள்ள அனைத்து இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும்,இவ்வாறு பகத்சிங், மார்க்சிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் வெளிப்படையாகவே வந்து விட்டார்.
(தமிழில்: ச.வீரமணி)


Sunday, September 27, 2015

இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் வேண்டுகோள்




இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் வேண்டுகோள்
(1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அப்போது நாட்டில் இருந்த நிலைமைகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து, இறுதியில் அவர் இளைஞர்களை, மக்கள் மத்தியில் வேலை செய்திட, தொழிலாளர்களை - விவசாயிகளை அணிதிரட்டிட, மார்க்சிய சிந்தனையைத் தழுவிட, கம்யூனி°ட் கட்சியைக் கட்டி வளர்த்திட அறிவுறுத்தினார். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபின், இந்த ஆவணம் மிகவும் சிதைக்கப்பட்ட வடிவத்தில் பிரசுரமானது. சோவியத் ஒன்றியம், மார்க்°, லெனின், கம்யூனி°ட் கட்சி போன்ற வார்த்தைகள் மிகவும் எச்சரிக்கையாக நீக்கப்பட்டிருந்தன. பின்னர், இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் போட்டோ நகல் ஒன்று பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.)
பெறுநர்
இளம் அரசியல் ஊழியர்கள்.
அன்புத் தோழர்களே,
ஒரு புரட்சிக்காக நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய சக்திகளைப் பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எனினும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் செயல்முனைப்புள்ள ஆதரவைத் திரட்டுவதற்காக அவர்களை நாங்கள் அணுகுவோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உணர்ச்சிகரமான பசப்பு வார்த்தைகள் எதற்கும் அவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
இப்பொழுது இரண்டு வெவ்வேறு கட்டங்களை நீங்கள் கடந்தாக வேண்டியுள்து. முதலாவது முன்னேற்பாடு, இரண்டாவது நேரடி நடவடிக்கை.
தற்போதைய போராட்டத்திற்குப் பிறகு நேர்மையான புரட்சிகரத் தொண்டர்கள் மத்தியில் வெறுப்பையும் அவநம்பிக்கையினையும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உணர்ச்சி வயப்படுதலை ஒதுக்கித் தள்ளுங்கள். நிகழ்வுகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருங்கள். புரட்சி என்பது மிகவும் கடினமான பணி. புரட்சியை ஏற்படுத்துவது என்பது தனிநபர்கள் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது. அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதி ஏதேனுமொன்றில் கொண்டு வரவும் முடியாது. அது குறிப்பிட்ட சமுதாய-பொருளாதார சூழ்நிலைகளின் மூலமாகவே கொண்டுவரப்படும். இந்த சூழ்நிலைகளால் கொடுக்கப்படும் எந்தவகையான வாய்ப்பையும் பயன்படுத்துவதே ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் வேலை. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும் புரட்சிக்கான சக்திகளை ஒன்று திரட்டுவதும் மிகவும் கடினமான தொரு பணி.  அப்பணி, புரட்சிகர தொண்டர்களிடமிருந்து மாபெரும் தியாகத்தை வேண்டுகிறது. இதனை நான் தெளிவுபடுத்துகிறேன். நீங்கள் ஒரு வியாபாரியாகவோ இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர் அல்லது குடும்ப°தராகவோ இருந்தால் தயவு செய்து நெருப்போடு விளையாடாதீர்கள். ஒரு தலைவராக உங்களால் கட்சிக்கு ஒரு பயனும் இல்லை. சொற்பொழிவாற்றுவதற்காக சில மாலை நேரங்களை செலவிடும் இத்தகைய தலைவர்கள் நம்மிடத்தில் ஏற்கனவே நிறையப்பேர் இருக்கின்றனர். அவர்கள் பயனற்றவர்கள்.
நமக்குத் தேவையானவர்கள்- லெனினுக்கு பிடித்தமான வார்த்தையில் சொல்வதானால்- புரட்சியே தங்களது தொழிலாகக் கொண்ட முழுநேர புரட்சியாளர்களே (professional revolutionaries). புரட்சியைத்தவிர வேறெந்த இலட்சியமோ வாழ்நாட் பணியோ இல்லாத முழுநேரத் தொண்டர்கள். அத்தகைய தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கட்சிக்குள் சேர்க்கப்படுவது உங்களது வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். திட்டமிட்டுச் செயலாற்றுவதற்கு முக்கியமாக உங்களுக்குத் தேவைப்படுவது ஒரு கட்சி. அக்கட்சியானது மேலே விவாதிக்கப்பட்ட வகையினைச் சேர்ந்த தொண்டர்களை (அதாவது முழுநேர புரட்சியாளர்களை) கொண்டதாக இருக்க வேண்டும். அத்தொண்டர்கள், தெளிவான சிந்தனைகளும் கூரிய அறிவும் முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும் விரைந்து முடிவெடுக்கும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
கட்சிக்குத் தேவைப்படுகின்ற தொண்டர்களை இளைஞர் இயக்கத்தின் மூலமாக மட்டுமே கொண்டு வர முடியும். ஆகவே இளைஞர் இயக்கத்தையே நமது செயல் திட்டத்தின் தொடக்கப் புள்ளியாக நாம் காண்கிறோம்.
தங்களது கருத்துக்களில் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் குறிக்கோளுக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக தம்மையே உணருபவர்களாகவும் இருக்கும் இளைஞர்களை (இளைஞர் இயக்கத்திலிருந்து) கட்சிக்குக் கொண்டு செல்லலாம். கட்சித் தொண்டர்கள் எப்போதும் இளைஞர் இயக்கத்தின் செயல்பாட்டையும் சேர்த்து வழிநடத்துபவர்களாகவும் கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். வெகுஜன பிரச்சாரப் பணியில் இருந்து கட்சியின் வேலை துவக்கப்பட வேண்டும். இது மிகவும் இன்றியமையாதது.
இவை நீங்கலாக, இராணுவத் துறை ஒன்று கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கியமானதாகும். சில நேரங்களில் இதன் தேவையானது மிக அவசியமாக உணரப்படும். ஆனால் அந்நேரத்தில் அத்தகையதொரு அமைப்பை ஆற்றலுடன் செயல்படுவதற்குப் போதுமான வழிவகைகளுடன் உடனடியாக உங்களால் துவக்கவும் முறைப்படுத்தவும் முடியாது.
ஒருவேளை கவனமான விளக்கம் தேவைப்படக்கூடிய தலைப்பாகும் இது. இத்தலைப்பில் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது. வெளித்தோற்றத்திற்கு நான் ஒரு பயங்கரவாதியைப் போல் செயல்பட்டுள்ளேன். ஆனால் நான் பயங்கரவாதி அல்ல. இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற மிக நீண்டதொரு செயற்திட்டம் பற்றிய திட்டவட்டமான கொள்கைகளைக் கொண்ட புரட்சியாளன் நான், தண்டனைக் கைதிகளின் அறையில் ஏதோவொரு வகை பிற்போக்கிற்கு ஆளானதாக- அது உண்மையல்ல என்றாலும். "ஆயுதம் தாங்கியிருக்கும் என் தோழர்கள், ராம் பிரசாத் பி°மில்லை போல் என்னை குற்றம் சாட்டியிருக்கலாம். வெளியில் இருக்கும் போது வழக்கமாக நான் கொண்டிருந்ததைப் போன்றே, ஒருவேளை இன்னும் சொல்லப்போனால், சந்தேகத்திற்கிடமின்றி அதனினும் மேம்பட்ட நிலையில்- அதே கொள்கைகள், அதே உறுதியான பற்று, அதே விருப்பம் மற்றும் அதே உணர்வை நான் இப்போதும் கொண்டுள்ளேன். இதனால் எனது வார்த்தைகளை வாசிக்கும் போது கவனமுடன் இருக்குமாறு எனது வாசகர்களை எச்சரிக்கிறேன். அவர்கள் எனது எழுத்துகளுக்குப் புறம்பாக எதையும் ஊகித்தறிய முயற்சி செய்யக்கூடாது. எனது சக்தி அனைத்தையும் ஒன்றுகூட்டி உரக்க அறிவிக்கிறேன். நான் பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. அந்த முறைகளின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஹிந்து°தான் சோசலி°ட் ரிபப்ளிகள் அசோசியேசனின் வரலாற்றில் இருந்து ஒருவர் இதனை எளிதாக தீர்மானிக்கலாம். எங்களது செயல்பாடுகள் அனைத்தும் மாபெரும்(விடுதலை) இயக்கத்துடன், அதன் இராணுவப் படைப்பிரிவாக எங்களை நாங்களே ஒன்றிணைத்துக் கொள்ளும் இலக்கை நோக்கியதாகவே இருந்தன. எவரேனும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளட்டும். வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும் பயனற்றவை என்று நான் சொல்லவில்லை. இன்னும் சரியாகச் சொன்னால் இதற்கு நேர்மாறாகவே நான் சொல்கிறேன். ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், வெறுமனே வெடிகுண்டுகளை மட்டும் வீசியெறிவதால் பயன் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சில நேரங்களில் அது கேடுவிளைவிப்பதாகவும் இருந்து விடுகிறது.
கட்சியின் இராணுவத் துறையானது, எந்தவொரு அவசர காலத் தேவைக்கும் கிடைக்கக்கூடிய வகையில் அனைத்து போர்த் தளவாடங்களையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அது கட்சியின் அரசியல் வேலைக்கு பின்பலமாக இருக்கவேண்டும். அது தன்னிச்சையாக செயல்பட இயலாது, செயல்படவும் கூடாது.
மேலே சுட்டிக் காட்டப்பட்டதன் திசை வழியில் கட்சி, அதன் செயல்பாட்டைத் தொடர வேண்டும். பத்திரிகைகள் மூலமாகவும் மாநாடுகள் மூலமாகவும் தங்களது தொண்டர்களை எல்லா விவாதப் பொருள்பற்றியும் பயிற்றுவித்துக் கொண்டும் தப்பெண்ணங்களை அகற்றிக் கொண்டும் அவர்கள் செல்ல வேண்டும். இத்திசைவழியில் நீங்கள் செயல்பாட்டைத் துவக்கினால் மிகவும் பொறுமை காக்க வேண்டும். இச்செயல் திட்டம் நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் தேவைப்படலாம். ஒரு வருடத்தில் சுயராஜ்யம் என்ற காந்தியின் கற்பனாவாத வாக்குறுதியைப் போன்றே, பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புரட்சி என்ற உங்களின் இளமைக்குரிய கனவுகளையும் உதறித் தள்ளுங்கள். புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது. முதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்கள் பற்றிய கனவுகளை உதறித் தள்ளுங்கள். அதன் பிறகு செயல்பாட்டைத் தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் முன்செல்ல வேண்டும். இதற்கு துணிவும், விடாமுயற்சியும், கலைக்க முடியாத மனவுறுதியும்வேண்டும். எந்தத் துன்பங்களும் துயரங்களும் உங்களது தன்னம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது. எந்தத் தோல்வியும் துரோகங்களும் உங்களை மனம் தளரச் செய்துவிடக்கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை கொன்று விடக்கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றிகரமான மீண்டு வரவேண்டும். தனிநபர்கள் அடையும் இந்த வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்.
புரட்சி நீடூழி வாழ்க!
2 பிப்ரவரி 1931.
(இன்று (செப்டம்பர் 28)  பகத்சிங் பிறந்த தினம். சிலர் செப்டம்பர் 27 என்றும் குறிப்பிடுகிறார்கள்.)

Thursday, March 22, 2012

புரட்சியாளர் பகத்சிங்

(பகத் சிங் பற்றி தோழர் சிவவர்மா எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. சிவவர்மா, பகத்சிங்கின் தோழர். அவ ருடன் இணைந்து வெள்ளை யருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட் டவர். பகத்சிங் கைதான வழக் கில் குற்றவாளியாக இணைக்கப்பட்ட சிவவர்மா வயதில் இளையவர் என் பதற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். பகத்சிங் வரலாறு குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்.)

1980களில் ஒரு நாள், நான் கான்பூரி லிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து முடித்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அது, பகத்சிங் எழுதிய ‘‘நான் ஏன்

நாத்திகன்?’’ ஆகும். ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘இந்த அளவிற்கு ஆழமான விஷயங்களை எழுதக்கூடிய அள விற்கு, உண்மையில் அவன் திறமை படைத் தவனா?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாள ராகப் பணியாற்றுகிறாராம். ஒரு புரட்சியாளன் பற்றி அவர் வைத்திருந்த மதிப்பீடே அலாதி யானது. உயரமாக, உறுதிமிக்கவனாக இருப் பான், அவன் மண்டையில் ஒன்றும் இருக் காது, நிறைய வெடிகுண்டுகளும், ரிவால்வர் களும் வைத்திருப்பான், தன்னல மறுப்பும் தைரியமும் கொண்டிருந்தாலும் மனிதர் களைக் கொல்வதில் இன்பம் காணும் பேர் வழி, ரத்த தாகம் எடுத்த அதிதீவிரவாதி. ஆயினும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இளைஞர்கள் அவ்வளவு அறிவு பெற் றிருக்க மாட்டார்கள். இதேபோன்று பலர் புரட் சியாளர்கள் குறித்துச் சொல்லும் கதை களையே இவரும் இதுவரை கேட்டிருந் திருக்கிறார். இத்தகைய மனிதர்கள் குறித்து இரக்கப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்?

ஆனாலும் நம் வீரத்தியாகிகள் குறித்து வேண்டும் என்றே சீர்குலைவுப் பிரச்சாரம் மேற்கொள்வோர் குறித்து நாம் என்ன நிலை எடுப்பது? ஒரு சமயம், 1950களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப் புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். அதில் ஆசாத் குறித்து ஓர் ஐந்தாறு பத்திகள் குறிப்பிடப்பட் டிருந்தன. ‘‘சந்திரசேகர் ஆசாத்’ என்னும் உள் தலைப்பில், ஆசாத் ரத்தம் சிந்துவதிலும், கொள்ளையடிப்பதிலும் நம்பிக்கை கொண் டவன் என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நாடு அவனது போராட்டப் பாதையை ஏற்றுக் கொள்ளாமல் காந்திஜியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும் அதை எழுதிய நபர் குறிப்பிட்டிருந்தார். ஏ.எல். ஸ்ரீவஸ்தவா என்கிற அந்த நபர், புரட்சியாளர்கள் குறித்து இவ்வளவு இழிவாக எழுதியிருந்ததை என் னால் நம்புவதற்கே மிகவும் கடினமாக இருந் தது. இந்த நபர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தயவால், புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகக் கருதப்பட்டவர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று விட்டாலும், அவர்கள் உருவாக்கிய அடிமை கள் அடிமைப்புத்தியுடன் இன்னும் இருந்து வருகிறார்கள் என்பதும், வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய அடிமைப்புத்தி இன்றும் அவர்களை விட்டு நீங்கிடவில்லை என் பதும் இதிலிருந்து தெளிவாகிறது. அதனால் தான் இப்பேர்வழி, புரட்சியாளர்களை ரத்த தாகம் எடுத்த பேய்கள் என்றும், இவர் களுக்கு வாழ்க்கையில் எவ்விதமான கொள் கையும் லட்சியமும் குறிக்கோளும் கிடை யாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.

இதேபோன்ற கருத்துக்கள் பரப்பப்படு வதற்கு நம்முடைய பழைய புரட்சியாளர்கள் சிலரும் காரணமாவார்கள். நம் மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக நம் இளைஞர் களில் சிலர், நம் வீரத் தியாகிகளின் வீரத் தையும், அவர்கள் நாட்டிற்காகப் புரிந்திட்ட வீரசாகசங்களையும் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக, நம் பழைய புரட்சியாளர்கள் குறித்து மிகைப் படுத்தி - பல சமயங்களில் மிகவும் அபத்த மான அளவிற்கு - கதைகளை அளக்கத் தொடங்கினார்கள். உண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கும் இவர்கள் விட்ட சரடு களுக்கும் சம்பந்தமே இருக்காது. எனவே, ஒட்டுமொத்த விளைவு என்பது, அநேகமாக அதே போன்றதுதான்.

பகத்சிங் உண்மையில் எப்படிப்பட்ட நபர் என்பதை சாமானிய மக்கள் அறிய மாட்டார் கள். அவர்களைப் பொறுத்தவரை, பகத்சிங், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவர் என்றும், லாலாஜியைக் கொன்றதற்காக, சாண்டர்ஸ் என்கிற வெள்ளை அதிகாரியைப் பழிக்குப்பழி வாங்கிய வீரர் என்றும்தான் அறி வார்கள். அதே பகத்சிங், பல்வேறு திறமைகள் பெற்றிருந்த ஒரு மாபெரும் அறிவுஜீவி என்பது பலருக்குத் தெரியாது. அதன் காரண மாகத்தான் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த் தப் பகுதியை - அதிலும் குறிப்பாக பகத்சிங் நிலையினைச் சீர்குலைப்பது என்பது பல ருக்கு எளிதாக இருக்கிறது. தங்களுக்கேற்ற வகையில் புரட்சி இயக்கத்திற்கு உருவம் கொடுப்பதற்கு இறங்கியிருக்கிறார்கள். எனவே அத்தகைய சீர்குலைவு நடவடிக் கைகளை எதிர்த்துப் போராடுவதென்பது இன்று நம்முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

நம் அனைவரையும் விட பகத்சிங் ஒரு மாபெரும் அறிவுஜீவியாவார். தூக்குக் கயிற் றில் ஏற்றுபவன் அவர் வாழும் உரிமையைப் பறித்தெடுக்க வந்த சமயத்தில் வாழ்வின் 24ஆவது வசந்தத்தை அனுபவிக்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், வாழ்வின் அந்தக் குறுகிய காலத்திற்குள் ளேயே, அரசியல், கடவுள், மதம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்து விட்டார். அவர் புரட்சி இயக்கத்தின் வர லாற்றை, அதனுடைய தத்துவார்த்தப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்து, அவற் றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வந்திருந் தார். பகத்சிங்கை முறையாகப் புரிந்து கொண்டு, சரியாகப் பாராட்ட வேண்டுமா னால், அவர் வாழ்ந்த பின்னணியையும் நாம் சற்றே ஆழ்ந்து பரிசீலித்துப் பார்க்க வேண் டியது அவசியம். இதற்கு நாம், புரட்சி இயக் கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி வரலாறு குறித்து குறைந்தபட்சமாவது தெரிந்து கொள் வது அவசியம்.

புரட்சி இயக்கத்தை, புரட்சியாளர்களை எவ்வாறு விளிப்பது? பலவிதமான கட்டுரை யாளர்கள் பல பெயர்களில் குறிப்பிட்டிருக்கி றார்கள். பயங்கரவாதிகள், புரட்சிகரப் பயங் கரவாதிகள், பயங்கரவாதப் புரட்சியாளர்கள், தேசியப் புரட்சியாளர்கள், அராஜகவாதிகள் - இப்படி எண்ணற்ற பெயர்களில் விளித்திருக் கிறார்கள். இவை எதுவுமே பொருத்தமான சொற்றொடராக நான் கருதவில்லை. புரட்சி யாளர்கள் மிகவும் பரவலாக ‘பயங்கரவாதி கள்’ என்றே விளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வேண்டும் என்றே கறை பூச வேண்டும் என்று நினைத்தவர்கள் மட்டு மல்ல, அவர்கள் மீது உளமார மதிப்பும் மரி யாதையும் வைத்திருந்தவர்கள் கூட அவ் வாறு விளித்தார்கள்.

ஓர் இயக்கம் என்பது, தான் ஏற்றுக் கொண்டிருக்கிற அடிப்படைக் கொள்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படை யிலேயே அழைக்கப்பட வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது மேற்கொண்ட நடவடிக் கைகளின் அடிப்படையில் அழைக்கப்படக் கூடாது. சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் நடவடிக்கைகளும் மாறுபடும். ஆனால் அடிப்படைக் கொள்கை மாறாது. மேலும், பயங்கரவாதம் என்பது புரட்சியா ளர்களின் இலக்காக எப்போதும் இருந்தது கிடையாது. பயங்கரவாதத்தின் மூலமாக மட்டுமே சுதந்திரத்தை அடைந்துவிட முடி யும் என்று அவர்கள் எப்போதும் நம்பியது மில்லை. ஓர் இடைக்கால ஏற்பாடாகத்தான் எதிர்-பயங்கரவாத நடவடிக்கையை அவர் கள் கையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

டாக்டர் ஜி. அதிகாரி மற்றும் சிலர் அவர் களை ‘தேசிய புரட்சியாளர்கள்’ என்று விளிக்கிறார்கள். இந்தச் சொற்றொடரும் தவறான பொருளைத் தருவதாகவே கருது கிறேன். இந்தியப் புரட்சியாளர்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் தேசியவாதிகளாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் சர்வதேசியத்திற்கும் சம்பந்தமே இல்லை என்ற கருத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு இத்தகைய சொற்றொடர் ஓர் எளிய ஆயுத மாகக் கிடைத்து விடக்கூடிய அபாயம் இருக் கிறது. அராஜகவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் எந்தவிதமான அரசமைப்பையும் ஏற்கவில்லை. புரட்சியாளர்கள், இவர்களின் பார்வையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதுகளில், புரட்சியாளர்கள் ‘வெடிகுண் டின் தத்துவம்’ என்று அழைக்கப்பட்ட அவர் களுடைய அறிக்கையின் மூலமாக, தொழிலா ளர் வர்க்க சர்வாதிகாரத்துக்காக நிற்கிறோம் என்று பிரகடனம் செய்தார்கள். மேலே குறிப் பிட்ட அனைத்துக் காரணங்களினாலும், இன்னும் சரியான சொற்றொடர் கிடைக்காதத னாலும், நாம் அவர்களை மிக எளிய வார்த் தைகளில் ‘புரட்சியாளர்கள்’ அல்லது ‘இந் தியப் புரட்சியாளர்கள்’ என்றே அழைத்திட லாம்.