Monday, November 5, 2012

அமைச்சரவை மாற்றம் : யாருக்காக?



மத்திய அமைச்சரவை மாற்றத்தில் 17 புதிய முகங்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன. இது, கடலில் மூழ்கிக் கொண் டிருக்கும் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்க மாகிய கப்பலை எப்படியாவது காப்பாற் றிட பிரதமரும், சோனியா காந்தியும் மேற் கொண்ட கடைசி முயற்சியாகவே தெரி கிறது. இது எப்படி இருந்த போதிலும் இதற்குப்பின்னே அமைந்துள்ள மிக முக்கிய நோக்கம் என்பது, அரசாங்கத் தின் மீதமிருக்கும் பதவிக் காலத்திற்குள் பிரதமர் தனக்கு மிகவும் பிடித்த நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலை எப்படியாவது அமல்படுத்திட வேண்டும் என்பதே யாகும். பெட்ரோலியம் அமைச்சகத்தி லிருந்து ஜெய்ப்பால் ரெட்டி நீக்கப் பட்டிருப்பது இந்த நிகழ்ச்சிநிரலின் மிக வும் குறிப்பிடத்தக்க ஒன்று. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்  என்னும் நிறுவனம், ஒப்பந்தம் மூலமாக எடுத்துள்ள கிருஷ்ணா-கோதாவரி எரிவாயுப் படுகையில் அந் நிறுவனம் மிகவும் இழிவான வகையில் பல்வேறு தில்லுமுல்லுகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. உற்பத்திச் செலவினங் களை தங்க முலாம் பூசி பூதாகரமாகக் காட்டி, அதிக விலையைக் குறிப்பிட்டு, கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது. இதற்கு அரசும் உடந்தையாக இருந்து வருகிறது.
இயற்கை எரிவாயுக்களின் விலைகளை மாற்றியமைப்பதற்கான காலக்கெடு வரும் 2014 ஏப்ரலில்தான் என்ற போதிலும், அதன் விலையை உட னடியாக உயர்த்த வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் நிறுவனம் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து வந்தது. பெட்ரோலியத்துறை அமைச்ச ராக இருந்த ஜெய்ப்பால் ரெட்டி இக் கோரிக்கையை ஏற்க மறுத்து வந்தார். இவ்வாறு உயர்த்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த நிர்ப் பந்தத்தையும் அவர் கண்டுகொள்ள வில்லை. மேலும் அவர் மிகவும் துணிச் சலுடன், அரசாங்கத்திற்குத் தொடர்ந்து வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரக் கூடிய விதத்தில், கிருஷ்ணா-கோதாவரி நதிப் படுகைகளில் மட்டும் எரிவாயு உற் பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரு வதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். கிருஷ்ணா-கோதாவரி எரிவாயுப் படுகை பிரச்சனை பலமுறை நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப் பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பிரத மருக்கும் பெட்ரோலியத்துறை அமைச் சருக்கும் கடந்த ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து கடிதங்களும் எழுதி வந் திருக்கிறார்கள். உற்பத்திச் செலவினங் களில் தங்கமுலாம் பூசி விலைகளை செயற்கையாகப் பூதாகரப்படுத்துதல், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக ஓர் அலகு எரிவாயுவின் விலையை 4.12 அமெரிக்க டாலருக்கு உயர்த்துதல் அப்போதைய ஹைட்ரோ கார்பன் டைரக்டர் ஜெனரலின் ஆட்சேபகரமான பங்கு ஆகிய அனைத்தையும் அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுப்பியிருந்தார் கள். 2006ஆம் ஆண்டிலிருந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துவந்த நிலைப்பாடுகள் எவ்வளவு சரியானவை என்பதை, கிருஷ்ணா-கோதாவரி எரி வாயுப் படுகை ஒப்பந்தம் குறித்து தணிக்கை செய்துள்ள மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் (சிஏஜி) அறிக்கையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அது மேலும் ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கத்திற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலிருந்து வரும் கள்ளப்பிணைப்பையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தைப் பகைத்துக் கொண்டதற் காக, ஜெய்ப்பால் ரெட்டி அதிக விலை கொடுக்க வேண்டியதாயிற்று. நாட்டின் அமைச்சர்களை நியமிப்பதில் பெரும் முதலாளிகளின் பிடி எந்த அளவிற்கு வலுவாக இருக்கிறது என்பதை இது மிகவும் வெட்கங்கெட்டமுறையில் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.இப்போது நடைபெற்றுள்ள அமைச் சரவை மாற்றத்தின் மூலம், கார்ப்ப ரேட்டுகளின் நலன்களுக்கும், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும் ஆதர வாக இருக்கும் நபர்கள் அனை வரும், மிகவும் கேந்திரமான பொருளா தார அமைச்சகங்களின் கீழ், மிகவும் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டு விட்டார்கள். குறிப்பாக, பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரான பின் நிதியமைச் சர் பணியிடம் காலியானதும், நவீன தாராளமயக் கொள்கைகளின் மீது ‘‘வெறித்தனமாக வேட்கை’’ கொண் டிருக்கும் மன்மோகன் சிங், அந்த இடத் திற்கு ப.சிதம்பரத்தை நியமித்தன் மூலம் தன் வேட்கையைத் தணித்துக் கொண் டிருக்கிறார். அதுபோன்றே, வர்த்தக அமைச்சகத்தில் ஆனந்த் சர்மா, டெலி கம்யூனிகேசனில் கபில் சிபல், கனரகத் தொழில்களில் பிரபுல் பட்டேல் மற்றும் மனித வள வளர்ச்சித்துறை அமைச்ச ராகப் புதிதாக பல்லம் ராஜூ, தனிப் பொறுப்புடன் மின்சாரத்துறை இணை அமைச்சராக ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரை நியமித்ததன் மூலம் அவரது எண்ணம் ஈடேறிவிட்டது. இவர்கள் அனைவருமே கார்ப்பரேட் நலன்களைப் பிரதிபலிக்கும் பேர்வழிகளேயாவர். அமைச்சரவை மாற்றத்தில் கவ னிக்கப்பட வேண்டிய மற்றொரு மிக முக் கியமான அம்சம் என்னவெனில், அதன் அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்தோ அல்லது அவர் களின் இரண்டகமான பேரங்கள் குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்படாமல், அவற்றையெல்லாம் காங்கிரஸ் ஒதுக் கித்தள்ளியிருப்பதாகும். சல்மான் குர் ஷித் தலைமையில் உள்ள ஓர் அறக் கட்டளை ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டிக்கொண்டிருப்பதை அடுத்து, உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம் அதன்மீது விசாரணை நடத்திக்கொண் டிருக்கையில், அதைப்பற்றிச் சற்றும் பொருட்படுத்தாது அவருக்கு அயல் துறை விவகாரங்கள் என்னும் மிக முக் கியமான இலாகா ஒதுக்கப்பட்டிருக் கிறது. அதேபோன்று சசி தரூர் 2010இல் அமைச்சராக இருந்த சமயத்தில், தான் திருமணம் செய்து கொள்ள இருந்த பெண்மணிக்காக ஐபிஎல் கொச்சி குழு விடம் பேரம் பேசியது வெளியானதை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து அப் போது அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது.
இரண்டு ஆண்டுகள் கழித்து, ‘இது என்ன பெரிய குற்றமா?’ என்று கருதி பிரதமரும், சோனியா காந்தியும் அவரை மீண்டும் தங்கள் அமைச் சரவையில் இணைத்துக் கொண்டிருக் கின்றனர்.இரு திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட் டதை அடுத்து அவர்கள் ராஜினாமா செய்ததாலும், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறியதாலும் ஏற்பட்ட காலி யிடங்களை நிரப்புவதற்காகவும் கூட அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பதவியேற்றுக்கொண்ட ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் காங்கிரசைச் சேர்ந்தவர்களேயாவர். இவ்வாறு அமைச் சரவை மாற்றியமைக்கப்பட்டபின் ஐ.மு. கூட்டணி அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களேயாகும். மன் மோகன் சிங் ஆட்சியில் நன்கு செழித்து வளர்ந்துள்ள வர்த்தகர்கள்-அரசியல் வாதிகள்-அதிகாரவர்க்கத்தினர் இடை யேயான தவறான பிணைப்பைப் பட்ட வர்த்தனமாகக் காட்டும் கையேடாக தற்போதைய அமைச்சரவை அமைந் துள்ளது. பெரும் கார்ப்பரேட்டுகளுக்கும் அந்நிய மூலதனத்திற்கும் அபரிமிதமான சலுகைகள், சாமானிய மக்களின் வாழ் வில் தாங்கமுடியாத அளவிற்குத் தாக் குதல்கள், அதிக அளவிலான ஊழல் பேரங்கள் கண்ணுக்குத் தெரியத் தொடங் கியுள்ளன. இவற்றை முறியடிக்க வேண்டு மானால், தொழிலாளர் வர்க்கமும், உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரி வினரும் அரசாங்கத்திற்கு எதிரான தங் கள் எதிர்ப்பு இயக்கங்களை மேலும் உக் கிரமாக்கிட வேண்டும். அடுத்து மக்கள வைத் தேர்தல் நடைபெறுகையில், இந்த அரசாங்கத்தை உத்தரவாதமான முறை யில் உதறித் தள்ளுவதைத் தவிர, நாட்டு மக்களுக்கு வேறு மார்க்கமில்லை.
(தமிழில்: ச.வீரமணி)

No comments: