ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் பிரதான அங்கமாக விளங்கும்
காங்கிரஸ் கட்சி, கடந்த
ஞாயிறன்று தில்லியில் மெகா பேரணி என்று சொல்லிக்கொண்டு ஒரு பேர ணியை நடத்தியுள்ளது.
ஐ.மு.கூட்டணி-2
அரசாங்கத்தையும் அதன்
கொள்கைகளையும் ஆதரித்தே இப்பேரணி நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பேரணியில்
பேசிய காங்கிரஸ் தலைவரும் ஐ.மு.கூட்டணி தலைவருமான சோனியா காந்தி, காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல்
காந்தி, மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட
அனைவருமே ஊழல் பிரச்சனைகள் குறித்தும், நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரித்தும், குறிப்பாக சில்லரை வர்த்தகத் துறையில்
அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு வக்காலத்து வாங்கியும் உரையாற்றினர்.
இத்தகைய கொள்கைகளின் விளைவாக நாட்டில்
உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் சுமைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறதே என்பது
குறித்து கிஞ்சிற்றும் மன உளைச்சல் அடையவில்லை என்பதையே அவர்களின் உரைகள்
காட்டுகின்றன.ஊழலைப் பொறுத்தவரை, ஐ.மு.கூட்டணியின் தலைவர், ‘‘எங்களுக்கு
எதிராக சாட்டப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் எதிர்த்துப் போராடுவோம்’’ என்றும், ‘‘எவரேனும் குற்றம் இழைத்தவர்கள் என்று
மெய்ப்பிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக் கை எடுக்காமல் இருக்கமாட்டோம்’’ என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச்
செயலாள ரும்,
ஊழலுக்கு எதிராகவே தாங்களும் பணி
யாற்றிக் கொண்டிருப்பதாக உரிமை கொண் டாடினார். ‘‘ஊழலை எதிர்ப்பதற்கான முறை யில் மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது,’’
என்று கூட பலத்த இடி யோசைக்கிடையே
அவர் முழக்கமிட்டுள்ளார். ‘‘கடந்த
எட்டு ஆண்டுகளாக இந்த முறையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிரச்ச னை இந்த
அமைப்பு முறையின் மீதுதான் இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும்’’ என்று கூறினார். ஆயினும், அந்த மாற்றங்கள் என்ன என்பது குறித்தும், இவற்றை யார் கொண்டுவருவது என்பது
குறித்தும் மக்கள் அவர்களுக்குள்ளாக ஊகித் துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டனர்.
சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தின் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, லோக்பால் சட்டம் நிறைவேறாததற்காக
எதிர்க்கட்சிகள் மீது குறைகூறியுள்ள அவர், ‘‘நாங்கள் அதனை நிறைவேற்றுவோம், சற்றே பொறுத்திருந்து கவனியுங்கள்’’ என்றும் கூறியிருக்கிறார். சென்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்
போது, மாநிலங்களவையில் லோக்பால் சட்ட முன்வடிவின்
மீதான விவாதத்தை நள்ளிரவு வரை நீட்டிக்க வைத்து, அது நிறைவேறாத வகையில் நாச வேலை செய்தது, காங்கிரஸ் கட்சிதான் என்பதை அன்றைய
தினம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த நாட்டு மக்கள்
அனைவரும் நன்கு அறிவார்கள்.
வரவிருக் கும் கூட்டத் தொடரின்போதும்
முக்கியமான திருத்தங்களுடன் அச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப் படுமா என்பது குறித்து
மீண்டும் ஒருமுறை மக்கள் ஊகத்திற்கு விடப்பட்டிருக்கிறது.‘‘அமைப்பை மாற்றுதல்’’ குறித்து அதிக அளவில்
பீற்றிக்கொண்டிருப்பது தொடர்பாகச் சொல்வதென்றால், தற்போதைய நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
தொடர்பாக இருந்து வரும் தற்போதையக் கட்டமைப்பைக் கொண்டுவந்திருப்பதில் பிர தானமான
பொறுப்பு காங்கிரஸ் கட்சியையே சாரும் என்பது அடிக்கோடிட்டுக் கொள்ளப் பட வேண்டியது
அவசியமாகும். இதன் மூல மாக மெகா ஊழல்களுக்கு வாய்ப்பு வாசல் களை அகலத் திறந்து
வைத்தது காங்கிரஸ் கட்சிதான். இத்தகைய நவீன தாராளமயக் கொள்கைதான் மிக மோசமான
அளவிற்கு சலுகைசார் முதலாளித்துவத்தின் புற்றீசல் போன்ற வளர்ச்சிக்குக் காரண
மாகும். அதன் விளைவாக, ஏற்கனவே பல
லட்சம் கோடி ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டும்
வரு கின்றது. ஆயினும் பேரணியில் பேசிய மூன்று பிரதான தலைவர்களுமே, இந்த அமைப்பை மாற்றுவது குறித்துப்
பேசாமல், அதற்கு நேர் முரணாக இவ்வாறு
கொள்ளையடிப்பதற்கு வழிசெய்து தந்துள்ள நவீன தாராளமயக் கொள்கைக்கு வக்காலத்து
வாங்கித்தான் பேசியிருக்கிறார்கள். இக்கொள்கைதான் சரி என்றும், சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், இந்தியா வளர முடியாது என்றும்
பேசியிருக் கிறார்கள்.பிரதமர், தன்னுடைய
உரையின்போது,
பொருளாதார சீர்திருத்தங்களுக்கு
அதிக வக்காலத்து வாங்கியுள்ளார். ‘‘எந்தவொரு நாடும் தன்முன் உள்ள மாபெரும் சவால்களை பொருளாதார
வளர்ச்சியின்றி எதிர்கொண்டிட முடியாது,’’ என்று கூறியுள்ள பிரதமர், ‘‘அந் நிய மூலதனத்திற்கு நம் பொருளாதார வாச லைத் திறந்துவிடுவது
இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளித்திடும்’’ என்றும் அளந்திருக்கிறார். தாங்கள் பின்பற் றும் கொள்கையால்
நாட்டில் பெரும்திரளான மக்கள் அவதிக்குள்ளாகி யிருப்பதை நியாயப் படுத்திப்
பேசியுள்ள அவர், ‘‘நாட்டின்
எதிர் காலத்திற்குப் பயன் அளிக்கும் எனில், எளிய வழியை விட்டு கடினமான வழியில்தான் செல்ல வேண்டும்’’ என்றும் பேசியுள்ளார்.
இதேபாணியில், பெட்ரோலியப் பொருட் களின் விலைகளை
உயர்த்தி யிருப்பதையும் நியாயப்படுத்தி இருக்கிறார். ‘‘அரசாங்கத்தின் மானியத் தொகை
அதிகரித்துக் கொண்டிருப் பதால், இவற்றின்
விலைகளை உயர்த்த வேண்டியிருக்கிறது,’’ என்று கூறியிருக்கிறார். அவ்வாறு செய்யாவிட்டால், ‘‘அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையானது
இறுதியில் நாட்டுமக்களுக்கு ஊறுவிளைவித்துவிடும்’’ என்று கூறியிருக்கிறார். ‘‘இறுதியில் நாம் அனைவரும் இறந்துவிடுவோம்’’ என்று பொருளாதாரவாதி ஜான் மேனார்ட்
கீன்ஸ் ஒருசமயம் கூறிய புகழ்பெற்ற வாசகங்களை பொருளாதாரவாதி என்ற முறையில் பிரதம
ரும் அறிந்திருக்க வேண்டும். ஏழை மக்களுக்கு அளிக்கும் மானியங்கள் தான் நிதிப்
பற்றாக்குறை அதிகரிக்கக் காரண மா? வரிச்
சலுகைகள் என்ற பெயரில் பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் மற்றும் உயர் வருமானவரி அளிப்பவர்களுக்கும் அளித் துள்ள
மானியங்கள் சென்ற ஆண்டு பட்ஜெட் ஆவணங்களின் அடிப்படையில் 5லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாகும். ஆனால் நிதிப்
பற்றாக்குறை 5
லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய்தான். நிதிப்
பற்றாக்குறைக்கு, ஆட்சி
யாளர்கள் பணக்காரர்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகைகள்தான் காரணமாகும். இவ்வாறு
பணக்காரர்களுக்கு வரிச்சலுகை கள் அளித்துவிட்டு, இதனைச் சரிசெய்வதற் காக, ஏழைகளின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறீர்களே! இதனை ஏற்க
முடியாது, திருவாளர் பிரதமர் அவர்களே! இவ்வாறு
திருவாளர் பிரதமர் கூறியதன் மூலம், இவர்கள் கடைப்பிடிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கை என்பது ஏழை
மற்றும் சாமானிய மக்களைப் போய்ச் சேரும் என்பதோ, நாட்டிலுள்ள அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்
கும் என்பதோ நிச்சயமாகக் கிடையாது என் பது வெட்டவெளிச்சமாகி விட்டது.சில்லரை
வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவிற்கு பிரதமர் வலுவாக
வக்காலத்து வாங்குகிறார். இவ்வாறு அனுமதிப்பது குறிப்பாக விவசாயி களின்
மேம்பாட்டிற்காகவே என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்.
சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி
முதலீட்டை அனுமதிப்பதற்கான எதிர்ப்பு என்பது, அது தொடர்பாக 2004-05ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட அந்தக் கணமே தொடங்கி
விட்டது. இதற்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்ததாலும், ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கக் காலத்தில் இடதுசாரிகளின்
ஆதரவு அதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்ததாலும், இம்முடிவு குறித்து எதுவும்
செய்யமுடியாமல் அப்போது அதனை அலமாரியில் வைத்துவிட் டனர்.இம்முடிவை எதிர்த்து, இடதுசாரிக் கட்சி கள் அப்போது
அமைக்கப்பட்டிருந்த ஐ.மு. கூட்டணி - இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கி ணைப்புக்
குழுவில் அக்டோபர் 25 அன்று ஒரு
குறிப் பினை அளித்தது. அந்தக் குறிப்பில், மேலோட் டமான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே நம் நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 11 விழுக்காடு
அளவிற்கு சில்லரை வர்த்தகத் துறை பங்களிப்பினைச் செய்கிறது என்றும், இத்துறையானது நாலு கோடிக்கும் அதிக
மானவர்களுக்கு வேலை அளித்து வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தோம். 1998ஆம் ஆண்டு நான்காவது பொருளாதார கணக்
கெடுப்பின்படி,
சில்லரை வர்த்தகத்துறை மூலம் விவ
சாயம் அல்லாத வர்த்தகத்தில் மொத்த அள வில் 42.5 விழுக்காடு அளவிற்கு கிராமப்புறங் களிலும், 50.5 விழுக்காடு அளவிற்கு நகர்ப்
புறங்களிலும் வேலை அளிப்பதாகத் தெரிவித் திருந்தது. ஒட்டுமொத்த அளவில் பார்த்தோ
மானால், கிராமப்புறங்களில் 38.2 விழுக்காடு அளவிலும், நகர்ப்புறங்களில் 46.4 விழுக்காடு அளவிலும் சில்லரை
வர்த்தகத்துறை வேலை அளித்து வந்தது.
எனவே. நாட்டு மக்களில் பல கோடிப் பேர், தங்கள் வாழ்வாதாரங் களுக்காக சில்லரை
வர்த்தகத்துறையையே சார்ந்துள்ளனர். இவற்றைப் பற்றியெல்லாம் எவ்விதக் கவலையும்
படாமல், சில்லரை வர்த் தகத்தில் பன்னாட்டு
ஜாம்பவான்களை அனு மதித்தோமானால், அது
நாட்டு மக்களில் பல கோடிப் பேரை வறுமையில் தள்ளி, கடும் துன் பத்திற்கு உள்ளாக்கிடும் என்பதில் எவ்வித ஐயமும்
இல்லை.சூப்பர்மார்க்கெட் ஜாம்பவான்கள் நாட்டிற் குள் நுழைவது என்பது, சந்தைக்கு வரும் பொருள்களின் விலைகளில்
வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்றும், வேலைவாய்ப்பை அதிகரித்திடும் என்றும் பல்வேறு ஆய்வுகள் காட்டுவதாக
ஒரு சரடு விடப்படுகிறது. உண்மையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் குழு ஒன்று, 2004 பிப்ரவரியில் ஓர் அறிக்கை வெளி
யிட்டிருந்தது. அந்த அறிக்கையானது தன்னு டைய முடிவுரையில், ‘‘வால்மார்ட் வெற்றி என்பதன் பொருள்
தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சம்பளம் மற்றும் பயன்கள் இறங்குமுகத்தில்
இருக்கும் என்ப தும், தொழிலாளர்களின்
அடிப்படை உரிமை கள் அரக்கத்தனமாக மீறப்படும் என்பதும், நாடு முழுவதும் உள்ள அனைத்துத்தரப்பு
மக் களின் வாழ்வாதாரங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதும் ஆகும். ஒரு
வர்த்தக நிறுவனத்தின் வெற்றி, தொழிலாளர்கள்
மற்றும் அவர்தம் குடும்பங்களின் வயிற்றில் அடித்து வரக்கூடாது. இத்தகைய குறுகிய
லாபமீட்டும் உத்திகள், இறுதியாக
நாட்டின் பொருளா தாரத்தையே அரித்துவீழ்த்திவிடும்.’’ என்று குறிப்பிட்டிருந்தது. சூப்பர்மார்க்கெட்டுகளில் அந்நிய
நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்திடும்
என்று கூறப்படுவதிலும் உண்மை எதுவும் இல்லை என்பதையே பல்வேறு ஆய்வுகள்
காட்டுகின்றன. மெக்சிகோ, நிகரகுவா, அர்ஜென்டினா போன்ற லத்தீன் அமெரிக்க
நாடுகளிலும்,
கென்யா, மடகாஸ்கர் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும், வியட்நாம், தாய் லாந்து ஆகிய நாடுகளிலும் அந்நிய
நேரடி முத லீடுகளின் அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட்டுகள்
காட்டுவது என்ன? சாதாரணமாகப்
பாரம்பரியமாக இருந்துவரும் அங்காடிகளில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் மற்றும்
காய்கறிகளின் விலைகளைவிட சூப்பர் மார்க்கெட்டுகளில் விலைகள் பல மடங்கு அதிகம்
என்பதேயாகும்.
சூப்பர் மார்க்கெட் ஜாம்பவான்கள் கடைகளைத் திறந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதை வியட்நாம் அனுபவம் பொய்யாக்கிவிட்டது. தெருவில் வியாபாரம் செய்பவர் 18 பேருக்கு வேலை அளிக்கக்கூடிய அதே சமயத்தில், பாரம்பரியமாக சில்லரை வியா பாரம்
செய்கிறவர் 10
பேருக்கும், கடை வைத்து நடத்துகிறவர் 8 பேருக்கும் வேலை தரக்கூடிய அதே
சமயத்தில், ஒரு சூப்பர்மார்க்கெட் நிறு வனம்
அவ்வேலைகளை 4
பேரை மட்டும் வைத்துக் கொண்டு, அதே அளவு பொருட் களை விற்றுவிடுகிறது. இந்த
அனுபவம் என்பது கிட்டத்தட்ட உலகளாவியதாகும். அதேபோன்று பொருளை உற்பத்தி செய்
திடும் விவசாயிகளுக்கு சூப்பர்மார்க்கெட் ஜாம் பவான்கள் நல்ல விலை கொடுப்பார்கள்
என் பதும் கட்டுக்கதையேயாகும். ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு
குறிப்பு அளிக்கப் பட்டிருந்தது. அதில், ஆப்பிரிக்க நாடுகள் பல வற்றின் அனுபவங்கள் சுட்டிக் காட்டப்பட்டி
ருந்தன. சந்தையில் விற்கப்படும் ஒருவிதமான பால் சாக்லேட் பாரின் விலையில் வெறும் 3.9 விழுக் காடு அளவிற்குத்தான் அதன் மூலப்
பொரு ளை உற்பத்தி செய்யும் கோகோ விவசாயி பெறுகிறான். ஆனால் 34 விழுக்காடு லாபம் கூடுதலாக வைத்து அந்த
சாக்லேட் பார் விற்கப்படுகிறது. இதேபோன்று பனானா நாட் டைச் சேர்ந்த விவசாயி, பொருள் விற்கப்படும் விலையில் 5 விழுக்காடு அளவிற்குத்தான்
தரப்படுகிறார். ஆனால் சில்லரை வர்த்தகருக் குக் கிடைக்கும் கூடுதல் லாபம் 34 விழுக் காடாகும். அதேபோன்று ஒரு ஜீன்ஸ்
பேண்ட் தைத்துத் தரும் தொழிலாளிக்கு அது விற்கப் படும் இறுதி விலையில் 12 விழுக்காடு தொகை கிடைக்கிற அதே
சமயத்தில், அத னை விற்கும் கடைக்காரருக்கு 54 விழுக்காடு லாபம் கிடைக்கிறது. உலகப்
பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாகியுள்ள இன்றைய சூழலில், சர்வதேச நிதி மூலதனம் தங்கள் லாப
வேட்டைக்குப் புதிய வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறது. இந்திய சில்லரைச் சந்தை
மிகவும் லாபகர மான விருப்பத்தேர்வாக இருக்கும் என்று அது கருதுகிறது. இவ்வாறு
இவர்களது முடிவு நம் நாட்டின் பொருளாதாரத்தைக் காவு கொடுத்து, நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து
சர்வதேச மூலதனத்திற்கு கொள்ளை லாபம் ஈட்டுவதற் கே அனுமதித்திடும் என்பதில்
ஐயமில்லை.எதார்த்த நிலைமைகள் இவ்வாறிருக்கக் கூடிய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமும் இவற்றைச் சரியானமுறையில்
அங்கீகரிக்க மறுப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டு மக்களைத் திசை திருப்பக்கூடிய விதத்தில் தவறான தகவல் களைத்
தந்து கொண்டிருக் கின்றன.
அவ் வாறு அவர்கள் தவறான தகவல்களைத் தருவ
தோடு மட்டுமல்லாமல், மக்களை
எதிர்க் கட்சிகள்தான் தவறாக இழுத்துச்செல்வ தாகக் கூறி நம்மீதே குறைகூறுகிறார்கள்.
‘‘சிலர் மக்களைத் தவறான பாதையில்
இழுத்துச்செல்ல முயற்சித்துக் கொண்டிருக் கிறார்கள்’’ என்று பிரதமர் கூறியிருக்கிறார். மேலே நாம் கூறியுள்ள
உண்மைகளைச் சுட்டிக்காட்டி, ‘‘நீங்களும்
காங்கிரஸ் கட்சியும் தான் நாட்டையும், நாட்டு மக்களையும் தவ றான பாதையில் இழுத்துச் செல்கிறீர்கள்’’ என்று மக்கள் பிரதமரிடம் கூறிட
வேண்டியது அவசியமாகும்.நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களின் வயிற்றில் அடிப்பதன்
மூலமாகவும்,
நாட்டின் வளங்களையும்
சந்தைகளையும் மேலும் அகலமாகத் திறந்து விட்டு, சர்வதேச நிதி மூலதனத்திற்கும், இந்தியப் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும், நாட்டைக் கொள்ளையடித்துச் செல்லவும், அதிக லாபமீட்டவும் வழிவகுத்துக்
கொடுத்திருக்கிறார்கள் என்பதே மிகவும் எளிதாகத் தெரியும் உண்மையாகும்.
நாடும்
நாட்டு மக்களும் நலம்பெற வேண்டுமானால், ஆட்சியாளர்களின் இத்தகைய ‘கொள்கைத் திசைவழி’ முற்றிலுமாக
மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். காங்கிரஸ் கட்சியின் பேரணியில் அதன்
தலைவர்கள் ஆற்றிய உரைகள், இவர்களின்
பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடத்தப்பட
வேண்டும் என்கிற மக்களின் தீர்மானகரமான முடிவை இரட்டிப்பாக்கியுள்ளன.
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment