பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1 அரசாங்கம், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற 2008ம் ஆண்டு ஜூலையில் தன்னிச் சையாக முடிவெடுத்ததை அடுத்து, இடதுசாரிக் கட்சிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்ட பின்னர், நாடாளுமன்றத்தில் நடை பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எம்.பி.க்களின் வாக்குகளை வாங்குவ தற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி -1 அரசாங்கம் மேற் கொண்ட இழி செயல்களை தற்போது விக்கிலீக்ஸ் இணைய தளம் அம்பலப் படுத்தி இருக்கிறது.
விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள விபரங்கள் ஐ.மு.கூட்டணி-1 அரசாங் கமானது, எந்தஅளவிற்கு மிகவும் ஆழ மாக அமெரிக்க அரசாங்கத்தின் ‘‘ராணு வக் கூட்டாளி’’யாக இந்தியா மாறு வதை உத்தரவாதப்படுத்தக்கூடிய அள விற்குப் பணிந்து போயிருக்கிறது என் பதை ஏராளமான ஆதாரங்களுடன் சுட் டிக்காட்டி இருக்கின்றன. இந்த விப ரங்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி -1 அரசாங்கம் தரம் தாழ்ந்து சென்றிருக்கிறது என்பதையும், அதன் கேடுகெட்ட அரசியல் சந்தர்ப் பவாதத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் நம் நாட்டிலும் மற்றும் உலகம் முழுதும் பார்த்திட்ட மக்கள், எந்த அளவிற்கு நம் நாடாளுமன்ற ஜன நாயகம் மோசமாகிக் கொண்டிருக் கிறது என்பதைக் கண்டனர். அப்போது மக்களவையின் சபாநாயகராக இருந்த வர், இவ்வாறு ‘எம்.பி.க்களின் வாக்கு களைப் பெற பணம்’ வந்த விபரங்கள் குறித்துப் புலனாய்வு செய்திட ஒரு குழுவை நியமித்தார். அக்குழுவும் தன் அறிக்கையை அவையில் தாக்கல் செய் தது. அதில் கிரிமினல் நடவடிக்கை களில் ஈடுபட்ட பேர்வழிகள் மீது உரிய அமைப்புகள் மூலம் புலனாய்வு மேற் கொள்ளப்பட வேண்டும் என்று பரிந் துரைத்திருந்ததாக நம்பகமான தக வல்கள் மூலம் தெரியவருகிறது. ஆயி னும், இதுவரை இதன்மீது உருப்படி யான நடவடிக்கை எதுவும் மேற்கொள் ளப்படவில்லை.
விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள உண்மைகள், இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரு மகனும் முழுமையாக சம்பந்தப்பட் டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன. மேலும் அவற்றில், ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரும், சோனியா காந்தியின் நெருங்கிய குடும்ப நண்பர்களில் ஒருவராகவும் கருதப்பட்ட’’ ஒரு காங்கிரஸ் எம்.பி., குறித்தும் நேரடியாகப் பல விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக, இந்த நிகழ்வு தொடர்பாக முறையாகப் புலனாய்வு நடைபெற்றிருந்தால், ஆளும் கட்சியும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி களும் மிகவும் சங்கடத்திற் குள்ளாகி இருக்கும். அதனால்தான் நாடாளு மன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரை கள் மீது உரிய நடவடிக் கைகள் ஐ.மு. கூட்டணி அரசாங்கத்தால் எடுக்கப் படவில்லை என்று தெரிகிறது.
பிரதமரும் ஐ.மு.கூட்டணி அர சாங்கமும் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். நாடா ளுமன்ற ஜனநாயகத்தை ஊனப்படுத் தியுள்ள இந்த இழி செயல்களில் ஈடு பட்ட - இப்போது விக்கிலீக்ஸ் வெளிப் படுத்தியுள்ள - பிரதான நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களின் குற்றச் செயல்கள் குறித்துப் புலனாய்வு மேற்கொள்ள உடனடியாக அரசு முன் வர வேண்டும். கிரிமினல் நடவடிக் கைகளில் ஈடுபட்டவர்களைக் குற்ற வாளிக் கூண்டிற்குக் கொண்டுவரு வதன் மூலம், நம் நாட்டின் நாடாளு மன்ற ஜனநாயகத்தின் உயரிய மாண் பினை மீட்டெடுத்திட குறைந்தபட்சம் இதனைச் செய்திட வேண்டியது அவ சியமாகும்.
- தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment