Sunday, March 20, 2011

யாருக்காக ஆட்சி செய்கிறார்கள்?

கடந்த ஆறு ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியில் உள்ள ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்துள்ள வருமான வரியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் 3 லட்சத்து 74 ஆயிரத்து 937 கோடி ரூபாய்களாகும். 2ஜி ஸ்பெக் ட்ரம் ஊழலில் இவர்கள் அடித் தக் கொள்ளையைப் போல் இரு மடங்குக்கும் அதிகமாகும். ஆட்சி யாளர்கள் கார்ப்பரேட் முதலாளி களிடமிருந்து வசூலிக்கும் தொகை யை வசூலிக்காமல் தள்ளுபடி செய்வது என்பது ஒவ்வோராண் டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2005-06ஆம் ஆண் டில் இவர்கள் தள்ளுபடி செய்த தொகை 34 ஆயிரத்து 618 கோடி ரூபாய்களாகும். இப்போது சமர்ப் பிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் இவ்வாறு இவர்கள் தள்ளுபடி செய்திருப்பது, 88 ஆயிரத்து 263 கோடி ரூபாய்கள். 155 விழுக்காடு உயர்வு. அதாவது ஆட்சியாளர் கள், சராசரியாக நாளொன்றுக்கு 240 கோடி ரூபாய் தொகையைக் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்து கொண்டிருக்கி றார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள 88 ஆயிரத்து 263 கோடி ரூபாய்கள் என்பது கார்ப்பரேட் முதலாளிகள் தரவேண்டிய வருமான வரியை வசூலிக்காமல் தள்ளுபடி செய்த தொகை மட்டுமே. இதில் அவர் களிடமிருந்து வசூலிக்க வேண் டிய வருவாய் தொகைகள், வசூ லிக்காமல் கைவிட்ட தொகை (சநஎநரேந கடிசநபடிநே) சேராது. தங் கம், வைரம் போன்றவைகள் மேல் வசூலித்து வந்த சுங்கத் தீர் வையை அரசாங்கம் கைவிட்டி ருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 48 ஆயிரத்து 798 கோடி ரூபாய் களாகும். இதில் பாதி அளவுத் தொகையை செலவு செய்தாலே, நாட்டில் உள்ள மக்கள் அனை வருக்குமான பொது விநியோக முறையை வெற்றிகரமாக அமல் படுத்திட முடியும். கடந்த மூன் றாண்டுகளில் மட்டும் ஆட்சியா ளர்கள் தங்கம், வைரம் போன்ற ஆபரணங்களுக்கு விதித்து வந்த சுங்கத் தீர்வையைத் தள்ளுபடி செய்திருப்பதன் மதிப்பு என்பது 95 ஆயிரத்து 675 கோடி ரூபாய் களாகும்.

ஆனாலும் மக்களை மடையர் கள் என்று நினைத்துக் கொண்டு இதற்கெல்லாம் ஆட்சியாளர்கள் சொல்லும் விளக்கம் என்ன தெரி யுமா? இவை எல்லாம் ஏழைகள் நலமுடன் வாழ மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளாம். தங்கத் திற்கும் வைரத்திற்கும் இவ்வாறு பெரிய அளவில் சுங்கத் தீர்வை தள்ளுபடி செய்திருப்பதற்குக் காரணம், உலகப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட் டுள்ள ஏழைத் தொழிலாளர் களைக் காப்பதற்காகவாம். என்னே கரிசனம்? சூரத்தில் தங் கம் மற்றும் வைர நகைக ளைச் செய்து வந்த ஒரியா தொழிலாளர் கள் வேலையிழந்து தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பி விட்டார்கள். வேலையிழந்த பலர் தற்கொலைப் பாதையைத் தேர்ந் தெடுத்துள்ளார்கள். இவர்களில் ஒருவரைக்கூட அரசின் இந்நட வடிக்கை காப்பாற்றியதாகத் தெரி யவில்லை. இவ்வாறு ஆட்சியா ளர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கார்ப்பரேட் முதலாளி களுக்கு சலுகை அளிப்பது 2008 இலேயே தொடங்கிவிட்டது. ஆயி னும் கடந்த மூன்றாண்டுகளில் இம்மாநிலத்தில் நாள்தோறும் சராசரியாக 1800 பேர் வேலை யிழந்து வருகிறார்கள்.

இவை மட்டுமல்ல, வேறு எந்தெந்த விதங்களில் எல்லாம் ஆட்சியாளர்கள் கார்ப்பரேட் முத லாளிகளுக்குச் சேவகம் செய்கி றார்கள் என்று பார்ப்போம். கார்ப்ப ரேட் முதலாளிகள் நடத்தி வரும் அதிநவீன மருத்துவமனை களுக்கு இறக்குமதி செய்யப்படும் அதிநவீன மருத்துவ உபகரணங் களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் சுங்கத் தீர்வையிலி ருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் மட்டும் இவ்வாறு 1 லட்சத்து 74 ஆயிரத்து 418 கோடி ரூபாய்கள் சுங்கத் தீர்வையிலி ருந்து விலக்கு அளிக்கப்பட்டி ருக்கிறது.

அதேபோல் கலால் வரியிலும் 1 லட்சத்து 98 ஆயிரத்து 291 கோடி ரூபாய்கள்அளவிற்கு வர வேண்டிய வருவாய் வசூலிக்கப் படாமல் கைவிடப்பட்டிருக்கி றது. சென்ற ஆண்டு இத்தொகை 1 லட்சத்து 69 ஆயிரத்து 121 கோடி ரூபாய்களாகும்.

இவ்வாறாக ஆட்சியாளர்கள் 2005-06ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் கார்ப் பரேட் முதலாளிகளிடமிருந்து வசூலிக்காமல் ரத்து செய்த தொகை எவ்வளவு தெரியுமா? 21லட்சத்து 25 ஆயிரத்து 023 கோடி ரூபாய்களாகும். 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் மூலம் அடித்த தொகை யைப் போல் 12 மடங்கு. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டுமே இந்த அளவிற்கு அரசின் கஜா னாவிற்கு வரவேண்டிய தொகை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள் ளித்தரப்பட்டிருக்கிறது.

நாட்டின் அனைவருக்கு மான பொது விநியோக முறையை அமல்படுத்தி, நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் உணவுத் தேவையை உத்தர வாதப்படுத்து என்று கோரினால், அதற்குப் பணத்திற்கு எங்கே போவது என்று புலம்பும் ஆட்சி யாளர்கள் கார்ப்பரேட் முதலாளி களுக்கு கடந்த ஆறு ஆண்டு களில் அள்ளித்தந்துள்ள தொகை 21 லட்சம் கோடி ரூபாய்கள்.

ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காண்போம் என்று கூறு பவர்களும், சாமானியர் களுக்காகவே ஆட்சியில் இருக் கிறோம் என்று கூறுபவர்களும் உண்மையில் யாருக்காக ஆட்சி யில் இருக்கிறார்கள் என்பது மேற்கண்ட விவரங்களிலிருந்து நன்கு தெரிகிறதல்லவா?

-ஆதாரம்: பி. சாய்நாத், நியு ஏஜ் வார இதழில் எழுதிய கட்டுரை

ச.வீரமணி

No comments: