Monday, January 14, 2008

வளர்ச்சி யாருக்காக?

இந்தியத் தொழில் நிறுவனங்கள், தாங்கள் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாக பீற்றிக் கொள்வது தொடர்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் (சென்செக்ஸ்) 21 ஆயிரத்தைக் கடந்து விட்டது. அதே சமயத்தில் மற்றொரு முனையில், நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. ‘ஒளிரும் இந்தியாவுக்கும்’, ‘அல்லலுற்று அவ திப்படும் இந்தியாவுக்கும்’ இடை யிலான இடைவெளி, பாய்ச்சல் வேகத்தில் ஆழமாகிக் கொண்டிருப் பதும் தொடர்கிறது. இவ்வாறு இடை வெளி அதிகமாகிக் கொண்டிருப்ப தற்கு, நம் பொருளாதாரத்தில் பங் கீட்டு அம்சங்களில் ஏற்பட்டுள்ள திற மையின்மை மட்டுமல்ல, ஆட்சியா ளர்கள் இவ்வாறு இடைவெளி அதி கரித்து வருவது குறித்து அக்கறை யற்று இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு இடைவெளி ஓர் எளிய உண்மையின் அடிப்படை யிலேயே வளர்கிறது. அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர் களாகவும், ஏழைகள் மேலும் ஏழை களாகவும் மாறக்கூடிய குறிப்பிட்ட நிலைமைகளின் அடிப்படையிலே யே இது நடைபெறுகிறது. பொருளா தாரச் சுரண்டல் உக்கிரமடைவதன் அடிப்படையில் முதலாளித்துவத் தின் குணம் இதுவேயாகும். எடுத்துக்காட்டாக, அத்தியா வசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதை எடுத்துக் கொள்வோம். இது மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை மேலும் சுமத்துகிறது. ஆனால், அதே சமயத்தில், பண வீக்கம் என்பது பொருளாதார மறுபங்கீட்டு அம்சத் தில் ஒரு முக்கியக் கருவியாகும். இது லாபமீட்டுவோரின் வருமானப் பங்கினை அதிகரித்திடும் அதே சமயத்தில், நுகர்வோரை மேலும் வறியவராக்கிடும். பணவீக்கம் என்பது பணக்காரர்களுக்கு ஆதரவா கவே வருமானத்தைப் மறுபங்கீடு செய்திடும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது விலைவாசியைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகள் குறித்து, இடது சாரிகள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக ஓரளவுதான் பலன் கிடைத்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர் வுக்கு முக்கிய காரணம், வணிகத் துறையில் ஊக முன் வர்த்தக முறை (ளயீநஉரடயவiஎந கடிசறயசன/கரவரசந வசயனiபே)யை அனுமதித்ததேயாகும். இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கடும் நிர்பந்தம் அளித்தபோதிலும், அரசாங்கம் பயறு வகைகள், அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றிற்கு மட்டும்தான் ஊக வணிகத்தை ரத்து செய்தது. நிச்சயம் இது போதுமானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஊக வர்த்தக முறை அனுமதிக்கப்படுதல் அனைத்து அத்தியாவசியப் பொருட் களுக்கும் ரத்து செய்யப்பட வேண் டும். அதுமட்டுமல்லாது, பொது விநி யோக முறையும் உடனடியாக வலுப் படுத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமோ அதற்கு நேர்மாறான வகையில் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. இவ்வாறு விலைவாசியைக் கட் டுப்படுத்த அரசாங்கத்திடம் அரசி யல் உறுதி இல்லாததன் விளைவாக, மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அதிருப்தியின் விளைவாக, சமீபத் தில் குஜராத் மற்றும் இமாச்சலப்பிர தேசம் ஆகிய மாநிலங்களில் நடை பெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தினை வெளிப் படுத்தியதைக் காண முடிந்தது. மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப் தியை, மதவெறி சக்திகள் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள் வது தடுக்கப்பட வேண்டுமானால், மத்திய ஆட்சியாளர்கள் மக்கள் நல் வாழ்வை மேம்படுத்தக்கூடிய வகை யில் தங்கள் கொள்கைத் திசைவழியை மேலும் அதிகமான அளவில் மாற்றி யமைத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்ச பொது செயல் திட்டத் தில் கூறப்பட்டுள்ள மக்கள் நல் வாழ்வு குறித்த நடவடிக்கைகள் இனி யேனும் காலதாமதம் செய்யாது அமல்படுத்தப்பட வேண்டும் என் பதே இதற்குப் பொருளாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளாகி விட்டன. இதுவரை அவற்றைச் செய் திடாமல் அது காலம் தாழ்த்தினாலும், இனியாவது செய்திட மனமுவந்து முன்வர வேண்டும். இந்தப் பின்னணியில், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தர வாதத் திட்டமும் பரிதாபகரமான முறையில் தோல்வியடைந்து விட்ட தாக, மத்திய தணிக்கை அதிகாரி கூறியிருப்பது உண்மையில் அதிர்ச்சி யளிக்கக்கூடிய விஷயமாகும். மத்திய தணிக்கை அதிகாரி 26 மாநி லங்களில் மிகவும் வறிய நிலையில் உள்ள 200 மாவட்டங்களில் 68 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள 513 கிராம பஞ்சா யத்துக்களில் இத்திட்டம் எவ்விதம் செயல்படுத்தப்படுகின்றது என்று தணிக்கை செய்திருக்கிறார். 2006 பிப்ரவரிக்கும் 2007 மார்ச்சுக்கும் இடையே இத்திட்டத்தின் கீழ் உறுதி யளிக்கப்பட்டுள்ளபடி 100 நாட்களுக்கு வேலையில்லாதோருக்கு வேலைய ளிப்பதற்குப் பதிலாக, உண்மையில் வெறும் 18 நாட்களுக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார். வேலைக்காகப் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்போர் பட்டியலில் வெறும் 3.2 சதவீதத்தினர் மட்டுமே நூறு நாட்கள் வேலை செய் திட அனுமதிக்கப் பட்டிருக்கின்ற னர். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு காரியங்களுக்காக ஒதுக்கி யிருப்பதோடு, நிர்வாகத்திறமையின் மையும் மற்றும் உயர் மட்டத்தில் லஞ் சமுமே இதற்குக் காரணங்கள் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிய வரு கிறது. மக்களுக்கு நலம் பயக்கக்கூடிய திட்டமாகக் கூறப்படும் தேசிய கிரா மப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கதியே இந்த லட்சணத் தில்தான் இருக்கிறது. இப்போது இத் திட்டம் 2008 ஏப்ரலில் நாடு முழுவ தும் மேலும் 330 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டிருக்கிறது. மேலே கூறப்பட்டவாறே இவ்வாறு விரிவு படுத்தப்பட்ட மாவட்டங்களிலும் இத் திட்டம் அமலாகும் எனில், பின், இத் திட்டத்தின் பயன்களும் லஞ்ச ஊழ லில் திளைப்போருக்கு, பணம் போய்ச் சேருவதற்கே அது வழிவகுக்குமே தவிர, உண்மையில் வறிய நிலையில் உள்ள ஏழை மக்களுக்கு எதுவும் கிடைக்காது. உள்ளாருக்கும் இல்லா ருக்கும் இடையேயான இடைவெளி மேலும் அதிகரிக்கவே அதுவும் வழிவகுக்கும். எனவே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது இது போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங் களில் உள்ள ஓட்டைகளை அடைத்து, திட்டம் மக்களுக்கு முழுமையாகச் சென்றடையக் கூடிய வகையில், செயல்பட வேண்டியது அவசியம். இல்லையெனில், இதனால் மக்க ளுக்கு ஏற்படக்கூடிய அதிருப்தியை யும் மதவெறி சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், ஐமுகூ தன்னு டைய குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தில் அளித்துள்ள, இதுவரை வெறும் தாளிலேயே இருந்து வரும், மக்கள் நலன்சார்ந்த உறுதிமொழி களை மேலும் காலதாமதம் செய்யாது உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும். இந்தப் பின்னணியில், தேசிய வளர்ச்சி மன்றம் பதினோரா வது திட்டத்தை இறுதிப்படுத்தியிருந்த போதிலும், வரவிருக்கும் பட்ஜெட் டில் மக்கள் நலத் திட்டங்கள் நிறை வேற்றப்படக்கூடிய வகையில் முன் னுரிமை அளிக்கவேண்டும், முழுக் கவனமும் செலுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமையை எடுத் துக்கொள்வோம். பதினோராவது திட்டம் வேலைவாய்ப்புக்கென்று தனியே ஒரு அத்தியாயத்தையே கொண்டிருக்கிறது. அதில், தொழி லாளர் படை வளர்ச்சிக்கு ஈடாக வேலைவாய்ப்புப் பெருகிட வில்லை என்பதைக் காட்டியிருக்கிறது. இவ் வாறு வேலையில்லாதோர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே இன்றைய நிலையில் என்ன தேவையெனில், பெருமளவில் வேலைவாய்ப்பினை உருவாக்கக் கூடிய வகையிலும், பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பை உரு வாக்கக்கூடிய வகையிலும் பொது முதலீடு பெருமளவில் செய்யப்பட வேண்டும். இவ்வாறு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டுமானால், அதற் குத் தேவையான வளஆதாரங்களை யும் போதுமான அளவில் பெருக்கி யாக வேண்டும். ஆயினும், இதனை மக்கள் மீது மேலும் வரிகளை அதி கரிப்பதன் மூலமோ அல்லது ஏழை மக்களுக்கு அளித்து வரும் மானி யங்களை வெட்டுவதன் மூலமோ செய்திடக்கூடாது. மாறாக, நிதி அமைச்சகத்தின் மதிப்பீட்டின் படியே, பத்தாவது திட்டக் காலத்தில், சுமார் 2.35 லட்சம் கோடி ரூபாய் அர சின் கஜானாவிற்கு, பல்வேறு வரிச் சலுகைகளின் காரணமாக, வந்து சேராமல் இருந்திருக்கிறது. பணம் படைத்தவர்களுக்குப் பயனளிக்கக் கூடிய இத்தகைய வரிச்சலுகைகளை மேலும் தொடராது நீக்கிட வேண் டும். பதினோராவது திட்டமும் ஏழை மக்கள் மீது மேலும் சுமைகளைச் சுமத்தக்கூடிய வகையிலும், மானியங்களை வெட்டக்கூடிய வகையிலுமே திட்ட மிடப்பட்டிருக்கிறது. இவை, இரு விதமான இந்தியர்களுக்கும் இடையி லான இடைவெளி, நாம் முன்பே குறிப் பிட்டிருப்பதைப் போல, மேலும் அதிகமாவதற்கே இட்டுச் செல்லும். மேலும், வள ஆதாரங்களைப் பெருக்கிட, நாட்டின் வரி விதிப்பு அடித்தளங்கள் மேலும் விரிவாக் கப்பட வேண்டும். பங்குச் சந்தை உயர்வினால் பலனடைந்தவர்களிட மிருந்து இதனை நாம் தொடங்கிட வேண்டும். இன்றைக்கு ஏற்பட்டுள்ள பங்குச் சந்தை குறியீட்டெண் உயர் வால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு லாபம் ஈட்டியவர்கள், ஒரு காசு கூட வரி செலுத்தவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியக் கோடீசுவரர்கள் இவ்வாறு பெருமளவில் அதிகரித்திருக்கக் கூடிய அதே சமயத்தில், அவர் களுக்கு எவ்வித வரியும் விதிக்கப் படாது, ஏழை மக்கள் மீது மட்டும் வரி மேல் வரி விதிப்பது எப்படிச் சரி யாகும்? வரவிருக்கும் பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் வரி அறிமுகப்படுத்தப்பட வேண்டும். எனவே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், மீதம் உள்ள பதவிக் காலத்திலாவது, மக்கள் நல னை மேம்படுத்துவதற்காக, அதன் கொள்கைத் திசைவழி மாற்றியமைக் கப்படக்கூடிய வகையில், வலுவான மக்கள் போராட்டங்கள் மேற்கொள் ளப்பட வேண்டும். கோடிக்கணக் கான ஏழை எளிய மக்களின் வாழ் வை மேம்படுத்துவதற்காக மட்டு மல்ல, ஆட்சியாளர்களின் செயலற்ற தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு, மதவெறி சக்திகள் தலைதூக்காமல் இருப்பதற்கும் இது அவசியம்.

No comments: