மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டு, 2004 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த, அதன் பின்னர் எழ முடி யாமல் இதுநாள்வரை தத்தளித்துக் கொண் டிருந்த பாஜக, 2007இல் மதவெறிப் பிரச்சாரத் தைக் கூர்மைப்படுத்தும் என்று நாம் எதிர் பார்த்திருந்தோம். ‘இந்து வாக்கு வங்கி’யைத் தக்கவைத்துக்கொள்ள, இழந்த மக்கள் செல் வாக்கை மீண்டும் பெற இது ஒன்றே பாஜக விற்கு வழி என்று அப்போது நாம் சொல்லி யிருந்தோம். ஐயகோ, நாம் யூகித்தது உண்மையாகி வருகிறது. 2007இல் நாட்டின் பல பகுதிகளி லும் ஒன்றன்பின் ஒன்றாய் பல்வேறு மதவெறி வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஜனவரியில் ஆர்எஸ்எஸ், கோல்வால்கரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை மிகவும் பகட் டாகக் கொண்டாடிய சமயத்தில், பெங்களூர், மங்களூர், கோரக்பூர், ஜபல்பூர், கேரளாவில் திரூர், மத்தியப்பிரதேசத்தில் மண்ட்சார் முதலான இடங்களில் மதவெறி மோதல் களைக் கட்டவிழ்த்துவிட்டன. ஆண்டு முடி வடையும் சமயத்தில் ஒரிசா மாநிலத்தில் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவ சிறுபான் மையினர் மீது திட்டமிட்டத் தாக்குதல்களுடன் முடிவடைந்திருக்கிறது. அங்கு பதினைந்து தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் சொத்துக் கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தளம் போன்ற ஆர்எஸ் எஸ்-இன் கொடுக்குகளால் மதச்சிறுபான்மை யினர் குறிவைத்துத் தாக்கப்படுதல் தற்சமயம் அதிகரித்துள்ளன. 2008ஆம் ஆண்டில், மதவெறி மோதல் களைத் தீவிரப்படுத்திட அவர்கள் திட்டமிட்டி ருக்கிறார்கள். மதவெறித் தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்திட வழக்கமாக அவர்கள் பயன்படுத்தும் பிரச்சனைகளுடன், தற்சமயம் ராமர் சேதுத் திட்டுப் பிரச்சனையையும் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். (உண்மை யில் ஆரம்பத்தில் இந்தத் திட்டத்திற்கு அவர் கள் ஆட்சியிலிருந்தபோதுதான் அனுமதி வழங்கப்பட்டது.) அடுத்து, தற்சமயம் சச்சார் குழு பரிந்துரைகளின் கீழ் சிறுபான்மையினர் நலனை மேம்படுத்துவதற்கான திட்டம் எது வாக இருந்தாலும் அதனைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, நவீன இந்தியக் குடியரசின் மதச் சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாது காத்திடுவதற்கான போராட்டம் வரவிருக்கும் ஆண்டில் உக்கிரமாக இருக்கும். இந்தியா வின் வேற்றுமைப் பண்புகள் (னiஎநசளவைல) மற்றும் பன்முகப் பண்புகளைப் (யீடரசயடவைல) போற்றும் அனைவரும் இந்தச் சவாலை எதிர்கொண்டு முறியடித்திடத் தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். ஆயினும் இது, மக்கள் நலனை சரியான ஆர்வத்துடன் மேம்படுத்துவதற்கான பொருளாதார நடவ டிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்தான் சாத்தியம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் நலத் திட் டங்களை அமல்படுத்த வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் மற்றும் வளர்ந்து வரும் போராட்டங்களுக்குச் செவி சாய்த்திட வேண் டும். இது செய்யப்படாவிட்டால், இதனால் மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தியை, நிச்சயமாக மதவெறி சக்திகள் தங்கள் தேர்தல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்திக் கொள் ளும். இதனைத் தடுப்பதற்கு, வரவிருக்கும் ஆண்டில் மக்கள் நலன்சார்ந்த கொள்கை களை மத்திய அரசு அமல்படுத்திட மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்திட வேண்டும். இரண்டாவதாக, நாம் எதிர்பார்த்ததைப் போல, இந்த ஆண்டு இந்தியாவைத் தன் இளைய பங்காளியாக மாற்றிட, அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்ட முயற்சிகள் தீவிரமடைந்திருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கங்களில் கணிசமான பிரிவினர் அத்த கைய நிலைபாட்டினை ஏற்றுக்கொள்ளத் தயா ராக இருந்ததும், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நடைபெற்றுவந்த சமயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்ததிலிருந்து அறிய முடிந் தது. மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையில் இடதுசாரிக் கட்சிகள் விடாப்பிடியாக இருந் ததால், மேற்படி ஒப்பந்தம் நடைமுறைப்படுத் தப்படாமல் இதுவரை தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கும், சுயேட்சையான அயல் துறைக் கொள்கைக்கும் ஆபத்து ஏற்பட்டி ருக்கிறது என்பதை இப்பகுதியில் இந்த ஆண்டு முழுவதும் பல தடவை நாம் விளக்கிக் கூறியிருப்பதால் இப்போது மீண்டும் அவற் றைக் கூற வேண்டிய தேவையில்லை. இத்தகு ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு இரை யாகி ஆட்சியாளர்கள் சரணாகதி அடை வதைத் தடுத்திட, வரவிருக்கும் ஆண்டில் நம் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று சொல்லத் தேவையில்லை. உலக அளவில், ஏகாதிபத்திய உலகமயம் உலக மக்களின் வாழ்க்கையை சொல் லொண்ணா துன்ப துயரங்களுக்கு உட்படுத்து வது தொடர்கிறது. 2007/2008 மனிதவள வளர்ச்சி அறிக்கை (ழரஅயn னுநஎநடடியீஅநவே சுநயீடிசவ) நாடுகளுக்கிடையிலேயும், ஒரு நாட்டிலேயே உள்ள ஏழை - பணக்காரர் களுக்கு இடையிலேயும் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்துகிறது. உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் ஒரு நாளைக்கு இரு டாலர்களுக்கும் குறை வான வருமானத்திலேயே வாழ்ந்து வரு கின்றனர். உலக வருமான அளவில் இது 5 சதவீதம் மட்டுமே. ஆனால் உலகில் பணக் காரர்களாக உள்ள 20 சதவீதத்தினர் உலக வருமானத்தில் நான்கில் மூன்று பங்கினைப் பெற்று வருகின்றனர். உலக மக்கள் தொகை யில் 80 சதவீதத்தினர் இவ்வாறு வருமான வித்தியாசம் அதிகமாக உள்ள நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி குழந்தைகள் ஐந்து வயதுக்கு முன் னமேயே இறந்துவிடுகின்றனர். வளர்முக நாடுகளில் உள்ள குழந்தைகளில் சுமார் 28 சதவீதம் ஊட்டச்சத்தின்றி நலிவுற்ற நிலை யிலேயே இருந்து வருகின்றன. இதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஏகாதிபத்திய உலகமயத்திற்கெதிராக உலக அளவில் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது சாரிக் கட்சிகளும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களையும் மற்றும் இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் நலன்களையும் உயர்த்திப் பிடிக்கின்ற அதே சமயத்தில், நாட்டின் இறை யாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாத் திட சமசரமற்ற முறையில் நாம் நடத்திய போராட்டங்கள், மலை மடுபோன்ற வேற்றுமை யுடைய சக்திகளை இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராக ஒரு கொள்கையற்ற சந்தர்ப்பவாதக் கூட்டணியை அமைத்திட வைத்துள்ளது. இது நந்திகிராம் நிகழ்ச்சிப்போக்கில் மார்க் சிஸ்ட்டுகளுக்கு எதிராக அவை எடுத்த எதிர்ப்பில் கூர்மையாக வெளிப்பட்டது. முஸ்லிம் மதஅடிப்படைவாதிகளிலிருந்து ஆர்எஸ்எஸ்/பாஜக ஆதரவுடன் தேசிய ஜன நாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி களும், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங் கிரஸ் கட்சியின் மேற்கு வங்கக் கிளையில் ஒரு சில பிரிவினரும், அந்நிய நாடுகளி லிருந்து நிதி உதவி பெறும் அரசு சாரா நிறு வனங்களும், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஊதுகுழலாகச் செயல்பட்டு வரும் சில ஊட கங்களும் - இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப் பதற்காக மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கை களுக்கு முட்டுக்கொடுத்ததைப் பார்க்க முடிந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கெதிராக இத்தகைய மகா கூட்டணி உருவானதற்கான காரணங் களைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் கடி னமான ஒன்றல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைவழிப்பட்ட நிலைபாடு, ஏகாதிபத்தியத்தைத் தன்னுடைய போர்த்தந் திர நலன்களுக்கு ஆதரவாக இந்திய ஆளும் வர்க்கங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் எதிர்ப்பானது, ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசாங்கத்தை, ஓய் வூதிய நிதியம், பொதுத்துறை நிறு வனங்கள், வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் துறைகளைத் தனியாரிடம் தாரை வார்க்க மேற்கொண்ட முயற்சிகள், நிதித்துறை நிறுவனங்களின் சீர்திருத்தங்கள், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு முதலான “பல்வேறு சீர்திருத்தக் கொள்கைகளையும்” நிறுத்தி வைத்திட நிர்ப்பந்தித்துள்ளது. இதனால் அந் நிய மூலதனம் மற்றும் இந்திய பெரும் வர்த்தக நிறுவனங்கள் தங்களால் எதிர்பார்த்த வாறு கொள்ளை லாபம் ஈட்ட கிடைத்த வாய்ப்புகள் கைநழுவி போய்விட்டனவே என்பதால் நம்மீது சொல்லொண்ணா ஆத்திரம் கொண்டுள்ளன. மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு இடதுசாரிகள் அளித்துவரும் உறுதியான ஆதரவு மற்றும் அதன் ஆதரவால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் கவிழாமல் ஆட்சியில் நீடிப்பது ஆகியவை தங்களின் முன்னேற் றத்திற்கு மாபெரும் முட்டுக்கட்டையாக இருப்பதை மதவெறி சக்திகள் பார்க்கின்றன. அந்நிய நிதி உதவி பெறும் அரசு சாரா நிறு வனங்களும், மாவோயிஸ்ட்டுகளும் மார்க் சிஸ்ட் கட்சிக்கெதிராக இழிவான முறையில் கூட்டு சேர்ந்துள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுத் துள்ளன.இந்த சக்திகள், தாங்கள் ஒன்று சேர்ந்தி ருப்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளில் தன்னு டைய கொள்கை வழியிலான நிலைப்பாட்டி லிருந்து, பிறழ்ந்து விடும் என்று அவை நம் பினால், அவை பரிதாபகரமான முறையில் தோல்வியையே தழுவிடும். நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், நந்திகிராமத்தில் மிகவும் வெற்றி கரமாக நடைபெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரம்மாண்டமான பேரணி-பொதுக்கூட்டமே அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது. இந்த ஆண்டு நிறைவுற்று, புத்தாண்டு தொடங்கும் இந்த சமயத்தில், பல்வேறு போராட்டங்களின் மூலமாக, புடம்போட்டு உருக்குபோன்று உருவாகியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, இந்தியாவின் இறையாண்மையை, ஏகாதிபத்திய நிர்ப்பந் தங்களிலிருந்து சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைப் பாதுகாப்பதற்காகவும்மதவெறியர்களின் தாக்குதல்களிலி ருந்து, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசைப் பாதுகாத்திடவும்,ஏகாதிபத்திய உலகமயக் கொள்கை களால் தகர்க்கப்பட்டு வரும் நம் நாட்டின் பொருளாதாரத் தன்னிறைவைப் பாதுகாத் திடவும்,ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத் தையும் அழித்து வீழ்த்தக்கூடிய வகையில் அரசால் கொண்டுவரப்படும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களை வலுப்படுத்தவும், மீண்டும் உறுதி எடுத்துக்கொள்வோம். புதிய இந்தியாவை உருவாக்கிட 2008ல் நடைபெறும் போராட்டங்களை வலுப்படுத்திட வாருங்கள், தோழர்களே!
Saturday, January 5, 2008
மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை பாதுகாப்போம்!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment