Wednesday, October 8, 2008

காந்தமால் வன்முறை: மத்திய அரசு தலையிட வேண்டும்--பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

ஒரிசாவிலும் நாட்டின் மற்றும் பல பகுதிகளிலும் கிறித்துவ மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் எவ்விதத் தங்குதடையுமின்றி தொடர் கின்றன. காவல்துறையினர் அதிகமான அளவில் இருந்தபோதிலும், அவர்கள் கண் முன்னாலேயே, ஆயுதமேந்திய மத வெறிக் கும்பல், கந்தமால் மாவட்டத்தில் உள்ள தலித் கிறித்துவக் கிராமங்களுக் குள் நுழைந்து, பலரைக் கொன்று குவிப் பதும், வெட்டிக் காயமுறச் செய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் கள் வீடுகள் தொடர்ந்து தீக்கிரையாக்கப் படுகின்றன. தேவாலயங்கள் தரைமட்ட மாக்கப்படுகின்றன. இத்தகைய மனிதாபிமானமற்ற காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகள், ஆர்எஸ்எஸ்-பாஜக கொடுக்குகளால், அதிலும் குறிப்பாக பஜ்ரங் தளத்தினரால், கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது, 2008 ஆகஸ்ட் 24க்குப்பின் நடைபெற்ற சம்ப வங்களிலிருந்து வெளிச்சத்திற்கு வந் திருக்கிறது. 28 வயது கத்தோலிக்க கன் னியாஸ்திரி, பொதுமக்கள் மத்தியில், கூட்டாக வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். இந்தக் காட்டுமிராண்டிச் செயலைத் தடுக்க வந்த கத்தோலிக்கப் பாதிரியார் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக் கிறார். இவ்வளவும் காவல்துறையினரின் கண்முன்னாலேயே நடந்ததாக, பாதிரி யார் குற்றஞ்சாட்டுகிறார். அன்னை தெரசா அவர்களால் உருவாக்கப்பட்ட கருணை இல்லத்தின் தலைவர் சகோதரி நிர்மலா, கொடூர சம்பவங்களைப் பட்டியலிட்டு, பிரதமருக்கும், ஒரிசா முதல்வருக்கும் கடிதம் எழுதியிருக் கிறார். இக்கொடிய சம்பவம் நடந்த தினம் ஆகஸ்ட் 24. ஆனால் (அக்டோபர் 2 தேதி யாகிய) இன்றைய வரையில் வன்புணர்ச் சியில் ஈடுபட்ட கயவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.பல்லாயிரக்கணக்கானோர் (ஒரு சமயத்தில் இவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாகும்) தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து, மாவட்டத் தின் பல பகுதிகளில் நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத் தகைய நிவாரண முகாம்களில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் காரணமாக, சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச உணர்வு அதிகரித் துள்ளது. மாநில அரசின் போலீசார் மீது இவர்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதே சமயத்தில், சிறுபான்மையின ருக்கான தேசிய ஆணையம், கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் பஜ்ரங் தளம் மீது பாஜக தலைமையிலான கர் நாடக மாநில அரசு மிகவும் “மென்மை யாக” நடந்துகொள்வதாக மிகவும் கடுமை யாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. பஜ்ரங் தளத்தின் மீது ‘‘உரிய நடவடிக்கை’’ எடுத்திட வேண்டும் என்று, சிறுபான் மையினருக்கான தேசிய ஆணையம் கோரியுள்ளது. இந்த ஆணையம் மேலும், மாநிலம் முழுவதும் பரவலான அட்டூழியத் திற்குப் பிறகு, பஜ்ரங் தளத்தின் மாநில அமைப்பாளரை கர்நாடகக் காவல்துறை யினர் கைது செய்தனர் என்று குறிப்பிட் டிருக்கிறது. ஆயினும், அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப் பட்டுவிட்டார். ஆனால், அதே சமயத்தில், பாதிப்புக்குள் ளான கிறித்துவர்கள் பலர் இன்னமும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வரு கின்றனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறாக, ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் மாநில அரசுகள், கிறித் துவ சிறுபான்மையினருக்கு எதிராகக் கொடூரமான முறையில் குற்றச் செயல் களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கும் வண்ணம் செயல்பட்டு வருகின்றன.ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம், தற்சமயம், கந்தமால் மாவட்டத்தில் வீடுகளை இழந்த தலித் கிறித்துவர்கள் மீண்டும் தங்கள் இடங்களுக்கு வந்து, வீடுகளைக் கட்டிக்கொண்டு உயிர்பி ழைத்திருக்க வேண்டுமானால், அவர்கள் மீண்டும் இந்துவாக மாற வேண்டும் என்று மிரட்டிக்கொண்டிருக்கின்றன. தலித் கிறித்துவர்கள் மீதான காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு அடிப்படைக் காரணம், அவர்கள் வலுக் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டது தான் என்று மதவெறியர்களால் குற்றஞ் சாட்டப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் தங்களுக்கேயுரிய பல் வேறு மதப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர் என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது. அவர்களை இந்து மதத்திற்குச் சொந்தமானவர்கள் என்று முத்திரை குத்துவது நகைப்புக்குரிய விஷயமாகும். கந்தமால் மாவட்டத்தி லேயே, இரு விதமான பழங்குடியினர் இருக்கின்றனர். கந்தாஸ் என்பவர்கள் ஒருவிதத்தினர், தலித் பனாஸ் என்பவர் கள் மற்றொரு பிரிவினர். கடந்த சில ஆண்டுகளில், முந்தைய வகையினரில் ஒரு பிரிவினர் இந்து மதத்தைத் தழுவி னார்கள். தலித் பனாஸ் பிரிவினர் கிறித் துவ மதத்தைத் தழுவினர். பின்னர்தான் தங்கள் ‘இந்து வாக்கு வங்கியை’ ஒரு முகப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ்-சும் அதன் பரிவாரங்களும் இவ்வாறு தலித் கிறிஸ்தவர்களைக் குறி வைத்துத் தாக்கத் தொடங்கின.சங் பரிவாரக் கூட்டத்தினர் கட்ட விழ்த்துவிட்டுள்ள அட்டூழியங்களை நியாயப்படுத்த முடியாத நிலையில், அத்வானி, தாம் கிறிஸ்தவர்களிடம் எப்போதும் மென்மையாகத்தான் நடந்து கொள்வதாகவும், தான் படித்ததே கராச்சி யில் ஒரு கிறித்துவப் பள்ளியில்தான் என் றும் கூறத் தொடங்கியிருக்கிறார். அவ் வாறு கூறும், அத்வானி, அதே மூச்சில் மத மாற்றம் குறித்து ஒரு ‘தேசிய விவா தம்’ நடத்தலாம் என்றும் கடந்த காலங் களில் கூறிவந்ததைப்போல் மீண்டும் சொல்லத் தொடங்கியிருக்கிறார். இது ஒரு நயவஞ்சகமான வாதமாகும். ஆவியுலகு டன் தங்களைப் பிணைத்திருந்த பழங் குடியினர், இந்து மதத்தைத் தழுவிய போது அது ‘மதமாற்றத்தின்’கீழ் வராது. ஆனால், அவர்களே, கிறித்துவமதத்தை யோ அல்லது வேறெந்த மதத்தையோ தழுவினால், அவர்கள் ‘‘மத மாற்றம்’’ செய்யப்படுவதாகக் கருதப்படுவார்கள். மேலும், அத்வானி, ‘‘அனைவரும் இந்தி யர்கள்’’ (ஐனேயைn-நேளள) என்னும் கருத்தை வலுப்படுத்துவதற்காக ‘அனைத்து மதங்களுக்கும் இடையே ஒரு பேச்சு வார்த்தை’ (iவேநச-சநடபைiடிரள னயைடடிபரந) நடத்த வேண்டும் என்று கூட கோரியிருக்கிறார். ஆயினும், ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் இந்து மதம் ஒன்றுதான் ஒரு மதமாக இருக்கத் தகுதிபடைத்தது என்றும், மற்ற அனைத்தும் மதங்கள் அல்ல, மாறாக மத உட்பிரிவுகள் (ளநஉவள) என்றும் கூறிக் கொண்டிருக்கின்றன. ‘இந்து வாக்கு வங்கியை’ ஒருமுகப்படுத்தும் முயற்சி யின் ஒரு பகுதியாகத்தான் மதச்சிறுபான் மையினர் மீது இவ்வாறு மனிதாபிமான மற்ற முறையில் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி யாகத்தான் நாட்டின் ஒரு பகுதி இந்தியர் களைத் தாக்கி, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தகர்க்கும் செயல் களில் இறங்கியிருக்கின்றனர்.இவ்வாறு மதவெறிச் செயல்பாடு களைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற் காகக் கூர்மைப்படுத்துவதன் வாயிலாக, பயங்கரவாத அமைப்புகள் கொழுப்பதற் குத்தான் வழிவகுக்கும்.கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்ப வங்களில் பஜ்ரங் தளம் மற்றும் ஆர்எஸ் எஸ்-சின் கொடுக்குகள் சம்பந்தப்பட்டி ருக்கின்றன என்பதை காவல்துறையின ரின் புலனாய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. 2003இல் மகாராஷ்ட்ரா மாநிலம் பர்பானி, ஜல்னா, ஜல்கான் மாவட்டங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள், 2005இல் உத்தரப் பிரதேசத்தில் மாவ் மாவட்டத்தில் நடை பெற்ற சம்பவம், 2006இல் நாண்டன் என் னுமிடத்தில் நடந்த குண்டுவெடிப்பு, 2008இல் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத் தில் நடந்த குண்டுவெடிப்பு, 2008 ஆகஸ்ட்டில் கான்பூரில் ஏற்பட்ட சம்ப வம் என்று அடுக்கிக்கொண்டே செல்ல லாம். இவற்றின் மீதான விசாரணைகளும் பாரபட்சமற்ற முறையில் நடைபெறு வதன் வாயிலாகவே நாட்டின் உள்நாட் டுப் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும். அரசியல் ஆதாயத்திற்காக மதவெ றித் தீயை விசிறிவிடும் முயற்சியை, நிர்மூலமாக்கிடும் அதே சமயத்தில், பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும், உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்து வதற்கும் பாரபட்சமற்ற முறையில் நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கர்நாடகாவில், சிறுபான்மையினருக் கான தேசிய ஆணையம் குறிப்பிட்டிருப் பதைப்போல, சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட கயவர் களை ஜாமீனில் விடுவதும், பாதிக்கப் பட்ட கிறிஸ்தவர்களை ஜாமீனில் விடா மல் சிறையில் அடைத்து வைத்திருப்ப தும் நடைபெறக்கூடாது. பாஜக தலை மையிலான மாநில அரசுகள் இவ்வாறு மதவெறியர்களைப் பேணிப்பாதுகாத்து, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்கு தல்களைத் தொடுத்து, மதவெறியைக் கூர்மைப்படுத்தினால், மத்திய ஆட்சி யில் உள்ள ஐமுகூ அரசாங்கமானது நம் நாட்டின் அரசிய லமைப்புச் சட்டத்தில் வரையறுத்துள்ளபடி, ‘‘சாதி, சமயக்கோட் பாடுகளைப் பார்க்காமல், .....’’ அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
தமிழில்: ச. வீரமணி

No comments: