Friday, September 11, 2015

ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் கூட்டம்



ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் கூட்டம்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்கீழ் செயல்படும் பரிவாரங்களின் மூன்று நாள் கூட்டம் செப்டம்பர் 2 முதல் 4 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. அக்கூட்டமானது ஆர்எஸ்எஸ்-க்கும் பாஜக அரசாங்கத்திற்கும் இடையேயான ஓர் ஒருங்கி ணைப்புக் கூட்டம் என்று மிகவும் விரிவான அளவில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தில் மோடி அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் அனைவரும் -- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அயல் விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப் புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். பாஜக வின் தலைவர் அமித்ஷாவும் இக்கூட்டத் தில் கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி கடைசி நாளன்று கூட்டத்தில் பங் கேற்றுள்ளார்.
இக்கூட்டம் தொடர்பாக விரிவான அளவில் விமர்சனங்களும் வெடித்துச் கிளம்பியுள்ளன. இதில் மிகவும் வலுவான விமர்சனம், ‘பாஜக அரசாங்கம் இவ்வாறு தன்நடவடிக்கைகள் குறித்து, நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லத் தேவையில்லாத, நாட்டின் அரசமைப்புச் சட்டத் தின் குறிக்கோள்களுக்கு விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஓர் அமைப்புக்கு, தெரிவித் திருக்கிறதுஎன்பதாகும். ஆயினும், இவ்வாறு வெளியாகியுள்ள விமர்சனங்களில் சில, இதுபோன்று ஆர்எஸ்எஸ் கூட்டியுள்ள கூட்டத்தில் பாஜக அமைச்சர் கள் கலந்துகொண்டிருப்பது இதுவேமுதல் தடவை என்று குறிப்பாக தெரிவித் திருப்பதுபோல் அமைந்திருக்கின்றன.
ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் பாஜகவிற்கும் இடையேயான பிரிக்கமுடியாத பிணைப்பு குறித்து புரிந்துகொள்ளாததே இதுபோன்று சிலர் குழப்பிக் கொள் வதற்குக் காரணங்களாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் அமைப்புதான், பாஜக. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கமா கும். ஆர்எஸ்எஸ் இயக்கமானது தன்கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளின் கூட் டத்தைக் கூட்டும்போது, அவற்றில் ஒன்றான பாஜகவும் அதில் பங்குகொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்கீழ் இயங்கும் பதினைந்து அமைப்புகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்கீழ் செயல்படும் அமைப்புகளின் கூட்டங்கள் கடந்த காலங்களிலும் இதுபோன்று நடைபெற்றிருக் கின்றன. உதாரணமாக, 1999 டிசம்பரில் வாஜ்பாய் அரசாங்கம் இருந்தபோது,நாக்பூரில் நடைபெற்ற ஐந்து நாள் கூட்டத்தில் மூத்த பாஜக தலைவர்களும் அமைச் சர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். 2013 செப்டம்பரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்கீழ் இயங்கும் பாஜக உட்பட அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். பாஜக என்பது ஆர்எஸ்எஸ் என்னும் அமைப்பின் கட்டளை களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கீழ்ப்படிதலுள்ள ஓர்அமைப்பு என்கிற உண்மை இதன்மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப் படுகிறது. இப்போது நடந்திருப்பது என்னவெ னில், ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் பாஜகஅரசாங்கத்திற்கும் இடையேயான இணைப்பும் பிணைப்பும் முன்பெல்லாம் இல்லாத அளவிற்கு ஓர் உயர்மட்ட அளவிற்குச் சென்றிருக்கிறது என்பதேயாகும். மக்களவையில் பாஜக தனிப் பெரும் பான்மையைப் பெற்றதற்குப்பிறகுதான் இது சாத்தியமானது. ஏனெனில் வாஜ்பாய்அரசாங்கத்தைப்போன்று, மோடி அரசாங்கம் ஒரு கூட்டணியைச் சார்ந்து இல்லை. சமீபத்தில் நடைபெற்று ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் முக்கியத்துவம் அதன் நிகழ்ச்சி நிரலாகும்.
பாஜக அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் திசைவழி குறித்து ஆராய்வதே அக்கூட்டத்தின் ஒட்டுமொத்த நிகழ்ச்சிநிரலாகும். ஆட்சியாளர்கள் கடைப்பிடித்துவரும் பொருளாதாரக் கொள்கை, தேசப் பாதுகாப்பு மற்றும்கல்வி குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கூட்டத்தில் விளக்கி இருக்கிறார்கள், கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்வி களுக்குப் பதில்களும் கூறியிருக்கிறார்கள். கூட்டத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளும், எந்த அளவிற்கு ஆர்எஸ்எஸ்-பாஜகஅரசாங்கத்தின் இடையே ஒருங்கிணைப்பு நிறுவனமயப் படுத்தப்பட்டிருக் கிறது என்பதைச் சித்தரித்துக் காட்டியது. ஆர்எஸ்எஸ் இயக்கமானது, வாஜ்பாய் அரசாங்கம் இருந்த சமயத்தில் இருந்ததை விட மிக அதிகமான அளவில் தற்போதுமோடி அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளில் வெளிப்படையாக வும் நேரடியாகவும் தலையிடத் துவங்கி இருக்கிறது. ஆர்எஸ்எஸ்-க்கும் பாஜகவிற்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்பட்டிருப் பதையும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மேற் பார்வையின்கீழ்தான் பாஜக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் இரு தரப்பினரும் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இணைச் செயலாளரான தத்தத்ரேயா ஹோசாபாலே, ஊடகங்களிடம் கூறுகையில், “ஸ்வயம்சேவக்குகள் இன்றையதினம் நாட்டை ஆண்டு கொண்டிருப்பதால், அதன் அமைச்சர்கள் அத்தகைய அமைப்பின் ஓர் அங்கமாக இருப்பது இயற்கையே,’’ என்று கூறியிருக்கிறார்.
அரசாங்கத்தின் தரப்பிலிருந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஒவ்வொருவருக்கும் நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஓர் ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவக்தான். பிரதமரும் ஒரு ஸ்வயம்சேவக்தான். எனவே இதில் எங்களில் எவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை,’’ என்று கூறியிருக்கிறார். இவ்வாறு மோடி அரசாங்கம் ஸ்வயம்சேவக்குகளின் சொகுசான ஒரு கூட்டுக் குடும்பம்தான்.
இப்போது நடைபெற்ற சந்திப்புகூட, ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் மோடி அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருங்கிணைப்புக் கூட்டம் என்று கூறுவதற்கில்லை. இத்தகைய ஒருங் கிணைப்பு, அரசாங்கம் அமைந்தபோதே தொடங்கிவிட்டது. அமைச்சரவையில் அமைச்சர்களாக யார் யாரைத் தேர்வு செய்யவேண்டும் என்பது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர், நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து அரசாங்கத்தின் துறைகள் ஒவ்வொன்றிலும் என்னென்ன செய்யவேண்டும் என்று அமைச்சர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதற்காக ஆர்எஸ்எஸ் ஆறு குழுக்களை அமைத்திருக்கிறது. இக்குழுக்களின் பிரதிநிதிகள் அவ்வாறு அமைச்சர்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் பல்வேறு துறைகளிலும் தன் மேற்பார் வையையும், ஒருங் கிணைப்பையும் மேற் கொண்டிருப்பதன் விளைவுகள் இப்போது வெளிவரத் துவங்கி இருக்கின்றன. அர சாங்கத்தின் கீழ் இயங்கும் பல்வேறு கல்விமற்றும் கலாச்சார நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் நபர்கள் அமர்த்தப்பட்டு வருகின்ற னர். இந்துத்துவாக் கொள்கைகளைத் திணிக்கவேண்டும் என்பதற்காகவே, “இந்தியமயமாக்குதல்’’ என்னும் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் தங்கள் அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நடவடிக்கை களில் பங்கேற்க அனுமதித்திருக்கின்றன. இவ்வாறாக அதிகாரமட்டத்தின் அனைத்து முனைகளிலும் ஆர்எஸ்எஸ் நபர்கள் ஊடுருவ வசதிகள் செய்து தரப் பட்டிருக்கின்றன.
ஆர்எஸ்எஸ்-பாஜக ஒருங்கிணைப்பு என்பது மற்றுமொரு சங்கடமான அம்சத்தையும் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கமும் மற்றும் தீவிர இந்துத்துவா அமைப்புகள் பலவும் கீழ் மட்டத்தில் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக உள்ளவர்கள் மீது, திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில் பேராசிரியர் கல்புர்கி தர்வாரில் கொல்லப்பட்ட சம்பவமானது எந்த அள விற்கு சகிப்புத்தன்மையற்ற தீவிரவாதக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. மகாராஷ்ட்டி ராவில் முதுபெரும் இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சித் தலைவரும், எழுத்தாளருமான கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரியில் கொல்லப்பட்டார். புனேயில் நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே ஏற்பட் டுள்ள கூட்டுப்பிணைப்பின் காரணமாக, மாலேகான், அஜ்மீர் ஷெரிப், மெக்கா மசூதி மற்றும் சம்ஜாதா ரயில் வெடிகுண்டு விபத்துக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்துத்துவா தீவிரவாதிகள் அனைவரும்பிணையில் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,அவர்கள் மீது நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த விசாரணைகள் சமரசம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆர்எஸ்எஸ் கட்டளையின்படிதான், செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்திலிருந்து பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்), வில கிக் கொண்டது. அதன்மூலம் மோடி அரசாங்கம் தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாகத் திருத்திட உதவி இருக்கிறது. தேசப் பாதுகாப்பு’’ என்ற பெயரில் எதேச்சதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 ஊடகங்களைக் மிரட்டி பணிய வைப்பதற்கான முயற்சிகளும், இராஜத்துரோகப் பிரிவுகள் பயன்படுத்தப்படுவதும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலின் அங்கங்களேயாகும். குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகர் மற்றும் ஊழியரான நரேந்திரமோடியின் கீழ் இயங்கும் பாஜக அரசாங்கம் ஆர்எஸ்எஸ் அமைத்துள்ள நிகழ்ச்சிநிரல் மற்றும் கால அட்டவணைப்படிதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யாகும்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் என்பது படுபிற்போக்கு சிந்தனைகளுடனான ஓர் எதேச்சதிகார அமைப்பாகும். பாஜக அரசாங்கம் மற்றும் அதன் படுமோசமான பிற்போக்குக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பெருங்கேடு விளைவிக்கக்கூடிய சித்தாந்தம் மற்றும் மதவெறி அரசியலுக்கு எதிரான போராட்டத்துடனும் இணைத்தே நடத்திட வேண்டும்.
(செப்டம்பர் 9, 2015)
(தமிழில்: ச.வீரமணி)

No comments: