Wednesday, September 9, 2015

செப் : 2 வேலைநிறுத்தம் - படிப்பினைகளும் கடமைகளும்



செப் : 2 வேலைநிறுத்தம் - படிப்பினைகளும் கடமைகளும்
-ஸ்வதேஷ் தேவ் ராய்

வரலாறு படைத்த செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று, பல மைல் கற்களை நிறுவியுள்ளது. அதேபோன்றுதொழிலாளர்களின் வேலைநிறுத்தத் திற்கு இதர வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஆதரவு என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். நாட்டில் எப்போதும் நமக்கு எதிராக இருக்கும் ஊடகங் களும்கூட, முதன்முறையாக நாடு முழுதும் அனைத்து மாநிலங்களிலும், அனைத்துப் பொருளாதாரத் துறைகளிலும் வேலைநிறுத்தம் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஒப்புக்கொள்ளாமல் தப் பித்துக்கொள்ள முடியவில்லை.
ஆயினும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சாலைப் போக்குவரத்து, நிலக்கரிச் சுரங்கங்கள், பெட்ரோலியம், மின்சாரம், தொலைத் தகவல் போன்ற கேந்திரமான துறைகளில் வேலைநிறுத்தம் வெற்றிபெற்றது அனைத்துத் தரப்பினரையும் அசத்திய குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்போக்கு ஆகும்.
ஒருங்கிணைந்த புரிந்துணர்வு அவசியம்
இந்த வேலைநிறுத்தம் நாட்டில் மோடிஅரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள மிகவும் கொடூரமானதொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, அனைத் துத்தரப்பினரும் ஒன்றுபட்டு நாடு தழு விய அளவில் நடத்தியுள்ள முதல் பொது வேலைநிறுத்தமாகும். ஆயினும், இந்த வேலை நிறுத்தத்தை, 1991இலிருந்து நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீனதாராளமயச் சீர்திருத்தங்களுக்கு எதிரா கத் தொழிலாளர் வர்க்கம் இதற்கு முன் நடத்திய பல்வேறு வேலைநிறுத்த நடவடிக் கைகளிலிருந்து தனியே பிரித்துப் பார்க்கக் கூடாது. உண்மையில், இந்த வேலைநிறுத்தமானது,
1991-க்குப்பின் நாடுஉலக வங்கி-சர்வதேச நிதியம் ஆகியவற்றின் நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கிய பின்னர்அதற்கு எதிராக நடத்தியுள்ள 16-வது வேலைநிறுத்தமாகும். நாட்டில் இவ்வாறு விரிவான அளவில் தொழிற்சங்க ஒற்றுமை உருவாகி யிருப்பது தனித்த ஒன்று அல்ல. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஓர் ஒன்றுபட்ட அமைப்பு முதன்முறையாக உருவானபோதே இதற்கு அடித்தளமிடப்பட்டுவிட்டது.1991 ஆகஸ்ட் 13 அன்று புதுதில்லியில் அமைக்கப்பட்ட இந்தியத் தொழிற் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு 1991இலிருந்து 2009 வரை எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது.
1991 நவம்பருக்கும் 2008 ஆகஸ்டுக்கும் இடையே தொழிலாளி வர்க்கம் நாடு முழுவதும் பெரிய அளவில் நடத்திய பிரச்சாரம், நாடாளுமன்றம் நோக்கி லட்சம்பேர் திரண்ட பேரணி உட்பட 12 அகில இந்திய பொது வேலைநிறுத்தங்களை யும் நடத்தியது. இப்போராட்டங் கள்அனைத்தையும் இடதுசாரித் தொழிற் சங்கங்கள்தான் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தன என் பதைக் குறித்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக நகர்ப்புறத்தில் வாழும் மத்தியதர வர்க்கமும், அதன் அறிவுஜீவிகளும் அதிகமாகவே ஊசலாடினார்கள். இனிமாற்றுப்பாதை இல்லை என்னும் எண்ணத்துக்கு அடிக்கடி மாறினார்கள்.
ஆயி னும் இடதுசாரித் தொழிற்சங்கங்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள், ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புடனிருந்து செயலாற்றி இன்றைய வெற்றிக்கு அடித்தளமிட்டார்கள். எனவே,இன்றைய வரலாறு படைத்திட்ட வெற் றிக்கு ஆணிவேர் வலுவாக இருந்ததே அடிப்படைக் காரணியாகும். தொடர்ந்து கூட்டுப்போராட்டங்கள் மூலமாக வலுப்படுத்தி வந்ததன் காரணமாகவே இன்றைய வெற்றி சாத்தியமானது. எனவே இன்றைய வெற்றியை 1991இலிருந்து இதுவரை நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகப் பார்க்க வேண்டும். 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட கூட்டு இயக்கங்கள், தொடர்ந்து 1992, 1993, 1994, 1998, 2000, 2002, 2003, 2004, 2005, 2006 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள், இவற்றுக்கிடையே எண்ணற்ற சிறை நிரப்பும் போராட்டங்கள்’, ‘சாலைமறியல் போராட் டங்கள்’, ‘போலீஸ் முற்றுகையைத் தகர்ப்போம் போராட்டங்கள்என எண்ணற்ற போராட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு சுமார்20 ஆண்டுகள் நவீன தாராளமயக் கொள் கைகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளன. கடந்து வந்த பாதை உண்மையில் மிகவும் கடினமான பாதையாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், உலகமயம், தாராள மயம் மற்றும் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டங்கள் என்பதை நடைமுறையில் அவைகளுக்கு இடையே நடத் தப்பட்ட எதிர்நீச்சல் போன்றவைகளே யாகும். எனவே கூட்டு நடவடிக்கைக் குழுவின் நடவடிக்கைகளை குறைத்து மதிப் பிட்டுவிடக்கூடாது. இன்றைய நிலையைப் புரிந்து கொள்வதற்கும், அடுத்த கட்ட நடவடிக் கையைத் திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்வதற்கும் இது அவசிய மாகும்.
அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒற்றுமை
2009 ஜூலை 14 அன்று புதுதில்லியில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூடி, மத்தியத் தொழிற்சங்கங்கள், தேசிய அளவிலான தொழில் மற்றும் சேவைத்துறைத் தொழிலாளர் சம்மேள னங்கள் ஆகியவற்றின் ஒற்றுமையை உருவாக்கத் தீர்மானித்தார்கள். சுயேச்சையான இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் வர லாற்றில் இது ஒரு மைல் கல்லாகும். 2009 செப்டம்பர் 14 அன்று புதுதில்லியில் நடைபெற்ற தொழிலாளர்களின் தேசிய சிறப்புமாநாடு அனைத்தும் ஒன்று எனும் தொழிற்சங்க ஒற்றுமை அமைப்பை அதிகாரப்பூர்வமாகத் துவக்கியது.
இதன் தலைமையின் கீழ்நாட்டிலுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு எதிர்ப்புக்கிளர்ச்சி மற்றும் வேலைநிறுத்தங்களின்அடிப்படையில் திரும்பத் திரும்ப அணி திரட்டப்பட்டார்கள். இதன் தலைமையின் கீழ், 2010 செப்டம்பர் 7, 2012 பிப்ரவரி 28, 2013 பிப்ரவரி 20, 21 மற்றும் 2015 செப்டம்பர் 2 ஆகிய நான்கு அகில இந்திய வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டன. இவ்வாறான அகில இந்திய வேலை நிறுத்தங் களுடன் துறைவாரியாகவும் எண்ணற்ற வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன.
பின்னிருந்து இயக்கிய காரணிகள்
வேலைநிறுத்தம் வரலாறு படைத்ததற்கு காரணம் ஐமுகூ அரசாங்கத்தைக்காட்டிலும் மிக மோசமான முறையில் மோடிஅரசாங்கம் பின்பற்றிய மக்கள் விரோதக்கொள்கைகளாகும். இக்கொள்கைகளுக்கு மரணஅடி கொடுக்கும் விதத்தில்மக்கள் இவ்வேலைநிறுத்தத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாற்றி இருக்கிறார்கள்.
செப்டம்பர் 2 வேலைநிறுத்தம்,மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் அளித்துள்ள தீர்ப்பாகும். விண்ணை முட்டும் விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம், தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பு, ஒரு கோடிக்கும் மேலான திட்டஊழியர்கள்மற்றும்ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகவும் அற்பஊதியம் வழங்கிக் கொண்டிருப்பது, சர்வதேசத் தொழிலாளர் ஸ்தாபனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளின்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க மறுப்பது, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமலாக்க மறுப்பது இவை அனைத்தும் சேர்ந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக மக் களின் கோபத்தைக் காட்டும் விதத்தில்இவ்வேலைநிறுத்தம் எதிரொலித்தது.
மேலும் மத்திய அரசுபொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி முதலானவற்றில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித் திருப்பதற்கு எதிராக தொழிலாளர்கள் கொதித்தெழுந்துள்ளனர். வேலைநிறுத் தம் வெற்றி பெற்றதற்கான மற்றுமொருமுக்கிய அம்சம், நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவிற்கு எதிராக விவசாய முன்னணி மேற்கொண்ட போராட்டங்களாகும். விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியுவும் ஆதரவு இயக்கங்களை நடத்தியது. மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 27 அன்று நடை பெற்ற விவசாயிகள் பேரணியும், செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற வங்க பந்த்தும் ஒன்றுக்கொன்று உதவியுள்ளனஎன்றே சொல்லலாம்.
இவ்விரு அடிப்படைவர்க்கங்களின் ஒன்றுபட்ட போராட்டத்திலிருந்து நாம் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். வேலைநிறுத்தம் வெற்றி பெற்றி ருப்பது கோரிக்கைகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை தொழிலாளர் வர்க் கத்தின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. சிஐடியு தன் ஸ்தாபன மாநாட்டில் எடுத்துக்கொண்ட ஒற்றுமைக்காகப் போராடு, போராட்டத்திற்காக ஒன்றுபடு’’என்கிற உறுதிமொழியை முன்னெடுத்துச் செல்வதற்கு இது சரியான தருண மாகும்.
(தமிழில்: ச.வீரமணி)

No comments: