Showing posts with label tapan sen. Show all posts
Showing posts with label tapan sen. Show all posts

Friday, March 17, 2017

பொது பட்ஜெட்டில் திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம் ஒழித்துக்கட்டியதற்கான காரணம் என்ன?




பொது பட்ஜெட்டில் திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம்
ஒழித்துக்கட்டியதற்கான காரணம் என்ன?
மாநிலங்களவையில் தபன்சென் கேள்வி
புதுதில்லி, மார்ச் 17-
திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம் என்னும்  ஒதுக்கீடுகளை பொதுப் பட்ஜெட்டில் ஒழித்துக் கட்டியிருப்பதன் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பது எது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியுவின் பொதுச் செயலாளருமான தபன்சென் கோரினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வியாழன் அன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் தபன்சென் பேசியதாவது:
"மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். பட்ஜெட் மீதான விவாதத்தில் சென்ற அமர்வின்போது நான்  பேசிய அம்சங்கள்மீது அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவாக அவர் பதிலளிக்கும்போது நான் எழுப்பும் பல விஷயங்கள் குறித்து எதுவும் பேசாமல் விட்டுவிடுவார். அவ்வாறு இந்த தடவையும் அவர் செய்திடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
முதலாவதாக, நிதிஅமைச்சர் அவர்கள் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது இந்த அவையில் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், "இன்றைய சூழ்நிலையில் பொருளாதார நடவடிக்கையில் செலவினத்தைக் குறைப்போமானால், அது மேலும் பொருளாதார மந்த நிலைக்கு இட்டுச்செல்லும் என்றும், எனவே பொருளாதார நடவடிக்கைகளை சுருக்கக் கூடாது. எனவே இதர நடவடிக்கைகள் எதுவும்எடுக்காவிட்டால் இந்த பட்ஜெட், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பருமனில் வீழ்ச்சியை ஏற்படுத்திவிடும்," என்று கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக என் கேள்வி இதுதான். ஒவ்வோராண்டும் நேரடி வரியில் மிகப்பெரிய தொகையை வசூலிக்காமல் விட்டுவிடுவதற்குக் காரணம் என்ன? அதே சமயத்தில் ஒவ்வோராண்டும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வரியை உயர்த்துவதாக அறிவிக்கிறீர்கள், ஆனால் வசூலிப்பதில்லை. இது ஏன்? அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நடப்பு ஆண்டில், இவ்வாறு வசூலிக்காமல் இருக்கும் தொகை 6.59 லட்சம் கோடி ரூபாயாகும். வளங்கள் குறைவாக இருப்பதாகக் கூறும்  அரசாங்கம் இந்த அளவிற்கு மிகப் பெரிய அளவிற்கு தொகையை வசூலிக்காமல் விடுவதற்குக் காரணம் என்ன?
இந்த ஆண்டும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரியில் வசூலிக்காமல் கைவிடப்பட்டிருக்கும் அதேசமயத்தில், மறைமுக வரி மூலமாக கூடுதலாக 75 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்திடவும் குறிவைத்திருக்கிறீர்கள். இது ஏன்? ஏன் இத்தகு தாறுமாறான நிலைமை? குறிப்பாக, பொருளாதாரம் மிகவும் விசனத்திற்குரிய நிலையில் இருக்கும்போது, சாமானிய மக்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகள் குறைக்கப்பட்டு அவர்களுக்கு ஓரளவுக்காவது நிவாரணம் அளித்திட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஓரளவுக்காவது வாங்கும் சக்தி ஏற்பட்டு, அதன்மூலம் சந்தையிலும் வியாபாரத்தைப் பெருக்கிட முடியும். அதன்மூலமாக சந்தையில் அதிக முதலீட்டுக்கான உகந்ததொரு சூழ்நிலையை உருவாக்கிட முடியும். ஏனெனில் முதலீடு என்பது அவர்கள் போடும் முதலீட்டின் காரணமாக அவர்கள் திரும்ப எடுக்கும் தொகையைப் பொறுத்தே இருக்கிறது. மாறாக அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளால் அல்ல. மாண்புமிகு அமைச்சர் பதிலளிக்கும்போது இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்ததாக, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம் (plan expenditure and non-plan expenditure) என்பதை ஒழித்துக்கட்டியதன் பின்னணியில் ஒளிந்துகொண்டிருப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ளவிரும்புகிறேன். இப்போது நீங்கள் அனைத்து செலவினத்தையும் ஒரே கூடைக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள்.
திட்டச் செலவினம், திட்டமில்லா செலவினம் என்பதன் முக்கியத்துவம், நான் புரிந்துகொண்டிருப்பது, எந்தவொரு ஒதுக்கீடாக இருந்தாலும், முதலாவது, அதற்கென்று ஒருவிதமான நிர்வாகச் செலவினம் இருந்திடும், இரண்டாவது, அத்திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியைச் சார்ந்ததாக இருந்திடும். இது இரண்டையும் ஒன்றாக இணைக்கும்போது, எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு, நீங்கள் ஏன்  இவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டுவிடும். எனவே இதற்குப் பின்னணியில் ஒளிந்துகொண்டிருப்பது எது என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதன் காரணமாக தலித்/பழங்குடியினருக்கான அமைச்சகம், தொழிலாளர் நல அமைச்சகம் போன்று மக்கள் நலன் காக்கும் கூருணர்வுமிக்க (sensitive) அமைச்சகங்களின் கதி என்னாயிற்று என்றும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக, பட்ஜெட்டை நான் பரிசீலித்தபோது, மொத்த ஒதுக்கீட்டில் 88 சதவீதம் பொதுக் கணக்கிற்கும், தலித்/பழங்குடியினருக்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்கீழ் வெறும் 12 சதவீதம் மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
அடுத்த, தற்போது பல்வேறு தரப்பினரின் நலன்களுக்காகவும் பல 'செஸ்' ('cess') வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் நலம், பீடித் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளள்கள் என்று பல தொழிலாளர்களுக்கும் பல 'செஸ்' ('cess') வரிகள் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் வசூலிக்கப்பட்டு வந்தன. இதில் பீடித் தொழிலாளர்களுக்கான 'செஸ்' வரி மட்டும் தொடர்வதாக அறிகிறேன். மற்ற அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதாக எனக்குக் கூறப்பட்டது. குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 'செஸ்' வரி ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. ஏன் இப்படிச் செய்திருக்கிறீர்கள்? ஏன் இந்த 'செஸ்' வரிகள் எல்லாம் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டன. இவ்வாறு அனைத்து 'செஸ்' வரிகளும் 2017 ஏப்ரல் 1க்குப்பின் ஒழித்தக்கட்டப்படும் என்று எனக்குக் கூறப்பட்டிருக்கிறது. தொழிலாளர் பிரிவில்மிகவும் அடித்தட்டில் இருக்கக்கூடிய இப்பிரிவினருக்கு ஓரளவுக்கு பயன் அளித்து வந்த இந்த முறையினை ஏன் ஒழித்துக் கட்டுகிறீர்கள்?
இந்தப் பிரச்சனைகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விளக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தபன்சென் கூறினார்.
(ந,நி.

Tuesday, August 30, 2016

குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின் அறிவிப்பு கேலிக்கூத்து மற்றும் ஏமாற்றும் சூழ்ச்சியாகும்


குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின் அறிவிப்பு
கேலிக்கூத்து மற்றும் ஏமாற்றும் சூழ்ச்சியாகும்
மாபெரும் வேலைநிறுத்தத்தின் மூலம் அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்
தபன்சென் அறிக்கை
புதுதில்லி, ஆக. 31-
குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின் அறிவிப்பு கேலிக்கூத்து மற்றும் தொழிலாளர்களை ஏமாற்றும் சூழ்ச்சியாகும். செப்டம்பர் 2 மாபெரும் வேலைநிறுத்தத்தின் மூலமாக அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம் என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் கூறினார்.
இது தொடர்பாக அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:
"செவ்வாய்க்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் தொழிலாளர்துறை அமைச்சர், பெட்ரோலியத்துறை அமைச்சர் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்தின் சார்பில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது, அதில் அரசாங்கம், தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே 2016 செப்டம்பரி 2 வேலைநிறுத்தத்திற்குப் போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களை ஏமாற்றும் கேலிக்கூத்தே தவிர வேறல்ல என்றே சிஐடியு கருதுகிறது. 
அரசாங்கம், குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று நிதி அமைச்சர் கூறியிருப்பது உண்மையல்ல. குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழு 2016 ஆகஸ்ட் 30 அன்று சந்தித்தது. அனைத்துத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் குறைந்தபட்ச ஊதியம் 18,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதைத்தொடர்ந்து கூட்டம் எவ்வித முடிவும் மேற்கொள்ளாமல் முடிந்தது.  இந்தநிலையில் அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பது வேலைநிறுத்தத்திற்கு முன்பு தொழிலாளர்களை திசைதிருப்பி, குழப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியேயாகும். 
அரசாங்கம் நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 350 ரூபாய் (அதாவது மாதத்திற்கு 26 நாட்களுக்கு 9,100 ரூபாய்) தர தயாராயிருப்பதாகவும், இதன்மூலம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருப்பது குரூரமான ஜோக் ஆகும். தொழிற்சங்கங்கள் இதனை கேலிக்கூத்து என்று கூறி நிராகரித்துவிட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்ற ஆண்டு போனசை விடுவித்திருப்பதும் ஏதோ அரசாங்கத்தின் கருணையால் ஒன்றுமல்ல. போனஸ் வழங்குதல் சட்டத்தின்படி உச்சவரம்பைக் கூடுதலாக்கி இருப்பதை அரசாங்கம் இப்போது அமல்படுத்தி இருக்கிறது. இதனை இந்த அரசாங்கம் எப்போதோ செய்திருக்க வேண்டும்.  இப்போது அதனை அரசாங்கம் விடுவித்துவிட்டு, அரசாங்கம் ஊழியர்களின் எண்ணற்ற விஷயங்களைப் பரிசீலனை செய்துகொண்டிருப்பதாக வஞ்சகமான முறையில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. இதனை ஏதோ சாதனை போல சித்தரித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில்தான் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கங்கள்  2014-15ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்குதல் சட்ட அமலாக்கத்தை நிறுத்தி வைத்திருக்கின்றன. இதற்கு அவை கேரளம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்புகளை மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் அந்தத் தீர்ப்புகள் இந்த அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தாது. இவ்வாறு இவர்களின் உண்மை நோக்கங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
பத்திரிகையாளர் கூட்டத்தில் அரசாங்கத்தின் திட்டப் பணிகளில் பணியாற்றும் அங்கன்வாடி, மதிய உணவு, `ஆஷா` போன்றவற்றில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் பற்றிக் கேட்கப்பட்டபோது, திட்டப்பணிகளில் பணியாற்றுவோர் எல்லாம் தொண்டர்கள் (volunteers) என்றும் அவர்கள் ஊழியர்கள் (workers) அல்ல என்றும் நிதி அமைச்சர் கூறி அந்தக் கேள்வியை தள்ளுபடி செய்துவிட்டார். ஆனால் இதே தேஜகூ ஆட்சிக்காலத்தின்போதுதான், 46ஆவது  இந்தியன் தொழிலாளர் மாநாட்டின்போது, திட்ட ஊழியர்கள் அனைவரும் ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்கிற முந்தைய ஐஎல்சி மாநாட்டின் பரிந்துரைகளை மீளவும் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது என்பதை அவர் நினைவுகூர்ந்திட வேண்டும். 
அமைச்சர் மேலும் திட்ட ஊழியர்கள் அனைவரும் சமூகப் பாதுகாப்புப் பயன்களின் வருவதற்கான வழிவகைகளைக் காண ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  ஓராண்டுக்கு முன்பு 2015 ஆகஸ்ட் 26-27 தேதிகளில் இதே அமைச்சர் இதேபோன்று சென்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்பாக திருவாய் மலர்ந்தருளினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இதுதொடர்பாக இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. 
எதார்த்தத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில் அரசாங்கம் அறிவித்துள்ளவை ஏமாற்றும் வேலையை தவிர வேறல்ல. இதனை ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்கம் நிராகரித்திட வேண்டும். வேலைநிறுத்தம் தொடங்க இருக்கும் இச்சமயத்தில் தொழிலாளர்களைக் குழப்புவதற்காகவே, தவறாக திசைதிருப்புவதற்காகவே இத்தகைய விளையாட்டில் இந்த அரசாங்கம் இறங்கி இருக்கிறது. இத்தகைய கபடத்தனமான மற்றும் வஞ்சனையான அரசாங்கத்தின் சூழ்ச்சியை தொழிலாளி வர்க்கம் 2016 செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்வதன் மூலம் முறியடித்திட வேண்டும்."
இவ்வாறு தபன்சென் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்,
(ந.நி.)


Tuesday, August 2, 2016



ஊழியர்களின் வைப்பு நிதியில் இருக்கும் பணம் அவர்களின் சொந்தப் பணம்
அதில் கை வைப்பதற்கு நீங்கள் யார்?
மாநிலங்களவையில் தபன்சென் ஆவேசம்
புதுதில்லி, ஆகஸ்ட் 3-
ஊழியர்களின் வைப்பு நிதியில் இருக்கும் பணம் அவர்களின் சொந்தப் பணம். அதில் கை வைப்பதற்கு நீங்கள் யார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் சிஐடியுவின் அகில இந்திய பொதுச்செயலாளருமான தபன் சென் கேட்டார்.
ஊழியர்களின் வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை அவர்களுக்குத் தராமல் பங்குச்சந்தையில் ஈடுபடுத்திட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பாக மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் செவ்வாய் அன்று கொண்டு வரப்பட்டது. அதில் பங்கேற்று தபன்சென் பேசியதாவது:
இந்தப் பிரச்சனை மிகவும் ஆழமான பிரச்சனையாகும். ஊழியர்களின் வருமான வைப்பு நிதிக்கு ஒன்றுமாற்றி ஒன்று என பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த அரசாங்கம் ஏன் இவ்வாறு தலையிடுகிறது என்றே தெரியவில்லை.
முதலில் இதற்கு வரி விதித்தீர்கள். பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள். பின்னர் இதில் தொழிலாளர்கள் முன்பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்தீர்கள். இது தொழிலாளர்களின் சொந்தப் பணம். இதை அவர்கள் திரும்ப எடுத்துக் கொள்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு நீங்கள் யார்?
அவர்கள் திரும்பப் பெறுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளைத் விதித்தீர்கள். இவ்வாறு செய்வதற்கு யார் நீங்கள்? தொழிலாளர்கள் ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்தபின் அதைத் திரும்பப் பெற்றீர்கள்.
இவ்வாறெல்லால் செய்யாதீர்கள் என்று அனைத்துத் தொழிற்சங்கங்களும் கோரின. அவற்றையெல்லாம் நீங்கள் கேட்கவே இல்லை. ஆனால் அதன்பின் உங்களுக்குக் கேட்கக்கூடியவாறு, நாடு முழுதும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடி, உங்களைக்  கேட்க வைத்தார்கள்.
தொழிலாளர்கள் பிரச்சனைகளை நீங்கள் புரிந்து கொள்ளும் மொழியில் கூறுவதற்கு அவர்கள் சொல்லத் தயங்குவதே இல்லை.
இப்போது அவர்களின் பணத்தை மிகவும் நாசம் விளைவிக்கும் சோதனையில் ஈடுபடுத்த முன்வந்திருக்கிறீர்கள்அவர்கள் பணத்தை பங்குச் சந்தையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
இதற்கு உங்கள் வாதம் என்ன? சிறந்த ஆதாயம் (நெவவநச சநவரசn) கிடைக்கும் என்பதாகும். இது விவாதத்திற்குரிய ஒன்றாகும். ஆனால் ஒரு விஷயம் விவாதத்திற்கு உரியது அல்ல.
மத்திய அறங்காவலர் குழு (கூh ஊநவேசயட க்ஷடியசன டிக கூசரளவநநள), தொழிலாளர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒரே குரலில் உங்களிடம், “சூதாட்டத்தின் மூலம் ஈட்டும் கூடுதல் பணம் எங்களுக்குத் தேவை இல்லை,’’ என்று கூறியிருக்கிறார்கள். எவ்விதமான ஊசலாட்டமுமின்றி மிகவும் தெளிவான முறையில் அவர்கள் இதைக் கூறி இருக்கிறார்கள். இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின், ஏன் நீங்கள் அவர்களின் அனுமதி இல்லாமல், அவர்களை எதுவும் கேட்காமல், தலையிடுகிறீர்கள்?
இது தொடர்பாக உங்கள் அனுபவம்தான் என்ன? ஓராண்டுக்குள் 7.45 சதவீதம் ஆதாயம் கிடைக்கும் என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லாமல் விட்டது என்னவெனில், முதல் பத்து மாதங்களில் உங்கள் நஷ்டம்  400 கோடி ரூபாய்க்கும் மேலாகும் என்பதாகும். நீங்கள் அதை இங்கே சொல்லாமல் இருக்கிறீர்கள். எப்படியோ நீங்கள் சமாளித்துக் கொள்கிறீர்கள்.
ஒரு விஷயத்திற்கு உங்கள் கவனத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். இதனை அமைச்சர் ஒப்புக்கொள்வாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்பட்டிருக்கும் தொகை முழுவதுமாக தொழிலாளர்களுக்குச் சொந்தமானதாகும். அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு இதில் செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் வேலையளிப்பவர்கள் செலுத்தும் தொகையும் கூட, தொழிலாளர்களின் கொடுபடா ஊதியமே (னநகநசசநன றயபந) ஆகும். கொடுபடா ஊதியமும் தொழிலாளர்களையே சாரும். அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களை சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள்எங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலுமோ  கூடுதலாக எந்தப் பணமும் வேண்டாம். தயவு செய்து மத்திய அறங்காவலர் குழு தீர்மானிக்கும் வழக்கமான முதலீட்டு வழிகளையே பின்பற்றுங்கள்,’’ என்கிறார்கள்.
இதைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ ஊக சந்தையில்  முதலீடு செய்யுங்கள் என்கிற சிந்தனையை அவர்கள் மத்தியில் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இப்போது ஐந்து சதவீதமாக இருக்கிறது. ஆனால் இது பதினைந்து சதவீதமாக அதிகரிக்கும். ஆனாலும் ஐந்து சதவீதத்தைக்கூட  எடுப்பதற்கு தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தயவுசெய்து இத்திட்டத்தை இப்போதே கைவிடுங்கள்.
உலக அனுபவம் என்ன சொல்கிறது?
தனி நபர் ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்வது என்பது வேறு. அவர் லாபம் ஈட்டுவதையோ அல்லது நஷ்டம் அடைவதையோ புரிந்து கொள்ள முடிகிறது.   ஆனால் இதுபோன்று ஓய்வூதியம் மற்றும் பொதுப் பணத்தை இவ்வாறு ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நஷ்டம், நஷ்டம் மேலும் நஷ்டம் என்பதுதான். இதுதான் உலக அனுபவமாமகும். நீங்கள் எந்த நாட்டின் அனுபவத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் அல்லது அமெரிக்கா என்று எந்த நாட்டின் அனுபவத்தை வேண்டுமானாலும் எடுத்தப் பாருங்கள்
அந்த நாடுகளில் சமாளிக்கமுடியாத அளவிற்கு நஷ்டம் ஏற்படுமானால், அரசாங்கம் ஓர் உத்தரவாதமான தொகையைக் கொடுக்கிறது. அதேபோன்று இங்கே கொடுப்பதற்கு நீங்கள் தயாரா?
அவ்வாறு எவ்வித உத்தரவாதத்தையும் கொடுக்காமல், அந்தப் பாணியை இங்கே எப்படி நீங்கள் பின்பற்ற முடியும்?
தொழிலாளர்கள், ஊழியர் வைப்பு நிதியில் போட்டுள்ள தொகையுடன் - அவர்கள் வாழ்நாள் முழுதும் சேர்த்து வைத்துள்ள தொகையுடன் - விளையாடாதீர்கள் என்று கூறிக்கொள்கிறேன்.
சூதாட்டத்தின் மூலம் கூடுதல் பணம் அவர்களுக்குத் தேவை இல்லை. உங்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள 8.5 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க கவனம் செலுத்துவது நல்லது. அங்கே கவனம் செலுத்துங்கள். தொழிலாளர்களின் சொந்த சேமிப்புடன் விளையாடாதீர்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள்.
இதனை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால்நீங்கள் விரும்பும் மொழியில் அவர்கள் உங்களுக்கு இதனைப் புரிய வைப்பார்கள்.’’
இவ்வாறு தபன்சென் பேசினார்.
(.நி.)


   

Saturday, September 7, 2013

எம் தொழிலாளர் நெஞ்சங்களில் குமுறும் எரிமலை


எம் தொழிலாளர் நெஞ்சங்களில் குமுறும் எரிமலை
புதிய பென்சன் மசோதாவை எதிர்த்து தபன்சென்  எச்சரிக்கை
புதுதில்லி, செப். 7-
ஓய்வூதிய நிதியத்திற்கு எதிராக தொழிலாளர்களின் நெஞ்சங்களில் எரிமலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு-வின் பொதுச் செயலாளருமான தபன்சென் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெள்ளியன்று ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையச் சட்டமுன்வடிவின்மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. விவாதத்தில் கலந்து கொண்டு தபன்சென் பேசியதாவது:
‘‘இந்தச் சட்டமுன்வடிவை எங்கள் கட்சியின் சார்பில் எதிர்க்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவின் மீதான பரிந்துரைகளைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவில் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் பொதுவாக கருத்தொற்றுமை இருந்தது. நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்க இயக்கமும் இதனை எதிர்த்து வருகின்றன. இடதுசாரி தொழிற்சங்கம், வலதுசாரி தொழிற்சங்கம், இரண்டும் மத்தியில் உள்ள தொழிற்சங்கம் - இவைகளுக்குள் எந்த வித்தியாசமும் இன்றி அனைத்து சங்கங்களும் இதனை எதிர்த்து வந்தன. இச்சட்டமுன்வடிவு இங்கே கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் தங்களுக்கு மாபெரும் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். நாடு முழுதும் பல்வேறு இயக்கங்கள் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் இதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருசிலரைத் திருப்திப்படுத்துவதன் மூலம் மட்டும் நீங்கள் ஆட்சியை நடத்திவிட முடியாது.
இந்த நாட்டின் தொழிலாளி வர்க்கம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்குபவர்கள், உங்கள் கருவூலத்திற்கு வருவாயைத் தேடித்தருபவர்கள், வேலையளிப்பவர்களுக்கு லாபத்தை ஈட்டித்தருபவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். 
இந்தச் சட்டமுன்வடிவின் மூலம், ஓய்வூதியம் என்பது மனிதன் ஓய்வுபெற்ற பின் உயிர்வாழ்வதற்கு உத்தரவாதமாகக் கிடைக்கக்கூடிய ஓர் ஊதியம் என்பது ஒழித்துக்கட்டப்படுகிறது. இச்சொற்றொடர் சமூகப் பாதுகாப்பு என்னும் கலைக்களஞ்சியத்திலிருந்து நீக்கப்படுகிறது. ஓய்வுபெற்றபின்னர் அதுவரை சமூகத்திற்காக உழைத்து வந்த உழைப்பாளி மக்கள் வயதான காலங்களில் தாங்கள் உயிர்வாழ்வதற்காகப் பெற்று வந்த ஊதியம் இச்சட்டமுன்வடிவின் மூலம் அவர்களிடமிருந்து பறித்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும்? ‘‘அந்நிய நிறுவனங்கள் இங்கே வரும். வெளிநாடுகளிலிருந்து பணத்தைக் கொண்டுவரும். நமக்கு சிறந்தவகையில் ஓய்வூதியம் அளிக்கும்.’’ இவ்வாறு இச்சட்டமுன்வடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. தங்கள் சொந்த நாடுகளிலேயே வர்த்தகத்தை ஒழுங்காகச் செய்ய முடியாத இவர்கள் இங்கே வந்து நம்முடைய ஓய்வூதிய நிதியத்தை, நம்முடைய மக்களின் பயன்பாட்டிற்காக, சிறந்த முறையில் மேலாண்மை செய்வார்களாம். இதை நாம் நம்ப வேண்டுமா
இது தொடர்பாக அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன? நம் நாட்டில் இயங்கிவரும் சில தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அரசாங்கத்தையும், தங்களை நம்பி காப்பீடு செய்துள்ள காப்பீட்டுதாரர்களையும் ஏமாற்றி வருவது குறித்து ஜனவரி 1 முதல் இந்த அரசாங்கத்திற்கு நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இவர்களின் மோசடியான நடவடிக்கைகளின் காரணமாக முறைசாராத் தொழிலாளர்களும்நெசவாளர்களும், கைவினைஞர்களும் மிகவும் மோசமான முறையில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். மிகவும் தெளிவான முறையில் சாட்சியங்கள் இருக்கின்றன. இதுதொடர்பாக நிதி அமைச்சகத்திற்கும், ஐஆர்டிஏ எனப்படும் இன்சூரன்ஸ் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கும் ஜனவரி 1இலிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. அயல்நாடுகளிலிருந்து அந்நிய மூலதனம் கொட்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
எந்த எந்த நிறுவனங்கள் இவ்வாறு ஏமாற்றி இருக்கின்றன என்று நிதி அமைச்சருக்குத் தெரியும். ஐஆர்டிஏ-க்குத் தெரியும். இன்சூரன்ஸில் இதுபோன்ற நிலை என்றால், ஓய்வூதிய நிதியத்தின் கதி என்ன?
ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்குப் பயன் அளிக்கும் திட்டம் என்றிருந்ததை இந்த அரசாங்கம் ஓய்வூதியர்கள் பங்களிப்பு அளிக்கும் திட்டம் என்று மாற்றி இருக்கிறது. இப்புதிய திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தைத் தவிர மற்ற எல்லாமே உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த ஓய்வூதிய நிதியத்தை யார் கையாளப் போவது? இதிலிருந்து பயன் அடையப் போவது யார்? அனைத்தும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஓய்வூதியப் பங்களிப்பினை தன் ஊதியத்தில் பத்து விழுக்காடு என ஒவ்வொரு மாதமும் தன் வாழ்நாள் முழுதும் செலுத்தி வரும் ஊழியர் பெறப்போகும் ஓய்வூதியம் என்ன என்பது மட்டும் உத்தரவாதப் படுத்தப்படவில்லை.
அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன? மக்களவையிலும், மாநிலங்களவையில் அரசியல் கருத்தொற்றுமை மூலம் பெரும்பான்மையைப் பெற்று இச்சட்டமுன்வடிவை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் நாடு முழுதும், ஏன் உலகம் முழுதும், படிப்படியாக ஓர் எரிமலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள். இத்தகைய மோசடியை தொழிலாளர்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள்.
பிரதமர் என்ன கூறுகிறார் என்று மிகவும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்தோம். அவர் ஆகஸ்டு 30 அன்று இந்த அவையில் நம் நாட்டின் பொருளாதாரத்தின் நிலை குறித்து  ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். நாட்டின் பொருளாதார நிலை அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் இருக்கிறது என்றும் அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர், மிக எளிய சீர்திருத்தங்கள் மேற்கொண்ட காலமெல்லாம் முடிந்துவிட்டன என்றும், இனிவருங்காலங்களில் மிகவும் கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினார். என்ன அந்தக் கடினமான சீர்திருத்தங்கள் என்பதையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார்.
அவற்றில் ஒன்று இந்த ஓய்வூதிய நிதியம். மற்றொன்று மக்களுக்கு அளித்து வரும் மான்யங்களை  வெட்டுவது. இன்றுள்ள நெருக்கடியிலிருந்து மீள இவ்விரு கடினமான சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதாக அவர் பட்டியலிட்டார். இவ்வாறு இது கடினமான சீர்திருத்தங்களுக்கான நேரம் என்று பிரதமரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
எளிதான சீர்திருத்தங்களுக்கான காலம் முடிந்துவிட்டது, கடினமான சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நாங்கள் வாதத்திற்காக ஒத்துக்கொண்டாலும், இந்த அரசாங்கத்திடம் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்ள விரும்புவதெல்லாம், அவ்வாறு எளிதான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அதனால் பயனடைந்தவர்களிடம் - கார்ப்பரேட் வர்க்கத்தினரிடம் - உங்கள் கடினமான சீர்திருத்தங்களைப் பிரயோகியுங்கள். தயவுசெய்து முயற்சியுங்கள். நாட்டில் மிகவும் இருளார்ந்த நிலையில் நிதிப் பற்றாக்குறை (களைஉயட னநகiஉவை) இருக்கிறது. அதைவிட ஆழமான முறையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஊரசசநவே ஹஉஉடிரவே னுநகiஉவை) இருக்கிறது.  எனவே கடந்த இருபதாண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த எளிய சீர்திருத்தங்களின் காரணமாகப் பயன் அடைந்த வர்க்கத்தினரிடம் கேளுங்கள். அவர்களுக்கு அளித்த சலுகைகளைத் திரும்பப் பெறுங்கள். குறைந்தபட்சம்  அவர்கள் அரசுக்கு அளிக்காமல் இருக்கும் நேரடி மற்றும் கார்ப்பரேட் வரித் தொகைகளில் பாதியையாவது வசூல் செய்திடுங்கள். சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் இதில் பாதியையாவது வசூல் செய்திடுங்கள். தயவுசெய்து தொழிலாளிகளை விட்டுவிடுங்கள். தயவுசெய்து உழைக்கும் வர்க்கத்தினரை விட்டுவிடுங்கள். நாட்டின் இக்கட்டான சூழ்நிலையிலும், தாங்கள் கடினமான சீர்திருத்தங்களைக் கொண்டுவரவிருக்கும் இந் நேரத்திலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்கிக் கொண்டிருப்ப வர்களை, நாட்டிற்கு வருவாயை உருவாக்கித் தருபவர்களை விட்டுவிடுங்கள். தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள். அரசாங்கம் அவர்களுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறது.
கடைசியாக ஒரு வேண்டுகோள். நான் என்னதான் வேண்டுகோள் விடுத்தாலும் அது கேளாதவர் காதில்  ஊதிய சங்கு போன்றதுதான் என்பது எனக்குத் தெரியும். இச்சட்டமுன்வடிவின்மீது சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். அவற்றை நிறைவேற்றித்தருமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன். திருத்தங்கள் இன்றி இச்சட்டமுன்வடிவை நிறைவேற்றி தொழிலாளர் களின் வாழ்வைச் சூறையாட அனுமதிக்கக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
(ந.நி.)